KalviseithiDaily: Banking

KalviseithiDaily

kalviseithidaily.blogspot.com No:1 Education Website in Tamil கல்வி செய்திகள்: Get latest news on Exam Results, tamil nadu school education department news, TN University Results, Exam Schedule Latest News Educational News from Tamilnadu Government, Tamilnadu Educaitonal Minsters Latest Updates, 10th, 11th, 12th, TNTET, TRB, TNPSC, STUDY MATERIALS, ONLINE TESTS, LATEST kalviseithi, Padasalai, tnkalvi, tnpse news, TET updates, TRB news, kalvi news, Padsalai study materials

Subscribe Us

Sigma is

  • Seo Ready
  • Responsive
  • Fast Loading
  • Amazing!

Hot

Post Top Ad

Your Ad Spot
Showing posts with label Banking. Show all posts
Showing posts with label Banking. Show all posts

Wednesday, February 1, 2023

வங்கி, காப்பீட்டுத் துறை பணிக்கு பயிற்சி - மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்

February 01, 2023 0


வங்கி, காப்பீட்டுத் துறை பணிக்கு பயிற்சி: SC,ST., மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்

வங்கி, காப்பீட்டுத் துறைகளில் பணிபுரிய தேவையான பயிற்சி பெற ஆதிதிராவிடா், பழங்குடியினா் இனத்தை சோ்ந்தவா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது குறித்து, வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டுவசதி, மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலம் வேலூா் மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடா், பழங்குடியினா் இனத்தைச் சோ்ந்த இளைஞா்களுக்கு வங்கி, காப்பீட்டுத் துறைகளில் கணக்கு நிா்வாகியாக பணிபுரிய தேவையான திறன் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்தப் பயிற்சியை முடித்தவா்கள் ஹெச்டிஎஃப்சி, ஐசிஐசிஐ உள்ளிட்ட தனியாா் வங்கிகளில் வேலை வாய்ப்புக்கு 100% வழிவகை செய்யப்படும். இந்தப் பணியில் ஆரம்பகால மாத ஊதியமாக ரூ. 25,000 முதல் ரூ. 30,000 வரை பெறலாம்.

பயிற்சி பெற 21 முதல் 33 வயதுக்குள் உள்ள ஆதிதிராவிட, பழங்குடியின இளைஞா்கள் விண்ணப்பிக்கலாம். பி.ஏ., பி.காம்., பிஎஸ்சி கணிதம் ஆகிய ஏதேனும் ஒரு இளநிலை பட்டப்படிப்பில் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். சென்னையில் 20 நாள்கள் பயிற்சி அளிக்கப்படும். விடுதி உள்பட பயிற்சிக்கான மொத்த செலவு ரூ. 20,000-த்தையும் தாட்கோ நிறுவனமே ஏற்கும். பயிற்சிக்குப் பிறகு, பயிற்சி அளிக்கும் நிறுவனத்தால் நடத்தப்படும் பயிற்சித் தோ்வுக்கு மாணவா்கள் அனுமதிக்கப்படுவா். இதில், தோ்ச்சி பெற்றவா்களுக்கு வங்கி நிதி சேவை காப்பீட்டு (பிஎஸ்எப்ஐ) அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட தரச் சான்றிதழ் வழங்கப்படும்.

பயிற்சி பெற தாட்கோ இணையதளமான இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
Read More

Wednesday, October 19, 2022

கல்விக் கடனுக்கான உத்தரவாத வரம்பை உயர்த்த பொதுத்துறை வங்கிகள் முடிவு

October 19, 2022 0
கல்விக் கடனுக்கான உத்தரவாத வரம்பை உயர்த்த பொதுத்துறை வங்கிகள் திட்டம்!

