KalviseithiDaily: Conference's

KalviseithiDaily

kalviseithidaily.blogspot.com No:1 Education Website in Tamil கல்வி செய்திகள்: Get latest news on Exam Results, tamil nadu school education department news, TN University Results, Exam Schedule Latest News Educational News from Tamilnadu Government, Tamilnadu Educaitonal Minsters Latest Updates, 10th, 11th, 12th, TNTET, TRB, TNPSC, STUDY MATERIALS, ONLINE TESTS, LATEST kalviseithi, Padasalai, tnkalvi, tnpse news, TET updates, TRB news, kalvi news, Padsalai study materials

Subscribe Us

Sigma is

  • Seo Ready
  • Responsive
  • Fast Loading
  • Amazing!

Hot

Post Top Ad

Your Ad Spot
Showing posts with label Conference's. Show all posts
Showing posts with label Conference's. Show all posts

Wednesday, January 4, 2023

பொதுத் தோ்வு எழுதும் மாணவா்களுடன் ஜன.27-இல் பிரதமா் கலந்துரையாடல்

January 04, 2023 0
பொதுத் தோ்வு எழுதும் மாணவா்களுடன் ஜன.27-இல் பிரதமா் கலந்துரையாடல்

பொதுத் தோ்வுக்குத் தயாராகி வரும் மாணவா்கள், அவா்களது பெற்றோா் மற்றும் ஆசிரியா்களுடன் பிரதமா் நரேந்திர மோடி ஜன.27-ஆம் தேதி கலந்துரையாட உள்ளாா் என மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்நிகழ்வு குறித்து அந்த அமைச்சகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட ட்விட்டா் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

பரீக்ஷா பே சா்ச்சா நிகழ்ச்சி தில்லியில் உள்ள தால்கடோரா உள்விளையாட்டு அரங்கில் ஜன.27-ஆம் தேதி நடைபெற உள்ளது. பொதுத் தோ்வை எழுத உள்ள மாணவா்கள், அவா்களது பெற்றோா் மற்றும் ஆசிரியருடன் பிரதமா் மோடி கலந்துரையாடுவாா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கலந்துரையாடல் நிகழ்ச்சியின் முதலாவது நிகழ்வு 2018-இல் பிப்ரவரி 18-ஆம் தேதி இந்த விளையாட்டு அரங்கில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
Read More

Saturday, December 11, 2021

டிச., 18, 19ல் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மாநில மாநாடு

December 11, 2021 0
சென்னையில் டிசம்பர் 18 மற்றும் 19ல் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க 14வது மாநில மாநாடு நடக்கிறது.

மதுரையில் மாநில பொது செயலர் செல்வம் கூறியதாவது:பழைய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, புதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும். முடக்கப்பட்ட அகவிலைப்படியை வழங்க வேண்டும். பறிக்கப்பட்ட சரண் விடுப்பு மீண்டும் அளிக்க வேண்டும்.

சத்துணவு, அங்கன்வாடி உள்ளிட்ட ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட சம்பளம் வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த மாநாடு நடக்கிறது. டிசம்பர் 19ல் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிறார். ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் உள்ளிட்ட பல்வேறு அரசு துறை ஊழியர் சங்க நிர்வாகிகள் பங்கேற்கின்றனர்.
Read More

Friday, November 26, 2021

ஆப்ரிக்க நாடுகளில் பரவும் புதிய வகை கொரோனா; உயர் அதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை

November 26, 2021 0
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், தடுப்பூசி குறித்து பிரதமர் மோடி தலைமையில் தற்போது ஆலோசனை நடைபெறுகிறது. கோவிட்-19 நிலைமை மற்றும் தடுப்பூசி குறித்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெறும் கூட்டத்தில் அமைச்சரவை செயலாளர் ராஜீவ் கௌபா, பிரதமரின் முதன்மை செயலாளர் பிகே மிஸ்ரா, மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன் மற்றும் நிதி ஆயோக் உறுப்பினர் (சுகாதாரம்) டாக்டர் விகே பால் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். ஆப்ரிக்க நாடுகளில் வீரியமிக்க கொரோனா பரவி வரும் நிலையில் அரசு அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசிக்கிறார். புதிய கொரோனாவான ‘ஒமிக்ரான்’ பரவியுள்ள தென் ஆப்பிரிக்கா, போட்ஸ்வானா, ஹாங்காங் ஆகியவற்றில் இருந்து இந்தியாவுக்கு வருபவர்கள் மற்றும் இந்த நாடுகளின் வழியாக வருபவர்களையும் தீவிரமாக பரிசோதிக்க வேண்டும் என அனைத்து மாநிலங்களுக்கும் ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளது. கொரோனா பாதிப்புகளின் தற்போதைய நிலைமை மற்றும் தடுப்பூசிகளை தயார் நிலையில் வைக்கவும் அதிகாரிகளுக்கு பிரதமர் கூறியுள்ளார். இந்தியாவில் நேற்று தினசரி பாதிப்பு சற்று அதிகம் காணப்பட்ட நிலையில் இன்று குறைந்துள்ளது. கடந்த 24-ம் தேதி 9,283-க்கும், 25-ம் தேதி 9,119 பேருக்கும், 26-ம் தேதி 10,549 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டது. மேலும் இன்று 8,318 பேருக்கு கொரோனா கண்டறியபட்ட நிலையில் 465 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 10,967 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதிக வீரியத்துடன் பரவும் புதிய வகை கொரோனாவால் இந்தியாவில் யாரும் பாதிக்கப்படவில்லை என மத்திய அரசு நேற்று தகவல் தெரிவித்தது. பிப.1.1529 என்ற புதிய வகை கொரோனா ஆப்ரிக்க நாடுகளில் பரவி வரும் நிலையில் மத்திய அரசு விளக்கம் அளித்திருந்தது. தென் ஆப்பிக்கா உள்பட 3 நாடுகளிலிருந்து இந்தியாவரும் பயணிகளை ஏர்போர்ட்டிலேயே பரிசோதிக்க வேண்டும் என அறிவுறுத்தில் செய்யப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் நேற்று கூறப்பட்டது.
Read More

