KalviseithiDaily: மாணவர்கள்

KalviseithiDaily

kalviseithidaily.blogspot.com No:1 Education Website in Tamil கல்வி செய்திகள்: Get latest news on Exam Results, tamil nadu school education department news, TN University Results, Exam Schedule Latest News Educational News from Tamilnadu Government, Tamilnadu Educaitonal Minsters Latest Updates, 10th, 11th, 12th, TNTET, TRB, TNPSC, STUDY MATERIALS, ONLINE TESTS, LATEST kalviseithi, Padasalai, tnkalvi, tnpse news, TET updates, TRB news, kalvi news, Padsalai study materials

Subscribe Us

Sigma is

  • Seo Ready
  • Responsive
  • Fast Loading
  • Amazing!

Hot

Post Top Ad

Your Ad Spot
Showing posts with label மாணவர்கள். Show all posts
Showing posts with label மாணவர்கள். Show all posts

Thursday, September 15, 2022

மாணவர்கள் குறைவாக இருந்தால் வேறு பள்ளிக்கு மாற்ற உத்தரவு

September 15, 2022 0
மாணவர்கள் குறைவாக இருந்தால் வேறு பள்ளிக்கு மாற்ற உத்தரவு

The school education department has ordered to transfer students to other nearby schools if there are fewer students in classes 11 and 12 in government schools.

In the order issued by the Department of School Education,

It has been informed that if there are less than 30 students of 11th and 12th standard in the schools in the corporation and municipal areas, and less than 15 students in the schools in the rural areas, they can be transferred to the nearest school.

Following this, district education department officials are engaged in surveying the schools with fewer students

அரசுப் பள்ளிகளில் 11, 12-ஆம் வகுப்புகளில் குறைவான மாணவர்கள் இருந்தால் அருகில் இருக்கும் வேறு பள்ளிக்கு மாற்ற பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை வெளியிட்ட உத்தரவில்,

மாநகராட்சி, நகராட்சி பகுதியில் இருக்கும் பள்ளிகளில் 11, 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் 30-க்கும் குறைவான, ஊரகப் பகுதியில் இருக்கும் பள்ளிகளில் 15-க்கும் குறைவான மாணவர்கள் இருந்தால், அருகில் உள்ள பள்ளிக்கு மாற்றலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, குறைவான மாணவர்கள் உள்ள பள்ளிகளை கணக்கெடுக்கும் பணியில் மாவட்ட கல்வித் துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்
Read More

Saturday, August 6, 2022

அனைத்து மாணவர்கள், ஆசிரியர்களின் இல்லங்களில் மூவர்ணக்கொடி - பள்ளிக்கல்வித்துறை

August 06, 2022 0
ஆகஸ்ட் 13 முதல் 15 வரையிலான நாட்களில் அனைத்து மாணவர்கள், ஆசிரியர்களின் இல்லங்களில் மூவர்ணக்கொடி ஏற்றப்பட வேண்டும்;

மாணவர்களுக்கு தேசியக்கொடி வழங்கி அவர்கள் இல்லங்களில் கொடியை ஏற்ற அறிவுறுத்த வேண்டும்.

-பள்ளிக்கல்வித்துறை
Read More

Friday, August 5, 2022

இன்ஜினியரிங் மாணவர் புதிய நடைமுறை; உயர்கல்வி துறை அறிவிப்பு

August 05, 2022 0
இன்ஜினியரிங் மாணவர் புதிய நடைமுறை; உயர்கல்வி துறை அறிவிப்பு

பொறியியல் படிப்பை தேர்வு செய்தும், அதில் மாணவர்கள் சேராமல் போகும் இடங்கள் கடைசி வரை காலி இடங்களாகவே இருந்து விடுகிறது. அதாவது, படிப்பை தேர்வு செய்து, அந்தந்த கல்லூரிகளில் சேராமல் போகும் மாணவர்களின் விவரங்களை அந்தந்த கல்லூரிகள் உடனடியாக தெரிவிக்கும் வகையில் ஏற்கனவே இணையதளம் உருவாக்கப்பட்டு இருந்தது.

