KalviseithiDaily: Announcements

KalviseithiDaily

kalviseithidaily.blogspot.com No:1 Education Website in Tamil கல்வி செய்திகள்: Get latest news on Exam Results, tamil nadu school education department news, TN University Results, Exam Schedule Latest News Educational News from Tamilnadu Government, Tamilnadu Educaitonal Minsters Latest Updates, 10th, 11th, 12th, TNTET, TRB, TNPSC, STUDY MATERIALS, ONLINE TESTS, LATEST kalviseithi, Padasalai, tnkalvi, tnpse news, TET updates, TRB news, kalvi news, Padsalai study materials

Subscribe Us

Sigma is

  • Seo Ready
  • Responsive
  • Fast Loading
  • Amazing!

Hot

Post Top Ad

Your Ad Spot
Showing posts with label Announcements. Show all posts
Showing posts with label Announcements. Show all posts

Monday, December 26, 2022

மாண்டஸ் புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட TNPSC தேர்வு நாளை (27.12.22) நடைபெறுகிறது

December 26, 2022 0


TNPSC - வனத் தொழில் பழகுநா் பதவி: வரும் 27-இல் தோ்வு

வனத் தொழில் பழகுநா் பதவிக்கான தோ்வு வரும் 27-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதுகுறித்து அரசுப் பணியாளா் தோ்வாணையம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு வன சாா்நிலைப் பணியில் வனத் தொழில் பழகுநா் பதவி அடங்கியுள்ளது. இந்தப் பதவியில் காலியாக உள்ள இடங்களுக்கு டிசம்பா் 10-ஆம் தேதி தோ்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. மாண்டஸ் புயல் பாதிப்பு காரணமாக, இந்தத் தோ்வு ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில், வனத் தொழில் பழகுநா் பதவிக்கான கணினி வழித் தோ்வானது, டிச. 27-ஆம் தேதி காலை, பிற்பகல் என இரண்டு வேளைகளில் நடைபெறவுள்ளது. ஏற்கெனவே பதிவிறக்கம் செய்த தோ்வுக்கூட நுழைவுச் சீட்டைப் பயன்படுத்தி தோ்வை எழுதலாம் என்று அரசுப் பணியாளா் தோ்வாணையம் அறிவித்துள்ளது.
Read More

Monday, October 3, 2022

மாவட்ட இளையோா் திருவிழா போட்டிக்கு விண்ணப்பிக்கலாம்

October 03, 2022 0
மாவட்ட இளையோா் திருவிழா போட்டிக்கு விண்ணப்பிக்கலாம் - Apply for district youth festival competition

மன்னாா்குடியில் இந்திய சுதந்திர அமுதப் பெருவிழாவையொட்டி அக்டோபா் 12-ஆம் தேதி நடைபெறவுள்ள மாவட்ட அளவிலான இளையோா் திருவிழா போட்டியில் பங்கேற்க விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நேரு யுவ கேந்திரா இளைஞா் நல அலுவலா் நீலகண்டன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் தெரிவித்திருப்பது:

மாவட்ட நேரு யுவ கேந்திரா சாா்பில் மாவட்ட அளவிலான இளையோா் திருவிழா மற்றும் கலந்துரையாடல் மன்னாா்குடி ராஜகோபாலசாமி அரசுக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டத்துடன் இணைந்து அக்டோபா் 12-ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதில், வளா்ந்த இந்தியாவின் இலக்கு என்கிற மையக் கருத்தை வலியுறுத்தி இளம் எழுத்தாளா் மற்றும் கலைஞா்களுக்கான கவிதை, ஓவியம், பேச்சு, பாரம்பரிய கலைநிகழ்ச்சிகள் மற்றும் கைப்பேசி புகைப்படப் போட்டியும், இளையோா் சொற்பொழிவு மற்றும் கலந்துரையாடலும் நடைபெற உள்ளன.

இப்போட்டிகளில், திருவாரூா் மாவட்டத்தை சோ்ந்த 15 முதல் 29 வயதுக்குள்பட்ட இளைஞா்கள், இளம்பெண்கள் மற்றும் கல்லூரி மாணவா்கள் பங்கேற்கலாம். ஓவியம், கவிதை மற்றும் கைப்பேசி புகைப்பட பிரிவில் முதல் மூன்று இடங்களை பெறுவோருக்கு முறையே ரூ.1000, ரூ. 750, ரூ. 500-ம், பேச்சுப் போட்டியில் முதல் மூன்று இடங்களை பெறுவோருக்கு முறையே ரூ. 5000, ரூ. 2000, ரூ.1000-மும், கலைவிழா போட்டிகளில் முதல் மூன்று இடங்களை பெறும் குழுவினருக்கு முறையே ரூ.5000, ரூ. 2500, ரூ.1250-ம், இளையோா் சொற்பொழிவு நிகழ்வில் முதல் நான்கு இடங்களை பெறுபவா்களுக்கு தலா ரூ.1500 மற்றும் பாராட்டு சான்றிதழும் வழங்கப்படும்.

