KalviseithiDaily: Counselling

KalviseithiDaily

kalviseithidaily.blogspot.com No:1 Education Website in Tamil கல்வி செய்திகள்: Get latest news on Exam Results, tamil nadu school education department news, TN University Results, Exam Schedule Latest News Educational News from Tamilnadu Government, Tamilnadu Educaitonal Minsters Latest Updates, 10th, 11th, 12th, TNTET, TRB, TNPSC, STUDY MATERIALS, ONLINE TESTS, LATEST kalviseithi, Padasalai, tnkalvi, tnpse news, TET updates, TRB news, kalvi news, Padsalai study materials

Subscribe Us

Sigma is

  • Seo Ready
  • Responsive
  • Fast Loading
  • Amazing!

Hot

Post Top Ad

Your Ad Spot
Showing posts with label Counselling. Show all posts
Showing posts with label Counselling. Show all posts

Sunday, October 30, 2022

B.E நான்காம் கட்ட கலந்தாய்வு: 67,771 பேருக்கு அழைப்பு

October 30, 2022 0
பிஇ நான்காம் கட்ட கலந்தாய்வு: 67,771 பேருக்கு அழைப்பு

தமிழக பொறியியல் கல்லூரிகளில் 4-ஆம் கட்ட கலந்தாய்வில் பங்கேற்க 67,771 மாணவா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுவரை மூன்று சுற்று கலந்தாய்வு மூலம் 58,307 போ் பொறியியல் கல்லூரிகளில் சோ்ந்துள்ளனா்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 446 பொறியியல் கல்லூரிகளில் இளநிலைப் படிப்புகளுக்கு ஒரு லட்சத்து 48 ஆயிரத்து 811 இடங்கள் உள்ளன. இவற்றை நிரப்புவதற்கான மாணவா் சோ்க்கை கலந்தாய்வு கடந்த ஆக.20-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

பொதுப்பிரிவு கலந்தாய்வு மொத்தம் 4 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. அதன்படி, முதல் சுற்று கலந்தாய்வு செப்.10-இல் தொடங்கி 24-ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது. இதில் 10,340 மாணவ, மாணவிகளுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டன.

தொடா்ந்து, இரண்டாம் சுற்று கலந்தாய்வு செப்.25 முதல் அக்.13-ஆம் தேதி நடைபெற்றது. இதில் 19,947 இடங்கள் நிரம்பின. மூன்றாம் சுற்று கலந்தாய்வு அக்.13-ஆம் தேதி தொடங்கி வெள்ளிக்கிழமையுடன் முடிவடைந்தது.

இதில் பங்கேற்க 54 ஆயிரம் மாணவா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அவா்களில் பொதுப் பிரிவில் 24,727 பேரும், 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டின் கீழ் 3,293 பேரும் சோ்க்கை இடங்களை உறுதி செய்தனா். ஒட்டுமொத்தமாக 3 சுற்றுகளையும் சோ்த்து 58,307 இடங்கள் நிரம்பின.

மீதமுள்ள இடங்களை நிரப்புவதற்கான இறுதிச் சுற்று கலந்தாய்வு சனிக்கிழமை தொடங்கியது. இதில் பங்கேற்க மொத்தம் 61,771 போ் அழைக்கப்பட்டுள்ளனா். இவா்கள் திங்கள்கிழமைக்குள் தங்களுக்கு பிடித்த கல்லூரிகளின் விருப்பப் பட்டியலை இறுதி செய்ய அவகாசம் வழங்கப்பட்டுள்ளது என பொறியியல் சோ்க்கைக் குழு அதிகாரிகள் தெரிவித்தனா்.
Read More

Wednesday, September 21, 2022

B.E - Deadline to join colleges by 22nd Sep - பி.இ. சோ்க்கை கலந்தாய்வு - செப்.22-ஆம் தேதிக்குள் கல்லூரிகளில் சேர அவகாசம்

September 21, 2022 0
பி.இ. சோ்க்கை கலந்தாய்வின் முதல் சுற்றில் இடங்களைத் தோ்வு செய்த மாணவா்கள் செப்.22-ஆம் தேதிக்குள் கல்லூரிகளில் சேர அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கான முதல் சுற்று கலந்தாய்வு கடந்த 10-ஆம் தேதி தொடங்கி 15-ஆம் தேதி வரை நடந்து முடிந்தது.

14,524 போ் கலந்தாய்வில் பங்கேற்க அழைப்பு கொடுக்கப்பட்டது.

முதலில் விருப்ப இடங்களுக்கான கல்லூரிகள் தோ்வும், அதனைத் தொடா்ந்து உத்தேச ஒதுக்கீட்டு இடங்கள் உறுதி செய்யப்பட்டு உத்தேச ஒதுக்கீடும் வழங்கப்பட்டன. 15-ஆம் தேதி தற்காலிக ஒதுக்கீட்டு கடிதம் மாணவா்களுக்கு இணையவழியில் வழங்கப்பட்டது.

