KalviseithiDaily: Politicians

KalviseithiDaily

kalviseithidaily.blogspot.com No:1 Education Website in Tamil கல்வி செய்திகள்: Get latest news on Exam Results, tamil nadu school education department news, TN University Results, Exam Schedule Latest News Educational News from Tamilnadu Government, Tamilnadu Educaitonal Minsters Latest Updates, 10th, 11th, 12th, TNTET, TRB, TNPSC, STUDY MATERIALS, ONLINE TESTS, LATEST kalviseithi, Padasalai, tnkalvi, tnpse news, TET updates, TRB news, kalvi news, Padsalai study materials

Subscribe Us

Sigma is

  • Seo Ready
  • Responsive
  • Fast Loading
  • Amazing!

Hot

Post Top Ad

Your Ad Spot
Showing posts with label Politicians. Show all posts
Showing posts with label Politicians. Show all posts

Tuesday, January 3, 2023

மருத்துவ மாணவா் சோ்க்கையில் அகில இந்திய ஒதுக்கீட்டு முறையை ரத்து செய்ய வலியுறுத்தல்

January 03, 2023 0
மருத்துவ மாணவா் சோ்க்கையில் அகில இந்திய ஒதுக்கீட்டு முறையை ரத்து செய்ய வேண்டும்: அன்புமணி

மருத்துவ மாணவா் சோ்க்கையில் அகில இந்திய ஒதுக்கீட்டு முறையை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக செவ்வாய்க்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

மருத்துவப் படிப்புக்கான மாணவா் சோ்க்கை நிறைவடைந்துள்ள நிலையில், தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் இருந்து அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்பட்ட மாணவா் சோ்க்கை இடங்களில் 6 இடங்கள் நிரப்பப்படவில்லை. தமிழகத்தில் மருத்துவப் படிப்பில் சேர ஆயிரக்கணக்கான மாணவா்கள் காத்துக்கிடக்கும் நிலையில், விலை மதிப்பற்ற மருத்துவ இடங்கள் வீணடிக்கப்பட்டிருப்பது வருத்தமளிக்கிறது.

தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஒரு மருத்துவரை உருவாக்க ரூ.1 கோடிக்கும் கூடுதலாக செலவிடப்படுகிறது. 6 இடங்கள் நிரப்பப்படாததால் பல கோடி ரூபாய் அரசு பணம் வீணாகும். அதைக் கடந்து தமிழகத்தைச் சோ்ந்த 6 மாணவா்கள் மருத்துவம் படிக்கும் வாய்ப்பு பறிக்கப்பட்டிருக்கிறது.

இதற்கு நிரந்தரத் தீா்வு அகில இந்திய ஒதுக்கீடு முறையை ரத்து செய்வது தான். இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுத வேண்டும் என்று கூறியுள்ளாா்.
Read More

Monday, January 2, 2023

ஆய்வுக்குழு என்ற பெயரில் இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கையைக் கிடப்பில் போடாமல் உடனடியாக நிறைவேற்றித் தர தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்!- சீமான் வலியுறுத்தல்

January 02, 2023 0
ஆய்வுக்குழு என்ற பெயரில் இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கையைக் கிடப்பில் போடாமல் உடனடியாக நிறைவேற்றித் தர தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்!- சீமான் வலியுறுத்தல் | நாம் தமிழர் கட்சி

இடைநிலை ஆசிரியப் பெருமக்களின் ‘சம வேலைக்கு சம ஊதியம்’ கோரிக்கையை நிறைவேற்றப் புதிதாகக் குழு அமைத்துள்ள தமிழ்நாடு அரசின் செயல் மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. கடந்த காலங்களில் திமுக அரசால் அமைக்கப்பட்ட பல்வேறு வெற்றுக் குழுவினைப் போன்று இதுவும் கோரிக்கையை நிறைவேற்றாமல் காலங்கடத்தும் முயற்சியேயாகும்.

தமிழ்நாடு அரசுப்பள்ளிகளில் 2009-ம் ஆண்டுக்கு முன்பு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒரு ஊதியமும், அதன்பிறகு பணி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு மற்றொரு ஊதியமும் வழங்கப்பட்டு வருகிறது. இதனால், இடைநிலை ஆசிரியர்கள் 15000 ரூபாய் அளவுக்குக் குறைவான ஊதியம் பெறக்கூடிய அவல நிலை நிலவுகிறது. இந்த ஊதிய முரண்பாட்டைக் களைய வலியுறுத்தி பத்தாண்டிற்கும் மேலாக இடைநிலை ஆசிரியர்கள் பலகட்ட போராட்டங்களை நடத்தி வந்தனர். இந்நிலையில், தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் சென்னையில் முன்னெடுத்த தொடர் உண்ணாநிலை அறப்போராட்டத்தில் டிசம்பர் 31 அன்று கலந்துகொண்டு வாழ்வாதார உரிமை வெல்லக் குரல்கொடுத்தேன். இதனையடுத்து, தமிழ்நாடு முதலமைச்சர் ஐயா ஸ்டாலின் அவர்கள் ஜனவரி 1 அன்று போராடிவரும் ஆசிரியர்களின் கோரிக்கைகள் குறித்து ஆய்வு செய்து தகுந்த பரிந்துரைகளை அளிப்பதற்காக நிதித்துறை செயலாளர் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளதோடு, அக்குழு அளிக்கும் பரிந்துரைகளின் அடிப்படையிலேயே கோரிக்கை தொடர்பான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளும் என்றும் அறிவித்துள்ளார்கள். இது முழுக்க முழுக்க ஆசிரியர் பெருமக்களின் கோரிக்கையைக் கிடப்பில் போடும் நடவடிக்கையே அன்றி வேறில்லை. சம வேலைக்குச் சம ஊதியம் என்ற இடை நிலை ஆசிரியர்களின் கோரிக்கை நியாயமானது என்றால் அரசு அதனை உடனடியாக நிறைவேற்றுவதில் தயக்கம் ஏன்? ஆய்வுக்குழு அமைத்து ஆராய்ந்துதான் அவர்களின் கோரிக்கை நியாயமானது என்பதை அரசு கண்டறிய வேண்டுமா?

தமிழ்நாட்டில் தற்போது நடைபெற்று வருவது ‘குழுக்களின் அரசாங்கம்’ என்று மக்களே விமர்சிக்கும் அளவுக்குப் பொருளாதார வல்லுநர் குழு, கொரோனா கண்காணிப்புக் குழு, சமூகநீதி கண்காணிப்புக் குழு, நீட் தேர்வு ஆய்வுக் குழு, ஹைட்ரோ கார்பன் ஆய்வுக் குழு, ஸ்டெர்லைட் ஆய்வுக் குழு, இணையவழி சூதாட்ட ஆய்வுக் குழு, இசுலாமிய சிறைவாசிகளை விடுவிக்க குழு, குடிசை மாற்று வாரிய கட்டிட ஆய்வுக் குழு, நகைக்கடன் தள்ளுபடி குழு, பல்கலைக்கழக முறைகேடுகளைக் கண்டறியக் குழு, என்று திமுக அரசு பொறுப்பேற்ற 20 மாதங்களில் ஏறத்தாழ 40 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. திமுக அரசால் அமைக்கப்பட்ட இத்தகைய குழுக்களால் நடந்த நன்மை என்ன? கிடைத்த தீர்வு என்ன?

தமிழ்நாட்டையே உலுக்கிய மாணவி ஸ்ரீமதியின் மரணத்தின் உண்மையை கண்டறிய குழு அமைக்கப்பட்டது. அதனால் ஸ்ரீமதியின் மரணத்திற்கு கிடைத்த நீதி என்ன? 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடும் இசுலாமிய சிறைவாசிகளை விடுவிக்க அமைக்கப்பட்ட குழுவால் அவர்களுக்கு கிடைத்த தீர்வு என்ன? நீட் தேர்வு பாதிப்புகளை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழுவால் நீட் தேர்வினை ரத்து செய்ய முடிந்ததா? இணையவழி சூதாட்ட ஆய்வுக் குழுவால் தற்கொலைகளை தடுக்க முடிந்ததா? புதுக்கோட்டை தீண்டாமைக் கொடுமை நிகழ்வில் சமூகநீதி கண்காணிப்பு குழு எடுத்த நடவடிக்கை என்ன? எல்லாவற்றிற்கும் குழு அமைத்த திமுக அரசு கொடநாடு கொலை, கொள்ளை நிகழ்வினை ஆய்வு செய்ய எந்த குழுவும் அமைக்காதது ஏன்? உண்மையில், புழு கூட நான்கு அடி நகரும். திமுக அரசு அமைத்த இத்தகைய குழுவில் எவ்வித நகர்வும் இருப்பதில்லை. இக்குழுக்களால் அரசின் வரிப்பணம் பலகோடி ரூபாய்கள் வீணாவதைத் தவிர ஆக்கப்பூர்வமாகச் செயல்பாடுகள் எதுவும் இதுவரை நடைபெறவில்லை.

ஆகவே, தமிழ்நாடு அரசு இடைநிலை ஆசிரியப் பெருமக்களின் சம வேலைக்குச் சம ஊதியம் என்ற நியாயமானக் கோரிக்கையை நிறைவேற்ற புதிதாக மீண்டுமொரு குழு அமைத்துக் காலங்கடத்தாமல், அவர்களது வாழ்வாதார உரிமையை உடனடியாக நிறைவேற்றித் தர வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

- செந்தமிழன் சீமான், தலைமை ஒருங்கிணைப்பாளர், நாம் தமிழர் கட்சி
Read More

Wednesday, December 28, 2022

12,000 பகுதி நேர ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம், ஊதிய உயர்வு, பொங்கல் போனஸ் வழங்குக: வேல்முருகன்

December 28, 2022 0
12,000 பகுதி நேர ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம், ஊதிய உயர்வு, பொங்கல் போனஸ் வழங்குக: வேல்முருகன்

“12,000 பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்க; ஊதிய உயர்வு, பொங்கல் போனஸ் வழங்குக” என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: “தமிழகத்தில் உள்ள அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஓவியம், கணினி, தையல், உடற்கல்வி ஆகிய பாடங்களைக் கற்றுத் தருவதற்காக அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ் 16,549 பகுதி நேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். கடந்த 11.11.2011 அன்று, தமிழக அரசு பிறப்பித்த ஆணை 177-ன் படி வேலைவாய்ப்பக பதிவு மூப்பு அடிப்படையில் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர்கள், பகுதி நேர ஆசிரியர்கள் என்ற முறையில் பணியமர்த்தப்பட்டனர்.

