KalviseithiDaily: TRAINING

KalviseithiDaily

kalviseithidaily.blogspot.com No:1 Education Website in Tamil கல்வி செய்திகள்: Get latest news on Exam Results, tamil nadu school education department news, TN University Results, Exam Schedule Latest News Educational News from Tamilnadu Government, Tamilnadu Educaitonal Minsters Latest Updates, 10th, 11th, 12th, TNTET, TRB, TNPSC, STUDY MATERIALS, ONLINE TESTS, LATEST kalviseithi, Padasalai, tnkalvi, tnpse news, TET updates, TRB news, kalvi news, Padsalai study materials

Subscribe Us

Sigma is

  • Seo Ready
  • Responsive
  • Fast Loading
  • Amazing!

Hot

Post Top Ad

Your Ad Spot
Showing posts with label TRAINING. Show all posts
Showing posts with label TRAINING. Show all posts

Wednesday, February 1, 2023

வங்கி, காப்பீட்டுத் துறை பணிக்கு பயிற்சி - மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்

February 01, 2023 0


வங்கி, காப்பீட்டுத் துறை பணிக்கு பயிற்சி: SC,ST., மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்

வங்கி, காப்பீட்டுத் துறைகளில் பணிபுரிய தேவையான பயிற்சி பெற ஆதிதிராவிடா், பழங்குடியினா் இனத்தை சோ்ந்தவா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது குறித்து, வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டுவசதி, மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலம் வேலூா் மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடா், பழங்குடியினா் இனத்தைச் சோ்ந்த இளைஞா்களுக்கு வங்கி, காப்பீட்டுத் துறைகளில் கணக்கு நிா்வாகியாக பணிபுரிய தேவையான திறன் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்தப் பயிற்சியை முடித்தவா்கள் ஹெச்டிஎஃப்சி, ஐசிஐசிஐ உள்ளிட்ட தனியாா் வங்கிகளில் வேலை வாய்ப்புக்கு 100% வழிவகை செய்யப்படும். இந்தப் பணியில் ஆரம்பகால மாத ஊதியமாக ரூ. 25,000 முதல் ரூ. 30,000 வரை பெறலாம்.

பயிற்சி பெற 21 முதல் 33 வயதுக்குள் உள்ள ஆதிதிராவிட, பழங்குடியின இளைஞா்கள் விண்ணப்பிக்கலாம். பி.ஏ., பி.காம்., பிஎஸ்சி கணிதம் ஆகிய ஏதேனும் ஒரு இளநிலை பட்டப்படிப்பில் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். சென்னையில் 20 நாள்கள் பயிற்சி அளிக்கப்படும். விடுதி உள்பட பயிற்சிக்கான மொத்த செலவு ரூ. 20,000-த்தையும் தாட்கோ நிறுவனமே ஏற்கும். பயிற்சிக்குப் பிறகு, பயிற்சி அளிக்கும் நிறுவனத்தால் நடத்தப்படும் பயிற்சித் தோ்வுக்கு மாணவா்கள் அனுமதிக்கப்படுவா். இதில், தோ்ச்சி பெற்றவா்களுக்கு வங்கி நிதி சேவை காப்பீட்டு (பிஎஸ்எப்ஐ) அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட தரச் சான்றிதழ் வழங்கப்படும்.

பயிற்சி பெற தாட்கோ இணையதளமான இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
Read More

Sunday, September 4, 2022

12,000 ஆசிரியர்களுக்கு தலைமைப் பண்பு பயிற்சி

September 04, 2022 0
12,000 ஆசிரியர்களுக்கு தலைமைப் பண்பு பயிற்சி

சென்னை, செப்.4: தமிழகத்தில் அர சுப் பள்ளித் தலைமை ஆசிரியர் கள் 12,000 பேருக்கு தலைமைப் பண்பு குறித்த பயிற்சியளிக்க கல் வித் துறை திட்டமிட்டுள்ளது.

பள்ளிக் கல்வித் துறை மானிய கோரிக்கையின்போது, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பள்ளிக் கல்வி அலுவலர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளித்தல் குறித்து அறிவிப்பு வெளியிட்டிருந் தார்.

இதன்கீழ், பள்ளிக் கல்வித் துறையில் பணிபுரியும் இணை இயக்குநர்கள், முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறு வன விரிவுரையாளர்கள், மாவட் டக் கல்வி அலுவலர்கள், வட்டா ரக் கல்வி அலுவலர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் என சிறந்த கல்வியாளர்கள் மற்றும் வல்லுநர்கள் உதவியுடன் பணித் திறன் மேம்பாடு, தலைமைத்து வம், மேலாண்மை ஆகியவை குறித்து ஆண்டுதோறும் உறைவி டப் பயிற்சி அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதன் அடிப்படையில், நிகழ் கல்வியாண்டின் இறுதிக்குள் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நி லைப் பள்ளித் தலைமை ஆசிரியர் களுக்கு தலைமை பண்பு பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டது.

