KalviseithiDaily: Press Release

KalviseithiDaily

kalviseithidaily.blogspot.com No:1 Education Website in Tamil கல்வி செய்திகள்: Get latest news on Exam Results, tamil nadu school education department news, TN University Results, Exam Schedule Latest News Educational News from Tamilnadu Government, Tamilnadu Educaitonal Minsters Latest Updates, 10th, 11th, 12th, TNTET, TRB, TNPSC, STUDY MATERIALS, ONLINE TESTS, LATEST kalviseithi, Padasalai, tnkalvi, tnpse news, TET updates, TRB news, kalvi news, Padsalai study materials

Subscribe Us

Sigma is

  • Seo Ready
  • Responsive
  • Fast Loading
  • Amazing!

Hot

Post Top Ad

Your Ad Spot
Showing posts with label Press Release. Show all posts
Showing posts with label Press Release. Show all posts

Monday, January 2, 2023

ஆய்வுக்குழு என்ற பெயரில் இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கையைக் கிடப்பில் போடாமல் உடனடியாக நிறைவேற்றித் தர தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்!- சீமான் வலியுறுத்தல்

January 02, 2023 0
ஆய்வுக்குழு என்ற பெயரில் இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கையைக் கிடப்பில் போடாமல் உடனடியாக நிறைவேற்றித் தர தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்!- சீமான் வலியுறுத்தல் | நாம் தமிழர் கட்சி

இடைநிலை ஆசிரியப் பெருமக்களின் ‘சம வேலைக்கு சம ஊதியம்’ கோரிக்கையை நிறைவேற்றப் புதிதாகக் குழு அமைத்துள்ள தமிழ்நாடு அரசின் செயல் மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. கடந்த காலங்களில் திமுக அரசால் அமைக்கப்பட்ட பல்வேறு வெற்றுக் குழுவினைப் போன்று இதுவும் கோரிக்கையை நிறைவேற்றாமல் காலங்கடத்தும் முயற்சியேயாகும்.

தமிழ்நாடு அரசுப்பள்ளிகளில் 2009-ம் ஆண்டுக்கு முன்பு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒரு ஊதியமும், அதன்பிறகு பணி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு மற்றொரு ஊதியமும் வழங்கப்பட்டு வருகிறது. இதனால், இடைநிலை ஆசிரியர்கள் 15000 ரூபாய் அளவுக்குக் குறைவான ஊதியம் பெறக்கூடிய அவல நிலை நிலவுகிறது. இந்த ஊதிய முரண்பாட்டைக் களைய வலியுறுத்தி பத்தாண்டிற்கும் மேலாக இடைநிலை ஆசிரியர்கள் பலகட்ட போராட்டங்களை நடத்தி வந்தனர். இந்நிலையில், தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் சென்னையில் முன்னெடுத்த தொடர் உண்ணாநிலை அறப்போராட்டத்தில் டிசம்பர் 31 அன்று கலந்துகொண்டு வாழ்வாதார உரிமை வெல்லக் குரல்கொடுத்தேன். இதனையடுத்து, தமிழ்நாடு முதலமைச்சர் ஐயா ஸ்டாலின் அவர்கள் ஜனவரி 1 அன்று போராடிவரும் ஆசிரியர்களின் கோரிக்கைகள் குறித்து ஆய்வு செய்து தகுந்த பரிந்துரைகளை அளிப்பதற்காக நிதித்துறை செயலாளர் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளதோடு, அக்குழு அளிக்கும் பரிந்துரைகளின் அடிப்படையிலேயே கோரிக்கை தொடர்பான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளும் என்றும் அறிவித்துள்ளார்கள். இது முழுக்க முழுக்க ஆசிரியர் பெருமக்களின் கோரிக்கையைக் கிடப்பில் போடும் நடவடிக்கையே அன்றி வேறில்லை. சம வேலைக்குச் சம ஊதியம் என்ற இடை நிலை ஆசிரியர்களின் கோரிக்கை நியாயமானது என்றால் அரசு அதனை உடனடியாக நிறைவேற்றுவதில் தயக்கம் ஏன்? ஆய்வுக்குழு அமைத்து ஆராய்ந்துதான் அவர்களின் கோரிக்கை நியாயமானது என்பதை அரசு கண்டறிய வேண்டுமா?

