KalviseithiDaily: DEE

KalviseithiDaily

kalviseithidaily.blogspot.com No:1 Education Website in Tamil கல்வி செய்திகள்: Get latest news on Exam Results, tamil nadu school education department news, TN University Results, Exam Schedule Latest News Educational News from Tamilnadu Government, Tamilnadu Educaitonal Minsters Latest Updates, 10th, 11th, 12th, TNTET, TRB, TNPSC, STUDY MATERIALS, ONLINE TESTS, LATEST kalviseithi, Padasalai, tnkalvi, tnpse news, TET updates, TRB news, kalvi news, Padsalai study materials

Subscribe Us

Sigma is

  • Seo Ready
  • Responsive
  • Fast Loading
  • Amazing!

Hot

Post Top Ad

Your Ad Spot
Showing posts with label DEE. Show all posts
Showing posts with label DEE. Show all posts

Monday, July 25, 2022

தொடக்க கல்வி பட்டயத் தேர்வுக்கான அட்மிட் கார்டு

July 25, 2022 0
ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள தொடக்க கல்வி பட்டயத் தேர்வுக்கான அனுமதிச் சீட்டு தொடர்பான முக்கிய அறிவிப்பை அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது. தேர்வர்கள் சிரமமின்றி அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக, அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

நடைபெறவுள்ள ஆகஸ்ட் 2022 தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வின் முதலாம் ஆண்டு தேர்வுகள் 08.08.2022 முகல் 29.08.2022 வரையிலும் இரண்டம் ஆண்டு தேர்வுகள் 05.08.2022 முதல் 26.08.2022 வரையிலும் நடைபெறவுள்ளது. இத்தேர்விற்கு விண்ணப்பித்திருக்கும் தனித்தேர்வர்கள் (தட்கல் உட்பட) அனைவரும் www.dge.tn.gov.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்ப எண், பிறந்த தேதி ஆகியவற்றை பதிந்து 28.07.2022 அன்று பிற்பகல் 2.00 மணி முதல் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுக்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்படுகிறது.

www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தோன்றும் DEE Exam August 2022 - PRIVATE CANDIDATE - HALL TICKET DOWNLOAD என்பதை கிளிக் செய்தால் தோன்றும் பக்கத்தில் தங்கள் விண்ணப்ப எண் (Application Number) மற்றும் பிறந்த தேதியை (Date of Birth) பதிவு செய்து தேர்வு அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இவ்வாறு, அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.
Read More

Friday, July 8, 2022

தேர்வுநிலை/ சிறப்புநிலை அனுமதி - இளையோர் மூத்தோர் ஊதிய முரண்பாடு களைதல் உள்ளிட்ட கருத்துருக்கள் மீது விரைந்து ஆணை வழங்க ஆவன செய்ய வேண்டுதல் சார்பு.

July 08, 2022 0
மதிப்புமிகு ஐயா வணக்கம்,

தொடக்கக் கல்வித்துறையில் பணியாற்றிவரும் அனைத்து வகை ஆசிரியர்களது தேர்வுநிலை/சிறப்புநிலை அனுமதி மற்றும் இளையோர் மூத்தோர் ஊதிய முரண்பாடு களைதல் உள்ளிட்ட கருத்துருக்கள் மீதான அனுமதியை, கல்விச்சான்றுகள் மீதான உண்மைத்தன்மை பெறவில்லை என்பதைக் காரணம் காட்டி, மாவட்டக்கல்வி அலுவலர்கள் மறுத்து வருகிறார்கள்.