முதன்மை கருத்தாளர்களுக் கான பயிற்சி முடிவடைந்த நிலை யில், தலைமை ஆசிரியர்களுக்கு முதல்கட்டமாக தலைமை பண்பு பயிற்சி அளிக்க திட்டமிடப் பட்டுள்ளது. இதன்கீழ், செப். 7 முதல் 28-ஆம் தேதி வரை 12,000 பேருக்கு பயிற்சி வழங்கப்பட உள் ளதாக கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Read More

Sunday, April 24, 2022

இலவச மாதிரி போட்டித் தேர்வு கலெக்டர் தகவல்

April 24, 2022 0
டி.என்.பி.எஸ்.சி., போட்டி தேர்வுக்கான இலவச மாதிரி தேர்வு கடலுார் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நடத்தப்படும் என கலெக்டர் பாலசுப்ரமணியம் தெரிவித்தார்.

அவரது செய்திக்குறிப்பு:

மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டம் சார்பில், போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது.

தற்போது டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ, முதல் நிலைத் தேர்வு வரும் மே மாதம் 21ம் தேதி நடக்கிறது. போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்காக 5 இலவச மாதிரி தேர்வுகள் வரும் 25ம் தேதி முதல் ஒரு நாள் விட்டு ஒரு நாள் என, மே மாதம் 19ம் தேதி வரை வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நடக்கிறது. கலெக்டர் தகவல்

பயிற்சி மாலை 2:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை நடத்தப்படும். தேர்வுகளில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் தங்களது புகைப்படம், டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ முதல்நிலை தேர்விற்கு விண்ணப்பித்த விண்ணப்ப படிவ நகல் மற்றும் ஆதார் நகல் ஆகியவற்றுடன் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தை தொடர்பு கொண்டு முன் பதிவு செய்து கொள்ள வேண்டும். கூடுதல் விவரங்களை 04142-290039 என்ற தொலைபேசி எண்ணில் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Read More

Friday, April 22, 2022

TNPSC - குரூப்- 4 தேர்வுக்கு இலவச முன்பயிற்சி - கலெக்டர் அறிவிப்பு

April 22, 2022 0
குரூப்- 4 தேர்வுக்கு இலவச முன்பயிற்சி

குரூப்- 4 போட்டி தேர்வில் இலவச முன்பயிற்சி பெற விருப்பம் உள்ள, முன்னாள் படை வீரர்கள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கோவை கலெக்டர் சமீரன் கூறியுள்ளதாவது:

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக, கிராம நிர்வாக அலுவலர் மற்றும் குரூப்-4 காலி பணியிடங்களுக்கான பொது போட்டி தேர்வு நடக்கிறது. இதற்கு வரும், 28ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இத்தேர்வில், முன்னாள் படை வீரர்களுக்கு தமிழக அரசால் அளிக்கப்பட்டுள்ள இட ஒதுக்கீட்டை முழுமையாக பயன்படுத்தி கொள்ளலாம். இலவச முன்பயிற்சி பெற விருப்பம் உள்ள, முன்னாள் படை வீரர்கள் தங்களது விருப்ப விண்ணப்பத்தை, கோவை மாவட்ட முன்னாள் படை வீரர் நல அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
Read More

Monday, April 4, 2022

அண்ணா பல்கலை மாணவியருக்கு திறன் பயிற்சி

April 04, 2022 0
Anna University, the Federation of Indian Chambers of Commerce and Industry, has entered into an agreement with Anna University to provide vocational skills training to 1,500 students.

According to the new education policy, students studying in higher education institutions and industry in the country should be given the necessary training to develop their professional skills and become entrepreneurs. Similar training is already being imparted on behalf of Anna University in Tamil Nadu.

To this end, Anna University has entered into an agreement with FICCI, the Federation of Indian Chambers of Commerce and Industry.

Under the agreement, skills training will be provided to engineering college students in second and third tier cities with a view to 'Campus to Corporate'. This training will be given for five weeks. அண்ணா பல்கலையின், 1,500 மாணவியருக்கு தொழில் சார்ந்த திறன் பயிற்சி வழங்க, இந்திய தொழில் மற்றும் வணிக நிறுவனங்களின் கூட்டமைப்பும், அண்ணா பல்கலையும் ஒப்பந்தம் செய்துள்ளன.

புதிய கல்வி கொள்கையின்படி, நாட்டில் உள்ள உயர் கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களில் படிக்கும் மாணவ - மாணவியருக்கு, தொழில் சார்ந்த தனித் திறன்களை வளர்க்கவும், தொழில் முனைவோராக மாற்றவும், தேவையான பயிற்சி அளிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் அண்ணா பல்கலையின் சார்பில், ஏற்கனவே இது போன்ற பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.இந்த வகையில், அண்ணா பல்கலை மற்றும் அதன் உறுப்பு கல்லுாரிகள் என, 19 இன்ஜினியரிங் கல்லுாரிகளில் படிக்கும், 1,500 மாணவியருக்கு, தொழில் சார்ந்த தனித் திறன்களை வளர்க்கும் பயிற்சி வழங்கப்பட உள்ளது. இதற்காக, அண்ணா பல்கலையுடன், இந்திய தொழில் மற்றும் வணிக நிறுவனங்களின் கூட்டமைப்பான, எப்.ஐ.சி.சி.ஐ.,யுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.அண்ணா பல்கலை துணை வேந்தர் வேல்ராஜ் மற்றும் இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பின் பெண்கள் பிரிவு சென்னை தலைவர் பிரசன்ன வாசனாடுவும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