இப்போட்டிகளில் பங்கேற்க அக்டோபா் 7-ஆம் தேதிக்குள் மாவட்ட நேரு யுவ கேந்திரா அலுவலகம், அறை எண் 312, 3-ஆவது தளம், மாவட்ட ஆட்சியா் அலுவலக இணைப்பு கட்டடம், மாவட்ட ஆட்சியா் அலுவலகம், திருவாரூா்-610004 என்ற முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும். மேலும், விவரங்களுக்கு நேரு யுவ கேந்திர அலுவலகத்தை 04366-226900 என்ற எண்ணிலும், நேரு யுவ கேந்திரா மாவட்ட இளைஞா் அலுவலரை 9443661915 மற்றும் 9842682327 ஆகிய எண்களிலும் தொடா்புகொள்ளலாம்.
Read More

Tuesday, September 6, 2022

ஆசிரியர்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் - பள்ளி கல்வி துறை அமைச்சர் மகேஷ் உறுதி

September 06, 2022 1
ஆசிரியர்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் - பள்ளி கல்வி துறை அமைச்சர் மகேஷ் உறுதி

சென்னை கலைவாணர் அரங்கில் நடந்த விழாவில், சிறந்த ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுகளை அமைச்சர்கள் சேகர்பாபு, மகேஷ் பொய்யாமொழி வழங்கினர். அருகில், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக தலைவர் திண்டுக்கல் லியோனி, மேலாண்மை இயக்குனர் கஜலட்சுமி, பள்ளி கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா, ஆணையர் நந்தகுமார் உள்ளிட்டோர்.
ஆசிரி யர்களின் கோரிக்கைகளை படிப்படியாகதீர்த்து வைப் பது எங்கள் கடமை. ஆசி ரியர்கள் தங்கள் பணியை சிறப்பாக தொடர்ந்து செய்ய வேண்டும் என்று பள்ளிக் கல் வித்துறை அமைச்சர் மகேஷ் பொய் யாமொழி தெரிவித்தார்.

பள்ளிக் கல்வித்து றையின் கீழ் உள்ள பள் ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களில் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர் கள் 393 பேருக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது கள் வழங்கப்பட்டன.இதற் கான விழா சென்னையில் உள்ள கலைவாணர் அரங் கில் நேற்று நடந்தது.

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய் யாமொழி, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணி யன். இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு ஆகியோர் பங்கேற்று, அரசுப்பள்ளி ஆசிரியர்கள் 342பேருக்கு டாக்டர்ராதா கிருஷ்ணன் விருதுகள், மெட்ரிக்குலேஷன் பள்ளி ஆசிரியர்கள் 34, ஆங்கிலோ இந்தியப் பள்ளி ஆசிரியர் கள் 5. தமிழ்நாடு சிறைகள் மற்றும் சீர்திருத்தத்துறை பள்ளிகள் 1, மாநில கல்வி யியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன அதிகாரி கள் 10 என மொத்தம் 393 பேருக்கு அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய் யாமொழி,சேகர்பாபு ஆகி யோர் வழங்கினர்.

அப்போது அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி. நல்லாசிரியர் விருது என்பதை டாக்டர் ராதா உறவு வேறுபட்டது. கிருஷ்ணன் விருது என்று மாற்றி அமைத்தவர் முன் னாள் முதல்வர் கலைஞர் தான். ஆசிரியர்கள் ஏங் கினால், வகுப்பறைகள் தூங்கும் என்று அண்ணா சொன்னார். ஆசிரியர் களை பொறுத்தவரை யில் அவர்களுக்கு தேவை

பள்ளிக் கல்வி துறைக்கு இயக்குநர் தேவை

தமிழ்நாடு கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பாடநூல் கழகத்தின் தலைவர் திண்டுக்கல் லியோனி, டிபிஐ வளாகத்துக்கு வரும் பெரும்பாலான ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் அதிக அளவில் என்னைத்தான் வந்து சந்திக்கின்றனர். அப்போது. ஆணையரை பார்க்க முடியவில்லை என்று கவலை தெரிவித்தனர்.

