KalviseithiDaily: AADHAR

KalviseithiDaily

kalviseithidaily.blogspot.com No:1 Education Website in Tamil கல்வி செய்திகள்: Get latest news on Exam Results, tamil nadu school education department news, TN University Results, Exam Schedule Latest News Educational News from Tamilnadu Government, Tamilnadu Educaitonal Minsters Latest Updates, 10th, 11th, 12th, TNTET, TRB, TNPSC, STUDY MATERIALS, ONLINE TESTS, LATEST kalviseithi, Padasalai, tnkalvi, tnpse news, TET updates, TRB news, kalvi news, Padsalai study materials

Subscribe Us

Sigma is

  • Seo Ready
  • Responsive
  • Fast Loading
  • Amazing!

Hot

Post Top Ad

Your Ad Spot
Showing posts with label AADHAR. Show all posts
Showing posts with label AADHAR. Show all posts

Tuesday, December 27, 2022

ஆதார் எண் போல் தமிழகத்தில் 10 முதல் 12 இலக்கத்தில் மக்கள் ஐடி எண் - தமிழக அரசு திட்டம்

December 27, 2022 1
ஆதார் எண் போல் தமிழகத்தில் 10 முதல் 12 இலக்கத்தில் மக்கள் ஐடி எண் - தமிழக அரசு திட்டம்

மத்திய அரசு ஆதார் எண் வழங்கியிருப்பது போலத் தமிழக அரசு மக்கள் ஐடி என்ற எண்ணை வழங்கத் திட்டமிட்டுள்ளது. மாநில அரசின் மூலம் அறிவிக்கப்படும் பல்வேறு திட்டங்களை இந்த ஐடி எண் மூலம் ஒருங்கிணைக்கவும் செயல்படுத்தவும் அரசு திட்டமிட்டு இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பைத் தமிழக அரசு விரைவில் அறிவிக்கும் என்று தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நாட்டின் குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் மத்திய அரசு ஆதார் எண் வழங்கியுள்ளது, அரசின் திட்டங்கள் ஒவ்வொன்றும் ஆதார் எண்ணை மையமாக வைத்துச் செயல்படுத்தப்படுகிறது. இதேபோல நம் மாநில அரசு தமிழக மக்களுக்கு எனத் தனியாக மக்கள் ஐடி என்ற 10 முதல் 12 இலக்க எண்களை அறிவிக்க உள்ளது. ஆதார் போலத் தமிழக மக்களுக்குத் தனி ஐடி உருவாக்கத் தமிழ்நாடு மின் ஆளுமை முகமை நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழகத்தில் உள்ள மக்கள் தொகையைக் கணக்கெடுத்து மாநில குடும்ப தரவுத் தளம் உருவாக்கப்பட உள்ளது. தமிழ்நாட்டில் மாநில அரசினால் தனி எண் உருவாக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் வசிக்கும் மக்களை வயது பாலினம் சமூக அடிப்படையில் கணக்கிட்டு 10 முதல் 12 இலக்க ஐடி எண்கள் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இது மக்கள் ஐடி என அழைக்கப்பட உள்ளது.

தமிழ்நாடு தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சகம் இதற்கான பணியைத் தொடங்கி உள்ளது. தரவுகளைச் சேகரித்து இதற்கான தளத்தை நிர்வகிக்கத் திறமையும் அனுபவமும் உள்ள நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் அரசு டெண்டர் அறிவித்துள்ளது. மக்கள் ஐடி மூலம் தமிழ்நாட்டில் மக்கள் தொகையைத் துல்லியமாகக் கணக்கிடவும், அரசின் திட்டங்களை இந்த ஐ டி எண்ணைப் படியாக வைத்துச் செயல்படுத்தவும் திட்டமிட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது.
Read More

Wednesday, May 11, 2022

பணம் எடுக்க, செலுத்த 'ஆதார், பான் கார்டு' கட்டாயம் - புதிய விதிகள்

May 11, 2022 0
'ஆதார், பான் கார்டு' கட்டாயம்

வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், தபால் அலுவலகங்களில், ஓர் நிதியாண்டில், 20 லட்சம் ரூபாய்க்கு மேல் ரொக்கமாக பணம் செலுத்தினாலோ அல்லது எடுத்தாலோ, பான் மற்றும் ஆதார் எண் தெரிவிப்பது கட்டாயம் என, மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவித்துள்ளது.