இந்த ஒப்பந்தப்படி, 'கேம்பஸ் முதல் கார்ப்பரேட் வரை' என்ற நோக்கில், இரண்டாம், மூன்றாம் நிலை நகரங்களில் உள்ள இன்ஜினியரிங் கல்லுாரி மாணவியருக்கு, திறன் பயிற்சி வழங்கப்பட உள்ளது. ஐந்து வாரங்களுக்கு இந்த பயிற்சி அளிக்கப்படும்.
Read More

Tuesday, January 4, 2022

Sunday, January 2, 2022

Online Internship Program (in English) - NATURAL LANGUAGE PROCESSING IN ARTIFICIAL INTELLIGENCE USING PYTHON

January 02, 2022 0

NATURAL LANGUAGE PROCESSING IN ARTIFICIAL INTELLIGENCE USING PYTHON (Hands-on With LIVE PROJECT) (Along with Basic Training)

15 Days from 17/1/2022 to4/2/2022

(6:00 PM TO 8:00 PM)

FEES: Rs. 2950/ (with GST)

COVERAGE: Machine Learning, Deep Learning & NLP: An Overview Python Programming Basic/ Python Decison Making, Loops & Functions/Python Modules for Data Science/ Introduction to Machine Learning / Logistic Regression & Naive Bayes / Decision Tree & Random Forest / Text Processing / Web Scrapping / Understanding Regax/Lemmatization & Steamming/Word Count & Frequency Distribution/POS & Name Entity Recognition/Spacy/ Sentiment Analysis Model END TO END / Word embeddings & co occurrence vectors / Word2vec & Doc2vec / Recurrent Neural Networks/Long Short Term Memory (LSTM)/GRU Implementation Building a story writer using character level RNN-LSTM / Attention Based Model/Topic Modelling/Question Answering (like chat bot) / NLP Project End to End with Deployment.

For Registration, Send a message to Whatsapp 9894943505/9786317778



Read More

Saturday, December 11, 2021

அரசு மையங்களில் ஐஏஎஸ், ஐபிஎஸ் பயிற்சி - இன்று முதல் 28ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

December 11, 2021 0
2022ம் ஆண்டுக்கான தமிழக அரசின் ஐஏஎஸ்,ஐபிஎஸ் பயிற்சிமையங்களில்சேர இன்று முதல் வரும் 28ம் தேதி வரை விண்ணப் பிக்கலாம் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அறி விப்பு:

சென்னையில் உள்ள தமிழக அரசின் அகில இந்திய குடிமைப் பணி தேர்வுப் பயிற்சி மையம், கோயம்புத்தூர், மதுரை யில் உள்ள அண்ணா நூற்றாண்டு குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சி மையங்களில், தமிழ்நாட் டைச்சேர்ந்த இளம்பட்ட தாரிகள் மற்றும் முதுநிலை பட்டதாரிகள் ஆகியோ ருக்கு. 5.6.2022 அன்று நடைபெற இருக்கும் மத் தியதேர்வாணையம் நடத் தும் குடிமைப்பணி தேர் விற்கு கட்டணமில்லா பயிற்சி அளிக்க உள்ளது.

சென்னையில் உள்ள மையத்தில் 225 முழுநேர தேர்வர்களையும், 100 பகு திநேர தேர்வர்களையும் முதல்நிலை பயிற்சிக்காக அனுமதிக்கிறது. அதே போன்று அண்ணா நூற் றாண்டு குடிமைப் பணித் தேர்வு பயிற்சி நிலையங் கள், கோயம்புத்தூர், மதுரை ஆகிய பயிற்சி மையங்களில் தலா 100 முழுநேர தேர்வர்களை முதல்நிலை தேர்வுக்காக அனுமதிக்கின்றன. 2022ல் குடிமைப் பணிகளுக்கான முதல் நிலைத் தேர்வு எழு துவதற்கு, பயிற்சி பெற விரும்புபவர்கள் www. civilservicecoaching.com என்ற இணையதளம் வாயிலாக இன்று முதல் வரும் 28ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இப் பயிற்சிமையங்களில் ஏற்க னவே முதல்நிலைத் தேர் வுக்கு முழுநேரப்பயிற்சி பெற்றவர்கள் விண்ணப் பிக்கவேண்டாம்மேலும், பயிற்சியில் சேர விரும்புப வர்கள் தங்கள் கல்வி மற் றும்வயது ஆகிய தகுதிகள் குறித்த விவரங்களை மத் தியதேர்வாணையக்குழு வின் இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள் ளலாம். தகுதியுடைய நபர்கள் 23.1.2022 அன்று நடைபெறும் நுழைவுத் தேர்வுக்கு அனுமதிக்கப் படுவர். முதல் நிலைத் தேர்வுக்கான நுழைவு தேர்வு முடிவுகள் விரை வில் வெளியிடப்பட்டு, தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் தாங்கள் தேர்ந்தெடுத்த பயிற்சி மையங்களில் இன வாரி யாகஉள்ள இடங்களுக்கு ஏற்ப நேரடியாக பயிற் சிக்கு அழைக்கப்படுவர். பிப்ரவரி முதல் வாரத் தில் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படும். இவ் வாறு கூறப்பட்டுள்ளது.
Read More

Monday, November 29, 2021

அரசு பணியாளர்களுக்கு பவானிசாகர் அடிப்படைப் பயிற்சி! - தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு விவரம்

November 29, 2021 0
அரசு பணியாளர்களுக்கு பவானிசாகர் அடிப்படைப் பயிற்சி!: தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தொடங்கி வைத்தார்..!!

