KalviseithiDaily: PTA

KalviseithiDaily

kalviseithidaily.blogspot.com No:1 Education Website in Tamil கல்வி செய்திகள்: Get latest news on Exam Results, tamil nadu school education department news, TN University Results, Exam Schedule Latest News Educational News from Tamilnadu Government, Tamilnadu Educaitonal Minsters Latest Updates, 10th, 11th, 12th, TNTET, TRB, TNPSC, STUDY MATERIALS, ONLINE TESTS, LATEST kalviseithi, Padasalai, tnkalvi, tnpse news, TET updates, TRB news, kalvi news, Padsalai study materials

Subscribe Us

Sigma is

  • Seo Ready
  • Responsive
  • Fast Loading
  • Amazing!

Hot

Post Top Ad

Your Ad Spot
Showing posts with label PTA. Show all posts
Showing posts with label PTA. Show all posts

Friday, December 16, 2022

பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்: விஜயகாந்த் வலியுறுத்தல்

December 16, 2022 0
பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்: விஜயகாந்த் வலியுறுத்தல்

பகுதி நேர ஆசிரியர்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், தமிழகத்தில் உள்ள அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உடற்கல்வி, ஓவியம் மற்றும் தொழிற்கல்வி பாடங்களான தையல், இசை, கணினி அறிவியல் தோட்டக்கலை, கட்டிடக்கலை, வாழ்வியல் திறன்கல்வி ஆகியவற்றை கற்றுத் தருவதற்காக அனைவருக்கும் கல்வி இயக்கம் திட்ட வேலையில் 16,549 பகுதிநேர ஆசிரியர்கள் கடந்த 2012ம் ஆண்டு நியமிக்கப்பட்டனர்.

இவர்களுக்கு மாதம் ரூ.5,000 தொகுப்பு ஊதியம் வழங்கப்படும் என அப்போதைய முதல்வர் ஜெயலலிதா தமிழக சட்டப்பேரவையில் அறிவித்தார். இவர்களில், கடந்த 10 ஆண்டுகளில் 4 ஆயிரம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டு, 12 ஆயிரம் பேர் பணிபுரிந்து வருகிறார்கள்.

பகுதிநேர ஆசிரியர்களுக்கு 2014ம் ஆண்டு ரூ.2 ஆயிரமும், 2017ம் ஆண்டு ரூ.700-ம், கடைசியாக 2021ம் ஆண்டு ரூ. 2300-ம் ஊதிய உயர்வு வழங்கப்பட்டது. இதன் மூலம் ரூ.10ஆயிரம் தொகுப்பூதியத்தோடு அவர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வதாக மு.க. ஸ்டாலின் வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால் திமுக ஆட்சிக்கு வந்து 19 மாதங்கள் கடந்து விட்ட நிலையில், பகுதி நேர ஆசிரியர்களை தற்போது வரை பணி நிரந்தரமும் செய்யவில்லை, சம்பளத்தையும் உயர்த்தவில்லை.

மேலும் பொங்கல் போனஸ், பண்டிகை முன்பணம் போன்றவை இதுவரை மறுக்கப்பட்டு வருகிறது. 12 ஆயிரம் குடும்பங்கள் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட, அவர்களை உடனடியாக பணிநிரந்தரம் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பகுதிநேர ஆசிரியர்களின் கோரிக்கைகள் நியாயமானவை என்பதால் அவற்றை நிறைவேற்ற வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
Read More

Wednesday, July 6, 2022

ஆசிரியர்களே முந்துங்கள்... இன்று மாலை வரைதான் அவகாசம்

July 06, 2022 0
ஆசிரியர்களே முந்துங்கள்... இன்று மாலை வரைதான் அவகாசம்

தமிழகத்தில் 13 ஆயிரம் தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு இன்று மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம்.

