KalviseithiDaily: பள்ளி மாணவர்கள்

KalviseithiDaily

kalviseithidaily.blogspot.com No:1 Education Website in Tamil கல்வி செய்திகள்: Get latest news on Exam Results, tamil nadu school education department news, TN University Results, Exam Schedule Latest News Educational News from Tamilnadu Government, Tamilnadu Educaitonal Minsters Latest Updates, 10th, 11th, 12th, TNTET, TRB, TNPSC, STUDY MATERIALS, ONLINE TESTS, LATEST kalviseithi, Padasalai, tnkalvi, tnpse news, TET updates, TRB news, kalvi news, Padsalai study materials

Subscribe Us

Sigma is

  • Seo Ready
  • Responsive
  • Fast Loading
  • Amazing!

Hot

Post Top Ad

Your Ad Spot
Showing posts with label பள்ளி மாணவர்கள். Show all posts
Showing posts with label பள்ளி மாணவர்கள். Show all posts

Thursday, September 15, 2022

மாணவர்கள் குறைவாக இருந்தால் வேறு பள்ளிக்கு மாற்ற உத்தரவு

September 15, 2022 0
மாணவர்கள் குறைவாக இருந்தால் வேறு பள்ளிக்கு மாற்ற உத்தரவு

The school education department has ordered to transfer students to other nearby schools if there are fewer students in classes 11 and 12 in government schools.

In the order issued by the Department of School Education,

It has been informed that if there are less than 30 students of 11th and 12th standard in the schools in the corporation and municipal areas, and less than 15 students in the schools in the rural areas, they can be transferred to the nearest school.

Following this, district education department officials are engaged in surveying the schools with fewer students

அரசுப் பள்ளிகளில் 11, 12-ஆம் வகுப்புகளில் குறைவான மாணவர்கள் இருந்தால் அருகில் இருக்கும் வேறு பள்ளிக்கு மாற்ற பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை வெளியிட்ட உத்தரவில்,

மாநகராட்சி, நகராட்சி பகுதியில் இருக்கும் பள்ளிகளில் 11, 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் 30-க்கும் குறைவான, ஊரகப் பகுதியில் இருக்கும் பள்ளிகளில் 15-க்கும் குறைவான மாணவர்கள் இருந்தால், அருகில் உள்ள பள்ளிக்கு மாற்றலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, குறைவான மாணவர்கள் உள்ள பள்ளிகளை கணக்கெடுக்கும் பணியில் மாவட்ட கல்வித் துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்
Read More

Wednesday, July 27, 2022

பள்ளிக்கு வராத மாணவர்கள் வீடுகளில் கணக்கெடுக்க உத்தரவு

July 27, 2022 0
பள்ளிக்கு வராத மாணவர்கள் குறித்து, வீடு வீடாக கணக்கெடுப்பு நடத்துமாறு, ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழக பள்ளிக் கல்வி துறையின், ஒருங்கிணைந்த கல்வி திட்டம் சார்பில், பள்ளி செல்லாத குழந்தைகள் கணக்கெடுக்கப்பட்டு, அவர்களை பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.நடப்பு கல்வி ஆண்டில், பள்ளிகளில் சேர்க்கப்பட்ட மாணவர்களில், பள்ளிக்கு வராதவர்கள் குறித்து கணக்கெடுக்குமாறு, ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

வட்டார வள அலுவலர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், தங்கள் எல்லைக்குட்பட்ட பகுதிகளில், பள்ளிக்கு வராத மாணவர்கள் குறித்து கணக்கெடுக்க வேண்டும்.

அவர்களை தொடர்ந்து பள்ளிக்கு வர தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.பருவ காலத்துக்கு ஏற்ப இடம் மாறும் நாடோடி குடும்பத்தினரின் குழந்தைகளுக்கு முக்கியத்துவம் அளித்து, அவர்களை பள்ளிக்கு வர ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என, வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது.
Read More

Tuesday, July 26, 2022

மாணவர்களுக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் குறும்படங்கள் - பள்ளிக்கல்வித்துறை

July 26, 2022 0
பள்ளி மாணவர்களுக்கு உடல்நலம், மனநலம் சார்ந்த விழிப்புணர்வு வாகனம்!

பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான மனநலம் மற்றும் உடல்நலம் சார்ந்த விழிப்புணர்வு தொடக்க விழா மற்றும் அது தொடர்பான வாகனங்கள் தொடக்க விழா சென்னை அசோக் நகர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்று வருகிறது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்நிகழ்வில் பங்கேற்று விழிப்புணர்வு வாகனங்களை தொடங்கி வைத்தார்.

மருத்துவ குழுவினர் அடங்கிய 805 விழிப்புணர்வு வாகனங்களில் பள்ளிகளுக்கு சென்று, மாணவர்களுக்கு மனநலம், உடல்நலம் குறித்து விழிப்புணர்வு தரப்பட உள்ளது.

தேர்வு அச்சம், மன ரீதியான அழுத்தங்களை எதிர்கொள்ள தமிழ்நாடு முழுவதும் மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட இருக்கிறது. பள்ளிகளில் மருத்துவ முகாம் நடைபெறும் போது மாணவர்களுக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் குறும்படங்களும் வெளியிடப்படும் எனவும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More

Friday, July 15, 2022

மாணவர்களை பேருந்தில் இருந்து இறக்கிவிடும் நடத்துநர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை - போக்குவரத்துத்துறை எச்சரிக்கை

July 15, 2022 0
மாணவர்களை பேருந்தில் இருந்து இறக்கிவிடும் நடத்துநர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.: போக்குவரத்துத்துறை எச்சரிக்கை

பள்ளி, கல்லூரி மாணவர்களை பேருந்தில் பயணம் செய்ய அனுமதிக்காமல் இறக்கிவிடும் நடத்துநர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

மாணவர்கள் சீருடை அல்லது கட்டணமில்லா பேருந்து பயண அட்டை வைத்திருந்தால், இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Read More

Wednesday, July 13, 2022

‘எனது குப்பை; எனது பொறுப்பு’ பள்ளி மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு

July 13, 2022 0
கம்பம் தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவியருக்கான ‘எனது குப்பை; எனது பொறுப்பு’ விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.‘எனது குப்பை; எனது பொறுப்பு’ என்பது நமது குப்பைகளை நாமே முறையாக அகற்ற வேண்டும் என்பதே. இதனால் நம் நாட்டினுடைய அழகிய சூழலை பாதுகாப்பதோடு எதிர்கால சந்ததியினருக்கு சுத்தமான சுகாதாரமான ஒரு சூழலை வழங்க உதவியாக இருக்கும் என்பதாலேயே தமிழக அரசு இத்திட்டத்தை தீவிரப்படுத்தி உள்ளது.

இதன்படி கம்பம் நகராட்சி சார்பில் ஒவ்வொரு பள்ளிகளாகச்சென்று மாணவர்களுக்கு ‘எனது குப்பை; எனது பொறுப்பு’ விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். நேற்று கம்பம் தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவியருக்கான இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி தாளாளர் அச்சுதநாக சுந்தர் தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையாளர் பாலமுருகன், சுகாதார அலுவலர்கள் திருப்பதி, சுருளியப்பன் முன்னிலை வகித்தனர்.
ஆணையாளர் பாலமுருகன் மாணவர்களிடையே பேசுகையில், ‘‘ எனது குப்பை;எனது பொறுப்பு என்றால் என்ன என்பதை மாணவர்கள் தெரிந்து கொண்டு, அவர்களது பெற்றோருக்கு தெரிவிக்க வேண்டும். வீடுகளில் சேகரமாகும் குப்பையை தரம் பிரித்து கொடுக்க வேண்டும். என் குப்பைக்கு நானே பொறுப்பு என்று உறுதி யேற்க வேண்டும்.

நகரை குப்பை இல்லாத நகரமாக மாற்றினால் தான் சுகாதார வசதி கிடைக்கும். அரசின் இந்த திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டியது நம் கடமை ஆகும்.’’ என்றார்.இதையடுத்து மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்
Read More

Post Top Ad

Your Ad Spot