Post Top Ad
Your Ad Spot
Showing posts with label Scholarships. Show all posts

Tuesday, February 7, 2023
Tuesday, November 29, 2022
சிறப்பு உதவித்தொகை: நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் திறன்மிகு விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித்தொகைத் திட்டம் மூன்று வகைகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
1. தலைசிறந்த விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித்தொகை (ஒலிம்பிக்கில் இடம் பெற்றுள்ள விளையாட்டுக்கள் மட்டும்) (Special Scholarship for Elite Sports persons Scheme- ELITE)
2. பன்னாட்டு அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வெல்வதற்கு ஊக்குவிக்கும் திட்டம் (Mission International Medals Scheme - MIMS)
3. வெற்றியாளர்கள் மேம்பாட்டுத் திட்டம் (Champions Development Scheme - CDS)
ஊக்கத்தொகை பெறுவதற்கான தகுதிகள்
1. பொதுவான தகுதி:
மாநில, தேசிய மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வென்ற தமிழ்நாட்டை சேர்ந்த விளையாட்டு வீராங்கனைகளுக்கு இந்த ஊக்கத்தொகை வழங்கப்படும். விண்ணப்பதாரர்கள் தேசிய அளவிலான போட்டிகளில் தமிழ் நாட்டின் சார்பில் பங்கெடுத்து பதக்கம் வென்றிருக்க வேண்டும்.
2. தலைசிறந்த விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித்தொகை (ஒலிம்பிக்கில் இடம் பெற்றுள்ள விளையாட்டுக்கள் மட்டும்) (Special Scholarship for Elite Sports persons Scheme - ELITE) (அதிகபட்சம் 5 நபர்கள் வரை)
(i) கடந்த 2-ஆண்டுகளில் ஒரு முறையாவது உலக தரவரிசை பட்டியலில் முதல் 100 இடங்களில் இடம் பெற்றிருக்க வேண்டும்.
அல்லது
கடந்த 2 ஆண்டு காலங்களில் ஒலிம்பிக் அல்லது உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் (நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுபவை) பங்கு பெற்றிருக்க வேண்டும்.
ஆசிய விளையாட்டு போட்டி / காமன்வெல்த் போட்டிகள் அல்லது ஆசிய சாம்பியன்ஷிப் / காமன்வெல்த் சாம்பியன்ஷிப் போட்டிகளில் கடந்த இரண்டு ஆண்டு காலங்களில் முதல் 8 இடங்களில் இடம் பெற்றிருக்க வேண்டும்.
(ii) ஒலிம்பிக்கில் தனிநபர் / இரட்டையர் பிரிவு போட்டிகளில் பங்கேற்றிருக்க வேண்டும்.
(iii) கடந்த 4 ஆண்டுகளில் தேசிய அளவிலான போட்டிகளில் தமிழ்நாடு சார்பில் பங்கேற்றிருக்க வேண்டும்.
3. பன்னாட்டு அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வெல்வதற்கு ஊக்குவிக்கும் திட்டம் (Mission International Medals Scheme - MIMS) (அதிகபட்சம் 50 நபர்களுக்கு / 5 மாற்றுத்திறனாளிகள் உட்பட)
(i) அரசு அல்லது அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டு சங்கங்களால் நடத்தப்பட்ட தேசிய அளவிலான சீனியர் சாம்பியன்ஷிப் போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்றிருக்க வேண்டும்.
(ii) ஒலிம்பிக் / ஆசிய விளையாட்டு போட்டி / காமன்வெல்த் போட்டியில் தனிநபர் விளையாட்டு பிரிவுகளில் பங்கேற்றிருக்க வேண்டும்.
(iii) 1.12.2022 அன்று 23 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
4. வெற்றியாளர்கள் மேம்பாட்டுத் திட்டம் (Champions Development Scheme-CDS) (அதிகபட்சம் 100 நபர்களுக்கு மிகாமல் / 10 மாற்றுத்திறனாளிகள் உட்பட)
(i) அரசு/ அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ள விளையாட்டு அமைப்புகளால் நடத்தப்பட்ட தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் / வெள்ளிப் பதக்கம் வென்றவர்கள்
(ii) 1.12.2022 அன்று 20 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
தேர்வு முறை
பெறப்படும் விண்ணப்பங்களில் தகுதியான வின்ணப்பங்கள் இதற்கென அரசால் அமைக்கப்பட்ட உயர்மட்ட குழு (High Level Selection Committee) மூலம் ஆய்வு செய்ய்யபடும். அதனடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் (Shortlisted Candidates) நேர்முக தேர்வுக்கு அழைக்கப்படுவர். இறுதியாக தேர்ந்தெடுக்கும் விண்ணப்பதாரர்கள் இத்திட்டத்தில் சேர்க்கப்படுவர். அதிகபட்சம் அவர்களுக்கு விதிகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு இரண்டு ஆண்டுகள் வரை உதவித்தொகை வழங்கப்படும்.
