Post Top Ad
Your Ad Spot
Showing posts with label Promotions. Show all posts
Showing posts with label Promotions. Show all posts
Wednesday, September 21, 2022
மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வை உடனடியாக நடத்த ஆசிரியர் சங்கம் கோரிக்கை
20.09.22*செவ்வாய்*
*மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வை உடனடியாக நடத்த வேண்டும்*-
*ஆசிரியர் சங்கம் கோரிக்கை*
*நேரடி நியமனம் பெற்ற முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்*
*பதிவு எண் 239/2017*
அனுப்புநர்:-
ஆ.இராமு,
மாநிலத் தலைவர்,
நேரடி நியமனம் பெற்ற முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்,
DRPGTA,
7373761517.
பெறுநர்:-
(பணிவோடு வணங்குகிறேன்)
மாண்புமிகு தமிழக பள்ளிக் கல்வி துறை அமைச்சர் அவர்கள்,
தலைமை செயலகம்,
சென்னை -09.
ஐயா,
பொருள்:-
மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வை விரைந்து நடத்த வேண்டுதல் சார்பு:-
தமிழக அரசின் நேர்மையான செயல் பாடுகளால் 2021- 22 ஆம் கல்வி ஆண்டுக்கான ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு முன் எப்போதும் இல்லாத அளவுக்கு தமிழக வரலாற்றில் முதல்முறையாக 100% நேர்மையாக நடந்ததால் பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்கள் பலன் அடைந்து உள்ளனர்.
இதற்காக தமிழக அரசுக்கு மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்நிலையில் நடப்பு 2022 -2023 கல்வி ஆண்டு ஜூன் 13 அன்று
பள்ளிகள் தொடங்கி நான்கு மாதங்கள் நிறைவு பெற உள்ளது.
இந்த நிலையில் நடப்பு 2022-2023 கல்வி ஆண்டுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு மட்டும் நடைபெறும் என்று பள்ளிக்கல்வி துறை சார்பில் அறிவிப்பு வெளியானது.
இதனால் சில தலைமை ஆசிரியர்கள் தங்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு நடத்திய பிறகு பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து பதவி உயர்வு கலந்தாய்வுக்கு இடைக்கால தடையும் பெற்றனர் .
தற்போது அது சார்ந்த அனைத்து வழக்குகளையும் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.எனவே மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வை விரைந்து நடத்த வேண்டும்
மேலும் நடப்பு 2022-2023 கல்வி ஆண்டிற்கான தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலைப் பள்ளிகளின் பட்டியலை உடனடியாக வெளியிட்டு,
அந்த பள்ளிகளையும் மேல்நிலைப்பள்ளி தலைமை பதவி உயர்வு கலந்தாய்வில் உட்படுத்தி பதவி உயர்வு கலந்தாய்வை விரைந்து நடத்த வேண்டும்.
மேலும் நடப்பாண்டில் தமிழகம் முழுவதும் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை ஆசிரியர் பணி இடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்ட 3000 க்கும் மேற்பட்ட முதுகலைப் ஆசிரியர்கள் தேர்வு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நேரடி நியமனம் மூலம் முதுகலை ஆசிரியர்கள் பணிஅமர்த்தப் படுவதற்கு முன்பு
முதுகலை ஆசிரியர்களுக்கு மாவட்டத்திற்குள் மாறுதலும்,
தொடர்ந்து மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வையும் நடத்த வேண்டும்.
தொடர்ந்து 01.01.2022 நிலவரப்படி தகுதி வாய்ந்த பட்டதாரி ஆசிரியர்களுக்கும் முதுகலை ஆசிரியர் பதவி உயர்வும் வழங்கிட வேண்டும்
மேலும் உள் மாவட்டத்திலிருந்து வெளி மாவட்டத்திற்கு ஆசிரியர்கள் கலந்தாய்வில் சென்றபிறகு ஏற்படும் காலிப்பணியிடங்களை உள் மாவட்டத்திற்குள் மாறுதல் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்த ஆசிரியர்கள் எடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சென்ற கலந்தாய்வில் கணவன் மனைவி பணி முன்னுரிமை மூலம் குறைந்த பணி மூப்பு உடைய ஆசிரியர்கள் பெரிதும் பலன் அடைந்தனர்.
