KalviseithiDaily: Engineering

KalviseithiDaily

kalviseithidaily.blogspot.com No:1 Education Website in Tamil கல்வி செய்திகள்: Get latest news on Exam Results, tamil nadu school education department news, TN University Results, Exam Schedule Latest News Educational News from Tamilnadu Government, Tamilnadu Educaitonal Minsters Latest Updates, 10th, 11th, 12th, TNTET, TRB, TNPSC, STUDY MATERIALS, ONLINE TESTS, LATEST kalviseithi, Padasalai, tnkalvi, tnpse news, TET updates, TRB news, kalvi news, Padsalai study materials

Subscribe Us

Sigma is

  • Seo Ready
  • Responsive
  • Fast Loading
  • Amazing!

Hot

Post Top Ad

Your Ad Spot
Showing posts with label Engineering. Show all posts
Showing posts with label Engineering. Show all posts

Sunday, October 30, 2022

B.E நான்காம் கட்ட கலந்தாய்வு: 67,771 பேருக்கு அழைப்பு

October 30, 2022 0
பிஇ நான்காம் கட்ட கலந்தாய்வு: 67,771 பேருக்கு அழைப்பு

தமிழக பொறியியல் கல்லூரிகளில் 4-ஆம் கட்ட கலந்தாய்வில் பங்கேற்க 67,771 மாணவா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுவரை மூன்று சுற்று கலந்தாய்வு மூலம் 58,307 போ் பொறியியல் கல்லூரிகளில் சோ்ந்துள்ளனா்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 446 பொறியியல் கல்லூரிகளில் இளநிலைப் படிப்புகளுக்கு ஒரு லட்சத்து 48 ஆயிரத்து 811 இடங்கள் உள்ளன. இவற்றை நிரப்புவதற்கான மாணவா் சோ்க்கை கலந்தாய்வு கடந்த ஆக.20-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

பொதுப்பிரிவு கலந்தாய்வு மொத்தம் 4 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. அதன்படி, முதல் சுற்று கலந்தாய்வு செப்.10-இல் தொடங்கி 24-ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது. இதில் 10,340 மாணவ, மாணவிகளுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டன.

தொடா்ந்து, இரண்டாம் சுற்று கலந்தாய்வு செப்.25 முதல் அக்.13-ஆம் தேதி நடைபெற்றது. இதில் 19,947 இடங்கள் நிரம்பின. மூன்றாம் சுற்று கலந்தாய்வு அக்.13-ஆம் தேதி தொடங்கி வெள்ளிக்கிழமையுடன் முடிவடைந்தது.

இதில் பங்கேற்க 54 ஆயிரம் மாணவா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அவா்களில் பொதுப் பிரிவில் 24,727 பேரும், 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டின் கீழ் 3,293 பேரும் சோ்க்கை இடங்களை உறுதி செய்தனா். ஒட்டுமொத்தமாக 3 சுற்றுகளையும் சோ்த்து 58,307 இடங்கள் நிரம்பின.

மீதமுள்ள இடங்களை நிரப்புவதற்கான இறுதிச் சுற்று கலந்தாய்வு சனிக்கிழமை தொடங்கியது. இதில் பங்கேற்க மொத்தம் 61,771 போ் அழைக்கப்பட்டுள்ளனா். இவா்கள் திங்கள்கிழமைக்குள் தங்களுக்கு பிடித்த கல்லூரிகளின் விருப்பப் பட்டியலை இறுதி செய்ய அவகாசம் வழங்கப்பட்டுள்ளது என பொறியியல் சோ்க்கைக் குழு அதிகாரிகள் தெரிவித்தனா்.
Read More

Thursday, October 27, 2022

பொறியியல் பட்டதாரிகளுக்கு HCLல் வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க கடைசி தேதி: 31.10.2022

October 27, 2022 0
பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு... எச்சிஎல் வேலைவாய்ப்பு அறிவிப்பு!

கொல்கத்தாவில் செயல்பட்டு வரும் ஹிந்துஸ்தான் காப்பர் நிறுனத்தில் நிரப்பப்பட உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: Graduate Engineer Trainee

காலியிடங்கள்: 84

1 Mining - 39 
2 Survey - 2 
3 Geology - 6
4 Concentrator - 6
5 Electrical - 11
6 Civil - 5
7 Mechanical - 12 
8 Instrumentation - 2 
9 System - 1 

சம்பளம்: மாதம் ரூ. 40,000 - 1,40,000

வயதுவரம்பு: 1.9.2022 தேதியின்படி 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி: மைனிங், சர்வேயர், ஜியாலஜி, எலக்ட்ரிக்கல். சிவில், மெக்கானிக்கல், சிஸ்டம், இன்ஸ்ட்ரூமென்டேஷன் பிரிவில் 60 சதவீதம் மதிப்பெண்களுடன் பிஇ, பி.டெக் முடித்திருக்க வேண்டும். ஜியாலஜி பிரிவில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: தகுதியானவர்கள் GATE-2022தேர்வில் பெற்றிருக்கும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். நேர்முகத் தேர்வு குறித்து விபரம் மின்னஞ்சல் மூலம் அறிவிக்கப்படும். 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. மாற்றுத்திறனாளிகள், எஸ்சி, எஸ்டி பிரிவினர்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கட்டணத்தை அன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.hindustancopper.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். 

விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி தேதி: 31.10.2022

Read More

Tuesday, October 11, 2022

பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான 3வது கட்ட கலந்தாய்வு

October 11, 2022 0
இந்தாண்டு பொறியியல் சேர்க்கை அதிகரிப்பு: உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி

இந்த ஆண்டு பொறியியல் படிப்பில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறினார்.சென்னையில் தொழில்நுட்ப இயக்குநகரத்தில் கலந்தாய்வு குறித்து உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து, உயர்கல்வித்துறை அமைச்சர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

இந்த ஆண்டு பொறியியல் படிப்பில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கையில், காலியிடங்கள் இருக்காது.

பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான 3வது கட்ட கலந்தாய்வு வரும் 13ம் தேதி துவங்க உள்ளது. கணினி அறிவியல், எலக்ட்ரானிக்ஸ், ஐடி பிரிவில் அதிக மாணவர்கள் சேர்ந்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
Read More

Wednesday, September 21, 2022

B.E - Deadline to join colleges by 22nd Sep - பி.இ. சோ்க்கை கலந்தாய்வு - செப்.22-ஆம் தேதிக்குள் கல்லூரிகளில் சேர அவகாசம்

September 21, 2022 0
பி.இ. சோ்க்கை கலந்தாய்வின் முதல் சுற்றில் இடங்களைத் தோ்வு செய்த மாணவா்கள் செப்.22-ஆம் தேதிக்குள் கல்லூரிகளில் சேர அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கான முதல் சுற்று கலந்தாய்வு கடந்த 10-ஆம் தேதி தொடங்கி 15-ஆம் தேதி வரை நடந்து முடிந்தது.

14,524 போ் கலந்தாய்வில் பங்கேற்க அழைப்பு கொடுக்கப்பட்டது.

முதலில் விருப்ப இடங்களுக்கான கல்லூரிகள் தோ்வும், அதனைத் தொடா்ந்து உத்தேச ஒதுக்கீட்டு இடங்கள் உறுதி செய்யப்பட்டு உத்தேச ஒதுக்கீடும் வழங்கப்பட்டன. 15-ஆம் தேதி தற்காலிக ஒதுக்கீட்டு கடிதம் மாணவா்களுக்கு இணையவழியில் வழங்கப்பட்டது.

கல்லூரிகளை இறுதி செய்து வழங்கப்பட்ட இந்த கடிதத்தை 7 வேலை நாள்களுக்குள் கல்லூரிக்கு கொண்டு சென்று வழங்கி சேர வேண்டும் என்ற புதிய நடைமுறை நிகழ் கல்வியாண்டில் கொண்டு வரப்பட்டுள்ளது.

கலந்தாய்வில் உறுதி செய்யப்பட்ட இடங்களில் மாணவா்கள் கடைசி வரை சேராமல் போவதால் அண்ணா பல்கலை. வளாக கல்லூரிகள் உள்பட பல கல்லூரிகளில் இடங்கள் காலியாகக் கிடந்தன.

இதனால், அந்த இடங்களில் மற்ற மாணவா்கள் சேர முடியாமல் போனது.

இதனைத் தவிா்க்க கல்லூரிகளை தெரிவு செய்து இறுதி ஒதுக்கீடு கடிதம் பெற்ற பிறகு 7 நாள்களுக்குள் தாங்கள் விரும்பிய கல்லூரிகளில் பணம் செலுத்தி சோ்ந்து விட வேண்டும்.

அதன் பிறகு சேருவதற்கு வாய்ப்பு இல்லை. அந்த இடம் காலியானதாக அறிவிக்கப்பட்டு அடுத்து வருகின்ற கலந்தாய்வில் சோ்க்கப்படும்.

அந்த வகையில் முதல் சுற்றில் இடம் பெற்ற மாணவா்கள் 22-ஆம் தேதிக்குள் கல்லூரிகளில் சேருவதற்கு அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.
Read More

Friday, September 9, 2022

இன்ஜி., சேர்க்கை பொது கவுன்சிலிங் நாளை1.50 லட்சம் இடங்களுக்கு 1.59 லட்சம் பேர் பங்கேற்பு

September 09, 2022 0
1.59 lakh candidates for 1.50 lakh seats in Eng., admission general counseling tomorrow

இன்ஜி., சேர்க்கை பொது கவுன்சிலிங் நாளை1.50 லட்சம் இடங்களுக்கு 1.59 லட்சம் பேர் பங்கேற்பு

அண்ணா பல்கலையின் இணைப்பில் உள்ள இன்ஜினியரிங் கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கைக்கான 'ஆன்லைன்' பொது கவுன்சிலிங், நாளை துவங்க உள்ளது.

இதில், 1.50 லட்சம் இடங்களுக்கு, 1.59 லட்சம் மாணவர்கள் பங்கேற்க உள்ளனர்.பிளஸ் 2 முடித்த மாணவர்கள், அண்ணா பல்கலையின் இணைப்பில் உள்ள இன்ஜினியரிங் கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., முதலாம் ஆண்டில் சேர்வதற்கான ஆன்லைன் கவுன்சிலிங்கை, தமிழக உயர் கல்வித் துறை சார்பில், தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் நடத்துகிறது.

இந்த ஆண்டு கவுன்சிலிங்கில், 1.59 லட்சம் பேர் பங்கேற்க உள்ளனர். மொத்தம் 443 கல்லுாரிகளில், 1.50 லட்சம் இடங்கள், கவுன்சிலிங் வழியே நிரப்பப்பட உள்ளன.விளையாட்டுப் பிரிவு, மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களின் பிள்ளைகள் ஆகிய சிறப்பு பிரிவு மாணவர்களுக்கு, கடந்த மாதம் 20 முதல் 23ம் தேதி வரை கவுன்சிலிங் நடந்தது. மற்ற மாணவர்களுக்கான பொது கவுன்சிலிங், கடந்த 25ம் தேதி துவங்க இருந்தது. 'நீட்' தேர்வு முடிவு தாமதத்தால், கவுன்சிலிங் தேதி இரண்டு முறை தள்ளி வைக்கப்பட்டது.

நவ., 20 வரை

நேற்று முன்தினம் நீட் தேர்வு முடிவுகள் வெளியானதை தொடர்ந்து, நாளை இன்ஜினியரிங் பொது கவுன்சிலிங் துவங்க உள்ளது. இந்த கவுன்சிலிங் நான்கு சுற்றுகளாக நடத்தப்பட்டு நவ., 13ல் முடிகிறது. நவ., 15 முதல் 20 வரை துணை கவுன்சிலிங் நடக்கிறது. கவுன்சிலிங்கின் முதல் சுற்று நாளை துவங்குகிறது. இரண்டாம் சுற்று, இம்மாதம் 25; மூன்றாம் சுற்று, அக்., 13; நான்காம் சுற்று அக்., 29ல் துவங்குகிறது.