தமிழ்நாட்டில் தற்போது நடைபெற்று வருவது ‘குழுக்களின் அரசாங்கம்’ என்று மக்களே விமர்சிக்கும் அளவுக்குப் பொருளாதார வல்லுநர் குழு, கொரோனா கண்காணிப்புக் குழு, சமூகநீதி கண்காணிப்புக் குழு, நீட் தேர்வு ஆய்வுக் குழு, ஹைட்ரோ கார்பன் ஆய்வுக் குழு, ஸ்டெர்லைட் ஆய்வுக் குழு, இணையவழி சூதாட்ட ஆய்வுக் குழு, இசுலாமிய சிறைவாசிகளை விடுவிக்க குழு, குடிசை மாற்று வாரிய கட்டிட ஆய்வுக் குழு, நகைக்கடன் தள்ளுபடி குழு, பல்கலைக்கழக முறைகேடுகளைக் கண்டறியக் குழு, என்று திமுக அரசு பொறுப்பேற்ற 20 மாதங்களில் ஏறத்தாழ 40 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. திமுக அரசால் அமைக்கப்பட்ட இத்தகைய குழுக்களால் நடந்த நன்மை என்ன? கிடைத்த தீர்வு என்ன?

தமிழ்நாட்டையே உலுக்கிய மாணவி ஸ்ரீமதியின் மரணத்தின் உண்மையை கண்டறிய குழு அமைக்கப்பட்டது. அதனால் ஸ்ரீமதியின் மரணத்திற்கு கிடைத்த நீதி என்ன? 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடும் இசுலாமிய சிறைவாசிகளை விடுவிக்க அமைக்கப்பட்ட குழுவால் அவர்களுக்கு கிடைத்த தீர்வு என்ன? நீட் தேர்வு பாதிப்புகளை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழுவால் நீட் தேர்வினை ரத்து செய்ய முடிந்ததா? இணையவழி சூதாட்ட ஆய்வுக் குழுவால் தற்கொலைகளை தடுக்க முடிந்ததா? புதுக்கோட்டை தீண்டாமைக் கொடுமை நிகழ்வில் சமூகநீதி கண்காணிப்பு குழு எடுத்த நடவடிக்கை என்ன? எல்லாவற்றிற்கும் குழு அமைத்த திமுக அரசு கொடநாடு கொலை, கொள்ளை நிகழ்வினை ஆய்வு செய்ய எந்த குழுவும் அமைக்காதது ஏன்? உண்மையில், புழு கூட நான்கு அடி நகரும். திமுக அரசு அமைத்த இத்தகைய குழுவில் எவ்வித நகர்வும் இருப்பதில்லை. இக்குழுக்களால் அரசின் வரிப்பணம் பலகோடி ரூபாய்கள் வீணாவதைத் தவிர ஆக்கப்பூர்வமாகச் செயல்பாடுகள் எதுவும் இதுவரை நடைபெறவில்லை.

ஆகவே, தமிழ்நாடு அரசு இடைநிலை ஆசிரியப் பெருமக்களின் சம வேலைக்குச் சம ஊதியம் என்ற நியாயமானக் கோரிக்கையை நிறைவேற்ற புதிதாக மீண்டுமொரு குழு அமைத்துக் காலங்கடத்தாமல், அவர்களது வாழ்வாதார உரிமையை உடனடியாக நிறைவேற்றித் தர வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

- செந்தமிழன் சீமான், தலைமை ஒருங்கிணைப்பாளர், நாம் தமிழர் கட்சி
Read More

Saturday, December 31, 2022

Press Release No : 2403 - New Year Greetings of the Honble Chief Minister

December 31, 2022 0


Press Release No : 2403 - New Year Greetings of the Honble Chief Minister

CLICK HERE TO DOWNLOAD
Read More

Thursday, December 29, 2022

TNPSC - ASSISTANT DIRECTOR [WOMEN CANDIDATE ONLY] DEPARTMENT OF SOCIAL WELFARE AND WOMEN EMPOWERMENT (TAMIL NADU GENERAL SERVICE ) (Certificate Verification) - PDF