இத்திட்டங்களில் தேர்தெடுக்கப்படும் விளையாட்டு வீரர்/ வீராங்கனைகள் அவர்தம் காப்பாளர் தங்கள் முழுமையான விவரங்கள் மற்றும் 2 ஆண்டுகால இலக்குகள் (Deliverables and outcome for two years) குறித்த விவரங்களுடன் SDAT உடன் ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டும். பன்னாட்டு அளவிலான போட்டிகளில் தொடர்ந்து பதக்கங்கள் வெல்பவர்களுக்கு கூடுதல் கால நீட்டிப்பு வழங்கப்படும். ஆனால் அதனை உரிமையாக கோர இயலாது. இத்திட்டங்களில் உதவித்தொகை பெறுவோர், தாம் பங்கேற்கும் அனைத்துப் போட்டிகளிலும், போட்டி விதிமுறைகளுக்குட்பட்டு தமிழ்நாடு அரசு மற்றும் SDAT-ஐ தங்கள் ஸ்பான்சராக வெளிபடுத்தும் வகையில் சீருடை அணிய வேண்டும்.
வழங்கப்படும் உதவித்தொகை
தேர்ந்தெடுக்கப்படும் வீரர் வீராங்கனைகளுக்கு அதிகபட்சமாக இரண்டு ஆண்டுகள் வரை அவர்கள் விளையாட்டு பயிற்சிகளுக்கான செலவினங்களை திரும்ப வழங்கிடும் வகையில் உதவித்தொகை வழங்கப்படும். திட்டத்தில் பயன்பெறும் வீரர்/வீராங்கனைகள் ஒவ்வொரு மாதமும் தங்கள் பயிற்சி விவரங்கள், போட்டிகளில் பங்கேற்ற விவரங்கள், காயம் மற்றும் சிகிச்சை விவரங்கள் (ஏதும் இருப்பின்) உள்ளிட்டவற்றை இணையவழியில் SDAT இணையதளத்தில் அவர்களுக்கென வழங்கப்பட்டுள்ள பிரத்யேக பக்கத்தில் பதிவேற்ற வேண்டும்.
உதவித்தொகை காலத்தில் மூன்று மாதங்கள் வரை (தொடர்ந்து/ தனித்தனியாக) விவரங்களை இணைய வழியில் பதிவேற்றாதவர்கள், ஆறு மாதங்கள் வரை எவ்வித போட்டிகளிலும் பங்கேற்காதவர்கள், ஓர் ஆண்டு வரை தேசிய அளவிலான போட்டி அல்லது அதற்கு மேலான போட்டிகளில் முதல் 8 இடங்களுக்குள் பெற இயலாதவர்கள், இரண்டு ஆண்டுகள் வரை எவ்வித சர்வதேச பதக்கமும் பெறாதவர்கள் ஆகியோருக்கு உதவித்தொகை நிறுத்தப்படும்.
மேற்கண்ட உதவித்தொகை, பின்வரும் நோக்கங்களுக்காக வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை
இத்திட்டங்களில் சேர்ந்து பயன்பெற விரும்பும் விளையாட்டு வீரர் வீராங்கனைகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளம் sdat@tn.gov.in மூலம் தங்களது விண்ணப்பங்களை 30.11.2022 முதல் 15.12.2022 மாலை 5 மணி வரை சமர்ப்பிக்கலாம். ஏற்கனவே அஞ்சல் வழியில் / நேரடியாக விண்ணப்பிருந்தாலும், மீண்டும் இணையவழியில் விண்ணப்பிக்க வேண்டும். இணைய வழியில் வரும் விண்ணப்பங்களைத் தவிர பிற விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் ஏற்கப்படமாட்டாது.
மேலும் விவரங்களுக்கு ஆடுகளம் தகவல் மையத்தினை அனைத்து வேலை நாள்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர்பு கொள்ளலாம்.
Friday, October 28, 2022
ரூ.1,000 உதவித் தொகை: நவ. 1 முதல் முதலாமாண்டு மாணவிகள் விண்ணப்பிக்கலாம்
ரூ.1,000 உதவித் தொகை: முதலாமாண்டு மாணவிகளும் விண்ணப்பிக்கலாம்
சென்னை: புதுமைப் பெண் திட்டத்தில் உதவித் தொகை பெற முதலாமாண்டு கல்லூரி மாணவிகள் நவம்பர் 1ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
அரசுப் பள்ளிகளில் 6-12ஆம் வகுப்பு வரை படித்து, உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித் தொகை வழங்கும் புதுமைப் பெண் திட்டத்தை செப்டம்பர் 5ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இந்த திட்டத்தின் கீழ், இதுவரை 2,3,4ஆம் ஆண்டு பயிலும் சுமார் 1.10 லட்சம் மாணவிகள் பயனடைந்து வருகிறார்கள். இந்த நிலையில், முதலாமாண்டு பயிலும் மாணவிகளும் உதவித் தொகை பெற இந்த திட்டத்துக்கு நவம்பர் 1ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுமைப் பெண் திட்டத்தில் உதவித் தொகை பெற விரும்பும் மாணவிகள், கல்வி நிறுவனங்கள் வாயிலாக நவ.1 முதல் 11-ஆம் தேதி வரை www.puthumaipenn.tn.gov.in விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கூறப்பட்டிருப்பதாவது, உயா்கல்வி பயிலும் (முதலாமாண்டு) மாணவிகள் இணையதளத்தில் மாதம் ரூ.1,000 உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம். இதில், கல்வி நிறுவனங்கள் வாயிலாக நவம்பா் 1-ஆம் தேதி முதல் 11-ஆம் தேதி வரை பதிவு செய்யலாம். நேரடியாக விண்ணப்பிக்கக் கூடாது. அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவிகள் மட்டுமே இந்தத் திட்டத்துக்கு தகுதியானவா்கள். இதற்காக, நவம்பா் 11-ஆம் தேதி வரை சிறப்பு முகாம்கள் நடைபெறும்.
மாணவிகள் தவறாமல் ஆதாா் அட்டை, மாற்றுச் சான்றிதழ் சமா்ப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தை நிறைவு செய்யும் முறையில் சந்தேகம் இருப்பின், சமூக நல இயக்குநரக அலுவலகத்தில் மாநில அளவில் செயல்படும் உதவி மையத்தைத் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Wednesday, October 26, 2022
சிறுபான்மையின மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற கால அவகாசம் நீட்டிப்பு!

