KalviseithiDaily: CPS

KalviseithiDaily

kalviseithidaily.blogspot.com No:1 Education Website in Tamil கல்வி செய்திகள்: Get latest news on Exam Results, tamil nadu school education department news, TN University Results, Exam Schedule Latest News Educational News from Tamilnadu Government, Tamilnadu Educaitonal Minsters Latest Updates, 10th, 11th, 12th, TNTET, TRB, TNPSC, STUDY MATERIALS, ONLINE TESTS, LATEST kalviseithi, Padasalai, tnkalvi, tnpse news, TET updates, TRB news, kalvi news, Padsalai study materials

Subscribe Us

Sigma is

  • Seo Ready
  • Responsive
  • Fast Loading
  • Amazing!

Hot

Post Top Ad

Your Ad Spot
Showing posts with label CPS. Show all posts
Showing posts with label CPS. Show all posts

Sunday, December 11, 2022

முதல் அமைச்சரவைக் கூட்டத்திலேயே பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவோம்

December 11, 2022 0
முதல் அமைச்சரவைக் கூட்டத்திலேயே பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவோம்

முதல் அமைச்சரவைக் கூட்டத்திலேயே பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவோம் என்று ஹிமாசல பிரதேச முதல்வராக பதவியேற்ற சுக்விந்தா் சிங் சுக்கு தெரிவித்துள்ளார்.

அண்மையில் நடைபெற்ற ஹிமாசல பிரதேச சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. மொத்தம் 68 தொகுதிகளுக்கு நடைபெற்ற தோ்தலில், அக்கட்சி 40 தொகுதிகளில் வென்றது. இதைத் தொடா்ந்து, ஹிமாசல பிரதேச முதல்வராக சுக்விந்தா் சிங் சுக்குவும், துணை முதல்வராக முகேஷ் அக்னிஹோத்ரியும் இன்று பதவியேற்றுக்கொண்டனர். சிம்லாவில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆா்லேகர் பதவிப்பிரமாணம் செய்துவைத்தார்.

இந்த நிலையில் முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவோம் என்று ஹிமாசல பிரதேச முதல்வராக பதவியேற்ற சுக்விந்தா் சிங் சுக்கு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது, நாங்கள் 10 உத்தரவாதங்களை வழங்கியுள்ளோம், அவற்றை நாங்கள் செயல்படுத்துவோம். நாங்கள் வெளிப்படையான மற்றும் நேர்மையான ஆட்சியை வழங்குவோம். இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

ஹிமாசல் முதல்வராகப் பதவியேற்றுள்ள சுக்விந்தா் சிங் சுக்கு, பேருந்து ஓட்டுநரின் மகன் ஆவாா். முன்னதாக, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், ஹிமாசல பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் கட்சி வெற்றி பெறுவதற்கு பழைய ஓய்வூதியத் திட்டமே முக்கிய காரணம் என்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
Read More

Tuesday, June 14, 2022

2021-2022ஆம் ஆண்டிற்கான CPS ACCOUNT STATEMENT வெளியீடு.

June 14, 2022 0


The CPS Account Slips for the year 2021-22 has been hosted in the CPS portal except for the local body employees. பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் - 2021-2022ஆம் ஆண்டிற்கான கணக்கீட்டுத்தாள் வலைதளத்தில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. தரவிறக்கம் செய்து கொள்ளலாம்...

2021-2022ஆம் ஆண்டிற்கான CPS ACCOUNT STATEMENT தரவிறக்கம் செய்யும் வழிமுறை... வலைதள முகவரி:

http://cps.tn.gov.in/public/index.php
Read More

Thursday, May 12, 2022

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தாவிட்டால் போராடுவதை தவிர வழியில்லை - ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு அறிவிப்பு

May 12, 2022 0
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல் இருப்பதாக, சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கக் கட்டிடத்தில் நேற்று நடைபெற்றது. தொடர்ந்து, ஜாக்டோ -ஜியோ அமைப்பின் மாநில ஒருங்கினைப்பாளர் செல்வம் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடந்த ஆட்சியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திப் போராட்டங்கள் நடத்தப்பட்டன. அவற்றில் தற்போதைய முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று, "திமுக ஆட்சிப் பொறுப்புக்கு வந்ததும், அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்" என்று உறுதியளித்தார்.

