KalviseithiDaily: TNTET

KalviseithiDaily

kalviseithidaily.blogspot.com No:1 Education Website in Tamil கல்வி செய்திகள்: Get latest news on Exam Results, tamil nadu school education department news, TN University Results, Exam Schedule Latest News Educational News from Tamilnadu Government, Tamilnadu Educaitonal Minsters Latest Updates, 10th, 11th, 12th, TNTET, TRB, TNPSC, STUDY MATERIALS, ONLINE TESTS, LATEST kalviseithi, Padasalai, tnkalvi, tnpse news, TET updates, TRB news, kalvi news, Padsalai study materials

Subscribe Us

Sigma is

  • Seo Ready
  • Responsive
  • Fast Loading
  • Amazing!

Hot

Post Top Ad

Your Ad Spot
Showing posts with label TNTET. Show all posts
Showing posts with label TNTET. Show all posts

Wednesday, December 28, 2022

15,149 காலிப் பணியிடங்கள்: ஆசிரியா் தோ்வு வாரியத்தின் ஆண்டு அட்டவணை வெளியீடு

December 28, 2022 0
15,149 காலிப் பணியிடங்கள்: ஆசிரியா் தோ்வு வாரியத்தின் ஆண்டு அட்டவணை வெளியீடு

வரும் 2023-ஆம் ஆண்டில் நடத்தப்படும் போட்டித் தோ்வுகளின் விவரம், அவற்றுக்கான அறிவிக்கை வெளியாகும் மாதம் போன்ற விவரங்களுடன் கூடிய ஆண்டு தோ்வுக்கால அட்டவணையை ஆசிரியா் தோ்வு வாரியம் வெளியிட்டுள்ளது.

ஆசிரியா் தோ்வு வாரியம் 2023-ஆம் ஆண்டுக்கான தோ்வுக்கால அட்டவணையை இணையதளத்தில் (www.trb.tn.nic.in) புதன்கிழமை வெளியிட்டுள்ளது. அதில் மொத்தம் 9 தோ்வுகளுக்கான அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன. இதன்மூலம் 4 ஆயிரம் உதவி பேராசிரியா் பணியிடங்கள் உள்பட 15,149 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

அரசு கலை அறிவியல் கல்லூரி உதவி பேராசிரியா் தோ்வுக்கான அறிவிப்பு ஜனவரியில் வெளியிடப்பட்டு ஏப்ரலில் போட்டித் தோ்வு நடத்தப்பட உள்ளது. வட்டாரக் கல்வி அலுவலா் பதவியில் 23 காலியிடங்களை நிரப்ப பிப்ரவரியில் அறிவிப்பு வெளியாகும். அதற்கான போட்டித் தோ்வு மே மாதம் நடைபெறும்.
இடைநிலை ஆசிரியா் பதவியில் 6,553 காலியிடங்களுக்கு மாா்ச்-இல் அறிவிப்பு வெளியிடப்பட்டு, மே-இல் தோ்வு நடத்தப்பட உள்ளது. அதேபோல், பட்டதாரி ஆசிரியா் பதவியில் 3,587 காலியிடங்களை நிரப்புவதற்காக ஏப்ரலில் அறிவிப்பு வெளியாகும். தோ்வு ஜுனில் நடைபெறும்.

டெட் தோ்வுகள் எப்போது?: அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளா் தோ்வு ஆகஸ்ட் மாதமும், அரசு பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியா் தோ்வு செப்டம்பரிலும், அரசு சட்டக் கல்லூரி உதவி பேராசிரியா் தோ்வு அக்டோபரிலும், முதுகலை பட்டதாரி ஆசிரியா் தோ்வு நவம்பரிலும் நடைபெற உள்ளன.

ஆசிரியா் தகுதித்தோ்வுக்கு (தாள்-1 மற்றும் தாள்-2) டிசம்பரில் அறிவிப்பு வெளியிடப்பட்டு, 2024-ஆம் ஆண்டு மாா்ச்-இல் தோ்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More

Saturday, May 14, 2022

TET - தகுதித்தேர்வு தேர்ச்சி இல்லாத ஆசிரியர்கள் பதவி உயர்விற்கு எதிராக வழக்கு

May 14, 2022 1
தகுதித்தேர்வு தேர்ச்சி இல்லாத ஆசிரியர்கள் பதவி உயர்விற்கு எதிராக வழக்கு

தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களை பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு வழங்க தடை கோரிய வழக்கில், எந்த ஒரு பதவி உயர்வும் இவ்வழக்கின் இறுதித் தீர்ப்பிற்கு கட்டுப்பட்டது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இடைக்கால உத்தரவிட்டது. ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி பெற்றோர் நலச் சங்கம் தலைவர் ஷீலா பிரேம்குமாரி தாக்கல் செய்த மனு:

இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்கப்படுவோருக்கு குறைந்தபட்ச தகுதியை தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் நிர்ணயித்து 2010 ல் அறிவிப்பு வெளிட்டது.