சிறுபான்மையின மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என்று கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் பயிலும் சிறுபான்மை இஸ்லாமிய, கிறித்துவ, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் ஜெயின் மதங்களைச் சேர்ந்த மாணவ-மாணவிகளுக்கு மத்திய அரசின் பள்ளி கல்வி, உயர்கல்வி, தொழிற்பயிற்சி கல்வி மற்றும் பேகம் ஹசரத்மஹால் உதவி தொகை திட்டத்தின் கீழ் புதியது மற்றும் புதுப்பித்தல் உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி 2021-2022-ம் ஆண்டுக்கான உதவி தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் www.scholarships.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்க வருகிற 31-ந் தேதி வரை காலநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. தகுதி வாய்ந்த சிறுபான்மையின மாணவ, மாணவிகள் ஏற்கனவே விண்ணப்பிக்காமல் இருந்தால் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் விண்ணப்பித்து பயனடையலாம். மேலும் இதுபற்றிய கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொண்டு தகவல் பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளனர்.

Tuesday, September 6, 2022
கல்வி உதவித்தொகை: விண்ணப்பங்களைப் புதுப்பிக்கலாம்
மத்திய மனித வளத் துறையின் கல்வி உதவித்தொகையைப் பெறும் கல்லூரிமற்றும் பல்கலைக்கழக மாணவா்கள் தங்கள் விண்ணப்பங்களை புதுப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள்.
இது குறித்து உயா்கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
2-ஆம் ஆண்டு பி.யூ.சி. தோ்வில் 80 சதவீதத்திற்கும் அதிகமாக மதிப்பெண் பெற்று உயா்கல்வி (கல்லூரி மற்றும் பல்கலைக்கழகம்) பயின்றுவரும் மாணவா்களுக்கு மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை கல்வி உதவித்தொகை அளித்துவருகிறது.
இந்த மாணவா்கள் தங்கள் கல்வி உதவித்தொகையை தொடா்ந்து பெற விண்ணப்பங்களை புதுப்பிக்க வேண்டும். எனவே, உரிய ஆவணங்களுடன் செப்.30-ஆம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட கல்லூரி முதல்வா்களிடம் விண்ணப்பங்களை அளிக்கலாம் அல்லது மனித வள மேம்பாட்டுத் துறை கல்வி உதவித் தொகை, ஒருங்கிணைப்பு அதிகாரி, அறை எண்: 302, மூன்றாவது தளம், பி.யூ. கல்வித்துறை, 18-ஆவது குறுக்குத்தெரு, மல்லேஸ்வரம், பெங்களூரு-12 என்ற முகவரியிலும் அளிக்கலாம்.

Thursday, July 14, 2022
கல்வி உதவித் தொகையுடன் முதுகலை பட்டப்படிப்பு சேர்க்கைக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்..!

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ஐந்தாண்டு ஒருங்கிணைந்த தமிழ் முதுகலை பட்டப்படிப்பு 2022ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஆர்வம் உள்ளவர்கள் www.ulakaththamizh.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது., "தமிழ்மொழி வளர்ச்சிக்கெனத் தமிழக அரசால் தோற்றுவிக்கப்பட்ட உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் பல்வேறு கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சிப் பணிகள் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
அவ்வகையில் தமிழ்ப் பல்கலைக்கழக ஏற்புடன், ஐந்தாண்டு ஒருங்கிணைந்த தமிழ் முதுகலை பட்டப்படிப்பு (Five Year Integrated M.A. Tamil), இந்நிறுவனத்தில் ஆண்டுதோறும் தொடர்ந்து நடத்தப் பெற்று வருகின்றன. 2022-23ஆம் கல்வியாண்டிற்கான மேல்குறிப்பிட்டுள்ள பட்டப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை தொடங்கப்பெறவுள்ளது.
விண்ணப்பங்கள் தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர் வலைத்தளத்தில் (www.tamiluniversity.ac.in) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது அஞ்சல் வழியிலும் பெற்றுக் கொள்ளலாம். உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வழியாக இப்பட்டப்படிப்பினை பயில விரும்புவோர் சேர்க்கைத் தொடர்பான விதிமுறைகள்/தகவல்களை www.ulakaththamizh.in என்ற இணைய முகவரியில் தெரிந்து கொள்ளலாம். இருபாலருக்கெனத் தனித் தனியே கட்டணம் இல்லா தங்கும் விடுதி வசதி உள்ளன. முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும். நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பம் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ இறுதியாகப் படித்த கல்விச் சான்று மற்றும் மாற்றுச்சான்றிதழ் (சான்றொப்பமிடப்பட்டது) நகலுடன் இணைத்து " இயக்குநர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், இரண்டாம் முதன்மைச் சாலை, மையத் தொழில்நுட்பப் பயிலக வளாகம், தரமணி, சென்னை -600113" என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
விண்ணப்பம் (கட்செவி (whatapp) எண் குறிப்பிட்டு) வந்து சேர வேண்டிய இறுதி நாள் 5.8.2022 ஆகும். மேலும், கூடுதல் தகவல்பெற இயக்குநர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், இரண்டாம் முதன்மைச் சாலை, மையத் தொழில்நுட்பப் பயிலக வளாகம், தரமணி, சென்னை -600113 (தொலைபேசி-044-22542992) என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்" என கூறப்பட்டுள்ளது.

