KalviseithiDaily: Achievements

KalviseithiDaily

kalviseithidaily.blogspot.com No:1 Education Website in Tamil கல்வி செய்திகள்: Get latest news on Exam Results, tamil nadu school education department news, TN University Results, Exam Schedule Latest News Educational News from Tamilnadu Government, Tamilnadu Educaitonal Minsters Latest Updates, 10th, 11th, 12th, TNTET, TRB, TNPSC, STUDY MATERIALS, ONLINE TESTS, LATEST kalviseithi, Padasalai, tnkalvi, tnpse news, TET updates, TRB news, kalvi news, Padsalai study materials

Subscribe Us

Sigma is

  • Seo Ready
  • Responsive
  • Fast Loading
  • Amazing!

Hot

Post Top Ad

Your Ad Spot
Showing posts with label Achievements. Show all posts
Showing posts with label Achievements. Show all posts

Saturday, September 10, 2022

நீட் தேர்வு: ராமநாதபுரம் மாவட்டத்தில் மாஸ் காட்டிய அரசு பள்ளி மாணவர்கள்..

September 10, 2022 0
Ramanathapuram NEET Result 2022 : ராமநாதபுரம் மாவட்டத்தில் தனியார் பள்ளிகளை காட்டிலும் அரசு பள்ளி மாணவ-மாணவிகளே பெரும்பாலும் நீட் தேர்வில் தகுதியில் வெற்றி பெற்று மாஸ் காட்டியுள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் தனியார் பள்ளிகளை காட்டிலும் அரசு பள்ளி மாணவ-மாணவிகளே பெரும்பாலும் நீட் தேர்வில் வெற்றி பெற்று மாஸ் காட்டியுள்ளனர். தற்போது அரசு பள்ளியில் படித்த மாணவர்களின் மீது தனியார் பள்ளிகளின் படித்த பெற்றோர்களின் பார்வை திரும்பியுள்ளது.

மருத்துவக்கல்வி மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு (NEET exam) கடந்த ஜூலை 17-ந்தேதி நடைபெற்றது. இதில் ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு பள்ளிகளைச் சேர்ந்த 75 மாணவர்கள், 203 மாணவிகள், அரசு உதவி பெறும் பள்ளிளைச் சேர்ந்த 13 மாணவர்கள், 50 மாணவிகள், மெட்ரிக் பள்ளிகளைச் சேர்ந்த 3 மாணவர்கள், 13 மாணவிகள் என 357 பேர் தேர்வு எழுதினர்.

இதன் முடிவுகள் செப்டம்பர் 7ம் தேதி இரவு 11.30 மணியளவில் வெளியிடப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டத்தை பொறுத்த அளவில் நீட் தேர்வில் 93 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்து 108 பேர் தகுதி பெற்றுள்ளனர். இதன்படி, ராமநாதபுரம் மாவட்ட அரசு பள்ளிகளை சேர்ந்த 24 மாணவர்களும், 51 மாணவிகளும், அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த 4 மாணவர்களும், 20 மாணவிகளும், மெட்ரிக் பள்ளிகளை சேர்ந்த 3 மாணவர்களும், 6 மாணவிகளும் என 108 பேர் தகுதி பெற்றுள்ளனர்

முதல் 15 இடங்கள்:

பரமக்குடி அரசு பள்ளி மாணவர் சீனிவாசன் 371, மாணவி பிரபாவதி 334, ஆர்.எஸ். மங்கலம் மாணவி அபி செல்வம் 298, ஆர்.காவனூர் மாணவி பவானி 286, வண்ணாங்குண்டு மாணவி திரிஷா 228, ஆர்.காவனூர் மாணவிகள் ஷர்மிளி 230, லத்திகா 213, ஏர்வாடி பள்ளி மாணவர் செந்தாமரை கண்ணன் 192, ஆர்.காவனூர் மாணவி பாரதி 189, சிக்கல் பள்ளி மாணவி காவ்யா 185, எமனேசுவரம் மாணவர் அச்சுதராமன் 176, ஆர்.காவனூர் மாணவி கார்த்திகை செல்வி 173, மாணவர் யுவராஜ் 166, மாணவி சோபிகா 164, உச்சிநத்தம் மாணவி சத்யபாமா 162 மதிப்பெண் எடுத்து மாவட்டத்தில் முதல் 15 இடங்களை பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பெரும்பாலும் அரசு பள்ளி மாணவ-மாணவிகளே நீட் தேர்விலும் வெற்றி பெற்றிருப்பது தனியார் பள்ளிகளில் படிக்க வைத்த பெற்றோர்களை ஒரு நிமிடம் திரும்பி பார்க்க வைத்துள்ளது எனலாம்.
Read More