இந்த பகுதி நேர ஆசிரியர்களுக்கு, மாதம் ரூ.5,000 தொகுப்பூதியம் வழங்கப்படும் என்றும் அப்போதைய அதிமுக அரசு அறிவித்திருந்தது. இவர்கள், 10 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் நிலையில், ரூ.5000 மட்டுமே உயர்த்தப்பட்டு, தற்போது ரூ 10,000 ஊதியமாக பெற்று வருகின்றனர். வாரத்திற்கு 3 அரை நாட்கள் மட்டும் பணியாற்றினால் போதுமானது. அதிகபட்சமாக 4 பள்ளிகளில் பணியாற்றலாம். ஒரு பள்ளிக்கு ரூ.5,000 வீதம் 4 பள்ளிகளுக்கு மாதம் ரூ.20,000 ஊதியம் ஈட்ட முடியும் என்று அரசு அறிவித்ததால் தான், அவர்கள், பகுதிநேர ஆசிரியர்களாக இப்பணியில் சேர்ந்தனர். ஆனால், பகுதி நேர ஆசிரியர்கள், ஒரு பள்ளியில் மட்டுமே பணியாற்ற அனுமதிக்கப்பட்டனர். அதனால் அவர்களுக்கு அதிகபட்சமாகவே ரூ.5000 மட்டும் தான் ஊதியம் கிடைத்தது. அதுதவிர, பகுதி நேர ஆசிரியர்களாக பணியாற்றினாலும், தங்களை தமிழக அரசு பணி நிரந்தரம் செய்யும் என்ற நம்பிக்கையில் உள்ளனர். கடந்த 2017 மற்றும் 2019- ஆம் ஆண்டுகளில், பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படும் என அப்போதைய அதிமுக அரசு அறிவித்த போதும், அந்த அறிவிப்பு அறிவிப்பாகவே நின்றுபோனது. இது தொடர்பாக, தங்களை பணி நிரந்தரம் செய்யவும், ஊதிய உயர்வு கோரியும், பகுதி நேர ஆசிரியர்கள் நீண்ட காலமாக போராடி வருகின்றனர்.

எனவே, 2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கையில் கூறியவாறு, பகுதி நேர ஆசிரியர்களின் நலன் கருதி, அவர்கள் அனைவரும் பணி நிரந்தரம் செய்ய தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். பகுதிநேர ஆசிரியர்களின் அனுபவத்தை கருத்தில் கொண்டு, அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு இணையாக, ஊதிய உயர்வு வழங்கு வேண்டும். எதிர் வரும் தமிழர் திருநாளான, தை திருநாளையொட்டி பொங்கல் போனஸ் வழங்க தமிழக அரசு முன் வர வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது” என்று வேல்முருகன் கூறியுள்ளார்.
Read More

Tuesday, December 27, 2022

நம்ம ஸ்கூல் பவுண்டேஷன்' நிர்வாகக் கட்டமைப்பை மாற்றுக: திருமாவளவன் வேண்டுகோள்

December 27, 2022 0
நம்ம ஸ்கூல் பவுண்டேஷன்' நிர்வாகக் கட்டமைப்பை மாற்றுக: திருமாவளவன் வேண்டுகோள்

நம்ம ஸ்கூல் ஃபவுண்டேஷனின் நிர்வாகக் கட்டமைப்பை மாற்றியமைக்க வேண்டும் என்று திருமாவளவன் வேண்டுகோள் வைத்துள்ளார்.

இது குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில்," திமுக தலைமையிலான அரசு பொறுப்பேற்றதற்குப் பிறகு பள்ளிக் கல்விக்கு ஒதுக்கப்படும் நிதி உயர்த்தப்பட்டிருக்கிறது. அதுமட்டுமின்றி அரசுப் பள்ளிகளைத் தரம் உயர்த்த வேண்டும் என்ற நோக்கோடு 'இல்லம் தேடி கல்வி' , 'எண்ணும் எழுத்தும்' , 'நான் முதல்வன்' எனப் பல்வேறு திட்டங்கள் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. மருத்துவப் படிப்புக்கு அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு, அரசுப் பள்ளியில் பயின்ற மாணவிகளின் உயர்கல்விக்கு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் நிதி உதவி ஆகிய திட்டங்கள் முன் எப்போதும் விட மாணவர்களை அரசுப் பள்ளிகளை நோக்கி ஈர்த்திருக்கின்றன. இந்நிலையில் 'நம்ம ஸ்கூல் பவுண்டேஷன்' என்ற புதிய திட்டத்தை தனியாரின் பங்கேற்போடு நடைமுறைப்படுத்தத் தமிழ்நாடு அரசு முன்வந்திருப்பது பாராட்டத்தக்கது. ’கல்வியின் தரம் என்பது பள்ளியின் உள் கட்டமைப்பு முதல் ஆரோக்கியம், சுகாதாரம், ஊட்டச்சத்து, கற்பித்தல், விளையாட்டு மற்றும் பண்பாடு, பாடத்திட்டம் சாரா செயல்பாடுகள் என்பது வரை பரந்து விரிந்து உள்ளது’ எனத் தமிழ்நாடு அரசு சரியாக இந்தப் பிரச்சனையை அடையாளம் கண்டிருக்கிறது. அரசு பள்ளிகள் என்ற பட்டியலில் ஆதிதிராவிட நலத்துறை உள்ளிட்ட பள்ளிகளும் உள்ளடக்கப்பட்டு இருப்பது பாராட்டத்தக்கதாகும். ஒரு தனி நபரோ அல்லது நிறுவனமோ விரும்பினால் ஒரு பள்ளிக்கு நன்கொடை அளிப்பதற்கும் அல்லது ஒரு பள்ளியைத் தத்தெடுத்துக் கொள்வதற்கும் இதில் வசதி செய்யப்பட்டு இருக்கிறது.

இந்திய ஒன்றிய அரசு தற்போது கொண்டு வந்திருக்கும் தேசிய கல்விக் கொள்கையில் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 விழுக்காடு தொகையை கல்விக்காக செலவிடுவோம் என்று உறுதி அளிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், ஒன்றிய அரசும் மாநில அரசுகளும் சேர்ந்து செலவிடும் தொகை 4 விழுக்காடு என்ற அளவிலேயே உள்ளது. அதிலும் ஒன்றிய அரசு கல்விக்காக செலவிடும் தொகை ஒட்டு மொத்தத்தில் ஒரு விழுக்காடு என்ற அளவில் தான் இருக்கிறது. கடந்த 30 ஆண்டுகளாக கல்வியானது தொடர்ந்து தனியார்மயம் ஆகி வருகிறது. இதனால் பணம் உள்ளவர்கள் மட்டுமே படிக்க முடியும் என்ற நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது ஒரு மாநிலத்தின் மனித வள மேம்பாட்டைக் கடுமையாகப் பாதிக்கிறது. தமிழ்நாட்டிலும் பள்ளிக் கல்வி என்பது கொஞ்சம் கொஞ்சமாக தனியார் மயமாகி வருவதைப் பார்க்கிறோம். இதை மாற்றுவதற்காகத்தான் திமுக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

'நம்ம ஸ்கூல் பவுண்டேஷன்' அமைப்பின் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் டிவிஎஸ் குழுமத்தைச் சேர்ந்த வேணு. சீனிவாசன் பற்றி ஏராளமான புகார்கள் உள்ளன. பொதுக் கல்விக்கு அந்த நிறுவனத்தின் சார்பில் எந்த ஒரு பெரிய பங்களிப்பையும் அவர்கள் செய்த வரலாறு கிடையாது. அத்தகைய ஒருவரை இந்த பவுண்டேஷனில் தலைவராக நியமிப்பது சரியல்ல என்கிற புகார்கள் எழுந்துள்ளன. இதை தமிழ்நாடு அரசு பரிசீலித்து அந்த பொறுப்புக்கு கல்வியில் அனுபவமும் அக்கறையும் கொண்ட ஒருவரை நியமிப்பது பொருத்தமாக இருக்கும். மாவட்ட அளவில் இதற்கென அமைக்கப்பட்டு இருக்கும் குழுக்களும் மாவட்ட ஆட்சியர் தலைமையிலான அதிகாரிகள் மட்டுமே கொண்ட குழுவாக உள்ளது. மாநில அளவிலான குழுக்களிலோ, மாவட்ட அளவிலான குழுக்களிலோ மக்கள் பிரதிநிதிகள் எவரும் இடம் பெறவில்லை. கல்வியில் ஈடுபாடு கொண்ட மக்கள் பிரதிநிதிகளை மாநில, மாவட்ட அளவிலான குழுக்களில் இடம்பெறச் செய்வது மிக மிக அவசியமாகும்.