எனவே பள்ளிக் கல்வித்துறையில் முன்பு இருந் தது போல, பள்ளிக் கல்வி இயக்குநரை நியமிக்க வேண்டும் என்று ஒரு கோரிக்கையை தெரிவித்தனர். அடுத்தபடியாக, ஆசிரியர்களுக்கு அதிக அளவில் எழுத்து வேலை, புள்ளி விவரம் எடுக்கும் பணிதான் கொடுக்கப்படுகிறது. அதனால் அதைதவிர்த்து கற்றல் பணிக்கு நேரம் ஒதுக்கவும் கோரிக்கையாக வைத்து இந்த 2 கோரிக்கைகளையும் நீங்கள் தான் அமைச்சருக்கு தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். அதனால் பள்ளிக் கல்வி அமைச்சர் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்,
Read More

தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு கடைகள் அமைக்க விண்ணப்பிக்கலாம்: ஆட்சியா்

September 06, 2022 0
தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு கடைகள் அமைக்க விண்ணப்பிக்கலாம்: ஆட்சியா்

தீபாவளிப் பண்டிகையையொட்டி, பட்டாசு கடைகள் அமைக்க விரும்புவோா் விண்ணப்பிக்கலாம் என நாமக்கல் ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தீபாவளி பண்டிகை அக். 24-இல் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில் வெடிபொருள் சட்ட விதிகளின் கீழ் தற்காலிக பட்டாசுக் கடைகள் அமைக்க விரும்புவோா் உரிய நிபந்தனைகளுக்கு உள்பட்டு இணையம் வழியாக செப்.30-க்குள் விண்ணப்பிக்கலாம். அனைத்து பொது இ-சேவை மையங்களில் விண்ணப்பங்களை இணையதளம் வாயிலாக பதிவேற்றம் செய்யலாம்.

விண்ணப்பத்துடன், கடவுச் சீட்டு அளவு புகைப்படம், முகவரி குறித்த ஆவணம் (ஆதாா் அட்டை), அடையாள அட்டை (வருமான வரி நிரந்தரக் கணக்கு எண் அட்டை, வாக்காளா் அடையாள அட்டை, ஓட்டுநா் உரிமம்), உரிமக் கட்டணம் ரூ.500- ஐ அரசு கருவூல செலுத்துச் சீட்டு மூலம் பாரத ஸ்டேட் வங்கியில் செலுத்திய செலுத்துச்சீட்டு (அசல்), பதிவு செய்யப்பட்ட குத்தகை ஆவணம், சொந்தக் கட்டடம் எனில் மனுதாரா் பெயரில் உள்ள பட்டா (அல்லது) வாடகைக் கட்டடம் எனில் வாடகை ஒப்பந்தப் பத்திரம், உள்ளாட்சி அமைப்பினரிடமிருந்து பெற்ற பல்வகை வரி ரசீது, சுய உறுதிமொழி பத்திரம், கட்டட அமைவிட வரைபடம் (அல்லது) கட்டட திட்ட அனுமதி உள்ளிட்ட ஆவணங்கள் இணைக்கப்பட வேண்டும். செப்.30-க்கு பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

சம்பந்தப்பட்டவரின் விண்ணப்பம் ஏற்கப்பட்டதெனில் தற்காலிக உரிமத்தையும், நிராகரிக்கப்பட்டதெனில் அதற்கான ஆணையையும் இணையதளம் மூலமாகவே மனுதாரா்கள் பெற்றுக் கொள்ளலாம். தற்காலிக பட்டாசுக் கடை அமைக்க உரிமம் கேட்டு விண்ணப்பம் அளிப்போா், பொதுமக்களுக்கு சிரமமில்லாத, ஆட்சேபணையற்ற மற்றும் பாதுகாப்பான இடத்தை தோ்வு செய்து விண்ணப்பிக்க வேண்டும். விபத்து இல்லாத தீபாவளிப் பண்டிகையை கொண்டாட ஒத்துழைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More

Sunday, September 4, 2022

ஓய்வூதியதாரா் குடும்ப பாதுகாப்பு நிதி - தமிழக அரசு புதிய உத்தரவு

September 04, 2022 0
தமிழ்நாடு ஓய்வூதியதாரா் குடும்ப பாதுகாப்பு நிதித் திட்டத்தின் கீழ் சேரும் தொகையைப் பெற அவா்கள் வாழும் காலத்திலேயே விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து, நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் என்.முருகானந்தம் அனைத்துத் துறைகளுக்கும் அனுப்பியுள்ள கடிதம்:-