Monday, July 4, 2022

ரூபிக்ஸ் கனசதுரத்தை சேர்த்து ஒன்பதாம் வகுப்பு மாணவி உலக சாதனை

July 04, 2022 0
விழுப்புரத்தில் 9-ம் வகுப்பு மாணவி வெவ்வேறு வடிவிலான ரூபிக் கனசதுரத்தை சேர்த்து உலக சாதனைப் படைத்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் பகுதியில் இயங்கி வரும் இண்டர்நேஷனல் சி.பி.எஸ்.இ பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவி ரினி டானியா. 15 வெவ்வேறு வடிவமான கனசதுரத்தினை 5 நிமிடம் 43 நொடியில் சேர்த்து உலக சாதனை படைத்துள்ளார். இந்த சாதனையை செய்த மாணவியை மாவட்ட ஆட்சியர் மோகன் பாராட்டியுள்ளார். விழுப்புரம் ஜான்டூயி இண்டர்நேஷனல் சி.பி.எஸ்.இ பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவி ரினி டானியா. இந்த மாணவி கொரோனா காலகட்டத்தில் அந்த நாட்களை பயனுள்ளதாக மாற்றுவதற்காக, பல்வேறு வகைகளில் கவனத்தைச் செலுத்திவந்தார். இந்நிலையில் யூ டியூப் மூலம் சில வீடியோக்களை பார்க்கும் போது, ரூபிக்ஸ் கன சதுரத்தை சேர்க்கும் வீடியோ வந்துள்ளது, அதனை கவனித்த டானியா, அந்த வீடியோவை அடிக்கடி பார்த்து, பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.

குறைந்தபட்சம் 7 மாத பயிற்சியில், பல்வேறு வடிவங்களை கொண்ட கன சதுரங்களை சேர்க்கும் திறமையை வளர்த்துள்ளார். இந்த செயலை இம் மாணவியின் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் ஊக்குவித்து வந்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து, 15 பல்வேறு வடிவமான ரூபிக்ஸ் கனசதுரத்தை 5 நிமிடம் 43 நொடியில் தீர்க்கும் நிகழ்வில் சாதனை புரிந்துள்ளார். இந்த சாதனையை பாராட்டி, ரூபிக்ஸ் கனசதுரத்தை இளம் மாணவிகள் தீர்வு என்ற புத்தகத்திலும் ( The young girl to solve most unique varieties of rubik cube's in record time ), எதிர்கால கலாம் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் என்ற புத்தகத்திலும்( Future kalam's Book of record's ), பதிவு செய்து உலக சாதனை படைத்துள்ளார்.

மேலும் இந்த விருது குறித்து மாணவி டானியா கூறுகையில், இந்த விருது வாங்கியது எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது. மேலும் குறைவான கால கட்டங்கள் மற்றும் விடுமுறை நாட்களில் மாணவர்கள் தங்கள் திறமையை வளர்த்துக் கொள்வதற்கும், தங்கள் திறமையை என்னவென்று கண்டுபிடிப்பதற்கும் இந்த விடுமுறை நாட்களை பயன்படுத்தவேண்டும் என மாணவி கூறியுள்ளார்.

இந்த உலக சாதனை புரிந்த மாணவி ரினி டானியாவை , மாவட்ட ஆட்சியர் மோகன் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.
Read More

Thursday, June 16, 2022

அரசு உயர்நிலைப் பள்ளிக்கு ISO தரச்சான்று

June 16, 2022 0
விருதுநகர் மாவட்டத்தில் முதல் முறையாக பட்டம்புதூர் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று வழங்கப்பட்டுள்ளது.

விருதுநகர் அருகே பட்டம்புதூரில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 6 முதல் 10-ம் வகுப்பு வரை 200 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். 15 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

ஸ்மார்ட் கிளாஸ், தூய்மையான வளாகம், கல்வித் தரம், சுகாதாரம் போன்ற பல்வேறு அம்சங்களுடன் சிறந்து விளங்கும் இப்பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று வழங்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் ஐஎஸ்ஓ தரச்சான்று பெற்ற முதல் மற்றும் ஒரே அரசு பள்ளி இது என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியர் ப.திருசெல்வராஜா கூறியதாவது:

6 முதல் 10 வரை அனைத்து வகுப்பறைகளும் கணினிமயமாக்கப்பட்டு ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறைகளாக மாற்றப்பட்டுள்ளன.அகன்ற திரைகளில் புரொஜெக்டர் மூலம் கற்பிக்கிறோம்.

பள்ளி மைதானத்தையும், வளாகத் தையும் தூய்மையாகவும், சுத்த மாகவும் பராமரித்து வருகிறோம். பள்ளி வளாகத்தில் மரங் களை வளர்த்துள்ளோம்.

