KalviseithiDaily: Tamil

KalviseithiDaily

kalviseithidaily.blogspot.com No:1 Education Website in Tamil கல்வி செய்திகள்: Get latest news on Exam Results, tamil nadu school education department news, TN University Results, Exam Schedule Latest News Educational News from Tamilnadu Government, Tamilnadu Educaitonal Minsters Latest Updates, 10th, 11th, 12th, TNTET, TRB, TNPSC, STUDY MATERIALS, ONLINE TESTS, LATEST kalviseithi, Padasalai, tnkalvi, tnpse news, TET updates, TRB news, kalvi news, Padsalai study materials

Subscribe Us

Sigma is

  • Seo Ready
  • Responsive
  • Fast Loading
  • Amazing!

Hot

Post Top Ad

Your Ad Spot
Showing posts with label Tamil. Show all posts
Showing posts with label Tamil. Show all posts

Wednesday, July 27, 2022

வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் தமிழ் புறக்கணிப்பு: எம்.பி. ரவிக்குமார்

July 27, 2022 0
வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் தமிழ் புறக்கணிப்பு: எம்.பி. ரவிக்குமார்

வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் தமிழ் புறக்கணிக்கப்படுவதாக விழுப்புரம் மக்களவை உறுப்பினர் ரவிக்குமார் இன்று ஒத்திவைப்புத் தீர்மான நோட்டீஸ் அளித்துள்ளார்.

மக்களவையின் இன்றைய அலுவல்களை ஒத்திவைத்து, தமிழ் புறக்கணிப்பு குறித்து விவாதிக்க வேண்டும் என்று அளித்துள்ள நோட்டீஸில் தெரிவித்திருப்பதாவது:

“வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் ஹிந்தி, சமஸ்கிருதம் போன்ற இந்திய மொழிகளின் பல்வேறு இருக்கைகளில் பேராசிரியர் பணியிடங்களுக்கான விளம்பரத்தை ஐசிசிஆர் வெளியிட்டுள்ளது.

ஆனால், போலந்து பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கைகளுக்கு விண்ணப்பிக்க அதில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. போலந்து நாட்டில் இருக்கும் தமிழ் இருக்கைகளுக்கான பேராசிரியர் பணியிடங்கள் பல ஆண்டுகளாக காலியாக உள்ளன. இது தெளிவான பாரபட்சத்தைக் காட்டுகிறது.

இந்தப் பிரச்னையை விவாதிக்க அவையின் அலுவல்களை ஒத்திவைக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Read More

Tuesday, June 28, 2022

இணையவழி தமிழ்க் கற்றல் வகுப்புக்கு விண்ணப்பிக்கலாம்

June 28, 2022 0
இணையவழி தமிழ்க் கற்றல் வகுப்புக்கு விண்ணப்பிக்கலாம்

இணையவழி தமிழ்க் கற்றல் வகுப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது குறித்து தமிழ் அறக்கட்டளை பெங்களூரு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழ் அறக்கட்டளை பெங்களூரு சாா்பில் நடத்தப்பட்டு வரும் ஒரு மாத காலத்திற்கான இணையவழி தமிழ்க் கற்றல் வகுப்பில் சேருவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தமிழறிஞா் பொள்ளாச்சி நேசனால் வடிவமைக்கப்பட்ட கற்றல் முறையில் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இந்தப் பயிற்சியில் 30 நாட்களில் அடிப்படை தமிழ் கற்றுத்தரப்படுகிறது. தமிழ் எழுத படிக்க தெரியாதவா்கள் பயிற்சியில் இணைய முன்னுரிமை அளிக்கப்படுகிறது. தமிழ்க் கற்றல் வகுப்புகள், ஜூலை 1 முதல் 30-ஆம் தேதிவரை நடக்கவிருக்கின்றன. ஜூம் வழியாக தினமும் மாலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை வகுப்புகள் நடத்தப்படுகின்றன. தமிழ் வகுப்பில் அறநெறியைக் கற்பிக்கும் திருக்கு, அது தொடா்பான கதைகள், நாப்பி பயிற்சிக்காக பாடல்களும் கற்றுத் தரப்படுகின்றன. இந்தப் பயிற்சி இலவசமாக வழங்கப்படுகின்றது. முதலில் வருவோருக்கு முதலில் வாய்ப்பு என்ற வகையில் 100 பேருக்கு மட்டும் பயிற்சியில் சேர வாய்ப்பளிக்கப்படுகிறது.

