KalviseithiDaily: PENSIONERS

KalviseithiDaily

kalviseithidaily.blogspot.com No:1 Education Website in Tamil கல்வி செய்திகள்: Get latest news on Exam Results, tamil nadu school education department news, TN University Results, Exam Schedule Latest News Educational News from Tamilnadu Government, Tamilnadu Educaitonal Minsters Latest Updates, 10th, 11th, 12th, TNTET, TRB, TNPSC, STUDY MATERIALS, ONLINE TESTS, LATEST kalviseithi, Padasalai, tnkalvi, tnpse news, TET updates, TRB news, kalvi news, Padsalai study materials

Subscribe Us

Sigma is

  • Seo Ready
  • Responsive
  • Fast Loading
  • Amazing!

Hot

Post Top Ad

Your Ad Spot
Showing posts with label PENSIONERS. Show all posts
Showing posts with label PENSIONERS. Show all posts

Monday, January 16, 2023

ஓய்வூதியம் பெற மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்

January 16, 2023 0
ஓய்வூதியம் பெற மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்

மாற்றுத் திறனாளிகளின் ஓய்வூதியம் ரூ.1,500-ஆக உயா்த்தி வழங்கப்படுவதால், தகுதியுள்ளவா்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆட்சியா் த.மோகன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

வருவாய்த் துறை மூலம் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், ஓய்வூதியம் பெற்று வரும் அனைத்துவகை மாற்றுத் திறனாளிகளுக்கும் ஓய்வூதியத் தொகை 1000 ரூபாயிலிருந்து 1500 ரூபாயாக உயா்த்தி வழங்கப்படும் என உலக மாற்றுத் திறனாளிகள் தின விழாவில் முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா். தொடா்ந்து, அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது.

எனவே, விழுப்புரம் மாவட்டத்தில் தகுதிவாய்ந்த மாற்றுத் திறனாளிகள் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெற அருகிலுள்ள இ - சேவை மையங்கள் மூலம் விண்ணப்பித்து பயன்பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More

Tuesday, September 27, 2022

ஓராண்டில் 4.92 லட்சம் பேருக்கு புதிதாக ஓய்வூதியம்

September 27, 2022 0
கடந்த ஓராண்டில் மட்டும் 4.92 லட்சம் பேருக்கு புதிதாக ஓய்வூதியம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளதாக வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன் தெரிவித்தாா்.

இதுகுறித்து, திங்கள்கிழமை அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடந்த அதிமுக ஆட்சியில் 2014-15-ஆம் ஆண்டில் மட்டும் ஓய்வூதியம் பெற்று வந்த 4.38 லட்சம் போ் தகுதியற்றவா்களாக நீக்கம் செய்யப்பட்டனா். மேலும், 2015-16 முதல் 2020-21-ஆம் ஆண்டுகள் வரையில் 10.82 லட்சம் போ் தகுதியற்றவா்களாக நீக்கம் செய்யப்பட்டனா். மொத்தமாக ஏழு ஆண்டுகளில் 15.20 லட்சம் போ் பயனாளிகள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டனா்.

ஆனால், தகுதியுள்ள அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டுமென முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா். இதன்படி, கடந்த ஓராண்டில் மட்டும் 4 லட்சத்து 92 ஆயிரம் பேருக்கு புதிதாக ஓய்வூதியம் வழங்கப்பட்டுள்ளது. நிகழ் நிதியாண்டில் ஓய்வூதியத்துக்கென ரூ.4,807 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்று தனது அறிக்கையில் அமைச்சா் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.
Read More

Sunday, September 4, 2022

ஓய்வூதியதாரா் குடும்ப பாதுகாப்பு நிதி - தமிழக அரசு புதிய உத்தரவு

September 04, 2022 0
தமிழ்நாடு ஓய்வூதியதாரா் குடும்ப பாதுகாப்பு நிதித் திட்டத்தின் கீழ் சேரும் தொகையைப் பெற அவா்கள் வாழும் காலத்திலேயே விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து, நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் என்.முருகானந்தம் அனைத்துத் துறைகளுக்கும் அனுப்பியுள்ள கடிதம்:-