நமக்கு நாமே திட்டத்தின் கீழ் தனியார் நிதி உதவியோடு குடிநீர் சுத்திகரிப்பு கருவி அமைத்து மாணவர்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்குகிறோம். மாணவர் களுக்கான 5 கழிப்பறைகளையும், மாணவிகளுக்கான 5 கழிப்பறை களையும் சுத்தமாக பராமரித்துவருகிறோம்.தனியார் பங்களிப்போடு சைக்கிள் நிறுத்துமிடத்தில்தரைத்தளத்தோடு ஷெட் அமைத்துள்ளோம். 9 மற்றும் 10-ம் வகுப்பு மாணவிகளுக்காக உணவுக் கூடம் அமைத்துள்ளோம்.
அங்கு போட்டித்தேர்வுகளுக்கான புத்தகங்களை வைத்துள்ளோம். ஆசிரியர் வகுப்புக்கு வராத நேரத்திலும், உணவு இடைவேளை நேரத்திலும் மாணவிகள் போட்டித் தேர்வுக்கான புத்தகங்களை எடுத்துப் படிக்கலாம்.

பள்ளியில் புத்தக வங்கி தொடங்கியுள்ளோம். இதன் மூலம் 6 முதல் 10-ம் வகுப்பு வரையுள்ள மாணவ, மாணவிகளிடம் இறுதித் தேர்வு முடிந்த பின்பு அவர்களது புத்தகங்களை பள்ளியில் வாங்கி சேமித்து வைப்போம். கிராமத்தில் போட்டித் தேர்வுக்கு தயாராகும் இளைஞர்களிடம் "தங்களுக்கு பாடப் புத்தகம் வேண்டும், தேர்வு முடிந்ததும் தருகிறேன்" என ஒரு கடிதம் எழுதி பெற்றுக்கொண்டு புத்தகங்களை அவர்களுக்கு வழங்கி வருகிறோம்.

மாணவ, மாணவிகளுக்கு தரமான மற்றும் சத்தான உணவு வழங்க வேண்டும் என்பதற்காக பள்ளி வளாகத்தில் காய்கறித் தோட்டம் அமைத்துள்ளோம். என்எல்சி நிதி உதவியோடு மினி அறிவியல் ஆய்வகமும் அமைத்துள்ளோம். பள்ளி வளாகத்தில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தியுள்ளோம்.

நமக்கு நாமே திட்டத்தின் கீழ் பள்ளியிலிருந்து தேசிய நெடுஞ்சாலை வரை சுமார் 500 மீட்டர் நீளத்துக்கு அணுகு சாலை அமைக்க திட்டமிட்டுள்ளோம் என்று கூறினார்
Read More

Monday, May 30, 2022

I.A.S., தேர்வில் தமிழகத்தில் முதலிடம் பிடித்து கோவை மாணவி சாதனை!

May 30, 2022 2
I.A.S., தேர்வில் முதலிடம்

'விவசாய துறையில் உள்ள நவீன தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்கு கொண்டு செல்வதே குறிக்கோள்,'' என, குடிமைப்பணித் தேர்வில் வெற்றி பெற்ற மாணவி ஸ்வாதிஸ்ரீ தெரிவித்தார்.

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட சிவில் சர்வீஸ் பணிகளுக்கான தேர்வு கடந்த ஜன., யிலும், அதில் வெற்றி பெற்றவர்களுக்கான நேர்முக தேர்வு கடந்த ஏப்., மாதமும் நடந்தது. இறுதி தேர்வு முடிவுகள் இன்று(மே 30) வெளியிடப்பட்டது. அதில், 685 பேர் தேர்ச்சி பெற்றனர். கோவையை சேர்ந்த ஸ்வாதி ஸ்ரீ தேசிய அளவில், 42-வது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
கோவை மாணவி சாதனை!

கோவை தொப்பம்பட்டியை சேர்ந்த தியாகராஜன் - லட்சுமி தம்பதியின் மூத்த மகள் ஸ்வாதிஸ்ரீ, 25. இளங்கலை வேளாண் பட்டதாரி. வேளாண் கல்வி மீது பள்ளி பருவத்திலிருந்தே நாட்டம் அதிகம். கோவை வேளாண் பல்கலையின் கீழ், தஞ்சாவூரில் உள்ள தனியார் வேளாண் கல்லுாரியில், இளங்கலை வேளாண் பட்டம் பெற்றவர். மூன்றாவது முறையாக தேர்வு எழுதி வெற்றி பெற்றுள்ளார்.