ரூ.1,000 உதவித்தொகை: விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு - உயர்கல்வித்துறை
அரசுப்பள்ளிகளில் 6-12 வரை படித்து, தற்போது கல்லூரி பயிலும் மாணவியருக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டத்துக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் வரும் 18-ம் தேதி வரை நீட்டிப்பு
கல்லூரி மாணவிகளுக்கு வழங்கப்பட உள்ள ரூ.1,000 உதவித்தொகைக்கான பதிவை வரும் 18 ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து உயர்கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்து இருப்பதாவது: கல்லூரிமாணவிகளுக்கு ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் திட்டத்தில் இது வரை 3.58 லட்சம் மாணவிகள் விண்ணபித்து உள்ளனர். இதற்கான கடைசி தேதி கடந்த 10 ம் தேதி வரை என கூறப்பட்டது. இந்நிலையில் இத்திட்டத்தில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி வரும் 18 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

Sunday, July 10, 2022
மாணவியருக்கு மாதம் ரூ.1,000 - விண்ணப்பித்தோரின் எண்ணிக்கை
The deadline to apply for benefits under the scheme which provides Rs.1,000 per month to students studying in government schools and studying in colleges ended yesterday.
A total of 3,58,304 students applied to get Rs.1,000 per month.
அரசுப்பள்ளிகளில் படித்து, கல்லூரி பயிலும் மாணவியருக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெற விண்ணப்பிக்கும் அவகாசம் நேற்றுடன் நிறைவு
மொத்தம் 3,58,304 மாணவியர் மாதம் ரூ.1,000 பெற விண்ணப்பம்.
தமிழகம் முழுவதும் மூவலூர் ராமாமிர்தம் உயர்கல்வி மேம்பாட்டு உறுதித் திட்டத்தில் மாதம் ரூ.1,000 பெற 3.58 லட்சம் மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர்.
மூவலூர் ராமாமிர்தம் உயர்கல்வி மேம்பாட்டு உறுதித் திட்டம் மூலம், பெண்கள் உயர்கல்வி இடைநிற்றலை தடுக்க 12 ஆம் வகுப்பு முடித்த அரசுப் பள்ளி மாணவியர்கள் கல்லூரியில் சேர்ந்து அவர்களின் படிப்பு முடியும் வரை அவர்களது வங்கிக் கணக்கில் மாதம் ரூ.1,000 நேரடியாக செலுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.
அதன்படி,மாதம் ரூ.1000 பெரும் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க ஜூன் 30 ஆம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், ஜூலை 10 ஆம் தேதி வரை விண்ணப்பிப்பதற்கா கால அவகாசம் நீட்டித்து உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், மூவலூர் ராமாமிர்தம் உயர்கல்வி மேம்பாட்டு உறுதித் திட்டத்தில் மாதம் ரூ.1,000 பெற தமிழகம் முழுவதிலும் இருந்து 3,58,304 லட்சம் மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர் என்று உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Friday, July 8, 2022
உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் திட்டம்: விண்ணப்பிக்க நாளை கடைசிநாள்

உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் திட்டத்தில் விண்ணப்பிக்க நாளை கடைசிநாள். அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயின்ற மாணவிகள் உயர்கல்வி பயில ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படுகிறது.

Thursday, July 7, 2022
EMIS - Steps for upload Bonafide Certificate for Moovalur Ramamirtham Ammaiyar Scheme - PDF
Samagra Shiksha - District Moovalur Ramamirtham Ammaiyar Higher study Assurance Scheme
Steps for upload Bonafide Certificate for Moovalur Ramamirtham Ammaiyar Scheme
1. Login to School login using
2. Click Students- > Academic Verification- > Verify Student Schools https://emis.tnschools.gov.in/login
3. The following window will be displayed .
👇👇👇👇👇👇👇👇👇
Steps to upload Bonafide Certificate in M R Higher Studies Assurance Scheme
CLICK HERE TO DOWNLOAD
Bonafide Certificate Form - CLICK HERE TO DOWNLOAD