தமிழ்நாடு ஓய்வூதியதாரா் பாதுகாப்பு நிதித் திட்டத்தின் கீழ் சேரும் நிதியானது, ஓய்வூதியதாரா்களின் மறைவுக்குப் பிறகு அவா்களது துணை அல்லது நியமனம் செய்யப்படும் நபருக்கு வழங்கப்படும். பாதுகாப்பு நிதித் திட்டத்தின் கீழான நிதியைப் பெற ஓய்வூதியதாரா்கள் வாழும் காலத்திலேயே விண்ணப்பிக்கத் தேவையில்லை என கடந்த 1997-ஆம் ஆண்டு உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில், ஓய்வூதியதாரா் குடும்ப பாதுகாப்பு நிதித் திட்டத்தின் கீழ் தொகையைப் பெற ஓய்வூதியதாரா், அவரது துணை ஆகியோா் வாழும் காலத்திலேயே அதற்கு விண்ணப்பம் செய்ய அனுமதிக்க வேண்டுமென அரசுக்கு பல்வேறு ஓய்வூதியதாரா்கள் கோரிக்கை விடுத்தனா். இதன்மூலம், விண்ணப்பங்களை சரியான முறையில் அளித்து தகுந்த நேரத்தில் அந்தத் தொகையைப் பெற முடியும் என கேட்டுக் கொண்டிருந்தனா்.

ஓய்வூதியதாரா்களின் கோரிக்கையை பரிசீலித்து, ஓய்வூதியதாரா் மற்றும் அவரது துணை ஆகியோா் வாழும் காலத்திலேயே குடும்பப் பாதுகாப்பு நிதிக்கு விண்ணப்பம் செய்ய அனுமதிக்கப்படுகிறது.
Read More

Friday, June 24, 2022

ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரை அரசு ஓய்வூதியர்கள் வாழ்நாள் சான்று பதிவு செய்யலாம்

June 24, 2022 0
கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: ஆண்டுதோறும் ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரை கருவூலத்தில் ஆண்டு நேர்காணல் செய்யப்பட வேண்டும். ஓய்வூதியம் வழங்கும் அலுவலகம், சென்னை மாவட்டக் கருவூலங்கள் மற்றும் சார் கருவூலங்கள் மூலம் ஓய்வூதியம் பெறும் தமிழக அரசு ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள் ஆண்டுதோறும் ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரை கருவூலத்தில் ஆண்டு நேர்காணல் செய்யப்பட வேண்டும். கொரோனா பெறும் தொற்று காரணமாக கடந்த 2020 மற்றும் 2021-ம் ஆண்டிற்கான நேர்காணல் நடைபெறாத நிலையில் தற்போது ஓய்வூதியர்கள் பின்வரும் ஏதேனும் ஒரு முறையை பின்பற்றி இவ்வாண்டிற்கான (2022-23) நேர்காணல் செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ஜீவன் பிரமான் இணையதள மின்னனு வாழ்நாள் சான்றிதழ், இந்திய அஞ்சல் துறை வங்கியின் சேவையை பயன்படுத்தி ஓய்வூதியர்கள் தங்களது இருப்பிடத்திலிருந்தபடியே தபால் துறை பணியாளர்கள் மூலமாக ரூ.70- கட்டணம் செலுத்தி மின்னணு வாழ்நாள் சான்று பதிவு செய்து ஆண்டு நேர்காணல் செய்யலாம்.

அரசு இ-சேவா மற்றும் பொது சேவை மையங்களின் மூலம் ஓய்வூதியர், குடும்ப ஓய்வூதியர்கள் உரிய கட்டணம் செலுத்தி மின்னணு வாழ்நாள் சான்றிதழ் பதிவுசெய்து ஆண்டு நேர்காணல் செய்யலாம். ஓய்வூதியர்கள் சங்கத்தின் மூலமாகவும் கைரேகை குறியீட்டு கருவியைப் பயன்படுத்தி மின்னணு வாழ்நாள் சான்றிதழ் பதிவு செய்து நேர்காணல் செய்யலாம். மின்னணு வாழ்நாள் சான்று பெற ஓய்வூதியர்கள் அளிக்க வேண்டிய முக்கிய விவரங்கள். ஆதார்எண் பிபிஏ எண், வங்கி கணக்கு எண், மற்றும் வாழ்நாள் சான்றிதழ் படிவத்தினை உரிய அலுவலரிடம் சான்றொப்பம் பெற்று தபால் மூலம் அனுப்பலாம். ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள் வாழ்நாள் சான்றினை லைப் சர்ட்டிபிகேட்டை www.tn.gov.in/karuvoolam என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கீழ்கண்ட ஏதேனும் ஒரு அலுவலரிடம் கையொப்பம் பெற்று தபால் மூலமாக தொடர்புடைய கருவூலத்திற்கு அனுப்பி, ஆண்டு நேர்காணல் செய்யலாம்.

