KalviseithiDaily: Department of School Education

KalviseithiDaily

kalviseithidaily.blogspot.com No:1 Education Website in Tamil கல்வி செய்திகள்: Get latest news on Exam Results, tamil nadu school education department news, TN University Results, Exam Schedule Latest News Educational News from Tamilnadu Government, Tamilnadu Educaitonal Minsters Latest Updates, 10th, 11th, 12th, TNTET, TRB, TNPSC, STUDY MATERIALS, ONLINE TESTS, LATEST kalviseithi, Padasalai, tnkalvi, tnpse news, TET updates, TRB news, kalvi news, Padsalai study materials

Subscribe Us

Sigma is

  • Seo Ready
  • Responsive
  • Fast Loading
  • Amazing!

Hot

Post Top Ad

Your Ad Spot
Showing posts with label Department of School Education. Show all posts
Showing posts with label Department of School Education. Show all posts

Tuesday, November 1, 2022

பள்ளிகள் பராமரிப்புக்கு ரூ.119 கோடி ஒதுக்கிய தமிழக அரசு: அன்புமணி ராமதாஸ் வரவேற்பு

November 01, 2022 0
பள்ளிகள் பராமரிப்புக்கு ரூ.119 கோடி ஒதுக்கிய தமிழக அரசு: அன்புமணி ராமதாஸ் வரவேற்பு

தமிழகத்தில் 37,387 அரசு பள்ளிகளில் மழைக்கால பாதுகாப்பு, பராமரிப்பு பணிகளுக்காக ரூ.119.27 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் இந்த நடவடிக்கைக்கு அன்புமணி ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார். பள்ளிகளில் மழைக்கால பாதுகாப்பு ஏற்பாடுகள், அடிப்படை வசதிகள் செய்து தர அரசின் மானியம் உதவும் என அன்புமணி ராமதாஸ் கூறினார்.
Read More

Sunday, October 30, 2022

பள்ளிப் படிப்பை முடித்தோருக்கு வேலைவாய்ப்புடன் கூடிய பயிற்சி: தமிழக அரசு அறிவிப்பு

October 30, 2022 0
பள்ளிப் படிப்பை முடித்தோருக்கு வேலைவாய்ப்புடன் கூடிய பயிற்சி: தமிழக அரசு அறிவிப்பு

பள்ளிப் படிப்பை முடித்தோருக்கு வேலைவாய்ப்புடன் கூடிய பயிற்சி அளிக்கும் திட்டத்தில் பயன்பெற தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது. இதுகுறித்து மாநில அரசு சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழக அரசின் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் மூலமாக, அரசுப் பள்ளி மாணவா்கள் 2 ஆயிரம் பேருக்கு எச்சிஎல் நிறுவனம் வேலைவாய்ப்பை வழங்குகிறது. இதற்கான பயிற்சியையும் இலவசமாக அந்த நிறுவனமே அளிக்கிறது. மென்பொருள் வடிவமைப்பு, வடிவமைப்பு பொறியியல், தரவுப் பணிகள் உள்ளிட்ட எச்சிஎல் நிறுவனத்தின் பல்வேறு பணி வாய்ப்புகளைப் பெறலாம். பயிற்சியின் போது ஏழாவது மாதம் முதல் மாதந்தோறும் ரூ. 10 ஆயிரம் உதவித் தொகை பெறலாம்.

பணியில் சோ்ந்தவுடன் தொடக்க நிலை ஊதியமாக ஆண்டுக்கு ரூ. 1.70 லட்சம் முதல் ரூ. 2.20 லட்சம் வரை பணிநிலைக்கு ஏற்ப பெறலாம்.