அதன்படி ஆசிரியர் தகுதித் தேர்வில் (டி.இ.டி.,) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழக அரசு தகுதித் தேர்வை நடத்தும் ஏஜன்சியாக ஆசிரியர் தேர்வு வாரியத்தை (டி.ஆர்.பி.,) நியமித்தது. இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு தேர்ச்சி கட்டாயம் என்பதை அந்த அரசாணை தெளிவுபடுத்துகிறது.

தகுதித் தேர்வு தேர்ச்சி இன்றி, தனியார் உதவி பெறும் பள்ளிகளில் செய்யப்படும் எந்தவொரு நியமனங்களுக்கும் அரசு அனுமதி வழங்குவதில்லை.

பட்டதாரி ஆசிரியரை நேரடியாக அல்லது இடமாற்றம் அல்லது பதவி உயர்வு மூலம் நியமிக்கலாம். பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு தொடர்பான பிரச்னை தற்போது உள்ளது. துவக்கப் பள்ளி தலைமையாசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்களை பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு அளிக்க தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பட்டதாரி ஆசிரியர் பதவிக்கு பட்டப்படிப்பு, பி.எட்.,மற்றும் தகுதித் தேர்வு தேர்ச்சி தகுதிகளாகும். இது தமிழக அரசு 2020 ஜன.,20 ல் வெளியிட்ட துவக்க கல்வி சார்நிலை பணிக்கான சிறப்பு விதிகளில் உள்ளது. பட்டதாரி ஆசிரியருக்கான தகுதிகளைப் பொறுத்தவரை நேரடி நியமனத்திற்கு மட்டுமே தகுதித் தேர்வில் தேர்ச்சி தேவை என உள்ளது. இது பட்டதாரி ஆசிரியராக ஒருவர் பதவி உயர்வு பெறுவதற்கு தகுதித் தேர்வு தேர்ச்சியை தகுதியாக வைத்திருக்க வேண்டியதில்லை என்பதை மறைமுகமாக உணர்த்துகிறது.

இது இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்ட விதிகளுக்கு எதிரானது. அதை ரத்து செய்ய வேண்டும். தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களை பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு வழங்க தடை விதிக்க வேண்டும். இவ்வாறு ஷீலா பிரேம்குமாரி மனு செய்தார்.

நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், கிருஷ்ணன் ராமசாமி அமர்வு:

எந்த ஒரு பதவி உயர்வும் இவ்வழக்கின் இறுதித் தீர்ப்பிற்கு கட்டுப்பட்டது என இடைக்கால உத்தரவிட்டது. மத்திய கல்வித்துறை செயலாளர், மாநில பள்ளிக் கல்வித்துறை செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
Read More

Monday, April 25, 2022

TNTET - ஆசிரியர் தகுதி தேர்வு இன்று கடைசி நாள்

April 25, 2022 0
The opportunity to apply for the Teacher Qualification Examination ends today. To work as a teacher in government and private schools, one must pass the qualifying examination.

The Central Council of Teacher Education has instructed the states to conduct teacher qualification examinations twice each academic year. The Teacher Qualification Examination for the current academic year was announced on March 7. Application registration started on March 14; Completed on Apr. 13. Many complained that they could not apply due to internet 'server' problem.

Following this, the opportunity was given and the application registration started again on the 18th of this month; The opportunity ends today. In total, it seems that up to five lakh people may have applied.


TNTET - ஆசிரியர் தகுதி தேர்வு இன்று கடைசி நாள்


ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம், இன்றுடன் முடிகிறது.அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், ஆசிரியர்களாக பணியாற்ற, தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

ஒவ்வொரு கல்வி ஆண்டிலும், இரண்டு முறை ஆசிரியர் தகுதி தேர்வை நடத்த, மாநிலங்களுக்கு, மத்திய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் அறிவுறுத்திஉள்ளது.நடப்பு கல்வி ஆண்டுக்கான ஆசிரியர் தகுதி தேர்வு, மார்ச் 7ல் அறிவிக்கப்பட்டது. இதற்கான விண்ணப்ப பதிவு மார்ச் 14ல் துவங்கியது; ஏப்., 13ல் முடிந்தது. இணையதள, 'சர்வர்' பிரச்னையால், விண்ணப்பிக்க முடியவில்லை என பலர் புகார் தெரிவித்தனர்.