ஒவ்வொரு சுற்றிலும் தர வரிசைப்படி மாணவர்கள் பங்கேற்கும் வகையில், பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இடங்களை தேர்வு செய்வதற்கான, 'சாய்ஸ் பில்லிங்' முறையில், கல்லுாரிகளின் பதிவுக்கு இரண்டு நாட்கள்; தற்காலிக ஒதுக்கீட்டை இறுதி செய்ய இரண்டு நாட்கள்; கல்லுாரிகளில் சேர ஒரு வாரம் என, ஒவ்வொரு சுற்றுக்கும் 11 நாட்களுக்கு மேல் ஒதுக்கப்படுகின்றன.

7.5 சதவீதம்

மாணவர்கள் குழப்பமின்றி பங்கேற்கும் வகையில், ஆன்லைன் கவுன்சிலிங் நடைமுறைகள் குறித்து, உயர் கல்வித் துறை சார்பில் வழிகாட்டுதல் 'வீடியோ' வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ இணைப்புகள், தமிழக இன்ஜினியரிங் கவுன்சிலிங் கமிட்டியின், www.tneaonline.orgஎன்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளன.

அரசு பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் படித்து தேர்ச்சி பெற்றவர்கள், தங்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை பெறுவதற்கான கவுன்சிலிங்கும் நான்கு சுற்றுகளாக, பொது கவுன்சிலிங் நாட்களிலேயே நடக்கிறது.அரசு பள்ளி ஒதுக்கீடுக்கு தகுதி பெற்ற மாணவர்கள், பொது கவுன்சிலிங் மற்றும் அரசு பள்ளி ஒதுக்கீடு என, இரண்டு இடங்களை ஒரே நேரத்தில் பதிவு செய்யலாம். ஒதுக்கப்படுவதில் எந்த இடம் மாணவருக்குப் பிடித்துள்ளதோ, அதில் சேரலாம் என கவுன்சிலிங் குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.
Read More

Friday, August 5, 2022

இன்ஜினியரிங் மாணவர் புதிய நடைமுறை; உயர்கல்வி துறை அறிவிப்பு

August 05, 2022 0
இன்ஜினியரிங் மாணவர் புதிய நடைமுறை; உயர்கல்வி துறை அறிவிப்பு

பொறியியல் படிப்பை தேர்வு செய்தும், அதில் மாணவர்கள் சேராமல் போகும் இடங்கள் கடைசி வரை காலி இடங்களாகவே இருந்து விடுகிறது. அதாவது, படிப்பை தேர்வு செய்து, அந்தந்த கல்லூரிகளில் சேராமல் போகும் மாணவர்களின் விவரங்களை அந்தந்த கல்லூரிகள் உடனடியாக தெரிவிக்கும் வகையில் ஏற்கனவே இணையதளம் உருவாக்கப்பட்டு இருந்தது.

அது நடைமுறைப்படுத்தப்படாமல் இருந்த நிலையில், தற்போது மீண்டும் நடைமுறைப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கிறது. இதன் மூலம் படிப்பை தேர்வு செய்த 7 நாட்களுக்குள் அந்த இடத்தில் மாணவர்கள் சேரவில்லையென்றால், அந்த விவரத்தை அந்தந்த கல்லூரிகள் சுட்டிக்காட்டும் பட்சத்தில் 2ம் கட்ட கலந்தாய்வில் அந்த காலி இடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட இருக்கிறது.
Read More

Friday, July 29, 2022

பொறியியல் விண்ணப்ப பதிவு நிறைவு - 2,11,905 மாணவர்கள் விண்ணப்பம்!!

July 29, 2022 0
பொறியியல் படிப்பில் சேருவதற்காக 2,11,905 மாணவர்கள் விண்ணப்பம்!!

பொறியியல் படிப்பில் சேருவதற்காக 2,11,905 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

விண்ணப்ப பதிவுக்கான அவகாசம் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் இந்த தகவலை உயர்கல்வித்துறை அளித்துள்ளது
Read More

Monday, July 25, 2022

இரண்டு லட்சத்தை தாண்டியது இன்ஜி., கவுன்சிலிங் விண்ணப்பம்

July 25, 2022 0
சி.பி.எஸ்.இ., தேர்வு முடிவுகள் வெளிவந்த நிலையில், இன்ஜினியரிங் கவுன்சிலிங்கிற்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை, இரண்டு லட்சத்தை தாண்டியது.

அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள இன்ஜினியரிங் கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., முதலாம் ஆண்டு படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள், தமிழக அரசு நடத்தும் இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில் பங்கேற்க வேண்டும். இந்த ஆண்டு கவுன்சிலிங்கிற்கான விண்ணப்ப பதிவு, ஜூன், 20ல் துவங்கியது.

இந்த மாதம், 21ம் தேதி வரை ஒரு மாதத்தில், 1.92 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில், தமிழக பாட திட்ட மாணவர்கள் மட்டுமே பதிவு செய்திருந்தனர். மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பாட திட்டத்தில் படித்தவர்களுக்கான பிளஸ் 2 தேர்வு முடிவுகள், 22ம் தேதி வெளியாகின.இதையடுத்து, இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில் பதிவு செய்த, விண்ணப்பங்களின் எண்ணிக்கை, மளமளவென உயர்ந்துள்ளது. நேற்று மாலை நிலவரப்படி, சி.பி.எஸ்.இ., மாணவர்கள், 9,000 பேர் வரை ↓விண்ணப்பம் பதிவு செய்துள்ளனர். இதனால், விண்ணப்பங்களின் எண்ணிக்கை, இரண்டு லட்சத்தை தாண்டியுள்ளது. அதாவது, இரண்டு லட்சத்து, 751 பேர் ஆன்லைனில் விண்ணப்பங்களை பதிவு செய்துள்ளனர். அவர்களில், 1.53 லட்சம் பேர் கட்டணம் செலுத்திஉள்ளனர்; 1.38 லட்சம் பேர் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்துள்ளனர் என, தமிழக இன்ஜினியரிங் கவுன்சிலிங் கமிட்டி அறிவித்துள்ளது.