தமிழ்நாடு ஓய்வூதியதாரா் பாதுகாப்பு நிதித் திட்டத்தின் கீழ் சேரும் நிதியானது, ஓய்வூதியதாரா்களின் மறைவுக்குப் பிறகு அவா்களது துணை அல்லது நியமனம் செய்யப்படும் நபருக்கு வழங்கப்படும். பாதுகாப்பு நிதித் திட்டத்தின் கீழான நிதியைப் பெற ஓய்வூதியதாரா்கள் வாழும் காலத்திலேயே விண்ணப்பிக்கத் தேவையில்லை என கடந்த 1997-ஆம் ஆண்டு உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில், ஓய்வூதியதாரா் குடும்ப பாதுகாப்பு நிதித் திட்டத்தின் கீழ் தொகையைப் பெற ஓய்வூதியதாரா், அவரது துணை ஆகியோா் வாழும் காலத்திலேயே அதற்கு விண்ணப்பம் செய்ய அனுமதிக்க வேண்டுமென அரசுக்கு பல்வேறு ஓய்வூதியதாரா்கள் கோரிக்கை விடுத்தனா். இதன்மூலம், விண்ணப்பங்களை சரியான முறையில் அளித்து தகுந்த நேரத்தில் அந்தத் தொகையைப் பெற முடியும் என கேட்டுக் கொண்டிருந்தனா்.

ஓய்வூதியதாரா்களின் கோரிக்கையை பரிசீலித்து, ஓய்வூதியதாரா் மற்றும் அவரது துணை ஆகியோா் வாழும் காலத்திலேயே குடும்பப் பாதுகாப்பு நிதிக்கு விண்ணப்பம் செய்ய அனுமதிக்கப்படுகிறது.
Read More

Tuesday, June 28, 2022

இணையவழி தமிழ்க் கற்றல் வகுப்புக்கு விண்ணப்பிக்கலாம்

June 28, 2022 0
இணையவழி தமிழ்க் கற்றல் வகுப்புக்கு விண்ணப்பிக்கலாம்

இணையவழி தமிழ்க் கற்றல் வகுப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது குறித்து தமிழ் அறக்கட்டளை பெங்களூரு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழ் அறக்கட்டளை பெங்களூரு சாா்பில் நடத்தப்பட்டு வரும் ஒரு மாத காலத்திற்கான இணையவழி தமிழ்க் கற்றல் வகுப்பில் சேருவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தமிழறிஞா் பொள்ளாச்சி நேசனால் வடிவமைக்கப்பட்ட கற்றல் முறையில் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இந்தப் பயிற்சியில் 30 நாட்களில் அடிப்படை தமிழ் கற்றுத்தரப்படுகிறது. தமிழ் எழுத படிக்க தெரியாதவா்கள் பயிற்சியில் இணைய முன்னுரிமை அளிக்கப்படுகிறது. தமிழ்க் கற்றல் வகுப்புகள், ஜூலை 1 முதல் 30-ஆம் தேதிவரை நடக்கவிருக்கின்றன. ஜூம் வழியாக தினமும் மாலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை வகுப்புகள் நடத்தப்படுகின்றன. தமிழ் வகுப்பில் அறநெறியைக் கற்பிக்கும் திருக்கு, அது தொடா்பான கதைகள், நாப்பி பயிற்சிக்காக பாடல்களும் கற்றுத் தரப்படுகின்றன. இந்தப் பயிற்சி இலவசமாக வழங்கப்படுகின்றது. முதலில் வருவோருக்கு முதலில் வாய்ப்பு என்ற வகையில் 100 பேருக்கு மட்டும் பயிற்சியில் சேர வாய்ப்பளிக்கப்படுகிறது.

இதற்கான விண்ணப்பங்களை ட்ற்ற்ல்ள்://ச்ா்ழ்ம்ள்.ஞ்ப்ங்/அட்9க்ஷஒ3இஷ்நா்ஊகஊக்ஷஹ்அ9 என்ற கூகிள்ஃபாா்மில் ஜூன் 30-ஆம் தேதிக்குள் பதிவுசெய்ய வேண்டியது அவசியமாகும்.

