கால்நடை உதவி மருத்துவர் 1,089 பேர் நியமனம்: அரசு கூடுதல் தலைமை செயலர் தகவல்

''நீதிமன்ற வழக்குகளில் தீர்வு காணப்பட்டு 1,089 கால்நடை உதவி மருத்துவர் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளது,'' என, தலைவாசல் கால்நடை பூங்காவில் ஆய்வு செய்த, தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலர் ஜவஹர் கூறினார்.

சேலம் மாவட்டம் தலைவாசல், வி.கூட்ரோடு பகுதியில், 1,102 ஏக்கரில் 1,000 கோடி ரூபாயில், கால்நடை பூங்கா அமைக்கும் பணி நடக்கிறது. அரசின் கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம், மீனவர் நலத்துறை கூடுதல் தலைமை செயலர் ஜவஹர் தலைமையிலான அலுவலர்கள் நேற்று ஆய்வு செய்தனர்.

இதையும் படிக்க | Important instructions regarding Corrections for CUET (PG) 2022

இதுகுறித்து ஜவஹர் கூறியதாவது:தமிழக கால்நடை பராமரிப்பு துறையில், 3,030 கால்நடை உதவி மருத்துவர் பணியிடங்கள் தற்போது உள்ளன.

இதில், 1,141 உதவி மருத்துவர் பணியிடங்கள் பல்வேறு நீதிமன்ற வழக்குகளால், ௧௦ ஆண்டுகளாக நிரப்பப்படவில்லை. முதல்வர் ஸ்டாலின், துறை அமைச்சர் மற்றும் அலுவலர்களுடன் ஆலோசனை செய்த பின், சட்ட சிக்கல்களுக்கு தீர்வு காணப்பட்டு, நீதிமன்ற உத்தரவு பெற்று, 1,089 உதவி மருத்துவ பணியிடங்களுக்கு பணி நியமனம் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
Post a Comment (0)
Previous Post Next Post