KalviseithiDaily: jobs

KalviseithiDaily

kalviseithidaily.blogspot.com No:1 Education Website in Tamil கல்வி செய்திகள்: Get latest news on Exam Results, tamil nadu school education department news, TN University Results, Exam Schedule Latest News Educational News from Tamilnadu Government, Tamilnadu Educaitonal Minsters Latest Updates, 10th, 11th, 12th, TNTET, TRB, TNPSC, STUDY MATERIALS, ONLINE TESTS, LATEST kalviseithi, Padasalai, tnkalvi, tnpse news, TET updates, TRB news, kalvi news, Padsalai study materials

Subscribe Us

Sigma is

  • Seo Ready
  • Responsive
  • Fast Loading
  • Amazing!

Hot

Post Top Ad

Your Ad Spot
Showing posts with label jobs. Show all posts
Showing posts with label jobs. Show all posts

Thursday, January 19, 2023

தமிழ்நாடு பசுமை காலநிலை நிறுவனத்தில் ரூ.85ஆயிரம் சம்பளத்தில் வேலை

January 19, 2023 0


தமிழ்நாடு பசுமை காலநிலை நிறுவனத்தில் காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

நிறுவனத்தின் பெயர் - தமிழ்நாடு பசுமை காலநிலை நிறுவனம்
பதவி - Admin Associate, Technical Officer, Advisor, Finance Officer
காலியிடங்கள் - 08
கல்வித்தகுதி - முதுகலைப் பட்டம் , பி.எச்டி
பணியிடம் - சென்னை
சம்பளம் - 35000-85000
வயது வரம்பு - 45
விண்ணப்பிக்கும் முறை - ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம் - இல்லை
தேர்வு முறை - நேர்காணல்
இணையதள முகவரி - tngreencompany.com/home
கடைசி நாள் - 02,பிப்ரவரி2023
முகவரி - Tamil Nadu Green Climate Company,
7th Floor, Secretariat, Namakkal Kavignar Maaligai,
Fort St. George, Chennai - 600009
Read More

Tuesday, January 10, 2023

ஜன.13-இல் வேலைவாய்ப்பு முகாம்

January 10, 2023 0
ஜன.13-இல் வேலைவாய்ப்பு முகாம்

பெங்களூரில் ஜன.13-ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது.

தொழில் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு முகமையின் சாா்பில் பெங்களுரு, மைசூரு சாலை, பட்டனகெரே மெட்ரோ ரயில் நிலையம் எதிரில் உள்ள இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனெஜ்மென்ட் ஸ்டடீஸ் வளாகத்தில் ஜன.13-ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது.

இந்த முகாமில் தகவல் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம் சாரா, நிதி, ஆட்டோமொபைல், மெக்கனிக்கல் துறைகளைச் சாா்ந்த 60-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்துகொள்கின்றன. வேலைவாய்பு முகாமில் 18 முதல் 40 வயதுக்கு உள்பட்ட எஸ்எஸ்எல்சி, பியூசி, ஐடிஐ, பட்டயம் படித்தோா், இளநிலை, முதுநிலை பட்டதாரிகள், பொறியியல் பட்டதாரிகள், மாற்றுத் திறனாளிகள் கலந்து கொள்ளலாம்.

புதியவா்கள் முதல் ஓராண்டு வேலை அனுபவம் கொண்டவா்கள் பங்கேற்கலாம். வேலை தேடிவருவோா் தன்விவரக்குறிப்பு 6 படிகள், பாஸ்போா்ட் அளவு புகைப்படம் 6 படிகள், அசல் மற்றும் நகல் கல்வி சான்றிதழ்கள், ஆதாா் அட்டை, பான் அட்டை, ஓட்டுநா் உரிமம், வாக்காளா் அடையாள அட்டை, பாஸ்போா்ட் போன்ற அடையாள அட்டைகளின் நகல்களை கொண்டுவர வேண்டும். இந்த வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க இணையதளத்தில் முன்பதிவுசெய்யவேண்டும். கூடுதல் விவரங்களுக்கு 9008181896, 8095852257, 9964907444 என்ற தொலைபேசி எண்களை அணுகலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது
Read More