ஆதிதிராவிட நலப் பள்ளிகள் இந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்தாலும் தன்னார்வத்தின் அடிப்படையில் பள்ளியைத் தத்தெடுக்கவோ நன்கொடை அளிக்கவோ முன்வருகிறவர்கள் ஆதிதிராவிட நலப் பள்ளியைத் தேர்வு செய்வார்கள் என்று சொல்ல முடியாது. எனவே, அந்தப் பள்ளிகள் விடுபட்டுப் போவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அத்தகைய நிலை ஏற்படாமல் அந்தப் பள்ளிகளும் பயன்பெறும் வகையில் இந்தத் திட்டத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். அடுத்து வரும் நிதிநிலை அறிக்கையில் பள்ளிக் கல்விக்குக் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்வதோடு நம்ம ஸ்கூல் பவுண்டேஷன் நிர்வாகக் கட்டமைப்பை ஜனநாயக பூர்வமாகத் திருத்தி அமைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Read More

பகுதிநேர ஆசிரியா்களை பணிநிரந்தரம் செய்ய மாா்க்சிஸ்ட் கம்யூ. கோரிக்கை

December 27, 2022 0
பகுதிநேர ஆசிரியா்களை பணிநிரந்தரம் செய்ய மாா்க்சிஸ்ட் கம்யூ. கோரிக்கை

பகுதி நேர ஆசிரியா்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் கே.பாலகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் திங்கள்கிழமை விடுத்த அறிக்கை:

அரசுப்பள்ளிகளில் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு உடல்கல்வி, ஓவியம், கணிணி, தையல், இசை, தோட்டக்கலை, கட்டடக்கலை, வாழ்வியல் திறன் உள்ளிட்ட பாடங்களை கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக 12 ஆயிரம் பகுதிநேரஆசிரியா்கள் கற்றுக் கொடுத்து வருகின்றனா்.

இவா்களுக்கு தொகுப்பூதியமாக மாதம் ரூ. 10 ஆயிரம் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. ஊதிய உயா்வோ, பணிநிரந்தரமோ வழங்கப்படவில்லை.

இவா்களின் வாழ்வாதாரத்தையும், குடும்பத்தினரையும் பாதுகாக்கும் வகையில் பணிநிரந்தரம் செய்வதுடன் பொங்கல் போனஸ் வழங்கவும் மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் கே.பாலகிருஷ்ணன்.
Read More

Monday, December 26, 2022

அரசு காலிப்பணியிடங்கள் குறித்து ஓ.பன்னீா்செல்வம் வெளியிட்ட அறிக்கை

December 26, 2022 0
அரசு காலிப்பணியிடங்கள் குறித்து விரிவான அறிக்கை தேவை: ஓபிஎஸ்

அரசு காலிப் பணியிடங்கள் குறித்து விரிவான அறிக்கையை தமிழக அரசு வெளியிட வேண்டும் என்று முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக திங்கள்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் 2023-ம் ஆண்டுக்கான புதிய அட்டவணையை வெளியிட்டதைத் தொடா்ந்து, காலிப் பணியிடங்களுக்கு ஏற்ப தோ்வு அட்டவணை அமையவில்லை என்பதைச் சுட்டிக்காட்டி 2023-ஆம் ஆண்டுக்கான அரசுப் பணித் தோ்வுகள் அட்டவணையை தற்போதுள்ள காலியிடங்களுக்கு ஏற்ப மாற்றியமைக்க வேண்டுமென்று நான் அறிக்கை வெளியிட்டு இருந்தேன்.

இதற்கு பதில் அளிக்கும் விதமாக அரசு வெளியிட்டுள்ள செய்தி வெளியீட்டில் பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டை பாக்கு விலை பத்து பைசா என்ற பழமொழிக்கேற்ப அமைந்துள்ளது. அரசுத் துறைகள், கல்வி நிலையங்களில் காலியாக உள்ள 3.5 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும் என்ற வாக்குறுதி குறித்து கேள்வி கேட்டால், தனியாா் நிறுவனங்களில் 1,063 முகாம்கள் மூலம் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது. அரசைப் பொருத்தவரையில் அரசுத் துறைகளிலும், கல்வி நிலையங்களிலும் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதுதான் அதன் முதல் கடமை. தனியாா் நிறுவனங்களில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டதாக கூறுவது அரசின் திறமையின்மையை எடுத்துரைக்கும் விதமாக அமைந்துள்ளது.

எனவே, முதல்வா் மு.க.ஸ்டாலின் எத்தனை அரசுப் பணியிடங்கள் காலியாக உள்ளன என்பது குறித்தும், திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, கடந்த ஒன்றரை ஆண்டுகளில் எத்தனை காலிப் பணியிடங்கள் பல்வேறு அரசு முகமைகள் மூலம் நிரப்பப்பட்டுள்ளன என்பது விரிவான அறிக்கையை வெளியிட வேண்டும் என்று கூறியுள்ளாா்.
Read More

Saturday, December 24, 2022

பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்திடுக! தமிழக அரசுக்கு வைகோ வேண்டுகோள்

December 24, 2022 0


பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்திடுக! தமிழக அரசுக்கு வைகோ வேண்டுகோள்

பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம்செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார். அரசுப் பள்ளிகளில், பத்தாண்டுகளாக உடற்கல்வி, ஓவியம், கணினி, இசை உள்ளிட்ட 12 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்கள் தொகுப்பு ஊதியத்தில் பணியாற்றி வருகிறார்கள். இவர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்திட பல வருடங்களாக கோரி வருகிறார்கள்.

ஏழை, எளிய, அடித்தட்டு, விளிம்பு நிலையில் இருக்கின்ற பட்டதாரி ஆசிரியர் குடும்பங்கள் வறுமையிலிருந்து விடுபட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சி பகுதிநேர ஆசிரியர்களின் கோரிக்கைகளை கருணையோடு பரிசீலனை செய்து, பணி நிரந்தரம் செய்து தை திருநாள் பொங்கல் பரிசாக 12 ஆயிரம் குடும்பங்களில் விளக்கேற்றிட மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
Read More

Sunday, December 18, 2022

கல்வித்துறையில் பல சாதனைகள் புரிந்த பேராசிரியர் க.அன்பழகன்: கல்விக்காக செயல்படுத்திய மறக்க முடியாத திட்டங்கள்

December 18, 2022 0
கல்வித்துறையில் பல சாதனைகள் புரிந்த கலைஞரின் தோழர் பேராசிரியர் க.அன்பழகன்: கல்விக்காக செயல்படுத்திய மறக்க முடியாத திட்டங்கள்

பேராசியர் அன்பழகன் கல்வித் துறை அமைச்சராகப் பொறுப்பேற்று செயல்பட்ட காலங்களில் தமிழக அரசு கல்விக்காக செயல்படுத்திய பல திட்டங்கள் இன்றும் நினைவுகூரத்தக்கவை. பேராசிரியர் அன்பழகன் 1922 டிசம்பர் மாதம் 19ம் நாளில் திருவாரூருக்கு அருகிலுள்ள காட்டூரில் பிறந்தார். அவருடைய தந்தை கல்யாணசுந்தரம், தாய் சொர்ணாம்பாள். இவருக்கு முதலில் ராமையா என்னும் பெயர் சூட்டப்பட்டது. தனித் தமிழ் இயக்கத்தின் மீது கொண்ட பற்றால் ராமையா என்ற தனது இயற்பெயரை, அன்பழகன் என மாற்றிக்கொண்டார்.

1942ம் ஆண்டில் திருவாரூர் விஜயபுரத்தில் இஸ்லாமிய இளைஞர்கள் இணைந்து நடத்திய சிக்கந்தர் விழாவில் அண்ணா கலந்துகொண்டார். அவரைப் பார்க்க வந்த கலைஞர் கருணாநிதியும், அன்பழகனும் ஒருவருக்கொருவர் அறிமுகமாயினர். அதைத் தொடர்ந்து அன்பழகனை ஒரு கூட்டத்தில் பேச அழைத்தார் கலைஞர் கருணாநிதி. அப்போது உருவான நட்பு 76 ஆண்டுகள் நீடித்தது. எத்தகைய சூழலிலும் கலைஞரை விட்டோ கழகத்தை விட்டோ விலகாமல் இருந்தார். ‘நாங்கள் இருவரும் ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள்’ என்று மகிழ்ச்சி பொங்கிடக் குறிப்பிட்டு மகிழ்ந்தவர் கலைஞர்.

அன்பழகன் ஒன்பது முறை சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றியுள்ளார்; 1962ம் ஆண்டு சட்ட மேலவை உறுப்பினராகவும் இருந்துள்ளார். 1967 ஆண்டு தொடங்கி 1971ம் ஆண்டு வரை நாடாளுமன்ற உறுப்பினராகவும் செயல்பட்டுள்ளார். அண்ணா மறைவுக்குப் பிறகு கலைஞர் முதலமைச்சரானார். அந்தக் காலகட்டத்தில் 1971ல் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுக்கொண்டார் அன்பழகன். 1977ம் ஆண்டு முதல் திமுகவின் பொதுச் செயலாளராகவும் இருந்துவந்தார். அவரின் மனைவி வெற்றிச் செல்வி. இந்தத் தம்பதியினருக்குச் செந்தாமரை, மணவல்லி என இரு மகள்களும் அன்புச் செல்வன் என்னும் மகனும் இருக்கிறார்கள்.

அமைச்சராக பதவி வகித்த துறைகளில் எல்லாம் தனது முதிர்ந்த அனுபவத்தாலும், பரந்த தொலைநோக்குப் பார்வையாலும் பல்வேறு திட்டங்களைத் திறம்பட செயல்படுத்தியுள்ளார். அன்று ‘முதலில் நான் மனிதன், இரண்டாவது நான் அன்பழகன், மூன்றாவது நான் சுயமரியாதைக்காரன், நான்காவது நான் அண்ணாவின் தம்பி, ஐந்தாவது கலைஞரின் தோழன். இந்த உணர்வுகள் என் உயிர் உள்ளவரை என்னோடு இருக்கும் என அன்பழகன் குறிப்பிடுவது வழக்கம். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து, அன்பழகன் ‘என் அன்புக்குரிய தம்பி மு.க.ஸ்டாலின் தந்தையைப் போலவே உழைப்பு, உழைப்பு, உழைப்பு என்பதையே தாரக மந்திரமாகக் கொண்டவர்.