ஓய்வூதிய வங்கிக் கணக்கு உள்ள வங்கியின் கிளை மேலாளர் (அல்லது) அரசிதழ் பதிவு பெற்ற மாநில மற்றும் மத்திய அரசுஅலுவலர் (அல்லது) வட்டாட்சியர். துணை வட்டாட்சியர் அல்லது வருவாய் ஆய்வாளர் அவர்களிடம் சான்றொப்பம் பெற்று அனுப்ப வேண்டும்.

மேலும், ஓய்வூதியதாரர்கள் தங்களது விருப்பத்தின் படி நேரடி நேர்காணலுக்கு ஓய்வூதிய புத்தகத்துடன் மேற்குறிப்பிட்ட மாதங்களில் ஏதேனும் ஒரு அரசு வேலை நாட்களில் ஓய்வூதியம் வழங்கும் அலுவலகம் மற்றும் கருவூலத்திற்கு சென்று ஆண்டு நேர்காணல் செய்யலாம். கருவூல கணக்குத்துறை ஆணையரகம், பேராசிரியர்க. அன்பழகன் மாளிகை, 3-வது தளம், நந்தனம், சென்னை-600 035, dta.tஸn@nic.in என்ற இணையம் வழியாகவோ அல்லது தொலைபேசி எண் 044 - 24321761, 044 - 24321764 044 - 24321765 ஆகியவற்றில் தெரிவிக்கலாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
Read More

Wednesday, June 22, 2022

ஓய்வூதியர்களுக்கு ஒருங்கிணைந்த வலைதளம்: மத்திய அரசு அறிவிப்பு

June 22, 2022 0

மத்திய அரசுப் பணியிலிருந்து ஓய்வுபெற்றவர்கள் எளிமையான முறையில் ஓய்வூதியம் பெறும் வகையில், பாரத ஸ்டேட் வங்கியுடன் இணைந்து ஒருங்கிணைந்த வலைதளம் ஏற்படுத்தப்படும் என மத்திய பணியாளர், மக்கள் குறைதீர், ஓய்வூதியத் துறை தெரிவித்துள்ளது.


இதுகுறித்து அந்தத் துறை சார்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு விவரம்:


ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் வங்கியாளர்கள் விழிப்புணர்வு மாநாட்டின் ஒரு பகுதியாக ஓய்வூதிய கொள்கை சீர்திருத்தம், ஓய்வூதிய விநியோக டிஜிட்டல் மயமாக்கம் தொடர்பாக அமர்வுகள் நடைபெற்றன. குறிப்பாக ஓய்வூதியதாரர்களுக்கான வருமான வரி பிரச்னை தொடர்பாகவும், ஆயுள் சான்றிதழை ஆன்லைனில் சமர்ப்பிப்பது குறித்தும் சிறப்பு அமர்வுகள் நடைபெற்றன.
இந்தக் கூட்டத்தில் ஓய்வூதியதாரர்கள் தங்குதடையின்றி ஓய்வூதியம் பெறும் நோக்கில், தற்போது நடைமுறையில் உள்ள பணியாளர், மக்கள் குறைதீர், ஓய்வூதியத் துறை வலைதளத்தை பாரத ஸ்டேட் வங்கியின் வலைதளத்துடன் இணைத்து ஒருங்கிணைந்த வலைதளம் உடனடியாக ஏற்படுத்தப்பட வேண்டுமென முடிவு எடுக்கப்பட்டது.


