KalviseithiDaily: Breaking News

KalviseithiDaily

kalviseithidaily.blogspot.com No:1 Education Website in Tamil கல்வி செய்திகள்: Get latest news on Exam Results, tamil nadu school education department news, TN University Results, Exam Schedule Latest News Educational News from Tamilnadu Government, Tamilnadu Educaitonal Minsters Latest Updates, 10th, 11th, 12th, TNTET, TRB, TNPSC, STUDY MATERIALS, ONLINE TESTS, LATEST kalviseithi, Padasalai, tnkalvi, tnpse news, TET updates, TRB news, kalvi news, Padsalai study materials

Subscribe Us

Sigma is

  • Seo Ready
  • Responsive
  • Fast Loading
  • Amazing!

Hot

Post Top Ad

Your Ad Spot
Showing posts with label Breaking News. Show all posts
Showing posts with label Breaking News. Show all posts

Friday, July 29, 2022

சுட்டதெல்லாம் ‘தங்கம்’... துப்பாக்கி சுடுதல் போட்டியில் 4 தங்கப் பதக்கங்களை தட்டித்தூக்கிய நடிகர் அஜித்

July 29, 2022 0
47-வது மாநில அளவிலான துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் கலந்துகொண்ட நடிகர் அஜித் 6 பதக்கங்களை வென்றுள்ளார்.

நடிகர் அஜித் நடிப்பதோடு மட்டுமின்றி பைக் ரேசிங், கார் ரேசிங், துப்பாக்கி சுடுதல் போன்றவற்றிலும் ஆர்வம் கொண்டவராக இருந்து வருகிறார். அந்த வகையில் அஜித் கடந்த சில தினங்களுக்கு முன்னர் திருச்சியில் உள்ள ரைபிள் கிளப்பில் நடைபெற்ற 47-வது மாநில அளவிலான துப்பாக்கிச் சுடுதல் போட்டி நடைபெற்றது. தமிழகம் முழுவதிலும் இருந்து ஏராளமான துப்பாக்கி சுடும் வீரர்கள் இதில் கலந்துகொண்டனர்.

இதில் நடிகர் அஜித்தும் கலந்துகொண்டார். அவர் செண்டர் பயர் பிஸ்டல் மாஸ்டர் ஆண்கள் அணி பிரிவு, ஸ்டாண்டர்ட் பிஸ்டல் மாஸ்டர் ஆண்கள் அணி பிரிவு, 50 மீட்டர் பிரீ பிஸ்டல் மாஸ்டர் ஆண்கள் அணி பிரிவு மற்றும் ஐ.எஸ்.எஸ்.எப்பிற்கான ஸ்டாண்டர்ட் பிஸ்டல் மாஸ்டர் ஆண்கள் அணி பிரிவு ஆகியவற்றில் தங்கப்பதக்கம் வென்றார். இதுதவிர 2 வெண்கலப் பதக்கங்களையும் வென்றுள்ளார்.
துப்பாக்கி சுடுதலில் மொத்தம் 6 பதக்கங்களை வென்று குவித்த நடிகர் அஜித்துக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. இதற்கான பரிசளிப்பு விழா கடந்த ஜூலை 28-ந் தேதி நடைபெற்றது. ஆனால் அஜித் அதில் பங்கேற்கவில்லை. ஏனெனில் அதற்கு முந்தைய தினம் அஜித்தை பார்க்க திருச்சி ரைபிள் கிளப் வாயிலில் ரசிகர்கள் பெருமளவில் குவிந்தனர்.

மறுதினமும் இருந்தால் ரசிகர்கள் பெருமளவில் குவிந்து விடுவார்கள் என்பதனால் ஜூலை 27-ந் தேதி இரவே நடிகர் அஜித், திருச்சியில் இருந்து சென்னை கிளம்பி வந்துவிட்டார். ஜூலை 27-ந் தேதி மாலை திருச்சி ரைபிள் கிளப்பில் நடிகர் அஜித் தனது ரசிகர்களை சந்தித்த புகைப்படங்களும், வீடியோக்களும் வெளியாகி வைரல் ஆனது குறிப்பிடத்தக்கது.
Read More

Monday, July 25, 2022

அதிகரிக்கும் மாணவர்கள் தற்கொலை; நடவடிக்கை என்ன? - அமைச்சர் அன்பில் பதில்

July 25, 2022 0
இதை தொலைபேசியில்‌ நாம்‌ பேசினால்‌ நமக்கு உரிய தீர்வு கிடைக்குமா என்று பயப்படுகிறவர்களுக்கு என்று நாங்கள்‌ இப்போது துறையின்‌ சார்பாக portal கொண்டு வர இருக்கிறோம்‌.

பள்ளி மாணவர்களின்‌ தற்கொலை அதிகரித்து வருகிறதே, இதைத்‌ தடுப்பதற்கு ஏதாவது முயற்சி எடுக்கப்பட்டிருக்கிறதா என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் பதிலளித்ததாவது:

’’வருகிற 27ஆம் தேதி நம்முடைய தமிழ்நாடு முதலமைச்சரின்‌ தலைமையில்‌ கூட்டம்‌ நடைபெற இருக்கிறது. ஏற்கெனவே, RDS case scheme மூலமாக கல்வி என்று வரும்போது 413 blocks இருக்கிறது. ஒவ்வொரு blocks-க்கும்‌ இரண்டு மருத்துவர்கள்‌ இருக்கிறார்கள்‌. மனநல counselling எப்படி கொடுக்க வேண்டும்‌ என்று அவர்களுக்கு நாங்கள்‌ பயிற்சி கொடுத்து வருகிறோம்‌.

கிட்டத்தட்ட 800 மருத்துவர்கள்‌ தயாராக இருக்கிறார்கள்‌. அதில்‌ ஒவ்வொரு ஒன்றியத்திலும்‌ இரண்டு மருத்துவர்கள்‌ அங்கே இருக்கின்ற ஒவ்வொரு பள்ளிக்கூடத்திற்கு சென்று அங்கே உள்ள குழந்தைகளுக்கு கவுன்சிலிங்‌ வழங்குவது ஆகியவற்றைச் செய்வர். அதற்கான நிகழ்ச்சியை நம்முடைய முதலமைச்சர்‌ வருகிற 27ஆம்‌ தேதி அன்று தொடங்கி வைக்கிறார்‌. அதுமட்டுமல்ல, மாணவர்களுக்கு ஏற்கனவே மனரீதியாக மன அழுத்தம்‌ இருக்கின்றது, ஏதாவது ஒன்றை நண்பனிடம்‌ சொல்ல முடியவில்லை. ஆசிரியரிடம்‌ சொல்ல முடியவில்லை. பெற்றோரிடம்‌ சொல்லமுடியவில்லை. அப்படியிருப்பவர்கள்‌ எப்படி மற்றவர்களிடம்‌ பகிர்ந்து கொள்ளமுடியும்‌ என்பதற்காகத்‌ தான்‌, “மாணவர்‌ மனசு” என்று ஒரு பெட்டியை ஒவ்வொரு பள்ளிக்கூடத்திலும்‌ வைத்து, ஒவ்வொரு 15 நாட்களுக்கு ஒரு முறை அது திறக்கப்படும்‌ என்று நாம்‌ சொல்லியிருக்கின்றோம்‌.