இந்த புதிய விதிகள், இம்மாதம் 26ம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன.தற்போது, ஒரு நாளில் 50 ஆயிரம் ரூபாய் அல்லது அதற்கு மேற்பட்ட தொகையை 'டெபாசிட்' செய்தால், பான் எண் கட்டாயம் என உள்ளது. ஆனால் பணம் எடுப்பதற்கு தேவையில்லை. மேலும், இதற்கு ஆண்டு வரம்பு எதுவும் இல்லாமல் இருந்தது.

இந்த புதிய விதிகளின்படி, இனி ஒரு நிதியாண்டில், ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட கணக்குகளில் இருந்து, ஒருவர் 20 லட்சம் ரூபாயை தாண்டி பணம் எடுத்தாலும், போட்டாலும், பான் அல்லது ஆதார் எண் குறிப்பிடுவது கட்டாயம் ஆகிறது. இதன் வாயிலாக, ஒரு நிதியாண்டில், ஒருவர் மொத்தம் எவ்வளவு பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டுள்ளார்; அதற்கு வரிப்பிடித்தம் செய்யப்பட்டுள்ளதா என்பதை வரி துறையினர் எளிதாக அறிந்துகொள்ள இயலும். புதிய விதிகள்:

* வங்கி, தபால் அலுவலகம், கூட்டுறவு வங்கி போன்றவற்றில், ஒரு நபர், ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கணக்கில், ஒரு நிதியாண்டில் 20 லட்சம் ரூபாய் அல்லது அதற்கு மேற்பட்ட தொகையை செலுத்துவதற்கு ஆதார் அல்லது பான் கார்டு கட்டாயம்

*இதேபோல் ஒரு நிதியாண்டில் 20 லட்சம் ரூபாய் அல்லது அதற்கு மேல், ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கணக்குகளிலிருந்து எடுப்பதற்கும் ஆதார் அல்லது பான் எண் கட்டாயம்.

* வங்கி, தபால் அலுவலகம், கூட்டுறவு வங்கிகளில் நடப்புக் கணக்கு அல்லது ரொக்க கடன் கணக்கு துவங்கும்போதும், ஆதார் அல்லது பான் எண் கட்டாயம்.
Read More

Tuesday, September 21, 2021

பிளஸ் 1 மாணவரை அனுமதிக்க மறுப்பு: அரசு உதவிபெறும் பள்ளி மீது புகாா்

September 21, 2021 0
மதுரையில் பிளஸ் 1 மாணவரை பள்ளியில் அனுமதிக்க மறுப்பதாக அரசு உதவிபெறும் பள்ளி மீது, முதன்மைக் கல்வி அலுவலரிடம் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.


மதுரை நேரு நகரைச் சோ்ந்த ஆா். செல்வக்கனி, மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஆா். சுவாமிநாதனிடம் திங்கள்கிழமை அளித்த மனு: எனது மகன் நாகமலை புதுக்கோட்டையில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறான். இந்நிலையில், செப்டம்பா் 15 ஆம் தேதி வகுப்பறையில் எனது மகனின் புத்தகப் பையில் போதைப் பொருள் இருந்ததாகக் கூறி எவ்வித விசாரணையுமின்றி, பெற்றோருக்கும் தெரிவிக்காமல் இடைநீக்கம் செய்வதாக 6 நாள்கள் கழித்து வருமாறு கூறியுள்ளனா்.


இதுதெரிந்த பின்னா் எனது மனைவி மற்றும் நான் பள்ளித் தலைமையாசிரியரிடம் சென்று கேட்டபோது, இன்னும் பத்து நாள்கள் கழித்து வருமாறு தெரிவித்தனா். இது குறித்து கேட்டபோது, பள்ளி ஆசிரியா் தரக்குறைவாகப் பேசுகிறாா். எனவே, எனது மகனை பள்ளியில் அனுமதிக்க உத்தரவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று அதில் குறிப்பிட்டுள்ளாா்.
Read More

Thursday, September 9, 2021

இந்து தமிழ் திசை - "மகாகவி பாரதியாரின் நினைவு நூற்றாண்டைச் சிறப்பிக்கும் வகையில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கான கவிதைப்போட்டி - செப்.20-ஆம் தேதி கடைசி நாள்

September 09, 2021 0
இந்து தமிழ் திசை

"மகாகவி பாரதியாரின் நினைவு நூற்றாண்டைச் சிறப்பிக்கும் வகையில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கான கவிதைப்போட்டி.