நடப்பு கல்வியாண்டில் அதிக பணி மூப்பு உடைய ஆசிரியர்கள் பயன் பெறும் வகையில் ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு நடத்த விதிகளை உருவாக்க வேண்டும்
முந்தைய ஆண்டில் பணிநிரவலால் பணியிட மாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு கலந்தாய்வில் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்
மேலும் கடந்த ஆண்டில் மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப உருவாக்கப்பட்ட கூடுதல் முதுகலை ஆசிரியர் பணியிடங்களையும் நடப்பாண்டில் பொதுமாறுதல் கலந்தாய்வில் உட்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் கடந்த ஆண்டில் கலந்தாய்வு நடைபெற்ற போது இணையதள சேவை வேகம் குறைவாக இருந்தது.
நடப்பாண்டில் அது சரிசெய்யப்பட வேண்டும்.
மேலும் நடப்பாண்டில் காலாண்டு தேர்வு விடுமுறையிலோ அல்லது அதனைத் தொடர்ந்து வரும் பள்ளி வேலை நாட்களின் போது மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு மற்றும் முதுகலை ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வை நடத்த வேண்டும்.
கலந்தாய்வை கடந்த ஆண்டைப் போலவே 100% நேர்மையாகவும் நடத்த தாங்கள் உரிய நடவடிக்கையை உடனடியாக எடுத்து மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்காக காத்திருக்கும் பணி மூப்பு உடைய முதுகலை ஆசிரியர்கள் மற்றும் முதுகலை ஆசிரியர்களின் நலன்களைக் காக்க வேண்டும் என்றும் தங்களைப் பணிவோடும் கனிவோடும் கேட்டுக்கொள்கிறேன்.
இப்படிக்கு
ஆ.இராமு
மாநிலத் தலைவர்,
நேரடி நியமனம் பெற்ற முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்,
DRPGTA,
7373761517.
இடம்:- நாமக்கல்
தேதி:- 20.09.22
நகல்:-
பணிவோடும் கனிவோடும் அனுப்பி வைக்கிறேன்
மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் தனிச்செயலாளர் அவர்கள்,
தலைமைச் செயலகம், சென்னை- 9.
மதிப்பிற்குரிய பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்கள்,
தலைமை செயலகம், சென்னை 9.
மதிப்புமிகு
நேர்மைமிகு
பள்ளிக்கல்வி ஆணையர் அவர்கள்,
பள்ளிக் கல்வி ஆணையரகம், சென்னை-6.
Tags:
counseling,
Head Master's,
Latest News,
Promotions
Friday, July 1, 2022
மத்திய அரசு ஊழியர்கள் 8089 பேருக்கு பதவி உயர்வு
மத்திய அரசுப்பணியில் உள்ள மூன்று முக்கிய பிரிவுகளை சேர்ந்த 8,089 ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
மத்திய செயலக நிர்வாகத்தின் முதுகெலும்பாக, மத்திய செயலக சேவை, மத்திய செயலக சுருக்கெழுத்தாளர் சேவை, மத்திய செயலக எழுத்தர் சேவை ஆகிய பிரிவுகள் உள்ளன.இந்த மூன்று பிரிவுகளைச் சேர்ந்த, 8,089 ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்கி, மத்திய பணியாளர் மற்றும் பயிற்சி துறை உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து பிரதமர் அலுவலக இணையமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியதாவது:மத்திய அரசு ஊழியர்கள், தங்களுக்குரிய பதவி உயர்வைப் பெறாமல் ஓய்வு பெற்றுவிடுவது வருத்தம் அளிக்கிறது. எனவே, மத்திய அரசின் மூன்று பிரிவுகளைச் சேர்ந்த, 8,089 ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்க பிரதமர் மோடி முடிவு செய்தார். இதற்காக அவருக்கு நன்றி தெரிவிக்கிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.