கல்விக் கடனுக்கான உத்தரவாத வரம்பை ரூ.7.5 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக அதிகரிக்க பொதுத்துறை வங்கிகள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

-கல்விக் கடன்களுக்கான உத்திரவாத வரம்பை 33 சதவீதம் உயர்த்துவது குறித்து கல்வி அமைச்சகத்துடன் நிதி அமைச்சகத்தில் உள்ள நிதிச் சேவைகள் துறை ஆலோசனைகளைத் தொடங்கியுள்ளதாகவும், அத்தகைய நடவடிக்கையானது, தில்லி மற்றும் மேற்கு வங்கம் போன்ற சில மாநிலங்களில், மொத்த உத்தரவாதத்தை ரூ. 10 லட்சமாக அதிகரிக்க கூடுதல் காப்பீட்டை வழங்கும் மாநில அரசின் திட்டங்களின் வரம்பை ஒட்டுமொத்த காப்பீட்டிற்கு இணையாகக் கொண்டு வர திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

"நிதிச் சேவைகள் துறையானது, கல்விக் கடனுக்கான பிணையமில்லா வரம்பை அதிகரிப்பதற்கு ஆதரவாக உள்ளது, மேலும், கல்விக் கடனுக்கான கட்டணத்தை உயர்த்துவதற்கு கல்வி அமைச்சகத்துடன் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது, இது ரூ. 10 லட்சம் அல்லது அதற்கும் அதிகமாக இருக்கலாம்" என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறைந்த மதிப்புள்ள கல்விக் கடன்களை வழங்குவதில் பொதுத்துறை வங்கிககள் எச்சரிக்கையாக இருப்பதால், கடனைத் திருப்பிச் செலுத்தாமல் இருப்பதை காரணம் காட்டி, கல்விக் கடன்களுக்கு தடைகள் மற்றும் கடன்களை தர மறுப்பது போன்ற பல புகார்களை சுட்டிக்காட்டி, கல்விக் கடன்கள் வழங்குவதை விரைவுபடுத்துமாறு பொதுத்துறை வங்கிகளை அரசாங்கம் கேட்டுக் கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதையடுத்து குறைந்த மதிப்புள்ள கல்விக் கடன்கள் செயல்படாத சொத்துக்களாக மாறி வருவதால், வங்கிகள் கடன் வழங்குவதில் எந்தத் தயக்கத்தையும் சமாளிக்க உத்தரவாத வரம்பை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தற்போதைய நடைமுறைப்படி, பிணையமில்லாக் கடன் பெறுபவர்கள் தற்போது ரூ. 7.5 லட்சம் வரை கடனுக்கான காப்பீட்டிற்கு பெயரளவிலான கட்டணத்தைச் செலுத்த வேண்டும். கடன் வரம்பை அதிகரிப்பதற்கு இந்த கட்டணம் சிறிதளவு அதிகரிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
Read More

Thursday, June 23, 2022

SBI வங்கியில் புதிய வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க என்னென்ன தகுதிகள் வேண்டும்?

June 23, 2022 0
பாரத ஸ்டேட் (SBI) வங்கியில் தற்போது 11 இடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க 13.07.2022ம் தேதி கடைசி நாள். இதற்குள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

SBI வேலைக்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

விண்ணப்பதாரர்கள் எஸ்பிஐ இணையதளமான https://bank.sbi/careers அல்லது https://www.sbi.co.in/careers என்ற இணைப்பின் மூலம் ஆன்லைனில் தங்களைப் பதிவு செய்து, இணைய வங்கி/ டெபிட் கார்டு/ மூலம் விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும். பின்னர் விண்ணப்பிக்க வேண்டும். நோட்டிபிகேஷன் முகவரி

https://sbi.co.in/documents/77530/25386736/220622-ADVT.+SCO-2022-23-11.pdf/ab61d970-77f5-9faa-c0b0-164adc4fd4e3?t=1655903885471

இந்த லிங்கில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.

அறிவிப்பு விவரம்

https://recruitment.bank.sbi/crpd-sco-2022-23-11/apply

இந்த லிங்கில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.

அதிகாரபூர்வ இணையதள முகவரி விவரம்

https://sbi.co.in/

இந்த லிங்கில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.
Read More

Thursday, May 26, 2022

இந்தியன் வங்கியில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள் - விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 14.06.2022

May 26, 2022 0


இந்தியன் வங்கியில் மேலாளர், முதுநிலை மேலாளர், உதவி மேலாளர் போன்ற பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 312

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி: Senior Manager - 35
சம்பளம்: மாதம் ரூ.63,840 - 78,230
வயதுவரம்பு: 25 முதல் 38க்குள் இருக்க வேண்டும். 
 
பணி: Manager - 111 
சம்பளம்: மாதம் ரூ.48,170 - 69,810
வயதுவரம்பு: 25 முதல் 35க்குள் இருக்க வேண்டும்.