அதுமட்டுமல்லாமல்‌, 14417 எண்ணாக இருந்தாலும்‌ சரி, 1098 ஆக இருந்தாலும்‌ சரி, அந்த மாணவச்‌ செல்வங்களுக்கு இந்த எண்ணை ஒவ்வொரு வகுப்பறையிலும்‌ POCSO issue வரும்போது அதை நாங்கள்‌ ஒட்டி வைத்திருக்கின்றோம்‌.

அதையும்‌ பேசுவதற்கு அவர்கள்‌ சங்கடப்படுகிறார்கள்‌, தயங்குகிறார்கள்‌, இதை தொலைபேசியில்‌ நாம்‌ பேசினால்‌ நமக்கு உரிய தீர்வு கிடைக்குமா என்று பயப்படுகிறவர்களுக்கு என்று நாங்கள்‌ இப்போது துறையின்‌ சார்பாக portal கொண்டு வர இருக்கிறோம்‌. அதை website மூலமாக, அந்தக்‌ குழந்தைகள்‌ உள்ளே சென்று தங்களைப்‌ பற்றி சொல்லலாம்‌, சொல்லாமலும்‌ கூட அவர்கள்‌, என்ன பிரச்சனை அந்தப்‌ பள்ளியில்‌ நடக்கிறது என்பதை பதிவு செய்யலாம்‌, அலலது சுற்றுவட்டார சமூகத்தில்‌ என்ன பிரச்சனைகள்‌ வருகிறது என்று சொல்லலாம்‌.

கண்டிப்பாக அது ஒரு accountability ஆக வரும்போது, அந்தப்‌ பிரச்சினைக்கு தீர்வுகாண்கின்ற பணியில்‌ அதற்கான portalலையும்‌ மிக விரைவில்‌ நாங்கள்‌ வெளியிட இருக்கின்றோம்‌’’.

இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். ஏற்கெனவே உள்ள நடமாடும்‌ ஆலோசனை மையம்‌ தற்போது செயல்படுகின்றதா என்று கேள்வி எழுப்பப்பட்டதற்கு பதிலளித்த அவர், ''ஏற்கனவே 17 பேர்‌ இருந்தார்கள்‌, இப்போது பலர்‌ பணி ஓய்வில்‌ சென்று விட்டதால்‌, தற்போது 7 பேர்‌ மட்டுமே இருக்கின்றார்கள்‌. ஆகவே, அந்த 7 பேர்‌ என்பது கண்டிப்பாக போதாது.

38,000 அரசுப்‌ பள்ளிகள்‌ இருக்கின்றன. எல்லாப்‌ பள்ளிகளும்‌ சேர்த்து மொத்தம்‌ 58,000 பள்ளிகள்‌ இருக்கின்றன. அதற்காகத்தான்‌ நான்‌ சொன்னது போல, ஒவ்வொரு ஒன்றியத்திறகும்‌ 413 கல்வி ஒன்றியம்‌ வைத்திருக்கிறோம்‌ என்று சொன்னால்‌, அதில்‌ நம்முடைய RDS Case scheme மூலமாக இரண்டு மருத்துவர்கள்‌ இருப்பார்கள்‌. கிட்டத்தட்ட 600 மருத்துவர்கள்‌ இருக்கிறார்கள்‌. அவர்களைத்தான்‌ நாங்கள்‌ இதற்கு பயன்படுத்த இருக்கிறோம்‌'' என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.
Read More

Friday, July 22, 2022

கால்நடை உதவி மருத்துவர் 1,089 பேர் நியமனம்: அரசு கூடுதல் தலைமை செயலர் தகவல்

July 22, 2022 0
''நீதிமன்ற வழக்குகளில் தீர்வு காணப்பட்டு 1,089 கால்நடை உதவி மருத்துவர் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளது,'' என, தலைவாசல் கால்நடை பூங்காவில் ஆய்வு செய்த, தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலர் ஜவஹர் கூறினார்.

சேலம் மாவட்டம் தலைவாசல், வி.கூட்ரோடு பகுதியில், 1,102 ஏக்கரில் 1,000 கோடி ரூபாயில், கால்நடை பூங்கா அமைக்கும் பணி நடக்கிறது. அரசின் கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம், மீனவர் நலத்துறை கூடுதல் தலைமை செயலர் ஜவஹர் தலைமையிலான அலுவலர்கள் நேற்று ஆய்வு செய்தனர்.

இதையும் படிக்க | Important instructions regarding Corrections for CUET (PG) 2022

இதுகுறித்து ஜவஹர் கூறியதாவது:தமிழக கால்நடை பராமரிப்பு துறையில், 3,030 கால்நடை உதவி மருத்துவர் பணியிடங்கள் தற்போது உள்ளன.

இதில், 1,141 உதவி மருத்துவர் பணியிடங்கள் பல்வேறு நீதிமன்ற வழக்குகளால், ௧௦ ஆண்டுகளாக நிரப்பப்படவில்லை. முதல்வர் ஸ்டாலின், துறை அமைச்சர் மற்றும் அலுவலர்களுடன் ஆலோசனை செய்த பின், சட்ட சிக்கல்களுக்கு தீர்வு காணப்பட்டு, நீதிமன்ற உத்தரவு பெற்று, 1,089 உதவி மருத்துவ பணியிடங்களுக்கு பணி நியமனம் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
Read More

மாற்றுத் திறனாளிகள் நலத் துறையின் கீழ் உள்ள 14 வயதிற்கு மேற்பட்ட மனவளர்ச்சி குன்றிய மாற்றுத் திறனாளிகளுக்கான தொழிற்பயிற்சியுடன் கூடிய இல்லங்கள் தொடங்குதல் ஆணை

July 22, 2022 0
அரசாணை (நிலை) எண்.22 Dt: July 15, 2022 - மாற்றுத் திறனாளிகள் நலத் துறை – மாற்றுத் திறனாளிகள் நலத் துறையின் கீழ் உள்ள 14 வயதிற்கு மேற்பட்ட மனவளர்ச்சி குன்றிய மாற்றுத் திறனாளிகளுக்கான தொழிற்பயிற்சியுடன் கூடிய இல்லங்கள் தொடங்குதல் திட்டம் – திருவள்ளூர் மாவட்டத்தில் வேவ்ஸ் தொண்டு நிறுவனத்திற்கு பதிலாக டான் கொனெல்லா (Don Guanella) இல்லம் செயல்பட அனுமதி அளித்து - ஆணை வெளியிடப்படுகிறது

CLICK HERE TO DOWNLOAD
Read More

Sunday, July 17, 2022

இன்று 17.07.2022 முதல் 31.07.2022 பிற்பகல் வரை 144 தடை உத்தரவு.