கல்லூரிகளை இறுதி செய்து வழங்கப்பட்ட இந்த கடிதத்தை 7 வேலை நாள்களுக்குள் கல்லூரிக்கு கொண்டு சென்று வழங்கி சேர வேண்டும் என்ற புதிய நடைமுறை நிகழ் கல்வியாண்டில் கொண்டு வரப்பட்டுள்ளது.

கலந்தாய்வில் உறுதி செய்யப்பட்ட இடங்களில் மாணவா்கள் கடைசி வரை சேராமல் போவதால் அண்ணா பல்கலை. வளாக கல்லூரிகள் உள்பட பல கல்லூரிகளில் இடங்கள் காலியாகக் கிடந்தன.

இதனால், அந்த இடங்களில் மற்ற மாணவா்கள் சேர முடியாமல் போனது.

இதனைத் தவிா்க்க கல்லூரிகளை தெரிவு செய்து இறுதி ஒதுக்கீடு கடிதம் பெற்ற பிறகு 7 நாள்களுக்குள் தாங்கள் விரும்பிய கல்லூரிகளில் பணம் செலுத்தி சோ்ந்து விட வேண்டும்.

அதன் பிறகு சேருவதற்கு வாய்ப்பு இல்லை. அந்த இடம் காலியானதாக அறிவிக்கப்பட்டு அடுத்து வருகின்ற கலந்தாய்வில் சோ்க்கப்படும்.

அந்த வகையில் முதல் சுற்றில் இடம் பெற்ற மாணவா்கள் 22-ஆம் தேதிக்குள் கல்லூரிகளில் சேருவதற்கு அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.
Read More

Thursday, June 23, 2022

மாவட்ட மாறுதல் கலந்தாய்வு செய்தி.

June 23, 2022 0
Announcement of district change consultation date today or tomorrow will be released soon. Information as to the possibility of holding all District Change Consultation on 27,28,29

இன்று அல்லது நாளை மாவட்ட மாறுதல் கலந்தாய்வு தேதி அறிவிப்பு விரைவில் வெளியாகும். 27,28,29 தேதிகளில் அனைத்து மாவட்ட மாறுதல் கலந்தாய்வு நடைபெற வாய்ப்பு என தகவல்
Read More

Tuesday, June 14, 2022

கைவிட்ட சங்க நிர்வாகிகள் - தொடக்கக்கல்வி மாவட்டம் விட்டு மாவட்டம் கலந்தாய்வு - தீர்வு காண வழி என்ன?

June 14, 2022 0
கைவிட்ட சங்க நிர்வாகிகள் - தொடக்கக்கல்வி மாவட்டம் விட்டு மாவட்டம் கலந்தாய்வு - தீர்வு காண வழி என்ன?
 
ஆசிரிய நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.

2021-22ஆம் கல்வியாண்டுக்கான பணி மாறுதல் கலந்தாய்வு மாவட்டம் விட்டு மாவட்டம் தொடக்கக்கல்வி துறையில் உள்ள இடைநிலை ஆசிரியர்களான நம்மைத்தவிர மற்ற அனைவருக்கும் முடிக்கப்பட்டு விட்டது. இதை நடத்துவதற்கு எந்த சங்கமும் வலியுறுத்துவதாகவோ கவலைப்பட்டதாகவோ தெரியவில்லை. நமக்கு வேண்டும் என்றால் நாம் தான் இனி வரும் காலங்களில் களத்தில் இறங்க வேண்டும். சங்கங்கள் தங்கள் வலிமையை இழந்து நிற்பதால் அது அதை புதுப்பிக்க வேண்டிய கட்டமைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் நிற்கிறது. அது ஒருபுறம் அப்படியே இருக்கட்டும். 

நாம் நமது பிரச்சனையான மாவட்ட மாறுதல் கலந்தாய்வு நடத்தச் செய்ய 3 விதமான வழிகளை கையாள வேண்டியுள்ளது. இதில் யார் யாருக்கு எதில் விருப்பமோ அதன் படியான தங்கள் கருத்துக்களை தெரிவிக்க வேண்டுகிறேன்.

வழி 1 

தொடக்கக்கல்வி துறை இயக்குநரை நேரில் சந்தித்து கலந்தாய்வை இக்கல்வியாண்டின் தொடக்கத்திலேயே நடத்த கோரிக்கை விடுத்தல்.

வழி 2

பள்ளிக்கல்வி துறை அமைச்சரை நேரில் சந்தித்து நம் நிலையை கூறி வலியுறுத்துதல்.

வழி 3

வழக்கு தொடுத்தல். வழக்கு தொடுக்க விருப்பமுள்ளவர்கள் தனியாக தொடர்பு கொள்ளவும். 

நமக்கு தேவையென்றால் நாம் தான் இனி கேட்க வேண்டும். மற்றவர்களை நம்பி இனி பயன் இல்லை. வாருங்கள் யார் யாரெல்லாம்  மாவட்ட மாறுதல் கலந்தாய்வை விரும்புகிறீர்களோ அவர்களெல்லாம் தங்கள் பெயரை பதிவு செய்யவும்.

வழக்கு தொடுக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். உங்களில் யாருக்கேனும் விருப்பம் இருந்தால் தெரிவிக்கவும்.