ஆசிரியர்கள் தங்களது கல்விச் சான்றுகளின் உண்மைத்தன்மை கோரி விண்ணப்பித்து, பல மாதங்கள் ஆகியும், சில நேர்வுகளில் ஆண்டுக்கணக்கில் ஆகியும் கூட உரிய அலுவலகங்களில் இருந்து சான்றுகள் வழங்கப்படாத நிலை உள்ளது. இதனால் தேர்வுநிலை/சிறப்புநிலை அனுமதி மற்றும் இளையோர் - மூத்தோர் ஊதிய முரண்பாடு களைதல் உள்ளிட்ட கருத்துருக்களோடு உண்மைத் தன்மைச் சான்றுகளையும் இணைத்து அனுப்ப இயலாத நிலை ஏற்பட்டுள்ளதால் பணப்பலன்களை பெறுவதற்கு ஓராண்டிற்கும் மேலாக காத்திருக்க வேண்டி உள்ளது என்பதை தங்களது மேலான கவனத்திற்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

எனவே, கல்விச்சான்றுகளின் உண்மைத்தன்மை வேண்டி உரிய முறையில் விண்ணப்பித்து ஆசிரியர்களுக்கு, சான்றுகள் கிடைப்பதற்கு காலதாமதமாகும் சூழ்நிலையில், உள்ள அவர்களிடமிருந்து உறுதிமொழியினைப் பெற்றுக் கொண்டு, தேர்வுநிலை/ சிறப்புநிலை அனுமதி மற்றும் இளையோர் - மூத்தோர் ஊதிய முரண்பாடுகளை களைதல் உள்ளிட்டவைகளை அனுமதித்திட ஆவன செய்து உதவிட பெரிதும் வேண்டுகிறேன்.

Read More

Sunday, July 3, 2022

தொடக்கக்கல்வி கலந்தாய்வு செயல்முறைகள் - மாற்றம் வேண்டி இயக்குனர் அவர்களுக்கு ஆசிரியர்கள் கோரிக்கை!

July 03, 2022 0
தொடக்கக்கல்வி மாவட்டம் விட்டு மாவட்ட ஆசிரியர் கலந்தாய்விற்கான இயக்குனர் செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது. மலைசுழற்சி வழக்கில் சீனியாரிட்டி பாதிக்க கூடாது என்பதற்காக அந்த யூனியனில் மட்டும் Appointment Date சீனியாரிட்டி போட்டு இருந்தால் மற்ற ஆசிரியர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு இருக்காது.

இதனால் ஏற்படும் பாதிப்பு என்ன?

2014 ஆம் ஆண்டு பணியில் ஆசிரியர் எட்டு ஆண்டுகள் கழித்து இந்த கலந்தாய்வில் கலந்து கொள்ளும்போது கடைசி இடத்தில் இருக்கிறார்.

ஆனால் 2014, 2012, 2009 ஆண்டுகளில் பணிநியமனம் பெற்று பல்வேறு கலந்தாய்வில் கலந்து பலன் பெற்றவர்கள் மீண்டும் சீனியாரிட்டியில் மேலே இருக்கின்றனர்.

இதுபோன்ற ஒவ்வொரு விசயத்துக்கும் ஆசிரியர் நீதிமன்ற கதவுகளை தட்டிக்கொண்டே இருக்க வேண்டுமா?

என கேள்வி எழுப்புகின்றனர்.

தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்கள் சிறிய மாற்றம் செய்து கடைசியாக பணியில் சேர்ந்த நாளை கணக்கிட்டு முன்னுரிமை பட்டியல் தயாரிக்க உத்தரவிட்டால் நூற்றுக்கணக்கான ஆசிரியர் நலன் பாதுகாக்கப்படும்.

(மலைசுழற்சி யூனியனுக்கு தனியாக வழிமுறைகள் வழங்க வேண்டும்)
Read More

Sunday, June 26, 2022

தொடக்கக்கல்வி - ஒரு வாரம் மட்டுமே பணிபுரிய தற்காலிக ஆசிரியர் நியமனம் ஏன்?

June 26, 2022 1
தொடக்கக்கல்வி - ஒரு வாரம் மட்டுமே பணிபுரிய தற்காலிக ஆசிரியர் நியமனம் ஏன்?