மத்திய அரசு உத்தரவுப்படி, மத்திய செயலக சேவைப் பிரிவில், 4,734 பேர் பதவி உயர்வு பெற்றுள்ளனர். மத்திய செயலக சுருக்கெழுத்தர் சேவை, மத்திய செயலக எழுத்தர் சேவை ஆகியவற்றில் முறையே, 2,966 பேர், 389 பேர் பதவி உயர்வு பெற்றுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது

Wednesday, December 22, 2021
Thursday, September 16, 2021
SC,STயினருக்கு பதவி உயர்வில் இடஒதுக்கீடு - மாநிலங்களுக்கு உச்ச நீதிமன்றம் புதிய உத்தரவு
அரசு பணிகளில் பதவி உயர்வில் எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பான முந்தைய வழக்குகளை மீண்டும் விசாரிக்க மறுத்த உச்ச நீதிமன்றம், முந்தைய தீர்ப்புகளின் அடிப்படையில் உள்ள பிரச்னைகளை மட்டும் பட்டியலிட்டு அறிக்கை தாக்கல் செய்யும்படி மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது. அரசு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு மற்றும் பதவி உயர்வில் இடஒதுக்கீடு அளிப்பது தொடர்பாக மண்டல் கமிஷன், எம். நாகராஜ், ஜர்னயில் சிங் ஆகியோர் தொடர்ந்த வழக்குகளில் உச்ச நீதிமன்றம் முன்னதாக தீர்ப்பளித்துள்ளது.
குறிப்பாக, நாகராஜ் வழக்கில், உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு 2006ல் தீர்ப்பு அளித்தது. அதில், ‘ஒரு பிரிவினர் பின்தங்கி இருக்கின்றனர் என்பதற்கான புள்ளி விவர ஆதாரங்கள் மற்றும் பிரதிநிதித்துவத்தில் பின்தங்கி இருப்பதற்கான ஆதாரங்கள் திரட்டப்பட வேண்டும்,’ என்று கூறப்பட்டது. இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு 2018ல் வழங்கிய மற்றொரு தீர்ப்பில், ‘ஒரு பிரிவினர் பின் தங்கி இருக்கின்றனர் என்பதற்கான தகவல்களை திரட்டத் தேவையில்லை,’ என கூறப்பட்டுள்ளது.
இந்த மாறுபட்ட தீர்ப்பு குழப்பத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், பதவி உயர்வில் எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவினருக்கு இடஒதுக்கீடு அளிப்பதில் உள்ள தடைகளை நீக்கக் கோரி பல்வேறு மாநிலங்கள் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு, நீதிபதிகள் நாகேஸ்வர ராவ், சஞ்சீவ் கண்ணா மற்றும் பி.ஆர். கவாய் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது பிறபித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: இந்த வழக்கில் நாங்கள் மிகவும் தெளிவாக இருக்கிறோம். பதவி உயர்வில் இடஒதுக்கீடு அளிப்பது தொடர்பான முந்தைய வழக்குகளை மீண்டும் விசாரிக்க முடியாது. ஏற்கனவே அளிக்கப்பட்டுள்ள தீர்ப்புகளின் அடிப்படையில், பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்குவது குறித்து மாநில அரசுகளே முடிவு செய்யலாம்.
அதை எப்படி செயல்படுத்த வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு ஆலோசனைகளையோ, உத்தரவுகளையோ பிறப்பிக்க முடியாது. அதனால், பதவி உயர்வு வழங்குவதில் எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவினர் பின் தங்கியுள்ளனரா என்பதற்கான புள்ளி விபரங்களின் அடிப்படையில் செய்வதா அல்லது பதவிகளில் உரிய பிரதிநிதித்துவம் உள்ளதா என்ற அடிப்படையில் செய்வதா என்பது குறித்துமாநில அரசுகளே முடிவு செய்யலாம். அதில், ஏதேனும் தடைகளோ அல்லது இடயூறோ இருக்கும் பட்சத்தில் நீதிமன்றம் அதனை விசாரிக்கும்.
மேலும், இது தொடர்பான தகவல்களை அளிக்கும்படி மாநில அரசுகளுக்கு ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் தங்களுக்கு உள்ள பிரச்னைகள் தொடர்பாக மாநில அரசுகள் ஒரு அறிக்கையாக இரண்டு வாரங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும். அதில் குறிப்பிடும் பிரச்னைகள் குறித்து ஆராய்ந்து அவற்றை நீக்குவதற்கான வழிமுறைகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு நீதிபதிகள் கூறினர். பின்னர், விசாரணையை அக்டோபர் 5ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Court Order,
Government,
Information,
Job,
Promotions
Post Top Ad
Your Ad Spot
Author Details
Templatesyard is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of templatesyard is to provide the best quality blogger templates which are professionally designed and perfectlly seo optimized to deliver best result for your blog.