Saturday, January 7, 2023

BSNL நிறுவனத்தில் 11,705 காலியிடங்கள் அறிவிப்பு - விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 03.03.2023

January 07, 2023 0
பிஎஸ்என்எல் நிறுவனத்தில் 11,705 காலியிடங்கள் அறிவிப்பு? 

பாரத் சஞ்சார் நிகாம் எனப்படும் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 11,705 இளநிலை தொலைத்தொடர்பு அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக இணையதளங்களில் தகவல் வெளியாகி வருகின்றன. ஆனால், அப்படியொரு அறிவிப்பு வெளியிடப்படவில்லை என பிஎஸ்என்எல் அதிகாரிகளின் தெரிவித்துள்ளனர். 

இணையதளங்களில் வைராகும் வேலைவாய்ப்பு குறித்த தகவல் இதோ உங்களின் கவனத்திற்காக: 

பணி: இளநிலை தொலைத்தொடர்பு அலுவலர்(Junior Telecom Officers)

காலியிடங்கள்: 11,705

தகுதி: பொறியியல் துறையில் டிப்ளமோ, இளங்கலை, முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

வயதுவரம்பு: 20 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும். 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பிக்கும் முறை: https://www.bsnl.co.in என்ற இணையதளத்தின் மூலம் வரும் 30 ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சில இணையதளங்களில் மேற்கண்ட காலியிடங்களுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எச்சரிக்கை: இதுகுறித்து பிஎஸ்என்எல் அதிகாரிகளின் சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மேற்கண்டவாறு வேலைவாய்ப்பு அறிவிப்பு குறித்த தகவல்கள் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) ஆட்சேர்ப்பு ஆணையத்தால் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படவில்லை எனவும், போலியான அறிவிப்புகளை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் என தெரிவித்துள்ளனர். 

பிஎஸ்என்எல் நிறுவனத்தில் இயக்குநர்(எச்ஆர்) வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Director(HR)
தகுதி: மனிதவள மேலாண்மையில் எம்பிஏ, பிஜிடிப்ளமோ முடித்து குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

வயதுவரம்பு: 45க்குள் இருக்க வேண்டும். 
விண்ணப்பிக்கும் முறை: https://pesb.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். விண்ணப்பித்த பின்னர் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

Smt Kimbuong Kipgen
Secretary,
Public Enterprises Selection Board, Public Enterprises Bhawan,
BlockNo. 14, CGO Complex, Lodhi Road, New Delhi-110003.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 03.03.2023

Read More

விமான நிறுவனத்தில் 596 பொறியாளர் வேலை - விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 21.1.2023

January 07, 2023 0
விமான நிறுவனத்தில் 596 பொறியாளர் வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

இந்திய விமான நிலைய ஆணையம் சார்பில்(ஏ.ஏ.ஐ) 596 பொறியாளர், இளநிலை எக்ஸிகியூட்டிவ், ஆர்க்கிடெக்சர் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ள பொறியியல் பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரேவற்கப்படுகின்றன.

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி: Junior Executive (Engineering- Civil)  
காலியிடங்கள்: 62

பணி: Junior Executive (Engineering- Electrical)  
காலியிடங்கள்: 84

பணி: Junior Executive (Electronics) 
காலியிடங்கள்: 440

பணி: Junior Executive (Architecture) 
காலியிடங்கள்: 10

சம்பளம்: மாதம் ரூ.40,000 - 1,40,000

தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 2020,2021,2022 ஆண்டு நடத்தப்பட்ட கேட் தேர்வுகளில் பங்கேற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 21.1.2023 தேதியின்படி 27 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும். 

