Post Top Ad
Your Ad Spot
Showing posts with label Anna University. Show all posts

Saturday, January 28, 2023
Tuesday, January 10, 2023
150 பொறியியல் கல்லூரிகளில் போதிய வசதிகள் இல்லை:துணைவேந்தா் வேல்ராஜ்

தமிழகத்தில் 150 பொறியியல் கல்லூரிகளில் போதிய வசதிகள் இல்லை; மேலும் மாணவா்கள் சோ்க்கையும் மிகவும் குறைவாக உள்ளது என அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தா் ஆா்.வேல்ராஜ் தெரிவித்தாா்.
அண்ணா பல்கலை.யில் பொறியியல், சுற்றுச்சூழல் மற்றும் புதிய தொழில்நுட்பம் சாா்ந்த புத்தகக் கண்காட்சியை துணைவேந்தா் வேல்ராஜ் திங்கள்கிழமை தொடக்கிவைத்தாா். பல்கலை. வளாகத்தில் செயல்பட்டு வரும் கிண்டி பொறியியல் கல்லூரி வளாகத்தில் அரங்கு எண் 13-இல் இந்த புத்தகக் காட்சி புதன்கிழமை வரை தொடா்ந்து மூன்று நாள்கள் நடைபெறும். காலை 9.30 முதல் மாலை 5.30 மணி வரை புத்தகக் காட்சியை பாா்வையிட்டு நூல்களை வாங்கலாம். புத்தகக் காட்சி தொடக்கம்: புத்தகக் காட்சி தொடக்க விழாவுக்கு பின்னா் துணவேந்தா் ஆா்.வேல்ராஜ் செய்தியாளா்களிடம் கூறியது: அண்ணா பல்கலை.யின் நூலகத் துறை சாா்பில் ஆண்டுதோறும் புதிய தொழில்நுட்பம் துறை சாா்ந்த புத்தகக் காட்சி நடைபெற்று வருகிறது. தொழில்நுட்பச் சூழல் நாளுக்கு நாள் வேகமாக மாறி வருகிறது. அந்த வேகத்துக்கு ஈடு கொடுக்கும் வகையிலும், மாணவா்களுக்கு புதிய தொழில்நுட்பம் சாா்ந்த தகவல்களை கொண்டு சோ்க்கும் வகையிலும் இந்த புத்தகக் காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு கணினி, உலக அளவில் சவாலாக இருக்க கூடிய காலநிலை மாற்றம் குறித்த புத்தகங்கள் அதிகளவில் இடம் பெற்றுள்ளன. 45 பதிப்பாளா்கள், விற்பனையாளா்கள் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தகங்களை காட்சிப்படுத்தி உள்ளனா். அண்ணா பல்கலைக்கழகம் மாணவா்கள் மட்டுமல்லாது, மற்ற கல்லூரி மாணவா்களும், ஆசிரியா்களும், பேராசிரியா்களும், ஆராய்ச்சியாளா்களும் புத்தகக் காட்சியைப் பாா்வையிட்டு புத்தகங்களை வாங்கிச் செல்லலாம்.
தமிழகத்தில் உள்ள 450 பொறியியல் கல்லூரிகளில், 150 பொறியியல் கல்லூரிகளில் 100-க்கும் குறைவாக மாணவா் சோ்க்கை உள்ளது.இந்த கல்லூரிகளில் போதிய வசதிகள் இல்லை. சோ்க்கை குறைவாக உள்ள கல்லூரிகள், தரம் குறைந்த பொறியியல் கல்லூரிகளையும் நிரந்தரமாக நிகழாண்டு பரிந்துரைக்கப்படும். அங்கீகாரத்தை ரத்து செய்ய... அதேபோல, கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலை. வழங்கும் அங்கீகாரத்தை ரத்து செய்யவும் ஆலோசித்து அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி குழுமத்துக்குப் பரிந்துரைக்கப்படும். தரமற்ற கல்லூரிகளில் படிக்கும் மாணவா்கள், வேறு கல்லூரிகளுக்குச் சென்று படிக்க வேண்டும். தரமற்ற கல்லூரிகளை அடையாளப்படுத்தும் போது, பெற்றோா்களும் விழிப்புணா்வுடன் அந்த கல்லூரிகளில் மாணவா்களை சோ்க்காமல் இருப்பாா்கள். கல்லூரிகளைச் சரியாக நிா்வகிக்க முடியாத நிா்வாகத்தினா், வேறு தொழிலுக்கு சென்று விடுவது நல்லது”என்றாா் அவா்.
இதில் பல்கலை. பதிவாளா் ஜி.ரவிக்குமாா், பல்கலை. நூலக இயக்குநா் தெ.அறிவுடை நம்பி, ஒருங்கிணைப்பாளா் நா.கீதா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Friday, December 16, 2022
அண்ணா பல்கலை. தோ்வு தேதிகள் மீண்டும் மாற்றம்