தேர்வில் வெற்றி பெற்றது குறித்து ஸ்வாதிஸ்ரீ கூறியதாவது: தேசிய அளவில், 42 வது இடம், தமிழகளவில் முதலிடம் பிடித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. தாத்தா - பாட்டி வேளாண் தொழிலில் ஈடுபட்டதை பார்த்து ஆசைப்பட்டே வேளாண் படிப்பில் சேர்ந்தேன். பட்டம் பெற்ற பின் குடிமைப்பணித் தேர்வை எழுதினேன். சென்னை மனிதநேயம் அறக்கட்டளை, அறம் பயிற்சி மையத்தில் குடிமைப்பணி தேர்வுக்கான பயிற்சிகளை பெற்றேன்.
மூன்றாவது முறையாக தேர்வு

முதல் முறை எழுதிய தேர்வில், எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கவில்லை. இரண்டாம் முறை தேசிய அளவில், 126 இடம் பிடித்து ஐ.ஆர்.எஸ்., பணிக்கு தேர்வானேன். ஐ.ஏ.எஸ்., ஆக வேண்டும் என்பதால் மூன்றாவது முறையாக தேர்வு எழுதினேன். இதில் தேசிய அளவில், 42 வது இடம், பெற்றுள்ளேன். பொதுமக்களின் சவால்களை, கஷ்டங்களை தீர்க்கும் விதமாக கொள்ளை ரீதியான முடிவெடுப்பேன்.

விவசாயிகளின் வாழ்வாதார பிரச்சனைகளை தீர்க்க முன்னுரிமை தருவேன். விவசாய துறையில் உள்ள நவீன தொழில்நுட்பங்களை கண்டறிந்து அதை விவசாயிகளுக்கு கொண்டு செல்வதே குறிக்கோள். அப்பா சுயதொழில் செய்து வருகிறார். அம்மா போஸ்ட் ஆபிஸில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். தங்கை உள்ளார். இது என் பெற்றோரின் கனவு. அதனால், அவர்களுக்கு இவ்வெற்றியால் மிக்க மகிழ்ச்சி. இவ்வாறு அவர் கூறினார்.
Read More

Monday, November 15, 2021

கதையல்ல நிஜம்: 'மருத்துவராகும் பொறியியல் பட்டதாரி'ப் பெண்ணின் விடாமுயற்சி

November 15, 2021 0
மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த இளம்பொறியாளர் ஒருவர் மருத்துவாராக வேண்டும் என்ற தனது இளமைக்கால கனவை நனவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

பொறியியல் பட்டம் பெற்று 10 ஆண்டுகளாக பொறியியல் துறையில் பணியாற்றிய இளம்பெண், தனது குழந்தைப் பருவ கனவை நிஜமாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் தாணே பகுதியைச் சேர்ந்தவர் ஆக்ருதி கியோல். 29 வயதான இவர் கடந்த 2015-ஆம் ஆண்டு ராஜஸ்தானிலுள்ள பிர்லா இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலனியில் பொறியியல் படிப்பை முடித்துள்ளார்.

விருப்பத்துடன் படித்து பொறியியல் படிப்பை முடித்த அவர், பெரு நிறுவனங்களில் பணிபுரிவதை விரும்பவில்லை. இதனால் பெரிய நிறுவனங்களின் வாய்ப்பை மறுத்து, சிறிய நிறுவனங்களில் தனது பங்களிப்பை அளிக்கத் தொடங்கினார். பின்னர் சோதனை முயற்சியில் பொறியியல் துறையில் சவாலான பணிகளில் சேர்ந்து பணிபுரிந்துள்ளார். நாளொன்றுக்கு 14 முதல் 16 மணி நேரம் வேலை பார்த்ததால் உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். உடலில் ஹார்மோன் பற்றாக்குறை ஏற்பட்டதால் அப்பணியை விடுத்து சில மாதங்கள் ஓய்வு பெற்றுள்ளார்.

மனதை ஒருநிலைப்படுத்த யோகா, ஓவியம் வரைதல் போன்றவற்றை மேற்கொண்டுள்ளார். பிறகு மீண்டும் பணியில் சேர்ந்துள்ளார். அவரது பணிக்கு அதிக ஊதியம்கிடைத்தும் வாழ்க்கையில் திருப்தியின்மையையே உணர்ந்துள்ளார்.

பொறியியல் துறையில் அதிகம் கற்றுக்கொண்டாலும், அதில் மனநிறைவை அவர் அடையவில்லை. பெண்களை ஊக்கப்படுத்துவதில் அதிக ஈடுபாடு கொண்ட அவர், அதற்காக தொண்டு நிறுவனம் ஒன்றை ஆரமிக்க எத்தனித்தார். கரோனா பொதுமுடக்கம் அதற்கு தடையாக இருந்தது. பிறகு வீட்டில் தனிமையில் இருந்த அவர், ஜாப்பானிய யோகா முறைகளை மேற்கொண்டுள்ளார். இதில் வாழ்கையின் மீதான பிடிப்பிற்கு பிடித்த விஷயங்களை செய்வது மட்டுமே தீர்வு என்பதை உண்ர்ந்துள்ளார். தனது மனம் மருத்துவத்தில் மகிழ்வுறும் என்று அவர் எண்ணினார்.

