KalviseithiDaily: Central Government Employees

KalviseithiDaily

kalviseithidaily.blogspot.com No:1 Education Website in Tamil கல்வி செய்திகள்: Get latest news on Exam Results, tamil nadu school education department news, TN University Results, Exam Schedule Latest News Educational News from Tamilnadu Government, Tamilnadu Educaitonal Minsters Latest Updates, 10th, 11th, 12th, TNTET, TRB, TNPSC, STUDY MATERIALS, ONLINE TESTS, LATEST kalviseithi, Padasalai, tnkalvi, tnpse news, TET updates, TRB news, kalvi news, Padsalai study materials

Subscribe Us

Sigma is

  • Seo Ready
  • Responsive
  • Fast Loading
  • Amazing!

Hot

Post Top Ad

Your Ad Spot
Showing posts with label Central Government Employees. Show all posts
Showing posts with label Central Government Employees. Show all posts

Friday, December 30, 2022

சர்வதேச பல்கலையில் உயர்கல்வி நிதி ஆதரவை மத்திய அரசு வழங்கும் - The central government will provide financial support for higher education in international universities

December 30, 2022 0
சர்வதேச பல்கலையில் உயர்கல்வி நிதி ஆதரவை மத்திய அரசு வழங்கும் - The central government will provide financial support for higher education in international universities ''சர்வதேச பல்கலையில், மருத்துவ மாணவர்கள் உயர்கல்வி படிக்க விரும்பினால், அதற்கான நிதி ஆதரவை மத்திய அரசு வழங்கும்,'' என, மத்திய சமூகநீதித்துறை இணை அமைச்சர் பிரதிமா பவுமிக் தெரிவித்தார்.

சென்னை, எம்.ஜி.எம்., ஹெல்த்கேர் மருத்துவமனையில், அசாம், அருணாச்சல பிரதேஷ், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலந்து, திரிபுரா ஆகிய மாநிலங்களை சேர்ந்த பல டாக்டர்கள் பணியாற்றி வருகின்றனர்.

அவர்களுடன், மத்திய சமூகநீதி மற்றும் திறன் அதிகார இணை அமைச்சர் பிரதிமா பவுமிக், நேற்று முன்தினம் கலந்துரையாடினார். அப்போது, அவர் பேசியதாவது:

இந்தியாவில் மருத்துவ மாணவர்களும், இளம் வயது நபர்களும், திறன் அதிகாரம் பெறுவதற்கு உதவ, பல செயல்திட்டங்களை மத்திய அரசு உருவாக்கி, அவற்றை திறம்பட செயல்படுத்தி வருகிறது. எந்தவொரு சர்வதேச பல்கலையிலும், உயர்கல்வி படிப்புகளை மேற்கொள்ள நீங்கள் விரும்பினால், அதற்கான நிதி ஆதரவை வழங்க, மத்திய அரசு தயராக உள்ளது.

எனவே, பெரிதாக கனவு காணுங்கள்; சாதனையை நிகழ்த்த, ஒருபோதும் தயக்கமோ, அச்சமோ கொள்ளாதீர்கள். உங்கள் கனவுகளை நிஜமாக்க, உங்களுக்கு ஆதரவளிக்க நாங்கள் இருக்கிறோம்.

இவ்வாறு, அவர் பேசினார்.
Read More

Thursday, December 15, 2022

மத்திய அரசுத் துறைகளில் 9.79 லட்சம் காலிப்பணியிடங்கள் - மத்திய அரசு தகவல்

December 15, 2022 0
மத்திய அரசுத் துறைகளில் 9.79 லட்சம் காலிப்பணியிடங்கள் - மத்திய அரசு தகவல்

மத்திய அரசுத் துறைகளில் 9.79 லட்சம் காலிப்பணியிடங்கள் உள்ளதாக மத்திய அரசு மக்களவையில் மாநில பணியாளர் துறை இணை அமைச்சர் ஜித்தேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசில் நிரப்பப்படாமல் உள்ள காலிப்பணியிடங்கள் தொடர்பாக மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்குப் பதிலளித்த மத்திய இணை அமைச்சர் ஜித்தேந்திர சிங் மத்திய அரசில் மொத்தம் 9.79 லட்சம் பணியிடங்கள் காலியாகவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மார்ச்1, 2021 நாள் வரையிலான செலவினத் துறையின் ஊதிய ஆய்வு அறிக்கையின்படி 9,79,327 பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது என்று இணை அமைச்சர் எழுத்துப் பூர்வமாக மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்துள்ளார். மேலும் இப்பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைகள் நடைபெற்று வருவதாகத் தெரிவித்துள்ளார்.