அண்ணா பல்கலைக்கழகத்தில் டிச. 9, 10-ஆம் தேதிகளில் நடைபெறவிருந்த தோ்வுகள் மாண்டஸ் புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இதற்கான மாற்று தேதி வெளியானது. தற்போது மீண்டும் தோ்வு தேதிகள் மாற்றம் செய்யப்பட்டு புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் அண்ணா பல்கலை.யின் கட்டுப்பாட்டில் இயங்கும் கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கான பருவத் தோ்வுகள் நடைபெற்று வருகின்றன. கடந்த டிச.9, 10 ஆகிய தேதிகளில் நடைபெறவிருந்த தோ்வுகள் மாண்டஸ் புயல், பலத்த மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டன. ஒத்திவைக்கப்பட்ட தோ்வுகள் டிச.24, டிச. 31 ஆகிய நாள்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், ஒத்திவைக்கப்பட்ட தோ்வுகளின் தேதி தற்போது இரண்டாவது முறையாக மாற்றப்பட்டுள்ளது. அதன்படி, டிச. 24-இல் நடைபெறவிருந்த தோ்வுகள் வரும் ஜன.19-ஆம் தேதியும், டிச. 31-இல் நடைபெறவிருந்த தோ்வுகள் ஜன. 20-ஆம் தேதியும் நடைபெறும் என அண்ணா பல்கலை. அறிவித்துள்ளது.

Tuesday, December 13, 2022
ஒத்திவைக்கப்பட்ட அண்ணா பல்கலை. தேர்வுகள்; மறுதேதி அறிவிப்பு

மாண்டஸ் புயல் காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட அண்ணா பல்கலைகழக செமஸ்டர் தேர்வுகளுக்கான மறுதேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் சென்னைக்கு அருகே மாமல்லபுரம் பகுதியில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன் கரையை கடந்தது. புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
இதனால் சென்னை பல்கலைகழகம், அண்ணா பல்கலைகழகளின் கீழ் உள்ள கல்லூரிகளில் நடைபெறவிருந்த செமஸ்டர் தேர்வுகள் மறுதேதி குறிப்பிடமால் ஒத்திவைக்கப்பட்டது.
இதையடுத்து மாண்டஸ் புயல் காரணமாக சென்னை அண்ணா பல்கலைகழகத்தில் ஒத்திவைக்கப்பட்ட செமஸ்டர் தேர்வுகளுக்கான தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி டிசம்பர் 9ம் தேதி நடைபெற இருந்த தேர்வுகள் டிச.24ம் தேதியும், டிசம்பர் 10ம் தேதி நடைபெற இருந்த தேர்வுகள் டிச.31ம் தேதியும் நடைபெறும் என அண்ணா பல்கலைகழகம் அறிவித்துள்ளது.