அது நடைமுறைப்படுத்தப்படாமல் இருந்த நிலையில், தற்போது மீண்டும் நடைமுறைப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கிறது. இதன் மூலம் படிப்பை தேர்வு செய்த 7 நாட்களுக்குள் அந்த இடத்தில் மாணவர்கள் சேரவில்லையென்றால், அந்த விவரத்தை அந்தந்த கல்லூரிகள் சுட்டிக்காட்டும் பட்சத்தில் 2ம் கட்ட கலந்தாய்வில் அந்த காலி இடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட இருக்கிறது.
Read More

Wednesday, July 27, 2022

பள்ளிக்கு வராத மாணவர்கள் வீடுகளில் கணக்கெடுக்க உத்தரவு

July 27, 2022 0
பள்ளிக்கு வராத மாணவர்கள் குறித்து, வீடு வீடாக கணக்கெடுப்பு நடத்துமாறு, ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழக பள்ளிக் கல்வி துறையின், ஒருங்கிணைந்த கல்வி திட்டம் சார்பில், பள்ளி செல்லாத குழந்தைகள் கணக்கெடுக்கப்பட்டு, அவர்களை பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.நடப்பு கல்வி ஆண்டில், பள்ளிகளில் சேர்க்கப்பட்ட மாணவர்களில், பள்ளிக்கு வராதவர்கள் குறித்து கணக்கெடுக்குமாறு, ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

வட்டார வள அலுவலர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், தங்கள் எல்லைக்குட்பட்ட பகுதிகளில், பள்ளிக்கு வராத மாணவர்கள் குறித்து கணக்கெடுக்க வேண்டும்.

அவர்களை தொடர்ந்து பள்ளிக்கு வர தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.பருவ காலத்துக்கு ஏற்ப இடம் மாறும் நாடோடி குடும்பத்தினரின் குழந்தைகளுக்கு முக்கியத்துவம் அளித்து, அவர்களை பள்ளிக்கு வர ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என, வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது.
Read More

Monday, July 25, 2022

கால்நடை மருத்துவ படிப்பு; மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

July 25, 2022 0
கால்நடை பயிற்சி மருத்துவர்களுக்கான ஊக்கத்தொகையை உயர்த்தி வழங்கக் கோரி, மருத்துவ மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை, வேப்பேரி கால்நடை மருத்துவமனை வளாகத்தில், 200க்கும் மேற்பட்ட மாணவர்கள், நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, எம்.பி.பி.எஸ்., மருத்துவ மாணவர்களுக்கு இணையாக, ஊக்கத்தொகை வழங்கக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன், மருத்துவமனை நிர்வாகிகள் பேச்சு நடத்தினர். அதில், சுமுக தீர்வு ஏற்பட்டதை தொடர்ந்து, மாணவர்கள் கலைந்து சென்றனர். இதுகுறித்து, போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கூறியதாவது: எம்.பி.பி.எஸ்., மருத்துவ பயிற்சி டாக்டர்களுக்கு, மாதம் 25 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. இவர்கள், பெரும்பாலும் படிக்கும் கல்லுாரி அருகில் உள்ள மருத்துவமனைகளில் தான் பணியாற்றுகின்றனர்.ஆனால், நாங்கள் பண்ணை, மருத்துவமனை உள்ளிட்ட வெவ்வேறு இடங்களுக்கு செல்ல வேண்டிஉள்ளது. இதனால், அவர்களை விட எங்களுக்கு கூடுதல் செலவாகிறது.

இதையும் படிக்க | TNPSC Group 4 Question Paper - 2022

தற்போது, எங்களுக்கு, 10 ஆயிரத்து 500 ரூபாய் வழங்கப்படுகிறது.அதை, 25 ஆயிரமாக உயர்த்தி வழங்கக்கோரி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோம். கால்நடை துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை சந்திக்க ஏற்பாடு செய்துள்ளனர். அதனால், போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளோம். அமைச்சருடனான பேச்சுக்கு பின், அடுத்தகட்ட முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Read More

Saturday, July 23, 2022

ஆர்வமுள்ள படிப்பைத் தேர்ந்தெடுங்கள்: மாணவர்களுக்கு மோடி அறிவுரை

July 23, 2022 0
ஆர்வமுள்ள படிப்பைத் தேர்ந்தெடுங்கள்: மாணவர்களுக்கு மோடி அறிவுரை

மாணவர்களுக்கு மோடி அறிவுரை

புது தில்லி: நாடு முழுவதும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் படித்து தேர்வெழுதிய 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், மாணவர்கள் தங்களது ஆழ்மனது விரும்பும் பாடத்திட்டத்தை எடுத்துப் படிக்குமாறு மாணவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவுரை வழங்கியுள்ளார்.