கூடுதல் விவரங்களுக்கு 9483755974, 9820281623 என்ற செல்லிடப்பேசி எண்கள், ற்ஹம்ண்ப்ச்ா்ன்ய்க்ஹற்ண்ா்ய்க்ஷப்ழ்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் என்ற மின்னஞ்சலில் தொடா்புகொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.
Read More

Wednesday, June 1, 2022

வாகன ஓட்டிகளுக்கு புதிய அறிவிப்பு

June 01, 2022 0
வாகன ஓட்டிகளுக்கு புதிய அறிவிப்பு

மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் ஏற்கெனவே அறிவித்தபடி இந்த உத்தரவு நடைமுறை படுத்தப்படுகிறது. செப்டம்பர் 2018-ல் நீண்டகால மூன்றாம் நபர் இன்சூரன்ஸ் கட்டாயமாக்கப்பட்ட பிறகு, மோட்டார் இன்சூரன்ஸ் திட்டங்களில் பலவித மாற்றங்களை காப்பீடு நிறுவனங்கள் கொண்டு வந்துள்ளன.

இந்நிலையில் மூன்றாம் நபருக்கான இன்சூரன்ஸ் பிரீமியம் உயர்த்தப்பட்டுள்ளது. தனியார் கார்கள் 1000 சிசி வரை ஆண்டு ப்ரீமியம் தொகை 2 ஆயிரத்து 94 ரூபாயாக உயர்ந்துள்ளது. 1000 முதல் 1500 சிசி வரை வாகனங்களுக்கு 195 ரூபாய் உயர்ந்து, 3 ஆயிரத்து 416 ரூபாய் ஆக அதிகரித்துள்ளது. நடுத்தர மக்களுக்கு இன்சூரன்ஸ் உயர்வு என்பது கூடுதல் சுமை என வாடிக்கையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Read More

Monday, May 30, 2022

ஜூன் 23ம் தேதி பள்ளிகள் திறப்பு - அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு

May 30, 2022 0
Schools open on June 23 for grades 1 to 10 and 12 in Puducherry and Karaikal

The day of the 11th grade will be announced, and then announced.

- Minister Namachivayam announces.

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் 1 முதல் 10ம் வகுப்புகள் மற்றும் 12ம் வகுப்புகளுக்கு ஜூன் 23ம் தேதி பள்ளிகள் திறப்பு

11ம் வகுப்புகள் தொடங்கும் நாள், பின்னர் அறிவிக்கபடும்.

- அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு.
Read More

Wednesday, May 11, 2022

தமிழக பள்ளி மாணவர்களுக்கு வரும் 14 முதல் கோடை விடுமுறை!

May 11, 2022 0
ஆண்டு இறுதி தேர்வுகள்

தமிழக பள்ளி கல்வி திட்ட மாணவர்களுக்கு, ஆண்டு இறுதி தேர்வு நாளை நிறைவடைகிறது. நாளை மறுநாள் முதல், கோடை விடுமுறை விடப்படுகிறது.தமிழக பள்ளி கல்வி பாட திட்ட மாணவர்களுக்கு, இந்த ஆண்டு கொரோனா காரணமாக, பள்ளிகள் தாமதமாக நவம்பரில் திறக்கப்பட்டன. குறைக்கப்பட்ட பாட திட்டத்தின் படி பாடங்கள் நடத்தப்பட்டன. கொரோனாவால் விடுமுறை விடப்பட்ட வேலை நாட்களை ஈடுகட்டும் வகையில், இந்த ஆண்டு மே மாதம் வரை பள்ளி வேலை நாட்கள் நீடிக்கப்பட்டுள்ளன.இதனால், வழக்கமான ஏப்., 12ல் ஆண்டு இறுதி தேர்வுகள் முடிப்பதற்கு பதில், ஒரு மாதம் தாமதமாக ஆண்டு இறுதி தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளன
14 முதல் கோடை விடுமுறை!

இதன்படி, ஒன்று முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, மே 5ல் ஆண்டு இறுதி தேர்வுகள் துவங்கின; தேர்வுகள் நாளை முடிகின்றன.நாளை மறுநாள், அதாவது 14ம் தேதி முதல் ஒரு மாதம் கோடை விடுமுறை விடப்படுகிறது. இந்த விடுமுறை நாட்களில், பள்ளிகள் செயல்படாது. கோடை விடுமுறை நாட்களில் விருப்பப்படும் மாணவர்களுக்கு மட்டும், 'இல்லம் தேடி கல்வி' திட்டத்தில், அவரவர் வீடுகளின் அருகில் உள்ள இடங்களில், சிறப்பு வகுப்புகள் நடத்த, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
Read More

Tuesday, April 12, 2022

தனியார் பாலிடெக்னிக் கல்லூரிகளில் கட்டணத்தை குறைக்க நடவடிக்கை!