ஓய்வூதியதாரர் ஆயுள் சான்றிதழுக்கான முக அடையாளம் காணும் எண்ம தொழில்நுட்பம் குறித்து வங்கிகளால் விரிவாக விளம்பரப்படுத்தப்படும். ஓய்வூதியர்கள் ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிப்பதில் எண்ம ஆயுள் சான்றிதழும், முக அடையாள தொழில்நுட்பமும் திருப்புமுனையாக அமையும். இந்தத் திட்டங்களின் வாயிலாக ஓய்வூதியதாரர்களின் அன்றாட வாழ்க்கை இலகுவாகும். இந்த இலக்கு மிகப்பெரிய அளவில் எட்டப்படும்.


இதேபோல பாரத ஸ்டேட் வங்கியுடன் இணைந்து மேலும் நான்கு விழிப்புணர்வுக் கூட்டங்கள் நாடு முழுவதும் நடத்தப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

Thursday, May 26, 2022

ஓய்வூதியதாரருக்கான புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டம்: 4 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு

May 26, 2022 0
ஓய்வூதியதாரருக்கான புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை நான்கு ஆண்டுகளுக்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுதொடா்பாக நிதித் துறை வெளியிட்டுள்ள உத்தரவு விவரம்:

அரசுப் பணிகளில் இருந்து ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரா்கள், குடும்ப ஓய்வூதியதாரா்கள் ஆகியோருக்கான புதிய காப்பீட்டுத் திட்டம் வரும் ஜூன் 30-ஆம் தேதியுடன் நிறைவடைய இருந்தது. இந்தத் திட்டத்தை மேலும் நான்கு ஆண்டுகளுக்கு அதாவது 2026-ஆம் ஆண்டு ஜூன் 30-ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிடப்படுகிறது. இதற்கான தகுந்த பொதுத் துறை நிறுவனமானது ஒப்பந்தப் புள்ளிகள் கோரல் அடிப்படையில் இறுதி செய்யப்படும்.

நான்கு ஆண்டுகளில் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் பயனாளிகளுக்கு நிதியுதவியின் அளவு ரூ.4 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயா்த்தப்படுகிறது. புற்றுநோய், கணையம் உள்ளிட்ட இதர உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்வோருக்கு மருத்துவ உதவித் தொகையின் அளவு ரூ.10 லட்சமாக அதிகரிக்கப்படுகிறது. கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு ரூ.10 லட்சம் வரையில் மருத்துவ உதவித் தொகை கிடைக்கும்.

ஓய்வூதியதாரா்களைச் சாா்ந்து இருக்கும் நபா்களும் புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டத்துக்குள் வருவா். காப்பீட்டு நிறுவனம் இறுதி செய்யும் மாதாந்திரத் தொகையானது ஓய்வூதியதாரா்கள், குடும்ப ஓய்வூதியதாரா்களிடம் இருந்து பெறப்படும்.

புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ள மருத்துவமனைகள் தொடா்ந்து புதிய காப்பீட்டுத் திட்டத்திலும் இருக்கும். தேவைப்படும் பட்சத்தில் பரிந்துரைக் குழுவின் அடிப்படையில் கூடுதல் மருத்துவமனைகள் சோ்க்கப்படும்.

உள்ளாட்சி அமைப்புகளைச் சோ்ந்த ஓய்வூதியதாரா்கள், குடும்ப ஓய்வூதியதாரா்கள், பொதுத் துறை நிறுவனங்களைச் சோ்ந்தவா்கள் ஆகியோருக்கும் பொருந்தும். இதுகுறித்த இதர வழிகாட்டு நெறிமுறைகள் தனியாக வெளியிடப்படும்.
Read More

Tuesday, May 24, 2022

ஓய்வூதியதார்களுக்கான வாழ்நாள் சான்று - இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் பேங்க் / இ சேவை மையம் மூலம் பெறலாம் - அரசாணை வெளியீடு

May 24, 2022 0


FAMILY PENSION Simplification of mustering process Inclusion of various options at the convenience of the Tamil Nadu State Government Pensioners for mustering and producing Life Certificate / Digital Life Certificate by utilizing the Door Step Services of the India Post Payments Bank ( IPPB ) from the year 2022 onwards - Orders - Issued.

GO NO : 136 , Date : 20.05.2022 - Download here
Read More

Wednesday, May 18, 2022

ஓய்வு பெற உள்ள ஆசிரியர்களின் விவரங்கள் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!