புதிதாக பணியில் சேரும் பணியாளர்களுக்கு பவானிசாகர் அடிப்படைப் பயிற்சியை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தொடங்கி வைத்தார். புதிதாக அரசுப் பணியில் சேரும் அரசு பணியாளர்கள் மற்றும்படி பதவி உயர்வு பெறும் பணியாளர்களுக்கு பணி தொடர்பான பயிற்சியை அந்தந்த மாவட்டங்களிலேயே வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருந்தது. முன்னதாக பல்வேறு மாவட்டங்களில் இருந்து பவானிசாகர் பயிற்சி மையத்திற்குச் சென்று அரசு ஊழியர்கள் பயிற்சி பெற வேண்டிய சூழல் இருந்தது. இனி பயிற்சி பெற வேண்டிய அரசு பணியாளர்களுக்கு அந்தந்த மாவட்டங்களிலேயே பயிற்சி வழங்க தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.

அனைத்து மாவட்டங்களுக்கும் பவானிசாகர் பயிற்சி மையத்தில் இருந்து அதிகாரிகள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அடிப்படை பயிற்சிகளை வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில், புதிதாக பணியில் சேரும் அரசு பணியாளர்களுக்கும், அடிப்படைப் பதவியிலிருந்து பதவி உயர்வு பெறும் பணியாளர்களுக்கும் பவானிசாகர் அரசு அலுவலர் பயிற்சி நிலையத்தின் மூலம் 41 பணி நாட்கள் கொண்ட அடிப்படைப் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இதன் முதற்கட்டமாக சென்னை அண்ணாநகர், ஸ்ரீகிருஷ்ணசாமி மகளிர் கல்லூரியில், தமிழ்நாடு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பயிற்சியைத் தொடங்கிவைத்தார்.

இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு விவரம் வருமாறு:

தமிழக முதலமைச்சர் அவர்கள் புதிதாக பணியில் சேரும் பணியாளர்களுக்கு பவானிசாகர் அடிப்படைப் பயிற்சியினை அந்தந்த மாவட்டங்களிலேயே வழங்கப்படும் என சட்டப் பேரவை விதி 110ன் கீழ் அறிவிக்கை வெளியிட்டதின் பேரில் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. புதிதாக பணியில் சேரும் அரசு பணியாளர்களுக்கும், அடிப்படைப் பதவியிலிருந்து பதவி உயர்வு பெறும் பணியாளர்களுக்கும் பவானிசாகர் அரசு அலுவலர் பயிற்சி நிலையத்தின் மூலம் 41 பணி நாட்கள் கொண்ட அடிப்படைப் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. கொரோனா நோய் தொற்று காரணமாக 17.03.2020 முதல் இந்த அடிப்படைப் பயிற்சி தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது. இதன் காரணமாக மாநிலம் முழுவதும் பயிற்சி பெறுபவர்களின் எண்ணிக்கை ஒன்பதாயிரத்திற்கு மேல் நிலுவை ஏற்பட்டது. இந்த விவரம் அறிந்த மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் அனைத்து பணியாளர்களின் நலனை கருத்தில் கொண்டு, அனைவருக்கும் அந்தந்த மாவட்டத்திலேயே பயிற்சி வழங்கி தகுதிகாண்பருவம் பூர்த்தி செய்யப்பட வேண்டுமெனவும், இதன் மூலம் அவர்கள் பதவி உயர்விற்கு வழிவகுக்கும் என்ற நோக்கில் உடனடியாக அனைத்து மாவட்டங்களிலும் 37 பணி நாட்கள் கொண்ட சுருக்கப்பட்ட அடிப்படை பயிற்சியினை வழங்கலாம் என சட்டப்பேரவை விதி 110ன் கீழ் அறிவிக்கை வெளியிட்டார்கள்.

