சர்வதேச பல்கலையில் உயர்கல்வி நிதி ஆதரவை மத்திய அரசு வழங்கும் - The central government will provide financial support for higher education in international universities
''சர்வதேச பல்கலையில், மருத்துவ மாணவர்கள் உயர்கல்வி படிக்க விரும்பினால், அதற்கான நிதி ஆதரவை மத்திய அரசு வழங்கும்,'' என, மத்திய சமூகநீதித்துறை இணை அமைச்சர் பிரதிமா பவுமிக் தெரிவித்தார்.
சென்னை, எம்.ஜி.எம்., ஹெல்த்கேர் மருத்துவமனையில், அசாம், அருணாச்சல பிரதேஷ், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலந்து, திரிபுரா ஆகிய மாநிலங்களை சேர்ந்த பல டாக்டர்கள் பணியாற்றி வருகின்றனர்.
அவர்களுடன், மத்திய சமூகநீதி மற்றும் திறன் அதிகார இணை அமைச்சர் பிரதிமா பவுமிக், நேற்று முன்தினம் கலந்துரையாடினார். அப்போது, அவர் பேசியதாவது:
இந்தியாவில் மருத்துவ மாணவர்களும், இளம் வயது நபர்களும், திறன் அதிகாரம் பெறுவதற்கு உதவ, பல செயல்திட்டங்களை மத்திய அரசு உருவாக்கி, அவற்றை திறம்பட செயல்படுத்தி வருகிறது. எந்தவொரு சர்வதேச பல்கலையிலும், உயர்கல்வி படிப்புகளை மேற்கொள்ள நீங்கள் விரும்பினால், அதற்கான நிதி ஆதரவை வழங்க, மத்திய அரசு தயராக உள்ளது.
எனவே, பெரிதாக கனவு காணுங்கள்; சாதனையை நிகழ்த்த, ஒருபோதும் தயக்கமோ, அச்சமோ கொள்ளாதீர்கள். உங்கள் கனவுகளை நிஜமாக்க, உங்களுக்கு ஆதரவளிக்க நாங்கள் இருக்கிறோம்.
இவ்வாறு, அவர் பேசினார்.