மக்கள் பணியில் சட்டமன்ற உறுப்பினராக, சென்னை மாநகர மேயராக, உள்ளாட்சித் துறை அமைச்சராக, துணை முதல்வராக பணியாற்றிப் படிப்படியாக உயர்ந்து உச்சம் தொட்டவர். காலமும் கடமையும் என்றும் தவறாதவர். சட்டமன்றத்தில் புள்ளிவிவரத்துடன் திறம்படப் பதில் அளிப்பதில் என்றுமே சளைக்காதவர்” என்று பாராட்டியுள்ளார். பேராசிரியரின் நூற்றாண்டை முன்னிட்டு, கடந்த ஆண்டு டிசம்பர் முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை நந்தனம் ஒருங்கிணைந்த நிதித்துறை வளாகத்தில் பேராசிரியரின் சிலையைத் திறந்து வைத்தார். ஏறத்தாழ 1,20,000 சதுர அடியில் இயங்கி வருகிறது.

இவ்வளாகத்திற்கு “பேராசிரியர் க.அன்பழகன் மாளிகை” என்று பெயர் சூட்டினார். இப்போது தமிழகம் அடைந்திருக்கும் தொழில்நுட்பக் கல்வியின் வளர்ச்சிக்கு அப்போதுதான் அடித்தளமிடப்பட்டது. 1996-2000 வரையான காலகட்டத்தில் 6 முதல் 14 வயதுள்ள 27,000 குழந்தைகள் புதிதாகச் சேர்க்கப்பட்டனர். ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இலவச பாடநூல்கள் வழங்கப்பட்டன. இதனால் ஏழை எளிய மாணவரது அடிப்படைக் கல்வி வளர்ச்சிச் சொல்லிக்கொள்ளும்படி இருந்தது.100 கிராமப்புற மாணவருக்கு 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கப்பட்டது.

1997ம் ஆண்டில் தான் உயர்கல்வித் துறை தனியாக உருவாக்கப்பட்டது. 1997-98ல் பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கைகளில் ஒற்றைச் சாளர முறை அறிமுகப்படுத்தப்பட்டது. பட்டதாரிகள் இல்லாத குடும்பங்களில் இருந்து தொழில்கல்வியில் சேர்ந்த முதல் 10 நிலை மாணவர்களின் உயர்கல்விச் செலவை அரசு ஏற்றுக்கொண்டது. உயர்கல்வியில் தமிழைப் பயிற்றுமொழியாக்குவது குறித்து ஆராய டாக்டர் கலைஞர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. இவையெல்லாம் பேராசிரியர் க.அன்பழகன் கல்வித் துறை அமைச்சராக இருந்த காலத்தில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களில் சில.
Read More

Friday, December 16, 2022

பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்: விஜயகாந்த் வலியுறுத்தல்

December 16, 2022 0
பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்: விஜயகாந்த் வலியுறுத்தல்

பகுதி நேர ஆசிரியர்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், தமிழகத்தில் உள்ள அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உடற்கல்வி, ஓவியம் மற்றும் தொழிற்கல்வி பாடங்களான தையல், இசை, கணினி அறிவியல் தோட்டக்கலை, கட்டிடக்கலை, வாழ்வியல் திறன்கல்வி ஆகியவற்றை கற்றுத் தருவதற்காக அனைவருக்கும் கல்வி இயக்கம் திட்ட வேலையில் 16,549 பகுதிநேர ஆசிரியர்கள் கடந்த 2012ம் ஆண்டு நியமிக்கப்பட்டனர்.

இவர்களுக்கு மாதம் ரூ.5,000 தொகுப்பு ஊதியம் வழங்கப்படும் என அப்போதைய முதல்வர் ஜெயலலிதா தமிழக சட்டப்பேரவையில் அறிவித்தார். இவர்களில், கடந்த 10 ஆண்டுகளில் 4 ஆயிரம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டு, 12 ஆயிரம் பேர் பணிபுரிந்து வருகிறார்கள்.

பகுதிநேர ஆசிரியர்களுக்கு 2014ம் ஆண்டு ரூ.2 ஆயிரமும், 2017ம் ஆண்டு ரூ.700-ம், கடைசியாக 2021ம் ஆண்டு ரூ. 2300-ம் ஊதிய உயர்வு வழங்கப்பட்டது. இதன் மூலம் ரூ.10ஆயிரம் தொகுப்பூதியத்தோடு அவர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வதாக மு.க. ஸ்டாலின் வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால் திமுக ஆட்சிக்கு வந்து 19 மாதங்கள் கடந்து விட்ட நிலையில், பகுதி நேர ஆசிரியர்களை தற்போது வரை பணி நிரந்தரமும் செய்யவில்லை, சம்பளத்தையும் உயர்த்தவில்லை.

மேலும் பொங்கல் போனஸ், பண்டிகை முன்பணம் போன்றவை இதுவரை மறுக்கப்பட்டு வருகிறது. 12 ஆயிரம் குடும்பங்கள் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட, அவர்களை உடனடியாக பணிநிரந்தரம் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பகுதிநேர ஆசிரியர்களின் கோரிக்கைகள் நியாயமானவை என்பதால் அவற்றை நிறைவேற்ற வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
Read More

Saturday, October 29, 2022

10 ஆண்டுகள் பணி முடித்தவர்களுக்கு அரசு பணி நிரந்தரம் வழங்க வலியுறுத்தல்

October 29, 2022 0
10 ஆண்டுகள் பணி முடித்தவர்களுக்கு அரசு பணி நிரந்தரம் வழங்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

தமிழ்நாடு அரசின் பொதுப்பணித்துறையில் பத்தாண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் தற்காலிக பணியாளர்கள் 6 பேரை பணி நிரந்தரம் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டிருக்கிறது. தற்காலிக பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய தமிழக அரசு மறுத்த நிலையில், அதை நிராகரித்து அவர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் சமூக நீதி வழங்கியிருப்பது மிகவும் வரவேற்கத்தக்கதாகும்

இதுதொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொதுப்பணித்துறையில் 1996-98 முதல் 24-26 ஆண்டுகளாக தற்காலிக மஸ்தூர் தொழிலாளர்களாக பணியாற்றி வந்த 6 பேர் தங்களுக்கு பணி நிரந்தரம் வழங்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். அவர்களின் மனுவை ஒற்றை நீதிபதி தள்ளுபடி செய்து விட்ட நிலையில், அதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு விசாரித்த இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு, மனுதாரர்கள் 6 பேரும் 10 ஆண்டுகளுக்கு மேலாக தற்காலிக பணியாளர்களாக பணியாற்றியிருப்பதால் அவர்கள் எந்த தேதியில் பத்தாண்டுகளை நிறைவு செய்தார்களோ, அந்த நாளில் இருந்து அவர்களுக்கு பணி நிரந்தரம் வழங்க வேண்டும் என்று ஆணையிட்டுள்ளது. அதுமட்டுமின்றி, அவர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்ட நாளில் இருந்து அதற்கான அனைத்து பயன்களையும் வழங்கவும் ஆணையிட்டுள்ளது.

28.02.2006 அன்று வெளியிடப்பட்ட பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறையின் அரசாணை எண் 22-இன் படி 01.01.2006 அன்று பத்தாண்டுகள் தற்காலிக பணி முடித்திருந்தவர்களுக்கு மட்டும் தான் பணி நிரந்தரம் வழங்க முடியும்; மனுதாரர்கள் 6 பேரும் அந்த தேதியில் பத்தாண்டு பணியை நிறைவு செய்யவில்லை என்பதால் அவர்களுக்கு பணி நிரந்தரம் வழங்க முடியாது என்று தமிழ்நாடு அரசின் சார்பில் வாதிடப்பட்டது. ஆனால், அதை ஏற்க மறுத்து விட்ட நீதிபதிகள், 6 பணியாளர்களும் 10 ஆண்டுகளுக்கும் கூடுதலாக தற்காலிக பணியாளர்களாக பணியாற்றியுள்ளனர் என்பதை மட்டும் கருத்தில் கொண்டு அவர்களுக்கு பணி நிரந்தரம் வழங்கியுள்ளனர். இது மனிதநேயமிக்க தீர்ப்பாகும்.

சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு எந்த அடிப்படையில் வழங்கப்பட்டதோ, அதை அடிப்படையில் தமிழக அரசின் பல்வேறு துறைகளில் 10 ஆண்டுகளுக்கும் கூடுதலாக பணியாற்றி வரும் தற்காலிக பணியாளர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது தான் பாமக நிலைப்பாடு ஆகும். தற்காலிக பணியாளர்களை பணி நிரந்தரம் செய்வதில் உயர்நீதிமன்றம் கருணையுடன் நடந்து கொள்ளும் நிலையில், அது தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்திருக்கும் அரசாணைகள் கடுமையானவையாகவும், கருணையற்றவையாகவும் உள்ளன என்பதே உண்மையாகும்.

2000-ஆவது ஆண்டுக்குப் பிறகு தற்காலிக பணியாளர்களை பணி நிரந்தரம் செய்வதற்கான முதல் அரசாணை 2006-ஆம் ஆண்டில் பிறப்பிக்கப்பட்ட நிலையில், 27.06.2013-ஆம் நாளில் அரசாணை எண் 74-ம், 28.11.2020-ஆம் நாளில் அரசாணை எண் 131-ம் பிறப்பிக்கப்பட்டன. கடைசி இரு அரசாணைகளும் நடைமுறைப்படுத்த முடியாத அளவுக்கு கடுமையானவை. 2006-ஆம் ஆண்டுக்கு முன்பாக பத்தாண்டு தற்காலிக பணியை நிறைவு செய்திருக்க வேண்டும்; அவர்கள் தற்காலிகமாக நியமிக்கப்பட்ட பணியிடம் அரசால் ஒப்புதல் அளிக்கப்பட்ட பணியாக இருக்க வேண்டும் ஆகிய நிபந்தனைகள் சாத்தியமற்றவை.