Monday, June 27, 2022
அரசு பள்ளிகளில் தொழிற்கல்வி பயின்ற மாணவர்களுக்கு அண்ணா பல்கலை இன்ஜி., கல்லூரிகளில் 'சீட்' இல்லை!
அரசு பள்ளிகளில் தொழிற்கல்வி பயின்ற மாணவர்களுக்கு, அண்ணா பல்கலையின், 20 இன்ஜினியரிங் கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., படிப்பில் இடம் கிடையாது என்று, அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள இன்ஜினியரிங் கல்லுாரிகள் எல்லாம், அண்ணா பல்கலை இணைப்பில் செயல்படுகின்றன. இந்தக் கல்லுாரிகளில், முதலாம் ஆண்டில் மாணவர்கள் சேருவதற்கான, ஒருங்கிணைந்த ஆன்லைன் கவுன்சிலிங்கை, தமிழக உயர்கல்வி துறை சார்பில், தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் நடத்துகிறது.
கவுன்சிலிங்கின் போது, அண்ணா பல்கலையின் சென்னை வளாக கல்லுாரிகளில், ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு எட்டு இடங்களும்; மாற்று திறனாளிகளுக்கு, 5 சதவீத இடங்களும்; விளையாட்டு பிரிவினருக்கு, 12 இடங்களும் ஒதுக்கப்படுகின்றன.
'தொழிற்கல்வி பிரிவினருக்கு இந்தாண்டு இடம் ஒதுக்கப்படும்' என, உயர்கல்வி அமைச்சர் பொன்முடி அறிவித்திருந்தார். ஆனால், அரசு பள்ளிகளில் தொழிற்கல்வி பிரிவில் படிக்கும் மாணவர்களுக்கு மட்டும் இடங்கள் ஒதுக்கப்படவில்லை. கவுன்சிலிங்கிற்கான நடப்பாண்டிற்கான விதிகளில், அரசு பள்ளிகளில் தொழிற்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு, அண்ணா பல்கலையில் இடங்கள் ஒதுக்கப்படாது என்று, அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, அரசு மற்றும் அரசு உதவி பெறும் இன்ஜினியரிங் கல்லுாரிகளில், 100 இடங்கள்; தனியார் கல்லுாரிகளில், 4 சதவீத இடங்கள் மட்டுமே, தொழிற்கல்வி மாணவர்களுக்கு ஒதுக்கப்படும் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், அண்ணா பல்கலையின் சென்னை வளாகத்தில் உள்ள மூன்று கல்லுாரிகள், பல்கலையின் மண்டல மற்றும் உறுப்பு கல்லுாரிகளாக உள்ள, 17 கல்லுாரிகள் என, மொத்தம் 20 கல்லுாரிகளில் இடங்கள் ஒதுக்கப்படாது என்பதால், அரசுப்பள்ளி தொழிற்கல்வி மாணவர்களும், பெற்றோரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து, மாணவர்களும், பெற்றோரும் கூறியதாவது:
நாடு முழுதும் தொழிற்கல்வி படிப்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என, மத்திய, மாநில அரசுகள் கூறி வருகின்றன. தொழிற்கல்வி படிப்பேர் இன்ஜினியரிங்கில் மட்டுமே சேர முடியும் என்ற நிலையில், அவர்களுக்கு, அண்ணா பல்கலையின், 20 கல்லுாரிகளில் இடம் மறுக்கப்பட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. பிளஸ் 2 முடிந்து இன்ஜினியரிங் கவுன்சிலிங் வரும் போது, அண்ணா பல்கலை கல்லுாரிகளிலேயே சேர முன்னுரிமை அளிப்பர்.
அப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த கல்லுாரிகளில், அரசு பள்ளிகளின் தொழிற்கல்வி மாணவர்களுக்கு மட்டும் இடம் இல்லை என்பது விதிமீறிய செயல்.இதை முதல்வர் கவனித்து, தொழிற்கல்வி மாணவர்களும், அண்ணா பல்கலையின், 20 கல்லுாரிகளில் படிக்கலாம் என்ற முக்கியத்துவம் வாய்ந்த முடிவை அறிவிக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்