இது தொடர்பாக பேசிய அவர், ''பள்ளிப் பருவ காலத்தில் மருத்துவராக வேண்டும் என்ற கனவு இருந்தது. கல்லூரி பருவத்தில் பொறியியல் துறையை தேர்வு செய்ததாகக் கூறுகிறார். நான் இந்த முடிவை எண்ணி வருத்தப்படவில்லை. பொறியியல் துறையில் கற்றுக்கொண்டது ஏராளம். பெண் பொறியாளர் என அழைக்கப்படுவதில் எனக்கு பெருமை. ஆனால், நான் இப்போது மருத்துவராக வேண்டும் என்று விரும்புகிறேன்'' என்று கூறுகிறார் ஆக்ருதி.

''வாழ்க்கையில் சாதிப்பதற்கும் இலக்கை அடைவதற்கும் வயது ஒரு தடையல்ல. நாம் அனைவரும் ஒரே மாதிரியான சிந்தனையின் சிக்கியுள்ளோம். எது நடந்ததோ அது நடந்ததுதான். மீண்டும் முதலில் இருந்து தொடங்க இயலாது. நமக்கு வயதாகிவிட்டது. பெண்ணாக இருந்து இலக்கை எட்டுவது கடினம் என்பதெல்லாம் பொய்.

மக்கள் தங்களது 30, 40 ஏன் 50 வயதில் கூட தங்களது இலக்குகளை கண்டறியலாம். வாழ்க்கையில் இலக்கை கண்டறிவதிலும், அடைவதிலும் வயதுக்கு இடமில்லை'' என்று கூறினார்.

மருத்துவராக வேண்டும் என்று முடிவெடுத்து அதற்காக படிக்க ஆரம்பித்த அவர், நடந்து முடிந்த நீட் தேர்வில் 700க்கு 676 மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று இந்திய அளவில் 1118வது இடத்தை பிடித்துள்ளார்.

''படிப்பதில் எப்போதுமே எனக்கு ஆர்வம் உள்ளது. வேதியியல், இயற்பியல் படித்த நான் தற்போது உயிரியல் படிக்க ஆரமித்துள்ளேன். நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றது எனது பெற்றோர்களுக்கு ஆச்சர்யம் தான். எனக்கு எய்ம்ஸ் அல்லது மும்பையிலுள்ள ஏதேனும் அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கும். என்னை விட இளம் வயதினருடன் மீண்டும் அமர்ந்து படிக்க உள்ளதை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன். இளம் தலைமுறையினரின் வேகம் எனக்கு உத்வேகத்தை அளிக்கும். இதனை ஒரு வாய்ப்பாக நான் பயன்படுத்திக்கொள்வேன். எனது மேற்படிப்புடன் அடுத்த 12 ஆண்டுகளை நான் இப்படிதான் செலவிட உள்ளேன். எனது வாழ்க்கையில் மீண்டும் மகிழ்ச்சியை தரும் ஒன்றை நோக்கி நான் நடக்க ஆரமித்துள்ளேன்'' என்றார் ஆக்ருதி.
Read More

Saturday, November 13, 2021

கையளவு சிபியு-வைக் கண்டறிந்த மாணவர்: நேரில் அழைத்துப் பாராட்டிய முதல்வர்!

November 13, 2021 0
கணினியின் செயல்பாட்டுக்குக் காரணமாக இருக்கும் மைய செயலாக்கக் கருவி(CPU)யில் கையடக்க அளவு கருவியைக் கண்டுபிடித்து சாதனை புரிந்துள்ளார் திருவாரூரைச் சேர்ந்த மாணவர் மாதவ்.

திருவாரூர் நகர் பகுதியை ஒட்டியுள்ள மருதப்பட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் சேதுராமன். இவர் தமிழ்நாடு கூட்டுறவுத் துறையில் தட்டச்சராக தூத்துக்குடி மாவட்டத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பெயர் சுதா. இவர்களுக்கு இரண்டு மகன்கள். முதல் மகன் மாதவ் ஒன்பதாம் வகுப்பும், இரண்டாவது மகன் கிரித்திக் ஒன்றாம் வகுப்பும் படித்து வருகின்றனர். சேதுராமன் தூத்துக்குடியில் தங்கிப் பணியாற்றி வரும் நிலையில் அவரது மனைவியும் இரண்டு மகன்களும் மருதப்பட்டினத்தில் வசித்து வருகின்றனர்.

சிறுவயது முதலே மாதவ் கணினி மீது தீவிர ஆர்வம் கொண்டிருப்பதைக் கண்ட அவரது பெற்றோர், அதை ஊக்குவிக்கும் வகையிலான உதவிகளை செய்து வந்துள்ளனர். இதனிடையே, தனியார் பள்ளியில் அவர் 7 ஆம் வகுப்பு படித்து வந்தார். அப்போது கரோனா பரவல் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு வந்தது.