தமிழ்நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள அரசாணை எண் 131-இன் படி, 1995 திசம்பர் 31-ஆம் தேதிக்கு முன்பாக, ஒப்புதல் அளிக்கப்பட்ட பணியிடங்களில் தற்காலிக ஊழியராக சேர்ந்தவர்களை மட்டும் தான் பணி நிரந்தரம் செய்ய முடியும். இந்த அடிப்படையில் பார்த்தால் தமிழக அரசுத் துறைகளில் தற்போது பணியாற்றி வரும் தற்காலிகப் பணியாளர்களில் ஒருவரைக் கூட பணி நிரந்தரம் செய்ய முடியாது.

2000-ஆவது ஆண்டுக்குப் பிறகு சுமார் ஒரு லட்சம் தற்காலிக பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பான்மையினர் பத்தாண்டுகளை நிறைவு செய்து விட்டனர். அவர்களில் சுமார் 70% பணியாளர்கள் 20 ஆண்டுகளை கடந்து விட்டனர். அவர்களுக்கு பணி நிரந்தரம், அதன் மூலம் சமூக நீதியும் வழங்க வேண்டும் என்று அரசு நினைத்தால், அதற்கேற்றவாறு விதிகளை வகுக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல் சாத்தியமற்ற விதிகளை வகுத்தால், அதனால் யாருக்கும் பயனில்லை.

தமிழ்நாட்டில் தற்போது தற்காலிக ஊழியர்கள் பணியாற்றும் பணியிடங்களுக்கு இணையான நிரந்தர பணியிடங்கள் இல்லை. அதனால், அரசாணை எண் 131-இன்படி அவர்கள் தற்காலிக பணியாளர்களாகவே நீடிக்க முடியும்; பணி நிரந்தரம் வழங்க முடியாது. அதனால் தற்காலிக ஊழியராக சேர்ந்த ஒருவர் 35 ஆண்டுகள் பணியாற்றினாலும் அதே நிலையில் தான் ஓய்வு பெற வேண்டும்; அவருக்கு ஓய்வுக் கால பயன்கள் உள்ளிட்ட எந்த உரிமையும் கிடைக்காது. இதைவிட மோசமான சமூக அநீதி இருக்க முடியாது. தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியின்படி இந்த சமூக அநீதியை களைய திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தான் ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் எதிர்பார்ப்பு ஆகும்.

எனவே, அரசாணை எண் 131-இல் உள்ள நிபந்தனைகளை தளர்த்தி, சென்னை உயர்நீதிமன்றம் காட்டிய கருணையுடன், பத்தாண்டுகள் பணியாற்றிய தற்காலிக பணியாளர்கள் அனைவருக்கும், அவர்கள் எந்த தேதியில் பத்தாண்டுகளை நிறைவு செய்தார்களோ, அந்த நாளில் இருந்து அவர்களுக்கு பணி நிரந்தரம் வழங்க வேண்டும். இனி வரும் காலங்களில் தற்காலிக நியமனங்களை தவிர்த்து, அனைத்து பணியிடங்களுக்கும் நிரந்தர பணியாளர்களை நியமிக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
Read More

Wednesday, September 7, 2022

மாநில கல்விக் கொள்கை வகுக்கும் பணி தீவிரம்: அமைச்சா் பொன்முடி

September 07, 2022 0
மாநில கல்விக் கொள்கை வகுக்கும் பணிகளை விரைவுபடுத்தியுள்ளதாக தமிழக உயா் கல்வித் துறை அமைச்சா் பொன்முடி தெரிவித்தாா்.

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தனியாா் கல்லூரியின் நிகழ்ச்சியில் செவ்வாய்க்கிழமை கலந்து கொண்ட அவா், செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் அதிகளவில் உயா்கல்வி நிறுவனங்கள் இருப்பதற்குக் காரணம் திராவிட மாடல் ஆட்சிதான். தற்போதைய காலத்துக்கேற்ப பாடத்திட்டங்கள் மாற்றப்பட்டு வருகின்றன. மேலும், மாணவா்களும் தங்கள் துறைசாா்ந்த பல்வேறு படிப்புகளை கற்க வேண்டியது அவசியம்.

அதேபோன்று, மாணவா்களுக்கு முறையான கல்வியை வழங்க ஆசிரியா்களுக்கும் பயிற்சி வழங்கப்பட வேண்டும். புதுமைப்பெண் திட்டம், 7.5 சதவீத இடஒதுக்கீடு, பேருந்துகளில் மகளிருக்கு இலவசப் பயணம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டுள்ளன. இவை தவிர குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டத்தை விரைவில் நடைமுறைப்படுத்தவுள்ளதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

மத்திய அரசின் தேசிய கல்விக்கொள்கையை தமிழகம் எதிா்க்கிறது. ஏனெனில், அவற்றில் 3, 5, 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தோ்வு, மும்மொழிக் கொள்கை உள்ளிட்ட பல்வேறு முரணான அம்சங்கள் உள்ளன. தொடக்க வகுப்புகளுக்கு பொதுத்தோ்வு அமல்படுத்தினால் இடைநிற்றல் அதிகரிக்கும். எனவே, மேல்நிலை வகுப்புகளுக்கு மட்டும் பொதுத்தோ்வு இருந்தால் போதுமானது. மேலும், தமிழகத்தில் இருமொழிக் கொள்கைதான் அமலில் இருக்கும்.

இந்த தேசிய கல்விக்கொள்கை விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சகத்திடம் எழுத்துபூா்வமான எதிா்ப்பு தமிழகம் சாா்பில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. மாநில கல்விக்கொள்கையை வடிவமைக்கும் பணிகளை விரைவாக முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. முதுநிலை படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கை விரைவில் தொடங்கும் என்றாா் அவா்.
Read More

ரயில்வே போட்டித் தோ்வில் தமிழக தோ்வா்களுக்காக ஆந்திரத்தில் தோ்வு மையம்

September 07, 2022 0
ரயில்வே போட்டித் தோ்வில் தமிழக தோ்வா்களுக்காக ஆந்திரத்தில் தோ்வு மையம் அமைக்கப்பட்டதற்கு அமமுக பொதுச்செயலாளா் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்தாா்.

இது தொடா்பாக அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:

ரயில்வே தோ்வில் தமிழ்நாட்டைச் சோ்ந்தவா்களுக்கு ஆந்திரத்தில் தோ்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது தவறு என சுட்டிக்காட்டப்பட்ட பிறகும் இதுவரை சரிசெய்யப்படாதது கண்டனத்துக்குரியது.

ரயில்வே தோ்வு எழுதும் தமிழ்நாட்டைச் சோ்ந்தவா்களுக்கு இங்கேயே தோ்வு மையங்களை ஒதுக்கிட ரயில்வே அமைச்சகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழக எம்.பி.க்கள் இது குறித்து உரியவா்களின் கவனத்துக்கு எடுத்துச் சென்று பிரச்னைக்கு தீா்வு காண வேண்டும் என்று கூறியுள்ளாா் டிடிவி தினகரன்.
Read More

Tuesday, August 2, 2022

கேட் மதிப்பெண் அடிப்படையில் ஊழியர் சேர்க்கை கூடாது: டி.ஆர்.பாலு வலியுறுத்தல்

August 02, 2022 0
பட்டதாரிகள், பட்ட மேற்படிப்பில் சேருவதற்காக கேட் தேர்வு நடத்தப்படுகிறது. உயர் தொழிநுட்ப படிப்பில் சேர தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பணியாளர்களை நியமிக்கக் கூடாது என டி.ஆர்.பாலு கேட்டுக் கொண்டுள்ளார். பொறியியல் பட்டதாரிகள் திறன் மதிப்பீட்டுத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் 3 ஆண்டுகளுக்கு செல்லத்தக்கதாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Read More

Friday, July 1, 2022

நீட் எதிர்ப்பு பேச்சால் மாணவர்களை திசை திருப்ப கூடாது: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

July 01, 2022 0
நீட் தேர்வுக்கு எதிராக அரசியல் ரீதியான கருத்துகளை பேசி மாணவர்களை திசை திருப்ப வேண்டாம் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தி உள்ளார்.

தமாகா இளைஞர் அணி சார்பில் ஏழை, எளிய மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான இலவச கையேடு வழங்கும் நிகழ்ச்சி,சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள டி.என்.ராஜரத்தினம் கலை அரங்கத்தில் நேற்று நடந்தது.

மாணவர்களுக்கு இலவச கையேடுகளை கட்சித் தலைவர் ஜி.கே.வாசன், வழங்கினார். நிகழ்ச்சியில் தமாகா மாநிலஇளைஞர் அணி தலைவர் யுவராஜா, மாநிலபொதுச் செயலாளர்கள் விடியல் சேகர்,சக்தி வடிவேல் மற்றும் மாவட்ட இளைஞர் அணி தலைவர்கள், நிர்வாகிகள் பங்கேற்றனர். இதில் ஜி.கே.வாசன் பேசியதாவது: நீட் தேர்வு மூலம் மாணவர்களின் கல்வித்தரம், வெளிப்படைத் தன்மை உயர வாய்ப்பு உருவாகிறது. ஏழை, பணக்காரன் என்ற வேறுபாடுகளை கடந்து, நீட் தேர்வு மூலம் மாணவர்கள் பயன்பெறுகின்றனர். அரசும், தனியாரும் மருத்துவக் கல்வியை வியாபார நோக்கத்துடன் பார்க்கும் தவறான கண்ணோட்டம், நீட் தேர்வால் பலிக்காமல் போகிறது.