Sunday, July 3, 2022
TN NGOs Scholarship - 2022
TN NGOs Scholarship - 2022
தமிழ்நாடு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 12 ஆம் வகுப்பு படித்த மாணவ-மாணவியர்களே!
உங்கள் உயர்கல்வி கனவை நனவாக்க பின்வரும் தொண்டு நிறுவனங்கள் காத்திருக்கின்றன.
உயர்கல்வி உதவிக்கு விண்ணப்பிக்க:
NGO list in reverse alphabetical order
1. Team Everest - www.everestscholarship.com
2. Siruthuligal Foundation - https://bit.ly/SiFoApplicationForm
3. Shooting Stars Foundation - www.bit.ly/ssfscholars
4. SEEEDS - www.seeeds.org/scholarship
5. Maatram Foundation - www.maatramfoundation.com/admissions/
6. Hope3 Foundation - www.hope3.org/apply2022
7. Gold Heart Foundation - www.goldheartfoundation.org
8. Chief Makers - https://chiefmakers.com/scholarship/
9. Anandham Youth Foundation - www.anandham.org
10. Agaram Foundation - https://www.agaram.in/contact
முக்கியமான குறிப்பு :
மேற்கண்ட தொண்டு நிறுவனங்கள் தங்கள் உயர்கல்வி உதவிக்கு விண்ணப்பிக்கும் மாணவ-மாணவியர்களிடமிருந்து எந்தவிதமான கட்டணங்களையும் வசூலிப்பதில்லை.
மேலே உள்ள இணைப்புகள் மூலம் இந்த தன்னார்வ தொண்டு நிறுவனங்களை நேரடியாக தொடர்பு கொள்ளவும்.
Monday, June 27, 2022
உயர்கல்வி பயிலச் செல்லும் மாணவிகளுக்கு ரூ.1,000 உதவித்தொகை: யார் யார் விண்ணப்பிக்கலாம்?
உயர்கல்வி பயிலச் செல்லும் மாணவிகளுக்கு ரூ.1,000 உதவித்தொகை:
யார் யார் விண்ணப்பிக்கலாம்?
சென்னை: தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் படித்து, உயர்கல்வி பயிலச் செல்லும் கல்லூரி மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித் தொகை வழங்கும் திட்டத்துக்கு விண்ணப்பிப்பது குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில்,
தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவிகளின் உயர்கல்வி சேர்க்கையினை அதிகரிக்கும் பொருட்டு, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித்திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளிகளில் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயின்று மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும், சான்றிதழ் படிப்பு / பட்டயப்படிப்பு / பட்டப்படிப்பு / தொழிற்கல்வி ஆகியவற்றில் இடைநிற்றல் இன்றி கல்வி பயின்று முடிக்கும் வரை, மாதம் ரூ.1,000/- அவர்களின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்படும். இந்த மாணவிகள் ஏற்கனவே பிற கல்வி உதவித்தொகை பெற்று வந்தாலும் இத்திட்டத்தில் கூடுதலாக உதவி பெறலாம். திட்டத்தின் நோக்கம்.
பெண்களுக்கு உயர் கல்வி அளிப்பதன் மூலம் பாலின சமத்துவத்தை ஏற்படுத்துதல்.
குழந்தை திருமணத்தைத் தடுத்தல்
குடும்ப சூழ்நிலை மற்றும் வறுமை காரணமாக மேற்படிப்பு படிக்க இயலாத மாணவிகளுக்குப் பொருளாதார ரீதியாக உதவுதல்.
பெண் குழந்தைகளின் இடைநிற்றல் விகிதத்தைக் குறைத்தல்
பெண் குழந்தைகளின் விருப்பத் தேர்வுகளின்படி அவர்களின் மேற்படிப்பை தொடர ஊக்குவித்தல்
உயர் கல்வியினால் பெண்களின் திறமையை ஊக்கப்படுத்தி அனைத்துத் துறைகளிலும் பங்கேற்கச் செய்தல்.
உயர்கல்வி உறுதித்திட்டத்தின் மூலம் பெண்களுக்கான தொழில் வாய்ப்புகளை அதிகரித்தல்.
பெண்களின் சமூக மற்றும் பொருளாதாரப் பாதுகாப்பை உறுதி செய்தல்.
இத்திட்டத்தின் மூலம் அறிவார்ந்த சமுதாயத்தை உருவாக்க வழிவகை செய்தல்.
திட்டத்தில் பயன் பெறுவதற்கான தகுதிகள்
மாணவிகள் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் படித்து தமிழ்நாட்டில் உயர்கல்வி பயில்பவராக இருத்தல் வேண்டும்.
தனியார்ப் பள்ளியில் கல்வி பெறும் உரிமை(ஆர்டிஇ)யின் கீழ் 6ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை பயின்ற பின் 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்த மாணவியர் இத்திட்டத்தின் கீழ் பயனடையலாம். அரசுப் பள்ளிகள் என்பது பஞ்சாயத்து யூனியன் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள், ஆதிதிராவிடர் நலப் பள்ளிகள், நகராட்சிப் பள்ளிகள், மாநகராட்சி பள்ளிகள், பழங்குடியினர் நலப் பள்ளிகள், கள்ளர் சீர்மரபினப் பள்ளிகள், பிற்படுத்தப்பட்டோர்/ மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நல பள்ளிகள், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை பள்ளிகள், வனத்துறை பள்ளிகள், சமூகப் பாதுகாப்புத் துறை பள்ளிகள் போன்றவற்றில் பயிலும் மாணவிகளும் இத்திட்டத்தின் கீழ் பயனடையலாம்.