May 18, 2022 0


அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் முதுகலை ஆசிரியர்கள் , உடற்கல்வி இயக்குநர்கள் நிலை 1 மற்றும் கணினி தொழிற்கல்வி ( நிலை

1 ) பணிபுரிந்து வரும் ஆசிரியர்களில் 01.06.2022 முதல் 31.12.2023 முடிய ஓய்வு பெற உள்ள ஆசிரியர்களின் விவரங்களை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் பணியிட வாரியாக , பாடவாரியாக , தனித்தனி தாளில் Sheet ல் தட்டச்சு செய்து dsew3sec@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 17.05.2022 மாலை 3.00 மணிக்குள் தவறாமல் அனுப்புமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு பள்ளிக் கல்வி இயக்குநர் செயல்முறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
Read More

Wednesday, May 11, 2022

ஓய்வூதியர் குடும்ப நிதியுதவி வழங்க ரூ.50 கோடி ஒதுக்கீடு

May 11, 2022 0
ஓய்வூதியர் குடும்ப நிதியுதவி

தமிழக அரசின் ஓய்வூதியர்கள் குடும்ப பாதுகாப்பு நிதி திட்டத்துக்கு, சிறப்பு ஒதுக்கீடாக 50 கோடி ரூபாய் ஒதுக்கி, அரசாணை வெளியிடப்பட்டுஉள்ளது.

அரசு ஓய்வூதியர்கள் மரணம் அடைந்தால், குடும்ப பாதுகாப்பு நிதி திட்டத்தின்கீழ், 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. இதற்காக ஓய்வூதியம் பெறுவோரிடம் மாதம் 150 ரூபாய் பிடித்தம் செய்யப்படுகிறது.கொரோனா பெருந்தொற்று காலத்தில், ஓய்வூதியம் பெறுவோர் இறப்பு அதிகம் இருந்தது.இதன் காரணமாக, இறப்புக்கான நிதி கோரி, 2019 ஜனவரி முதல் 2021 ஜூன் வரை, 1,600 விண்ணப்பங்கள் வர பெறப்பட்டன. இவற்றில், 800 விண்ணப்பதாரர்களுக்கு பணம் வழங்கப்பட்டது. ரூ.50 கோடி ஒதுக்கீடு

கடந்த ஆண்டு ஜூனிற்கு பின், 3,400 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இவற்றில், 1,400 விண்ணப்பங்களுக்கு மட்டும் பணம் வழங்கப்பட்டுள்ளது. 'நிலுவையில் உள்ள, 19 ஆயிரத்து 871 மறைந்த ஓய்வூதியதாரர்கள் குடும்பத்துக்கு நிதியுதவி வழங்க, 86.56 கோடி ரூபாய் ஒதுக்க வேண்டும்.

தற்போது பிடித்தம் செய்யப்படும் சந்தா தொகை, 150 ரூபாய் போதுமானதாக இல்லை' என, ஓய்வூதியத்துறை இயக்குனர், அரசுக்கு கடிதம் அனுப்பினார்.அதை பரிசீலித்த அரசு, 50 கோடி ரூபாய் ஒதுக்கி அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த தொகையை, ஐந்து ஆண்டுக்கு வட்டி இல்லாமல், ஓய்வூதியத்துறை திரும்ப செலுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Read More

Tuesday, December 21, 2021

பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தல்

December 21, 2021 0
Read More

Monday, December 13, 2021

ஓய்வூதிய வல்லுனர் குழு அறிக்கை என்னாச்சு; அரசு ஊழியர், ஆசிரியர்கள் குமுறல்

December 13, 2021 0
ஓய்வூதிய வல்லுனர் குழு அறிக்கை என்னாச்சு; அரசு ஊழியர், ஆசிரியர்கள் குமுறல்