Thursday, September 9, 2021

இணைய வழியில் இந்திய அரசின் மத்திய மின்வேதியியல் ஆய்வு மையத்தை பார்க்கலாம் வாங்க…. - பதிவு செய்ய கடைசி தேதி :11-09-2021

September 09, 2021 0
இணைய வழியில் இந்திய அரசின் மத்திய மின்வேதியியல் ஆய்வு மையத்தை பார்க்கலாம் வாங்க….
இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையின் கீழ் இயங்கும் விஞ்ஞான் பிரச்சார் நிறுவனத்துடன் இணைக்கப்பட்ட உடுமலை கலிலியோ அறிவியல் கழகம் மற்றும் அறிவியல்சார் சிந்தனையை தாய்மொழியில் பரப்புவதை நோக்கமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட தன்னார்வ நிறுவனமான டி.ஒய்.ஏ.யு (DYAU) இணைந்து பள்ளி மாணாக்கர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு இணையவழிக் கருத்தரங்கு மற்றும் இணையவழியில் ஆராய்ச்சிக் கூடத்தை பார்வையிடும் நிகழ்வை நடத்த ஒவ்வொரு மாதமும் நடத்தி வருகிறது.

வரும் செப்டம்பர் மாதம் 12ம் தேதி(12-09-2021) அன்று காலை 11 மணிமுதல் 1 மணி வரை இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றத்தின் கீழ் இயங்கும் , காரைக்குடியில் உள்ள மத்திய மின்வேதியியல் ஆய்வு மையத்தில் முதன்மை விஞ்ஞானியாக பணியாற்றும் முனைவர்.சுதாகர் அவர்கள் சி.எஸ்.ஐ.ஆர் பற்றியும், இந்தியாவில் உள்ள சி.எஸ்.ஐ.ஆர் ஆராய்ச்சி நிறுவனங்களை பற்றியும் , மின் வேதியியல் ஆய்வு மையத்தில் செய்து வரும் ஆராய்ச்சிகள் பற்றியும், தற்போது ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப வளர்ச்சிகள் பற்றியும் விளக்க உள்ளார். அதைத் தொடர்ந்து மாணாக்கர்கள் மற்றும் ஆசிரியர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்க உள்ளார். அதன் தொடர்ச்சியாக மின் வேதியியல் ஆராய்ச்சி மையத்தினை இணையவழியில் அவரவர் வீடுகளில் இருந்தே பார்க்கும் வண்ணம் திட்டமிடப்பட்டுள்ளது.

கலந்து கொள்ளும் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

இந்த இணையவழி நிகழ்வில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் கீழ்க்காணும் இணைப்பின் மூலம் பதிவு செய்து கொள்ளலாம். https://forms.gle/a4ak4uumxzsoTokaA
பதிவு செய்ய கடைசி தேதி :11-09-2021
மேலும் தகவல்களுக்கு
கண்ணபிரான்
ஒருங்கிணைப்பாளர்
CELL:8778201926
Read More

Sunday, September 5, 2021

தமிழகத்தை சேர்ந்த 2 ஆசிரியைகள் உள்ளிட்ட 44 பேருக்கு தேசிய நல்லாசிரியர் விருது வழங்கினார் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்

September 05, 2021 0
தமிழகத்தை சேர்ந்த 2 ஆசிரியைகள் உள்ளிட்ட 44 பேருக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசிய நல்லாசிரியர் விருதுகளை காணொளி மூலம் வழங்குகிறார். தேசிய ஆசிரியர் தினத்தை முன்னிட்டு மத்திய கல்வித்துறை அமைச்சகத்தின் சார்பில் நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தொடர்ச்சியாக 2வது ஆண்டாக இன்றைய தினமும் காணொளி வாயிலாக இந்த நிகழ்வு தொடங்கி நடைபெற்று வருகிறது.
குடியரசு தலைவர் மாளிகையில் இருந்தபடி குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார். மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திரா பிரதான் கலந்து கொண்டுள்ளார். குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தமிழகம் திருச்சி மாவட்ட பிராட்டியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் ஆஷா தேவி மற்றும் ஈரோடு முடக்குறிச்சி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியின் ஆசிரியர் லலிதா உள்ளிட்ட 2 நபர்கள் உட்பட 44 ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருதுகளை காணொளி வாயிலாக தற்போது வழங்கி வருகிறார். தமிழகத்தை சேர்ந்த 2 ஆசிரியைகளுக்கும் இந்த விருது என்பது காணொளி வாயிலாகவே வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் அந்தந்த மாவட்டத்தின் ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து காணொளி வாயிலாக கலந்துகொண்டு இந்த விருதுகளை பெற்றுள்ளனர். காணொளி வாயிலாக விருது வழங்கப்படும் போது விருது பெரும் ஆசிரியர்களின் புகைப்படம் திரையில் காட்டப்படும். அவர்களுக்கான சான்றிதழும் திரையிடப்படும். இதேபோன்று புதுச்சேரியை சேர்ந்த ஒரு ஆசிரியைக்கும் இந்த நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டுள்ளது. இதனுடன் சிறப்பு ஊக்கத்தொகை என்பதும் மத்திய கல்வித்துறை அமைச்சகத்தின் சார்பில் தற்போது வழங்கப்பட்டுள்ளது.
Read More

Post Top Ad

Your Ad Spot