December 29, 2022 0


ASSISTANT DIRECTOR [WOMEN CANDIDATE ONLY] DEPARTMENT OF SOCIAL WELFARE AND WOMEN EMPOWERMENT (TAMIL NADU GENERAL SERVICE ) (Certificate Verification)

CLICK HERE TO DOWNLOAD
Read More

Wednesday, August 3, 2022

அரசு பிரியாணி திருவிழாவில் மாட்டிறைச்சி பிரியாணி தவிர்க்கப்படக் கூடாது: தமிழ்நாடு ஆதிதிராவிடர், பழங்குடியினர் மாநில ஆணையம் [Press Release No : 1293 ]

August 03, 2022 0


[Press Release No : 1293 ] From the Member Secretary, Tamil Nadu State Commission for Scheduled Castes and Scheduled Tribes

அரசு பிரியாணி திருவிழாவில் மாட்டிறைச்சி பிரியாணி தவிர்க்கப்படக் கூடாது: தமிழ்நாடு ஆதிதிராவிடர், பழங்குடியினர் மாநில ஆணையம் [Press Release No : 1293 ]

CLICK HERE TO DOWNLOAD
Read More

Friday, July 29, 2022

முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் இன்று சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ள பதிவு

July 29, 2022 0
சர்வதேச புலிகள் தினத்தையொட்டி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ள பதிவு

செய்தி வெளியீடு எண்: 1278

நாள் : 29.07.2022

சர்வதேச புலிகள் தினத்தையொட்டி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ள பதிவு தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் கணக்குப்படி 264 புலிகளுடன் இந்தியாவில் உள்ள புலிகளின் எண்ணிக்கையில் சுமார் 10 விழுக்காடு தமிழ்நாட்டில்தான் உள்ளது.

புலிகள் பாதுகாப்பில் தமிழகத்தின் முன்னோடி முயற்சிகளுக்குப் பொருத்தமாக 2022 அக்டோபர் மாதம் சென்னையில் ஒன்றிய அரசுடன் இணைந்து தமிழ்நாடு அரசால், உலகளாவிய புலிகள் உச்சி மாநாடு நடத்தப்படும் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

Tamil Nadu is home to nearly 10% of India's tiger population with 264 Tigers as per NTCA.

I am happy to announce that Tamil Nadu will organise 'TN Global Tiger Summit' in partnership with GOl at Chennai in October 2022 as a fitting tribute
Read More

Thursday, June 30, 2022

Display of Provisional Answer Keys and Question Paper with Recorded Responses for Answer Key Challenge of NCHMJEE -2022

June 30, 2022 0
Display of Provisional Answer Keys and Question Paper with Recorded Responses for Answer Key Challenge of National Council of Hotel Management Joint Entrance Examination (NCHMJEE) -2022

Display of Provisional Answer Keys and Question Paper with Recorded Responses for Answer Key Challenge of National Council of Hotel Management Joint Entrance Examination (NCHMJEE) -2022

National Council for Hotel Management Joint Entrance Examination (NCHM JEE-2022) for admission to the B.Sc. (Hospitality & Hotel Administration) Course at the Institutes of Hotel Management (IHM) affiliated to the National Council for Hotel Management and Catering Technology (NCHM&CT) for the Academic Year 2022-23 was conducted by National Testing Agency (NTA) on 18.06.2022 (Saturday).

Questions, provisional answer keys and responses of the exam are now hosted on https://nchmjee.nta.nic.in. They will be available for 3 days, upto 01.07.2022, in the given window

The candidates, who are not satisfied with any answer key, may challenge the same by filling an online application form ONLY and paying a non-refundable fee of Rs.200/-per question, in the given window.