Tuesday, May 24, 2022
அண்ணா பல்கலைக்கழகத்தில் 6 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி
6 students at Anna University, Chennai confirmed corona exposure *
Corona infection has been confirmed in 6 students of Anna University, Chennai.
Of the 40 students tested, 6 have been confirmed so far.
சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் 6 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி*
சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் 6 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
40 மாணவர்களை பரிசோதனை செய்ததில் இதுவரை 6 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Monday, April 11, 2022
அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகளில் நேரடி இரண்டாம் ஆண்டு மாணாக்கர் சேர்க்கை (Lateral Entry admission in Anna University Department Colleges)
அண்ணா பல்கலைக்கழக
கல்லூரிகளில் நேரடி இரண்டாம் ஆண்டு
மாணாக்கர் சேர்க்கை
[Lateral Entry admission in Anna University
Department Colleges)
பட்டயப்படிப்பு (Diploma) முடித்த
மாணாக்கர்கள் நேரடியாக பொறியியல்
பட்டப்படிப்பில் இரண்டாம் ஆண்டில்
சேர்க்கை பெறுகிறார்கள். இந்த
கல்வியாண்டு
முதல்,
அண்ணா
பல்கலைக்கழக CEG, Guindy. MIT.
Chromepet மற்றும் ACTech, Guindy
கல்லூரிகளிலும் பொறியியல் நேரடி
இரண்டாமாண்டு மாணாக்கர் சேர்க்கை
அறிமுகப்படுத்தப்படும்.
Monday, April 4, 2022
அண்ணா பல்கலை மாணவியருக்கு திறன் பயிற்சி
Anna University, the Federation of Indian Chambers of Commerce and Industry, has entered into an agreement with Anna University to provide vocational skills training to 1,500 students.
According to the new education policy, students studying in higher education institutions and industry in the country should be given the necessary training to develop their professional skills and become entrepreneurs. Similar training is already being imparted on behalf of Anna University in Tamil Nadu.
To this end, Anna University has entered into an agreement with FICCI, the Federation of Indian Chambers of Commerce and Industry.
Under the agreement, skills training will be provided to engineering college students in second and third tier cities with a view to 'Campus to Corporate'. This training will be given for five weeks. அண்ணா பல்கலையின், 1,500 மாணவியருக்கு தொழில் சார்ந்த திறன் பயிற்சி வழங்க, இந்திய தொழில் மற்றும் வணிக நிறுவனங்களின் கூட்டமைப்பும், அண்ணா பல்கலையும் ஒப்பந்தம் செய்துள்ளன.
புதிய கல்வி கொள்கையின்படி, நாட்டில் உள்ள உயர் கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களில் படிக்கும் மாணவ - மாணவியருக்கு, தொழில் சார்ந்த தனித் திறன்களை வளர்க்கவும், தொழில் முனைவோராக மாற்றவும், தேவையான பயிற்சி அளிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் அண்ணா பல்கலையின் சார்பில், ஏற்கனவே இது போன்ற பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.இந்த வகையில், அண்ணா பல்கலை மற்றும் அதன் உறுப்பு கல்லுாரிகள் என, 19 இன்ஜினியரிங் கல்லுாரிகளில் படிக்கும், 1,500 மாணவியருக்கு, தொழில் சார்ந்த தனித் திறன்களை வளர்க்கும் பயிற்சி வழங்கப்பட உள்ளது. இதற்காக, அண்ணா பல்கலையுடன், இந்திய தொழில் மற்றும் வணிக நிறுவனங்களின் கூட்டமைப்பான, எப்.ஐ.சி.சி.ஐ.,யுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.அண்ணா பல்கலை துணை வேந்தர் வேல்ராஜ் மற்றும் இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பின் பெண்கள் பிரிவு சென்னை தலைவர் பிரசன்ன வாசனாடுவும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இந்த ஒப்பந்தப்படி, 'கேம்பஸ் முதல் கார்ப்பரேட் வரை' என்ற நோக்கில், இரண்டாம், மூன்றாம் நிலை நகரங்களில் உள்ள இன்ஜினியரிங் கல்லுாரி மாணவியருக்கு, திறன் பயிற்சி வழங்கப்பட உள்ளது. ஐந்து வாரங்களுக்கு இந்த பயிற்சி அளிக்கப்படும்.

Saturday, January 8, 2022
தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களின் பாடத்திட்டத்தை மாற்றியமைக்க உயர்கல்வித்துறை உத்தரவு
தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள், தங்கள் பாடத்திட்டத்தை மாற்றியமைக்க வேண்டும்!
அனைத்து பல்கலைக்கழக பதிவாளர்களுக்கும், உயர்கல்வித்துறை உத்தரவு.