கூடுதல் தகவல்களைப் பெற தொடா்பு கொள்ள வேண்டிய கைப்பேசி எண்கள்:

சென்னை - 88079 40948, மதுரை - 97881 56509, திருநெல்வேலி - 98941 52160, திருச்சி - 94441 51303, கோவை, ஈரோடு, திருப்பூா் ஆகிய மூன்று மாவட்டங்களைச் சோ்ந்தோா் தொடா்பு கொள்ள வேண்டிய எண்கள்: 89032 45731, 98655 35909 என அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More

Tuesday, September 20, 2022

No legitimate reason to oppose education policy: Union Education Minister - கல்விக் கொள்கையை எதிர்க்க நியாயமான காரணம் இல்லை’: மத்திய கல்வி அமைச்சர்

September 20, 2022 0
No legitimate reason to oppose education policy': Union Education Minister - கல்விக் கொள்கையை எதிர்க்க நியாயமான காரணம் இல்லை’: மத்திய கல்வி அமைச்சர்

தேசிய கல்விக் கொள்கையை எதிர்க்க யாரிடமும் நியாயமான காரணம் இல்லை என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய கல்விக் கொள்கைக்கு எதிராக தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. தமிழக அரசு சார்பில் தேசிய கல்விக் கொள்கைக்கு மாற்றாக மாநில கல்விக் கொள்கை வடிவமைக்கப்பட்டு வருகின்றது.



இந்நிலையில், சென்னை வந்துள்ள மத்திய கல்வித்துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,



“தமிழ் ஒரு தேசிய மொழி. தாய்மொழியில் கல்வி பயில வேண்டும். தேசிய கல்விக் கொள்கைக்கு எதிராக நியாயமான எதிர்ப்பை நான் இதுவரை பார்க்கவில்லை. இன்று சில நண்பர்கள் ஆதரவாக இல்லை, நாளை அவர்களும் ஆதரிப்பார்கள்.



கல்வியில் தமிழ்நாடு மிகப்பெரிய பாரம்பரியம் கொண்ட மாநிலம். தேசிய கல்விக் கொள்கை கட்டமைப்பில் தமிழ்நாடு எப்பொழுதும் முன்னிலையில் இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

Read More

Sunday, July 31, 2022

பள்ளிக்கல்வித் துறை சார்பில் ஐம்பெரும் விழா!

July 31, 2022 0
திண்டிவனம் : திண்டிவனம் கல்வி மாவட்ட ஒலக்கூர் ஒன்றிய ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஐம்பெரும் விழா நடந்தது.புனித அன்னாள் பள்ளி கூட்ட அரங்கில் நடந்த விழாவிற்கு, வட்டார கல்வி அலுவலர் சுபத்ரா, மேற்பார்வையாளர் சங்கர் வரவேற்றனர். வட்டார கல்வி அலுவலர் அக்சிலியம் பெலிக்ஸ் நோக்கவுரையாற்றினார். பள்ளி துணை ஆய்வர் பாலசுப்ரமணிய பாரதி வாழ்த்திப் பேசினார்.மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் துறை உதவி திட்ட அலுவலர் தனவேல், திண்டிவனம் மாவட்ட கல்வி அலுவலர் கிருஷ்ணன் முன்னிலை வகித்து, தன்னார்வலர்களுக்கு பரிசு வழங்கி வாழ்த்திப் பேசினர்.விழாவில் இல்லம் தேடிக்கல்வி தன்னார்வலர்களுக்கு பதக்கமும், மாரத்தான் போட்டியில் மாநில அளவில் 18வது இடமும், மாவட்ட அளவில் முதலிடம் பிடித்தவரும் கவுரவிக்கப்பட்டனர். ஐந்து வயதுடைய 1129 மாணவர்களை பள்ளியில் சேர்த்தமைக்கும், இ.எம்.ஐ.எஸ்., பதிவுகளில் சாதனைக்கு வித்திட்ட தலைமையாசிரியர்கள் கவுரவிக்கப்பட்டனர். இல்லம் தேடிக்கல்வி ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர் ரங்கராஜன் நன்றி கூறினார்.
Read More

Thursday, June 30, 2022

டூல் டிசைன் படிப்பு

June 30, 2022 0
டூல் டிசைன் படிப்பு

ஹைதராபாத்தில் உள்ள சென்டரல் இன்ஸ்டிடியூட் ஆப் டூல் டிசைன் - சி.ஐ.டி.டி,, கல்வி நிறுவனத்தில் முதுநிலை டிப்ளமா படிப்பிற்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

கல்வி நிறுவன அறிமுகம்:

1968ம் ஆண்டு இந்திய அரசால் ஏற்படுத்தப்பட்ட இக்கல்வி நிறுவனம், தொழில்நுட்ப பயிற்சிகள் வழங்கும் நாட்டின் முன்னணி நிறுவனமாகும்.

