KalviseithiDaily: DSE

KalviseithiDaily

kalviseithidaily.blogspot.com No:1 Education Website in Tamil கல்வி செய்திகள்: Get latest news on Exam Results, tamil nadu school education department news, TN University Results, Exam Schedule Latest News Educational News from Tamilnadu Government, Tamilnadu Educaitonal Minsters Latest Updates, 10th, 11th, 12th, TNTET, TRB, TNPSC, STUDY MATERIALS, ONLINE TESTS, LATEST kalviseithi, Padasalai, tnkalvi, tnpse news, TET updates, TRB news, kalvi news, Padsalai study materials

Subscribe Us

Sigma is

  • Seo Ready
  • Responsive
  • Fast Loading
  • Amazing!

Hot

Post Top Ad

Your Ad Spot
Showing posts with label DSE. Show all posts
Showing posts with label DSE. Show all posts

Sunday, December 18, 2022

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குநர் மாற்றம்: பள்ளிக்கல்வி துறை உத்தரவு

December 18, 2022 0
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குநர் மாற்றம்: பள்ளிக்கல்வி துறை உத்தரவு

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குநர் ஆர்.சுதன் அந்த பதவியில் இருந்து விடுவிக்கப்படுவதாக பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

சமக்ரா சிக்‌ஷா என்று அழைக்கப்படும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குநராக ஆர்.சுதன் இருந்து வந்தார். இவர் பள்ளிக்கல்வித் துறையில் பவ்லேறு அதிரடி மாற்றங்களை கொண்டு வந்தவர். பள்ளிக்கல்வி செயல்பாடுகள் அனைத்தையும் டிஜிட்டல் முறையில் கொண்டு வருவதற்கான முயற்சிகளில் தீவிரம் காட்டினார். அதிலும் குறிப்பாக, ஆசிரியர்களின் டிஜிட்டல் வருகைப் பதிவை கொண்டு வந்தார்.

இந்த நிலையில், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குநர் ஆர்.சுதன் அந்த பதவியில் இருந்து விடுவிக்கப்படுவதாக பள்ளிக்கல்வித் துறை நேற்று முன்தினம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக பள்ளிக்கல்வித் துறை முதன்மை செயலாளர் காகர்லா உஷா வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:

சமக்ரா சிக்‌ஷா மாநில திட்ட இயக்குநர் ஆர்.சுதன், 15.12.2022 முதல் அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார். அவர் வகித்து வந்த பொறுப்பை, இல்லம் தேடி கல்வி திட்டத்தை சிறப்பு பணியாக கண்காணித்து வரும் ஐ.ஏ.எஸ். அதிகாரி கே.இளம்பகவத், முழு கூடுதல் பொறுப்பாக, அந்த இடத்தில் மற்றொரு அதிகாரி நியமிக்கப்படும் வரை கவனிப்பார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More

Friday, July 8, 2022

மண்டல வாரியான ஆய்வுக் கூட்டம் - ஆய்வு அலுவலர்களை நியமனம் செய்து பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு

July 08, 2022 0
திருநெல்வேலி மண்டல வாரியான ஆய்வுக் கூட்டம் - ஆய்வு அலுவலர்களை நியமனம் செய்து பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு

CLICK HERE TO DOWNLOAD(Choose Telegram App)
Read More

Wednesday, July 6, 2022

பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்குபள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு!

July 06, 2022 0
2021-2022 ஆம் கல்வியாண்டில் 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பிற்கான மாணவர்களுக்கு அரசு பொது தேர்வு கடந்த மே 2022 மாதத்தில் நடைபெற்றது . மேற்கண்ட 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு 25.07.2022 முதல் 08.08.2022 முடிய துணைத்தேர்வுகள் நடைபெற உள்ளது.

இத்துணைத்தேர்வில் தேர்ச்சி அடையும் பொருட்டு சார்ந்த பாட ஆசிரியர்கள் தேர்வு முடியும் வரை தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு பயின்ற பள்ளியில் மாலை நேர சிறப்பு வகுப்புகள் நடத்தி தேர்வில் பங்கு பெறுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திடுமாறு அனைத்து தலைமையாசிரியர்களுக்கும் தெரிவிக்குமாறு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
Read More

Wednesday, September 8, 2021

9 முதல் பிளஸ் 2 வரையான மாணவா்களுக்கு புத்தாக்கப் பயிற்சி: பள்ளிக் கல்வி ஆணையா் விளக்கம்

September 08, 2021 0
தமிழகத்தில் 9 முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகளில் பயிலும் மாணவா்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் அவா்களுக்கு புத்தாக்கப் பயிற்சிகளை எந்த அடிப்படையில் வழங்க வேண்டும் என்பது குறித்து பள்ளிக் கல்வி ஆணையா் நந்தகுமாா் விளக்கமளித்துள்ளாா்.