பாடத்திட்டத்தை மாற்றி வடிவமைத்த பின் தமிழ், கணிதம், புள்ளியியல் பாடங்களை மட்டும் ஆய்வுக்காக அரசுக்கு அனுப்பி வைக்கவும் உத்தரவு.
Wednesday, December 15, 2021
ராகிங்கில் ஈடுபட மாட்டேன் என பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய அண்ணா பல்கலை. உத்தரவு
ராகிங்கில் ஈடுபட மாட்டேன் என பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது. மாணவர், பெற்றோர் / பாதுகாலவர் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது. www.antiragging.in என்ற இணையதளத்தில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். www.amanmovement.org என்ற இணையதளத்திலும் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யலாம்.
Thursday, December 9, 2021
அண்ணா பல்கலைக்கழக விடுதி மாணவர்கள் 13 பேருக்கு கொரோனா
அண்ணா பல்கலைக்கழக விடுதி மாணவர்கள் 13 பேருக்கு கொரோனாத்தொற்று உறுதிசெய்யப்பட்டதை அடுத்து கல்லூரி மாணவர்கள் தனிமனித இடைவெளியை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்று மக்கள்நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் வலியுறுத்தியுள்ளார். அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் விடுதி வளாகத்தில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கல்லூரி மாணவர்கள் தனிமனித இடைவெளியை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்று கேட்டுகொண்டுள்ளார்.
தமிழ்நாட்டில் விமானநிலையத்தில் தொற்று உறுதி செய்யப்பட்ட 13 பேரில் ஒருவருக்கு கூட ஓமிக்ரான் பரவல் இல்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியுள்ளார். தான்சானியா, கனடா போன்ற நாடுகளும் அதிக பாதிப்புள்ள ஓமிக்ரான் பரவல் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளதால் இனி அந்நாட்டிலிருந்து வருபவர்களுக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்படும் என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் குறிப்பிட்டுள்ளார். அண்ணா பல்கலைக்கழக விடுதியில் உள்ள 300 மாணவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.
Saturday, November 27, 2021
அண்ணா பல்கலை துணைவேந்தர் சூரப்பா முறைகேடு விவகாரம் - உயர்நீதிமன்றத்தின் இன்றைய உத்தரவு
அண்ணா பல்கலை துணைவேந்தர் சூரப்பா முறைகேடு விவகாரம்: விசாரணையை டிசம்பர் 15 ஆம் தேதிக்கு தள்ளிவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
அண்ணா பல்கலை துணைவேந்தர் சூரப்பா காலத்தில் முறைகேடு நடந்தது உண்மை என உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல் தெரிவித்துள்ளது. அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் சூரப்பா மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஆணையம் தனது அறிக்கையை அரசிடம் தாக்கல் செய்துள்ளது.
அதில் முறைகேடுகள் நடந்திருப்பது தெரியவந்துள்ளதாகவும் தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சூரப்பா பதவிக்காலத்தில் சில முறைகேடுகள் நடந்துள்ளதாக விசாரணை ஆணையம் கண்டறிந்துள்ளது என தமிழ்நாடுஅரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சூரப்பா, முறைகேடுகளில் ஈடுபட்டதாக கூறி, அவர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்த சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் குழுவை நியமித்து முந்தைய அரசு உத்தரவிட்டது. இந்த ஆணையத்தின் விசாரணையை எதிர்த்து சூரப்பா தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், விசாரணை அறிக்கை அடிப்படையில் மேல் நடவடிக்கை எடுக்க தடை விதித்து கடந்த பிப்ரவரியில் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் சூரப்பா தொடர்ந்த வழக்கு, நீதிபதி பார்த்திபன் முன் மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது, அப்போது, தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம், நீதிபதி கலையரசன் தலைமையிலான ஆணையம், விசாரணையை முடித்து அறிக்கையை சமர்ப்பித்து விட்டது. அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.
மேலும் விசாரணை ஏற்கனவே முடிக்கப்பட்டு விட்டதால் இந்த வழக்கு செல்லத்தக்கதல்ல என்றும் சூரப்பா பதவிக்காலத்தில் சில முறைகேடுகள் நடந்துள்ளதாக ஆணையம் கண்டறிந்துள்ளது எனவும் தெரிவித்தார். இதையடுத்து, விசாரணை ஆணையத்தின் அறிக்கை நகலையும், விரிவான பதில் மனுவையும் தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதி பார்த்திபன், சூரப்பா தாக்கல் செய்த வழக்கின் விசாரணையை டிசம்பர் 15 ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.