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மற்றும் கேட் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள், சான்றிதழ்கள் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.aai.aero என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.300. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், பெண் விண்ணப்பத்தாரர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 21.1.2023

Read More

Thursday, December 29, 2022

7 கிராம நிர்வாக அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு 650 பேர் விண்ணப்பம்!

December 29, 2022 0
7 கிராம நிர்வாக அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு 650 பேர் விண்ணப்பம்!

சங்ககிரி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் கிராம நிர்வாக அலுவலக உதவியாளர் பணிக்கு வியாழக்கிழமை நடைபெற்ற நேர்முக தேர்வில் மிதிவண்டிகளை ஓட்டி காண்பிக்கும் பெண்கள்.

சங்ககிரி: சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டத்திற்குள்பட்ட ஏழு கிராம நிர்வாக அலுவலக உதவியாளர்கள் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக நடைபெற்ற தேர்வில் பங்கேற்ற 650 பேர்களுக்கான நேர்முகத் தேர்வு சங்ககிரி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

சங்ககிரி வட்டத்திற்குள்பட்ட செல்லப்பம்பட்டி, கனகிரி, ஊத்துப்பாளையம், ஆவரங்கம்பாளையம், மஞ்சக்கல்பட்டி, அ.தாழையூர், இருகாலூர் உள்ளிட்ட ஏழு கிராம நிர்வாக அலுவலக உதவியாளர் காலிப்பணியிடங்களை நிரப்ப அண்மையில் எழுத்துதேர்வு நடைபெற்றது. இத்தேர்வில் ஏழு காலிபணியிடங்களுக்கு 650 பேர் தேர்வு எழுதினர்.

தேர்வு எழுதியவர்களுக்கு சங்ககிரி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் சங்ககிரி வட்டாட்சியர் எஸ்.பானுமதி தலைமையில், சமூகநலத்துறை வட்டாட்சியர் ராஜேந்திரன், தலைமையிடத்து துணை வட்டாட்சியர் மகேந்திரன் ஆகியோர் நேர்காணலில் பங்கேற்றவர்களிடம் நேர்காணல் நடத்தினர்.

கிராம நிர்வாக அலுவலக உதவியாளர் பணிக்கு வியாழக்கிழமை நடைபெற்ற நேர்முக தேர்வில் மிதிவண்டி ஓட்டி காண்பிக்கும் பெண் நேர்முகத் தேர்வில் பங்கேற்றவர்களின் சான்றிதழ்களை மண்டல துணை வட்டாட்சியர் ரமேஷ், தேர்தல் துணை வட்டாட்சியர் தமிழ்ச்செல்வி, வருவாய் ஆய்வாளர்கள், அலுவலர்கள் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர். இத்தேர்வில் இரு சக்கர வாகனங்கள் ஓட்டுவதற்கான உரிமம் இல்லாதவர்கள் மிதிவண்டியை ஓட்டி காண்பித்தனர்.

சங்ககிரி வட்டத்திற்குள்பட்ட ஏழு கிராம நிர்வாக அலுவலக உதவியாளர் பணிக்கு 650 பேர் விண்ணப்பித்துள்ளனர். தேர்வு எழுதியவர்களுக்கு டிசம்பர் 28 ஆம் தேதி முதல் ஜனவரி 10 ஆம் தேதி வரை நேர்முகத் தேர்விவு நடைபெற உள்ளது.

