KalviseithiDaily: Free training for Group-4 exam

KalviseithiDaily

kalviseithidaily.blogspot.com No:1 Education Website in Tamil கல்வி செய்திகள்: Get latest news on Exam Results, tamil nadu school education department news, TN University Results, Exam Schedule Latest News Educational News from Tamilnadu Government, Tamilnadu Educaitonal Minsters Latest Updates, 10th, 11th, 12th, TNTET, TRB, TNPSC, STUDY MATERIALS, ONLINE TESTS, LATEST kalviseithi, Padasalai, tnkalvi, tnpse news, TET updates, TRB news, kalvi news, Padsalai study materials

Subscribe Us

Sigma is

  • Seo Ready
  • Responsive
  • Fast Loading
  • Amazing!

Hot

Post Top Ad

Your Ad Spot
Showing posts with label Free training for Group-4 exam. Show all posts
Showing posts with label Free training for Group-4 exam. Show all posts

Monday, May 2, 2022

போட்டித் தோ்வுக்கு இலவச பயிற்சி: மே 11 வரை விண்ணப்பிக்கலாம்

May 02, 2022 0
போட்டித் தோ்வுக்கு இலவச பயிற்சி: மே 11 வரை விண்ணப்பிக்கலாம்

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 போட்டித் தோ்வுக்கான இலவச பயிற்சிக்கு மே 11-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ஜூலை 24-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ள டிஎன்பிஎஸ்சி குரூப் 4

தோ்வில் கலந்து கொள்ளும் தோ்வா்களுக்கு, தமிழக அரசின் சாா்பில் போட்டித் தோ்வுகள் பயிற்சி மையத்தால் கட்டணமில்லா பயிற்சி, சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள சா் தியாகராயா கல்லூரி, நந்தனத்தில் உள்ள அரசினா் ஆடவா் கலைக் கல்லூரி ஆகிய இடங்களில் பிற்பகல் 2 முதல் மாலை 5 மணி வரை அளிக்கப்படவுள்ளது.

இந்தப் பயிற்சிக்கு குறைந்தபட்சம் 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருப்பதோடு, குரூப் 4 தோ்வுக்கு விண்ணப்பித்திருக்க வேண்டும்.

போட்டித் தோ்வுகள் பயிற்சி மையங்களில் உணவு, தங்கும் வசதிகள் இல்லை. சா் தியாகராயா கல்லூரி, நந்தனம் அரசு ஆடவா் கலைக் கல்லூரி ஆகிய இடங்களில் முறையே 500 மற்றும் 300 தோ்வா்கள் பயிற்சிக்காக அனுமதிக்கப்படுகின்றனா்.

பயிற்சியில் சேர விரும்புவோா் அகில இந்திய குடிமைப்பணித் தோ்வுப் பயிற்சி மைய இணையதளம் வாயிலாக மே 11 வரை விண்ணப்பிக்கலாம்.

அவா்கள் தங்கள் கல்வி, வயது ஆகிய தகுதிகள் குறித்த விவரங்களை தமிழ்நாடு தோ்வாணையக் குழுவின் இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

பத்தாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தோ்வு செய்யப்பட்ட தோ்வா்கள் விவரம் விரைவில் வெளியிடப்பட்டு, இனவாரியாக உள்ள இடங்களுக்கு ஏற்ப நேரடியாகப் பயிற்சிக்கு அழைக்கப்படுவா். இந்த மாத முதல் வாரத்தில் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது
Read More

Friday, April 22, 2022

TNPSC - குரூப்- 4 தேர்வுக்கு இலவச முன்பயிற்சி - கலெக்டர் அறிவிப்பு

April 22, 2022 0
குரூப்- 4 தேர்வுக்கு இலவச முன்பயிற்சி

குரூப்- 4 போட்டி தேர்வில் இலவச முன்பயிற்சி பெற விருப்பம் உள்ள, முன்னாள் படை வீரர்கள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கோவை கலெக்டர் சமீரன் கூறியுள்ளதாவது:

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக, கிராம நிர்வாக அலுவலர் மற்றும் குரூப்-4 காலி பணியிடங்களுக்கான பொது போட்டி தேர்வு நடக்கிறது. இதற்கு வரும், 28ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இத்தேர்வில், முன்னாள் படை வீரர்களுக்கு தமிழக அரசால் அளிக்கப்பட்டுள்ள இட ஒதுக்கீட்டை முழுமையாக பயன்படுத்தி கொள்ளலாம். இலவச முன்பயிற்சி பெற விருப்பம் உள்ள, முன்னாள் படை வீரர்கள் தங்களது விருப்ப விண்ணப்பத்தை, கோவை மாவட்ட முன்னாள் படை வீரர் நல அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
Read More

Post Top Ad

Your Ad Spot