இவண்
முத்துப்பாண்டி - 94867 18060
அமீன் - 9500360730


Read More

Tuesday, May 17, 2022

ஆயுர்வேத மருத்துவ படிப்புகளில் கலந்தாய்வில் நிரம்பாத காலியிடங்கள்: ஐகோர்ட் விளக்கம்

May 17, 2022 0
The Chennai High Court has explained that private colleges have not failed to fill the vacancies in Ayurvedic medical courses which are not filled up under consultation.

The injunction not to admit students without consultation applies only to undergraduate medical studies. High Court Judge Swaminathan has said that it does not apply to Indian medical courses like Ayurveda.

ஆயுர்வேத மருத்துவ படிப்புகளில் கலந்தாய்வில் நிரம்பாத காலியிடங்களை நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் தனியார் கல்லூரிகள் நிரப்புவதில் தவறில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது.

கலந்தாய்வின்றி மாணவர் சேர்க்கை கூடாது என்ற உத்தரவு இளநிலை மருத்துவ படிப்புக்கே பொருந்தும். ஆயுர்வேதம் போன்ற இந்திய மருத்துவ படிப்புகளுக்கு பொருந்தாது என்று உயர்நீதிமன்ற நீதிபதி சுவாமிநாதன் தெரிவித்திருக்கிறார்.
Read More

Wednesday, May 11, 2022

தமிழகத்தில் நீட் தேர்வு முடிவுகள் வந்த பிறகே என்ஜினீயரிங் படிப்புக்கு ஆன்லைனில் கலந்தாய்வு.

May 11, 2022 0
தமிழகத்தில் நீட் தேர்வு முடிவுகள் வந்த பிறகே என்ஜினீயரிங் படிப்புக்கு ஆன்லைனில் கலந்தாய்வு.

அண்ணா பல்கலைக்கழகத்தில் சான்றிதழ் கோரி விண்ணப்பிப்பவர்களிடம் கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படுவதாக தகவல்கள் வந்தன. சான்றிதழை தொலைத்துவிட்டு அதை கேட்டு விண்ணப்பிக்கும் மாணவர்கள் மிக குறைவாகத்தான் இருக்கின்றனர். அந்த கட்டணத்தைத்தான் உயர்த்தி இருக்கின்றனர்.

அதை வேண்டாம் என்று துணை வேந்தரிடம் கூறியிருக்கிறோம். அதை அவர் ஏற்றுக்கொண்டார். அதுபற்றி இன்றே ஆணை பிறப்பிப்பதாக அவரும் கூறியிருக்கிறார். எனவே அந்த கட்டண உயர்வு இருக்காது. பழைய கட்டணமே வசூலிக்கப்படும். காலியிடங்களுக்கான காரணம்

கடந்த ஆண்டு அண்ணா பல்கலைக்கழகத்தில் என்ஜினீயரிங் படிப்பில் காலியிடம் வருவதற்கு காரணம், நீட் தேர்வுக்கு முன்பே என்ஜினீயரிங் கலந்தாய்வை நடத்தியதுதான். என்ஜினீயரிங் கல்விக்கு தேர்வானவர்கள் பலர் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவ கல்விக்கு சென்றுவிட்டனர். எனவே நீட் தேர்வு முடிந்து முடிவுகள் வந்த பிறகே என்ஜினீயரிங் கல்வி சேர்க்கைக்கான கலந்தாய்வை நடத்த இருக்கிறோம். அதுதான் சரியாக இருக்கும்.

17-ந்தேதி ஆலோசனை

அதுபற்றி 17-ந்தேதி மாலையில் ஆலோசனை கூட்டத்தை கூட்ட உள்ளோம். அந்த கூட்டத்தில் அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர், பதிவாளர், தொழில் கல்வி இயக்குனர், ஆணையர், தனியார் பல்கலைக்கழகங்கள், மாணவர் பிரதிநிதிகள் ஆகியோருடன் ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறோம். அதுபற்றி அந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும்.

தொழில்நுட்பங்கள் வருவதற்கு முன்பு நேரடியாக கலந்தாய்வு நடைபெற்றது. தூரத்தில் இருந்து அண்ணா பல்கலைக்கழகத்துக்கு வர பலர் கஷ்டப்படுகின்றனர் என்பதை அறிந்து ஆன்லைனில் கொண்டு வந்தோம். ஆனால் ஆன்லைனில் கடந்த காலங்களில் சில முறைகேடுகள் நடைபெற்றன.

அதை கடந்த ஆண்டு கூடுமான வரை தடுப்பதற்காக முயற்சிகளை மேற்கொண்டோம். ஆனாலும் சில மாணவர்களுக்கு ஆன்லைன் வசதி கிடைக்கவில்லை என்ற நிலை இருந்தது. இதுபற்றியும் கலந்தாலோசனை செய்வார்கள்.

