KalviseithiDaily: Guest Lectures

KalviseithiDaily

kalviseithidaily.blogspot.com No:1 Education Website in Tamil கல்வி செய்திகள்: Get latest news on Exam Results, tamil nadu school education department news, TN University Results, Exam Schedule Latest News Educational News from Tamilnadu Government, Tamilnadu Educaitonal Minsters Latest Updates, 10th, 11th, 12th, TNTET, TRB, TNPSC, STUDY MATERIALS, ONLINE TESTS, LATEST kalviseithi, Padasalai, tnkalvi, tnpse news, TET updates, TRB news, kalvi news, Padsalai study materials

Subscribe Us

Sigma is

  • Seo Ready
  • Responsive
  • Fast Loading
  • Amazing!

Hot

Post Top Ad

Your Ad Spot
Showing posts with label Guest Lectures. Show all posts
Showing posts with label Guest Lectures. Show all posts

Tuesday, January 3, 2023

கவுரவ விரிவுரையாளர் பணியிடங்களில் மாற்று திறனாளிகளுக்கு 5 % இடங்கள் உறுதி??

January 03, 2023 0
கவுரவ விரிவுரையாளர் பணியிடங்களில் மாற்று திறனாளிகளுக்கு 5 % இடங்கள் உறுதி??

கவுரவ விரிவுரையாளர் பணியிடங்களில் 5 % இடங்களை உறுதி செய்ய மாற்று திறனாளிகள் கோரிக்கை

கவுரவ விரிவுரையாளர் பணியிடங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கான 5 சதவீத இடங்களை முழுமையாக வழங்க தமிழக அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்களுக்கான சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, சங்க நிர்வாகிகள் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: கலை அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் கவுரவ விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான தமிழக அரசின் நடவடிக்கையை வரவேற்கிறோம். மேலும், முதுநிலை படிப்பு, முதுநிலை ஆராய்ச்சி படிப்பு (எம்.ஃபில்), முனைவர் பட்டம் (பி.எச்டி), மாநில விரிவுரையாளர் தகுதித் தேர்வு (ஸ்லெட்), மத்திய விரிவுரையாளர் தகுதித் தேர்வு (நெட்) ஆகியவற்றில் தேர்ச்சிபெற்ற தகுதியான மாற்றுத் திறனாளிகள் அனைவருக்கும் இந்த பணி வாய்ப்பு மிகுந்த பயனுள்ளதாக அமையும்.

எனினும், மாற்றுத் திறனாளிகள் உரிமைச் சட்டம்-2016 பிரிவு 35-ன்படி முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும். அதாவது, கவுரவ விரிவுரையாளர் பணியிடங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு 5 சதவீதம் பணி வாய்ப்பை வழங்க வேண்டும். உயர்கல்வித் துறை அரசாணையின்படி 7,198 கவுரவ விரிவுரையாளர் பணியிடங்கள் உள்ளதாகவும், அதில் 5,303 இடங்கள் ஏற்கெனவே நிரப்பப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள 1,895 இடங்கள் தற்போது நிரப்ப உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சம வாய்ப்புக் கொள்கை:

இதில், தற்போது மாற்றுத் திறனாளிகளுக்கான பணி வாய்ப்பு 1,895-ல் 5 சதவீத இடத்துக்காக மட்டுமே நிரப்பப்பட உள்ளதாக அறிவிப்பு வெளிவந்துள்ளது. ஏற்கெனவே நிரப்பப்பட்ட 5,303 இடங்களில் 5 சதவீதத்துக்கான பணியிடங்கள் முறையாக நிரப்பப்படாத நிலையில் அதனை நேர் படுத்திடும் வகையில், முதல்வரால் வெளியிடப்பட்ட சம வாய்ப்புக் கொள்கையைப் பின்பற்றி 7,198 இடங்களில் 5 சதவீதம் பணி வாய்ப்பு என்ற அடிப்படையில் மாற்றுத் திறனாளிகளுக்கு 360 இடங்களுக்கு குறையாமல் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More