சர்வதேச தரச்சான்றும் பெற்றுள்ள இந்நிறுவனம், டூல் டிசைன் அண்டு மானுபாக்ச்சரிங், கேட், கேம், சி.ஏ.இ., வி.எல்.எஸ்.ஐ., எம்பெட்டடு சிஸ்டம்ஸ், எலக்ட்ரானிக்ஸ், மெக்கட்ரானிக்ஸ் அண்டு ரோபாட்டிக்ஸ் ஆகிய பிரிவுகளில் சான்றிதழ், டிப்ளமா, முதுநிலை டிப்ளமா மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளையும் வழங்குகிறது. படிப்பு: போஸ்டு டிப்ளமா இன் டூல் டிசைன் - பி.டி.டி.டி.,

மொத்த இடங்கள்: 60

தகுதிகள்: ஏ.ஐ.சி.டி.இ., அங்கீகாரத்துடன் வழங்கப்படும் இப்படிப்பில் சேர மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் டிப்ளமா படித்தவர்கள் அல்லது அதற்கு இணையான படிப்பை நிறைவு செய்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும், 27 வயதிற்குள் இருத்தல் வேண்டும். எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு 5 ஆண்டுகள் வரை தளர்வு உண்டு.

தேர்வு முறை: நுழைவுத்தேர்வு அடிப்படையில் தகுதியான மாணவர்கள் இப்படிப்பில் சேர்க்கப்படுவர்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜூன் 30

விபரங்களுக்கு: https://citdindia.org/
Read More

Sunday, June 12, 2022

TC இல்லாவிட்டாலும் மாணவர்களை தடையின்றி சேர்த்துக்கொள்ள கல்வித்துறை உத்தரவு

June 12, 2022 0
Students coming to join up to 8th class should be admitted without restriction even if they do not have TC

Students who wish to leave must be issued a TC without delay

With all schools set to open tomorrow, the Department of Education has issued an order.

8-ம் வகுப்பு வரை சேர வரும் மாணவர்களிடம் TC இல்லாவிட்டாலும் தடையின்றி சேர்த்துக்கொள்ள வேண்டும்

வெளியேற விரும்பும் மாணவர்களுக்கு தாமதமின்றி TC வழங்கிட வேண்டும்

நாளை பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், அனைத்து அரசுப்பள்ளிகளுக்கும், கல்வித்துறை உத்தரவு.
Read More

பள்ளிகளில் மீண்டும் 'நீதி போதனை' வகுப்புகள் - பள்ளி கல்வித் துறை

June 12, 2022 0
'Teaching Justice' Classes Back in Schools - Department of School Education

Schools in Tamil Nadu will be open from tomorrow (June 13) for students up to 10th standard after the summer holidays.

For this, cleaning work has been done in the schools and the classrooms are ready.

In this situation, 'teaching justice' classes are being started again in government schools.

The class will be held one day a week, according to the school education department.

பள்ளிகளில் மீண்டும் 'நீதி போதனை' வகுப்புகள் - பள்ளி கல்வித் துறை

தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்குப் பின் 10ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு நாளை (ஜூன் 13) முதல் பள்ளிகள் திறக்கப்படுகின்றன.

இதற்காக பள்ளிகளில் தூய்மைப் பணிகள் செய்யப்பட்டு, வகுப்பறைகள் தயார் நிலையில் உள்ளன.

இந்நிலையில், அரசுப் பள்ளிகளில் மீண்டும் `நீதி போதனை' வகுப்புகள் தொடங்கப்படுகின்றன.

இந்த வகுப்பு வாரத்தில் ஒரு நாள் நடத்தப்படும் என பள்ளி கல்வித் துறை தெரிவித்துள்ளது.
Read More

Post Top Ad

Your Ad Spot