பணி: Assistant Manager - 162
சம்பளம்: மாதம் ரூ.36,000 - 63,800
வயதுவரம்பு: 20 முதல் 30க்குள் இருக்க வேண்டும்.
 
பணி: Chief Manager - 04
சம்பளம்: மாதம் ரூ.76,010 - 89,890
வயதுவரம்பு: 27 முதல் 40க்குள் இருக்க வேண்டும். 

தகுதி: பட்டதாரிகள், சிஏ, ஐசிடபுள்யுஏ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து படித்து தெரிந்துகொள்ளவும்.

தேர்வு செய்யப்படும் முறை: தகுதியானவர்கள் பட்டியல் தயார் செய்யப்பட்டு அதில் இருந்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பக் கட்டணம்:  எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவினர் ரூ.175. மற்ற பிரிவினர் ரூ.850 கட்டணமாக செலுத்த வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: www.indianbank.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 14.06.2022

மேலும் விவரங்கள் அறிய https://www.indianbank.in/wp-content/uploads/2022/05/Detailed-Advertisment-for-Recruitment-of-Specialist-Officers.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
Read More

Monday, April 25, 2022

பொதுத்துறை வங்கியில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள் - விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.05.2022

April 25, 2022 0
பொதுத்துறை வங்கியான பேங்க் ஆப் இந்தியா-இல் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள அதிகாரிப் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

திட்டஎண். 2021-22/3 தேதி: 01.12.2021

மொத்த காலியிடங்கள்: 696

பணி: Officer

I. Regular Basis - 594

1. Economist - 02

2. Statistician - 02

3. Risk Manager - 02

வயதுவரம்பு: 28 முதல் 35க்குள் இருக்க வேண்டும்.

4. Credit Analyst - 53

வயதுவரம்பு: 30 முதல் 38க்குள் இருக்க வேண்டும்.

5. Credit Officers - 484

வயதுவரம்பு: 20 முதல் 30க்குள் இருக்க வேண்டும்.

6. Technical (Appraisal) - 09

வயதுவமர்பு: 25 முதல் 35க்குள் இருக்க வேண்டும்.

7. IT Officer – Data Centre - 42

வயதுவரம்பு: 20 முதல் 30க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள், பணி அனுபவம் வெளியிடப்பட்டுள்ளதால் அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

II. Contract Basis காலியிடங்கள்: 102

பணி: Manager IT (On Contract basis) - 21

பணி: Senior Manager - 23

பணி: Manager-IT (Data Centre) - 06

பணி: Senior ManagerIT (Data Centre) - 06

பணி: Sr. Manager (Network Security) - 05

பணி: Sr. Manager (Network Routing & Switching Specialist) - 10

பணி: Manager (End Point Security) - 03

பணி: Manager (DataCentre)- System Administrators Solaris/Unix - 06

பணி: Manager (Data Centre)- System Administrators Windows - 03

பணி: Manager (Data Centre)- Cloud Virtualization - 03

பணி: Manager (Data Centre)- Storage & Backup Technologies - 03

பணி: Manager (Data Centre- Network Virtualization SDNCisco ACI) - 04

பணி: Manager (Database Expert) - 05

பணி: Manager (Technology Architect) - 02

பணி: Manager (Application Architect) - 02

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: பொது, ஓபிசி பிரிவினருக்கு ரூ.850, எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் ரூ.175. கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தலாம். விண்ணப்பிக்கும் முறை: www.bankofindia.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.05.2022

மேலும் விவரங்கள் அறிய https://bankofindia.co.in/pdf/Annexure_II.pdf மற்றும் https://bankofindia.co.in/pdf/Annexure_I.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
Read More