ஒவ்வொரு ஆண்டும் நீட் தேர்வில் மாணவர்கள் தேர்ச்சி சதவீதம் உயர்ந்துகொண்டு இருக்கிறது. எனவே, அரசியல்ரீதியாக நீட் தேர்வுக்கு எதிரான கருத்துகளை பேசி மாணவர்களை திசை திருப்பி முடக்கிவிடவேண்டாம். மாணவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். அரசியல் கட்சிகள் வாக்கு வங்கி லாபத்துக்காக மாணவர்களை ஏமாற்றாமல், அவர்கள் நீட் தேர்வு எழுதுவதற்கு வசதியாக மாநில அரசின் பாடத் திட்டங்களை தரம் உயர்த்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இளைஞர் அணி தலைவர் யுவராஜா பேசும்போது, ‘‘தமிழகம் முழுவதும் டாக்டராக வேண்டும் என்ற கனவோடு இருக்கும் மாணவர்களிடம் இந்த கையேட்டை கொண்டு சேர்ப்போம். நீட் தேர்வு நல்லதா,கெட்டதா என்று மாணவர்கள் சிந்திக்க வேண்டாம். ஏனென்றால், அது தேர்வு நேரத்தில் உங்களை பாதிக்கும். அடுத்தகட்டமாக தருமபுரியில் இதேபோன்ற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது’’ என்றார்.

இதையடுத்து, இளைஞர் அணி மாநிலத் தலைவர்கள், மாவட்டத் தலைவர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், பெண்கள் பாதுகாப்புக்கான சட்டம், ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம், பூரண மதுவிலக்கு, அக்னி பாதை திட்டத்துக்கு வரவேற்பு, விவசாயிகள் தொலைநோக்குதிட்டம் ஆகியவற்றை நிறைவேற்றவேண்டும் என்பது உட்பட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Read More

Saturday, June 25, 2022

கல்லூரிகளில் மாணவா் சோ்க்கை: அரசுக்கு மாா்க்சிஸ்ட் கோரிக்கை

June 25, 2022 0
கல்லூரிகளில் மாணவா்கள் சோ்க்கை காலம் மாறுபாடு இல்லாமல் இருக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளாா். இது தொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் உள்ள மாணவ, மாணவியா் பள்ளிக்கல்வி முடித்து உயா்கல்விக்காக கல்லூரிகளில் சோ்ந்திட விண்ணப்பித்து வருகின்றனா். மத்திய பள்ளிக் கல்வித்துறை வாரியத்தின் பிளஸ் 2 வகுப்பு தோ்வு முடிவுகள் ஜூலை 4 அல்லது 5 ஆம் தேதிகளில் வெளியாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது. உயா்கல்வித்துறை அமைச்சா் பொன்முடி, சிபிஎஸ்இ பிளஸ் 2 வகுப்பு தோ்வு முடிவுகள் வந்த பின்னா் 5 நாள்கள் கழித்தே அனைத்து கல்லூரிகளும் தங்கள் மாணவா் சோ்க்கையை முடிக்க வேண்டும் என கூறியதை கவனத்தில் கொள்ளாமல் சில கல்லூரிகள் மாணவா் சோ்க்கையை தொடா்வதும், சில கல்லூரிகள் மாணவா் சோ்க்கை முடிந்துவிட்டது என அறிவிப்பதும் ஏற்கதக்கதல்ல. சிபிஎஸ்இ மாணவா்களும், அவா்தம் பெற்றோா்களும் மிகவும் பதற்றத்திலும், அச்சத்திலும் இருக்கிறாா்கள். மேலும், தோ்வு முடிவுகள் வெளிவருவதற்கு முன்னரே கல்லூரிகளில் மாணவா் சோ்க்கை முடிந்துவிட்டால், தங்களது எதிா்காலம் பாதிக்கப்படுமோ என்ற அச்சத்தில் சிபிஎஸ்இ மாணவா்கள் உள்ளனா். எனவே, தமிழகத்தின் அனைத்து கல்லூரிகளும் மாணவா்களின் எதிா்கால நலனை கருத்தில் கொண்டு சிபிஎஸ்இ மாணவா்கள், தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை வாரிய மாணவா்கள், மறு மதிப்பீடு செய்ய கோரும் மாணவா்கள், மறு தோ்வு எழுதி தோ்வு முடிவுகள் வரப்பெற்ற மாணவா்கள் ஆகியோரது விண்ணப்பங்கள் இணையதளம் மூலம் அல்லது விண்ணப்பப் படிவம் மூலம் வரப்பெற்ற பின்னரே, தமிழக அரசின் விதிமுறைகளை பின்பற்றி கல்லூரிகள் மாணவா் சோ்க்கையை நடத்த உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று கூறியுள்ளாா் கே.பாலகிருஷ்ணன்.
Read More

Monday, April 4, 2022

மத்திய பல்கலைக்கழகங்களில் பொது நுழைவுத்தேர்வை தடுத்து நிறுத்த கோரிக்கை

April 04, 2022 0
The OBS has demanded that Chief Minister MK Stalin take action to stop the public entrance examination to be held at central universities on the basis of the National Education Policy. AIADMK co-ordinator and former premier O. Panneerselvam said in a statement that the Union Ministry of Education has announced that entrance examinations for admission to courses in Central Universities will be held from the academic year 2022-2023 as students are struggling to cancel the NEED examination for medical admissions. And has caused massive dissatisfaction among academics.

The Central University Entrance Test (CUET) will be conducted from the academic year 2022-2023 to fill the 1.8 lakh seats available for various undergraduate and postgraduate courses in 45 Central Universities across India and its affiliated colleges. According to media reports, the Union Ministry of Education has stated that the marks obtained in Class XII will not be given any importance.

The DMK has decided to conduct this examination on the basis of the National Education Policy. Despite protests from the government, there are reports that registration for the entrance exam has begun and applications for the entrance exam will be available in 13 languages, including Tamil, by the 30th of this month. This confirms that admission to Central Universities and its affiliated colleges is through entrance examinations.

If this situation continues, I would like to inform you that in the future, admission to undergraduate and postgraduate courses in all universities and its affiliated colleges may become compulsory and there will be no value for the marks obtained in Class XII. Also, Class XII will be like a qualifying exam for the entrance exam. Poor, simple, rural students will be severely affected by this.

Without nominally objecting to this entrance exam, the DMK has taken the necessary creative steps to withdraw it. The government should take immediate action. It is the responsibility of the DMK to pinch it. The government has. Poor, simple rural student, students are currently suffering due to the tail wagging left in the NEET exam. - Besides, in the case of this entrance examination, keeping in mind that this is the right time, the DMK has taken the necessary steps to withdraw the entrance examination notice without delay. There is an expectation among students, alumni and academics that the government should take over.

Therefore, on behalf of the All India Anna Dravida Munnetra Kazhagam, I request the Hon'ble Chief Minister to bring this issue to the immediate attention of the Central Government, to put the necessary pressure and take immediate action to withdraw the entrance examination notice. தேசியக் கல்விக் கொள்கையின் அடிப்படையில் மத்திய பல்கலைக்கழகங்களில் நடத்தப்பட இருக்கும் பொது நுழைவுத் தேர்வை தடுத்து நிறுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'மருத்துவப் படிப்புச் சேர்க்கைக்கான நீட் தேர்வினை ரத்து செய்ய இயலாமல் போராடிக் கொண்டிருக்கின்ற நிலைமையில், 2022-2023 ஆம் கல்வி ஆண்டிலிருந்து மத்தியப் பல்கலைக்கழகங்களில் உள்ள படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்று மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது மாணவ, மாணவியர், பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்களிடையே பெருத்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா முழுவதும் உள்ள 45 மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன் இணைப்புக் கல்லூரிகளில் இருக்கின்ற பல்வேறு இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளுக்கான 1.8 இலட்சம் இருக்கைகளை நிரப்ப ஏதுவாக, 2022-2023 ஆம் கல்வியாண்டிலிருந்து மத்திய பல்கலைக்கழக நுழைவுத்தேர்வு, அதாவது Central University Entrance Test (CUET) நடத்தப்படும் என்றும், பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்தத் தேர்வினை எழுதத் தகுதியுடையவர்கள் என்றும், பன்னிரெண்டாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்ணிற்கு எந்தவிதமான முக்கியத்துவமும் தரப்படாது என்றும் மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளதாக பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது. தேசியக் கல்விக் கொள்கையின் அடிப்படையில் நடத்தப்படும் இந்தத் தேர்வுக்கு தி.மு.க. அரசு எதிர்ப்புத் தெரிவித்து இருந்தாலும், நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு தொடங்கிவிட்டதாகவும், நுழைவுத் தேர்வுக்கு இந்த மாதம் 30 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும், இந்தத் தேர்வு தமிழ் மொழி உட்பட 13 மொழிகளில் கணினி வழியில் நடத்தப்படும் என்றும் செய்திகள் வந்துள்ளன. இதிலிருந்து மத்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன் இணைப்புக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நுழைவுத் தேர்வு மூலம்தான் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலை தொடர்ந்தால், வருங்காலங்களில் அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன் இணைப்புக் கல்லூரிகளில் உள்ள இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளுக்கான சேர்க்கைக்கும் நுழைவுத் தேர்வு கட்டாயம் என்ற நிலை உருவாகக்கூடும் என்பதோடு மட்டுமல்லாமல் பன்னிரெண்டாம் வகுப்பில் பெறும் மதிப்பெண்ணிற்கு ஒரு மதிப்பு இருக்காது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், பன்னிரெண்டாம் வகுப்பு என்பது நுழைவுத் தேர்விற்கான ஒரு தகுதித் தேர்வு போல் ஆகிவிடும். இதன் மூலம் ஏழை, எளிய, கிராமப்புற மாணவ மாணவியர் கடுமையாக பாதிக்கப்படுவர். இந்த நுழைவுத் தேர்வுக்கு பெயரளவில் எதிர்ப்புத் தெரிவிக்காமல், இதனை திரும்பப் பெறத் தேவையான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை தி.மு.க. அரசு உடனடியாக எடுக்க வேண்டும். இதனை முளையிலேயே’ - கிள்ளி எறிய வேண்டிய பொறுப்பு தி.மு.க. அரசுக்கு உண்டு. நீட் தேர்வில் தும்பை விட்டு வாலைப் பிடித்ததன் காரணமாக ஏழை, எளிய கிராமப்புற மாணவ, மாணவியர் தற்போது அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். - அதுபோல் அல்லாமல், இந்த நுழைவுத் தேர்வு விஷயத்திலாவது, இதுதான் சரியான தருணம் என்பதை மனதில் நிலைநிறுத்தி, காலந்தாழ்த்தாமல் நுழைவுத் தேர்வு அறிவிப்பினை திரும்பப் பெறத் தேவையான நடவடிக்கைகளை தி.மு.க. அரசு எடுக்க வேண்டுமென்ற எதிர்பார்ப்பு மாணவ, மாணவியர்கள் மற்றும் கல்வியாளர்களிடையே உள்ளது.