கையடக்க சிபியு கருவி

கரோனா விடுமுறையை வீணடிக்க விரும்பாத மாதவ், வீட்டிலிருந்தவாறு ஆன்லைன் மூலமாக ஜாவா, சி, சி++, பைத்தான் போன்ற கணினி சாப்ட்வேர் பயிற்சிகளை படித்து முடித்துள்ளார். தற்போது 9 ஆம் வகுப்பு படிக்கும் மாதவ், கணினியை இயங்கச் செய்யக் கூடிய மைய செயலாக்கக் கருவி என்று அழைக்கப்படக்கூடிய சென்ட்ரல் ப்ராசசிங் யூனிட் கருவியை(CPU) கையடக்க அளவில் கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளார்.

இதற்கான முயற்சியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக மாதவ் ஈடுபட்டு வந்த நிலையில், தானே அந்தக் கருவியை வடிவம் செய்து அதனை பல்வேறு தனியார் கணினி செயலாக்க கருவியை தயாரிக்கும் நிறுவனங்களுக்கு அனுப்பி வைத்துள்ளார். பின்னர், அதற்கான மதர்போர்டு என்று அழைக்கக்கூடிய முக்கிய பாகங்களை மும்பையிலிருந்து வரவழைத்து இவரே வடிவமைத்துள்ளார்.

தொடக்கத்தில், இதற்கான வடிவமைப்பில் இருபது முறை தோல்வியடைந்துள்ளார். 21 ஆவது முறை கணினி மைய செயலாக்க கருவியை கண்டுபிடித்து வெற்றி பெற்றுள்ளார். பின்னர், அந்தக் கருவியின் மேல்புற மற்றும் அடிப்புற மூடு பாகங்களையும் அவரே செய்து வருகிறார்.

தான் கண்டுபிடித்த கருவி பிறருக்கும் எளிமையாக கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் டெரா பைட் இந்தியா சிபியு மேனுஃபாக்சரிங் கம்பெனி என்கிற நிறுவனத்தைத் தொடங்கி, தான் செய்த கருவிக்கான காப்புரிமத்தையும் பெற்றுள்ளார். மேலும், அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு ஜிஎஸ்டி வரி உள்ளிட்ட அனைத்து வரிகளையும் செலுத்தி பிறருக்கும் விற்பனை செய்து வருகிறார். இதுவரை 15 கருவிகளை உருவாக்கி விற்பனை செய்துள்ள மாதவ், தன் நிறுவனத்திற்கென தனி இணையதளப் பக்கத்தையும் தொடங்கி அதன் மூலம் ஆன்லைனிலும் தனது கருவியை விற்பனை செய்து வருகிறார். முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் பாராட்டு பெறும் மாதவ்.

சாதாரணமாக கணினியை இயங்க வைக்கக்கூடிய முக்கிய கருவியான மைய செயலாக்கக் கருவி ஒரு சிறிய அளவு சூட்கேஸ் போன்ற வடிவத்தில் இருக்கும். அதை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு மாற்றுவது சிரமத்துக்கு உரியதாக இருக்கும். மேலும் 4 ஜிபி ரேம் வசதி கொண்ட மைய செயலாக்க கருவியை வாங்க வேண்டுமென்றால் ரூ. 16 ஆயிரம் வரை செலவு ஆகும் என வணிக நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் மாதவ் கண்டுபிடித்த கையளவுள்ள 200 கிராம் எடை கொண்ட மைய செயலாக்கக் கருவி ரூ. 8 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது.

அத்துடன், மாதவ் கண்டுபிடித்துள்ள கருவி, மற்ற கருவிகளைப் போலவே அதே வேகத்தில் அதே திறன்களைக் கொண்டும் செயல்படுகிறது. மாதவின் அடுத்தகட்ட திட்டமாக கணினியை இயங்க வைக்கக்கூடிய முக்கிய சாஃப்ட்வேர் செயலியான விண்டோஸ் 7-க்கு நிகரான ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை கண்டுபிடிக்க முயற்சி மேற்கொண்டிருப்பதாகத் தெரிவிக்கிறார்.

மேலும் தொடர்ந்து தனது ஆராய்ச்சிகள் மூலமாகவும், கல்வித்திறன் மூலமாகவும், தேடல்கள் மூலமாகவும் ரூ. 2000 க்கு மைய செயலாக்க கருவியை விற்பனை செய்வதே தனது இலக்கு என்றும் தெரிவிக்கிறார்.

இவரின் கண்டுபிடிப்பை அறிந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மாதவை நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தார். மேலும், அரசு அவரின் செயல்களுக்கு உறுதுணையாக இருக்கும் எனவும் உறுதி அளித்திருப்பது மாதவுக்கு இன்னும் உத்வேகத்தை அளித்திருக்கிறது.
Read More

Tuesday, September 21, 2021

சிஏ தே‌ர்வு... முத​லி​ட‌ம் பிடி‌த்த மாணவி பேட்டி...