Saturday, December 25, 2021

ATM கட்டணம் ஜன., 1ல் உயர்கிறது

December 25, 2021 0
ஏ.டி.எம்.,களில் -பணம் எடுப்பதற்கான கட்டணம் ஜன., 1 முதல் உயர்கிறது. ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு:ஏ.டி.எம்., பராமரிப்பு செலவுக்காக வாடிக்கையாளர்களிடம் இருந்து வசூலிக்கப்படும் கட்டணம், 2014க்கு பின் உயர்த்தப்படவில்லை. செலவு அதிகரிப்பதால் கட்டணத்தை உயர்த்திக் கொள்ள அனைத்து வங்கிகளும் அனுமதி கோரியிருந்தன. வங்கிகளின் கோரிக்கையை ஏற்ற ரிசர்வ் வங்கி, கட்டணத்தை உயர்த்த ஜூனில் அனுமதி அளித்தது. இதனால் ஜன., 1 முதல் ஏ.டி.எம்.,மில் பணம் எடுக்க புதிய கட்டணம் அமலுக்கு வருகிறது.கணக்கு வைத்துள்ள வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம்.,களில் மாதத்துக்கு ஐந்து முறை கட்டணமின்றி பணம் எடுக்கலாம். கணக்கு இல்லாத வங்கிகளின் ஏ.டி.எம்., என்றால் மாநகரங்களில் மூன்று முறையும், நகரங்களில் ஐந்து முறையும் கட்டணமின்றி பணம் எடுக்கலாம்.

அனுமதிக்கப்பட்ட இந்த தவணை முடிந்த பின் பணம் எடுக்கும் ஒவ்வொரு முறையும், பரிவர்த்தனை கட்டணமாக 20 ரூபாய் வசூலிக்கப்பட்டு வந்தது; இது, ஜன., 1 முதல் 21 ரூபாய் மற்றும் ஜி.எஸ்.டி., கட்டணம் 8 ரூபாய் வசூலிக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது
Read More

Monday, December 20, 2021

இனி ATM கார்டே வேண்டாம்..! பணம் ஈசியா எடுக்கலாம்.. எப்படினு பாருங்க..!!!

December 20, 2021 0
எச்டிஎஃப்சி வங்கி வாடிக்கையாளர்கள் ஏடிஎம் கார்டு இல்லாமல் பணத்தை எப்படி எடுக்கலாம் என்பதை பற்றி இதில் தெரிந்து கொள்ளலாம் .

சிலர் வெளியில் கிளம்பும் பொழுது அவசரஅவசரமாக ஏடிஎம் கார்டு எடுக்காமல் சென்று விடுவார்கள்.

பின்னர் ஏடிஎம் மெஷினுக்கு அருகில் சென்ற பிறகுதான் ஏடிஎம் கார்டை எடுத்து வரவே இல்லை என்பது தெரியவரும். இதுபோன்ற சூழலில் நீங்கள் என்ன செய்வீர்கள்? பணம் மிகவும் அவசரம் என்று நிலையில் திரும்பவும் வீட்டுக்கு சென்று ஏடிஎம் கார்டை எடுத்து வருவது மிகவும் கஷ்டம். இது போன்ற சமயங்களில் ஏடிஎம் கார்டு இல்லாமல் பணம் எடுக்கும் வசதியை சில வங்கிகள் வழங்குகின்றன. எச்டிஎஃப்சி வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு ஏடிஎம் கார்டு இல்லாமல் பணம் எடுக்கும் வசதியை வழங்குகிறது. அது எப்படி என்றால், எச்டிஎப்சி வங்கியின் நெட் பேங்கிங் வசதியில் சென்று ரெஜிஸ்டர் செய்ய வேண்டும்.

முதலில் பயனாளி பெயரை இணைக்க வேண்டும்.

Fund Transfer -> Request -> Add a Benificiary -> cardless cash withdrawal என்று கிளிக் செய்து ரெஜிஸ்டர் செய்ய வேண்டும்.

பின்னர் பயனாளியின் விவரங்களைப் பதிவிட்டு Add and Confirm கொடுக்க வேண்டும். மொபைல் நம்பருக்கு ஓடிபி நம்பர் வரும். அதைப் பதிவிட வேண்டும்.

மீண்டும் நெட் பேங்கிங் வசதியில் சென்று Fund Transfer வசதியில் Cardless cash withdrawal என்பதில் Debit card account என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பின்னர் நீங்கள் ரெஜிஸ்டர் செய்த பயனாளியைத் தேர்வு செய்து, பின்னர் எவ்வளவு பணம் எடுக்க வேண்டும் என்பதைக் குறிப்பிட்டு Continue and Confirm கொடுக்க வேண்டும்.

அதைத் தொடர்ந்து மொபைல் நம்பருக்கு ஓடிபி வரும். அதைப் பதிவிட வேண்டும். பயனாளியின் மொபைல் நம்பருக்கு ஒரு ஓடிபியும், 9 இலக்க ஆர்டர் நம்பரும் வழங்கப்படும்.