இதற்கான விண்ணப்பங்களை ட்ற்ற்ல்ள்://ச்ா்ழ்ம்ள்.ஞ்ப்ங்/அட்9க்ஷஒ3இஷ்நா்ஊகஊக்ஷஹ்அ9 என்ற கூகிள்ஃபாா்மில் ஜூன் 30-ஆம் தேதிக்குள் பதிவுசெய்ய வேண்டியது அவசியமாகும்.

கூடுதல் விவரங்களுக்கு 9483755974, 9820281623 என்ற செல்லிடப்பேசி எண்கள், ற்ஹம்ண்ப்ச்ா்ன்ய்க்ஹற்ண்ா்ய்க்ஷப்ழ்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் என்ற மின்னஞ்சலில் தொடா்புகொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.
Read More

Monday, April 25, 2022

Wednesday, December 8, 2021

போட்டித் தேர்வுகளில் தமிழ் மொழி தேர்ச்சி கட்டாயம்

December 08, 2021 0
Read More

Thursday, September 16, 2021

தபால் ஆய்வாளர் பணிக்கான தேர்வில் தமிழ் பாடம்?

September 16, 2021 0
சு.வெங்கடேசன் எம்.பி. தபால் ஆய்வாளர் பணிக்கான தேர்வில் தமிழ் பாடம் இணைக்கப்பட வேண்டும் என மத்திய அரசின் தகவல் தொடர்பு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு சு.வெங்கடேசன் எம்.பி கடிதம் எழுதியுள்ளார்.


இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், தபால் துறையில் மக்கள் தொடர்பு நிலையில் உள்ள அலுவலர்கள் நியமனங்களுக்கு நடைபெறும் தேர்வுகளில் மாநில மொழி தேர்ச்சிக்கு எந்த ஏற்பாடும் இல்லை. அஞ்சல் உதவியாளர், அஞ்சல் பிரிப்பு உதவியாளர், ஆய்வாளர்கள் ஆகிய பணிகளை செய்யும் ஊழியர்களுக்கான தேர்வுகளை அலுவலர் நியமன ஆணையம் ( Staff Selection Commission) நடத்தும் போது தமிழில் அவர்கள் உரையாடக் கூடியவர்களா என்று கூட சோதித்துப் பார்ப்பதில்லை.


இவர்களிடம் சேவை நாடி வரும் பொதுமக்கள் திண்டாடுகிறார்கள். அந்த பணியாளர்களும் தங்கள் பணியை திறம்பட ஆற்ற முடிவதில்லை. ஆய்வாளர்கள் கிராமப்புற அஞ்சல் அலுவலகங்களின் செயல்பாடுகளை கண்காணிப்பவர்கள். கடந்த 10 ஆண்டுகளில் ஆய்வாளர் பணிக்கு நடைபெற்றுள்ள நேரடி நியமனங்களில் தேர்வு செய்யப்பட்ட 60 பேரில் 57 பேர் வெளி மாநிலங்களை சேர்ந்தவர்கள் என்று அறிய வருகிறேன்.


தபால் அலுவலகங்களின் கதவைத் தட்டுபவர்களில் பெரும்பான்மையோர் கிராமங்களில் இருந்து வருபவர்கள். பொருளாதாரத்தில் அடித்தட்டு மக்கள். இத்தகைய கோடிக்கணக்கான மக்களை இணைக்கிற தபால் ஊழியர்கள் தமிழ் அறிந்திருக்க வேண்டாமா?


எனவே தபால் ஊழியர் நியமன முறையில் தமிழ்த் தேர்ச்சிக்கான தேர்வு இணைக்கப்பட வேண்டும். பள்ளி இறுதி தேர்வு/ மேல்நிலை கல்வித் தேர்வில் தமிழ் பாடமாக இருந்து அவர்கள் தேர்ச்சி பெற்றிருந்தால் இந்த தேர்வில் விதி விலக்கு அளிக்கலாம். இக்கோரிக்கையை பரிசீலித்து நல்ல முடிவை எடுக்க வேண்டும். இது அஞ்சல் சேவையை மேம்படுத்தும். அதை நாடி வரும் மக்களுக்கும் பெரும் பயன் தரும். மத்திய அரசு இக்கோரிக்கைக்கு செவிமடுக்குமென்று நம்புகிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
Read More

Post Top Ad

Your Ad Spot