September 21, 2021 0
அகில இந்திய அளவில் இந்த ஆண்டுக்கான சிஏ தேர்வில் முதலிடம் பெற்றிருக்கிறார் நந்தினி அகர்வால். அவர் 800க்கு 614 மதிப்பெண்கள் பெற்றிருக்கிறார். அவருடைய அண்ணன் சச்சின் அகர்வால் அகில இந்திய அளவில் 18 - ஆவது இடத்தைப் பெற்றிருக்கிறார். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் சார்ட்டர்டு அக்கவுண்டன்ட்ஸ் தேர்வில் வெற்றி பெற்றது எப்படி?


மத்திய பிரதேசத்தின் மொரினா நகரைச் சேர்ந்த நந்தினிக்கு வயது 19. அவருடைய அண்ணன் சச்சினுக்கு வயது 21. ஆனால் மொரினா நகரில் உள்ள விக்டர் கான்வென்ட் உயர்நிலைப்பள்ளியில் எல்லா வகுப்புகளிலும் ஒரே வகுப்பிலேயே இருவரும் படித்து வந்திருக்கின்றனர். தொடக்கக் கல்வி படிக்கும்போது, ஒரு வகுப்பு படித்து முடித்ததும் அடுத்த ஆண்டு அடுத்த வகுப்பு படிக்காமல், அதைத் தாண்டி அதற்கு அடுத்த வகுப்புக்கு 2 முறை தேர்வு பெற்றிருக்கிறார் நந்தினி. அதனால் அண்ணனும் தங்கையும் ஒரே வகுப்பில் படித்திருக்கிறார்கள்.


இந்த ஆண்டு இன்ஸ்டிடியூட் ஆஃப் சார்டர்டு அக்கவுண்டன்ட்ஸ் ஆஃப் இந்தியா (ஐசி ஏஐ) நடத்திய சிஏ தேர்வை இந்தியா முழுவதும் 83 ஆயிரத்து 606 பேர் எழுதியிருக்கிறார்கள். இவ்வளவு பேர் எழுதிய இந்தத் தேர்வில் நந்தினி முதலிடம் பிடித்ததும், 18-ஆம் இடத்தை சச்சின் பிடித்ததும் எப்படி சாத்தியமானது? ""நானும் எனது சகோதரன் சச்சினும் பள்ளியில் ஒன்றாகவே படித்தோம். 2017 - இல் பிளஸ் டூ படிப்பை முடித்தோம். அதற்குப் பிறகு ஐபிசிசி தேர்வுக்கும், சிஏ தேர்வுக்கும், இருவரும் ஒன்றாகவே முயற்சி செய்தோம். இதில் ஐபிசிசி தேர்வு, சிஏ தேர்வின் பழைய பாடத்திட்டத்தைக் கொண்டது. 2018 - இல் சிஏ படிப்புக்கு விண்ணப்பிக்கும்போது புதிய பாடத்திட்டம் வந்துவிட்டது. இது எங்கள் இருவருக்கும் சற்று சிரமத்தைத் தந்தது.


நாங்கள் இருவரும் சிஏ படிப்புக்கான மாதிரி வினாத்தாள்களை எடுத்துக் கொண்டு அவற்றுக்கு பதில் எழுதிப் பார்போம். நான் எழுதிய பதிலை என் அண்ணனும், என் அண்ணன் எழுதிய பதிலை நானும் திருத்துவோம். படிப்பதில் ஒருவருக்கொருவர் உதவியாக இருப்போம். அதேபோன்று குற்றங்குறைகளை எடுத்துச் சொல்வதற்கும் தயங்கமாட்டோம். நான் எப்போதாவது படிக்கும்போது சோர்ந்து போனால், என் அண்ணன் என்னை ஊக்கப்படுத்துவார். கரோனா தொற்றுப் பிரச்னை வந்தது ஒருவிதத்தில் எங்களுக்கு நல்லதாகப் போனது. நாங்கள் இருவரும் வீட்டில் இருந்தபடியே சிஏ தேர்வுக்காக கடுமையாக எங்களைத் தயார் செய்து கொள்ள கரோனா பொது முடக்கம் எங்களுக்கு உதவியது. நிறைய படிப்பதற்கு... படித்ததை மறுபடியும் திரும்பவும் படிப்பதற்கு... நினைவுபடுத்திப் பார்ப்பதற்கு நிறைய நேரம் கிடைத்தது'' என்கிறார் நந்தினி.