மாணவிகள் 8 (அ) 10 (அ) 12 வகுப்புகளில் படித்து பின்னர் முதன் முறையாக உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் படிப்புக்கு மட்டுமே இத்திட்டம் பொருந்தும்.
[சான்றிதழ், (சர்டிபிகேட் கோர்ஸ்), பட்டயம் (டிப்ளமோ ஐடிஐ / டி.டெட் படிப்புகள்), இளங்கலைப் பட்டம் (பேச்சுலர் டிகிரி), தொழில் சார்ந்த படிப்பு, மற்றும் பாரா மெடிக்கல் படிப்பு போன்றவை].
தொலைதூரக் கல்வி மற்றும் திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவிகளுக்கு இத்திட்டம் பொருந்தாது.
2022-2023ஆம் கல்வியாண்டில், மாணவியர்கள் புதிதாக மேற்படிப்பில் முதலாம் ஆண்டு சேர்ந்த பின்னர், இணையதளம் வழியாக இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். மேலும், இதர முதலாம் ஆண்டிலிருந்து இரண்டாம் ஆண்டு செல்லும் மாணவியரும், இரண்டாம் ஆண்டிலிருந்து மூன்றாம் ஆண்டு செல்லும் இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் மாணவியர்களும், தொழிற்கல்வியைப் பொருத்தமட்டில் மூன்றாம் ஆண்டிலிருந்து நான்காம் ஆண்டிற்கு செல்லும் மாணவிகளுக்கும், மருத்துவக் கல்வியைப் பொருத்தமட்டில் நான்காம் ஆண்டிலிருந்து ஐந்தாம் ஆண்டு செல்லும் மாணவியர்களும் இத்திட்டத்தின் கீழ் பயனடையலாம்.
2021-2022ஆம் ஆண்டில், இறுதியாண்டு பயிலும் மாணவிகள் இத்திட்டத்தின் கீழ் பயனடைய இயலாது. ஏனெனில் ஒரு சில மாதங்களில் இம்மாணவியர்கள் தங்களது இளநிலைப் படிப்பினை நிறைவு செய்துவிடுவார்கள்.
இத்திட்டத்தின் கீழ் இளநிலை படிப்பு பயிலும் மாணவிகள் மட்டுமே பயனடைய இயலும். முதுநிலை படிப்பு பயிலும் மாணவியர்கள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற இயலாது.
இத்திட்டத்தில் பயன்பெறுவது குறித்து தங்களுக்கு தேவையான தெளிவுரைகள் / கூடுதல் விவரங்களை கட்டணமில்லா தொலைப்பேசி எண்.14417 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு விவரங்களை பெறலாம் என தெரிவிக்கப்படுகிறது.
இளநிலை கல்வி பெறும் அனைத்து மாணவியரும் (இளநிலை முதலாம் ஆண்டு சேரும் மாணவியர்களும், இளங்கலை / தொழிற்கல்வி/ மருத்துவக் கல்வியில் 2ஆம் ஆண்டு முதல் 5ஆம் ஆண்டு வரை பயிலும் மாணவிகளும்) இத்திட்டத்திற்காகப் புதியதாக உருவாக்கப்பட்டுள்ள இணையதளம் https://penkalvi.tn.gov.in வழியாக தங்கள் விண்ணப்பங்களைப் பதிவேற்றம் செய்யக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Monday, June 20, 2022
இந்திய மாணவர்களுக்கு டாடா உதவித்தொகை
அமெரிக்காவின் கர்னெல் பல்கலைக்கழகத்தில் படிக்க விரும்பும் இந்திய மாணவர்களுக்கு, டாடா கல்வி மற்றும் மேம்பாட்டு அறக்கட்டளை உதவித்தொகை வழங்குகிறது.
படிப்புகள்
ஆர்க்கிடெக்சர் அண்ட் பிளானிங், இன்ஜினியரிங், அப்ளைடு எக்னாமிக்ஸ் அண்ட் மேனேஜ்மெண்ட், அக்ரிகல்ச்சர், லைப் சயின்சஸ், பயோலஜிக்கல் சயின்சஸ், பிசிக்கல் சயின்சஸ், சோசியல் சயின்சஸ் ஆகிய துறை படிப்புகளில் சேர்க்கை பெறுபவர்கள் இந்த உதவித்தொகையை பெற விண்ணப்பிக்கலாம்.
தகுதிகள்
இந்திய குடிமகனாக இருக்க வேண்டும். அமெரிக்காவின் கர்னெல் பல்கலைக்கழகத்தில் மேற்கண்ட துறைகளில் ஏதேனும் ஒரு இளநிலை பட்டப்படிப்பில் அட்மிஷன் பெற்றிருக்க வேண்டும். அதனோடு, நிதியுதவி தேவைக்கான வேண்டு கோளையும் விடுத்திருக்க வேண்டும். உதவித்தொகை விபரம்
எட்டு செமஸ்டர் வரையிலான இளநிலை பட்டப்படிப்புகளுக்குரிய கல்விக்கட்டணம், உதவித்தொகைக்கு தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு வழங்கப்படும். ஆர்க்கிடெக்சர் போன்ற எட்டு செமஸ்டர்களுக்கும் அதிகமான படிப்புகளை படிக்கும் மாணவர்கள், மீதமுள்ள செமஸ்டர்களுக்கான கல்விக் கட்டணத்தை அவர்களே ஏற்கவேண்டும். எனினும், தங்கும் செலவு, உணவு, மருத்துவ காப்பீடு, போக்குவரத்து செலவு ஆகியவை அனைத்து மாணவர்களுக்கும் இந்த உதவித்தொகை திட்டத்தின்கீழ் வழங்கப்படும்.
உதவித்தொகை எண்ணிக்கை
மொத்தம் 20 இந்திய மாணவர்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது. அமெரிக்காவின் கர்னெல் பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர்களுக்கு மட்டுமே இந்த உதவித்தொகை வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. விண்ணப்பிக்கும் காலம்
பொதுவாக ஒவ்வொரு ஆண்டும், அக்டோபர் / நவம்பர் மாதங்களில் உரிய ஆவணங்களுடன், இந்த உதவித்தொகை வேண்டி விண்ணப்பிக்க வேண்டும். டிசம்பர் மாதத்தில், உதவித்தொகைக்கு தேர்வு செய்யப்படும் மாணவர்களின் பட்டியல் அறிவிக்கப்படும்.
விபரங்களுக்கு: https://admissions.cornell.edu/apply/international-students/tata-scholarship