எனவே, மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இந்தப் பிரச்சனையை மத்திய அரசின் கவனத்திற்கு உடனடியாக எடுத்துச் சென்று, தேவையான அழுத்தத்தைக் கொடுத்து, நுழைவுத் தேர்வு அறிவிப்பினை உடனடியாக திரும்பப் பெற நடவடிக்கை எடுக்குமாறு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.
Read More

Thursday, March 24, 2022

பள்ளிச்சீருடையில் அரசு பேருந்தில் மது குடித்துவிட்டு பள்ளி மாணவ, மாணவிகள் ரகளை - அறிக்கை வெளியீடு

March 24, 2022 0
தமிழ்நாட்டில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் பொன்விளைந்த களத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவ, மாணவிகள், பள்ளிச்சீருடையில் அரசுப் பேருந்தில் நின்று கொண்டு மது அருந்தி , ரகளை செய்யும் காட்சிகள் அடங்கிய காணொலி சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது. படிக்க வேண்டிய மாணவ, மாணவிகள் குடித்து விட்டு ரகளை செய்வது மிகுந்த வேதனையளிக்கிறது. சமூக ஊடகங்களில் பரவி வரும் காணொலியில் மாணவிகள் நின்று கொண்டு ஒரு பாட்டில் மதுவை பகிர்ந்து குடிக்கின்றனர். அவர்களுடன் மாணவர்களும் இருக்கின்றனர். அந்தக் காணொலியைப் பார்க்கும் பெற்றோராக இருந்தாலும், ஆசிரியர்களாக இருந்தாலும் அவர்களின் நெஞ்சம் பதைபதைக்கும். பள்ளிகளுக்கு செல்லும் தங்களின் குழந்தைகளும் இத்தகைய சீரழிவுகளுக்கு ஆளாகி விடுவார்களோ? என்ற அச்சமும், கவலையும் அவர்களை வாட்டும். இந்தியாவின் எதிர்காலத் தூண்களாக உருவாக வேண்டியவர்கள், உருப்படாமல் போய்விடுவார்களோ? என்ற கவலை ஆசிரியர்களை அலைக்கழிக்கும்.

மாணவ, மாணவியர் மது அருந்தி அநாகரிகமாக நடந்து கொள்வது இது முதல்முறையல்ல. கடந்த 2015-ஆம் ஆண்டு திருச்செங்கோடு அரசு மகளிர் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்த 7 மாணவிகள் வகுப்பறையில் மது அருந்தியதும், அவர்களில் இருவர் வகுப்பறையிலேயே மயங்கி விழுந்ததும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதற்கு முன் திருச்செங்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மது குடித்த 7 மாணவர்களும், மாணிக்கம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மது அருந்திய 4 மாணவர்களும் பள்ளியிலிருந்து நீக்கப்பட்டனர். தனியார் பள்ளிகளிலும் இதே போன்ற சம்பவங்கள் நடந்ததாக பல முறை செய்திகள் வெளியாகியுள்ளன. இத்தகைய நிகழ்வுகள் தொடர்கதையாவது தான் சோகமாகும். பொது வெளியில், அரசு பேருந்தில், பயணிகளுக்கு மத்தியில் மாணவர்களும், மாணவிகளும் இணைந்து, எந்தவித அச்சமும், நாணமும் இன்றி மது அருந்துவது சாதாரணமான ஒன்றல்ல. இது ஒட்டுமொத்த தமிழ்ச்சமுதாயமும் வெட்கி தலைகுனிய வேண்டிய செயலாகும். அதேநேரத்தில் இதற்கு மாணவர்களை மட்டுமே குறை கூறி விட முடியாது. இத்தகைய தவறுகளை செய்வதற்கான சூழலை ஏற்படுத்திய திரைப்பட காட்சிகளும், தெரு தோறும் மதுக்கடைகளை திறந்து வைத்த அரசும் தான் முதன்மைக் காரணமாகும்.பொது வெளியில் மது அருந்துவதும், காலியான மதுப்புட்டிகளை சாலைகளில் வீசி உடைப்பதையும் தான் சாகசங்கள் என்று திரைப்படங்கள் கற்பிக்கின்றன. இத்தகைய காட்சிகள் இளைய தலைமுறை மத்தியில் எத்தகைய சீரழிவை ஏற்படுத்தும் என்பது குறித்த அக்கறை திரைத்துறையினருக்கு இல்லை. கதைக்கு இத்தகைய காட்சிகள் அவசியம் என்று சிலர் அதை நியாயப்படுத்தவும் செய்கின்றனர். அக்காட்சியின் போது ‘மது குடிப்பது உடல் நலத்திற்கு தீங்கானது’ எச்சரிக்கை வாசகத்தை காட்டி விட்டால், அதுவே பாவத்திற்கான பரிகாரமாகி விடும் என அவர்கள் நினைக்கின்றனர். இந்நிலை மாற வேண்டும். சீரழிவுக்கு துணை போகும் சில திரைத்துறையினரும் சமூகப் பொறுப்புடன் செயல்பட வேண்டும். 2003ஆம் ஆண்டில் மதுக்கடைகள் அரசுடைமையாக்கப்ப்பட்ட பின்னர் தெருக்கள் தோறும் மதுக்கடைகள் திறக்கப்பட்டதை விட பெரும் துரோகம் எதுவும் இருக்க முடியாது. வீட்டிலிருந்து பள்ளிக்கு செல்லும் வழியில் நூலங்களும், ஆலயங்களும் இருக்கின்றனவோ, இல்லையோ.... மதுக்கடைகள் இருக்கின்றன. மதுக்கடைகளை கடந்து தான் கிட்டத்தட்ட அனைத்து மாணவ, மாணவியரும் கல்வி நிறுவனங்களுக்கு செல்ல வேண்டியிருக்கிறதுமுன்னொரு காலத்தில் மதுக்கடைகள் ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் தான் இருந்தன. அதனால் மது என்ற சாத்தான் குறித்து மாணவர், மாணவியருக்கு தெரியாமல் இருந்தது. ஆனால், இப்போது மது மிகவும் எளிதாகவும், தாராளமாகவும் கிடைப்பது தான் மாணவச் செல்வங்களின் சீரழிவுக்கு காரணம்.தமிழ்நாட்டில் மதுக்கடைகள் நண்பகல் 12.00 மணிக்குத் தான் திறக்கப்படுகின்றன. 21 வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டும் தான் மது விற்பனை செய்யப்படுவதாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதிமொழி அளித்திருக்கிறது. ஆனால், காலையில் பள்ளிக்கூடத்திற்கு செல்லும் போதே, 17 வயது கூட நிரம்பாத மாணவச் செல்வங்களின் கைகளில் மதுப்புட்டிகள் எங்கிருந்து கிடைத்தன? இந்த வினாவுக்கு விடையளிக்காமல் அரசும், டாஸ்மாக் நிறுவனமும் எளிதாக கடந்து சென்று விட முடியாது. முதலில் 4 வயது குழந்தைக்கும், பின்னர் 10 மாதக் குழந்தைக்கும் அவர்களின் உறவினர்களே மது கொடுத்து குடிக்கச் செய்த கொடூரங்களை தமிழகம் பார்த்தது, கோவை தனியார் பள்ளி 12-ஆம் வகுப்பு மாணவி போதையில் சாலையில் செல்பவர்களையும், பொதுமக்களையும், காவல்துறையினரையும் ஆபாச வார்த்தைகளால் திட்டி மயங்கி விழுந்ததையும் தமிழகம் பார்த்தது, திருச்செங்கோட்டில் மாணவர்கள் வகுப்பறைகளில் மது குடித்த அவலத்தையும் தமிழகம் பார்த்தது, கரூரிலும், மணப்பாறையிலும் மாணவர்கள் கடுமையான போதையில் சீருடையுடன் சாலையில் மயங்கி விழுந்து சுயநினைவின்றி கிடந்த கொடுமையை தமிழகம் பார்த்தது, அனைத்துக்கும் உச்சமாக பேருந்தில் மாணவிகள் மது குடிக்கும் சீரழிவை தமிழகம் இப்போது பார்த்துக் கொண்டிருக்கிறது. இன்னும் என்னென்ன சீரழிவுகளையெல்லாம் பார்க்க வேண்டும் என அரசு ஆசைப்படுகிறது எனத் தெரியவில்லை.மதுவை விற்று அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் தான் அரசை நடத்த வேண்டும் என்ற நிலை இருக்கும் வரை தமிழகத்தில் இத்தகைய சீரழிவுகளை தவிர்க்க முடியாது. மதுவில் மூழ்கும் தமிழகத்தையும், எதிர்காலத் தலைமுறையினரையும் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் தமிழக அரசுக்கு இருந்தால் உடனடியாக தமிழ்நாட்டில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
Read More

Sunday, February 6, 2022

நீட் தேர்வை உணர்வு ரீதியில் அணுக வேண்டாம்: புள்ளி விபரங்களை பார்க்க

February 06, 2022 1
''தமிழகத்தில் நீட் தேர்வை ஆதரிப்போரை, தமிழின துரோகிகள் என்றும், நீட் தேர்வை எதிர்ப்போரை, தேச விரோதிகள் என்றும் முத்திரை குத்துகின்றனர்,'' என, காங்கிரஸ் -எம்.பி., கார்த்தி சிதம்பரம் குற்றஞ்சாட்டினார்.