பணத்தை எடுக்கும் நபர் ஏடிஎம் மையத்துக்குச் சென்று ஏடிஎம் ஸ்கிரீனில் உள்ள Cardless cash withdrawal என்ற வசதிக்குள் சென்று மொழியைத் தேர்ந்தெடுத்த பின்னர் ஓடிபி நம்பரையும் ஆர்டர் நம்பரையும் பதிவிட வேண்டும். இதில் எடுக்க வேண்டிய தொகையை பதிவிட்டால் பணத்தை எடுத்துக்கொள்ள முடியும்.
Read More

Tuesday, December 14, 2021

இரண்டு நாள் ஸ்டிரைக் - வங்கி கூட்டமைப்பு முடிவு

December 14, 2021 0
பொதுத் துறை வங்கிகளை தனியார் மயமாக்கும் திட்டத்தை எதிர்த்து வரும், 16 மற்றும் 17ல் நாடு தழுவிய போராட்டம் நடத்த வங்கிகள் கூட்டமைப்பு திட்டமிட்டு உள்ளது.

யு.எப்.பி.யு., எனப்படும் வங்கி சங்கங்களின் ஒருங்கிணைந்த கூட்டமைப்பு என்ற அமைப்பு வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:

பொதுத் துறை வங்கிகள் மூலம், 13 தனியார் நிறுவனங்களுக்கு, 4.86 லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டு உள்ளது. அந்தக் கடன் முறையாக செலுத்தப்படாததால், இந்த வங்கிகளுக்கு, 2.85 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

ஆனால், நஷ்டத்தில் இயங்கும் தனியார் வங்கி சாரா நிதி நிறுவனங்களை மீட்க அரசு முயற்சித்து வருகிறது. அரசின் பல்வேறு திட்டங்களில் பங்கேற்று, பொதுத் துறை வங்கிகள் ஆதரவு அளித்து வருகின்றன. ஆனால், பொதுத் துறை வங்கிகளை தனியார்மயமாக்கும் முயற்சி நடக்கிறது. இது தொடர்பான மசோதாவை பார்லி., தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளனர். இதை எதிர்த்து, வரும், 16, 17ல் நாடு தழுவிய அளவில், 'ஸ்டிரைக்'கில் ஈடுபட உள்ளோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Read More

Friday, December 10, 2021

வங்கிக்கணக்கில் பணம் திருடுபோனா? - சைபர் கிரைம் அட்வைஸ்

December 10, 2021 1
நம்பரை மறந்துடாதீங்க

பொதுமக்கள் தங்கள் வங்கிக்க ணக்கில் இருந்து தொகை எடுக்கப் பட்டது தெரிந்தால், உடனடியாக '155260' என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ள வேண்டும்.

அப்படிசெய்தால், வாடிக்கையா ளரின் வங்கி அதிகாரியை தொடர்பு கொண்டு, முதலில் வங்கிக்கணக்கை முடக்க நடவடிக்கை எடுப்போம். அடுத்ததாக, யாருடைய வங்கிக்க ணக்கில் அந்த பணம் வரவு வைக் கப்பட்டுள்ளது என்பதை கண்டறிந்து அந்த நபரின் வங்கி கணக்கையும் முடக்க நடவடிக்கை மேற்கொள் வோம். பாதிக்கப்பட்ட 72 மணி நேரத்துக்குள் புகார் தெரிவிக்கலாம். ஆனாலும், எவ்வளவு விரைவாக வாடிக்கையாளர் புகார் கொடுக்கி றாரோ, அவ்வளவு விரைவாக பணத்தை காப்பாற்ற வாய்ப்பு உள் ளது. பொதுமக்கள் புகார் கொடுக்க வசதியாகrime.gov.in என்ற தேசிய அளவிலான இணையதள சேவை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
Read More

Tuesday, December 7, 2021

ஜனவரி முதல் ஏடிஎம் மையங்களில் பணம் எடுப்பதற்கான கட்டணம் உயர்கிறது; ரிசர்வ் வங்கி அறிவிப்பு.