Thursday, June 16, 2022
இளநிலை அல்லது முதுநிலை பட்டப்படிப்பு மாணவர்களுக்கு கிரிப்பித் உதவித்தொகை - விண்ணப்பிக்க கடைசி நாள்: ஆகஸ்ட் 5
கிரிப்பித் உதவித்தொகை
ஆஸ்திரேலியாவின் கிரிப்பித் பல்கலைக்கழகத்தில் இளநிலை அல்லது முதுநிலை பட்டப்படிப்புகளை படிக்க விரும்பும் இந்திய மாணவர்கள், அப்பல்கலைக்கழகத்தின் உதவித்தொகையை பெறலாம்.
பல்கலைக்கழக அறிமுகம்:
1975ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பன் நகரில் உருவாக்கப்பட்ட இப்பல்கலைக்கழகம் சமூக மற்றும் சுற்றுச்சூழல் பொறுப்பை உணர்ந்து அதற்கேட்ப படிப்புகளையும், கல்வி முறைகளையும் வழங்குகிறது. நவீன ஆசிய மற்றும் சுற்றுச்சூழல் அறிவியல் படிப்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் இப்பல்கலைக்கழகம்ம் சர்வதேச அளவிலான தரவரிசையில் முதல் 2 சதவீத இடங்களில் தொடர்ந்து நீடிக்கிறது.
6 கல்வி வளாகங்களில் மொத்தம் 50 ஆயிரம் மாணவர்களைக் கொண்டுள்ள இப்பல்கலைக்கழகம் 200க்கும் மேற்பட்ட பட்டப்படிப்புகளை வழங்குகிறது. சர்வதேச அளவிலான முன்னாள் மாணவர் கூட்டமைப்பில் 130க்கும் அதிகமான நாடுகளைச் சேர்ந்த 2.5 லட்சம் பட்டதாரிகள் இடம் பெற்றுள்ளனர். இரட்டை பட்டப்படிப்புகள்:
சந்தையின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ப வேலைக்கு தேவையான படிப்பையும், மனதிற்கு பிடித்த படிப்பையும் ஒரே நேரத்தில் மேற்கொள்ளும் வகையில், இரண்டு பட்டப்படிப்புகளை கற்கும் வாய்ப்பை இப்பல்கலைக்கழகம் வழங்குகிறது. குறிப்பாக, கலை மற்றும் வணிகம், ஏவியேஷன் மற்றும் இன்பர்மேஷன் டெக்னாலஜி, கம்யூனிகேஷன், ஜர்னலிசம் மற்றும் வணிகம், இன்ஜினியரிங் மற்றும் டேட்டா சயின்ஸ், பல் மருத்துவம் மற்றும் வணிகம், என்விரான்மெண்டல் சயின்ஸ் மற்றும் டேட்டா சயின்ஸ் உட்பட பல்வேறு இரட்டை பட்டப்படிப்புகளை வழங்குகிறது.
உதவித்தொகை விபரம்:
கிரிப்பித் பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் அனைத்து இளநிலை அல்லது முதுநிலை பட்டப்படிப்புகளுக்கும் இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது. கல்விக்கட்டணத்தில் 50 சதவீதம் உதவித்தொகையாக, தகுதியுள்ள மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. அடிப்படைத் தகுதிகள்:
* ஆஸ்திரேலியா அல்லது நியூசிலாந்து நாட்டின் குடிமகனாக இருக்கக்கூடாது.
* முந்தைய படிப்புகளில் 5.5 அல்லது அதற்கு மேல் ஜி.பி.ஏ., மதிப்பெண் புள்ளிகள் பெற்றிருக்க வேண்டும்.
* இளநிலை அல்லது முதுநிலை பட்டப்படிப்புகளில் சேர்க்கை பெறுவதற்கான அனைத்து கல்வி மற்றும் ஆங்கில மொழி புலமை தகுதிகளை பெற்றிருக்க வேண்டும்.
காலம்: படிப்பு காலம் முழுவதிலும் 50 சதவீத கல்விக் கட்டணம் உதவித்தொகையாக வழங்கப்படுகிறது.
விண்ணப்பிக்க கடைசி நாள்: ஆகஸ்ட் 5
விபரங்களுக்கு: https://www.griffith.edu.au/