விண்ணப்பம் பதிவு செய்ய, 27ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு, 1.75 லட்சம் பேர் விண்ணப்பித்தது தான், நான்கு ஆண்டுகளில் அதிகபட்ச எண்ணிக்கையாக உள்ளது. இந்த ஆண்டு, விண்ணப்ப பதிவும் செய்து, விண்ணப்ப கட்டணமும் செலுத்தியோரின் எண்ணிக்கை, 1.53 லட்சமாக உள்ளது. இந்த எண்ணிக்கை, வரும் நாட்களில் அதிகரிக்கும்.
Read More

Friday, July 8, 2022

481 பொறியியல் கல்லூரிகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு!

July 08, 2022 0
481 பொறியியல் கல்லூரிகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு!

தமிழகத்தில் உள்ள 481 பொறியியல் கல்லூரிகளுக்கான தரவரிசை பட்டியலை அண்ணா பல்கலைக்கழம் வெளியிட்டுள்ளது.

இதில், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கிண்டி வளாக பொறியியல், குரோம்பேட்டை பொறியியல் கல்லூரிகள் முதல் இரண்டு இடங்களை பிடித்துள்ளன.

கடந்த 5 ஆண்டுகளில் மாணவர்கள் அதிகம் விரும்பக் கூடிய கல்லூரிகள் என்ற அடிப்படையில் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் பொறியியல் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்கள் கல்லூரிகளின் தரவரிசை பட்டியலை பார்த்து கல்லூரிகளை தேர்வு செய்யலாம் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
Read More

Wednesday, July 6, 2022

பொறியியல் படிப்புகளில் சேர ஒன்றரை லட்சம் பேர் விண்ணப்பம்

July 06, 2022 0
தமிழகத்தில் பொறியியல் படிப்புகளில் சேர ஒன்றரை லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளனர். சென்னை, தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நாள் முதல் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்தபடி, பொறியியல் படிப்பில் இளநிலையில் சேர்வதற்கான விண்ணப்ப பதிவு தொடங்கியது.

அதன்படி,பொறியியல் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் https://www.tneaonline.org/ என்ற இணைய தளம் மூலம் ஜூலை 19-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.

மாணவர்கள் தாங்களாகவே விண்ணப்பிக்கலாம் அல்லது தங்கள் பள்ளிகள் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. பொறியியல் மாணவர்கள் சேர்க்கை சேவை மையத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம். மாவட்டத்துக்கு குறைந்தபட்சம் இரண்டு இடங்கள் என்று அடிப்படையில் 110 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து தமிழகத்தில் தற்போது வரை பொறியியல் படிப்புகளில் சேர ஒன்றரை லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. விண்ணப்பித்த மாணவர்களின் சான்றிதழ்கள் சரிபார்ப்பு ஜூலை 20-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை நடைபெறும்.

மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் ஆகஸ்ட் 8-ம் தேதி வெளியிடப்படும்.

இவற்றில் ஏதேனும் குறைகள் இருப்பின் ஆகஸ்ட் 9-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை மாணவர்கள் தெரிவிக்கலாம்.

இதனை தொடர்ந்து ஆகஸ்டு 16-ம் தேதி முதல் அக்டோபர் 14-ம் தேதி வரை ஆன்லைனில் கலந்தாய்வு நடைபெறும் என்று உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
Read More

Monday, June 27, 2022

அரசு பள்ளிகளில் தொழிற்கல்வி பயின்ற மாணவர்களுக்கு அண்ணா பல்கலை இன்ஜி., கல்லூரிகளில் 'சீட்' இல்லை!

June 27, 2022 0
அரசு பள்ளிகளில் தொழிற்கல்வி பயின்ற மாணவர்களுக்கு, அண்ணா பல்கலையின், 20 இன்ஜினியரிங் கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., படிப்பில் இடம் கிடையாது என்று, அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள இன்ஜினியரிங் கல்லுாரிகள் எல்லாம், அண்ணா பல்கலை இணைப்பில் செயல்படுகின்றன. இந்தக் கல்லுாரிகளில், முதலாம் ஆண்டில் மாணவர்கள் சேருவதற்கான, ஒருங்கிணைந்த ஆன்லைன் கவுன்சிலிங்கை, தமிழக உயர்கல்வி துறை சார்பில், தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் நடத்துகிறது.

கவுன்சிலிங்கின் போது, அண்ணா பல்கலையின் சென்னை வளாக கல்லுாரிகளில், ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு எட்டு இடங்களும்; மாற்று திறனாளிகளுக்கு, 5 சதவீத இடங்களும்; விளையாட்டு பிரிவினருக்கு, 12 இடங்களும் ஒதுக்கப்படுகின்றன.

'தொழிற்கல்வி பிரிவினருக்கு இந்தாண்டு இடம் ஒதுக்கப்படும்' என, உயர்கல்வி அமைச்சர் பொன்முடி அறிவித்திருந்தார். ஆனால், அரசு பள்ளிகளில் தொழிற்கல்வி பிரிவில் படிக்கும் மாணவர்களுக்கு மட்டும் இடங்கள் ஒதுக்கப்படவில்லை. கவுன்சிலிங்கிற்கான நடப்பாண்டிற்கான விதிகளில், அரசு பள்ளிகளில் தொழிற்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு, அண்ணா பல்கலையில் இடங்கள் ஒதுக்கப்படாது என்று, அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, அரசு மற்றும் அரசு உதவி பெறும் இன்ஜினியரிங் கல்லுாரிகளில், 100 இடங்கள்; தனியார் கல்லுாரிகளில், 4 சதவீத இடங்கள் மட்டுமே, தொழிற்கல்வி மாணவர்களுக்கு ஒதுக்கப்படும் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், அண்ணா பல்கலையின் சென்னை வளாகத்தில் உள்ள மூன்று கல்லுாரிகள், பல்கலையின் மண்டல மற்றும் உறுப்பு கல்லுாரிகளாக உள்ள, 17 கல்லுாரிகள் என, மொத்தம் 20 கல்லுாரிகளில் இடங்கள் ஒதுக்கப்படாது என்பதால், அரசுப்பள்ளி தொழிற்கல்வி மாணவர்களும், பெற்றோரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து, மாணவர்களும், பெற்றோரும் கூறியதாவது:

நாடு முழுதும் தொழிற்கல்வி படிப்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என, மத்திய, மாநில அரசுகள் கூறி வருகின்றன. தொழிற்கல்வி படிப்பேர் இன்ஜினியரிங்கில் மட்டுமே சேர முடியும் என்ற நிலையில், அவர்களுக்கு, அண்ணா பல்கலையின், 20 கல்லுாரிகளில் இடம் மறுக்கப்பட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. பிளஸ் 2 முடிந்து இன்ஜினியரிங் கவுன்சிலிங் வரும் போது, அண்ணா பல்கலை கல்லுாரிகளிலேயே சேர முன்னுரிமை அளிப்பர்.