ஆன்லைனில் நடைபெற்றால் மாணவர்களுக்கு அலைச்சல் இருக்காது. அவர்களின் மதிப்பெண் அடிப்படையில் அவர்களின் தேர்வு முறைகளை எப்படி அணுகுவது? என்பது பற்றி 17-ந்தேதி மாலை முடிவு செய்து அன்றே அறிவிக்கப்படும். விண்ணப்பிப்பது எப்போது?

நீட் தேர்வு முடிந்த உடனேயே என்ஜினீயரிங் கலந்தாய்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படும். நீட் தேர்வு முடிவு வந்த பிறகு என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெறும். கலந்தாய்வில் மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் இருக்க கூடாது என்ற வகையில் 17-ந்தேதி நடக்கும் ஆலோசனையில் முடிவெடுக்கப்படும்.

என்ஜினீயரிங் கல்லூரிகளை தேர்வு செய்யும்போது மாணவர்கள் எதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்? என்ற வசதிகளை தெரிந்துகொண்டு சேர்வதற்கான நடைமுறையை எளிதாக்கப்படும்.

ஆன்லைன் கலந்தாய்வை மாணவர்கள் விரும்புகின்றனர். அவர்களின் சொந்த போன் மூலம் அல்லது அவர்கள் படிக்கும் பள்ளிக்கூடங்களில் இருந்து கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கலாம். அதற்கான ஏற்பாடுகளை செய்து தருவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உறுதி அளித்திருக்கிறார். மேலும் கூடுதல் வசதியாக மையங்களையும் உருவாக்கி வைக்க இருக்கிறோம். அங்கு சென்றும் அவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மாதம் ஆயிரம் ரூபாய்

பெண்களுக்கான உயர்கல்வி உறுதித்திட்டம் மூலம் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் வரும் கல்வியாண்டிலேயே செயல்படுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Read More

பொறியியல் கலந்தாய்வு பற்றி 17ம் தேதி ஆலோசனை

May 11, 2022 0
அண்ணா பல்கலை கலந்தாய்வு

அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கலந்தாய்வு குறித்து மே 17ம் தேதி கல்வியாளர்களுடன் ஆலோசனை நடத்தப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்திருக்கிறார். சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர், நீட் தேர்வு முடிந்ததும் பொறியியல் கலந்தாய்வு நடத்த திட்டமிட்டுளோம். குளறுபடிகள் இல்லாமல் ஆன்லைன் கலந்தாய்வு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. தொலைந்து போன சான்றிதழை திரும்பப் பெற பழைய கட்டணமே வசூலிக்கப்படும் என அமைச்சர் கூறினார். 17ம் தேதி ஆலோசனை

கட்டணத்தை பன்மடங்கு உயர்த்தி அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்ததற்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில் இந்த அறிவிப்பை அமைச்சர் வெளியிட்டார். தொடர்ந்து பேசிய அமைச்சர் பொன்முடி, உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 உதவித் தொகை வழங்கும் திட்டம் இந்த ஆண்டு முதல் அமல்படுத்தப்படும் என்று தெரிவித்தார். அரசுப் பள்ளியில் படித்து உயர்கல்வி பயிலும் அனைத்து மாணவிகளுக்கும் மாதம்தோறும் ரூ. 1,000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று இந்தாண்டிற்கான பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.
Read More

Wednesday, January 19, 2022

முதுநிலை மருத்துவ படிப்பிற்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டார் அமைச்சர் மா.சுப்ரமணியன்

January 19, 2022 0
மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்கள் இன்று ( 19.01.2022 ) முதுநிலை பட்ட மேற்படிப்பிற்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டார். அது தொடர்பான விவரங்கள் பின்வருமாறு , முதுநிலை பட்ட மேற்படிப்பிற்கான கலந்தாய்வு MD / MS மொத்த இடங்கள் - 2216 , அகில இந்திய ஒதுக்கீடு -1053 , மாநில ஒதுக்கீடு 1163 , மாநில ஒதுக்கீடுக்கான தரவரிசை பட்டியல் இன்று 19.01.2022 வெளியீடு . மாநில ஒதுக்கீடுக்கான ஆன்லைன்கலந்தாய்வு தொடங்கும் நாள் 20.01.2022

இளநிலை மருத்துவ பட்டப்படிப்பு 2021-2022 அரசு மற்றும் சுயநிதி மருத்துவ கல்லுாரிகளில் உள்ள மாநில ஒதுக்கீடு இடங்கள் 6999. தரவரிசை பட்டியல் வெளியீடு 24.01.2022 . மாற்று திறனாளிகள் , ராணுவவீரர்களின் வாரிசுகள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு நேரடி கலந்தாய்வு 27.01.2022 7.5 சதவிதம் அரசு பள்ளி மாணவர்களுக்கு நேரடி கலந்தாய்வு 28.01.2022 மற்றும் 29.01.2022 . மற்றப்பிரிவினர்களுக்கு 30.01.2022 முதல் இணையதள வாயிலாக கலந்தாய்வு நடைபெறும். இதை பற்றிய தகவல்கள் இணையதளத்தில் வெளியிடப்படும் . www.tnmedicalselection.org , www.tnhealth.tn.gov.in
Read More

Sunday, January 9, 2022

முதுகலை மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு தேதி அறிவிப்பு

January 09, 2022 0
முதுகலை மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு வரும் 12-ம் தேதி தொடங்குகிறது - மத்திய அமைச்சர் மன்சூக் மாண்டவியா
முதுகலை மருத்துவ படிப்பு கலந்தாய்வு நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி அளித்த நிலையில் அறிவிப்பு
Read More

Wednesday, January 5, 2022

ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு விண்ணப்பங்களை EMIS இணையத்தில் பதிவு செய்யலாம்!