அதேபோல, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தப்படும் எனவும் முதல்வர் அறிவித்திருந்தார், ஆனால், பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த முடியாது என்கிறார் நிதியமைச்சர்.

திமுக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டிருப்பதால், பழைய ஓய்வூதியத் திட்டக் கோரிக்கையை அரசு ஏற்க வேண்டும். அதில் ஏதேனும் சிக்கல்கள் இருந்தால், அதற்கான தீர்வுகள் தர நாங்கள் தயாராக உள்ளோம்.

எங்கள் கோரிக்கையை நிறைவற்றவில்லை என்றால், போராட்டம் நடத்துவதைத் தவிர வேறு வழியில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
Read More

Friday, April 29, 2022

தமிழகத்தில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்தவும்: அன்புமணி வலியுறுத்தல்

April 29, 2022 0
தமிழகத்தில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்தவும்: அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: தமிழகத்தில் 2003ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் பணியில் சேர்ந்தவர்களுக்கும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை தமிழக அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "நடக்கவே நடக்காது என்று பொருளாதார சீர்திருத்தவாதிகளால் வர்ணிக்கப்பட்ட பழைய ஓய்வூதியத் திட்டத்தை ராஜஸ்தான் மாநில அரசு வெற்றிகரமாக செயல்படுத்தியிருக்கிறது. அனைத்து மாநிலங்களின் அரசு ஊழியர்களிடமும் பெரும் வரவேற்பை பெற்றுள்ள பழைய ஓய்வூதியத் திட்டம், தமிழகத்தில் எப்போது முதல் செயல்படுத்தப்படும் என்ற எதிர்பார்ப்பு தமிழக அரசு ஊழியர்களிடம் எழுந்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தின் 2022-23ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை கடந்த பிப்ரவரி 23ம் தேதி தாக்கல் செய்து பேசிய அம்மாநில முதல்வர் அஷோக் கெலாட், ராஜஸ்தான் மாநிலத்தில் ஏப்ரல் 1ம் தேதி முதல் பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவித்தார். அந்த அறிவிப்பை வரவேற்ற பாமக நிறுவனர் ராமதாஸ், தமிழகத்திலும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி பிப்ரவரி 24ம் தேதி அறிக்கை வெளியிட்டார். ஆனால், ராஜஸ்தான் அரசால் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த முடியாது; இது வெற்று அறிவிப்பாகவே இருக்கும் என்று பொருளாதார வல்லுனர்கள் கூறினார்கள். ஆனால், அனைத்து எதிர்மறை கருத்துகளையும் முறியடித்து ராஜஸ்தான் மாநிலத்தில் பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைக்கு வந்திருக்கிறது. இத்திட்டத்தின்படி ராஜஸ்தான் மாநில அரசு பணிகளில் 2003ம் ஆண்டுக்குப் பிறகு சேர்ந்த 3 லட்சத்திற்கும் கூடுதலான பணியாளர்கள் இனி ஓய்வு பெறும் போது, அவர்கள் கடைசியாக பெற்ற ஊதியத்தில் குறைந்தது 50% ஓய்வூதியமாக வழங்கப்படும். அதுமட்டுமின்றி, புதிய ஓய்வூதியத் திட்டத்திற்காக இனி அவர்களின் ஊதியத்தில் 10% பிடித்தம் செய்யப்படாது என்பதால், அவர்களுக்கு 10% ஊதியம் கூடுதலாக கிடைக்கும்; இதுவரை அவர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட 10% ஊதியத்தில் ஓய்வூதியர்களின் மருத்துவ நிதிக்கான சிறு தொகை தவிர மீதமுள்ள தொகை வட்டியுடன் திருப்பித் தரப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இவை அனைத்தும் கடந்த 18 ஆண்டுகளில் பணியில் சேர்ந்தவர்களுக்கு பொருளாதார பாதுகாப்பையும், மறுமலர்ச்சியையும் வழங்கும் என்பது உறுதி. இவை அனைத்தையும் கடந்து இந்தியாவில் இனி பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்தவே முடியாது என்ற மாயை தகர்க்கப் பட்டிருக்கிறது. இது தான் மிகவும் மகிழ்ச்சியளிக்கும் உண்மையாகும். இந்தியாவில் 2004ம் ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதியிலிருந்தும், தமிழகத்தில் 2003ம் ஆண்டு ஏப்ரல் ஒன்றாம் தேதியிலிருந்தும் புதிய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டம் அரசு ஊழியர்களின் ஓய்வுக்குப் பிந்தைய சமூக பொருளாதார பாதுகாப்பை அழித்து விடும் என்பதால் இத்திட்டத்தை கைவிட வேண்டும் என்று கடந்த 19 ஆண்டுகளாக பாமக. வலியுறுத்தி வருகிறது. இந்த காலத்தில் தமிழகத்தை ஆட்சி செய்த கட்சிகள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்தப் போவதாக வாக்குறுதி அளித்தாலும் கூட, அதை நிறைவேற்றவில்லை. பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்து பரிந்துரைக்க 2016ம் ஆண்டு பிப்ரவரியில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவால் அமைக்கப் பட்ட சாந்தா ஷீலா நாயர் குழு எந்த அறிக்கையும் தாக்கல் செய்யவில்லை. அதன் பின்னர் 2017ம் ஆண்டு ஆகஸ்ட் 3ம் தேதி மூத்த இஆப அதிகாரி டிஎஸ் ஸ்ரீதர் தலைமையில் அமைக்கப்பட்ட வல்லுனர் குழு அதன் அறிக்கையை 27-.11.2018 அன்று அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் அறிக்கையை அளித்தது.