July 17, 2022 0
கள்ளக்குறிச்சி வட்டத்திற்குட்பட்ட அனைத்து கிராமங்கள், சின்னசேலம் வட்டம் சின்னசேலம் குறுவட்டத்திற்குட்பட்ட கிராமங்கள், மற்றும் நைனார்பாளையம் குறுவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து கிராமங்களிலும் இன்று 17.07.2022 பிற்பகல் முதல் 31.07.2022 பிற்பகல் வரை 144 தடை உத்தரவு. பத்திரிக்கைச் செய்தி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 13.07.2022 அன்று காலை கள்ளக்குறிச்சி வட்டம், கனியாமூர் கிராமத்தில் சக்தி மெட்ரிக் மேல்நிலை தங்கி 12-ஆம் வகுப்பு பயின்றுவந்த கடலூர் மாவட்டம், வேப்பூர் வட்ட கிராமத்தைச் சேர்ந்த மாணவி செல்வி.ஸ்ரீமதி (வயது-16) த/பெ.ராமலிங்கப் பள்ளி வளாகத்தில் இறந்தது தொடர்பாக பல கட்ட போராட்டம் நடத்தப் அமைப்புகளுடன் பலகட்ட பேச்சுவார்த்தை மாவட்ட நிர்வாகத்தால் மேற்கொ மாவட்ட ஆட்சியரிடம் மாணவியின் தாயார் திருமதி.செல்வி உறவினர்கள் மற்றும் வழக்குரைநர் நேரில் சந்தித்து மனு அளித்து நடவடி கேட்டுக்கொண்டபோது, சட்டரீதியாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளப் அளிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று 17.07.2022 காலை 10.00 மணியளவில் 10 நபர்கள் பள்ளியின் முன்பு கூடி கற்களை வீசி தாக்கியும் காவல்துறை வ பள்ளி வாகனங்களை தீ வைத்தும் கொளுத்தினர். இதனை கட்டுப்படுத்த படையினர் விழுப்புரம், திருவண்ணாமலை மற்றும் அருகில் உள்ள ம வரவழைக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை வரவுள்ளது. இவ்விசாரணைக்கு காவல் துணை கண்காணிப்பாளர் நீதிம மாவட்ட ஆட்சியரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பேலும் போராட்டத்தை கட் கோட்டாட்சியர் கள்ளக்குறிச்சி அவர்களால் Cr.Pc. 144-ன்கீழ் தடை உத்த வட்டம் முழுவதும், சின்னசேலம் வட்டத்தில், சின்னசேலம் மற்றும் குறுவட்டங்களுக்கு உட்பட்ட அனைத்து கிராமங்களுக்கும் பிறப்பிக்கப்பட்டு
Read More

Friday, July 15, 2022

தனியார் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் கைது

July 15, 2022 0
3½ வயது குழந்தைக்கு பாலியல் தொந்தரவு; உடற்கல்வி ஆசிரியர் கைது

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை டேவிட் நகரில் உள்ள தனியார் பள்ளியில் வஞ்சூவாஞ்சேரி பகுதியை சேர்ந்த தமிழரசு (வயது 28) உடற்கல்லி ஆசிரியராக வேலை செய்து வருகிறார். இவர் அந்த பள்ளியில் படித்து வந்த 3½ வயது குழந்தைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தெரிகிறது. இதுகுறித்து அந்த குழந்தையின் பெற்றோர் மணிமங்கலம் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் தமிழரசுவை கைது செய்தனர்.
Read More

Thursday, July 14, 2022

வாக்குறுதிகள் ஒன்று கூட நிறைவேறவில்லை: அரசு ஊழியர் சங்க பொதுச்செயலாளர்

July 14, 2022 0
'மாவட்ட தலைநகரங்களில் ஜூலை 26ல் மாநிலம் தழுவிய தர்ணா போராட்டம் நடத்த உள்ளதாக' தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில பொதுச்செயலாளர் செல்வம் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது: மத்திய அரசு அகவிலைப்படி உயர்வு வழங்கும்போது மாநில அரசும் உயர்த்தி தருவதாக முதல்வர் அறிவித்தார். ஆனால் ஜன.1 முதல் 7 மாதங்களாக அகவிலைப்படி 3 சதவீதம் தரவில்லை. இம்மாதம் மீண்டும் அகவிலைப்படி உயர்வை மத்திய அரசு அறிவிக்க உள்ளது. எனவே அகவிலைப்படி உயர்வை தமிழக அரசு உடனே வழங்க வேண்டும். புதிய பென்ஷன் திட்டம் ரத்து, 4.5 லட்சம் காலியிடங்களை நிரப்புதல், சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.

முதல்வர் கொரோனா பாதிப்பில் இருந்து விரைந்து குணமடைய வேண்டும். கொரோனா காலத்தில் அவர் சிறந்த முதல்வர் என பெயரெடுக்க காரணம் சுகாதாரத்துறையே. அத்துறை உட்பட அனைத்து துறைகளிலும் அவுட்சோர்ஸிங் முறையில் பணி நியமனம் கூடாது. கோரிக்கையை நிறைவேற்றுவதாக தேர்தல் வாக்குறுதியில் முதல்வர் தெரிவித்தார். ஆனால் ஆட்சிக்கு வந்தபின் ஒன்றுகூட நிறைவேறவில்லை. இவற்றை வலியுறுத்தி ஜூலை 26ல் மாவட்ட தலைநகரங்களில் மாலைநேர தர்ணா போராட்டம் நடத்த உள்ளோம். ஆக.23ல் கோட்டை நோக்கி ஊர்வலமாக செல்ல உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
Read More

Wednesday, July 6, 2022

வேறு பள்ளிகளில் இருந்து சென்னை மாநகராட்சி பள்ளிகளில் சேர்ந்த 11,000 மாணவர்கள்

July 06, 2022 1
வேறு பள்ளிகளைச் சேர்ந்த 11,000 மாணவர்கள் இந்த ஆண்டு சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர்.

சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் ஆண்டுக்கு 1.50 லட்சம் மாணவர்கள் படிப்பதற்கான கட்டமைப்பு உள்ளது. இதைத் தவிர நவீன வகுப்பறை, விளையாட்டு மைதானம் உள்ளிட்டவை சிட்டீஸ் திட்டம் மற்றும் சிங்காரச் சென்னை திட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்தப் பள்ளிகளில் கரோனா பெருந்தொற்றுக்கு முன்பு வரை ஆண்டுக்கு சராசரியாக 85,000 முதல் 90,000 வரை மட்டுமே மாணவர்கள் படித்தனர். 2020 கரோனா தொற்றுக்கு பின், பொருளாதார பாதிப்பில் சிக்கியவர்கள் பலரும் தங்கள் பிள்ளைகளை மாநகராட்சிப் பள்ளிகளில் சேர்த்தனர்.

இதனால், 2021–22-ம் கல்வியாண்டில், சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் 1.15 லட்சம் மாணவர்கள் படித்தனர். தனியார் பள்ளிகளில் இருந்து 20,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள், சென்னை மாநகராட்சி பள்ளிகளில் சேர்ந்திருந்தனர்.