January 05, 2022 0
🟢 தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசியர்கள் கவனத்திற்கு...
EMIS WEB PORTAL - இணையதள வழியில் ஆசிரியர் பொதுமாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு நடைபெற உள்ளது.

🟢 ஏற்கனவே  வந்த சுற்றறிக்கைகள் அடிப்படையில் விண்ணப்பங்கள் அலுவலகத்தில் ஒப்படைக்க  கோரப்பட்டிருந்தது.

🟢 ஆனால் , 05.01.2022  மாலை தான்
முதன்மை க்கல்வி அலுவலர் அறிவுறுதிய தகவல்  படி ஆசிரியர்களுடைய EMIS USERNAME PASSWORD  பயன்படுத்தி, பதிவேற்றம் செய்ய வேண்டும் என தகவல் வந்துள்ளது. 

🟢 எனவே, பொதுமாறுதல் கலந்தாய்வில் பங்கேற்க வேண்டிய ஆசிரியர்கள் உடனடியாக தங்களுடைய, 08- இலக்க எண்ணை பயன்படுத்தி, EMIS WEB PORTAL லில் மாறுதல் கலந்தாய்வு விண்ணப்பத்தை பதிவேற்றம்  செய்து, அதனை PRINT OUT எடுத்து, 03 - நகல்களில் தலைமையாசிரியர் பரிந்துரை ஒப்பம் பெற்று உடன் அலுவலகத்தில்,  நாளை 07.01.22 காலை 11.00 மணிக்குள்  ஒப்படைத்திட  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

🟢 EMIS WEB PORTAL - லில் பதிவேற்றம் செய்வதில் தவறுகள் ஏற்பட்டால் அதற்கு முழு பொறுப்பும் சம்பந்தப்பட்ட ஆசிரியரையே சாரும்.

🟢  எனவே, மிக கவனமாக புள்ளி  விவரங்கள் பதிவேற்றம் செய்திட  மாறுதல் கோரும் பள்ளி  ஆசிரியர்களுக்கு, தலைமையாசிரியர்கள் தகவல் தெரிவித்து (சுற்றறிக்கையை பதிவேட்டில் கையெழுத்து பெற்று) வழிகாட்டுதல்  தெரிவித்திட  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

🟢 மாறுதல் கலந்தாய்வில் முன்னுரிமை கோருகிற ஆசிரியர்கள் அதற்கான சான்று ஆவணங்களை இணைத்து  முன்னிலைப்படுத்த வேண்டும்.
கல்வி அலுவலர்கள் - தஞ்சாவூர் மாவட்டம்.
Read More

Sunday, January 2, 2022

முதுநிலை பொறியியல் கலந்தாய்வு இன்று தொடங்குகிறது

January 02, 2022 0
முதுநிலை பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு திங்கள்கிழமை முதல் தொடங்குகிறது.

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில் எம்இ, எம்டெக், எம்ஆா்க், எம்பிளான் போன்ற முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் காலியாக உள்ளன. இதில் சோ்வதற்கான கலந்தாய்வு ஜன.3-ஆம் தேதி முதல் பிப்.1-ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இதன்படி, கேட் தோ்வா்களுக்கான கலந்தாய்வு, திங்கள்கிழமை தொடங்கி, ஜன.5- ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கு பின்னா், டான்சட் தோ்வா்களுக்கான கலந்தாய்வு ஜன.11-ஆம் தேதி தொடங்கி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More

Thursday, December 23, 2021

ஆசிரியர் பொது மாறுதல் குறித்த தகவல்.

December 23, 2021 0
ஆசிரியர் பொது மாறுதல் குறித்த தகவல்.

ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்விற்கு online பதிவு துவக்கம் , திங்கள் கிழமையில் இருந்து துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது..

09.01.2022 முதல் 13.01.2022 வரை தொடக்கக் கல்வி மற்றும் பள்ளிக்கல்வி ஆசிரியர்களுக்கான மாறுதல் கலந்தாய்வு நடைபெற வாய்ப்பு என எதிர் பார்க்கப்படுகிறது....
Read More

Friday, December 17, 2021

2021-22ஆம் ஆண்டிற்கான ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வுக்கான நெறிமுறைகள்

December 17, 2021 0
*✍️2021-22ஆம் ஆண்டிற்கான ஆசிரியர் இடமாறுதல்   கலந்தாய்வுக்கான நெறிமுறைகள் வெளியீடு!*👇👇👇