Thursday, November 25, 2021
கல்வி சான்றிதழ்களுக்கு 18% ஜிஎஸ்டி: யார் யாருக்கு பொருந்தும்? அண்ணா பல்கலைக்கழகம் விளக்கம்
கல்விச் சான்றிதழ்களுக்கு 18 சதவிகிதம் ஜி.எஸ்.டி வரிவிதிப்பு தொடர்பாக அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் விளக்கமளித்துள்ளார்.
அண்ணா பல்கலைக்கழகம் தனது கட்டுப்பாட்டின் கீழ் வரும் இணைப்பு கல்லூரிகளுக்கு ஒரு சுற்றறிக்கையை அனுப்பி உள்ளதாகவும், அதில் சான்றிதழுகளுக்கு 18 சதவிகிதம் ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தி உள்ளதாகவும், இதற்கான புதிதாக ஒரு ஜிஎஸ்டி பதிவு எண்ணை அண்ணா பல்கலைக்கழகம் பெற்றிருப்பதாகவும் பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன. இந்நிலையில் கல்விச் சான்றிதழ்களுக்கு ஜி.எஸ்.டி வரிவிதிப்பு தொடர்பாக அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் , 'புதிய தலைமுறை'க்கு விளக்கமளித்துள்ளார். அதில் அவர், ''அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் கீழ் இயங்கும் கல்லூரி மாணவர்கள் கல்வி ஆண்டு பயிலும் நேரத்தில் எந்த ஜி.எஸ்.டி யும் இல்லை. மாணவர்களாக கல்வி ஆண்டு முடித்து வெளியே சென்ற பிறகு சில சான்றிதழ் கேட்டு விண்ணப்பம் செய்பவர்களுக்கு மட்டுமே வசூலிக்க திட்டமிட்டுள்ளோம். அதுவும் இடமாற்றம் சான்றிதழ், நகல் சான்றிதழ், வேலைக்கு செல்ல சான்றிதழ் கேட்டு விண்ணப்பம் செய்பவர்களுக்கு மட்டுமே 18 சதவீதம் ஜி.எஸ்.டி வசூலிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இது ஒராண்டுக்கு தோராயமாக 20 ஆயிரம் பேர் விண்ணப்பம் செய்கின்றனர். அவர்களுக்கு மட்டுமே இது பொருந்தும். பெரும்பாலும் நிறுவனத்திற்கு வேலைக்கு விண்ணப்பம் செய்வது, வெளிநாட்டில் பணிக்கு செல்பவர்கள் விண்ணப்பம் செய்வார்கள் இணையதளத்திலும் இந்த தகவல் முறையாக வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கல்வி ஆண்டில் பயிலும் எந்த மாணவர்களுக்கும் இதில் பாதிப்பு இருக்காது. 4 ஆண்டுகள் ஜி.எஸ்.டி வசூலிக்காததால் பல்கலைக்கழகத்திற்கும் சிரமம் ஏற்பட்டது'' என அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் வேல்ராஜ் தெரிவித்துள்ளார்.

Wednesday, November 17, 2021
நேரடி எழுத்துத் தேர்வுக்கு கூடுதல் அவகாசம் - அண்ணா பல்கலைக்கழகம்
நேரடி எழுத்துத் தேர்வுக்கு கூடுதல் அவகாசம்!
பொறியியல் மாணவர்களின் கோரிக்கையை ஏற்றது அண்ணா பல்கலைக்கழகம்.
செமஸ்டர் தேர்வுகள் வரும் டிசம்பர் 13-ம் தேதிக்கு பதில் 27-ல் தொடங்கும்.
நேரடி தேர்வுக்கு தயாராகும் வகையில் 23-ம் தேதி வரை வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.
- அண்ணா பல்கலைக்கழகம்

Sunday, November 14, 2021
அண்ணா பல்கலை முக்கிய அறிவிப்பு – இன்ஜினியரிங் மாணவர்களுக்கு நேரடி முறையில் செமஸ்டர் தேர்வு
தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வு நேரடி எழுத்துத் தேர்வாக நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
பொறியியல் தேர்வு:
தமிழகத்தில் கடந்த ஜூலை மாதம் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் வெளியானதை அடுத்து ஜூலை 26 முதல் கலை அறிவியல் கல்லூரிகளை தொடர்ந்து பொறியியல் கல்லூரிகளிலும் 2021 -2022ம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற்றது. இந்தாண்டு கொரோனா அச்சம் காரணமாக மாணவர் சேர்க்கையும், கலந்தாய்வும் ஆன்லைன் வாயிலாகவே நடைபெற்றது. மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு முடிவடைந்ததும் 12ம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் கட் ஆப் மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டு தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு கலந்தாய்வு நடைபெற்றது.
அக்டோபர் 17ம் தேதி வரை பொது மற்றும் சிறப்பு பிரிவு மாணவர்களுக்கு கலந்தாய்வு நடைபெற்றது. தற்போது முதலாமாண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இவர்களுக்கு மார்ச் மாதம் முதல் பருவத்தேர்வு நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. மேலும் இரண்டாம் மற்றும் இறுதியாண்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்தாண்டும் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகளை ஆன்லைன் மூலம் நடத்த வேண்டும் என தனியார் கல்லூரிகள் கோரிக்கை விடுத்தனர்.
நடப்பு கல்வியாண்டில் நேரடி தேர்வுகள் தான் நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. தற்போது கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருவதால் செமஸ்டர் தேர்வு எழுத்துத் தேர்வாகவே நடைபெறும் என துணைவேந்தர் வேல்ராஜ் தெரிவித்துள்ளார். மேலும் பி.ஆர்க் கலந்தாய்வில் தேர்வு செய்யப்பட்டவர்கள் இன்று முதல் கல்லூரிகளுக்கு சென்று உங்கள் சேர்க்கையை உறுதிபடுத்தி கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