இந்நிலையில், இந்த ஆண்டு தற்போது வரை 1.05 லட்சம் மாணவர்கள் சென்னை மாநகாராட்சி பள்ளிகளில் சேர்ந்து படித்து வருகின்றனர்.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், "மாநகராட்சிப் பள்ளிகளில் இந்த ஆண்டில் புதிதாக 20,440 பேர் சேர்ந்துள்ளனர். இதில் 9,356 மாணவர்கள் சென்ன மாநகராட்சிப் பள்ளிகளைச் சேர்ந்தவர்கள். 11,084 மாணவர்கள் வேறு பள்ளிகளைச் சேர்ந்தவர்கள். இதன்படி மொத்தம் 1 லட்சத்து 5,127 மாணவர்கள் படிக்கின்றனர்.

எல்கேஜியில் 3710, யூகேஜியில் 7379, 1-ம் வகுப்பில் 7571, 2-ம் வகுப்பில் 8553, 3-ம் வகுப்பில் 8440, 4-ம் வகுப்பில் 8885, 5-ம் வகுப்பில் 9140, 6-ம் வகுப்பில் 7771, 7-ம் வகுப்பில் 8866, 8-ம் வகுப்பில் 8535, 9-ம் வகுப்பில் 7746, 10-ம் வகுப்பில் 7531, 11-ம் வகுப்பில் 4049, 12-ம் வகுப்பில் 6951 பேர் படித்து வருகின்றனர்" என்று அவர்கள் தெரிவித்தனர்.

10-வது மண்டலத்தில் 19,000 பேர்

கல்வித் துறையின் அடிப்படையில் சென்னை மாநகராட்சிப் பள்ளிகள் 10 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மண்டலத்தையும் ஓர் உதவி கல்வி அலுவலர் கண்காணித்து வருவார். மண்டல வாரியாக மாணவர்கள் எண்ணிக்கை.

மண்டலம் 1 - 13,446
மண்டலம் 2 - 9935
மண்டலம் 3 - 6068
மண்டலம் 4 - 12,142
மண்டலம் 5 - 9787
மண்டலம் 6 - 11,461
மண்டலம் 7 - 4668
மண்டலம் 8 - 4293
மண்டலம் 9 - 13,641
மண்டலம 10 - 19,686

Read More

Tuesday, July 5, 2022

நிரந்தர ஆசிரியர் நியமன அறிவிப்பு - தமிழக அரசு வெளியிடுமா ?

July 05, 2022 0
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சங்கத்தின் தலைவர் ஷீலா உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவினை தாக்கல் செய்திருந்தார்.

அதில், "கடந்த 2013ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஏராளமானோர் அப்போதிருந்த வெயிட்டேஜ் முறையால் பணிக்கு தேர்வாகவில்லை. ஆனால், அவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களே. அவர்களில் பெரும்பாலானவர்கள் தற்போதுவரை பணி வாய்ப்பு கிடைக்காமல் பொருளாதார ரீதியாக மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக அரசின் பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை, பட்டதாரி, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை தற்காலிக ஆசிரியர்களைக் கொண்டு நிரப்ப திட்டமிட்டு அரசு கடந்த 23ஆம் தேதி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தற்காலிக ஆசிரியர்கள் தேர்வு தொடர்பாக முறைப்படுத்தப்பட்ட வழிமுறைகள் எதுவும் இல்லை. அந்தந்த மாவட்ட கல்வி அலுவலர்கள் அவர்களுக்கு தேவையான நபர்களை பணியில் நியமித்து கொள்ள வாய்ப்பு உள்ளது. இதனால் தகுதியற்றவர்கள் தற்காலிக ஆசிரியர்களாக நியமிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதனால் மாணவர்களின் எதிர்காலமே பாதிக்கப்படும். அதோடு ஏற்கெனவே ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் பணி வாய்ப்பை பெற இயலாத நிலை உருவாகும்.

ஆகவே இவற்றை கருத்தில் கொண்டு, தமிழக அரசின் பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை, பட்டதாரி, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை தற்காலிக ஆசிரியர்கள் மூலம் நிரப்புவது தொடர்பாக கடந்த 23ஆம் தேதி வெளியிடப்பட்ட அறிவிப்பை ரத்து செய்வதோடு, அதன் அடிப்படையில் நடவடிக்கைகளை எடுக்க இடைக்கால தடை விதித்தும் உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

இந்த வழக்கின் முந்தைய விசாரணையில் தமிழக அரசுப் பள்ளிகளிலுள்ள காலி பணியிடங்களை தற்காலிக ஆசிரியர்கள் மூலம் நிரப்ப இடைக்கால தடை விதித்து வழக்கு விசாரணை ஜூலை 8ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்காலிக ஆசிரியர் நியமனத்திற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்கக்கோரி நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்பு தமிழக அரசுத்தரப்பில் முறையீடு செய்யப்பட்டது. அதில் "தமிழகம் முழுவதும் தற்காலிக ஆசிரியர் நியமனம் செய்வதற்கான நடைமுறைகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், மதுரைக் கிளையின் இடைக்கால தடையால் அதன் கீழ் உள்ள மாவட்டங்களில் தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்ய முடியாமல் உள்ளது. ஆகவே இடைக்கால தடையை நீக்கி உத்தரவிட வேண்டும்" என தெரிவிக்கப்பட்டது.

அதற்கு நீதிபதி, "எந்த அடிப்படையில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுகின்றனர்?" எனக் கேள்வி எழுப்பினார். அரசு தரப்பில், "ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் தகுதியான ஆசிரியர்களே நியமிக்கப்படுகிறார்கள்" என தெரிவிக்கப்பட்டது. அதற்கு நீதிபதி, "அப்படி என்றால் நிரந்தர ஆசிரியர்களையே நியமிக்கலாமே? தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பதற்கு என்ன அவசரம் உள்ளது?" எனக் கேள்வி எழுப்பி, வழக்கு பட்டியலிடப்பட்ட ஜூலை 8 ஆம் தேதியே விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என தெரிவித்தார்.

இதனால் நீதிமன்ற அறிவுறுத்தலின் படி நிரந்தர ஆசிரியர் நியமன அறிவிப்பை தமிழக அரசு வெளியிடுமா ? என்று தேர்வர்கள் எதிர்நோக்கியுள்ளனர்.
Read More

Friday, July 1, 2022

அங்கன்வாடி ஆயாக்களுக்கு ஆசிரியர் பணி: எல்.கே.ஜி., வகுப்பெடுக்க உத்தரவு.

July 01, 2022 0
அரசு பள்ளிகளில் செயல்படும் எல்.கே.ஜி. வகுப்புகளுக்கு அங்கன்வாடி ஆயாக்கள் என்ற அங்கன்வாடி பணியாளர் மற்றும் உதவியாளர்கள் வாயிலாக பாடம் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

எல்.கே.ஜி.க்கு மூன்று வயது மற்றும் யு.கே.ஜி.க்கு நான்கு வயது நிரம்பிய குழந்தைகளை சேர்க்க வேண்டும். அந்த குழந்தைகளுக்கு சத்துணவு அளிக்க வேண்டும்.