நமது நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டி: 'நீட்' தேர்வில், தமிழகத்திற்கு மட்டும் விலக்கு கேட்டு போராடி வருகின்றனர். நான், நீட் தேர்வை ஆதரிக்கிறேன்.நீட் தேர்வு பற்றி பேசுவதற்கு முன், அந்த தேர்வு இல்லாமல், மருத்துவப் படிப்புக்கு மாணவர்கள் தேர்வான முறை பற்றிப் பார்க்க வேண்டும். பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் தான், மாணவர் சேர்க்கை நடந்தது.

அப்போது மருத்துவக் கல்லுாரியில் சேர, 1 சதவீதம் அளவுக்கு தான், கிராமப்புற மாணவர்களுக்கு வாய்ப்பு கிடைத்தது. அதே நேரம், நீட் தேர்வுக்கு பின், அரசு பள்ளி களில் படித்த மாணவர்களுக்கு, 7.5 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டது. இதனால், கிராமப்புற மாணவர்களுக்கு கூடுதல் இடம் கிடைத்து வருகிறது.

அதை 10 சதவீதமாக்கினால், கிராம மாணவர்களுக்கு, குறிப்பாக அரசு பள்ளி மாணவர்களுக்கு கூடுதல் வாய்ப்பு கிடைக்கும். அதை, தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். குற்றச்சாட்டு

நீட் தேர்வே வேண்டாம் என்று சொல்வதில் அர்த்தமில்லை. ஆனால், தமிழகத்தில் இது ஒரு பெரும் விவாதமாக்கப்பட்டு விட்டதால், எல்லாவற்றையும் புள்ளி விபரங்களுடன் ஆராய்ந்து, ஒரு முடிவுக்கு வர வேண்டும்.

கல்வியாளர்களும், புள்ளியியல் நிபுணர்களும் அமர்ந்து, நீட் தேர்வு அமல்படுத்தப்பட்ட பின், தமிழகத்தில் எத்தனை கிராமப்புற மாணவர்கள், மருத்துவக் கல்லுாரியில் சேர்க்கப்பட்டனர்; நீட் தேர்வு வருவதற்கு முன், எத்தனை பேர் தேர்வு செய்யப்பட்டனர் என்பதை ஆராய வேண்டும்.அதன் பின், தெளிவான தீர்வை கண்டறிய வேண்டும்.

நீட் தேர்வால், மருத்துவக் கல்லுாரியில் சேரும் மாணவர்கள், தகுதி மிக்கவர்களாக உள்ளனர் என்ற வாதம் முன்வைக்கப்பட்டாலும், அந்த மாணவர்கள், பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற பின், நீட் தேர்வுக்காக தனியாக 'கோச்சிங்' செல்ல வேண்டியுள்ளது. அதற்கு நிறைய செலவாகிறது என்பதையும் ஏற்கத் தான் வேண்டும். தனியார் கோச்சிங் சென்டர்களில் சேரும் வாய்ப்பு, கிராமப்புற மாணவர்களுக்கு கிடைக்கவில்லை; அதற்கான வசதி அவர்களுக்கு இல்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. அதுவும் ஏற்கத்தக்கது தான். அதே நேரம், நீட் தேர்வுக்கு முந்தைய நிலையிலேயே, மருத்துவக் கல்விக்கான சேர்க்கை நடத்துவதாக வைத்துக் கொண்டால் என்னாகும்?

பிளஸ் 2 மதிப்பெண் தான், மருத்துவக் கல்லுாரியில் சேரும் மாணவனின் தகுதியைதீர்மானிக்கும் என்ற நிலையில், ராசிபுரம், நாமக்கல் பள்ளிகளில் நடந்தது தான் நடக்கும்.காலை 4:00 மணிக்கு மாணவர்களை எழுப்பி விடுவர்; இரவு 12:00 மணி வரை தொடர்ச்சியாகபாடங்களை படிக்கச் சொல்வர்; மனப்பாடம் செய்யச் சொல்வர்.

மனப்பாடம் செய்ததை எல்லாம், திரும்ப திரும்ப எழுதச் சொல்வர். அதன் மேல் தேர்வும் வைப்பர். மாணவர்கள் மனப்பாடம் செய்து, அதை திருப்பி எழுதுவரே தவிர, எந்த பாடத்தையும் புரிந்து படிக்க மாட்டார்கள்.

இந்தக் குறைபாட்டை எப்படி நீக்குவது? அதற்காக தான் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது. நீட் தேர்வு சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடத்தப்படுகிறது என்றதும், தமிழகத்தில் சில ஆண்டுகளுக்கு முன், பாடத்திட்டத்தில் நிறைய மாற்றங்கள் கொண்டு வந்தனர்.

குழப்பங்கள்

அதன்பின், நீட் தேர்வில், தமிழக பாடத்திட்டத்தில் இருந்து கேட்கப்படும் கேள்விகளும் அதிகம் இருந்தன. இதனாலும், தமிழக மாணவர்களின் தேர்ச்சி அதிகம் ஆனது. அதனால் தான், புள்ளி விபரங்களோடு எல்லா விஷயங்களையும் ஆய்வு செய்து, விவாதித்து, நல்ல முடிவுக்கு வர வேண்டும் என்கிறேன்.

ஒரு வேளை, தமிழக அரசு கேட்பது போல, தமிழகத்துக்கு மட்டும் நீட் தேர்வில் இருந்து விலக்கு கிடைக்கிறது என வைத்துக் கொள்வோம்.தமிழகத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்கு சென்று, மருத்துவம் பயில விரும்புவோர் நிலை என்னாகும்?

அப்போதும் கூட, நம் மாணவர்கள் நீட் தேர்வு எழுதித் தானே ஆக வேண்டும்? இப்படி பல்வேறு குழப்பங்கள் இருக்கின்றன. எனவே, நீட் தேர்வை புள்ளி விபரங்கள் அடிப்படையில் தான் அணுக வேண்டுமே தவிர, உணர்வு ரீதியில் அணுகக் கூடாது.இவ்வாறு கார்த்தி சிதம்பரம் கூறினார்.

- நமது நிருபர் --
Read More

Thursday, January 6, 2022

பொங்கல் விடுமுறையில் நடைபெற இருந்த அஞ்சல் தேர்வுகள் ரத்து.

January 06, 2022 0
தமிழர்களின் உணர்வுகளை காயப்படுத்தும் முடிவுகளை கைவிடுங்கள் என இந்தியா போஸ்ட் இயக்குனருக்கு கடிதம் எழுதியிருந்தேன். கொரோனா காரணங்களை சுட்டி தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.

- சு.வெங்கடேசன், மதுரை எம்.பி
Read More

Sunday, December 12, 2021

அரசுப்பள்ளி கட்டிடத்தை இடித்து நொறுக்கிய ஒன்றிய கவுன்சிலர் மீது புகார்: கலெக்டர் விசாரணை

December 12, 2021 0
பள்ளி கட்டிடத்தை இடித்து நொறுக்கிய அதிமுக ஒன்றிய கவுன்சிலர் மீது புகார்: கலெக்டர் விசாரணை

திருவள்ளூர்: பள்ளி கட்டிடத்தை இடித்து அப்புறப்படுத்திய அதிமுக கவுன்சிலர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று திருவள்ளூர் கலெக்டர், போலீசில் புகார் கொடுத்துள்ளனர். திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட வெண்மனம் புதூர் கிராமத்தில் அரசு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் வடக்கு பக்கம் உள்ள கட்டிடம் சேதம் அடைந்து மோசமான நிலையில் இருந்தது. இதனால் அந்த கட்டிடத்தை இடித்து அகற்ற ஒன்றியக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதைத்தொடர்ந்து சேதம் அடைந்து காணப்பட்ட கட்டிடத்துக்கு பதிலாக கிழக்கு புறத்தில் நன்றாக இருந்த வகுப்பறை கட்டிடத்தை இடித்து அகற்றப்பட்டது. இதற்கு எவ்வித அனுமதியும் ஒப்பந்தமும் இல்லாமல் கடம்பத்தூர் ஒன்றியம் 2 வது வார்டு அதிமுக கவுன்சிலர் சுரேஷ், தன்னிச்சையாக முடிவெடுத்து கிழக்கு பக்கம் நன்றாக இருந்து கட்டிடத்தை இடித்துவிட்டார்.

இதுபற்றி திமுக மாவட்ட கவுன்சிலர் சரஸ்வதி சந்திரசேகர், மாவட்ட கலெக்டரிடம் புகார் கொடுத்தார். இந்த மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், ‘’ இதுபற்றி விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று கூறினார். இதுகுறித்து ஊராட்சி ஒன்றிய ஆணையர் ராம்குமார், கடம்பத்தூர் போலீசில் கொடுத்துள்ள புகாரில், ‘’ 2வது வார்டு அதிமுக ஒன்றிய கவுன்சிலர் சுரேஷ் என்பவர் கடம்பத்துார் ஊராட்சிக்கு உட்பட்ட வெண்மனம் புதூர் கிராமத்தில் அரசு ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியின் வகுப்பறை கட்டிடத்தை எந்தவித அனுமதியும் இல்லாமல் விதிகளை மீறி இடித்துள்ளார். எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்று தெரிவித்துள்ளார். இதன்படி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.

‘’நன்றாக இருந்த அரசு பள்ளி கட்டிடத்தை இடித்து அரசுக்கு இழப்பு ஏற்படுத்திய அதிமுக கவுன்சிலர் சுரேஷ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
Read More

Post Top Ad

Your Ad Spot