இரண்டு லட்சத்தை தாண்டியது இன்ஜி., கவுன்சிலிங் விண்ணப்பம்

சி.பி.எஸ்.இ., தேர்வு முடிவுகள் வெளிவந்த நிலையில், இன்ஜினியரிங் கவுன்சிலிங்கிற்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை, இரண்டு லட்சத்தை தாண்டியது.

அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள இன்ஜினியரிங் கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., முதலாம் ஆண்டு படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள், தமிழக அரசு நடத்தும் இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில் பங்கேற்க வேண்டும். இந்த ஆண்டு கவுன்சிலிங்கிற்கான விண்ணப்ப பதிவு, ஜூன், 20ல் துவங்கியது.

இந்த மாதம், 21ம் தேதி வரை ஒரு மாதத்தில், 1.92 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில், தமிழக பாட திட்ட மாணவர்கள் மட்டுமே பதிவு செய்திருந்தனர். மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பாட திட்டத்தில் படித்தவர்களுக்கான பிளஸ் 2 தேர்வு முடிவுகள், 22ம் தேதி வெளியாகின.இதையடுத்து, இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில் பதிவு செய்த, விண்ணப்பங்களின் எண்ணிக்கை, மளமளவென உயர்ந்துள்ளது. நேற்று மாலை நிலவரப்படி, சி.பி.எஸ்.இ., மாணவர்கள், 9,000 பேர் வரை ↓விண்ணப்பம் பதிவு செய்துள்ளனர். இதனால், விண்ணப்பங்களின் எண்ணிக்கை, இரண்டு லட்சத்தை தாண்டியுள்ளது. அதாவது, இரண்டு லட்சத்து, 751 பேர் ஆன்லைனில் விண்ணப்பங்களை பதிவு செய்துள்ளனர். அவர்களில், 1.53 லட்சம் பேர் கட்டணம் செலுத்திஉள்ளனர்; 1.38 லட்சம் பேர் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்துள்ளனர் என, தமிழக இன்ஜினியரிங் கவுன்சிலிங் கமிட்டி அறிவித்துள்ளது.

விண்ணப்பம் பதிவு செய்ய, 27ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு, 1.75 லட்சம் பேர் விண்ணப்பித்தது தான், நான்கு ஆண்டுகளில் அதிகபட்ச எண்ணிக்கையாக உள்ளது. இந்த ஆண்டு, விண்ணப்ப பதிவும் செய்து, விண்ணப்ப கட்டணமும் செலுத்தியோரின் எண்ணிக்கை, 1.53 லட்சமாக உள்ளது. இந்த எண்ணிக்கை, வரும் நாட்களில் அதிகரிக்கும்.
Post a Comment (0)
Previous Post Next Post