Wednesday, November 16, 2022

உதவிப்பேராசிரியர்கள் நியமனம் கவுரவ விரிவுரையாளர்களுக்கு சிறப்பு போட்டித்தேர்வு: பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தல்

November 16, 2022 0
உதவிப்பேராசிரியர்கள் நியமனம் கவுரவ விரிவுரையாளர்களுக்கு சிறப்பு போட்டித்தேர்வு: பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தல்

உதவிப் பேராசிரியர்கள் நியமனத்தில் கவுரவ விரிவுரையாளர்களுக்கு சிறப்பு போட்டித் தேர்வு நடத்த வேண்டும் என பாமக தலைவர்அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அன்புமணி வெளியிட்ட டிவிட்டர் பதிவு: அரசு கல்லூரிகளுக்கு 4,000 உதவி பேராசிரியர்கள் நியமிக்கப்படவுள்ள நிலையில், அதில் 50% தங்களுக்கு ஒதுக்க வேண்டும் அல்லது சிறப்பு போட்டித் தேர்வு நடத்தி தங்களை பணி நிலைப்பு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கவுரவ விரிவுரையாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் உள்ள 163 அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 5303 கவுரவ விரிவுரையாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

அவர்களில் பலர் 15 ஆண்டுகளுக்கும் மேலாக குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வருகின்றனர். அவர்களின் உழைப்பும், சேவையும் மதிக்கப்பட வேண்டும். உதவி பேராசிரியர்கள் நியமனத்தில் கவுரவ விரிவுரையாளர்களின் பணி அனுபவத்திற்கு சிறப்பு மதிப்பெண் வழங்கப்படும் என்று உயர்கல்வித் துறை அறிவித்திருக்கிறது. ஆனால், இதனால் கவுரவ விரிவுரையாளர்களுக்கு போதிய அளவில் பயன் கிடைக்காது என்று கூறப்படுகிறது.
Read More

Tuesday, May 10, 2022

கவுரவ விரிவுரையாளர்கள் சம்பளம் வாங்கி 2 மாதங்களாச்சு!

May 10, 2022 0
மதுரை காமராஜ் பல்கலை கவுரவ விரிவுரையாளர்களுக்கு இரண்டு மாதமாக சம்பளம் வழங்கப்படாததால் தவிப்பில் உள்ளனர்.இப்பல்கலையில் 40க்கும் மேற்பட்ட முதுகலை பட்டப் படிப்புகள் நடத்தப்படுகின்றன.

யு.ஜி.சி., விதிப்படி ஒரு துறைக்கு ஒரு பேராசிரியர், இரண்டு இணை, 3 உதவிப் பேராசிரியர்கள் இருக்க வேண்டும். ஆனால் பல்வேறு துறைகளில் பேராசிரியர்கள் பற்றாக்குறை உள்ளது. இதனால் 70 க்கும் மேற்பட்ட கவுரவ விரிவுரையாளர்கள் தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்டுஉள்ளனர். இவர்களுக்கு மார்ச், ஏப்., மாத சம்பளம் வழங்கப்படவில்லை. பாதிக்கப்பட்டவர்கள் கூறியதாவது:

யு.ஜி.சி., தகுதி உள்ளவர்களுக்கு மாதம் ரூ.25 ஆயிரம், மற்றவர்களுக்கு ரூ.15 ஆயிரம் மாத சம்பளம் வழங்கப்படுகிறது. நிரந்தர பேராசிரியர்கள் செய்யும் அதே வேலையை நாங்கள் செய்கிறோம். எங்களுக்கு இரண்டு மாதமாக சம்பளம் வழங்கவில்லை. இதுகுறித்து கேட்டால் 'சம்பளம் வழங்கும் பிரிவில் தற்காலிகமாக பணியாற்றிய பலர் பணிநீக்கம் செய்யப்பட்டனர். அவர்கள் வேலையை செய்ய இங்கு யாரும் இல்லை' என சொல்கின்றனர். இப்பிரச்னையை துணைவேந்தர் குமார் கவனத்திற்கு கொண்டு செல்ல முயன்றும் அவரை பார்க்க அனுமதி கிடைக்கவில்லை. சம்பளம் வழங்க அவர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
Read More