மகாகவி பாரதியின் கனவை நிறைவேற்றும் வகையில், இந்திய தேசத்தை உலக அரங்கில் மேலும் முன்னேற்ற, நாம் என்ன செய்ய வேண்டுமென்பதை 20 வரிகளுக்கு மிகாமல், செப்.10 (வெள்ளிக்கிழமை) அன்று ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் வெளியாகும் நுழைவுப் படிவத்தில் எழுதி, அதனை தபாலாகவோ அல்லது ஸ்கேன் செய்து hindutamilthisaievents@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கோ வரும் செப்.20-ஆம் தேதிக்குள் அனுப்பி வையுங்கள்.
Read More

Saturday, September 4, 2021

திருவள்ளூர் முதன்மைக்கல்வி அலுவலர் சுற்றறிக்கை

September 04, 2021 0
முதன்மைக்கல்வி அலுவலகம்
திருவள்ளூர்
நாள்: 09.2021
சுற்றறிக்கை
NSP AADHARAUTHENTICATION/2021)

ஈ.எண்:1 SCHOLARSHIS

அனைத்துவகைப்பள்ளித்தலைமை ஆசிரியர்களின் ( ஊராட்சி ஒன்றிய தொடக்க / நடுநிலை, மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளிகன், அரசு அரசு உதவி பெறும் உயர்நிலை/ மேல்நிலை/சுயநிதிப்பள்ளிகள் மெட்ரிக் பள்ளிகள், CBSE பள்ளிகள்) கவனத்திற்கு NSP PORTAL இல் அனைத்து வகைப்பள்ளிகளைச்சார்த்த INO(INSTITUTENODEL OFFICER} மற்றும் INSTITUTE HEADஇன் ஆதார் விவரங்கள் அதாவது ஆதார் எண் ஆநார்அட்டையில் உள்ளவாறு பெயர், ஆதார் அட்டையில் உள்ளவாறு தொலைபேசி எண் ஆகிய விவரங்களை NSP PORTAL தங்கள் பள்ளிக்கென வழங்கப்பட்டுள்ள USER NAME மற்றும் PASS WORD பயன்படுத்தி பதிவேற்றம் செய்ய வேண்டும்

திருவள்ளூர் வருவாய் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 2489 பள்ளிகளில் இதுவரை 628 பள்ளிகள் மட்டுமே NSP PORTAL இல் INO மற்றும் INSTITUTE HEAD இன் ஆதார் விவரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது இது மிகவும் வருந்தத்தக்கது ஆகும். NSPPORTAL இல் INO மற்றும் INSTITUTE HEAD இன் ஆதார் விவரங்கள் பதிவேற்றம் செய்தால் மட்டுமே சார்ந்தப்பள்ளி மாணவர்களுக்கு உதவித்தொகைக்கான (MINORITY PRE MATRIC,POST MATRIC AND NMMS) விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்ய இயலும் மேலும் உரிய விவரங்களை NSP PORTAL இல் உள்ளீடு செய்து பதிவேற்றம் செய்வதற்கு 5 அல்லது 10 நிமிடங்கள் மட்டுமே ஆகும்.

எனவே அனைத்துவகைப்பள்ளித்தலைமை ஆசிரியர்களும் ( ஊராட்சி ஒன்றிய தொடக்க நடுநிலை மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளிகள்/ அரசு அரசு உதவி பெறும் உயர்நிலை/ மேல்நிலை சுயநிதிப்பள்ளிகள் மெட்ரிக் பள்ளிகள்CBSE பள்ளிகள்) சிறப்பு கவனம் செலுத்தி 06:09.2021க்குள் தங்கள் பள்ளிகளின் INO மற்றும் INSTITUTE HEAD இன் ஆதார் விவரங்கள் NSP PORTAL இல் பதிவேற்றம் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Read More

Post Top Ad

Your Ad Spot