December 07, 2021 0
மற்ற வங்கி ஏடிஎம்களை பயன்படுத்தினால் ஜிஎஸ்டி-யுடன் சேர்த்து ரூ.25 வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் தாங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கி ஏடிஎம்-களில் ஒரு மாதத்துக்கு 5 முறை கட்டணமின்றி, பணம் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதே போல் மற்ற வங்கி ஏடிஎம்களில் என்றால் மாநகரங்களில் 3 முறையும், மாநகரம் அல்லாத ஏடிஎம் மையங்களில் 5 இலவச பரிவர்த்தனைகளையும் செய்ய முடியும். இதை தாண்டி தங்கள் வங்கிகளின் ஏடிஎம்-களில் பணம் எடுத்தால் தற்போது 20 ரூபாயும் மற்ற வங்கி ஏடிஎம்களின் பரிவர்த்தனைக்கு ஜி.எஸ்.டி. உடன் 23.6 ரூபாய் கட்டணம் பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அடுத்த ஆண்டு ஜனவரி முதல் ஏடிஎம் மையங்களில் பணம் எடுப்பதற்கான கட்டணம் உயர்கிறது. அதற்கு மத்திய ரிசர்வ் வங்கி அனைத்து வங்கிகளுக்கு அனுமதி வழங்கி உள்ளது. அதன்படி இலவச பரிவர்த்தனைகளை தாண்டி பணம் எடுத்தால் ஒவ்வொரு பரிவர்த்தனைக்குமான கட்டணம் 20 ரூபாயில் இருந்து 21 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இலவச பரிவர்த்தனைகளை தாண்டி மற்ற ஏடிஎம்களை பயன்படுத்தினால், ஜனவரி 1 ஆம் தேதி முதல் ஜிஎஸ்டி-யுடன் சேர்த்து ரூ.25 ஆக வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. செலவுகள் அதிகரித்திருப்பதால் இந்த பரிவர்த்தனைக் கட்டணத்தை உயர்த்திக்கொள்ள இந்திய ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது. ஏற்கனவே ஹெச்.டிஎஃப்.சி மற்றும் ஆக்ஸிஸ் வங்கிகள் கட்டணத்தை அதிகரித்துள்ள நிலையில் ஜனவரி 1ல் இருந்து மற்ற வங்கிகளும் உயர்த்த இருக்கிறது.
Read More

Thursday, November 25, 2021

டிசம்பர் மாதத்தில் 16 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை.! ரிசர்வ் வங்கி அறிவிப்பு

November 25, 2021 0
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகளின் விடுமுறை நாட்களின் பட்டியலை ஒவ்வொரு மாதமும் இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டு வருகிறது. அதன்படி, வரும் டிசம்பர் மாதத்தில் 16 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் இந்த விடுமுறை நாட்கள் பொருந்துவதில்லை. 

மாநிலங்களுக்கு ஏற்ற வகையில் இந்த விடுமுறை நாட்கள் மாறுபடுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, வாடிக்கையாளர்கள் வங்கி தொடர்பான தங்கள் பணிகளை திட்டமிடுவதற்கு முன்னர் விடுமுறை தினங்களை திட்டமிட்டுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். வாடிக்கையாளர்களின் வசதிக்காக டிசம்பர் மாத வங்கி விடுமுறை நாட்களின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

* 3 டிசம்பர் - புனித பிரான்சிஸ் சேவியர் விழா (பனாஜியில் வங்கிகள் மூடப்படும்.)

* 5 டிசம்பர் – ஞாயிறு

* 11 டிசம்பர் – சனிக்கிழமை (மாதத்தின் 2வது சனிக்கிழமை)

* 12 டிசம்பர் – ஞாயிறு

* 18 டிசம்பர் – யு சோ சோ தாம் கீ இறந்த நாள் (ஷில்லாங்கில் வங்கிகள் மூடப்படும்)

* 19 டிசம்பர் – ஞாயிறு

* 24 டிசம்பர் – கிறிஸ்துமஸ் பண்டிகை (ஐஸ்வாலில் வங்கிகள் மூடப்படும்)

* 25 டிசம்பர் – கிறிஸ்துமஸ் (பெங்களூரு மற்றும் புவனேஸ்வர் தவிர அனைத்து இடங்களிலும் வங்கிகள்
மூடப்படும்) சனிக்கிழமை, (மாதத்தின் நான்காவது சனிக்கிழமை)

* 26 டிசம்பர் – ஞாயிறு

* 27 டிசம்பர் – கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் (ஐஸ்வாலில் வங்கிகள் மூடப்படும்)

* 30 டிசம்பர் – யு கியாங் நோங்பா (ஷில்லாங்கில் வங்கிகள் மூடப்படும்)