Only paid challenges made during stipulated time through key challenge link will be considered. Challenges made by the candidates will be verified by the panel of subject experts. If found correct, the answer key will be revised accordingly.

Based on the revised Final Answer Key, result will be prepared and declared. No individual candidate will be informed about the acceptance/non-acceptance of his/her challenge. The key finalized after the challenge will be final.

No grievance with regard to answer key(s) after declaration of result will be entertained. The decision of the experts on the challenges shall be final and no further communication will be entertained.

Candidates are advised to take note of the above and act accordingly.

For any assistance, candidates can call the NTA Help line number 011 4075 9000 or write to NTA at nchm@nta.ac.in

CLICK HERE TO DOWNLOAD
Read More

Sunday, May 22, 2022

Correction in particulars of the Online Application Form of UGC– NET December 2021 and June 2022 (merged cycles)

May 22, 2022 0
Correction in particulars of the Online Application Form of UGC– NET December 2021 and June 2022 (merged cycles).

In view of the numerous representations received from the candidates regarding giving them an opportunity to edit/modify their particulars in the Online Application Form of UGC-NET December 2021 and June 2022 (merged cycles), National Testing Agency has decided to provide the first and final opportunity to the candidates for modifying their particulars in the Online Application Form of UGC-NET December 2021 and June 2022 (merged cycles). The details of the same are as given below:

CLICK HERE TO DOWNLOAD All the registered candidates for the said Examination are advised to visit the website and verify their particulars. They are further advised to make correction/s in their particulars, in their respective Online Application Form, if required, as per Annexure-I The candidates are allowed to make the corrections, latest by 23 May 2022 (up to 09:00 P.M.). Thereafter, no correction in particulars, whatsoever, will be entertained by NTA under any circumstances.

The additional fee (wherever applicable) shall be paid by the candidate concerned either through Credit/Debit Card/Net Banking and UPI. Since, it is a one-time facility extended to the candidates to avoid any hardship to them, the candidates are informed to do the correction carefully, as no further chance for correction will be given to the candidates.

For further clarification related to UGC-NET December 2021 & June 2022, the candidates can also contact 011-40759000 or email at ugcnet@nta.ac.in.
Read More

Tuesday, January 25, 2022

TNPSC இன்று 25/01/2022 வெளியிட்டுள்ள 5 முக்கிய அறிவிப்புகள் - PRESS RELEASES - PDF

January 25, 2022 0
 TNPSC - 25/01/2022 - PRESS RELEASES*👇

TNPSC - வெவ்வேறு பதவிகளுக்கான எழுத்து தேர்வு முடிவு& சான்றிதழ் பதிவேற்றம் தொடர்பான செய்தி வெளியீடு (Press Release)*


TNPSC - JUNIOR SCIENTIFIC OFFICER (THE TAMIL NADU FORENSIC SCIENCE SUBORDINATE SERVICE*


TNPSC - PRINCIPAL, INDUSTRIAL TRAINING INSTITUTE /ASSISTANT DIRECTOR OF TRAINING (TAMIL NADU EMPLOYMENT AND TRAINING SERVICE)*


TNPSC - COMBINED GEOLOGY SUBORDINATE SERVICE (EXAMINATION)*


TNPSC - ASSISTANT PUBLIC PROSECUTOR, GRADE-II IN PROSECUTION DEPARTMENT*



Read More

Thursday, December 23, 2021

கட்டாய தமிழ் அரசாணை அடிப்படையிலான மாற்றப்பட்ட பாடத்திட்டம் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியீடு

December 23, 2021 0
கட்டாய தமிழ் அரசாணை அடிப்படையிலான மாற்றப்பட்ட பாடத்திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாள் டி.என்.பி.எஸ்.சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. குரூப் 4, குரூப் 2 உள்ளிட்ட தேர்வுகளுக்கா பாடத்திட்டம், மாதிரி வினாத்தாள் வெளியாகி உள்ளது.