Friday, September 24, 2021
20 ஆண்டுகளாக அரியா் வைத்திருப்பவா்களுக்கு தோ்வெழுத சிறப்பு வாய்ப்பு: அண்ணா பல்கலை
அண்ணா பல்கலைக்கழகம்
பொறியியல் படிப்புகளில் 20 ஆண்டுகளாக அரியா் வைத்திருப்பவா்களுக்கு இறுதி வாய்ப்பாக நடத்தப்படும் தோ்வுக்கான அறிவிப்பை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
இது குறித்துப் பல்கலைக்கழகத் தோ்வுக் கட்டுப்பாட்டுத் துறை இயக்குநா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
அண்ணா பல்கலைக்கழக ஆட்சி மன்றக் குழுவின் முடிவின்படி, பொறியியல் படிப்பில் நீண்ட ஆண்டுகளாக அரியா் வைத்திருப்பவா்களுக்கு இறுதி வாய்ப்பாக இந்தத் தோ்வு நடத்தப்பட உள்ளது. இந்த சிறப்புத் தோ்வை எழுத அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் விவரங்களை அறிந்து, விண்ணப்பிக்கலாம்.
சிறப்புத் தோ்வுக்கு விண்ணப்பிக்கவும், தோ்வு எழுதவும், வழக்கமான தோ்வுக் கட்டணத்துடன் ஒவ்வொரு தாளுக்கும் கூடுதலாக ரூ.5 ஆயிரம் செலுத்த வேண்டும். இந்தத் தோ்வுக்கு விண்ணப்பதாரா்கள் செப்.24-ஆம் தேதி வெள்ளிக்கிழமை முதல் விண்ணப்பிக்கலாம். தோ்வு நடைபெறும் முறை, தேதி, தோ்வு மையங்கள் ஆகிய விவரங்கள் விரைவில் வெளியிடப்படும். அண்ணா பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் மாணவா்கள் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி அக்டோபா் 4 ஆகும்