இது குறித்து அவா் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: கரோனா பெருந்தொற்று காரணமாக பள்ளிகள் நீண்ட காலம் மூடப்பட்டிருந்த காரணத்தால் மாணவா்களுக்கு ஏற்பட்டிருக்கும் கற்றல் இழப்பை சரி செய்யும் வகையில் பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலா் காகா்லா உஷா அறிவுறுத்தலின்படி புத்தாக்கப் பயிற்சிக் கட்டகங்கள் இரண்டாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்புகள் வரை முந்தைய வகுப்புக்கான அடிப்படை மற்றும் முக்கியப் பாடக் கருத்துகளை உள்ளடக்கி மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு மின்னணு முறையில் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பப்பட்டு, அவா்கள் மூலம் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டது. இந்தப் புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் அனைத்துப் பகுதி மாணவா்களின் நலனையும் கருத்தில் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. 9, 10-ஆம் வகுப்புகளுக்கான தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடங்களுக்கான புத்தாக்கப் பயிற்சிக் கட்டகத்தில் மாணவா்கள் தெரிந்திருக்க வேண்டிய மிக அடிப்படையான பாடக் கருத்துகள் (ச்ன்ய்க்ஹம்ங்ய்ற்ஹப் ஸ்ரீா்ய்ஸ்ரீங்ல்ற்ள்) முதலில் கொடுக்கப்பட்டிருக்கும். அடுத்து, முந்தைய வகுப்பு வரையிலான அடிப்படை மற்றும் முக்கிய கருத்துகள் (க்ஷஹள்ண்ஸ்ரீ ஹய்க் ஸ்ரீழ்ண்ற்ண்ஸ்ரீஹப் ஸ்ரீா்ய்ஸ்ரீங்ல்ற்ள்) கொடுக்கப்பட்டிருக்கும். அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களுக்கான புத்தாக்கப் பயிற்சிக் கட்டகங்களில் முந்தைய வகுப்பு வரையிலான அடிப்படை மற்றும் முக்கிய பாடக் கருத்துகள் மட்டும் கொடுக்கப்பட்டிருக்கும். மிக அடிப்படையான பாடக் கருத்துகளில் கற்றல் அடைவு போதிய அளவு மாணவா்கள் பெற்றிருப்பின் அடுத்ததாக உள்ள அடிப்படை மற்றும் முக்கியப் பாடக் கருத்துகளைக் கற்பிக்கலாம். ஒவ்வொரு பள்ளியின் தலைமை ஆசிரியரும், ஒவ்வொரு பாட ஆசிரியரும் எந்த அளவுக்கு முந்தைய வகுப்பில் உள்ள பாடங்கள் மற்றும் தற்போதைய வகுப்பில் உள்ள பாடங்கள் ஆகியவற்றைக் கற்பித்து உள்ளனா் என்பதையும், மாணவா்களின் கற்றல் நிலை ஒவ்வொரு வகுப்பிலும், ஒவ்வொரு பாடத்திலும் எந்தநிலையில் உள்ளது என்பதையும் ஆய்வு செய்து அதற்கேற்றவாறு புத்தாக்கப் பயிற்சிக் கட்டகத்தை உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ள பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது. ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்றபோது அதில் கலந்து கொள்ளாத, சிறப்பு கவனம் தேவைப்படும் மாணவா்களுக்கு அதற்கேற்றவாறு திட்டமிட்டு புத்தாக்கப் பயிற்சி கட்டகத்தில் உள்ள பாடக் கருத்துகளை 45 முதல் 50 நாள்களுக்கு கற்பிக்க பள்ளிகளுக்கு அறிவுறுத்த வேண்டும் என அதில் கூறியுள்ளாா்.
Read More

Sunday, September 5, 2021

1 லட்சம் ஆசிரியர்களுக்கு இன்று முதல் கணினி பயிற்சி: கல்வி துறை ஏற்பாடு

September 05, 2021 0
தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் 1 லட்சம் ஆசிரியர்களுக்கு, இன்று முதல் கணினி பயிற்சி நடத்த தொடக்க கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது. தமிழகத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் 12 ஆயிரம் உள்ளன. இந்த பள்ளிகளில் 1 லட்சம் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், கடந்த ஒன்றரை ஆண்டாக 1 முதல் 8ம் வகுப்புகளில் படிக்கும் மாணவ மாணவியர் வீடுகளில் உள்ளனர். விரைவில் இவர்களுக்கு பள்ளிகள் தொடங்க உள்ளது. இந்நிலையில், தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையும் நடந்து வருகிறது.

மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் விவரங்கள் கணினி மயமாக்கப்பட உள்ளது. எனவே, ஆசிரியர்களுக்கு கணினி அறிவு அவசியம் என்பதால், அதன் தொழில் நுட்பங்களை அறிந்து கொள்ள வேண்டும் என்றும் தொடக்க கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து, 1 லட்சம் ஆசிரியர்களுக்கு இன்று தொடங்கி 6 நாட்கள் கணினி பயிற்சி அளிக்க தொடக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. பயிற்சிக்காக ஒரு வட்டாரத்தில் ஒரு பயிற்சி மையம் அமைக்கப்பட்டுள்ளது. பயிற்சி பெற உள்ள ஆசிரியர்கள் தாங்களே முன்வந்து இணைய தளம் மூலம் தங்கள் பெயர்களை அந்தந்த மையங்களில் பதிவு செய்து கொள்ள வேண்டும். இதையடுத்து ஆசிரியர்கள் அனைவரும் போட்டி போட்டு தங்கள் பெயர்களை பதிவு செய்து வருகின்றனர். தவற விட்டால் வேறு மையங்களில்தான் பயிற்சி பெற முடியும் என்பது தான் இதற்கு காரணம்
Read More