மேலும் அந்த குழந்தைகளுக்கு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணி இயக்குனரகம் வழங்கும் புத்தகங்களை பயன்படுத்தி அங்கன்வாடி பணியாளர் மற்றும் உதவியாளர்கள் பாடம் நடத்த வேண்டும். அங்கன்வாடிகளுக்கு சிறப்பாசிரியர்கள் நியமிக்கப்படும் வரை இந்த அடிப்படையில் கற்பிக்க வேண்டும்.

குழந்தைகளுக்கு பள்ளிகளில் கூடுதல் வகுப்பறை இருந்தால் அதைப் பயன்படுத்தலாம். இல்லாவிட்டால் அங்கன்வாடி மையங்களையே வகுப்பறையாக பயன்படுத்த வேண்டும்.

அங்கன்வாடி பணியாளர் இல்லாவிட்டால் மாவட்ட கலெக்டரிடம் கூறி பணியாளரை பெற்றுக் கொள்ள வேண்டும்.
Read More

Thursday, June 30, 2022

வாரத்திற்கு 3 நாட்கள் விடுமுறை, பிஎப் திட்டத்திற்கு வழங்கும் பங்களிப்பு: அமலுக்கு வருகிறது புதிய விதிகள்

June 30, 2022 0
தொழிலாளர் நலன் தொடர்பான புதிய கொள்கைபடி, பணியில் இருந்து விடுபடும் ஊழியர்களின் ஊதியம் உள்ளிட்ட இதர பணப் பலன்களை 2 நாட்களுக்குள் வழங்க வேண்டும் என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. புதிய தொழிலாளர் நல கொள்கைகளில் எண்ணற்ற மாற்றங்கள் இன்று முதல் இடம் பெற உள்ளன. குறிப்பாக ஊழியர்களின் ஊதியம், அவர்கள் பிஎப் திட்டத்திற்கு வழங்கும் பங்களிப்பு, பணி நேரம் போன்றவற்றில் மாற்றம் நடைபெற உள்ளது. ஊழியர்களின் பணி சூழல், தொழிலாளர் நலன்,ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான விதிமுறைகளில் திருத்தம் செய்யப்பட உள்ளன.

இந்த சட்டங்கள் அமலுக்கு வரும் பட்சத்தில், நாட்டில் உள்ள பெரும்பாலான நிறுவனங்களில் ஊழியர்களுக்கு அதிக நன்மைகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய விதிகள் அமலுக்கு வந்த உடன் தொழிலாளர்களுக்கு 5 நாட்களுக்கு பதிலாக 4 வேலை நாட்கள் என்ற முறையை நிறுவனங்கள் அமல்படுத்த முடியும். அதாவது 3 நாட்கள் விடுமுறை கிடைக்கும். ஆனால் வாரத்தில் 3 நாட்கள் விடுமுறை எடுக்கும் ஊழியர்கள் தினமும் 8 மணி நேரம் பணிக்கு பதிலாக 12 மணி நேரம் வேலை செய்ய வேண்டும். ஊழியர்களுக்கு அனைத்து பிடித்தமும் போக கைக்கு கிடைக்கும் ஊதியம் மற்றும் பிஎப் திட்டத்திற்கு அவர்கள் வழங்கும் பங்களிப்பு போன்றவற்றிலும் மாற்றம் செய்யப்பட உள்ளது. நிகர ஊதியத்தில் 50% அளவிற்கான அடிப்படை ஊதியம் இருக்க வேண்டும் என்று புதிய கொள்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக பிஎப் திட்டத்திற்கு ஊழியர்கள் மற்றும் நிறுவனங்கள் அளிக்கும் பங்களிப்பு தொகை உயரும். இதனால் ஊழியர்களுக்கு கைகளில் கிடைக்கும் ஊதியம் குறைய வாய்ப்பு உள்ளது. அதே சமயம் ஒய்வுபெறும் போது கிடைக்கும் பிஎப் தொகை மிக அதிகமாக இருக்கும். ஊழியர்கள் விலகினால் அல்லது வெளியேற்றப்பட்டால் கடைசி தினத்தில் இருந்து 2 நாட்களில் அவருக்கு கொடுக்க வேண்டிய ஊதியம், இதர பலன்களை வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More

10ம் வகுப்பு தேர்ச்சி போதும் - 3,552 காவலர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

June 30, 2022 0
இரண்டாம் நிலை காவலர் , சிறைக்காவலர், தீயணைப்பாளர் உள்பட 3,552 காலிப் பணியிடங்களுக்கு நடைபெறும் நேரடி தேர்வுக்கு இணையவழியில் விண்ணப்பிக்கலாமென தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்புக்காவல் படைகளில் உள்ள இரண்டாம் நிலை காவலர்களுக்கான காலிப்பணியிடங்களுக்கும், இரண்டாம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கும் இந்தாண்டு நேரடி தேர்வு நடைபெறவுள்ளது.

இந்த தேர்வுகளுக்கு ஜூலை 7 முதல் ஆகஸ்ட் 15 வரை இணையவழியாக விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

மொத்த பணியிடங்களில், மாவட்ட /மாநகர ஆயுதப்படையில், 654 இடங்கள், சிறைக் காவலர் பிரிவில் 8 இடங்களுக்கு பெண்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

 கல்வித்தகுதி : குறைந்தபட்சம் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். *வயது வரம்பு :*

ஜூலை 1ம் தேதி அன்று, அனைத்து விண்ணப்பதாரர்களும், குறைந்தபட்சம் 18 வயது நிறைவு பெற்றவராக இருக்க வேண்டும்.

பொதுப்பிரிவினர் 26 வயதிற்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும். பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சீர் மரபினர் எனில் அதிகபட்சம் 28 வயதிற்கு மேற்படாதவராகவும், எஸ்.சி.,எஸ்.டி. பிரிவினர் எனில் 31 வயதிற்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும்.

மூன்றாம் பாலினத்தவர் 31 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும். ஆதரவற்ற விதவைகள் பிரிவில் 37 வயதிற்கு மேற்படாதவராகவும், முன்னாள் ராணுவத்தினர் பிரிவில் 47 வயதிற்கு மேற்படாதவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு நிலை :

எழுத்துத்தேர்வு, உடற்தகுதி தேர்வு, உடல்திறன் போட்டிகள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். தேசிய மாணவர் படை, நாட்டுநலப்பணித்திட்டம், விளையாட்டு போட்டியில் பங்கேற்றவர்களுக்கு சிறப்பு மதிப்பெண் வழங்கப்படும்.

எழுத்துத்தேர்வில், தமிழ் தேர்வுக்கு 80 மதிப்பெண்களும், முதன்மை எழுத்து தேர்வுக்கு 70 மதிப்பெண் ஒதுக்கப்பட்டுள்ளது.

150 மதிப்பெண்களுக்கு கொள்குறி வினாக்கள் அடிப்படையில் எழுத்துத்தேர்வு இருக்கும்.