CLICK HERE TO DOWNLOAD FULL PDF
Read More

Monday, December 6, 2021

முதலமைச்சர் கணினித் தமிழ் விருது 2021 ஆம் ஆண்டுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

December 06, 2021 0
தகவல் தொழில் நுட்ப வளர்ச்சிக்கேற்ப , உலகமெலாம் கணினி வழித் தமிழ் மொழி பரவச் செய்யும் வகையில் கணினித் தமிழ் வளர்ச்சிக்காக சிறந்த தமிழ் மென்பொருள் உருவாக்குபவர்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழ் வளர்ச்சித் துறை வாயிலாக முதலமைச்சர் கணினித் தமிழ் விருது என்ற பெயரில் விருது வழங்கப்பட்டு வருகிறது . விருது பெறுபவருக்கு விருதுத் தொகையாக ரூபாய் 1 இலட்சம் , ஒரு சவரன் தங்கப்பதக்கம் மற்றும் தகுதியுரை வழங்கப்படுகிறது. அவ்வகையில் 2021 ஆம் ஆண்டுக்குரிய முதலமைச்சர் கணினித் தமிழ் விருதுக்கு தனியாள் மற்றும் நிறுவனத்திடமிருந்து , தமிழ் வளர்ச்சிக்கான மென்பொருள்கள் வரவேற்கப்படுகின்றன . விருதுக்கு அனுப்பப்படவுள்ள மென்பொருள்கள் 2018 , 2019 , 2020 ஆம் ஆண்டுகளில் தயாரிக்கப்பட்டதாக இருத்தல் இவ்விருதுக்குரிய விண்ணப்பம் மற்றும் வளர்ச்சித் துறையின் வலைத்தளத்தில் ( www.tamilvalarchithurai.com ) இலவசமாகப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் . வேண்டும்.
Read More

Wednesday, December 1, 2021

இந்தியாவில் டிச.15 முதல் தொடங்கவிருந்த சர்வதேச விமான சேவை ஒத்திவைப்பு! - CIRCULAR Dated 01-12-2021

December 01, 2021 0
இந்தியாவில் டிச.15 முதல் தொடங்கவிருந்த சர்வதேச விமான சேவை ஒத்திவைப்பு!

திட்டமிடப்பட்ட வணிக சர்வதேச பயணிகள் சேவைகளை இந்தியாவிற்கு/இருந்து மீண்டும் தொடங்குதல்

மேற்கூறிய தலைப்பில் 26.11.2021 தேதியிட்ட சுற்றறிக்கை எண்.4/1/2020-IRக்கு குறிப்பு வரவேற்கப்படுகிறது.

புதிய மாறுபாடுகளின் தோற்றத்துடன் உருவாகி வரும் உலகளாவிய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, அனைத்து பங்குதாரர்களுடனும் கலந்தாலோசித்து நிலைமையை உன்னிப்பாகக் கவனித்து, திட்டமிடப்பட்ட வணிக சர்வதேச பயணிகள் சேவைகளை மீண்டும் தொடங்குவதற்கான நடைமுறை தேதியைக் குறிக்கும் பொருத்தமான முடிவு உரிய நேரத்தில் அறிவிக்கப்படும். GOVERNMENT OF INDIA

OFFICE OF THE DIRECTORATE GENERAL OF CIVIL AVIATION OPPOSITE SAFDARJUNG AIRPORT, NEW DELHI-110003

No.4/1/2020-IR

Dated 01-12-2021

CIRCULAR

Sub: Resumption of Scheduled commercial international passenger services to/from India

Reference is invited to circular no.4/1/2020-IR dated 26.11.2021 on the above cited subject.

2. In view of the evolving global scenario with the emergence of new Variants of Concern, the situation is being watched closely in consultation with all stakeholders and an appropriate decision indicating the effective date of resumption of scheduled commercial international passenger services shall be notified in due course.
Read More

TRB - Direct Recruitment of Lecturers (Engineering / Non-Engineering) in Government Polytechnic Colleges for the year 2017-18 - Press News - PDF

Monday, November 29, 2021

அரசு பணியாளர்களுக்கு பவானிசாகர் அடிப்படைப் பயிற்சி! - தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு விவரம்

November 29, 2021 0
அரசு பணியாளர்களுக்கு பவானிசாகர் அடிப்படைப் பயிற்சி!: தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தொடங்கி வைத்தார்..!!