Saturday, June 11, 2022
Friday, May 13, 2022
Friday, April 1, 2022
பள்ளிக் குழந்தைகளுக்கு ஆண்டுதோறும் ரூ.3,600 + ரூ.9,000 உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் - மத்திய அரசு
பாரம்பரிய இசை, நடனம், நாடகத்தில் பயிற்சி மேற்கொள்ளும் பள்ளிக் குழந்தைகளுக்கு ஆண்டுதோறும் ரூ.3,600 + சிறப்புப் பயிற்சிக்காக ரூ.9,000 உதவித்தொகை வழங்குகிறது மத்திய அரசின் கலை பண்பாட்டுத்துறை
உதவித்தொகை பெற தகுதியானவர்கள் ccrtindia.gov.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

Saturday, December 18, 2021
3 முதல் 5-ம் மாணவிகளுக்கு ரூ.500; 6-ம் வகுப்புக்கு ரூ.1,000 உதவித்தொகை
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 3 முதல் 6-ம் வகுப்பு வரை பயிலும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவிகளுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
பெண் குழந்தைகளின் கல்வியை ஊக்குவிப்பதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவரும் நிலையில், கிராமப்புற பெண் கல்வி ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை பத்தாம் வகுப்பு வரை நீட்டிக்க தமிழ்நாடு அரசு சமீபத்தில் உத்தரவிட்டிருந்தது. அந்தவகையில், கிராமப்புற பெண் குழந்தைகள் கல்வி பயில்வதை ஊக்கப்படுத்தும் வகையில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் பெண் குழந்தைகளுக்கு ஊக்கத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, பயிலும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவிகளுக்கு ரூ. 500-யும், 6ம் வகுப்பு பயிலும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவிகளுக்கு ரூ.1000-யும் கல்வி ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது.
இந்நிலையில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 3 முதல் 6ஆம் வகுப்புவரை பயிலும் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த பெண் குழந்தைகளுக்கு கல்வி ஊக்கத்தொகை திட்டத்திற்காக நேற்று முன்தினம் அரசாணை வெளியிடப்பட்டது. அதில், ஊக்கத்தொகை வழங்க அஞ்சலகச் சேமிப்பு கணக்குக்கு பதில், வங்கிகளில் தனிநபர் வைப்புநிதி கணக்கு தொடங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒவ்வொரு மாணவியருக்கும் தனித்தனியாக வங்கிக் கணக்கு தொடங்க ஏதுவாக ரூ.16.75 கோடி நிதி விடுவித்து அரசு உத்தரவிட்டுள்ளது. ஆண்டு வருமானம் ரூ.72,000 என்ற அளவில் உள்ள மாணவியருக்கு மட்டும் ஊக்கத்தொகை நேரடியாக வங்கிக் கணக்கு மூலம் வழங்கப்பட உள்ளது.

மாதம் ரூ.25 ஆயிரம் உதவித்தொகையுடன் சைக்யாலஜி - சைக்யாட்ரி படிப்புகள் - விண்ணப்பிக்க கடைசி நாள்: டிசம்பர் 31
ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் செயல்படும் மத்திய அரசின் கல்வி நிறுவனமான சென்ட்ரல் இன்ஸ்டிடியூட் ஆப் சைக்யாட்ரியில் பல்வேறு படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
வழங்கப்படும் படிப்புகள்:பிஎச்.டி., இன் கிளினிக்கல் சைக்யாலஜிஎம்.பில்., இன் கிளினிக்கல் சைக்யாலஜிஎம்.பில்., இன் சைக்யாட்ரிக் சோசியல் ஒர்க்டிப்ளமா இன் சைக்யாட்ரிக் நர்சிங்
தகுதிகள்: படிப்பு நிலைகளை பொறுத்து கல்வித் தகுதி மாறுபடும்.
உதவித்தொகை: தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு மாதம் ரூ.25 ஆயிரம் வழங்கப்படும்.
மாணவர் சேர்க்கை முறை: நுழைவுத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியான மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: டிசம்பர் 31
விபரங்களுக்கு:https://cipranchi.nic.in/

Tags:
Admissions,
Education,
Education Department,
M.Phil.,
Ph.D.,
Scholarships
Monday, December 13, 2021
பெண் குழந்தைகளுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்குவதற்கான அரசாணை - தமிழக அரசு வெளியீடு
3 முதல் 6-ம் வகுப்பு வரை பயிலும் பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த பெண் குழந்தைகளுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்குவதற்கான அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 3 முதல் 6-ம் வகுப்பு வரை பயிலும் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த பெண் குழந்தைகளுக்கு கல்வி ஊக்கத்தொகை திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது. கல்வி ஊக்கத்தொகை வழங்க ஏதுவாக அஞ்சலக சேமிப்பு கணக்குக்கு பதில், வங்கிகளில் தனிநபர் வைப்புநிதி கணக்கு தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாணவியருக்கும் தனித்தனியாக தனிநபர் வைப்பு நிதி கணக்கு தொடங்க ஏதுவாக ரூ.16.75 கோடி நிதி விடுவித்து உத்தரவிட்டுள்ளது. ஆண்டு வருமானம் ரூ.72,000 என்றளவில் உள்ள மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவியருக்கு மட்டும் கல்வி ஊக்கத்தொகை நேரடியாக வங்கிக்கணக்கு மூலம் வழங்கப்பட உள்ளதாக அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருத்தணியில் இன்று நடைபெறும் விழாவில், 7.56 லட்சம் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு ரூ.2,750 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார். மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.5,500 கோடி கொரோனா சிறப்புக் கடன் உட்பட ரூ.20 ஆயிரம் கோடி கடன் உறுதி செய்யப்படும், 36,218 சுய உதவிக்குழுக்கள் பயன்பெறும் வகையில் ரூ.809.71 கோடியில் ஊரக வாழ்வாதாரத் திட்டம் செயல்படுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 58,463 சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த 7,56,142 உறுப்பினர்களுக்கு ரூ.2,749.85 கோடி மதிப்பிலான கடன் உதவிகள், நலத்திட்ட உதவிகள் இன்று வழங்கப்பட உள்ளன.
Tags:
Announcements,
G.O,
Government,
Scholarships,
TamilNadu
Post Top Ad
Your Ad Spot
Author Details
Templatesyard is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of templatesyard is to provide the best quality blogger templates which are professionally designed and perfectlly seo optimized to deliver best result for your blog.
.jpeg)