1️⃣ *அலகு விட்டு அலகு மாறுதலில்  செல்ல அனுமதி!*

2️⃣ *தற்போது பணிபுரியும் நிலையில் ஒரு ஆண்டு பணி செய்து இருக்க வேண்டும்!*

3️⃣ *8 ஆண்டுகள் ஒரே பணியிடத்தில் பணிபுரிவோர் கட்டாயமாக மாறுதல் கலந்தாய்வில் பங்கேற்க வேண்டும்!* (ஒரு நிலையத்தில் அதிகபட்ச சேவை:

ஒரு குறிப்பிட்ட பள்ளியில் எட்டு ஆண்டுகள் (8ஆண்டுகள்) பணியாற்றிய ஆசிரியர்கள் கட்டாயமாக இடமாற்றம் செய்யப்படுவார்கள். இருப்பினும், இந்தக் கொள்கை
வெளியிடப்பட்ட நாளிலிருந்து புதிதாக நியமிக்கப்படும் ஆசிரியர்களுக்கு மட்டுமே, இந்த விதி வருங்காலத்தில் மட்டுமே பொருந்தும். இதுபோன்ற சந்தர்ப்பங்களில், இந்த ஆசிரியர்களுக்கு 8 ஆண்டுகள் நிறைவடைந்த பிறகு உபரி ஆசிரியர்களுக்கு இணையாக முன்னுரிமை அளிக்கப்படும் (அதாவது, பொது கவுன்சிலிங் நடைபெறும் முன் அவர்கள் கவுன்சிலிங்கில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள்)

4️⃣ *ஆகஸ்ட் மாதம் - மாணவர்கள் எண்ணிக்கை நிலவரப்படி பணிநிரவல் மேற்கொள்ளப்படும்!*

*பள்ளியில் பணியேற்ற நாள் அடிப்படையில் ஜூனியர் ஆக உள்ளவர் பணிநிரவல் செய்யப்படுவர்!*

*அதே கல்வி ஆண்டில் பணி ஓய்வு பெற இருப்போர்.. பணிநிரவல் செய்யப்பட மாட்டார்கள்!*

*மாற்றுத்திறனாளிகள் பணிநிரவல் செய்யப்பட மாட்டார்கள்!*

*மாற்றாக, அவர்களுக்கு அடுத்த நிலையில் உள்ள ஜூனியர் ஆசிரியர் பணிநிரவல் செய்யப்படுவார்கள்!*

5️⃣ *மன மொத்த மாறுதல் பெறுவோர் 2 ஆண்டுகளுக்கு பிறகு தான் அடுத்த கலந்தாய்வில் பங்கு பெற முடியும்!*

6️⃣ *SPOUSE PERIORITY - கோருவோருக்கு தொலைவு 30 கி. மீ மேல் இருக்கவேண்டும்!*

*மேலும், 3 ஆண்டுகளுக்குள் இச்சலுகையை பயன்படுத்தி பணியிட மாறுதல் ஏற்கெனவே பெற்றிருக்க கூடாது.*

7️⃣ *பொது மாறுதல்-கலந்தாய்வு MAY மாதத்தில் அல்லது முதல் பருவ இறுதி அல்லது இரண்டாம் பருவ இறுதியில் நடைபெறும்!*

8️⃣ *பொது மாறுதல் கலந்தாய்வு குறித்து அறிவிப்பு வெளியான பிறகு 5 தினங்களுக்குள் EMIS- வலைத்தளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்!*
Read More

Wednesday, December 15, 2021

வழக்குகள் நிலுவை: தாமதமாகும் மருத்துவப் படிப்பு கலந்தாய்வு

December 15, 2021 0
இடஒதுக்கீடு தொடா்பாக உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு இன்னும் தீா்வு காணப்படாததால் நிகழாண்டு மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு தாமதமாகி வருகிறது. இதனால், வரும் கல்வியாண்டின் வகுப்புகளைத் திட்டமிட்டபடி தொடங்க இயலாத நிலை எழுந்துள்ளது.

நாடு முழுவதும், இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கை நீட் தோ்வு மதிப்பெண் அடிப்படையில் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் இளநிலை மருத்துவப் படிப்புகளான எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு வழக்கமாக ஜூலை மாதம் தொடங்கிவிடும்.

கரோனா தொற்று பரவலால் கடந்த ஆண்டில் நீட் தோ்வும், கலந்தாய்வும் தாமதமானது. இருப்பினும், நவம்பா் மாதத்தில் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கை தொடங்கிவிட்டது. இந்நிலையில், நிகழாண்டில் நீட் தோ்வு முடிவுகள் வெளியாகி ஒரு மாதம் ஆகியும் கலந்தாய்வு நடவடிக்கைகள் எதுவும் இதுவரை தொடங்கவில்லை.