ஊதிய விகிதம் : ரூ.18,200 - 67,100

*இணையவழி விண்ணப்பம் :*

விண்ணப்பதாரர்கள் சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் www.tnusrb.tn.gov.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியே மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். *தேர்வுக்கட்டணம் :*

விண்ணப்பதாரர்கள் ரூ.250/- தேர்வுக் கட்டணத்தை இணையவழியிலோ, இணையமில்லா வழியில் எஸ்.பி.ஐ வங்கியின் செலுத்துச்சீட்டு மூலம் செலுத்தலாம்.

*சிறப்பு ஒதுக்கீடுகள்:*

மொத்த காலிப்பணியிடங்களில் விளையாட்டு பிரிவினருக்கு 10 சதவீதமும், முன்னாள் ராணுவத்தினருக்கு 5 சதவீதமும், ஆதரவற்ற விதவைகள் பிரிவில் 3 சதவீதம் பேருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

முதல் வகுப்பில் இருந்து 10ம் வகுப்பு வரை தமிழ் மொழியை பயிற்று மொழியாக கொண்டிருக்கும் விண்ணப்பதாரர்களுக்கு தேர்வின் ஒவ்வொரு நிலையிலும் 20 சதவீதம் பணியிடங்கள் ஒதுக்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு https://tnusrb.tn.gov.in/
Read More

Tuesday, June 28, 2022

தொல்லியல் படிப்புகள் தேர்ந்தெடுப்போரின் எண்ணிக்கை அதிகரிப்பு!

June 28, 2022 0
தொல்லியல் துறைகளில் வேலைவாப்புகளை தரும் என்பதால் தொல்லியல் படிப்புகளை தேர்ந்தெடுப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.இதுகுறித்து தொல்லியல் துறை அறிஞர்கள் கூறியதாவது:

தொல்லியல் துறையில் பணிபுரிய தமிழ் இலக்கியம் வரலாறு படித்திருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு இருந்தது.

தற்போது ஏதாவது ஒரு முதுநிலை பட்டம் பெற்றிருந்தால் தமிழக தொல்லியல் துறையில் இரண்டாண்டு தொல்லியல் பட்டயப்படிப்பை படிக்கலாம்.அதேபோல் சென்னை பல்கலையிலும் பட்டப்படிப்பை முடிக்கலாம்.

தொல்லியல் துறைக்கு கலை இலக்கியம், வரலாறு, தாவரவியல், விலங்கியல், புவியியல், பொறியியல் என அனைத்து துறைகளின் அறிவும் தேவைப்படுகிறது. அதாவது அகழாய்வில் கிடைக்கும் பொருட்களின் தன்மையைப் பொறுத்து பகுப்பாய்வு செய்யப்படுகிறது. அதாவது சுடுமண் பொருட்கள், உலோகங்கள், தானியங்கள் உள்ளிட்ட தாவரப் பொருட்கள், எலும்புகள், கலைப்பொருட்கள் என பலவகைப் பொருட்கள் கிடைக்கும்.

அவற்றை அந்தந்த துறை சார்ந்தோரால் தான்பகுப்பாய்வு செய்து அந்த கால சமூக வரலாற்றை எழுத முடியும்.அதேபோல் தொல்லியல் துறை படிப்புகளை முடித்தால் சுற்றுலா துறை வேதியியல் பகுப்பாய்வு கூடங்கள் கோவில்கள் அரண்மனைகள் வரலாற்றை விளக்குவது பாரம்பரிய கலை சார்ந்த தொழில்களில் ஈடுபடுவது உள்ளிட்ட சுயதொழில்களில் ஈடுபடலாம்.

அரசு துறை வேலைவாய்ப்புகளை நாடலாம் என்பதால் தான் தொல்லியல் படிப்புகளுக்கு அதிக ஆர்வம் உள்ளது.இவ்வாறு அவர்கள்கூறினர்.தமிழக தொல்லியல் துறை அதிகாரிகள் கூறியதாவது:

ஏதேனும் ஒரு முதுநிலை படிப்பபில் 55 சதவீத மதிப்பெண் பெற்றிருந்தால் தமிழக தொல்லியல் துறையின் படிப்புகளை தேர்ந்தெடுக்கலாம்.அடுத்த மாதம் விண்ணப்பங்கள் வழங்கப்படும். 20 மாணவர்கள் மட்டும் சேர்க்கப்படுவர். அவர்களுக்குஆகஸ்டில் வகுப்புகள் துவங்கும். மாணவர்களுக்கு மாத உதவித் தொகையாக 5000 ரூபாய் வழங்கப்படும்.மேலும் விபரங்களுக்கு 044- - 2819 0020 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Read More

Monday, June 27, 2022

டெய்லர் கண்டுபிடித்த புதுவகை செஸ், ரம்மி விளையாட்டு.. கணக்கு, ஆங்கிலம் கற்றவாறே விளையாடலாம்....

June 27, 2022 0
தேனி மாவட்டம் அல்லிநகரத்தில் சிறுவர், சிறுமியர்கள் எளிதாக கணக்கு, ஆங்கில பாடத்தை கற்றுக் கொள்ளும் வகையில் புதிய வகையான செஸ் விளையாட்டை உருவாக்கியுள்ளார் தையல் கடைக்காரர். அவர் குறித்த செய்தியை இங்கே பார்க்கலாம்.

தேனி மாவட்டம் அல்லிநகரம் பகுதியில், தையல் கடை நடத்தி வருபவர் முருகன். குழந்தைகள் மொபைல் மற்றும் டிவியில் மூழ்கி கிடப்பதை உணர்ந்து அதற்கு மாற்றாக புதிய வடிவிலான செஸ் விளையாட்டை இவர் உருவாகியுள்ளார்.

குழந்தைகள் கணக்கு, ஆங்கிலம் கற்க சிரமப்பட்டு வரும் நிலையில் குழந்தைகளுக்கு விளையாட்டு மூலம் பாடங்களைக் கற்பிக்கும் விதமாக சில எண்கணித முறையிலான செஸ் விளையாட்டையும், ரம்மி விளையாட்டையும் கண்டுபிடித்து மாணவர்களுக்கு அந்த விளையாட்டைப் பற்றி கற்பித்து வருகிறார்.

இந்த விளையாட்டைக் கற்றுக் கொண்ட மாணவர்கள் மிகவும் ஆர்வமாக விளையாடி வருகின்றனர். தற்போது பள்ளிகள் திறந்து விட்டாலும் கூட, இந்த விளையாட்டைக் கற்றுக் கொண்ட சிறுவர் சிறுமிகள் தங்களது பள்ளி நண்பர்களுக்கும் கற்றுக்கொடுக்கின்றனர். பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்தவுடன் இந்த விளையாட்டை விளையாட மாணவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

விளையாடும் முறை:-

கணிதத்தின் அடிப்படையாக உள்ள கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் ஆகியவைகளை சிறுவர், சிறுமிகள் எளிதாக புரிந்துகொள்ள புதுமையான 'செஸ் போர்டு' உருவாக்கி உள்ளார் முருகன்.

புதுமையான செஸ் போர்டு..