அப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த கல்லுாரிகளில், அரசு பள்ளிகளின் தொழிற்கல்வி மாணவர்களுக்கு மட்டும் இடம் இல்லை என்பது விதிமீறிய செயல்.இதை முதல்வர் கவனித்து, தொழிற்கல்வி மாணவர்களும், அண்ணா பல்கலையின், 20 கல்லுாரிகளில் படிக்கலாம் என்ற முக்கியத்துவம் வாய்ந்த முடிவை அறிவிக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்
Read More

Sunday, June 19, 2022

பி.இ. மாணவா் சோ்க்கை: இணையவழியில் விண்ணப்பப் பதிவு தொடக்கம்

June 19, 2022 0

சென்னை: தமிழகத்தில் பொறியியல் படிப்புகளில் மாணவா்கள் சேருவதற்கான இணையவழி விண்ணப்பப் பதிவு இன்று(திங்கள்கிழமை) தொடங்கியது.



தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியிடப்படவுள்ளன. இதையடுத்து, இளநிலை பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவு http://www.tneaonline.org என்ற இணையதள முகவரியில் தொடங்கியது. மாணவா்கள் சொந்தமாகவும் விண்ணப்பிக்கலாம். தாங்கள் பயின்ற பள்ளிகள், அரசின் இலவச மையங்கள் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.

கடந்த ஆண்டு மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்க 51 இலவச மையங்கள் அமைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அவை 110 இலவச மையங்களாக உயா்த்தப்பட்டுள்ளது.

மாவட்டத்துக்கு குறைந்தபட்சம் 2 இடங்கள் என்ற அடிப்படையில், பாலிடெக்னிக் கல்லூரிகளில் இந்த மையங்கள் செயல்படும். நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்களைச் சமா்ப்பிக்க, அசல் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்ய கடைசி நாள் ஜூலை 19. அதே நாளில் பொறியியல் சோ்க்கைக்கான விண்ணப்பப் பதிவும் நிறைவடையவுள்ளது.



இதையடுத்து, அனைத்து விண்ணப்பதாரா்களுக்கும் சம வாய்ப்பு எண் ஜூலை 22-ஆம் தேதி ஒதுக்கீடு செய்யப்படும். சேவை மையம் வாயிலாக சான்றிதழ் சரிபாா்ப்பு ஜூலை 20 முதல் ஜூலை 31-ஆம் தேதி வரை நடைபெறும். மாணவா்களுக்கான தரவரிசைப் பட்டியல் ஆக.8-ஆம் தேதி வெளியிடப்படும். இதையடுத்து சேவை மையம் வாயிலாக குறைகளை ஆக.9 முதல் ஆக.14-ஆம் தேதி வரையிலான நாள்களில் நிவா்த்தி செய்யலாம்.



கலந்தாய்வு எப்போது?:

மாற்றுத் திறனாளிகள், முன்னாள் படை வீரா், விளையாட்டு ஆகிய 3 பிரிவினருக்கும் ஆக.16 முதல் ஆக.18-ஆம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறும். பொதுக்கல்வி , தொழில்முறைக் கல்வி , அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 7.5% ஒதுக்கீடு ஆகிய 3 பிரிவினருக்கும் ஆக.22 முதல் அக். 14-ஆம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறும். துணைக் கலந்தாய்வு அக். 15, 16 ஆகிய நாள்களில் நடைபெறும்.

Read More

தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை -2022க்கு பதிவு செய்யும் முறை - PDF

Sunday, May 22, 2022

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு - புதிய கட்டண விகிதம் வெளியீடு

May 22, 2022 0
AICTE announces new fee hike for engineering courses Fees for B.E, B.Tech and B.Arch courses at technical institutes across the country have been increased. The minimum fee for a semester is fixed at Rs.79,600. The maximum is set at Rs 1,89,800.

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்தப்பட்டுள்ளது புதிய கட்டண விகிதத்தை வெளியிட்டது AICTE. நாடு முழுவது உள்ள தொழிநுட்ப கல்வி நிறுவனங்களில் B.E, B.Tech, B.Arch படிப்புகளுக்கு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு செமஸ்டருக்கு குறைந்தபட்ச கட்டணம் ரூ.79,600 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக ரூ.1,89,800 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் B.E., B.Tech., B.Arch. ஆகிய படிப்புகளுக்கான கட்டணம் உயர்ந்துள்ளது. இதுகுறித்து அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில்யில்; B.E., B.Tech., B.Arch., படிப்புகளுக்கு ஒரு செமஸ்டருக்கு குறைந்தபட்ச கட்டணம் ரூ.79,600 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சரமாக ரூ.1,89,800 ஆக நிர்ணயம் டிப்ளமோ படிப்புகளுக்கு குறைந்தபட்சமாக ஒரு செமஸ்டருக்கு ரூ.67,900, அதிகபட்சமாக ரூ.1,40,900 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. M.E., M.Tech., M.Arch., படிக்க ஒரு செமஸ்டருக்கு குறைந்தபட்சமாக ரூ.1,41,200, அதிகபட்சமாக ரூ.3,04,000 என்று கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