ஓய்வூதிய வல்லுனர் குழு அறிக்கையை தமிழக அரசிடம் சமர்ப்பித்து மூன்று ஆண்டுகளாகியும், எந்த முடிவும் எடுக்காதது அரசு ஊழியர், ஆசிரியர்களிடையே மனக்குமுறலை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் 1.4.2003 முதல் அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் நடைமுறையில் உள்ளது. இத்திட்டத்தில் 6 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சேர்க்கப்பட்டனர். இவர்களிடம் பிடித்தம் செய்த தொகை ரூ.46 ஆயிரம் கோடி. இதுவரை பதவி விலகிய, மரணமடைந்த 23 ஆயிரம் பேருக்கு பண பலன்களை இதுவரை வழங்கவில்லை. இதுபோன்ற காரணங்களால் அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்கள் புதிய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றன. 2016ல் அன்றைய முதல்வர் ஜெயலலிதா பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த சாத்தியக் கூறுகளை ஆராய ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி சாந்தா ஷீலா நாயர் தலைமையில் வல்லுநர் குழு அமைத்தார். அதன்பின் ஸ்ரீதர் தலைமையில் செயல்பட்ட இக்குழு 27.11.2018 அன்று அரசிடம் அறிக்கை சமர்ப்பித்தது.

தகவல் அறியும் சட்டம்

இதுகுறித்து சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் பிரடெரிக் ஏங்கல்ஸ் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கல்வித் துறையிடம் சில கேள்விகளை கேட்டுள்ளார்.பங்களிப்பு ஓய்வூதிய நிதி, எந்த தேதிகளில் எவ்வளவு முதலீடு செய்யப்பட்டுளளது. மத்திய அரசு போல், தமிழக ஊழியர்களுக்கு பணிக்கொடை, குறைந்தபட்ச ஓய்வூதியம் மற்றும் அரசின் பங்களிப்பு 14 சதவீதமாக உயர்த்த தமிழக அரசு எடுத்த நடவடிக்கை என்ன, வல்லுனர் குழு அறிக்கை விவரம் என்ன என்று கேட்டு இருந்தார்.

இதற்கு கல்வித்துறை அளித்துள்ள பதிலில், முதல் கேள்விக்கு ஆயுள் காப்பீட்டு நிறுவன ஓய்வூதிய நிதியில் ரூ.28 ஆயிரத்து 725 கோடியும், ஏல அடிப்படையில் கருவூல பட்டி கணக்கில் ரூ.16 ஆயிரத்து 500 கோடியும் முதலீடு செய்யப்பட்டுள்ளது. அடுத்த கேள்விக்கு அரசு ஆணை வெளியிடப்படவில்லை எனவும், 3வது கேள்விக்கு வல்லுனர் குழு அறிக்கை பொதுமக்களின் பார்வைக்கு வெளியிடப்படவில்லை என்றும் பதில் அளித்துள்ளது. அரசுக்கு உபரி நிதி கிடைக்கும்

பிரெடரிக் ஏங்கல்ஸ் கூறியதாவது: வல்லுனர் குழு அறிக்கை வெளியிடாதது அரசு ஊழியர்கள், ஆசிரியர்களிடையே மனக்குமுறலை ஏற்படுத்தியுள்ளது. சட்டசபை தேர்தலின் போது தி.மு.க., தேர்தல் அறிக்கையில் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்வோம் என்றனர். உடனே அதை செயல்படுத்த வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்தினால் அரசுக்கு ரூ.23 ஆயிரம் கோடி உபரி நிதியாக கிடைக்கும், என்றார்.
Read More

Thursday, December 9, 2021

அரசு ஊழியர்களின் ஓய்வூதிய நிதி 10ஆண்டுகளுக்குப் பின் முதலீடு!