ஆனால், அதன் மீது முந்தைய அரசில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. புதிய ஓய்வூதியத் திட்டம் என்பது அரசு ஊழியர்களைப் பொறுத்தவரை பெரும் சாபம். அத்திட்டம் நடைமுறைக்கு வந்து 18 ஆண்டுகள் நிறைவடைந்தும் கூட அதற்கான விதிகள் இன்னும் முழுமையாக வகுக்கப்படவில்லை.

2004ம் ஆண்டுக்குப் பிறகு பணியில் சேர்ந்து கடந்த ஆண்டுகளில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் கிடைக்காததால் அவர்கள் வாழ்வாதாரம் இல்லாமல் தவித்து வருகின்றனர். அரசுப் பணிக்கு சென்றால் இறுதி மூச்சு உள்ளவரை பொருளாதார சிக்கலின்றி வாழலாம் என்பது தான் மக்களின் நம்பிக்கை. ஆனால், புதிய ஓய்வூதியத் திட்டம் என்பது மக்களின் இந்த நம்பிக்கையையும் தகர்த்து விட்டது. தமிழகத்தில் இந்த நிலை இனியாவது மாற்றப்பட வேண்டும்.

தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பதில் எந்த அரசியல் கட்சிக்கும் மாற்றுக் கருத்து இருக்க வாய்ப்பில்லை. அதுமட்டுமின்றி, பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து பரிந்துரைக்க அமைக்கப்பட்ட டிஎஸ் ஸ்ரீதர் குழுவின் அறிக்கையும் தமிழக அரசிடம் தாக்கல் செய்யப்பட்டு விட்டது. அதனால், இந்த விஷயத்தில் புதிதாக ஆய்வு செய்ய எந்தத் தேவையுமில்லை. எனவே, தமிழகத்தில் 2003ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் பணியில் சேர்ந்தவர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை தமிழக அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும்." என்று அன்புமணி கூறியுள்ளார்.
Read More

Tuesday, December 21, 2021

பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தல்

December 21, 2021 0
Read More

Monday, December 13, 2021

ஓய்வூதிய வல்லுனர் குழு அறிக்கை என்னாச்சு; அரசு ஊழியர், ஆசிரியர்கள் குமுறல்

December 13, 2021 0
ஓய்வூதிய வல்லுனர் குழு அறிக்கை என்னாச்சு; அரசு ஊழியர், ஆசிரியர்கள் குமுறல்