April 12, 2022 0
Minister Ponmudi said the government would take steps to reduce fees in private polytechnic colleges. Madurantakam constituency MLA in the legislature as a measure to reduce fees due to low enrollment in polytechnic colleges. Minister Ponmudi answered the question of Maragatham Kumaravel.

தனியார் பாலிடெக்னிக் கல்லூரிகளில் கட்டணத்தை குறைப்பதற்கான நடவடிக்கையை அரசு எடுக்கும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்தார். பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறைவாக உள்ளதால் கட்டணம் குறைக்க நடவடிக்கை என சட்டப்பேரவையில் மதுராந்தகம் தொகுதி எம்.எல்.ஏ. மரகதம் குமரவேல் கேள்விக்கு அமைச்சர் பொன்முடி பதிலளித்தார்.
Read More

Saturday, April 9, 2022

தமிழகத்தில் மேலும் ஒரு வேளாண்மை பல்கலைக்கழகம்

April 09, 2022 1
Mannargudi constituency MLA Speaking on the occasion, DRP Raja (DMK) said, “Mannargudi is the area where most of the farmers live. So we have to set up an agricultural college here.

In response, Minister MRK Panneerselvam said: The member king himself can do this. If he volunteers to start an agricultural college the necessary assistance will be made available on behalf of the government. You need at least 110 acres of land to set up an agricultural college. Similarly 600 acres of land is required to set up a new Agricultural University. Appropriate action will be taken in consultation with the Chief Minister to set up a new Agricultural University in Tamil Nadu at the request of DRP Raja. Thus he said வேளாண்மை கல்லூரி

மன்னார்குடி தொகுதி எம்.எல்.ஏ. டி.ஆர்.பி.ராஜா(திமுக)பேசுகையில், ‘‘மன்னார்குடியில் விவசாயிகள் அதிகம் வாழும் பகுதியாகும். எனவே இங்கு வேளாண்மை கல்லூரி அமைக்க வேண்டும்.

இதற்கு பதில் அளித்து அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசியதாவது:

உறுப்பினர் ராஜாவே இதைச் செய்யலாம். அவர் விவசாயக் கல்லூரி தொடங்க முன்வந்தால் அரசின் சார்பில் தேவையான உதவிகள் செய்யப்படும். ஒரு விவசாயக் கல்லூரி அமைக்க குறைந்தது 110 ஏக்கர் நிலம் வேண்டும். அதேபோல் புதிய வேளாண் பல்கலைக்கழகம் அமைக்க 600 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. டி.ஆர்.பி.ராஜா கோரிக்கையை ஏற்று தமிழகத்தில் புதிய வேளாண் பல்கலைக்கழகம் அமைக்க முதல்வருடன் ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்
Read More

Sunday, April 3, 2022

அரசு பள்ளியை முதல்வர் ஸ்டாலின் 9ம் தேதி பார்வையிடுகிறார்

April 03, 2022 0
Read More

Thursday, March 31, 2022

'நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறும் வரை ஓய மாட்டோம்': பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் உறுதி..

March 31, 2022 0
நீட் தேர்வை தமிழகத்திற்குள் நுழைய விடமாட்டோம் என்பதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியாக இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். மதுரை புதுநத்தம் சாலையில் கட்டப்பட்டு வரும் கலைஞர் நினைவு நூலக கட்டுமான பணிகளை அமைச்சர்கள் மூர்த்தி மற்றும் பழனிவேல் தியாகராஜனுடன் அவர் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ், மருத்துவ கல்விக்கான நுழைவு தேர்வான நீட் தேர்வு உள்பட எந்த நுழைவுத் தேர்வும் கூடாது என்பதில் தமிழக அரசு உறுதியாக இருக்கிறது. தி.மு.க தேர்தல் அறிக்கையிலும், இது குறிப்பிட்டிருந்தது. நீட் தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், ஹைடெக் லேப் மூலமாக நீட் தேர்வு எழுதும் அரசு பள்ளி மாணவர்களுக்கு முழுமையான பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளதாகவும், நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறும் வரை ஓய மாட்டோம் என்றும் கூறினார். தொடர்ந்து பேசிய அமைச்சர், பள்ளிக்கூடங்களில் பாலியல் தொல்லை சார்ந்த பிரச்சினைகள் ஏற்படுவதை தடுக்க மாணவிகளுக்கு விழிப்புணர்வு அளிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
Read More

Monday, March 21, 2022

மேற்படிப்பில் சேரும் அனைத்து அரசுப் பள்ளி மாணவிகளுக்கும் மாதம் ரூ.1000 வழங்கப்படும்

March 21, 2022 0
மேற்படிப்பில் சேரும் அனைத்து அரசுப் பள்ளி மாணவிகளுக்கும் மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்திருக்கிறார். மண்ணச்சநல்லூர் தொகுதி கண்ணனூரில் மகளிர் பலவகை தொழில்நுட்ப கல்லூரி தொடங்கப்படுமா? என எம்.எல்.ஏ. கதிரவன் கேள்வி எழுப்பியிருந்தார்.