இதையடுத்து, அவகாசம் அளிக்கப்பட்டு, இம்மாதம் 18ம் தேதி மீண்டும் விண்ணப்ப பதிவு துவங்கியது; இன்றுடன் அவகாசம் முடிகிறது. மொத்தமாக ஐந்து லட்சம் பேர் வரை விண்ணப்பித்திருக்கலாம் என தெரிகிறது.
Read More

Monday, December 6, 2021

‘TET’ தேர்விலிருந்து விலக்கு கிடைக்குமா? : ஆசிரியர்கள் கோரிக்கை

December 06, 2021 0
பத்தாண்டுகளாக பரிதவித்து வரும் தங்களுக்கு ஆசிரியர் தகுதித்தேர்விலிருந்து விலக்களித்து காக்கவேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அரசு உதவி பெறும் சிறுபான்மையற்ற பள்ளிகளின் ஆசிரியர்கள் கடிதம் அனுப்பியுள்ளனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அரசு உதவி பெறும் சிறுபான்மையற்ற பள்ளிகளின் ஆசிரியர்கள் அனுப்பியுள்ள கடிதம் வருமாறு: அரசு உதவி பெறும் சிறுபான்மையற்ற பள்ளிகளில் முறையாக பணிநியமனம் பெற்ற சுமார் ஆயிரம் ஆசிரியர்கள் மட்டும் கடந்த பத்தாண்டுகளாக தகுதித் தேர்வு (டெட் தேர்வு) நிபந்தனையால் பாதிக்கப்பட்டுள்ளோம். எங்களைப் போலவே 2012ம் ஆண்டு வரை தகுதித் தேர்வு நிபந்தனையுடன் பணியேற்ற அரசுப் பள்ளி ஆசிரியர்கள், பள்ளிக்கல்வி இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி) உத்தரவால் காப்பாற்றப்பட்டனர். அரசு உதவி பெறும் சிறுபான்மைப் பள்ளி ஆசிரியர்களுக்கு தகுதித்தேர்வு நிபந்தனையை ரத்து செய்து, புத்தாக்கப் பயிற்சி மட்டும் அளிப்பதாக அறிவித்ததால் இவர்களும் காப்பாற்றப்பட்டனர். ஆனால், தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத சிறுபான்மையற்ற ஆசிரியர்களாகிய எங்களுக்கு ஒரு வார கால புத்தாக்கப் பயிற்சி மட்டும் அளித்து பாதுகாப்பதாக கடந்த ஆட்சியில் துறைசார்ந்த அமைச்சர் உறுதியளித்தார். அது நிறைவேற்றப்படவில்லை. மாறாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து எங்களது பணியை தற்காலிகமாக காப்பாற்றிக் கொண்டுள்ளோம். ஆசிரியர் தகுதித் தேர்வு ஒன்றையே காரணம் காட்டி, இதுநாள் வரை எங்களுக்குக் கிடைக்க வேண்டிய பதவி உயர்வு, வளரூதியம், ஊக்க ஊதியம், ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு, பணிப்பதிவேடு தொடக்கம், விடுப்பு அனுமதிப்பு, தகுதி காண் பருவம் நிறைவேற்றல், பணிவரன்முறை செய்தல் போன்ற வழக்கமான நடைமுறைகள் கூட அனுமதிக்கப்படவில்லை.

கடந்த ஆட்சியாளர்களால் புரிதல் இல்லாத, துறைசார்ந்த ஒரு சில அதிகாரிகளால் எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. வாழ்வா, சாவா என்ற வாழ்க்கைப் போராட்டத்துடன் நாட்களை நகர்த்தியபடி, ஆசிரியர் தகுதித்தேர்வு என்ற நிபந்தனையின் அடிப்படையில் பணிபுரியும் எங்களுக்கும் ஆசிரியர் தகுதித் தேர்விலிருந்து விலக்கு அளித்திட வேண்டும். முதலமைச்சர் மனது வைத்தால் தகுதித் தேர்வு எழுதுவதிலிருந்து ஒரே ஒரு தவிர்ப்பு ஆணை மூலம் எங்களை விடுவித்து விடலாம். அவ்வாறு விடுவிக்கப்பட்டால் ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பாக கடந்த ஆட்சியாளர்களால் தொடுக்கப்பட்ட அனைத்து வழக்குகளும் வாபசாகிவிடும். நல்லதொரு அறிவிப்பினை முதலமைச்சர் வெளியிட வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
Read More

Post Top Ad

Your Ad Spot