KalviseithiDaily: ஆசிரியர்

KalviseithiDaily

kalviseithidaily.blogspot.com No:1 Education Website in Tamil கல்வி செய்திகள்: Get latest news on Exam Results, tamil nadu school education department news, TN University Results, Exam Schedule Latest News Educational News from Tamilnadu Government, Tamilnadu Educaitonal Minsters Latest Updates, 10th, 11th, 12th, TNTET, TRB, TNPSC, STUDY MATERIALS, ONLINE TESTS, LATEST kalviseithi, Padasalai, tnkalvi, tnpse news, TET updates, TRB news, kalvi news, Padsalai study materials

Subscribe Us

Sigma is

  • Seo Ready
  • Responsive
  • Fast Loading
  • Amazing!

Hot

Post Top Ad

Your Ad Spot
Showing posts with label ஆசிரியர். Show all posts
Showing posts with label ஆசிரியர். Show all posts

Monday, September 12, 2022

ஆசிரியர் பயிற்றுநர்கள் 500 பேரை பட்டதாரி ஆசிரியர்களாக பணி மாறுதல் செய்வதற்கான பெயர் பட்டியல்.

September 12, 2022 0
Name list for transfer of 500 teacher trainers to graduate teachers.

ஆசிரியர் பயிற்றுநர்கள் 500 பேரை பட்டதாரி ஆசிரியர்களாக பணி மாறுதல் செய்வதற்கான பெயர் பட்டியல்.

பாட வாரியாக பட்டியல் வெளியீடு :

SUBJECT - NO OF BRTE

TAMIL - 22

ENGLISH - 76

MATHS - 161

SCIENCE - 200

SOCIAL - 41

TOTAL - 500

BRTE to BT Convertion September - 2022 - List Released by CoSE

CLICK HERE TO DOWNLOAD
Read More

Sunday, September 11, 2022

"ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற போராடுவோம்" - மூத்த ஆசிரியர் சங்கத் தலைவர் அறிவிப்பு

September 11, 2022 0
"ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற போராடுவோம்" - மூத்த ஆசிரியர் சங்கத் தலைவர் மாயவன் அறிவிப்பு - "We will fight to fulfill the demands of the teachers" - Senior Teachers Union President's announcement

ஆசிரியர்களின் கோரிக்கைகளை வென்றெடுக்க, மீண்டும் போராட்டங்களை கையில் எடுப்போம் என, மூத்த ஆசிரியர் சங்கத் தலைவர் மாயவன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், ஜாக்டோ ஜியோ மாநாட்டில் பங்கேற்ற ஆசிரியர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமே மிஞ்சியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வீரம் செறிந்த போராட்டங்கள் மூலம் எவ்வளவு பெரிய எஃகு கோட்டைகளாக இருந்தாலும், இடித்து நொறுக்கி வெற்றிக் கனிகளைப் பறிக்க முடியும் என்ற பழமொழிக்கு ஏற்ப, போராட்டங்களை கையில் எடுத்து வெற்றிகளை குவிப்போம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Read More

Saturday, August 6, 2022

அனைத்து மாணவர்கள், ஆசிரியர்களின் இல்லங்களில் மூவர்ணக்கொடி - பள்ளிக்கல்வித்துறை

August 06, 2022 0
ஆகஸ்ட் 13 முதல் 15 வரையிலான நாட்களில் அனைத்து மாணவர்கள், ஆசிரியர்களின் இல்லங்களில் மூவர்ணக்கொடி ஏற்றப்பட வேண்டும்;

மாணவர்களுக்கு தேசியக்கொடி வழங்கி அவர்கள் இல்லங்களில் கொடியை ஏற்ற அறிவுறுத்த வேண்டும்.

-பள்ளிக்கல்வித்துறை
Read More

Saturday, July 30, 2022

ஒரு மாணவி ஆசிரியராகிறார்...!

July 30, 2022 0
ஒரு மாணவி ஆசிரியராகிறார்...

நாவல் எழுதி சேதி சொல்கிறார்!