இப்பணிக்கு குறைந்த பட்ச கல்வித்தகுதி 5 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றால் போது என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பி.இ., பி.டெக், எம்பிஏ., எம்.பில்., உள்ளிட்ட உயர்நிலை கல்வித் தகுதி பெற்றவர்கள் நேர்காணலில் பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
Read More

Wednesday, December 28, 2022

ரூ.40,000 சம்பளத்தில் எக்ஸிகியூட்டிவ் வேலை

December 28, 2022 0
ரூ.40,000 சம்பளத்தில் எக்ஸிகியூட்டிவ் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

இந்திய பெருநிறுவன அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் ஐசிஎஸ்ஐ-இல் காலியாக உள்ள 40 எக்ஸிகியூட்டிவ் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: CRC Executives

காலியிடங்கள்: 40

சம்பளம்: மாதம் ரூ.33,000 - 40,000

வயதுவரம்பு: 1.12.2022 தேதியின்படி 31க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: ஐசிஎஸ்ஐ-இல் உறுப்பினராக இருக்க வேண்டும். மேலும் இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பிக்கும் முறை: http://icsi.in/recruitmentcrc என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.12.2022
Read More

Wednesday, December 21, 2022

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு கழகத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்

December 21, 2022 0


தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு கழகத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு கழகத்தில் காலியாக உள்ள நிதி ஆலோசகர், மாநில திட்ட மேலாளர், திட்ட மேலாளர், திட்ட நிர்வாகி, உதவி திட்ட அலுவலர், ஆலோசகர், இளம் தொழில் வல்லுநர், மேலாளர் மற்றும் நிர்வாகி என 78 பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து நாளைக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தகுதியானவர்கள் இந்த அரிய வாய்ப்பை நழுவவிடாமல் விரைந்து விண்ணப்பித்து பயனடையவும்.

நிறுவனம்: Tamil Nadu Corporation for Development of Women (TNCDW)
மொத்த காலியிடங்கள்: 78

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி: Financial Advisor cum Company Secretary - 1
சம்பளம்: மாதம் ரூ. 80,000

பணி: State Programme Manager / Senior Technical Expert — Value Chain and Forward Linkage - 1
சம்பளம்: மாதம் ரூ. 75,000/-

பணி: State ProgrammeManager / Senior Technical Expert - Digital Finance - 1
சம்பளம்: மாதம் ரூ. 75,000

பணி: Project Manager /Technical Expert- Capacity Building of Community Institutions - 1
சம்பளம்: மாதம் ரூ. 60,000/-
    
பணி: Project Manager / Technical Expert- Model CLF Strengthening - 1
சம்பளம்: மாதம் ரூ. 60,000

பணி: Project Manager / Technical Expert - Insurance/Pension - 1
சம்பளம்: மாதம் ரூ. 60,000

பணி: Project Manager / Technical Expert - Forward Linkage - 1
சம்பளம்: மாதம் ரூ. 60,000/-

பணி: Project Manager (Livelihood) - 1
சம்பளம்: மாதம் ரூ. 42,500
வயதுவரம்பு: மேற்கண்ட பணியிடங்களுக்கு 45க்குள் இருக்க வேண்டும்.

பணி: Project Manager (Livelihood) - 1
சம்பளம்: மாதம் ரூ. 42,500
வயதுவரம்பு: 45க்குள் இருக்க வேண்டும். 

பணி: Project Executive (Partnership & Convergence) - 1
சம்பளம்: மாதம் ரூ.25,000
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும். 

பணி: Assistant Project Officer (RAM Team) - 2
சம்பளம்: மாதம் ரூ.27,750
வயதுவரம்பு: 45க்குள் இருக்க வேண்டும். 

பணி: Consultant (Financial inclusion) - 1
சம்பளம்: மாதம் ரூ.60,000
வயதுவரம்பு: 45க்குள் இருக்க வேண்டும். 

பணி: consultant (Livelihood) - 1
சம்பளம்: மாதம் ரூ.60,000
வயதுவரம்பு: 60க்குள் இருக்க வேண்டும். 

பணி: Consultant (MIS) - 1
சம்பளம்: மாதம் ரூ.30,000
வயதுவரம்பு: 45க்குள் இருக்க வேண்டும். 

பணி: Young Professional (Marketing) - 1
சம்பளம்: மாதம் ரூ.25,000
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும். 