இந்த விளையாட்டில் 45 கட்டங்கள் உள்ளன. போர்ட் நடுவிலுள்ள 25 கட்டங்களில் மட்டுமே காயின் நகர்வு இருக்கும். அதற்கு வெளியே 20 கட்டங்களில் கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தலுக்கான விடைகள் 1 முதல் 100 வரையில் இடம்பெற்றிருக்கும். ஒரு போட்டியாளருக்கு 5 காயின்கள் வீதம் 2 போட்டியாளர்கள் மொத்தம் 10 காயின்கள் கொண்டு விளையாடலாம்.

இருவருக்கும் கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தலுக்கு தலா ஒரு காயின்களும், அனைத்து பயன்பாட்டு குறியீடுகளுக்கான இரு காயின்களும் இருக்கும். காயின் நகரும் முறைகள் தனியாக வரையறுக்கப்பட்டு மாணவ, மாணவிகளுக்கு கற்பிக்கப்படுகிறது. ஒவ்வொரு நகர்வும் கூட்டல், கழித்தல் அல்லது பெருக்கல், வகுத்தல் பயன்பாடுகளில் மேற்கொள்ள வேண்டும் என்பது விதிமுறை. ஆங்கிலச் செஸ் விளையாட்டு :-

இதேபோல ஆங்கில எழுத்துக்கள் கொண்ட செஸ் விளையாட்டில் ஆங்கில வவ்வல்ஸ் எழுத்துக்கள் சிறிய ஆங்கில எழுத்து மற்றும் பெரிய ஆங்கில எழுத்தில் இருக்கும். ஒவ்வொரு ஆங்கில எழுத்தும் சதுரங்கத்தில் பிரத்தியோக நகர்வை கொண்டது. சதுரங்க விளையாட்டின் போது போட்டியாளரை நாம் வெட்டும் போது எத்தனை கட்டங்கள் நகர்ந்து வந்தோம் என்பதை பொருத்து வெட்டப்பட்ட காய் என்ன எழுத்தில் இருந்ததோ அதை முதல் எழுத்தாகக் கொண்ட ஏதேனும் ஒரு ஆங்கில வார்த்தையை போட்டியாளர் கூற வேண்டும் என்பதையே விதி.

சீட்டுக்கட்டு விளையாட்டு :-

ரம்மியை போன்றே இந்த விளையாட்டும் உள்ளது. சீட்டுக்கட்டு விளையாட்டில் ஒரு போட்டியாளருக்கு 13 கார்டுகள் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு கார்டுகளிலும் ஒரு ஆங்கில எழுத்து இடம்பெற்றிருக்கும் . இவ்விளையாட்டை விளையாடும் சிறுவர்கள் ஆங்கில எழுத்துக்களை வார்த்தையாக சேர்க்க வேண்டும் என்பதே விதி.

ஆர்வம் காட்டும் சிறுவர்கள் :-

இதனால் சிறுவர், சிறுமிகள் விளையாடிக் கொண்டே வகுத்தல், பெருக்கல் பயன்பாடுகளை எளிதாக கற்றுக் கொள்கின்றனர். இதேபோல் செஸ் உபகரணத்தில் 81 கட்டங்களை உருவாக்கி, எளிதாக ஆங்கில வார்த்தைகளை கற்பிக்கிறார். இதையும் சிறுவர் - சிறுமிகள் விரும்பி கற்றுக்கொண்டு விளையாடுகின்றனர். ட இதுகுறித்து டெய்லர் முருகன் கூறுகையில், "இந்தப் புதுவகை செஸ் விளையாட்டை உருவாக்கும் எண்ணம் சில வருடங்களுக்கு முன்பே எனக்கு இருந்தது. இந்த விளையாட்டை உருவாக்குவதற்கு இந்த கொரோனா காலம் எனக்கு உதவியது. விளையாட்டை உருவாக்கி குழந்தைகளுக்கு கற்றுக் கொடுத்த பின்னர் குழந்தைகள் ஆர்வமாக விளையாடுகின்றனர். இந்த விளையாட்டை பெரிதளவில் என்னால் எடுத்துச் செல்ல முடியவில்லை, அதற்கான பொருளாதார வசதி என்னிடம் இல்லை. குழந்தைகள் பள்ளி முடிந்து வந்தவுடன் எனது கடையிலேயே இந்த விளையாட்டை விளையாடி வருகின்றனர். மேலும், பல விளையாட்டு பொருட்களை தயாரிக்க என்னிடம் போதுமான நிதி இல்லை. விரைவில் இந்த விளையாட்டை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வேன் என்றார்.. இந்த புதுமையான செஸ், ரம்மி விளையாட்டுக்கள் குறித்து சந்தேகம் பெற விரும்புவோர் 6379 524 829 என்ற எண்ணில் முருகனை தொடர்பு கொள்ளலாம்..
Read More

அக்னிபத் திட்டத்தில் மூன்றே நாளில் 57 ஆயிரம் பேர் விண்ணப்பம்

June 27, 2022 0
அக்னிபத் திட்டத்தில் மூன்றே நாளில் 57 ஆயிரம் பேர் விண்ணப்பம்

அக்னிபத் திட்டத்தின் மூலம் இந்திய விமானத் துறையில் மூன்றே நாளில் 56,960 விண்ணப்பங்கள் பதிவாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராணுவத்தில் இளைஞர்கள் அதிகம் சேரும் வகையில், 'அக்னிபத்' என்ற திட்டம் கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது.

இதில், 10ம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்பு முடித்த, 17.5 வயது முதல் 21 வயது வரை உள்ள ஆண், பெண் இரு பாலரும் சேரலாம்.

இந்த திட்டத்தின் கீழ் இணையும் வீரர்கள், 'அக்னி வீரர்கள்' என அழைக்கப்படுவர். ஆறு மாத பயிற்சியுடன், நான்கு ஆண்டுகள் பணி முடித்த வீரர்களின் செயல்பாடு, திறமை அடிப்படையில், 25 சதவீதம் பேர் நிரந்தர பணிக்கு தேர்வு செய்யப்படுவர்.

ஜூன் 24ம் தேதி முதல் அக்னிபாத் திட்டத்தில் இணைய விண்ணப்பம் செய்யலாம் என மத்திய அரசு அறிவித்திருந்தது.
Read More

மாவட்ட மாறுதல் கலந்தாய்வு நடந்து முடிந்த பிறகு தான் தற்காலிக ஆசிரியர் நியமனம்

June 27, 2022 0
மாவட்ட மாறுதல் கலந்தாய்வு நடந்து முடிந்த பிறகு தான் தொகுப்பு ஊதிய ஆசிரியர் நியமிக்க வேண்டும் என தகவல்...
Read More

Sunday, June 26, 2022

ஆசிரியர்கள் இடமாறுதல் கலந்தாய்வு

June 26, 2022 0
Teachers Displacement Consultation

It has been announced that a consultation will be held next month for graduate teachers and intermediate teachers seeking transfer from district to district. The next day, it was announced that a general change consultation for graduate teachers would take place.