கோவை ஆர்.எஸ்.புரம் எஸ்.ஆர்.பி., அம்மணியம்மாள் பள்ளியில், பதினொன்றாம் வகுப்பு படிக்கும் மாணவி முத்து அஷ்விதா ரமேஷ், இப்போது ஒரு புத்தகத்தின் ஆசிரியராக மாறியுள்ளார்.

இவர் எழுதியுள்ள 'பெண் மனதில் குரல்' என்னும் நாவல், படிப்பவர்களை ஆச்சரியப்பட வைக்கிறது. மாணவியிடம் பேசினோம்...படிக்கும் போதே ஒரு நூலின் ஆசிரியராக மாறி விட்டீர்களே...எப்படி சாத்தியமானது?'' படிப்புக்காக கட்டுரை எழுத துவங்கினேன். அதுவே கதையாக மாற துவங்கி, இன்று நாவலாக மற்றவர் கரங்களில்தவழ்கிறது. உங்கள் குடும்பத்தை பற்றி?உடன் பிறந்த தம்பி ஒருவர் இருக்கிறார். தந்தைக்கு இதய நோய். தாயார் தையல் வேலை பார்த்து குடும்பத்தை காப்பாற்றி வருகிறார். இதற்கான கரு எங்கிருந்து கிடைத்தது? குடும்ப உறவில் மாமியார்- -- -மருமகள் உறவுகளை அக்கம், பக்கம் வீடுகளில் அதிகம் பார்த்துள்ளேன். நடுத்தர குடும்பத்தில் பிறந்த நான், கதையில் என்னையும் ஒரு கதாபாத்திரமாக (சுவாதி) வடிவமைத்து எழுதியுள்ளேன்.உங்கள் புத்தகம் உருவான விதம் குறித்து?ஆசிரியர்கள் கட்டுரை போட்டி நடத்தும்போது, அதிக பக்கங்கள் எழுத துவங்கினேன்.

சக தோழிகள் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் தந்த ஊக்கத்தால் ஒரு கதை கருவை கையில் எடுத்துக்கொண்டு அதை ஒரு 60 பக்கம் கொண்ட நாவலாக எழுதி விட்டேன். இது என்னையே ஆச்சரியப்பட வைத்தது.

இந்த கதை வாயிலாக, நீங்கள் சொல்ல வரும் செய்தி? ஒரு பெண் எவ்வாறு தைரியத்துடனும், தன்னம்பிக்கையுடனும் இந்த சமுதாயத்தில் வாழ வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளேன். எதிர்காலத்தில் நானும் அவ்வாறே வாழ்வேன்.
Read More

Wednesday, July 27, 2022

பள்ளிக்கு வராத மாணவர்கள் வீடுகளில் கணக்கெடுக்க உத்தரவு

July 27, 2022 0
பள்ளிக்கு வராத மாணவர்கள் குறித்து, வீடு வீடாக கணக்கெடுப்பு நடத்துமாறு, ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழக பள்ளிக் கல்வி துறையின், ஒருங்கிணைந்த கல்வி திட்டம் சார்பில், பள்ளி செல்லாத குழந்தைகள் கணக்கெடுக்கப்பட்டு, அவர்களை பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.நடப்பு கல்வி ஆண்டில், பள்ளிகளில் சேர்க்கப்பட்ட மாணவர்களில், பள்ளிக்கு வராதவர்கள் குறித்து கணக்கெடுக்குமாறு, ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

வட்டார வள அலுவலர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், தங்கள் எல்லைக்குட்பட்ட பகுதிகளில், பள்ளிக்கு வராத மாணவர்கள் குறித்து கணக்கெடுக்க வேண்டும்.

அவர்களை தொடர்ந்து பள்ளிக்கு வர தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.பருவ காலத்துக்கு ஏற்ப இடம் மாறும் நாடோடி குடும்பத்தினரின் குழந்தைகளுக்கு முக்கியத்துவம் அளித்து, அவர்களை பள்ளிக்கு வர ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என, வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது.
Read More

Post Top Ad

Your Ad Spot