அண்ணா நிர்வாகப் பணியாளர்கள் கல்லூரி, பவானிசாகர் அரசு அலுவலர் பயிற்சி நிலையம் ஆகியவை பயிற்சி துறைத் தலைவர் அவர்களின் கட்டுப்பாட்டில் இயங்கிவரும் பயிற்சி நிலையங்களாகும். இந்த பயிற்சி நிலையம் மூலம் இதுவரை 1,29,813 பயிற்சியாளர்களுக்கு பல்வேறு அணிகளாக பயிற்சி வழங்கப்பட்டு பதவி உயர்வு வழங்க ஆவண செய்யப்பட்டுள்ளது. இதில் துணை ஆட்சியர், கணக்கு அலுவலர், உதவி இயக்குநர் (ஊரக வளர்ச்சி) ஆகிய பல்வேறு துறை அலுவலர்களைக் கொண்டு அலுவலக நடைமுறை, பணி நடைமுறை, பொதுமக்கள் தொடர்பு, கணக்கு, ஊரக வளர்ச்சி, கணினி, போன்ற பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டுவருகின்றன. மாண்புமிகு தமிழக முதல்வரின் இந்த அறிவிக்கைக்கேற்ப உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு அதே பாடத்திட்டங்களைக் கொண்டு மாவட்ட அளவிளான பயிற்சியை நடத்துவதற்கு உரிய அரசாணை பெறப்பட்டு, அந்த அந்த மாவட்டங்களில் ஓய்வு பெற்ற மாவட்ட வருவாய் அலுவலர்களை ஒருங்கிணைப்பாளர்களைக் கொண்டு பல்வேறு துறை உயர் அலுவலர்களையும் இணைத்து அவர்களை சிறப்பு விரிவுரையாளர்களாக நியமனம் செய்யப்பட்டு ஒரு மாவட்டத்தில் அணிக்கு குறைந்த பட்சம் 250 பயிற்சியாளர்களை தேர்வு செய்யப்பட்டு பயிற்சி நடத்தப்பட உள்ளது. இந்தப் புதிய பயிற்சித் திட்டத்தின் மூலம் வருகைபுரிந்து பெண் பணியாளர்கள் விடுதியில் தங்காமல் வீட்டிலிருந்து தினமும் வருகைபுரிந்து வகுப்புகளில் கலந்து கொள்வதால் அவர்களுக்கு இல்லப்பணிகளையும் தொய்வின்றி கவனிக்க முடியும் என்பதால் இத்திட்டம் மகளிரிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதன் முதற்கட்டமாக இந்த செயலாக்கத்திற்கு சென்னை மாவட்டம் தெரிவு செய்யப்பட்டு மொத்தம் 250 அரசு பணி பயிற்சியாளர்களுக்கு 29.11.2021 அன்று காலை 10.30 மணிக்கு சென்னை, அண்ணாநகர், ஸ்ரீகிருஷ்ணசாமி மகளிர் கல்லூரியில், மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் அவர்களால் பயிற்சி தொடங்கிவைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், தலைமைச் செயலாளர்/பயிற்சி துறைத் தலைவர், முனைவர் வெ.இறையன்பு இஆப., மனித வள மேலாண்மைத் துறை அரசு செயலாளர் திருமதி மைதிலி க. ராஜேந்திரன் இ.ஆப., சென்னை மாவட்ட ஆட்சி தலைவர் முனைவர். ஜெ. விஜயாராணி, இஆப., கல்லூரி முதல்வர் முனைவர். அனிதா ராஜேந்திரன், ஆகியோர் கலந்து கொண்டனர்.
Read More

Friday, September 24, 2021

TNPSC தோ்வுகளுக்கு நேரடி இலவச பயிற்சி - புதன்கிழமை (செப்டம்பா் 29) தொடக்கம்

September 24, 2021 1
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தோ்வுக்கான நேரடி இலவச பயிற்சி வகுப்பு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் புதன்கிழமை (செப்டம்பா் 29) தொடங்குகிறது.


இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி வெளியிட்ட செய்திக் குறிப்பு: கரோனா பொது முடக்க விதிகளால் டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4, குரூப் 2 பணி இடங்களுக்கான தோ்வுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில் நெறி வழிகாட்டு மையம் சாா்பில் இணையவழி பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வந்தன.


பொதுமுடக்கத் தளா்வால் செப்டம்பா் 29ஆம் தேதி முதல் ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தொழில் நெறி வழிகாட்டு மையத்தில் நேரடி பயிற்சி வகுப்பு துவங்குகிறது.


இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவா்கள் பயிற்சி வகுப்பில் பங்கேற்கலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை 0424-2275860 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More

தெற்கு ரயில்வே - பிரதான் மந்திரி கௌசல் விகாஸ் யோஜனா (PMKVY) - இளைஞர்களுக்கு குறுகிய கால இலவச பயிற்சி பெற அழைப்பு

September 24, 2021 0
தெற்கு ரயில்வே


பிரதான் மந்திரி கௌசல் விகாஸ் யோஜனா (PMKVY) ரயில் கௌசல் விகாஸ் யோஜனா (RKVY)


இளைஞர்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்திசெய்வதற்கும், தொழிசாலைத் தேவைகளுக்கேற்ப அவர்களது மனோநிலையை மாற்றியமைப்பதற்கும், பிரதான் மந்திரி கௌசல் விகாஸ் யோஜனா (PMKVY) திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இளைஞர்களுக்கு, ரயில்வே | பயிற்சி நிறுவனங்களில் ஆரம்ப நிலை திறன் பயிற்சிகளை அளித்து அவர்களை மேலும் ஆற்றல் மிக்கவர்களாக மாற்றுவதற்கு "ரயில் கௌசல் விகாஸ் யோஜனா (RKVY) திட்டம் கொண்டுவரப் பட்டுள்ளது.


அதன்படி, ஃபிட்டர், வெல்டெர், எலெக்ட்ரிஷியன் & மெஷினிஸ்ட் போன்ற டிரேடுகளில் குறுகிய கால பயிற்சிகளை இலவசமாக தெற்கு ரயில்வே நடத்துகிறது. இந்தப் பயிற்சி, ரயில்வேயில் பயிற்சிநிலை | பணியாளருக்கான வாய்ப்பினை வழங்குவதாக ஆகாது.