ஓய்வூதிய வல்லுனர் குழு அறிக்கையை தமிழக அரசிடம் சமர்ப்பித்து மூன்று ஆண்டுகளாகியும், எந்த முடிவும் எடுக்காதது அரசு ஊழியர், ஆசிரியர்களிடையே மனக்குமுறலை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் 1.4.2003 முதல் அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் நடைமுறையில் உள்ளது. இத்திட்டத்தில் 6 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சேர்க்கப்பட்டனர். இவர்களிடம் பிடித்தம் செய்த தொகை ரூ.46 ஆயிரம் கோடி. இதுவரை பதவி விலகிய, மரணமடைந்த 23 ஆயிரம் பேருக்கு பண பலன்களை இதுவரை வழங்கவில்லை. இதுபோன்ற காரணங்களால் அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்கள் புதிய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றன. 2016ல் அன்றைய முதல்வர் ஜெயலலிதா பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த சாத்தியக் கூறுகளை ஆராய ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி சாந்தா ஷீலா நாயர் தலைமையில் வல்லுநர் குழு அமைத்தார். அதன்பின் ஸ்ரீதர் தலைமையில் செயல்பட்ட இக்குழு 27.11.2018 அன்று அரசிடம் அறிக்கை சமர்ப்பித்தது.

தகவல் அறியும் சட்டம்

இதுகுறித்து சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் பிரடெரிக் ஏங்கல்ஸ் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கல்வித் துறையிடம் சில கேள்விகளை கேட்டுள்ளார்.பங்களிப்பு ஓய்வூதிய நிதி, எந்த தேதிகளில் எவ்வளவு முதலீடு செய்யப்பட்டுளளது. மத்திய அரசு போல், தமிழக ஊழியர்களுக்கு பணிக்கொடை, குறைந்தபட்ச ஓய்வூதியம் மற்றும் அரசின் பங்களிப்பு 14 சதவீதமாக உயர்த்த தமிழக அரசு எடுத்த நடவடிக்கை என்ன, வல்லுனர் குழு அறிக்கை விவரம் என்ன என்று கேட்டு இருந்தார்.

இதற்கு கல்வித்துறை அளித்துள்ள பதிலில், முதல் கேள்விக்கு ஆயுள் காப்பீட்டு நிறுவன ஓய்வூதிய நிதியில் ரூ.28 ஆயிரத்து 725 கோடியும், ஏல அடிப்படையில் கருவூல பட்டி கணக்கில் ரூ.16 ஆயிரத்து 500 கோடியும் முதலீடு செய்யப்பட்டுள்ளது. அடுத்த கேள்விக்கு அரசு ஆணை வெளியிடப்படவில்லை எனவும், 3வது கேள்விக்கு வல்லுனர் குழு அறிக்கை பொதுமக்களின் பார்வைக்கு வெளியிடப்படவில்லை என்றும் பதில் அளித்துள்ளது. அரசுக்கு உபரி நிதி கிடைக்கும்

பிரெடரிக் ஏங்கல்ஸ் கூறியதாவது: வல்லுனர் குழு அறிக்கை வெளியிடாதது அரசு ஊழியர்கள், ஆசிரியர்களிடையே மனக்குமுறலை ஏற்படுத்தியுள்ளது. சட்டசபை தேர்தலின் போது தி.மு.க., தேர்தல் அறிக்கையில் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்வோம் என்றனர். உடனே அதை செயல்படுத்த வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்தினால் அரசுக்கு ரூ.23 ஆயிரம் கோடி உபரி நிதியாக கிடைக்கும், என்றார்.
Read More

Thursday, December 9, 2021

அரசு ஊழியர்களின் ஓய்வூதிய நிதி 10ஆண்டுகளுக்குப் பின் முதலீடு!