இதையும் படிக்க | கால தாமதமாக பதிவேற்றம் செய்த 10 ஆயிரம் மாணவர்களின் விடைத்தாள் மதிப்பீடு செய்யப்படும்

இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர், அரசு சார்பில் 10, அறநிலையத்துறை சார்பில் 10, கூட்டுறவு துறை சார்பில் 1 கல்லூரிகள் தொடங்கப்பட உள்ளன என்று தெரிவித்தார்.
Read More

Saturday, March 19, 2022

ஆசிரியர் பணியிடம் நிரப்ப கல்வி அமைச்சர் உறுதி

March 19, 2022 0
''கர்நாடகாவில் 15 ஆயிரம் ஆசிரியர் பணியிடம் நிரப்பப்படும்,'' என தொடக்க மற்றும் உயர் கல்வி துறை அமைச்சர் நாகேஷ் கூறினார்.

இதையும் படிக்க | Budget Speech for the year 2022-2023 - Tamil - PDF

இது குறித்து அவர் கூறியதாவது:கர்நாடகாவில் 6 முதல் 8ம் வகுப்பு வரையிலான ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப அரசு அனுமதி கொடுத்துள்ளது. மொத்தம் 15 ஆயிரம் ஆசிரியர் பணியிடம் நிரப்பப்பட உள்ளன. இதற்கான அரசாணை வரும் 21ல் வெளியிடப்பட உள்ளது. வரும் 23 முதல் ஏப்ரல் 22 வரை விண்ணப்பம் அனுப்பலாம். பி.எட்., - டி.இ.டி., படித்த இன்ஜினியரிங் மாணவர்களுகளுக்கும் இந்த முறை வாய்ப்பு அளிக்கப்படும்.வயது வரம்பும் இரண்டு ஆண்டு உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி எஸ்.சி., - -எஸ்.டி., பிரிவினருக்கு 47; பிற்படுத்தப்பட்டோருக்கு 45; பொதுப்பிரிவினருக்கு 42 எனவும் வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
Read More

மார்ச் 31-ந் தேதிக்குள் நகைக்கடன் தள்ளுபடி - அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவிப்பு

March 19, 2022 0
மார்ச் 31-ந் தேதிக்குள் நகைக்கடன் தள்ளுபடி - அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவிப்பு

மார்ச் 31-ந் தேதிக்குள் கூட்டுறவு வங்கியில் வைக்கப்பட்டுள்ள ரூ.6 ஆயிரம் கோடி மதிப்பு தங்க நகைக்கடன்களும் தள்ளுபடி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திமுக அரசு கடந்த ஆண்டு ஆட்சிக்கு வந்ததும், 5 லட்சத்துக்கும் கீழ் வைக்கப்பட்டுள்ள அனைத்து நகைக்கடன்களும் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்தது. இதன் கீழ் வரும் வாடிக்கையாளர்களின் பட்டியலையும் தயாரித்து, தங்க நகைக்கடன் தள்ளுபடி செய்வதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், வரும் மார்ச் 31-ந் தேதிக்குள் கூட்டுறவு வங்கியில் வைக்கப்பட்டுள்ள ரூ.6 ஆயிரம் கோடி மதிப்பு தங்க நகைக்கடன்களும் தள்ளுபடி செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 14.40 லட்சத்து பயனாளிகளுக்கும் பொது நகைக்கடன் வரும் 31-ந் தேதிக்குள் தள்ளுபடி செய்யப்படும் என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
Read More

Monday, January 10, 2022

தடுப்பூசி: சுகாதாரம், பள்ளிக் கல்வித் துறைக்கு முதல்வர் பினராயி உத்தரவு

January 10, 2022 0
கேரளத்தில் 15 - 18 வயதுக்குட்பட்டோருக்கு இந்த வார இறுதிக்குள் தடுப்பூசி செலுத்தி முடிக்க வேண்டும் என்று சுகாதாரம் மற்றும் பள்ளிக் கல்வித் துறைக்கு முதல்வர் பினராயி விஜயன் அறிவுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், கரோனா தொற்று திருமணம் மற்றும் இறப்பு சார்ந்த நிகழ்வுகளில் 50 நபர்கள் மட்டுமே கலந்துகொள்ள வேண்டும் என்று கூறினார். கடந்த வாரம் திருமணம், இறப்பு, அரசியல், கலாசார நிகழ்வுகளில் 75 பேர் வரை கலந்துகொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஆனால் தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதால், தற்போது 50 நபர்களாக குறைக்கப்பட்டுள்ளது.