* 31 டிசம்பர் – புத்தாண்டு கொண்டாட்டம் (ஐஸ்வாலில் வங்கிகள் மூடப்படும்)
Read More

Thursday, September 16, 2021

பள்ளி சிறுவர்களின் வங்கிக்கணக்கில் ரூ.900 கோடி டெபாசிட்

September 16, 2021 0
பீஹாரில் இரண்டு பள்ளி மாணவர்களின் வங்கிக்கணக்கில் ரூ.900 கோடி டெபாசிட் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


பீஹார் மாநிலம் கதிஹார் மாவட்டம் பாகுரா பஞ்சாயத்துக்கு உட்பட்ட பாஸ்தியா கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஆஷிஷ், குரு சரன் விஸ்வாஸ். இவர்கள் அரசு பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வருகின்றனர். இவர்களுக்கு, பீஹார் கிராமின் வங்கியில், பள்ளி சார்பில் கணக்கு துவக்கப்பட்டு உள்ளது. மாநில அரசு, பள்ளி சீருடை மற்றும் பள்ளி சார்ந்த பொருட்கள் வாங்குவதற்காக, இந்த வங்கிக்கணக்கில் பணம் செலுத்தி வருகிறது.


அந்த வகையில் பணம் வந்துள்ளதா? என தெரிந்து கொள்வதற்காக இரண்டு சிறுவர்களும் பெற்றோர்களுடன் பொது சேவை மையத்திற்கு சென்றனர். அங்கு, வங்கிக்கணக்கில் இருப்பு தொகையை பார்த்த போது, அவர்களுக்கும், ஊழியர்களுக்கும் அதிர்ச்சி ஏற்பட்டது. ஆஷிஷ் வங்கிக்கணக்கில் ரூ.6.2 கோடியும், குரு சரண் வங்கிக்கணக்கில் ரூ.900 கோடியும் டெபாசிட் செய்யப்பட்டிருந்தது.


இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் உதயன் மிஸ்ரா கூறியதாவது: இரண்டு பள்ளி சிறுவர்களின் வங்கிக்கணக்கில் அதிகளவு பணம் டெபாசிட் செய்யப்பட்ட செய்தி எனக்கும் வந்தது. பணம் அனுப்பும் கணினி முறையில் சில பிரச்னைகள் இருந்ததாக வங்கி மேலாளர் தெரிவித்து உள்ளார். சிறுவர்களின் வங்கிக்கணக்கில் குறைவான பணம் உள்ளது. ஆனால், கணிணி கணக்கில் ரூ.900 கோடி எனக்காட்டுகிறது. இது தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கும்படி உத்தரவிட்டு உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார். இந்த சம்பவம் அந்த கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தங்களுக்கும் அவ்வாறு பணம் ஏதும் வந்துள்ளதா? என அக்கிராமத்தினர் வங்கிக்கும், ஏ.டி.எம்., மையங்களுக்கும், படையெடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது
Read More

திருவள்ளூர் மாவட்ட கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்

September 16, 2021 0
திருவள்ளூர் மாவட்டம், பாவட்ட திட்ட அலுவலகம், வட்டார வள மையம் மற்றும் அனைந்து வகை அரசு பள்ளிகளின் ஒருங்கினைாந்து பள்ளிக் கல்வி திட்டத்திற்கான கணக்கு எண் நிருவள்ளூர் மாவட்டத்தில் தங்கள் அலுவலகத்திற்கு அருகாமையில் உள்ள கனாரா வங்கியில் புதிய கணக்கு துயங்கிட பார்வையிற்கண்ட செயல்முறைகளின் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதன் இத்துடன் அனுப்பிவைக்கப்படுகிறது. கனரா வங்கியில் கணக்கு எண் தொடங்க கனரா வங்கி அலுவயர்களால் கூட்டம் நடத்தப்படும் கூட்டம் நடத்தப்படும் நாள், தேதி, இடம் பின்னர் அறிவிக்கப்படும். ஏற்களவே கனரா வங்கியின் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்திற்காக கணக்கு எண் துவங்கியிருந்தால் அந்தக் கணக்கை புதிய "Zero Balance A/Ch துவங்கும் வரை பழைய காக்கை முடிக்கக் கூடாது.