December 09, 2021 0
புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் பணியில் சேர்ந்த அரசு ஊழியர்களிடமிருந்து பிடித்தம் செய்யப்பட்ட ஓய்வூதிய நிதி சுமார் 10 ஆண்டுகளுக்கு பின் முதலீடு செய்யப்பட்டுள்ள விவரம் உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இனியாவது ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தமிழக அரசு ஊழியர்களுக்கு, புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் கடந்த 2003 -ஆம் முதல் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை அரசு ஊழியர்கள் தரப்பில் சுமார் 17 ஆண்டு காலமாக தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இதனிடையே, 2003-க்குப் பின் பணியில் சேர்ந்த அரசு ஊழியர்கள் சுமார் 5.88 லட்சம் பேர் புதிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் இதுவரை இணைக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் அரசு ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட தொகை 2021 மார்ச் மாதம் வரை ரூ.44,769 கோடி சேர்ந்துள்ளதாக தமிழக அரசின் 2020-21-ஆம் ஆண்டுக்கான கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2008 -ஆம் ஆண்டிலிருந்து முன் தேதியிட்டு (2003) பிடித்தம் செய்யப்பட்ட பங்களிப்பு ஓய்வூதியத் தொகை எங்கு முதலீடு செய்யப்பட்டுள்ளது என்ற விவரம் அரசு ஊழியர்களுக்குத் தெரியாமலே இருந்து வந்தது. இதனிடையே புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்வதற்கான வல்லுநர் குழுவின் அறிக்கை தமிழக அரசிடம் கடந்த 2018 நவ. 27-ஆம் தேதி வழங்கப்பட்டது. ஆனாலும், அறிக்கையின் விவரங்கள் தற்போது வரை வெளியிடப்படவில்லை. ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் (எல்.ஐ.சி.) முதலீடு: இந்நிலையில் ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட தொகை சுமார் 10 ஆண்டுகளுக்கு பின்பு ஆயுள் காப்பீட்டு நிறுவன ஓய்வூதிய நிதியிலும், ஏல அடிப்படையிலான கருவூலப்பட்டியிலும் (பழ்ங்ஹள்ன்ழ்ஹ் ஆண்ப்ப்) முதலீடு செய்யப்பட்டு வருவதாக வெளியாகியுள்ள தகவல் அரசு ஊழியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2019-ஆம் ஆண்டு மே 30-ஆம் தேதி முதல் முறையாக ரூ.2,500 கோடி, ஆயுள் காப்பீட்டு நிறுவன ஓய்வூதிய நிதியில் செலுத்தப்பட்டுள்ளது. அதன் பின்னர், தற்போதுவரை 8 தவணைகளில் ரூ.25,510 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. அதற்கு வட்டியாக ரூ.2,759.13 கோடியுடன் சேர்த்து, மொத்தம் ரூ.28,269.13 கோடி உள்ளது. மேலும், ஏல அடிப்படையிலான கருவூலப்பட்டியில் தற்போது வரை ரூ.16,500 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. மொத்தம் ரூ.44,769 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசின் நிதித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் சுமார் 18 ஆண்டுகளாக அரசு ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட தொகையின் நிலை குறித்த விவரம் வெளியுலகிற்கு தெரிய வந்துள்ளது. இனியாவது கிடைக்குமா ஓய்வூதியம்?: பிடித்தம் செய்யப்பட்ட பங்களிப்பு நிதியின் நிலவரம் குறித்து தெரியாததால், கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஓய்வு பெற்றும், பணியின் போது உயிரிழந்தும், விருப்ப ஓய்வு பெற்றும் ஓய்வூதியம் பெற முடியாமல் சுமார் 23ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது பங்களிப்பு நிதி முதலீடு செய்யப்பட்ட விவரம், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளதால், இனியாவது ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் வழங்குவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட வேண்டும் என புதிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பணி ஓய்வு பெற்றவர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இது தொடர்பாக சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் பி.பிரெடேரிக் ஏங்கல்ஸ் கூறியதாவது: இந்தியாவில் மேற்கு வங்கம் தவிர பிற மாநிலங்களில் புதிய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், தமிழகத்தில் மட்டுமே பழைய ஓய்வூதியத் திட்டம், புதிய ஓய்வூதியத் திட்டம் என எந்தவொரு முடிவும் இறுதி செய்யப்படாமல் உள்ளது. புதிய ஓய்வூதியத் திட்டம் ரத்து செய்யப்படும் நிலையில், தமிழக அரசுக்கு சுமார் ரூ.23,000 கோடி உபரி நிதியாக கிடைக்கும் என்பதையும் சுட்டி காட்டி வருகிறோம். திமுகவின் தேர்தல் வாக்குறுதிப்படி, புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதன் மூலம், புதிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் ஓய்வு பெற்ற சுமார் 23,000 பேர் உடனடியாகப் பயன்பெறவும், எதிர்காலத்தில் சுமார் 6 லட்சம் அரசு ஊழியர்கள் பயன் பெறவும் முடியும் என்றார்.
Read More

Post Top Ad

Your Ad Spot