புதிதாக பணியில் சேரும் பணியாளர்களுக்கு பவானிசாகர் அடிப்படைப் பயிற்சியை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தொடங்கி வைத்தார். புதிதாக அரசுப் பணியில் சேரும் அரசு பணியாளர்கள் மற்றும்படி பதவி உயர்வு பெறும் பணியாளர்களுக்கு பணி தொடர்பான பயிற்சியை அந்தந்த மாவட்டங்களிலேயே வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருந்தது. முன்னதாக பல்வேறு மாவட்டங்களில் இருந்து பவானிசாகர் பயிற்சி மையத்திற்குச் சென்று அரசு ஊழியர்கள் பயிற்சி பெற வேண்டிய சூழல் இருந்தது. இனி பயிற்சி பெற வேண்டிய அரசு பணியாளர்களுக்கு அந்தந்த மாவட்டங்களிலேயே பயிற்சி வழங்க தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.

அனைத்து மாவட்டங்களுக்கும் பவானிசாகர் பயிற்சி மையத்தில் இருந்து அதிகாரிகள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அடிப்படை பயிற்சிகளை வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில், புதிதாக பணியில் சேரும் அரசு பணியாளர்களுக்கும், அடிப்படைப் பதவியிலிருந்து பதவி உயர்வு பெறும் பணியாளர்களுக்கும் பவானிசாகர் அரசு அலுவலர் பயிற்சி நிலையத்தின் மூலம் 41 பணி நாட்கள் கொண்ட அடிப்படைப் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இதன் முதற்கட்டமாக சென்னை அண்ணாநகர், ஸ்ரீகிருஷ்ணசாமி மகளிர் கல்லூரியில், தமிழ்நாடு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பயிற்சியைத் தொடங்கிவைத்தார்.

இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு விவரம் வருமாறு:

தமிழக முதலமைச்சர் அவர்கள் புதிதாக பணியில் சேரும் பணியாளர்களுக்கு பவானிசாகர் அடிப்படைப் பயிற்சியினை அந்தந்த மாவட்டங்களிலேயே வழங்கப்படும் என சட்டப் பேரவை விதி 110ன் கீழ் அறிவிக்கை வெளியிட்டதின் பேரில் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. புதிதாக பணியில் சேரும் அரசு பணியாளர்களுக்கும், அடிப்படைப் பதவியிலிருந்து பதவி உயர்வு பெறும் பணியாளர்களுக்கும் பவானிசாகர் அரசு அலுவலர் பயிற்சி நிலையத்தின் மூலம் 41 பணி நாட்கள் கொண்ட அடிப்படைப் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. கொரோனா நோய் தொற்று காரணமாக 17.03.2020 முதல் இந்த அடிப்படைப் பயிற்சி தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது. இதன் காரணமாக மாநிலம் முழுவதும் பயிற்சி பெறுபவர்களின் எண்ணிக்கை ஒன்பதாயிரத்திற்கு மேல் நிலுவை ஏற்பட்டது. இந்த விவரம் அறிந்த மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் அனைத்து பணியாளர்களின் நலனை கருத்தில் கொண்டு, அனைவருக்கும் அந்தந்த மாவட்டத்திலேயே பயிற்சி வழங்கி தகுதிகாண்பருவம் பூர்த்தி செய்யப்பட வேண்டுமெனவும், இதன் மூலம் அவர்கள் பதவி உயர்விற்கு வழிவகுக்கும் என்ற நோக்கில் உடனடியாக அனைத்து மாவட்டங்களிலும் 37 பணி நாட்கள் கொண்ட சுருக்கப்பட்ட அடிப்படை பயிற்சியினை வழங்கலாம் என சட்டப்பேரவை விதி 110ன் கீழ் அறிவிக்கை வெளியிட்டார்கள்.