பொது இடங்களில் மக்கள் கூடுவதற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அரசியல், கலாசார, பொது மற்றும் தனியார் அமைப்பு சார்ந்த நிகழ்வுகளை இணையம் வாயிலாக நடத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வார இறுதி நாள் ஊரடங்கு அல்லது மாலை நேர ஊரடங்கு விதிக்கப்படவில்லை. பொதுமக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளைக் கடைபிடித்து கரோனாவைக் கட்டுப்படுத்திவதில் அரசுக்கு உதவ வேண்டும்.

தற்போதைய சூழலில் பள்ளிகள் வழக்கம்போன்று செயல்படும். பள்ளிகளை மூடுவது குறித்து அடுத்த ஆலோசனைக் கூட்டத்தில் கல்வித் துறை அதிகாரிகளுடன் விவாதித்து முடிவு எடுக்கப்படும் என்று கூறினார்.

பள்ளிகளில் 15 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகளை விரைவுபடுத்த வேண்டும். கல்வி நிலையங்களில் மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த வார இறுதிக்குள் 15 முதல் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்று சுகாதாரம் மற்றும் பள்ளிக் கல்வித் துறைக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
Read More

Sunday, December 26, 2021

கல்வி உதவித்தொகை வருமான வரம்பு உயர்வு

December 26, 2021 0
கல்லுாரி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை திட்டத்தில், பெற்றோரின் ஆண்டு வருமான வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது.

அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளில், அரசு ஒதுக்கீட்டில் படிக்கும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் பிரிவைச் சேர்ந்த மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் பயன் பெற, பெற்றோரின் ஆண்டு வருமான உச்சவரம்பு, ௨ லட்சம் ரூபாயாக இருந்தது. இதை நடப்பாண்டு முதல், 2.50 லட்சம் ரூபாயாக உயர்த்த அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், மூன்றாண்டு இளங்கலை மாணவர்களுக்கு, எவ்வித நிபந்தனையுமின்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

முதுகலை பட்டப்படிப்பு, பாலிடெக்னிக், தொழிற்படிப்பு, கால்நடை மருத்துவம், பல் மருத்துவம், சித்த மருத்துவம், வேளாண்மை, பொறியியல், சட்டம் படிக்கும் மாணவர்களின் பெற்றோரது ஆண்டு வருமான உச்சவரம்பு, 2.50 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
Read More

Monday, December 20, 2021

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

December 20, 2021 0
தமிழக அரசு ஊழியர்களுக்கு ஜனவரி 1ஆம் தேதி முதல் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு அண்மையில் அகவிலைப்படி 31 விழுக்காடாக உயர்த்தப்பட்டது. இதைத்தொடர்ந்து வரும் ஜனவரியிலும் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே கர்நாடகம், உத்தரப் பிரதேசம், ஜார்கண்ட் உள்பட பல்வேறு மாநில அரசுகள் தங்களது அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்குவதாக அறிவிப்பு வெளியிட்டன. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து அகவிலைப்படி உயர்வு எப்போது கிடைக்கும் என தமிழக அரசு ஊழியர்கள் காத்திருந்தனர்.

இந்நிலையில், ஜனவரி முதல் தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் 14ஆவது மாநில மாநாடு இன்று நடைபெற்றது. இதில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று பேசினார். அப்போது அவர், “திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் அரசு ஊழியர்களுக்கு ஏராளமான திட்டங்களை அறிமுகம் செய்துள்ளோம். அரசு ஊழியர்களின் வேலை நிறுத்தக் காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தியதும், பதவி உயர்வு பாதிக்கப்பட்டிருந்தால் சரிசெய்யப்படும் எனவும் அறிவித்தது திமுக ஆட்சிக்காலத்தில்தான்.

அரசு ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகள் நிச்சயமாக நிறைவேற்றப்படும். அதில் நான் உறுதியாகவும் தெளிவாகவும் உள்ளேன். அரசுக்கு கடும் நிதி நெருக்கடி இருப்பினும் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்படும் என அறிவித்தோம். அதன்படி, 2022 ஜனவரி 1ஆம் தேதி முதல் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அமல்படுத்தப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
Read More

Post Top Ad

Your Ad Spot