ஆசிரியர்கள் இடமாறுதல் கலந்தாய்வு

மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கோரும் பட்டதாரி ஆசிரியர் மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு, அடுத்த மாதம் கலந்தாய்வு நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு மாவட்டத்தில் இருந்து, மற்றொரு மாவட்டத்திற்கு இட மாறுதல் பெற, இடைநிலை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு, ஜூலை 7ம் தேதி நடக்கிறது.

அதற்கு மறுநாள், பட்டதாரி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Read More

UGC - NET DEC, 2020/JUN, 2021 List of Candidates Qualified for Award of 'National Fellowship for Scheduled Caste Students (NFSC)

பல்கலை. திருத்தச் சட்டம் உட்பட 21 மசோதாக்கள் நிலுவை - ஆளுநரின் ஒப்புதலுக்காக காத்திருப்பதாக தகவல்

June 26, 2022 0
2020 ஜனவரி மாதம் முதல் கடந்த மே மாதம் வரை சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட, பல்கலைக்கழக திருத்தச் சட்டங்கள் உட்பட 21 சட்ட மசோதாக்கள் ஆளுநர் ஒப்புதலுக்காக காத்திருப்பதாக தெரியவந்துள்ளது.

சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்கள் ஆளுநரின் ஒப்புதலுக்குப் பின் சட்டமாக்கப்படும். ஆனால், தமிழக பேரவையில் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்ட பல்வேறு மசோதாக்கள் ஆளுநரிடம் நிலுவையில் உள்ளதாக தமிழக அரசு குற்றம்சாட்டி வருகிறது.

இது தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து, முதல்வர் ஸ்டாலினும் நேரில் வலியுறுத்தி வருகிறார். இந்நிலையில், 2020 முதல் இந்த ஆண்டு மே 30-ம் தேதி வரை 21 சட்ட மசோதாக்கள் நிலுவையில் இருப்பதாகத் தெரியவந்துள்ளது. அதன்படி, 2020 ஜனவரி 13, 18-ம் தேதிகளில், தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகம் மற்றும் கால்நடைப் பல்கலைக்கழகங்களில் ஆய்வு நடத்தவும், விசாரணை செய்வதற்கும் அரசுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் இரு சட்டத் திருத்த மசோதக்கள் அனுப்பப்பட்டு, நிலுவையில் உள்ளன.

2022 ஜன.12-ல் அனுப்பப்பட்ட, தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் நிர்வாகிகள் பதவிக்காலத்தை 5 ஆண்டுகளில் இருந்து 3 ஆண்டுகளாக குறைப்பது தொடர்பான சட்டத் திருத்த மசோதா நிலுவையில் உள்ளது.

ஏப். 28-ல் நிறைவேற்றப்பட்ட, மாநில பல்கலைக்கழகங்கள் மற்றும் சென்னை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை அரசுக்கு வழங்குவது தொடர்பான மசோதா, மே 5-ல் நிறைவேற்றப்பட்ட தமிழ்நாடு சித்த மருத்துவப் பல்கலைக்கழகத்தை உருவாக்குவது தொடர்பான மசோதா, மே 12-ல் நிறைவேற்றப்பட்ட மதுரை, கோவை, திருப்பூர், ஒசூர் நகர வளர்ச்சிக் குழுமங்கள் உருவாக்குவது தொடர்பான தமிழ்நாடு நகர ஊரமைப்பு திட்ட மசோதா ஆகியவையும் நிலுவையில் உள்ளன. மே 16-ல் நிறைவேற்றப்பட்ட, தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக துணைவேந்தரை தமிழக அரசே நியமிக்க அதிகாரம் அளிக்கும் மசோதா, தமிழக சட்டப்பேரவையில் ஆங்கிலோ இந்தியன் உறுப்பினரை தேர்வு செய்வதை நிறுத்திவைப்பதற்கான மசோதா, தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் மாற்றுத் திறனாளி உறுப்பினரை தேர்வு செய்வதை தடுக்கும் சட்டத்தை திருத்துதல், தமிழ்நாடு அடுக்குமாடிக் குடியிருப்பு உரிமையாளர் சட்டம் ஆகியவை நிலுவையில் உள்ளன.

இவை தவிர, மே16-ல் நிறைவேற்றப்பட்ட, எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தரை அரசே நியமிக்க அதிகாரம் அளிக்கும் மசோதா, டாஸ்மாக் நிறுவன விற்று முதலுக்கு வரி விதிப்பது தொடர்பான மசோதா, தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டத் திருத்தம், தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் 3-வது சட்டத்திருத்தம், 4-வது சட்டத் திருத்தம் தொடர்பான மசோதாக்கள், தமிழ்நாடு நகராட்சி சட்டங்கள் மற்றும் சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் சட்டத் திருத்த மசோதா, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தரை அரசே நியமிக்க அதிகாரம் அளிக்கும் மசோதா, பழைய சட்டங்களை நீக்க வழிசெய்யும் மசோதா உள்ளிட்டவை நிலுவையில் உள்ளன.

இதுதவிர, மே 24-ல் நிறைவேற்றப்பட்ட, போதைப்பொருள், வனம், சைபர் சட்டம், குற்றவாளிகள் தங்கள் உறவினர் இறப்புக்கு செல்ல அனுமதிப்பது தொடர்பான திருத்த மசோதா, தமிழ்நாடு கட்டமைப்பு மேம்பாட்டு வாரியம் சார்பில் தனியார் பங்களிப்பை ஊக்கப்படுத்துவது தொடர்பான மசோதா என மொத்தம் 21 சட்ட மசோதக்கள் ஆளுநரிடம் நிலுவையில் உள்ளன.
Read More

Saturday, June 25, 2022

ஆசிரியர் தகுதி தேர்வு முடித்தவர்களை தற்காலிக ஆசிரியர்களாக பணியமர்த்தலாம்: பள்ளி கல்வித்துறை

June 25, 2022 0
காலியாக உள்ள 13,331 ஆசிரியர் பணியிடங்களை பள்ளி மேலாண்மை குழுக்கள் மூலம் தற்காலிகமாக நிரப்ப தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவில் தொடக்கப் பள்ளிகள் தொடங்கி நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் உள்ளிட்ட அனைத்து பள்ளிகளில் உள்ள காலியிடங்களை நிரப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.

தொடக்கப் பள்ளிகளில் காலியாக உள்ள 4989, இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள், 5154 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள், 3188 , முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. தற்காலிகமாக பணியாற்றும் ஆசிரியர்களுக்கு மாதம் 12 ஆயிரம் வரை ஊதியம் வழங்க பள்ளி கல்வித்துறை பரிந்துரை செய்துள்ளது. இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆசிரியர் தகுதித்தேர்வு முடித்தவர்களுக்கும், இல்லம் தேடி கல்வி திட்டத்தில் பணியாற்றியவர்களுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து காத்திருப்போர் பட்டியலில் இருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், பள்ளி தலைமை ஆசிரியர் ,உதவி தலைமை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் ஆகியோர் அடங்கிய குழுவினர் தகுதியான நபர்களை தற்காலிக அடிப்படையில் ஆசிரியர்களாக தேர்வு செய்ய வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
Read More

Post Top Ad

Your Ad Spot