அண்ணா நிர்வாகப் பணியாளர்கள் கல்லூரி, பவானிசாகர் அரசு அலுவலர் பயிற்சி நிலையம் ஆகியவை பயிற்சி துறைத் தலைவர் அவர்களின் கட்டுப்பாட்டில் இயங்கிவரும் பயிற்சி நிலையங்களாகும். இந்த பயிற்சி நிலையம் மூலம் இதுவரை 1,29,813 பயிற்சியாளர்களுக்கு பல்வேறு அணிகளாக பயிற்சி வழங்கப்பட்டு பதவி உயர்வு வழங்க ஆவண செய்யப்பட்டுள்ளது. இதில் துணை ஆட்சியர், கணக்கு அலுவலர், உதவி இயக்குநர் (ஊரக வளர்ச்சி) ஆகிய பல்வேறு துறை அலுவலர்களைக் கொண்டு அலுவலக நடைமுறை, பணி நடைமுறை, பொதுமக்கள் தொடர்பு, கணக்கு, ஊரக வளர்ச்சி, கணினி, போன்ற பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டுவருகின்றன. மாண்புமிகு தமிழக முதல்வரின் இந்த அறிவிக்கைக்கேற்ப உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு அதே பாடத்திட்டங்களைக் கொண்டு மாவட்ட அளவிளான பயிற்சியை நடத்துவதற்கு உரிய அரசாணை பெறப்பட்டு, அந்த அந்த மாவட்டங்களில் ஓய்வு பெற்ற மாவட்ட வருவாய் அலுவலர்களை ஒருங்கிணைப்பாளர்களைக் கொண்டு பல்வேறு துறை உயர் அலுவலர்களையும் இணைத்து அவர்களை சிறப்பு விரிவுரையாளர்களாக நியமனம் செய்யப்பட்டு ஒரு மாவட்டத்தில் அணிக்கு குறைந்த பட்சம் 250 பயிற்சியாளர்களை தேர்வு செய்யப்பட்டு பயிற்சி நடத்தப்பட உள்ளது. இந்தப் புதிய பயிற்சித் திட்டத்தின் மூலம் வருகைபுரிந்து பெண் பணியாளர்கள் விடுதியில் தங்காமல் வீட்டிலிருந்து தினமும் வருகைபுரிந்து வகுப்புகளில் கலந்து கொள்வதால் அவர்களுக்கு இல்லப்பணிகளையும் தொய்வின்றி கவனிக்க முடியும் என்பதால் இத்திட்டம் மகளிரிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதன் முதற்கட்டமாக இந்த செயலாக்கத்திற்கு சென்னை மாவட்டம் தெரிவு செய்யப்பட்டு மொத்தம் 250 அரசு பணி பயிற்சியாளர்களுக்கு 29.11.2021 அன்று காலை 10.30 மணிக்கு சென்னை, அண்ணாநகர், ஸ்ரீகிருஷ்ணசாமி மகளிர் கல்லூரியில், மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் அவர்களால் பயிற்சி தொடங்கிவைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், தலைமைச் செயலாளர்/பயிற்சி துறைத் தலைவர், முனைவர் வெ.இறையன்பு இஆப., மனித வள மேலாண்மைத் துறை அரசு செயலாளர் திருமதி மைதிலி க. ராஜேந்திரன் இ.ஆப., சென்னை மாவட்ட ஆட்சி தலைவர் முனைவர். ஜெ. விஜயாராணி, இஆப., கல்லூரி முதல்வர் முனைவர். அனிதா ராஜேந்திரன், ஆகியோர் கலந்து கொண்டனர்.
Read More

Thursday, November 25, 2021

நவம்பர் 26 - இந்திய அரசமைப்புச் சட்ட நாளை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துச் செய்தி

November 25, 2021 0
நவம்பர் 26 - இந்திய அரசமைப்புச் சட்ட நாளை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துச் செய்தி!
Read More

Post Top Ad

Your Ad Spot