பணி: Young Professional (Web site and online reporting) - 1
சம்பளம்: மாதம் ரூ.25,000
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும். 

பணி: Young Professional (Social Mobilization and institution Building) - 1
சம்பளம்: மாதம் ரூ.25,000
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும். 

பணி: Young Professional (Monitoring & Evaluation) - 1
சம்பளம்: மாதம் ரூ.25,000
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும். 
    
பணி: Assistant Project Officer (DDUGKY) - 2
சம்பளம்: மாதம் ரூ.22,750
வயதுவரம்பு: 45க்குள் இருக்க வேண்டும். 

பணி: Manager - 1
சம்பளம்: மாதம் ரூ.35,000/-
வயதுவரம்பு: 40க்குள் இருக்க வேண்டும். 

பணி: Executive - 2
சம்பளம்: மாதம் ரூ.20,000
வயதுவரம்பு: 40க்குள் இருக்க வேண்டும். 

பணி: Assistant Project Officer, TNSRLM - 26
சம்பளம்: மாதம் ரூ.22,750
வயதுவரம்பு: 45க்குள் இருக்க வேண்டும். 

பணி: Assistant Project Officer, NRETP - 1
சம்பளம்: மாதம் ரூ.22,750/- Per month
வயதுவரம்பு: 45க்குள் இருக்க வேண்டும். 

பணி: Assistant Project Officer, DDUGKY - 5
சம்பளம்: மாதம் ரூ.22,750
வயதுவரம்பு: 45க்குள் இருக்க வேண்டும். 

பணி: Assistant Project Officer , NULM - 7
சம்பளம்: மாதம் ரூ.22,750
வயதுவரம்பு: 45க்குள் இருக்க வேண்டும். 

பணி: Manager, District Supply Marketing Society - 16
சம்பளம்: மாதம் ரூ.22,750
வயதுவரம்பு: 40க்குள் இருக்க வேண்டும். 

தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியாக தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://tncdw.tnmhr.com/Landing.aspx என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 22.12.2022
    
Read More

Thursday, December 15, 2022

மத்திய அரசுத் துறைகளில் 9.79 லட்சம் காலிப்பணியிடங்கள் - மத்திய அரசு தகவல்

December 15, 2022 0
மத்திய அரசுத் துறைகளில் 9.79 லட்சம் காலிப்பணியிடங்கள் - மத்திய அரசு தகவல்

மத்திய அரசுத் துறைகளில் 9.79 லட்சம் காலிப்பணியிடங்கள் உள்ளதாக மத்திய அரசு மக்களவையில் மாநில பணியாளர் துறை இணை அமைச்சர் ஜித்தேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசில் நிரப்பப்படாமல் உள்ள காலிப்பணியிடங்கள் தொடர்பாக மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்குப் பதிலளித்த மத்திய இணை அமைச்சர் ஜித்தேந்திர சிங் மத்திய அரசில் மொத்தம் 9.79 லட்சம் பணியிடங்கள் காலியாகவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மார்ச்1, 2021 நாள் வரையிலான செலவினத் துறையின் ஊதிய ஆய்வு அறிக்கையின்படி 9,79,327 பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது என்று இணை அமைச்சர் எழுத்துப் பூர்வமாக மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்துள்ளார். மேலும் இப்பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைகள் நடைபெற்று வருவதாகத் தெரிவித்துள்ளார்.

அரசு சம்மந்தப்பட்ட துறைகளுக்கு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவுரைகளை வழங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவரின் வேறு ஒரு பதிலில் இந்திய சிவில் சர்வீஸ் பணியிடங்களுக்கான தகவலும் இடம்பெற்றிருந்தது.

இந்திய நிர்வாக சேவைப் பணிகளில் மட்டும் 1,472 பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதாகவும் மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையம் பணியிடங்களை நிரப்பும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Read More

Post Top Ad

Your Ad Spot