ஆறு மாதமாக இழுத்து ஒரு வழியாக நிறுத்தி வைக்கப்பட்ட தொடக்கக்கல்வி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு ஜீலை மாதம் 7 மற்றும் 8 ஆம் தேதிகளில் நடைபெறும் என அறிவித்து உள்ள கல்வித்துறை அதற்கு முன்னதாக ஜீலை முதல் நாள் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் மேற்கொள்ள வேண்டும் என்றும் உத்தரவு போட்டுள்ளது.

பணிமாறுதல் பெறும் ஆசிரியர் புதிய பணியிடத்தில் சேரும்போது அங்கு ஒரு வாரம் மட்டுமே பணிபுரிந்த தற்காலிக ஆசிரியர் வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்ற நிலை உள்ளது.

ஏன் இத்தனை குழப்பங்கள்?

தொடக்கக்கல்வி கலந்தாய்வு முடிந்த பிறகு ஜீலை 10 தேதி முதல் தற்காலிக ஆசிரியர் பணிநியமனம் செய்யலாமே!

ஒரு வாரம் மட்டுமே வேலை செய்ய தற்காலிகமாக ஒரு ஆசிரியரை தேர்வு செய்து பணியில் அமர்த்த வேண்டுமா?

இந்த சாதாரண விசயத்தை கூட அதிகாரிகள் யோசித்து முடிவெடுக்காமல் குழப்புவது ஏன் என ஆசிரியர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

அமைச்சர் அவர்கள் இதில் தலையிட்டு தற்காலிக ஆசிரியர் நியமன தேதியை ஜீலை பத்தாம் தேதிக்கு மாற்றி வைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

அமைச்சர் தலையிடுவாரா?
Read More

Tuesday, June 14, 2022

கைவிட்ட சங்க நிர்வாகிகள் - தொடக்கக்கல்வி மாவட்டம் விட்டு மாவட்டம் கலந்தாய்வு - தீர்வு காண வழி என்ன?

June 14, 2022 0
கைவிட்ட சங்க நிர்வாகிகள் - தொடக்கக்கல்வி மாவட்டம் விட்டு மாவட்டம் கலந்தாய்வு - தீர்வு காண வழி என்ன?
 
ஆசிரிய நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.

2021-22ஆம் கல்வியாண்டுக்கான பணி மாறுதல் கலந்தாய்வு மாவட்டம் விட்டு மாவட்டம் தொடக்கக்கல்வி துறையில் உள்ள இடைநிலை ஆசிரியர்களான நம்மைத்தவிர மற்ற அனைவருக்கும் முடிக்கப்பட்டு விட்டது. இதை நடத்துவதற்கு எந்த சங்கமும் வலியுறுத்துவதாகவோ கவலைப்பட்டதாகவோ தெரியவில்லை. நமக்கு வேண்டும் என்றால் நாம் தான் இனி வரும் காலங்களில் களத்தில் இறங்க வேண்டும். சங்கங்கள் தங்கள் வலிமையை இழந்து நிற்பதால் அது அதை புதுப்பிக்க வேண்டிய கட்டமைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் நிற்கிறது. அது ஒருபுறம் அப்படியே இருக்கட்டும். 

நாம் நமது பிரச்சனையான மாவட்ட மாறுதல் கலந்தாய்வு நடத்தச் செய்ய 3 விதமான வழிகளை கையாள வேண்டியுள்ளது. இதில் யார் யாருக்கு எதில் விருப்பமோ அதன் படியான தங்கள் கருத்துக்களை தெரிவிக்க வேண்டுகிறேன்.

வழி 1 

தொடக்கக்கல்வி துறை இயக்குநரை நேரில் சந்தித்து கலந்தாய்வை இக்கல்வியாண்டின் தொடக்கத்திலேயே நடத்த கோரிக்கை விடுத்தல்.

வழி 2

பள்ளிக்கல்வி துறை அமைச்சரை நேரில் சந்தித்து நம் நிலையை கூறி வலியுறுத்துதல்.

வழி 3

வழக்கு தொடுத்தல். வழக்கு தொடுக்க விருப்பமுள்ளவர்கள் தனியாக தொடர்பு கொள்ளவும். 