3 ஆண்டு MCA படிப்புக்கு குறைந்தபட்சமாக ₨88,500, அதிகபட்சமாக ₨1,94,100ஆக கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 2 ஆண்டு MBA படிப்புக்கு குறைந்தபட்சமாக ₨85,000, அதிகபட்சமாக ₨1,95,200ஆக கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. உதவிப் பேராசிரியர்களுக்கு மாதம் ரூ.1,37,189, பேராசிரியர்களுக்கு ரூ.2,60,379 என ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மாணவர் சேர்க்கை குறைவாக இருப்பதை காரணம் காட்டி கட்டணத்தை குறைக்க கூடாது எனவும், மாணவர் சேர்க்கை குறைவாக இருப்பின், கல்வித் தரத்தை உயர்த்த முயற்சிக்க வேண்டும் என்றும் ஏஐசிடிஇ உத்தரவிட்டுள்ளது.
Read More

Wednesday, May 11, 2022

தமிழகத்தில் நீட் தேர்வு முடிவுகள் வந்த பிறகே என்ஜினீயரிங் படிப்புக்கு ஆன்லைனில் கலந்தாய்வு.

May 11, 2022 0
தமிழகத்தில் நீட் தேர்வு முடிவுகள் வந்த பிறகே என்ஜினீயரிங் படிப்புக்கு ஆன்லைனில் கலந்தாய்வு.

அண்ணா பல்கலைக்கழகத்தில் சான்றிதழ் கோரி விண்ணப்பிப்பவர்களிடம் கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படுவதாக தகவல்கள் வந்தன. சான்றிதழை தொலைத்துவிட்டு அதை கேட்டு விண்ணப்பிக்கும் மாணவர்கள் மிக குறைவாகத்தான் இருக்கின்றனர். அந்த கட்டணத்தைத்தான் உயர்த்தி இருக்கின்றனர்.

அதை வேண்டாம் என்று துணை வேந்தரிடம் கூறியிருக்கிறோம். அதை அவர் ஏற்றுக்கொண்டார். அதுபற்றி இன்றே ஆணை பிறப்பிப்பதாக அவரும் கூறியிருக்கிறார். எனவே அந்த கட்டண உயர்வு இருக்காது. பழைய கட்டணமே வசூலிக்கப்படும். காலியிடங்களுக்கான காரணம்

கடந்த ஆண்டு அண்ணா பல்கலைக்கழகத்தில் என்ஜினீயரிங் படிப்பில் காலியிடம் வருவதற்கு காரணம், நீட் தேர்வுக்கு முன்பே என்ஜினீயரிங் கலந்தாய்வை நடத்தியதுதான். என்ஜினீயரிங் கல்விக்கு தேர்வானவர்கள் பலர் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவ கல்விக்கு சென்றுவிட்டனர். எனவே நீட் தேர்வு முடிந்து முடிவுகள் வந்த பிறகே என்ஜினீயரிங் கல்வி சேர்க்கைக்கான கலந்தாய்வை நடத்த இருக்கிறோம். அதுதான் சரியாக இருக்கும்.

17-ந்தேதி ஆலோசனை

அதுபற்றி 17-ந்தேதி மாலையில் ஆலோசனை கூட்டத்தை கூட்ட உள்ளோம். அந்த கூட்டத்தில் அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர், பதிவாளர், தொழில் கல்வி இயக்குனர், ஆணையர், தனியார் பல்கலைக்கழகங்கள், மாணவர் பிரதிநிதிகள் ஆகியோருடன் ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறோம். அதுபற்றி அந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும்.

தொழில்நுட்பங்கள் வருவதற்கு முன்பு நேரடியாக கலந்தாய்வு நடைபெற்றது. தூரத்தில் இருந்து அண்ணா பல்கலைக்கழகத்துக்கு வர பலர் கஷ்டப்படுகின்றனர் என்பதை அறிந்து ஆன்லைனில் கொண்டு வந்தோம். ஆனால் ஆன்லைனில் கடந்த காலங்களில் சில முறைகேடுகள் நடைபெற்றன.

அதை கடந்த ஆண்டு கூடுமான வரை தடுப்பதற்காக முயற்சிகளை மேற்கொண்டோம். ஆனாலும் சில மாணவர்களுக்கு ஆன்லைன் வசதி கிடைக்கவில்லை என்ற நிலை இருந்தது. இதுபற்றியும் கலந்தாலோசனை செய்வார்கள்.

ஆன்லைனில் நடைபெற்றால் மாணவர்களுக்கு அலைச்சல் இருக்காது. அவர்களின் மதிப்பெண் அடிப்படையில் அவர்களின் தேர்வு முறைகளை எப்படி அணுகுவது? என்பது பற்றி 17-ந்தேதி மாலை முடிவு செய்து அன்றே அறிவிக்கப்படும். விண்ணப்பிப்பது எப்போது?

நீட் தேர்வு முடிந்த உடனேயே என்ஜினீயரிங் கலந்தாய்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படும். நீட் தேர்வு முடிவு வந்த பிறகு என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெறும். கலந்தாய்வில் மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் இருக்க கூடாது என்ற வகையில் 17-ந்தேதி நடக்கும் ஆலோசனையில் முடிவெடுக்கப்படும்.

என்ஜினீயரிங் கல்லூரிகளை தேர்வு செய்யும்போது மாணவர்கள் எதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்? என்ற வசதிகளை தெரிந்துகொண்டு சேர்வதற்கான நடைமுறையை எளிதாக்கப்படும்.