அரசுப் பள்ளிகளில் 13 ஆயிரத்து 331 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், அவற்றை தற்காலிக ஆசிரியர் நியமனம் மூலம் நிரப்ப முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

அதன்படி, TET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், இல்லம் தேடிக் கல்வி திட்டத்தில் பணியாற்றும் தன்னார்வலர்கள் மற்றும் தகுதி வாய்ந்தவர்கள், சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலகத்தில் கடந்த 4ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் அதற்கான அவகாசம் இன்று மாலை 5 மணியுடன் முடிவடைகிறது. சரிபார்க்கப்பட்ட விண்ணப்பங்களை இன்று இரவு 8 மணிக்குள் பள்ளிக்கல்வித் துறை ஆணையருக்கு அனுப்புமாறு மாவட்ட கல்வி அலுவலகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Read More

Monday, July 4, 2022

தற்காலிக ஆசிரியா் நியமனத்தில் சா்ச்சைக்கு இடமில்லை: அமைச்சா் விளக்கம்

July 04, 2022 0
தற்காலிக ஆசிரியா் நியமனத்தில் சா்ச்சைக்கு இடமில்லை: அமைச்சா் விளக்கம்

தற்காலிக ஆசிரியா்கள் நியமனம் எவ்வித சா்ச்சைக்கும் இடமில்லாத வகையில் நடைபெற்று வருவதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா்.

பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, அரசு தொடக்க, நடுநிலை, உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 2022-2023-ஆம் கல்வி ஆண்டில் ஜூன் 1-ஆம் தேதி நிலவரப்படி காலியாக உள்ள இடைநிலை, பட்டதாரி, முதுகலை ஆசிரியா் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியா் நியமனம் மேற்கொள்ளப்பட உள்ளது. இதில் விதிமுறைகளை மீறி நியமனம் செய்யப்படுவதாகவும், தகுதி இல்லாதவா்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படுவதாகவும் புகாா்கள் எழுந்தன. இந்த நிலையில் இது குறித்து அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சென்னையில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது: தற்காலிக ஆசிரியா் நியமனத்தில் எவ்வித சா்ச்சையும் கிடையாது. முதல்வரின் அறிவுரைப்படியே தற்காலிக ஆசிரியா் நியமனம் நடைபெற்று வருகிறது. நிரந்தர ஆசிரியா்களை நியமிப்பதற்கான பணிகளும் நடைபெற்று வருகின்றன.

எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளுக்கு விரைவில் ஆசிரியா்கள் நியமனம் செய்யப்படுவா். இது குறித்த வழிகாட்டுதல் நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும். அரசு மற்றும் தனியாா் பள்ளிகளில் ஜாதி, மத கூட்டங்களுக்கு அனுமதி கிடையாது என்றாா் அவா்.
Read More

Friday, July 1, 2022

தற்காலிக ஆசிரியர் பணிக்கு நாளை மறுநாள் முதல் ஜூலை 6 மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம்

July 01, 2022 1
தற்காலிக ஆசிரியர் பணிக்கு நாளை மறுநாள் முதல் ஜூலை 6 மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம்

13000 தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் தொடர்பாக திருந்திய வழிகாட்டுதல் செயல்முறைகள் வெளியீடு.

CLICK HERE TO DOWNLOAD
Read More

Thursday, June 30, 2022

தற்காலிக ஆசிரியர் நியமனம் - உயர் நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி உத்தரவு

June 30, 2022 0
தமிழக அரசுப் பள்ளிகளில் காலிப்பணியிடங்களை தற்காலிக ஆசிரியர்கள் மூலம் நிரப்புவது தொடர்பான அறிவிப்பிற்கு இடைக்கால தடை

*உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

*ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சங்கத்தின் தலைவர் ஷீலா தாக்கல் செய்த மனு

Read More

SMC மூலம் நிரப்பப்பட வேண்டிய முதுகலை / பட்டதாரி ஆசிரியர் பணியிட விவரங்கள் பள்ளி மற்றும் பாடங்கள் வாரியாக வெளியீடு - PDF - ராணிப்பேட்டை மாவட்டம்

Post Top Ad

Your Ad Spot