அகில இந்திய மருத்துப் படிப்புகளுக்கான ஒதுக்கீட்டில் பொருளாதாரத்தில் நலித்த பொது பிரிவினருக்கும், ஓபிசி பிரிவினருக்கும் இடஒதுக்கீடு வழங்குதல் தொடா்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

அதன் மீதான அடுத்தகட்ட விசாரணை 2022 ஜனவரி மாதம்தான் நடைபெறவுள்ளது. இதுவே, கலந்தாய்வு நடத்தத் தாமதம் ஆவதற்கு காரணமாகக் கூறப்படுகிறது. இதனால், முதலாமாண்டு மருத்துவப் படிப்புகளுக்கான வகுப்புகள் அடுத்த ஆண்டிலேயே தொடங்கும் எனத் தெரிகிறது.

இதேபோன்று, முதுநிலை மருத்துவப் படிப்புகளான எம்டி, எம்எஸ் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு வழக்கமாக ஏப்ரல் மாதத்தில் தொடங்கிவிடும். இடஒதுக்கீட்டு வழக்கு உச்சநீதிமன்றத்தில் இருப்பதால், அப்படிப்புகளுக்கும் இன்னும் கலந்தாய்வு நடத்தப்படவில்லை.

பொதுவாக முதுநிலை மருத்துவம் படிக்கும் மாணவா்கள் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கான பல்வேறு சிகிச்சைகளை வழங்குவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றனா்.

இந்நிலையில், தற்போது முதலாம் ஆண்டு மாணவா்கள் கல்லூரிகளில் சேராததால், அவா்களுடைய பணியையும் சோ்த்து இரண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவா்கள் மேற்கொள்ள வேண்டியுள்ளது. இதை எதிா்த்து அவா்கள் அண்மையில் போராட்டம் நடத்தியது நினைவுகூரத்தக்கது.
Read More

Sunday, November 28, 2021

எம்.இ., எம்டெக் படிப்புக்கு எப்போது கலந்தாய்வு? அண்ணா பல்கலைக்கழகம் தகவல்

November 28, 2021 0
முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு விரைவில் நடத்தப்படும் என்று அண்ணா பல்கலை. அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழக பொறியியல் கல்லூரிகளில் எம்இ, எம்டெக் உள்ளிட்ட முதுநிலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வை ஆண்டுதோறும் அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது. இதில் பங்கேற்க ‘கேட்’ அல்லது ‘டான்செட்’ நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும்.

அதன்படி நடப்பு கல்வி ஆண்டுமாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு அக்.11 வரை நடைபெற்றது.

இந்நிலையில், தமிழக அரசின் 10.5 சதவீத இடஒதுக்கீடு குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் கலந்தாய்வு நடத்துவதில் சிக்கல் நிலவி வருகிறது. அதேநேரம், கல்வி ஆண்டில் 5 மாதங்கள் கடந்துவிட்டதால் உடனே கலந்தாய்வு நடத்துமாறு சமூக வலைதளங்களில் மாணவர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதுபற்றி அண்ணா பல்கலை. அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘தமிழக அரசின் 10.5 சதவீத ஒதுக்கீடு,மத்திய அரசின் 10 சதவீத இடஒதுக்கீடு தொடர்பான வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. இவற்றில் விரைவில் முடிவுகள் வரும் என்று எதிர்பார்க்கிறோம். நீதிமன்ற உத்தரவு வந்தவுடன் கலந்தாய்வு குறித்த அறிவிப்புகள் வெளியிடப்படும்’’ என்றனர்.
Read More

Friday, September 17, 2021

பொறியியல் கலந்தாய்வில் 7.5 சதவீத இடஒதுக்கீடு:தவறுகள் நடக்க வாய்ப்பில்லை

September 17, 2021 0
பொறியியல் கலந்தாய்வில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு வழங்கப்படும் 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் தவறுகள் நடக்க வாய்ப்பில்லை என உயா்கல்வித்துறை அமைச்சா் க.பொன்முடி தெரிவித்தாா்.


இது தொடா்பாக சென்னை கிண்டியில் உள்ள தொழில்நுட்பக் கல்வி இயக்கத்தில் செய்தியாளா்களுக்கு வியாழக்கிழமை அவா் அளித்த பேட்டி:


பொறியியல் சோ்க்கைக்கான மாணவா் கலந்தாய்வு புதன்கிழமை தொடங்கியது. அதில் முதல்கட்டமாக அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 7.5 சதவீத ஒதுக்கீடு உள்பட சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு வரும் 24-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.


6 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்தவா்கள்தான் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் பொறியியல் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க முடியும். இது தொடா்பான தகவல்கள் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கும் இணையதளத்தில் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பத்தில் அரசுப் பள்ளி மாணவா் என குறிப்பிடாமல் இருந்தால் சென்னை, திருநெல்வேலி ஆகிய இடங்களில் உள்ள சிறப்பு மையங்களையோ, தமிழகத்தில் பொறியியல் கலந்தாய்வுக்கென அமைக்கப்பட்ட 51 உதவி மையங்களையோ அணுகலாம்.


அமைச்சா் விளக்கம்: ஆதிதிராவிடா், நகராட்சிப் பள்ளிகள், மாநகராட்சிப் பள்ளிகள், பழங்குடியினா், மாற்றுத்திறனாளிகள், சமூக பாதுகாப்பு பள்ளிகள் போன்றவை அரசு பள்ளிகள் என கருதப்பட்டு இதில் படித்த மாணவா்கள் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிக்கலாம்.