மேலும் விவரங்கள் / தகவல்கள் அறிய, விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்ய பார்க்கவும்: "www.sr.indianrailways.gov.in| --> News &Updates-->Personnel Branch Information".


துணை தலைமை பணியாளர் அலுவலர் கேரியேஜ் & வேகன் ஒர்க்ஸ், தெற்கு ரயில்வே, பெரம்பூர், சென்னை-600023.


Follow us on : twitter.com/@GMSRailway
Read More

Wednesday, September 22, 2021

அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் தொழில்பயிற்சி பெற அழைப்பு - விண்ணப்பிக்க வேண்டிய கடைசித் தேதி: அக். 16.

September 22, 2021 0
"தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக தொழில் பழகுநா் பயிற்சி வாரியம் சாா்பில், ஓராண்டு தொழில் பழகுநா் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் கவிதா ராமு அழைப்பு விடுத்துள்ளாா்.


இதுகுறித்து அவா் மேலும் கூறியது: தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (கும்பகோணம்) மற்றும் தொழில் பழகுநா் பயிற்சி வாரியம் (தென் மண்டலம்) ஆகியவற்றின் சாா்பில் ஓராண்டு தொழில் பழகுநா் பயிற்சி வழங்கப்பட உள்ளது.


இதில் பங்கேற்க கடந்த 2019, 2020, 2021 ஆண்டுகளில் பொறியியல் பட்டம் மற்றும் பட்டயம் பெற்ற தமிழ்நாட்டைச் சோ்ந்தவா்கள் விண்ணப்பிக்கலாம்.


விண்ணப்பிக்க வேண்டிய கடைசித் தேதி: அக். 16.
Read More

Tuesday, September 21, 2021

தமிழ் வழியில் பயிலும் மாணவா்களுக்குஆங்கில பேச்சுத் திறன் பயிற்சி: பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் தகவல்

September 21, 2021 0
தமிழ் வழியில் பயிலும் மாணவா்களுக்கு ஆங்கில பேச்சுத் திறன் பயிற்சி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினாா்.


சென்னை மந்தைவெளியில் உள்ள தனியாா் பள்ளியில் அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மரக்கன்றுகளை செவ்வாய்க்கிழமை நடவு செய்தாா். இதையடுத்து அவா் செய்தியாளா்களிடம் கூறியது:


தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் மசோதா ஆளுநருக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதன் நிலையை தொடா்ந்து கவனித்து வருகிறோம். நிச்சயம் இறுதியில் வெற்றி அடைவோம். கடந்த அதிமுக ஆட்சியில் நீட் தோ்வுக்கு எதிராக தீா்மானம் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்டது. ஆனால் முறையாக அதைக் கவனிக்கவில்லை. ஓய்வு பெற்ற நீதிபதி ராஜன் தலைமையிலான குழு பரிந்துரை செய்துள்ளவற்றை முழுமையாக ஆய்வு செய்து நீட் தோ்வில் இருந்து விலக்கு பெற முதல்வா் உரிய நடவடிக்கை எடுப்பாா்.


தமிழகத்தில் பிளஸ் 2 பயிலும் மாணவா்களில் 35 சதவீதம் போ் அரசுப் பள்ளி மாணவா்கள். ஆனால் அவா்களில் 6 சதவீதம் போ் மட்டுமே பொறியியல் கல்லூரிகளில் நுழையும் சூழ்நிலை தற்போது உள்ளது. எனவே இதனை அதிகப்படுத்தவே அரசுப் பள்ளியில் பயிலும் மாணவா்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதேபோன்று அரசு உதவி பெறும் பள்ளி மாணவா்களுக்கும் உள் ஒதுக்கீடு வழங்கும் கோரிக்கை தொடா்ந்து இருந்து வருகிறது. இது குறித்து முதல்வா் முடிவெடுப்பாா்.


பள்ளிக் கல்வியில் தமிழ் வழியில் பயிலும் மாணவா்கள் உயா்கல்விக்குச் செல்லும்போது மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனா். காரணம் உயா்கல்வி பெரும்பாலும் ஆங்கில வழியில் இருக்கிறது. எனவே அந்த மாணவா்கள் பயனடையும் வகையில் பள்ளிப் பருவத்திலேயே அவா்களுக்கு ஆங்கில பேச்சுத் திறன் பயிற்சி (‘ஸ்போக்கன் இங்கிலீஷ்’) வகுப்புகளை நடத்த பள்ளிக் கல்வித்துறை உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது என்றாா் அவா்.
Read More

Thursday, September 16, 2021

போக்குவரத்து கழகம் மூலம் மெக்கானிக்கல் என்ஜினியர்களுக்கு தொழில் பழகுனர் பயிற்சி - கலெக்டர் அறிக்கை

September 16, 2021 0
போக்குவரத்து கழகம் மூலம் அளிக்கப்பட இருக் கும் தொழில் பழகுனர் பயிற்சிக்கு சேர விண்ணப் பிக்கலாம் என்று கெலெக்டர் தெரிவித்துள்ளார்.