நமக்கு தேவையென்றால் நாம் தான் இனி கேட்க வேண்டும். மற்றவர்களை நம்பி இனி பயன் இல்லை. வாருங்கள் யார் யாரெல்லாம்  மாவட்ட மாறுதல் கலந்தாய்வை விரும்புகிறீர்களோ அவர்களெல்லாம் தங்கள் பெயரை பதிவு செய்யவும்.

வழக்கு தொடுக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். உங்களில் யாருக்கேனும் விருப்பம் இருந்தால் தெரிவிக்கவும்.

இவண்
முத்துப்பாண்டி - 94867 18060
அமீன் - 9500360730


Read More

Friday, May 13, 2022

மே-20 ஆம் தேதி வரை அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வருகை தர வேண்டும் - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.

May 13, 2022 0
மே-20 ஆம் தேதி வரை அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வருகை தர வேண்டும் - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.

தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்கள் சங்கப் பிரதிநிதிகள் குழுவில் பதிவு செய்துள்ள செய்தி.

ஆனால் இதுவரை இதுதொடர்பான செயல்முறைகள் எதுவும் வரவில்லை. மே-20 ஆம் தேதி வரை 1 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான அனைத்து ஆசிரியர்களும் கட்டாயம் பள்ளிக்கு வருகை தர வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவு. Kind attention CEOs ,

Today , the 13th instant May 2022 being the last working day , the annual vacation for students commence from tomorrow and in view of valuation of exam papers, preparation of consolidated mark cum promotion registers all teachers will have to attend school until 20 May 2022.

As far, teachers of Ele is concerned, it’s mandated that School attendance particulars should be tallied with EMIS entries and a certificate to that effect should be handed over to BEOs. In case of any mismatch that should be rectified . With respect to high/Hr sec Sch teachers, the same instructions apply and teachers engaged on exam duty, may do it afterwords. However, teachers who got NOC to travel abroad may be asked to expedite their work and be exempted from attending school till 20 May 2022, wherever it applies.

Pl bring it to the notice of all concerned. By order. சி.இ.ஓ.க்கள் அன்பான கவனம்,

இன்று, மே 13, 2022 கடைசி வேலை நாளாக இருப்பதால், மாணவர்களுக்கான வருடாந்திர விடுமுறை நாளை முதல் தொடங்குகிறது மற்றும் தேர்வுத் தாள்களின் மதிப்பீடு, ஒருங்கிணைந்த மதிப்பெண் மற்றும் பதவி உயர்வு பதிவேடுகளைத் தயாரிப்பதன் காரணமாக அனைத்து ஆசிரியர்களும் 20 மே 2022 வரை பள்ளிக்குச் செல்ல வேண்டும்.

Ele ஆசிரியர்களைப் பொறுத்த வரையில், பள்ளி வருகை விவரங்கள் EMIS உள்ளீடுகளுடன் இணைக்கப்பட வேண்டும் மற்றும் அதற்கான சான்றிதழை BEOக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஏதேனும் பொருந்தாத பட்சத்தில் அது சரி செய்யப்பட வேண்டும். உயர்/Hr sec Sch ஆசிரியர்களைப் பொறுத்தமட்டில், அதே அறிவுறுத்தல்கள் பொருந்தும் மற்றும் தேர்வுப் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள், பின் வார்த்தைகளைச் செய்யலாம். இருப்பினும், வெளிநாடு செல்வதற்கு NOC பெற்ற ஆசிரியர்கள் தங்கள் பணியை விரைவுபடுத்துமாறும், 20 மே 2022 வரை பள்ளிக்குச் செல்வதில் இருந்து விலக்கு அளிக்கப்படும்படியும் கேட்கப்படலாம். தயவு செய்து சம்பந்தப்பட்ட அனைவரின் கவனத்திற்கும் கொண்டு செல்லவும்.

கட்டளை படி.
Read More

Post Top Ad

Your Ad Spot