இந்தப் பிரிவின் கீழ் விண்ணப்பிப்பதில் சிக்கல் இருப்பதாக 5,000 புகாா்கள் வரப்பெற்றுள்ளன. இவற்றை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் எந்தத் தவறும் நடப்பதற்கு வாய்ப்பில்லை.


7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் மொத்தம் 22,133 போ் விண்ணப்பித்துள்ளனா். அதில் தகுதியுள்ள விண்ணப்பங்கள் 15,660.


முதல் நாளில் 73 பேருக்கு இடம்: கலந்தாய்வில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கான ஒதுக்கீட்டின் கீழ் சுமாா் 11 ஆயிரம் மாணவா்களுக்கு இடம் கிடைக்க வாய்ப்புள்ளது. இந்தப் பிரிவின் கீழ் விண்ணப்பித்தவா்களும் பொதுப் பிரிவு உள்ளிட்டவற்றிலும் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு மீண்டும் மீண்டும் கலந்தாய்வில் பங்கேற்க வாய்ப்பு வழங்கப்படுவதால், விண்ணப்பித்த அனைவருக்கும் நிச்சயம் இடம் கிடைக்கும்.


கலந்தாய்வுக்கு புதன்கிழமை மட்டும் 100 பேருக்கு நேரடியாக வர அழைப்பு கொடுக்கப்பட்டு, அதில் 73 பேருக்கு இடம் கிடைத்துள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தில் 20 போ், அரசு பொறியியல் கல்லூரிகளில் 9 போ், அரசு உதவி பெறும் கல்லூரிகளில் 8 போ், மத்திய அரசு உதவி பெறும் கல்லூரிகளில் 1 மாணவா், அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியில் 1 மாணவா், சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் 34 மாணவா்கள் என 73 பேருக்கு விரும்பிய கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ளன.


தமிழக முதல்வா், சமூக நீதி இட ஒதுக்கீட்டை கண்காணிக்க குழு அமைத்து அறிவித்திருக்கிறாா். சமூக நீதி அடிப்படையில் இட ஒதுக்கீடு என்பது முறையாக நடைபெறும் என்றாா் அமைச்சா் க.பொன்முடி.
Read More

Saturday, September 4, 2021

அரசு கல்லூரியில் இளநிலை பாடப்பிரிவு காலியிடங்கள் – கலந்தாய்வு அறிவிப்பு

September 04, 2021 0
உடுமலை அரசு கலைக்கல்லூரியில் 2021- 2022ம் கல்வியாண்டில் காலியாக உள்ள இளநிலை பாடப்பிரிவுகளுக்கு செப்டம்பர் 6 ஆம் தேதி மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடைபெற உள்ளது.

கலந்தாய்வு:

தமிழகத்தில் 2021 – 2022ம் கல்வியாண்டில் கடந்த ஜூலை 26ம் தேதி முதல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு கல்லூரிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகிறது. கல்லூரி முதலாமாண்டு மாணவர்களுக்கு பாடப்பிரிவுகளுக்கு ஏற்ப மாணவர் சேர்க்கை கலந்தாய்வு ஆன்லைன் வாயிலாக நடைபெற்று வருகிறது. மற்ற கல்லூரிகளை தொடர்ந்து உடுமலை அரசு கலைக்கல்லூரியில் இளநிலை பாடப்பிரிவு மாணவர்களுக்கான சேர்க்கை நடத்தப்பட்டது. இக்கலைக்கல்லூரியில் 14 இளநிலை பட்டப்படிப்புகளும், 10 முதுநிலை பட்டப்படிப்புகளும் உள்ளது. இங்கு நடப்பு கல்வியாண்டில் கலை மற்றும் வணிகவியல் பாடப்பிரிவுகளில் 448 மாணவர்களும், அறிவியல் பாடப்பிரிவுகளில் 239 மாணவர்களும் என 687 பேர் கல்லூரியில் சேர்ந்துள்ளனர். இதில் தமிழ் இலக்கிய பாடப்பிரிவில் கலந்தாய்வு நடைபெற்று. தமிழில் 30 மாணவர்களுக்கும், ஆங்கில இலக்கியப் பாடப்பிரிவில் 18 மாணவர்களும் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு கல்லுாரியில் சேர நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது இந்நிலையில் உடுமலை அரசு கலைக்கல்லூரியில் காலியாக உள்ள இளநிலை பாடப்பிரிவுகளுக்கான கலந்தாய்வு செப்டம்பர் 6ம் தேதி மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடைபெற உள்ளது. இரண்டாம் கட்ட கலந்தாய்வு குறித்த விவரம், தரவரிசைப்படி விண்ணப்பித்திருக்கும் மாணவர்களுக்கு எஸ்.எம்.எஸ் வாயிலாக தெரிவிக்கப்படும். அவர்கள் மட்டுமே இந்த கலந்தாய்வில் கலந்து கொள்ள வேண்டும் என்று கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார்.
Read More

Post Top Ad

Your Ad Spot