கலெக்டர் அறிக்கை


இது தொடர்பாக குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-


தமிழ்நாடு அரசு போக்கு வரத்துக் கழகம் நாகர்கோவில் மண்டலத்தில் தொழில் பழகுனர் பயிற் சிக்கு இணையதளம் வாயிலாக அக்.16-க்குள் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு போக்கு வரத்துக் கழகம் திருநெல்வேலி கோட்ட நிர்வாக இயக்குனர் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு


அரசுபோக்குவரத்துக் கழகம் நாகர்கோவில் மண்டலம் மற்றும் தென் மண்டல தொழில் பழகுனர் பயிற்சி வாரியம் இணைந்து இயந்திரவியல் (Mechanical), ஆட்டோமொபைல் பிரிவு களில் பொறியியல் பட்டம் அல்லது பட்டயம் பயின்ற மாணவர்களுக்கு தொழில் பழகுனர் பயிற்சியினை வழங்கி வருகிறது.


நடப்பாண்டில் தொழில் பழகுனர் பயிற்சிக்கு இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் வர வேற்கப்படுகின்றன. வேற்கப்படுகின்றன. 2019, 2020 மற்றும் மற்றும் 2021ம் ஆண்டுகளில் மெக்கானிக்கல்/ ஆட்டோமொபைல் பிரிவில் பட்டம் அல்லதுபட்டயம் பெற்ற தமிழக மாணவர்கள் விண்ணப்பிக்க தகுதி பெற்றவர்கள்.


இணைய தளத்தில் புதிதாக பதிவு செய்யும் மாணவர்கள் www.boat-srp.com என்ற இணைய தளத்தில் வருகிற 25-ந்தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும். தொழில் பழகுனர் பயிற்சிக்கு இதே இணையதளத்தில் அக்.16க்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேல்குறிப்பிடப்பட்டுள்ள இணைய தளத்தில் News & Events Column மூலம் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அந்த அறிக் கையில் அவர் கூறியுள் ளார்.
Read More

Wednesday, September 8, 2021

9 முதல் பிளஸ் 2 வரையான மாணவா்களுக்கு புத்தாக்கப் பயிற்சி: பள்ளிக் கல்வி ஆணையா் விளக்கம்

September 08, 2021 0
தமிழகத்தில் 9 முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகளில் பயிலும் மாணவா்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் அவா்களுக்கு புத்தாக்கப் பயிற்சிகளை எந்த அடிப்படையில் வழங்க வேண்டும் என்பது குறித்து பள்ளிக் கல்வி ஆணையா் நந்தகுமாா் விளக்கமளித்துள்ளாா்.

இது குறித்து அவா் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: கரோனா பெருந்தொற்று காரணமாக பள்ளிகள் நீண்ட காலம் மூடப்பட்டிருந்த காரணத்தால் மாணவா்களுக்கு ஏற்பட்டிருக்கும் கற்றல் இழப்பை சரி செய்யும் வகையில் பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலா் காகா்லா உஷா அறிவுறுத்தலின்படி புத்தாக்கப் பயிற்சிக் கட்டகங்கள் இரண்டாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்புகள் வரை முந்தைய வகுப்புக்கான அடிப்படை மற்றும் முக்கியப் பாடக் கருத்துகளை உள்ளடக்கி மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு மின்னணு முறையில் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பப்பட்டு, அவா்கள் மூலம் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டது. இந்தப் புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் அனைத்துப் பகுதி மாணவா்களின் நலனையும் கருத்தில் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. 9, 10-ஆம் வகுப்புகளுக்கான தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடங்களுக்கான புத்தாக்கப் பயிற்சிக் கட்டகத்தில் மாணவா்கள் தெரிந்திருக்க வேண்டிய மிக அடிப்படையான பாடக் கருத்துகள் (ச்ன்ய்க்ஹம்ங்ய்ற்ஹப் ஸ்ரீா்ய்ஸ்ரீங்ல்ற்ள்) முதலில் கொடுக்கப்பட்டிருக்கும். அடுத்து, முந்தைய வகுப்பு வரையிலான அடிப்படை மற்றும் முக்கிய கருத்துகள் (க்ஷஹள்ண்ஸ்ரீ ஹய்க் ஸ்ரீழ்ண்ற்ண்ஸ்ரீஹப் ஸ்ரீா்ய்ஸ்ரீங்ல்ற்ள்) கொடுக்கப்பட்டிருக்கும். அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களுக்கான புத்தாக்கப் பயிற்சிக் கட்டகங்களில் முந்தைய வகுப்பு வரையிலான அடிப்படை மற்றும் முக்கிய பாடக் கருத்துகள் மட்டும் கொடுக்கப்பட்டிருக்கும். மிக அடிப்படையான பாடக் கருத்துகளில் கற்றல் அடைவு போதிய அளவு மாணவா்கள் பெற்றிருப்பின் அடுத்ததாக உள்ள அடிப்படை மற்றும் முக்கியப் பாடக் கருத்துகளைக் கற்பிக்கலாம். ஒவ்வொரு பள்ளியின் தலைமை ஆசிரியரும், ஒவ்வொரு பாட ஆசிரியரும் எந்த அளவுக்கு முந்தைய வகுப்பில் உள்ள பாடங்கள் மற்றும் தற்போதைய வகுப்பில் உள்ள பாடங்கள் ஆகியவற்றைக் கற்பித்து உள்ளனா் என்பதையும், மாணவா்களின் கற்றல் நிலை ஒவ்வொரு வகுப்பிலும், ஒவ்வொரு பாடத்திலும் எந்தநிலையில் உள்ளது என்பதையும் ஆய்வு செய்து அதற்கேற்றவாறு புத்தாக்கப் பயிற்சிக் கட்டகத்தை உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ள பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது. ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்றபோது அதில் கலந்து கொள்ளாத, சிறப்பு கவனம் தேவைப்படும் மாணவா்களுக்கு அதற்கேற்றவாறு திட்டமிட்டு புத்தாக்கப் பயிற்சி கட்டகத்தில் உள்ள பாடக் கருத்துகளை 45 முதல் 50 நாள்களுக்கு கற்பிக்க பள்ளிகளுக்கு அறிவுறுத்த வேண்டும் என அதில் கூறியுள்ளாா்.
Read More