இதையும் படிக்க | அரசின் கட்டுப்பாட்டிலிருந்து பள்ளிகள் கைநழுவுகின்றதோ? - கமல் ஹாசன் கேள்வி

பிரதமர் நரேந்திர மோடி பதிவிட்ட தொடர்ச்சியான சுட்டுரைப் பதிவில், மனிதகுலம் மிகப்பெரிய சவாலை எதிர்கொண்டிருக்கும் நேரத்தில், மாணவர்கள் இந்த பொதுத் தேர்வுக்குத் தயாராகி, நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்ற சாதனை படைத்துள்ளீர்கள். சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற எனது அனைத்து இளைய நண்பர்களுக்கும் வாழ்த்துகள். உங்களுக்கு மிகச் சிறந்த நல்வாய்ப்புகள் காத்திருக்கின்றன. நீங்கள் உங்கள் ஆழ் மனது விரும்பும் படிப்பை தேர்ந்தெடுத்துப் படித்து உங்களுக்கான எதிர்காலத்தை சிறப்பாக உருவாக்கிக் கொள்ளுங்கள் என்று அறிவுரை வழங்கியுள்ளார்.

இதையும் படிக்க | தலைக்கு மேல் ஆபத்து: பரிதாப நிலையில் அரசுப்பள்ளி கட்டடங்கள்

அதுபோல, சிலருக்கு இந்த தேர்வு முடிவு மன மகிழ்ச்சியை அளித்திருக்காது. அவர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். ஒரே ஒரு தேர்வு ஒருவரை யார் என்று சொல்லிவிடாது. எதிர்காலத்தில் பல வெற்றிகளை நீங்கள் அடையலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
Read More

Friday, July 15, 2022

மாணவர்களை பேருந்தில் இருந்து இறக்கிவிடும் நடத்துநர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை - போக்குவரத்துத்துறை எச்சரிக்கை

July 15, 2022 0
மாணவர்களை பேருந்தில் இருந்து இறக்கிவிடும் நடத்துநர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.: போக்குவரத்துத்துறை எச்சரிக்கை

பள்ளி, கல்லூரி மாணவர்களை பேருந்தில் பயணம் செய்ய அனுமதிக்காமல் இறக்கிவிடும் நடத்துநர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

மாணவர்கள் சீருடை அல்லது கட்டணமில்லா பேருந்து பயண அட்டை வைத்திருந்தால், இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Read More

Wednesday, July 6, 2022

மாணவர்கள் வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்த நகராட்சி பள்ளி தீவிரம்

July 06, 2022 0
மாணவர்கள் வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்த சத்தியமங்கலம் நகராட்சி பள்ளி தீவிரம்

சத்தியமங்கலம்: அண்மைகாலமாக மாணவர்கள் கைப்பேசி பயன்படுத்தும் பழக்கம் அதிகரித்து வருவதால் அவர்களை மீண்டும் வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்தும் வகையில் சத்தியமங்கலம் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் மாணவர்களை ஊக்கப்படுத்தி வருகின்றனர்.

வாசிப்பின் அவசியத்தை உணர்த்தும் வகையில் சத்தியமங்கலத்தில் நடைபெறும் புத்தகக் கண்காட்சியில் மாணவ, மாணவியரின் பங்களிப்பு அவசியம் இருக்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
தினந்தோறும் தமிழ் இலக்கியம், நாளிதழ், கட்டுரைகள் படிக்க வேண்டும் என வலியுறுத்தி இன்று விதைகர் வாசகர் வட்டம் சார்பில் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் வாசிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

பள்ளி மாணவ, மாணவியருக்கு இலக்கியம், கட்டுரை, விளையாட்டு, அரசியல் புத்தகங்கள் வழங்கி வாசிப்பின் அவசியத்தை உணர்த்தினர்.

வாசிப்பின் பழகத்தால் உலகறிவு, பொதுஅறிவு மற்றும் தமிழ் கலாச்சாரத்தை பெற முடியும் என விளக்கம் அளித்தனர். வாசிப்பு பழக்கத்தை அனைத்து ஆரம்ப பள்ளிகளில் ஏற்படுத்தப்படும் விதைகள் வாசகர் வட்டத்தினர் தெரிவித்தனர்.
Read More

Post Top Ad

Your Ad Spot