கால்நடை மருத்துவ படிப்பு; மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

கால்நடை பயிற்சி மருத்துவர்களுக்கான ஊக்கத்தொகையை உயர்த்தி வழங்கக் கோரி, மருத்துவ மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை, வேப்பேரி கால்நடை மருத்துவமனை வளாகத்தில், 200க்கும் மேற்பட்ட மாணவர்கள், நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, எம்.பி.பி.எஸ்., மருத்துவ மாணவர்களுக்கு இணையாக, ஊக்கத்தொகை வழங்கக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன், மருத்துவமனை நிர்வாகிகள் பேச்சு நடத்தினர். அதில், சுமுக தீர்வு ஏற்பட்டதை தொடர்ந்து, மாணவர்கள் கலைந்து சென்றனர். இதுகுறித்து, போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கூறியதாவது: எம்.பி.பி.எஸ்., மருத்துவ பயிற்சி டாக்டர்களுக்கு, மாதம் 25 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. இவர்கள், பெரும்பாலும் படிக்கும் கல்லுாரி அருகில் உள்ள மருத்துவமனைகளில் தான் பணியாற்றுகின்றனர்.ஆனால், நாங்கள் பண்ணை, மருத்துவமனை உள்ளிட்ட வெவ்வேறு இடங்களுக்கு செல்ல வேண்டிஉள்ளது. இதனால், அவர்களை விட எங்களுக்கு கூடுதல் செலவாகிறது.

இதையும் படிக்க | TNPSC Group 4 Question Paper - 2022

தற்போது, எங்களுக்கு, 10 ஆயிரத்து 500 ரூபாய் வழங்கப்படுகிறது.அதை, 25 ஆயிரமாக உயர்த்தி வழங்கக்கோரி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோம். கால்நடை துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை சந்திக்க ஏற்பாடு செய்துள்ளனர். அதனால், போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளோம். அமைச்சருடனான பேச்சுக்கு பின், அடுத்தகட்ட முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Post a Comment (0)
Previous Post Next Post