ஆன்லைன் கலந்தாய்வை மாணவர்கள் விரும்புகின்றனர். அவர்களின் சொந்த போன் மூலம் அல்லது அவர்கள் படிக்கும் பள்ளிக்கூடங்களில் இருந்து கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கலாம். அதற்கான ஏற்பாடுகளை செய்து தருவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உறுதி அளித்திருக்கிறார். மேலும் கூடுதல் வசதியாக மையங்களையும் உருவாக்கி வைக்க இருக்கிறோம். அங்கு சென்றும் அவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மாதம் ஆயிரம் ரூபாய்

பெண்களுக்கான உயர்கல்வி உறுதித்திட்டம் மூலம் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் வரும் கல்வியாண்டிலேயே செயல்படுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Read More

பொறியியல் கலந்தாய்வு பற்றி 17ம் தேதி ஆலோசனை

May 11, 2022 0
அண்ணா பல்கலை கலந்தாய்வு

அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கலந்தாய்வு குறித்து மே 17ம் தேதி கல்வியாளர்களுடன் ஆலோசனை நடத்தப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்திருக்கிறார். சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர், நீட் தேர்வு முடிந்ததும் பொறியியல் கலந்தாய்வு நடத்த திட்டமிட்டுளோம். குளறுபடிகள் இல்லாமல் ஆன்லைன் கலந்தாய்வு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. தொலைந்து போன சான்றிதழை திரும்பப் பெற பழைய கட்டணமே வசூலிக்கப்படும் என அமைச்சர் கூறினார். 17ம் தேதி ஆலோசனை

கட்டணத்தை பன்மடங்கு உயர்த்தி அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்ததற்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில் இந்த அறிவிப்பை அமைச்சர் வெளியிட்டார். தொடர்ந்து பேசிய அமைச்சர் பொன்முடி, உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 உதவித் தொகை வழங்கும் திட்டம் இந்த ஆண்டு முதல் அமல்படுத்தப்படும் என்று தெரிவித்தார். அரசுப் பள்ளியில் படித்து உயர்கல்வி பயிலும் அனைத்து மாணவிகளுக்கும் மாதம்தோறும் ரூ. 1,000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று இந்தாண்டிற்கான பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.
Read More

Thursday, April 28, 2022

இன்ஜினியரிங் படிப்பில் பிளம்பிங் பாடம்

April 28, 2022 0
நாடு முழுவதிலும் உள்ள இன்ஜினியரிங் மற்றும் ஆர்க்கிடெக்சர் கல்வி நிறுவனங்களில் பிளம்பிங் படிப்பை வழங்க, ஏ.ஐ.சி.டி.இ., என அழைக்கப்படும் அனைத்து இந்திய தொழில்நுட்பக் கல்வி குழு, இந்தியன் பிளம்பிங் அசோசியேஷன் - ஐ.பி.ஏ., உடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

ஏ.ஐ.சி.டி.இ., தலைவர் அனில் சகஷ்ரபுத்தே மற்றும் ஐ.பி.ஏ., தேசிய தலைவர் குர்மித் சிங் அரோரா ஆகியோர் இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.

இதன் வாயிலாக, இன்ஜினியரிங், ஆர்க்கிடெக்சர், இன்டீரியர் டிசைனிங் படிக்கும் மாணவர்கள் மற்றும் சிவில், என்விரான்மெண்டல், மெக்கானிக்கல் இன்ஜினியரிங், ஆர்க்கிடெக்சர் பட்டதாரிகள், பிளம்பிங் - வாட்டர் மற்றும் சானிடேஷன் பாடத்தை படித்து 4 கிரெடிட் பெறலாம்.

கட்டடத்தின் வலிமையை அதிகரிக்க ’பிளம்பிங்’ மிக அவசியம் என்பதை உணர்ந்து 80 சதவீத தியரி மற்றும் 20 சதவீத செயல்முறை பயிற்சி அடங்கிய இந்த 50 மணிநேர பாடம் இன்ஜினியரிங் மற்றும் ஆர்க்கிடெக்சர் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.
Read More

Tuesday, April 5, 2022

அரசு துறைகளில் இன்ஜினியரிங் பதவியில் 626 பேர் நியமிக்க TNPSC தேர்வு

April 05, 2022 0
Competitive selection has been announced on behalf of DNPSC to fill 626 vacancies in Engineer posts in Government Departments. The competition will be held on June 26 on behalf of DNPSC, the Public Service Commission. The 'online' application registration for that started yesterday; The deadline is May 3. According to the engineering syllabus, the main syllabus, general paper and Tamil language qualification are given in the 10th standard syllabus. As in the morning and evening, these exams are to be conducted.

Reservationists who wish to appear for the examination should not have reached the retirement age of 60 years. For other categories, the age limit is set at 32 and 37, respectively. Must have completed the appropriate courses in Engineering for each position. Further details on the examination can be found at DNPSC, www.tnpsc.gov.in/

Rajasthan team visit

A special team appointed by the Rajasthan state government had arrived in Chennai yesterday to look into the activities of DNPSC. Tamil Nadu Selection Secretary Uma Maheshwari and Selection Control Officer Kiran Kurala and members of the DNPSC were briefed on its activities. அரசு துறைகளில் இன்ஜினியர் பதவிகளில், 626 காலியிடங்களை நிரப்ப, டி.என்.பி.எஸ்.சி., சார்பில் போட்டி தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., சார்பில், ஜூன் 26ல் இப்போட்டி தேர்வு நடத்தப்படுகிறது. அதற்கான 'ஆன்லைன்' விண்ணப்பப் பதிவு நேற்று துவங்கியது; மே 3 வரை அவகாசம் உள்ளது. இன்ஜினியரிங் பாடத்திட்டத்தின் படி, முக்கிய பாடத்தாள், பொதுத்தாள் மற்றும் தமிழ் மொழி தகுதியை அறியும் வகையில், 10ம் வகுப்பு பாடத்திட்டத்தில், தமிழ்த் தகுதி தாள் ஆகிய தேர்வுகள் நடக்கின்றன. காலை, மாலை என, இந்த தேர்வுகள் நடத்தப்பட உள்ளன.