Tuesday, December 7, 2021

கவுரவ விரிவுரையாளர்களுக்கு தொகுப்பூதியமாக 29.07 கோடி ஒதுக்கீடு: அரசாணை வெளியீடு

December 07, 2021 0
கவுரவ விரிவுரையாளர்களுக்கு தொகுப்பூதியமாக 29.07 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது.இதுகுறித்த அரசாணையில் கூறியிருப்பதாவது: 2020-21ம் கல்வி ஆண்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் சுழற்சி -1 ல் ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள 2423 கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஐந்து மாதங்களுக்கான தொகுப்பூதியம் மட்டுமே ஒப்பளிப்பு செய்து ஆணையிடப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள ஆறு மாதங்களுக்குண்டான (அக்டோபர் 2021 முதல் மார்ச் 2022 வரை) தொகுப்பூதியமான 29 கோடியே 7 லட்சத்து 60 ஆயிரம் ரூபாயை நிதி ஒப்பளிப்பு செய்து அரசு ஆணையிடுகிறது. ஒப்பளிப்பளிப்பு செய்யப்பட்ட செலவினத்திற்கு தேவைப்படும் கூடுதல் நிதி ஒதுக்கம் 23 கோடியே 47 லட்சத்து 40 ஆயிரம் ரூபாயை 2021-22ம் ஆண்டிற்கான இறுதி திருத்த நிதி ஒதுக்கத்தில் ஒதுக்கீடு செய்யப்படும். ஒப்பளிக்கப்பட்ட செலவினத்தை மேற்கொள்ள கல்லூரி கல்வி இயக்குநருக்கு அதிகாரமளிக்கப்படுகிறது. மேலும் இச்செலவினம் 2021-22ம் ஆண்டிற்கான துணை மானியக் கோரிக்கையில் சேர்க்கப்பட்டு சட்டமன்ற பேரவையின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட வேண்டும்.இச்செலவினத்தை 2021-22ம் ஆண்டிற்கான துணை மதிப்பீடுகளில் சேர்ப்பதற்கு உரிய வரைவு விளக்கக் குறிப்பினையும் மற்றும் இறுதி திருத்த நிதி ஒதுக்கத்தில் சேர்ப்பதற்கு உரிய கருத்துருவினையும் தனித்தனியாக உரிய நேரத்தில் கல்லூரிக் கல்வி இயக்குநர் நிதித்துறைக்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.ஒப்பளிக்கப்பட்ட செலவினத்தை மேற்கொள்ள கல்லூரி கல்வி இயக்குநருக்கு அதிகாரமளிக்கப்படுகிறது.
Read More

Saturday, October 2, 2021

அரசு கல்லூரிகளில் தற்காலிக பேராசிரியர்களை நியமிக்கலாம் - அரசு அனுமதி

October 02, 2021 0
தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சுழற்சி-2 பாடப்பிரிவுகளை நடத்துவதற்கு வசதியாக 1,661 கவுரவ பேராசிரியர்களை நியமித்து கொள்ளலாம் என அரசு அனுமதித்துள்ளது.

தொகுப்பூதிய அடிப்படையில் அந்த பேராசிரியர்களுக்கு மாதம் ரு.20 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக அரசு ரூ.36 கோடியே 54 லட்சம் நிதி ஒதுக்கி உள்ளது. 59 கல்லூரிகளில் உள்ள இந்த காலி பணியிடங்களுக்கு பல்கலைக்கழக மானியக்குழு நிர்ணயித்துள்ள கல்வித்தகுதி பெற்ற கவுரவ பேராசிரியர்கள் தான் நியமிக்கப்பட வேண்டும் என்றும் அரசு ஆணையிட்டுள்ளது
Read More

Post Top Ad

Your Ad Spot