அரசு சம்மந்தப்பட்ட துறைகளுக்கு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவுரைகளை வழங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவரின் வேறு ஒரு பதிலில் இந்திய சிவில் சர்வீஸ் பணியிடங்களுக்கான தகவலும் இடம்பெற்றிருந்தது.

இந்திய நிர்வாக சேவைப் பணிகளில் மட்டும் 1,472 பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதாகவும் மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையம் பணியிடங்களை நிரப்பும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Read More

Sunday, December 11, 2022

முப்படைகளில் 1.35 லட்சம் காலியிடங்கள்: மத்திய அரசு

December 11, 2022 0
முப்படைகளில் 1.35 லட்சம் காலியிடங்கள்: மத்திய அரசு

முப்படைகளில் 1.35 லட்சம் பாதுகாப்பு வீரா்களுக்கான காலியிடங்கள் இருப்பதாகவும், அதிகபட்சமாக ராணுவத்தில் 1.18 லட்சம் காலியிடங்கள் உள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்தது.

மக்களவையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கேள்வி நேரத்தின்போது பாதுகாப்புத் துறை இணையமைச்சா் அஜய் பட் இது குறித்து பதிலளிக்கையில், ‘முப்படைகளில் 1.35 லட்சம் பாதுகாப்பு வீரா்களுக்கான காலியிடங்கள் உள்ளன. கடந்த ஜூலை 1-ஆம் தேதி நிலவரப்படி இளநிலை அதிகாரி பணியிடங்கள் உள்பட ராணுத்தில் 1.18 லட்சம் காலியிடங்கள் உள்ளன. கடந்த செப்.30-ஆம் தேதி நிலவரப்படி, கடற்படையில் 11,587 வீரா்களுக்கும், நவ.1-ஆம் தேதி நிலவரப்படி விமானப் படையில் 5,819 வீரா்களுக்கும் காலியிடங்கள் உள்ளன.

பாதுகாப்பு படைவீரா்கள் ‘அக்னிபத்’ திட்டத்தின் மூலமாக தோ்ந்தெடுக்கப்படுவா். முப்படைகளிலிலும் ஆண்டுக்கு 60,000 காலிப்பணியிடங்கள் ஏற்படுகிறது. கடந்த இரு ஆண்டுகளாக கரோனா பெருந்தொற்றினால் ஆள்சோ்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை. இதன் காரணமாக ராணுவத்தில் 1.08 லட்சம் வீரா்களுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. கரோனா பெருந்தொற்றின் நிலைமை மேம்பட்டுள்ளதையடுத்து, ஆள்சோ்ப்புப் பணிகள் தொடங்கியுள்ளதால் இந்தக் காலியிடங்கள் விரைவில் குறையும்’ எனத் தெரிவித்தாா்.
Read More

Friday, July 1, 2022

மத்திய அரசு ஊழியர்கள் 8089 பேருக்கு பதவி உயர்வு

July 01, 2022 0
மத்திய அரசுப்பணியில் உள்ள மூன்று முக்கிய பிரிவுகளை சேர்ந்த 8,089 ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

மத்திய செயலக நிர்வாகத்தின் முதுகெலும்பாக, மத்திய செயலக சேவை, மத்திய செயலக சுருக்கெழுத்தாளர் சேவை, மத்திய செயலக எழுத்தர் சேவை ஆகிய பிரிவுகள் உள்ளன.இந்த மூன்று பிரிவுகளைச் சேர்ந்த, 8,089 ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்கி, மத்திய பணியாளர் மற்றும் பயிற்சி துறை உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து பிரதமர் அலுவலக இணையமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியதாவது:மத்திய அரசு ஊழியர்கள், தங்களுக்குரிய பதவி உயர்வைப் பெறாமல் ஓய்வு பெற்றுவிடுவது வருத்தம் அளிக்கிறது. எனவே, மத்திய அரசின் மூன்று பிரிவுகளைச் சேர்ந்த, 8,089 ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்க பிரதமர் மோடி முடிவு செய்தார். இதற்காக அவருக்கு நன்றி தெரிவிக்கிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.

மத்திய அரசு உத்தரவுப்படி, மத்திய செயலக சேவைப் பிரிவில், 4,734 பேர் பதவி உயர்வு பெற்றுள்ளனர். மத்திய செயலக சுருக்கெழுத்தர் சேவை, மத்திய செயலக எழுத்தர் சேவை ஆகியவற்றில் முறையே, 2,966 பேர், 389 பேர் பதவி உயர்வு பெற்றுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது
Read More

Post Top Ad

Your Ad Spot