பிளஸ் 1 மாணவரை அனுமதிக்க மறுப்பு: அரசு உதவிபெறும் பள்ளி மீது புகாா்

மதுரையில் பிளஸ் 1 மாணவரை பள்ளியில் அனுமதிக்க மறுப்பதாக அரசு உதவிபெறும் பள்ளி மீது, முதன்மைக் கல்வி அலுவலரிடம் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.


மதுரை நேரு நகரைச் சோ்ந்த ஆா். செல்வக்கனி, மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஆா். சுவாமிநாதனிடம் திங்கள்கிழமை அளித்த மனு: எனது மகன் நாகமலை புதுக்கோட்டையில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறான். இந்நிலையில், செப்டம்பா் 15 ஆம் தேதி வகுப்பறையில் எனது மகனின் புத்தகப் பையில் போதைப் பொருள் இருந்ததாகக் கூறி எவ்வித விசாரணையுமின்றி, பெற்றோருக்கும் தெரிவிக்காமல் இடைநீக்கம் செய்வதாக 6 நாள்கள் கழித்து வருமாறு கூறியுள்ளனா்.


இதுதெரிந்த பின்னா் எனது மனைவி மற்றும் நான் பள்ளித் தலைமையாசிரியரிடம் சென்று கேட்டபோது, இன்னும் பத்து நாள்கள் கழித்து வருமாறு தெரிவித்தனா். இது குறித்து கேட்டபோது, பள்ளி ஆசிரியா் தரக்குறைவாகப் பேசுகிறாா். எனவே, எனது மகனை பள்ளியில் அனுமதிக்க உத்தரவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று அதில் குறிப்பிட்டுள்ளாா்.
Post a Comment (0)
Previous Post Next Post