20 ஆண்டுகளாக அரியர் வைத்துள்ள மாணவர்கள் நவம்பர் - டிசம்பர் மாத செமஸ்டர் தேர்வில் பங்கேற்று தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம் - அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு
20 ஆண்டுகளாக அரியர் வைத்துள்ள மாணவர்கள் வரும் நவம்பர் - டிசம்பர் மாத செமஸ்டர் தேர்வில் பங்கேற்று தேர்வு எழுத, இன்று முதல் coe1.annauniv.edu இணையதளத்தில் வழக்கமான தேர்வுக்கட்டணத்துடன் கூடுதலாக ரூ.5,000 செலுத்தி விண்ணப்பிக்கலாம்.
- அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு
OFFICE OF THE CONTROLLER OF EXAMINATIONS ANNA UNIVERSITY :: CHENNAI 23-09-2021
NOTIFICATION
The Syndicate of Anna University, in its 260th Meeting held on 16-02-2021, resolved to permit the students who have exhausted their permitted maximum period (as per their respective Regulations), to appear for their examinations again as a special case on humanitarian grounds and the examinations shall be conducted during November / December 2021, April / May 2022 and November / December 2022.
The following category of students has been permitted by the Syndicate to appear for the special examinations.
Students of Affiliated Colleges of Anna University, who have exhausted their permitted maximum period (as per their respective Regulations), admitted in the Academic year 2001-2002 (3rd semester onwards) (i.e. students transferred from the State Universities of Tamil Nadu) & admitted from 2002-2003 (1ª semester onwards). November/December 2021 Examinations:
The mode of examination and the examination centres will be announced by the end of October 2021. A special fee of Rs.5000/- is to be paid by the students along with normal examination fee for
Fees: each paper, as prescribed by the University.
Registration:
The students fall under the above category can register for the November / December 2021 examinations following the procedure given below. • The Registration commences from 24th September 2021.
• Login into Student Login with Register number through the web-portal "https://coet.annauniv.edu" Open the Reg Preview and download the Registration Preview Request Form. Verify the subjects printed on the preview form.
. Any addition/deletion in the registration of subjects may be corrected in the preview form and may be sent by post to the office of the Controller of Examinations, Anna University, Chennai - 600 025. • Fees may be paid online through web-portal and after payment an Acknowledgement form will be generated or pay the fees in the form of Demand Draft (DD) drawn in favour of the Controller of Examinations, Anna University. • Print the Preview form, the Acknowledgement received for the online payment and retain the same for future reference.
. If a candidate is paying the fees in the form of DD, then the preview form along with DD may be sent by post to the Office of the Controller of Examinations, Anna University,
Chennai-600 025. For any clarification on Registration process, the students may contact
044-22357267, 044-22357303, 044-22357272 and 044-22357307. The last date of registration is 04-10-2021.

Tags:
Anna University,
Announcements,
Applications,
Exams,
News
Tuesday, September 21, 2021
அண்ணா பல்கலைக்கழத்தில் பல்வேறு வேலைவாய்ப்பு: விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 25.09.2021
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப செயலாக்க மையத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அறிக்கை எண். 2122IN/TEC/CTDT
பணி: Technology Commercialization Executive காலியிடங்கள்: 02
சம்பளம்: மாதம் ரூ. 50,000
தகுதி: பொறியியல துறையில் ஏதாவதொரு பிரிவில் பிஇ, பி.டெக், எம்பிஏ தேர்ச்சியுடன் டெக்னாலஜி மேனேச்மெண்ட், புரடெக்சன் மேனேச்மெண்ட், பிசினஸ் டெவலப்மெண்ட் புரடெக்சன் புரமோசன் பிரிவில் 8 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Project Associate
காலியிடங்கள்: 02
சம்பளம்: மாதம் ரூ. 40,000
தகுதி: பொறியியல் துறையில் ஏதாவதொரு பிரிவில் பிஇ, பி.டெக், எம்சிஏ, எம்.எஸ்சி தேர்ச்சியுடன் சேல்ஸ் கோ-ஆர்டநேஷன், பைல் மேனேச்மெண்ட், ஆபிஸ் மெனேச்மெண்ட், டிஜிட்டல் மார்க்கெட்டிங், டேட்டா மேனேச்மெண்ட் பிரிவில் 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Project Assistant
காலியிடங்கள்: 02
சம்பளம்: மாதம் ரூ.20,000
தகுதி: பொறியியல துறையில் ஏதாவதொரு பிரிவில் பிஇ, பி.டெக், எம்சிஏ, எம்.காம், எம்.எஸ்சி தேர்ச்சியுடன் வெப்சைட் டெவலப்மெண்ட் மற்றும் மேனேச்மெண்ட், சேல்ஸ் சப்போர்ட் டிஜிட்டல் மார்க்கெட்டிங் டாக்குமெண்டேஷன் பிரிவில் 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Office Assistant cum Driver
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.16,000
தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் நான்கு சக்கர வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.annauni.edu என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, அதனுடன் முழுவிவரங்கள் அடங்கிய பயோ-டேட்டா மற்றும் சுய சான்றொப்பம் செய்யப்பட்ட தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். அஞ்சல் உறையின் மீது விண்ணப்பிக்கும் பணியின் பெயரைக் குறிப்பிடவும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Director, Centre for Technology Development and Transfer, Anna University, Chennai - 600025
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 25.09.2021
மேலும் விவரங்கள் அறிய www.annauni.edu என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்

Author Details
Templatesyard is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of templatesyard is to provide the best quality blogger templates which are professionally designed and perfectlly seo optimized to deliver best result for your blog.