சிஏ தேர்வுக்குப் படிக்கும் ஒருவர் எப்படி முயற்சி செய்து படித்தால் வெற்றி பெற முடியும்? ""சிஏ தேர்வுக்காக ஏகப்பட்ட புத்தகங்களை பல பதிப்பகங்கள் வெளியிட்டு இருக்கிறார்கள். நாம் எந்தப் புத்தகங்களைத் தேர்வு செய்து படிக்க வேண்டும் என்பதில் தெளிவோடு இருக்க வேண்டும். முதலில் சிஏ தேர்வுக்கான பாடத்திட்டம் எது என்பதில் தெளிவு வேண்டும். அதற்காக ஐசிஏஐ வெளியிட்ட பாடப்புத்தங்களை முதலில் படிக்க வேண்டும். இது மிகவும் முக்கியம். ஏனென்றால் ஐசிஏஐ பாடத்திட்டத்தில் உள்ள பாடங்களில் இருந்துதான் கேள்விகள் கேட்பார்கள்.


மேலும் சிஏ படிப்பு தொடர்பான கணிதத்தை மிகவும் தெளிவாக கற்றுக் கொள்ள வேண்டும். நிறையத் தடவை மீண்டும் மீண்டும் கணக்குகளைப் போட்டுப் பார்க்க வேண்டும். அதுமட்டுமல்ல, சிஏ படிப்புக்காக ஒருவர் தம்மைத் தயார் செய்யும்போது தொடக்கத்தில் ஒரு நாளைக்கு 11 - 12 மணி நேரங்கள் படிக்க வேண்டியதிருக்கும். அப்படிப் படித்துப் பழகிவிட்டால், அவர் தானாகவே ஒரு நாளைக்கு 14 - 15 மணி நேரங்கள் படிக்கும் பழக்கத்துக்கு மாறிவிடுவார். இவ்வாறு திட்டமிட்டு கடுமையாக முயற்சி செய்தால்தான் சிஏ தேர்வில் உரிய ரேங்க் பெற முடியும்'' என்கிறார் நந்தினி.


அண்ணன் - தங்கை இருவருமே சிஏ தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்றிருக்கிறார்கள். சச்சின் 70 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்கிறார். இவர்கள் மட்டுமல்ல, இவர்களுடைய குடும்பமே அக்கவுண்டன்ட்ஸ் குடும்பமாக உள்ளது. தந்தை நரேஸ் சந்திர குப்தா வருமான வரி ஆலோசகராக பணிபுரிகிறார். அம்மா டிம்பிள் குப்தாவும் அக்கவுண்டன்ட்ஸ் பிரிவில் பட்டம் பெற்ற குடும்பத் தலைவி.


குடும்பம் ஊக்கமளிக்காவிட்டால், எதையும் சாதிக்க முடியாது என்கிறார் நந்தினி.


""வீட்டில் உள்ள பெண் பிள்ளை போட்டித் தேர்வுகள் எழுதும்போது குடும்பத்தினர் ஆதரவு தர வேண்டும். ஓரிரு முறை போட்டித் தேர்வுகளில் பெண் தோல்வி அடைந்துவிட்டால், பெற்றோர் அவளைத் தொடர்ந்து போட்டித் தேர்வு எழுத அனுமதிப்பதில்லை. பெண் குழந்தைகளின் மீது அவர்களுக்கு நம்பிக்கை இருப்பதில்லை. இதுவே பையனாக இருந்தால் எத்தனை முறை வேண்டுமானாலும் தேர்வு எழுதலாம் என்கிற நிலையே இப்போதும் பல குடும்பங்களில் உள்ளது. ஆனால் எங்கள் குடும்பத்தைப் பொருத்தவரை அப்பாவும் சரி... அம்மாவும் சரி... என்னை மிகவும் ஊக்கப்படுத்திக் கொண்டே இருப்பார்கள். குழந்தைகளை ஆண், பெண் என்று அவர்கள் பிரித்துப் பார்ப்பதில்லை'' என்கிறார் நந்தினி.


""சிஏ படிப்பு என்றில்லை, எந்தப் படிப்பு படித்தாலும், அதில் குறிப்பிடத்தக்க வெற்றி பெற வேண்டுமானால் நேரத்தை வீணாக்கக் கூடாது. ஒரு நாளைக்கு 15 மணி நேரம் வரை படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். அதுமட்டுமல்ல ... சிஏ தேர்வில் வெற்றி பெற முயற்சி செய்கிறவர்கள் கண்டிப்பாக சமூக ஊடகங்களின் பக்கம் திரும்பிப் பார்க்கவே கூடாது. கரோனா தொற்று தனிமனித இடைவெளியை எப்படி கண்டிப்பானதாக மாற்றியதோ, அதேபோல், சமூக ஊடகங்களிலிருந்து சற்றுத் தள்ளியே இருக்க வேண்டும். அப்போதுதான் வெற்றி பெற முடியும்'' என்கிறார் நந்தினி.
Read More

Post Top Ad

Your Ad Spot