December 09, 2021 0
புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் பணியில் சேர்ந்த அரசு ஊழியர்களிடமிருந்து பிடித்தம் செய்யப்பட்ட ஓய்வூதிய நிதி சுமார் 10 ஆண்டுகளுக்கு பின் முதலீடு செய்யப்பட்டுள்ள விவரம் உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இனியாவது ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தமிழக அரசு ஊழியர்களுக்கு, புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் கடந்த 2003 -ஆம் முதல் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை அரசு ஊழியர்கள் தரப்பில் சுமார் 17 ஆண்டு காலமாக தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இதனிடையே, 2003-க்குப் பின் பணியில் சேர்ந்த அரசு ஊழியர்கள் சுமார் 5.88 லட்சம் பேர் புதிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் இதுவரை இணைக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் அரசு ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட தொகை 2021 மார்ச் மாதம் வரை ரூ.44,769 கோடி சேர்ந்துள்ளதாக தமிழக அரசின் 2020-21-ஆம் ஆண்டுக்கான கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2008 -ஆம் ஆண்டிலிருந்து முன் தேதியிட்டு (2003) பிடித்தம் செய்யப்பட்ட பங்களிப்பு ஓய்வூதியத் தொகை எங்கு முதலீடு செய்யப்பட்டுள்ளது என்ற விவரம் அரசு ஊழியர்களுக்குத் தெரியாமலே இருந்து வந்தது. இதனிடையே புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்வதற்கான வல்லுநர் குழுவின் அறிக்கை தமிழக அரசிடம் கடந்த 2018 நவ. 27-ஆம் தேதி வழங்கப்பட்டது. ஆனாலும், அறிக்கையின் விவரங்கள் தற்போது வரை வெளியிடப்படவில்லை. ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் (எல்.ஐ.சி.) முதலீடு: இந்நிலையில் ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட தொகை சுமார் 10 ஆண்டுகளுக்கு பின்பு ஆயுள் காப்பீட்டு நிறுவன ஓய்வூதிய நிதியிலும், ஏல அடிப்படையிலான கருவூலப்பட்டியிலும் (பழ்ங்ஹள்ன்ழ்ஹ் ஆண்ப்ப்) முதலீடு செய்யப்பட்டு வருவதாக வெளியாகியுள்ள தகவல் அரசு ஊழியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2019-ஆம் ஆண்டு மே 30-ஆம் தேதி முதல் முறையாக ரூ.2,500 கோடி, ஆயுள் காப்பீட்டு நிறுவன ஓய்வூதிய நிதியில் செலுத்தப்பட்டுள்ளது. அதன் பின்னர், தற்போதுவரை 8 தவணைகளில் ரூ.25,510 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. அதற்கு வட்டியாக ரூ.2,759.13 கோடியுடன் சேர்த்து, மொத்தம் ரூ.28,269.13 கோடி உள்ளது. மேலும், ஏல அடிப்படையிலான கருவூலப்பட்டியில் தற்போது வரை ரூ.16,500 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. மொத்தம் ரூ.44,769 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசின் நிதித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் சுமார் 18 ஆண்டுகளாக அரசு ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட தொகையின் நிலை குறித்த விவரம் வெளியுலகிற்கு தெரிய வந்துள்ளது. இனியாவது கிடைக்குமா ஓய்வூதியம்?: பிடித்தம் செய்யப்பட்ட பங்களிப்பு நிதியின் நிலவரம் குறித்து தெரியாததால், கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஓய்வு பெற்றும், பணியின் போது உயிரிழந்தும், விருப்ப ஓய்வு பெற்றும் ஓய்வூதியம் பெற முடியாமல் சுமார் 23ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது பங்களிப்பு நிதி முதலீடு செய்யப்பட்ட விவரம், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளதால், இனியாவது ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் வழங்குவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட வேண்டும் என புதிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பணி ஓய்வு பெற்றவர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இது தொடர்பாக சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் பி.பிரெடேரிக் ஏங்கல்ஸ் கூறியதாவது: இந்தியாவில் மேற்கு வங்கம் தவிர பிற மாநிலங்களில் புதிய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், தமிழகத்தில் மட்டுமே பழைய ஓய்வூதியத் திட்டம், புதிய ஓய்வூதியத் திட்டம் என எந்தவொரு முடிவும் இறுதி செய்யப்படாமல் உள்ளது. புதிய ஓய்வூதியத் திட்டம் ரத்து செய்யப்படும் நிலையில், தமிழக அரசுக்கு சுமார் ரூ.23,000 கோடி உபரி நிதியாக கிடைக்கும் என்பதையும் சுட்டி காட்டி வருகிறோம். திமுகவின் தேர்தல் வாக்குறுதிப்படி, புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதன் மூலம், புதிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் ஓய்வு பெற்ற சுமார் 23,000 பேர் உடனடியாகப் பயன்பெறவும், எதிர்காலத்தில் சுமார் 6 லட்சம் அரசு ஊழியர்கள் பயன் பெறவும் முடியும் என்றார்.
Read More

Post Top Ad

Your Ad Spot