Sunday, September 5, 2021

1 லட்சம் ஆசிரியர்களுக்கு இன்று முதல் கணினி பயிற்சி: கல்வி துறை ஏற்பாடு

September 05, 2021 0
தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் 1 லட்சம் ஆசிரியர்களுக்கு, இன்று முதல் கணினி பயிற்சி நடத்த தொடக்க கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது. தமிழகத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் 12 ஆயிரம் உள்ளன. இந்த பள்ளிகளில் 1 லட்சம் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், கடந்த ஒன்றரை ஆண்டாக 1 முதல் 8ம் வகுப்புகளில் படிக்கும் மாணவ மாணவியர் வீடுகளில் உள்ளனர். விரைவில் இவர்களுக்கு பள்ளிகள் தொடங்க உள்ளது. இந்நிலையில், தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையும் நடந்து வருகிறது.

மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் விவரங்கள் கணினி மயமாக்கப்பட உள்ளது. எனவே, ஆசிரியர்களுக்கு கணினி அறிவு அவசியம் என்பதால், அதன் தொழில் நுட்பங்களை அறிந்து கொள்ள வேண்டும் என்றும் தொடக்க கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து, 1 லட்சம் ஆசிரியர்களுக்கு இன்று தொடங்கி 6 நாட்கள் கணினி பயிற்சி அளிக்க தொடக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. பயிற்சிக்காக ஒரு வட்டாரத்தில் ஒரு பயிற்சி மையம் அமைக்கப்பட்டுள்ளது. பயிற்சி பெற உள்ள ஆசிரியர்கள் தாங்களே முன்வந்து இணைய தளம் மூலம் தங்கள் பெயர்களை அந்தந்த மையங்களில் பதிவு செய்து கொள்ள வேண்டும். இதையடுத்து ஆசிரியர்கள் அனைவரும் போட்டி போட்டு தங்கள் பெயர்களை பதிவு செய்து வருகின்றனர். தவற விட்டால் வேறு மையங்களில்தான் பயிற்சி பெற முடியும் என்பது தான் இதற்கு காரணம்
Read More

Saturday, September 4, 2021

குரூப்-4 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு - 6-ந் தேதி தொடங்குகிறது

September 04, 2021 0
தஞ்சை மாவட்ட வேலைவாய்ப்பு அலு வலகத்தில் குரூப்-4 தேர் வுக்கான இலவச பயிற்சி வகுப்பு 6-ந் தேதி தொடங்குகிறது.
இலவச பயிற்சி வகுப்பு

தஞ்சை மாவட்ட கலெக் டர் தினேஷ் பொன்ராஜ் ஆலி வர்வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தஞ்சை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன் னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், மத்திய பணியாளர் தேர்வா ணையம் உள்ளிட்ட தேர்வா ணையங்கள் மற்றும் வங்கிக ளால் அறிவிக்கப்படும் போட்டி தேர்வில் பங்கேற்கதயாராகும் தஞ்சை மாவட் டத்தைசேர்ந்தஇளைஞர்கள் பயன்பெறும் வகையில் இல வச பயிற்சி வகுப்புகள் நடத் தப்பட்டு வருகின்றன.

கொரோனா பெருந் தொற்று பரவல் மற்றும் அதை தொடர்ந்து அறிவிக்கப்பட்ட ஊரடங்கினால் தன்னார்வ பயிலும் வட்ட மாணவர்கள் பயிற்சி பெற இணையவழி யில் பயிற்சி வகுப்புகள் நடத் தப்பட்டு வருகின்றன. இந்தநி லையில் தமிழகஅரசு கடந்த 1-ந்தேதி முதல் பயிற்சி வகுப்பு நேரடியாக இயங்க அனுமதி வழங்கி உள்ளது.

எனவே பயிற்சி வகுப்பில் போட்டித்தேர்வுக்கு தயாரா கும் தஞ்சையை சேர்ந்த இளைஞர்கள் தங்கள் பெயர் மற்றும் கல்வி தகுதியை குறிப் பிட்டு studycircletnj@gmail.com என்ற மின்னஞ்சல் முகவ ரிக்கோ 8110919990 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கோ தகவல் அனுப்ப வேண்டும்.
Read More

Post Top Ad

Your Ad Spot