என அறிவுறுத்தப்படுகிறது. எனலே தங்களது வட்டார வள மையத்திற்குட்பட்ட SMC / SMDC அளவில் SNA கணக்கு கனரா வங்கியில் புதிய கணக்கு எண் துவங்கிய உடன் அதன் விவரத்தினை இவ்வலுவலகத்திற்கு அனுப்பிவைக்கும்படியும், மேலும் இந்தகவலை அனைத்து பள்ளிகளுக்கும் தெரிவிக்க அணைத்து வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்,
Read More

Saturday, September 11, 2021

கிரெடிட் கார்டை லாபகரமாக பயன்படுத்துவது எப்படி?

September 11, 2021 0
கிரெடிட் கார்டை லாபகரமாக பயன்படுத்த வழி கூறும், நிதி ஆலோசகர் த.ராஜன்: கிரெடிட் கார்டுக்கான கட்டணத்தை முழுமையாக கட்டுவதால், வட்டி எதுவும் செலுத்த வேண்டியதில்லை. அப்படியே சற்று தாமதம் ஏற்பட்டாலும், குறைவான வட்டியே செலுத்த வேண்டி இருக்கும். நுகர்வோர் கடன், கார் கடன், வீட்டை அழகு செய்ய என, பெரியளவில் கடன் வாங்குவதாக இருந்தால், வங்கி மூலம் குறைந்த வட்டியில் வாங்கலாம்.சின்ன சின்ன செலவுகளுக்கு கிரெடிட் கார்டை பயப்படுத்தினாலும், அதற்கான பணம் செலுத்துவதை தாமதப்படுத்தாதீர். தாமதக் கட்டணம், கூடவே வட்டியும் சேர்ந்து அதிக தொகை செலுத்த வேண்டி வரும். அடுத்து, ஆண்டு கட்டணம் இல்லாத கார்டுகளாக பார்த்து தேர்வு செய்யலாம். பல முன்னணி வங்கிகள், இலவச கிரெடிட் கார்டுகளை வழங்கி வருகின்றன.அவற்றை பயன்படுத்துவதால், ஆண்டு கட்டணம் என்ற வகையில் சில ஆயிரம் ரூபாயை தண்டமாக செலுத்துவதை தவிர்க்கலாம். கிரெடிட் கார்டை தொடர்ந்து சரியாகப் பயன்படுத்தி வந்தால், உங்களின், 'கிரெடிட் ஸ்கோர்' உயரும். அது, எதிர்காலத்தில் அதிக தொகையுடன், குறைந்த வட்டியில் கடன் பெற உதவும்.பிரபல கிரெடிட் கார்டு நிறுவனங்கள், நீங்கள் செலவு செய்யும் தொகையில் குறைந்தபட்சம் 1, 2 சதவீத தொகையை, 'ரிவார்டு பாயின்ட்' ஆக வழங்கும்.நீண்ட காலத்தில் இது பெரிய தொகையாக மாறும். இதைப் பயன்படுத்தும்போது, புதிதாக வாங்கும் பொருளின் விலை கணிசமாகக் குறையும். கிரெடிட் கார்டு மூலம் பொருட்கள் வாங்கும் போது, அதிகபட்சம், 52 நாட்களுக்கு வட்டி இல்லாத கடன் காலத்தைப் பெற முடியும். கடன் சுழற்சி ஆரம்பிக்கும்போது கிரெடிட் கார்டைப் பயன்படுத்தினால், இப்படி அதிகபட்ச இலவச வட்டி காலத்தைப் பயன்படுத்தலாம்.உதாரணமாக, உங்களின் கட்டணம் செலுத்துவது, ஒவ்வொரு மாதமும் 15-ம் தேதி என்றால், 16- முதல்25-ம் தேதிக்குள் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி பொருட்கள் வாங்குவதை வழக்கமாக்கி கொள்ளலாம்.அதன்பின், அடுத்த கட்டண சுழற்சி வரும் வரை, வேறு பொருட்கள் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும். இப்படித் தொடர்ந்து செய்யும்பட்சத்தில், அதிக நாட்கள் வட்டி இல்லா காலத்தைப் பெற முடியும்.திட்டமிடல் மூலம் நிதி இலக்குகளை நிர்ணயித்து செயல்பட ஆரம்பித்தால், தேவையில்லாமல் பல பொருட்களை வாங்குவது தவிர்க்கப்படும். இது தவிர, கடனில் பொருட்களை வாங்குவதும் குறையும்.
Read More

Post Top Ad

Your Ad Spot