KalviseithiDaily: அமைச்சர் அறிவிப்பு

KalviseithiDaily

kalviseithidaily.blogspot.com No:1 Education Website in Tamil கல்வி செய்திகள்: Get latest news on Exam Results, tamil nadu school education department news, TN University Results, Exam Schedule Latest News Educational News from Tamilnadu Government, Tamilnadu Educaitonal Minsters Latest Updates, 10th, 11th, 12th, TNTET, TRB, TNPSC, STUDY MATERIALS, ONLINE TESTS, LATEST kalviseithi, Padasalai, tnkalvi, tnpse news, TET updates, TRB news, kalvi news, Padsalai study materials

Subscribe Us

Sigma is

  • Seo Ready
  • Responsive
  • Fast Loading
  • Amazing!

Hot

Post Top Ad

Your Ad Spot
Showing posts with label அமைச்சர் அறிவிப்பு. Show all posts
Showing posts with label அமைச்சர் அறிவிப்பு. Show all posts

Tuesday, July 26, 2022

விளையாட்டிலும் மாணவர்களுக்கு ஆர்வம் வேண்டும் – அமைச்சர்

July 26, 2022 0
படிப்பில் மட்டும் இல்லாமல் விளையாட்டிலும் மாணவர்கள் கலந்து கொண்டால் தான் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் சுறுசுறுப்பு அடைய முடியும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

பள்ளிக்கல்வித்துறை சார்பாக உலகத் திறனாய்வு உடன் திறன் தெரிவுப் போட்டிகள் தொடக்க விழா இன்று நடைபெற்றது. திருப்பூரில் உள்ள ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலை பள்ளியில் நடைபெற்ற இந்த போட்டிகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கலந்துகொண்டு தொடங்கி வைத்தார். இதில் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், 6, 7 மற்றும் 8 ஆம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்கள் படிப்பில் மட்டும் அல்லாமல் விளையாட்டு போன்ற துறைகளிலும், தங்கள் திறமைகளை வெளிக்கொண்டுவரவே இது போன்ற போட்டிகள் நடத்தப்படுகின்றன என்றார்.

விளையாட்டு என்று வரும் போது உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் நாம் பலப்பட வேண்டும் என தெரிவித்த அவர், மாணவர்கள் அதை பெறும் போது சமூகமும் அதை பெறும் என கூறினார். விளையாட்டில் அதிகம் ஈடுபடும் போது, உடல்ரீதியாகவும், மன ரீதியாகவும் சுறுசுறுப்பு அடைவதன் மூலம் படிப்பிலும் அதிக கவனம் செலுத்த முடியும்.

உலக திறனாய்வு உடற்திறன் தெரிவுபோட்டிக்கான செயலி இன்று அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்த செயலி மூலம் மாணாக்கர்களின் திறன் கண்காணிக்கப்பட்டு அவர்களை தேர்வு செய்வதோடு, விளையாட்டு பயிற்சிக்கான செலவை பள்ளிக்கல்வி துறையே ஏற்கும் என்றும் அன்பில் மகேஷ் விளக்கமளித்தார்.
Read More

Saturday, March 19, 2022

மார்ச் 31-ந் தேதிக்குள் நகைக்கடன் தள்ளுபடி - அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவிப்பு

March 19, 2022 0
மார்ச் 31-ந் தேதிக்குள் நகைக்கடன் தள்ளுபடி - அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவிப்பு

மார்ச் 31-ந் தேதிக்குள் கூட்டுறவு வங்கியில் வைக்கப்பட்டுள்ள ரூ.6 ஆயிரம் கோடி மதிப்பு தங்க நகைக்கடன்களும் தள்ளுபடி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திமுக அரசு கடந்த ஆண்டு ஆட்சிக்கு வந்ததும், 5 லட்சத்துக்கும் கீழ் வைக்கப்பட்டுள்ள அனைத்து நகைக்கடன்களும் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்தது. இதன் கீழ் வரும் வாடிக்கையாளர்களின் பட்டியலையும் தயாரித்து, தங்க நகைக்கடன் தள்ளுபடி செய்வதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், வரும் மார்ச் 31-ந் தேதிக்குள் கூட்டுறவு வங்கியில் வைக்கப்பட்டுள்ள ரூ.6 ஆயிரம் கோடி மதிப்பு தங்க நகைக்கடன்களும் தள்ளுபடி செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 14.40 லட்சத்து பயனாளிகளுக்கும் பொது நகைக்கடன் வரும் 31-ந் தேதிக்குள் தள்ளுபடி செய்யப்படும் என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
Read More

Post Top Ad

Your Ad Spot