கல்வித்துறையில் பல சாதனைகள் புரிந்த பேராசிரியர் க.அன்பழகன்: கல்விக்காக செயல்படுத்திய மறக்க முடியாத திட்டங்கள்

கல்வித்துறையில் பல சாதனைகள் புரிந்த கலைஞரின் தோழர் பேராசிரியர் க.அன்பழகன்: கல்விக்காக செயல்படுத்திய மறக்க முடியாத திட்டங்கள்

பேராசியர் அன்பழகன் கல்வித் துறை அமைச்சராகப் பொறுப்பேற்று செயல்பட்ட காலங்களில் தமிழக அரசு கல்விக்காக செயல்படுத்திய பல திட்டங்கள் இன்றும் நினைவுகூரத்தக்கவை. பேராசிரியர் அன்பழகன் 1922 டிசம்பர் மாதம் 19ம் நாளில் திருவாரூருக்கு அருகிலுள்ள காட்டூரில் பிறந்தார். அவருடைய தந்தை கல்யாணசுந்தரம், தாய் சொர்ணாம்பாள். இவருக்கு முதலில் ராமையா என்னும் பெயர் சூட்டப்பட்டது. தனித் தமிழ் இயக்கத்தின் மீது கொண்ட பற்றால் ராமையா என்ற தனது இயற்பெயரை, அன்பழகன் என மாற்றிக்கொண்டார்.

1942ம் ஆண்டில் திருவாரூர் விஜயபுரத்தில் இஸ்லாமிய இளைஞர்கள் இணைந்து நடத்திய சிக்கந்தர் விழாவில் அண்ணா கலந்துகொண்டார். அவரைப் பார்க்க வந்த கலைஞர் கருணாநிதியும், அன்பழகனும் ஒருவருக்கொருவர் அறிமுகமாயினர். அதைத் தொடர்ந்து அன்பழகனை ஒரு கூட்டத்தில் பேச அழைத்தார் கலைஞர் கருணாநிதி. அப்போது உருவான நட்பு 76 ஆண்டுகள் நீடித்தது. எத்தகைய சூழலிலும் கலைஞரை விட்டோ கழகத்தை விட்டோ விலகாமல் இருந்தார். ‘நாங்கள் இருவரும் ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள்’ என்று மகிழ்ச்சி பொங்கிடக் குறிப்பிட்டு மகிழ்ந்தவர் கலைஞர்.

அன்பழகன் ஒன்பது முறை சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றியுள்ளார்; 1962ம் ஆண்டு சட்ட மேலவை உறுப்பினராகவும் இருந்துள்ளார். 1967 ஆண்டு தொடங்கி 1971ம் ஆண்டு வரை நாடாளுமன்ற உறுப்பினராகவும் செயல்பட்டுள்ளார். அண்ணா மறைவுக்குப் பிறகு கலைஞர் முதலமைச்சரானார். அந்தக் காலகட்டத்தில் 1971ல் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுக்கொண்டார் அன்பழகன். 1977ம் ஆண்டு முதல் திமுகவின் பொதுச் செயலாளராகவும் இருந்துவந்தார். அவரின் மனைவி வெற்றிச் செல்வி. இந்தத் தம்பதியினருக்குச் செந்தாமரை, மணவல்லி என இரு மகள்களும் அன்புச் செல்வன் என்னும் மகனும் இருக்கிறார்கள்.

அமைச்சராக பதவி வகித்த துறைகளில் எல்லாம் தனது முதிர்ந்த அனுபவத்தாலும், பரந்த தொலைநோக்குப் பார்வையாலும் பல்வேறு திட்டங்களைத் திறம்பட செயல்படுத்தியுள்ளார். அன்று ‘முதலில் நான் மனிதன், இரண்டாவது நான் அன்பழகன், மூன்றாவது நான் சுயமரியாதைக்காரன், நான்காவது நான் அண்ணாவின் தம்பி, ஐந்தாவது கலைஞரின் தோழன். இந்த உணர்வுகள் என் உயிர் உள்ளவரை என்னோடு இருக்கும் என அன்பழகன் குறிப்பிடுவது வழக்கம். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து, அன்பழகன் ‘என் அன்புக்குரிய தம்பி மு.க.ஸ்டாலின் தந்தையைப் போலவே உழைப்பு, உழைப்பு, உழைப்பு என்பதையே தாரக மந்திரமாகக் கொண்டவர்.

மக்கள் பணியில் சட்டமன்ற உறுப்பினராக, சென்னை மாநகர மேயராக, உள்ளாட்சித் துறை அமைச்சராக, துணை முதல்வராக பணியாற்றிப் படிப்படியாக உயர்ந்து உச்சம் தொட்டவர். காலமும் கடமையும் என்றும் தவறாதவர். சட்டமன்றத்தில் புள்ளிவிவரத்துடன் திறம்படப் பதில் அளிப்பதில் என்றுமே சளைக்காதவர்” என்று பாராட்டியுள்ளார். பேராசிரியரின் நூற்றாண்டை முன்னிட்டு, கடந்த ஆண்டு டிசம்பர் முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை நந்தனம் ஒருங்கிணைந்த நிதித்துறை வளாகத்தில் பேராசிரியரின் சிலையைத் திறந்து வைத்தார். ஏறத்தாழ 1,20,000 சதுர அடியில் இயங்கி வருகிறது.

இவ்வளாகத்திற்கு “பேராசிரியர் க.அன்பழகன் மாளிகை” என்று பெயர் சூட்டினார். இப்போது தமிழகம் அடைந்திருக்கும் தொழில்நுட்பக் கல்வியின் வளர்ச்சிக்கு அப்போதுதான் அடித்தளமிடப்பட்டது. 1996-2000 வரையான காலகட்டத்தில் 6 முதல் 14 வயதுள்ள 27,000 குழந்தைகள் புதிதாகச் சேர்க்கப்பட்டனர். ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இலவச பாடநூல்கள் வழங்கப்பட்டன. இதனால் ஏழை எளிய மாணவரது அடிப்படைக் கல்வி வளர்ச்சிச் சொல்லிக்கொள்ளும்படி இருந்தது.100 கிராமப்புற மாணவருக்கு 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கப்பட்டது.

1997ம் ஆண்டில் தான் உயர்கல்வித் துறை தனியாக உருவாக்கப்பட்டது. 1997-98ல் பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கைகளில் ஒற்றைச் சாளர முறை அறிமுகப்படுத்தப்பட்டது. பட்டதாரிகள் இல்லாத குடும்பங்களில் இருந்து தொழில்கல்வியில் சேர்ந்த முதல் 10 நிலை மாணவர்களின் உயர்கல்விச் செலவை அரசு ஏற்றுக்கொண்டது. உயர்கல்வியில் தமிழைப் பயிற்றுமொழியாக்குவது குறித்து ஆராய டாக்டர் கலைஞர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. இவையெல்லாம் பேராசிரியர் க.அன்பழகன் கல்வித் துறை அமைச்சராக இருந்த காலத்தில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களில் சில.
Post a Comment (0)
Previous Post Next Post