தேர்வில் பங்கேற்க விரும்பும் இட ஒதுக்கீட்டு பிரிவினர், ஓய்வு வயதான 60ஐ அடைந்திருக்கக் கூடாது. மற்ற பிரிவினருக்கு, 32 மற்றும் 37 என பதவிக்கேற்ப, வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு பதவிக்கும், இன்ஜினியரிங்கில், அதற்கு தகுதியான பாடப்பிரிவுகளை படித்திருக்க வேண்டும். தேர்வு குறித்த கூடுதல் விபரங்களை, www.tnpsc.gov.in/ என்ற டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். ராஜஸ்தான் குழு வருகை

டி.என்.பி.எஸ்.சி., செயல்பாடுகளை கண்டறிய, ராஜஸ்தான் மாநில அரசு நியமித்துள்ள சிறப்புக் குழுவினர், நேற்று சென்னை வந்திருந்தனர். தமிழக தேர்வாணைய செயலர் உமா மகேஸ்வரி மற்றும் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி கிரண் குராலா ஆகியோரிடமும், டி.என்.பி.எஸ்.சி., உறுப்பினர்களிடமும், அதன் செயல்பாடுகளை கேட்டு தெரிந்து கொண்டனர்.
Read More

Sunday, January 2, 2022

முதுநிலை பொறியியல் கலந்தாய்வு இன்று தொடங்குகிறது

January 02, 2022 0
முதுநிலை பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு திங்கள்கிழமை முதல் தொடங்குகிறது.

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில் எம்இ, எம்டெக், எம்ஆா்க், எம்பிளான் போன்ற முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் காலியாக உள்ளன. இதில் சோ்வதற்கான கலந்தாய்வு ஜன.3-ஆம் தேதி முதல் பிப்.1-ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இதன்படி, கேட் தோ்வா்களுக்கான கலந்தாய்வு, திங்கள்கிழமை தொடங்கி, ஜன.5- ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கு பின்னா், டான்சட் தோ்வா்களுக்கான கலந்தாய்வு ஜன.11-ஆம் தேதி தொடங்கி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More

Tuesday, November 23, 2021

இன்ஜினியரிங், எம்.பி.ஏ., பட்ட சான்றிதழுக்கு இனி ஜி.எஸ்.டி., கட்டாயம்

November 23, 2021 0
இன்ஜினியரிங், எம்.பி.ஏ., உள்ளிட்ட பட்டப்படிப்புகளை முடிக்கும் மாணவர்கள், 18 சதவீதம் ஜி.எஸ்.டி., கட்டணம் செலுத்தினால் தான், சான்றிதழ் வழங்கப்படும் என்று அண்ணா பல்கலை அறிவித்துள்ளது.

தமிழக உயர்கல்வி நிறுவனமான அண்ணா பல்கலை இணைப்பில், 500க்கும் மேற்பட்ட கல்லுாரிகள் செயல்படுகின்றன. இவற்றுக்கு அங்கீகாரம் வழங்குதல், தேர்வு நடத்தி சான்றிதழ் வழங்குதல், பேராசிரியர்களுக்கு பயிற்சி அளித்தல் போன்ற பணிகளுக்கு, கல்லுாரிகளிடமிருந்து அண்ணா பல்கலை கட்டணம் வசூலிக்கிறது.

இந்த கட்டண விபரம் குறித்த கணக்கு தணிக்கை அறிக்கையில், வரி பிடித்தம் குறித்து கணக்கு எதுவும் காட்டப்படவில்லை. அதனால், தமிழக வணிக வரித்துறை தரப்பில், அண்ணா பல்கலைக்கு கடந்த மாதம் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

அதில், 'அண்ணா பல்கலையின் சேவைகளுக்கு ஜி.எஸ்.டி., கட்டணம் செலுத்த வேண்டும். 2017ல், ஜி.எஸ்.டி., வரி சட்டம் அமலான பின், வரி பிடித்தம் செய்திருந்தால், அதனை தாமதமின்றி அபராதத்துடன் செலுத்த வேண்டும்' என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அண்ணா பல்கலையில் இதுவரை ஜி.எஸ்.டி.,யில் பதிவு செய்து அதற்கான எண் கூட பெறவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில், 2017 முதல் ஜி.எஸ்.டி., வரி வசூலித்திருந்தால், அரசுக்கு இதுவரை 16 கோடி ரூபாய் வரை வருவாய் கிடைத்திருக்கும்; இந்த வருவாயை இனியும் இழக்காமல், மாணவர்களிடம் ஜி.எஸ்.டி., வரி வசூலிக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, வணிக வரித்துறையில் அண்ணா பல்கலை சார்பில் பதிவு செய்யப்பட்டு, புதிதாக ஜி.எஸ்.டி., எண் பெறப்பட்டுள்ளது. இதுகுறித்து, அனைத்து இணைப்பு கல்லுாரிகளுக்கும், அண்ணா பல்கலையின் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வெங்கடேசன் நேற்று அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

* இந்த ஆண்டு முதல் அண்ணா பல்கலை மற்றும் இணைப்பு கல்லுாரி மாணவர்கள், தங்களது கட்டணத்துடன் ஒவ்வொரு சேவைக்கும் ஜி.எஸ்.டி., வரி செலுத்த வேண்டும். இந்த வரித்தொகை அரசுக்கு செலுத்தப்படும்

* ஒவ்வொரு மாணவரும், பட்டப்படிப்பு முடித்து பட்டமளிப்பு சான்றிதழ் பெறுவதற்கு, 18 சதவீதம் ஜி.எஸ்.டி., வரியை கட்டணத்துடன் கட்டாயம் செலுத்த வேண்டும்

* அசல் சான்றிதழ் இல்லாமல், பட்ட சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழ் ஆகியவற்றின் பிரதியான 'டூப்ளிகேட்' சான்றிதழ் பெறவும்; 'மைக்ரேஷன்' என்ற இடமாற்று சான்றிதழ், செமஸ்டர் தேர்வுக்கான விடைத்தாள் நகல் பெறுவது, சான்றிதழின் உண்மைத்தன்மை சரிபார்ப்பு சான்றிதழ் ஆகியவற்றுக்கும், 18 சதவீதம் ஜி.எஸ்.டி., செலுத்த வேண்டும்

* கல்வி கட்டணம், செமஸ்டர் தேர்வு கட்டணம், மறுமதிப்பீடு, டிரான்ஸ்கிரிப்ட் சான்றிதழ் பெறுவது, தர வரிசை, பயிற்று மொழி, சதவீத மாற்று மதிப்பெண் சான்றிதழ், புரொவிஷனல் சான்றிதழ்ஆகியவற்றுக்கு மட்டும், வரி செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Read More

Post Top Ad

Your Ad Spot