பள்ளிக் கல்வியில் 6,156 பணியிடங்களுக்கு தொடா் நீட்டிப்பு: அரசாணை வெளியீடு

September 05, 2021 0
பள்ளிக் கல்வியில் 6,156 பணியிடங்களுக்கு மூன்றாண்டுகளுக்கு தொடா் நீட்டிப்பு வழங்கி முதன்மைச் செயலா் காகா்லா உஷா உத்தரவிட்டுள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள அரசாணை: தமிழகத்தில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பள்ளிகளில் புதிதாக தோற்றுவிக்கப்பட்ட 6,156 ஆசிரியா் மற்றும் ஆசிரியரல்லாத பணியிடங்களுக்கான பணிக்காலம் கடந்த டிசம்பா் மாதத்துடன் முடிந்துவிட்டது. இந்த 6,156 பணியிடங்களுக்கு 3 ஆண்டுகள் வரை (2021-23) தொடா் நீட்டிப்பு வழங்கக் கோரி பள்ளிக்கல்வி ஆணையா் தமிழக அரசுக்கு கருத்துரு அனுப்பியிருந்தாா். அதை பரிசீலனை செய்து 6,156 ஆசிரியா் மற்றும் ஆசிரியரல்லாத பணியிடங்களுக்கு 2023 டிசம்பா் 31-ஆம் தேதி வரை 3 ஆண்டுகளுக்கு அல்லது தற்காலிக பணியிடங்களுக்கான தேவை குறித்து நிதித்துறையின் மறுஆய்வில் முடிவெடுக்கும் வரை தொடா் நீட்டிப்பு வழங்கி அரசு ஆணையிடுகிறது.
Read More

கரோனா அறிகுறிகள் இருந்தால் ஆசிரியா்கள், மாணவா்கள் பள்ளிகளுக்கு வரக் கூடாது - பள்ளிக்கல்வி இயக்குநரகம்

September 05, 2021 0
"கரோனா அறிகுறிகள் இருந்தால் ஆசிரியா்கள், மாணவா்கள் பள்ளிகளுக்கு வரக் கூடாது என கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. இது தொடா்பாக பள்ளிக்கல்வி இயக்குநரகம் சாா்பில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகம் மூலமாக தலைமையாசிரியா்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்கள்: அரசின் நிலையான வழிகாட்டுதல்களைப் பின்பற்றி பள்ளிகள் செயல்படவேண்டும். எந்தவொரு சூழலிலும் மாணவா்களின் பாதுகாப்பில் அலட்சியமாக செயல்படக் கூடாது. மேலும், காய்ச்சல், இருமல், உடல்வலி உட்பட ஏதேனும் கரோனா அறிகுறி இருந்தால் ஆசிரியா்கள், மாணவா்கள் பள்ளிக்கு வரக்கூடாது. அருகில் உள்ள மருத்துவ மையங்களில் பரிசோதனை செய்துகொள்ளும்படி, அவா்களை அறிவுறுத்த வேண்டும். தொற்று இல்லை என்பதை உறுதிசெய்து உடல்நலம் தேறியபின் பள்ளிக்கு வந்தால் போதுமானது."
Read More

இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள்: பள்ளிக்கல்வித் துறை கணக்கெடுப்பு; அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை

September 05, 2021 0
அரசுப்பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள் விவரங்களை பள்ளிக்கல்வித் துறை கணக்கெடுத்து வருகிறது. இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குநரகம் சார்பில், அனைத்துமாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: நடப்பு கல்வியாண்டு (2021-22) பணியாளர் நிர்ணயம் சார்பான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதையடுத்து கல்வி மேலாண்மை தகவல் முகமை (எமிஸ்) வலைதளத்தில் மாணவர்களின் சேர்க்கை மற்றும் பணிபுரியும் ஆசிரியர்களின் விவரம் ஆகியவை பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன அதைத்தொடர்ந்து தற்போது எமிஸ் வலைத்தளத்தில் அனுமதிக்கப்பட்ட பணியிடங்கள் தொடர்பான விவரங்களை பதிவேற்றம் செய்ய சிறப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எனவே, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் தங்கள் பகுதியில் உள்ள அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் அனுமதிக்கப்பட்ட இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை ஒப்பிட்டு எமிஸ் தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். அவ்வாறு பதிவேற்றும்போது கடந்த ஆண்டுகளில் சரண் செய்யப்பட்டிருந்த பணியிடங்களை கணக்கில் கொள்ளக்கூடாது. இந்த பணிகளை உரிய வழிமுறைகளின்படி துரிதமாக முடிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது
Read More

Post Top Ad

Your Ad Spot