KalviseithiDaily: UPSC

KalviseithiDaily

kalviseithidaily.blogspot.com No:1 Education Website in Tamil கல்வி செய்திகள்: Get latest news on Exam Results, tamil nadu school education department news, TN University Results, Exam Schedule Latest News Educational News from Tamilnadu Government, Tamilnadu Educaitonal Minsters Latest Updates, 10th, 11th, 12th, TNTET, TRB, TNPSC, STUDY MATERIALS, ONLINE TESTS, LATEST kalviseithi, Padasalai, tnkalvi, tnpse news, TET updates, TRB news, kalvi news, Padsalai study materials

Subscribe Us

Sigma is

  • Seo Ready
  • Responsive
  • Fast Loading
  • Amazing!

Hot

Post Top Ad

Your Ad Spot
Showing posts with label UPSC. Show all posts
Showing posts with label UPSC. Show all posts

Tuesday, December 27, 2022

மத்திய அரசின் பணியாளர் தேர்வாணைய தேர்வுகளை தமிழில் நடத்திடுக: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

December 27, 2022 0
மத்திய அரசின் பணியாளர் தேர்வாணைய தேர்வுகளை தமிழில் நடத்திடுக: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

சென்னை: மத்திய அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் பணி நியமனங்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கான வாய்ப்புகளை உறுதி செய்திட வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், "நாட்டில் அனைத்துப் பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கும் போதுமான வாய்ப்புகள் வழங்குவதன் மூலம் மட்டுமே சிறந்த சேவை வழங்குவதை உறுதி செய்திட முடியும். மத்திய அரசு மற்றும் மத்திய பொதுத் துறை நிறுவனங்களில் சேருவதற்கான அவர்களது விருப்பத்தை நிறைவேற்ற முடியும். நல்ல நிர்வாகத்திற்கு பொது மக்களுடன் இணக்கமாகப் பழகுதல், உள்ளூர் மொழி தெரிந்திருத்தல், கலாச்சாரத்தில் பரிச்சயம் போன்றவை முக்கியமானவை. கல்வி மற்றும் தொழில்நுட்பத்தில் ஒப்பீட்டளவில் பரந்த அறிவு மற்றும் திறமையுடன் கூடிய மனித வளங்களை தமிழ்நாடு கொண்டுள்ளதால், அவற்றை நன்கு பயன்படுத்திட முடியும். மத்திய அரசு மற்றும் மத்திய பொதுத் துறை நிறுவனங்களின் பணி நியமனத்தில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று பல்வேறு மாணவர் நலச் சங்கங்கள், அரசியல் கட்சியினர் கோரிக்கை விடுத்து வருவகின்றனர். 2021-2022 ஆம் ஆண்டிற்கான பணியாளர் தேர்வாணையத்தின் வருடாந்திர அறிக்கையில், பணியாளர் தேர்வு ஆணையத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட தகுதி வாய்ந்த நபர்களில், 4.5 சதவீதம் அளவில் மட்டுமே தென் மண்டலத்தைச் சேர்ந்த தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

அதோடு, தென் மண்டலத்தில் ரயில்வே பணியாளர் தேர்வாணையத்தால் பல்வேறு பணியிடங்களுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் பெரும்பான்மையானவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் அல்ல. இது வேலை தேடும் இளைஞர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தையும், சமூக, அரசியல் வட்டாரத்தில் கவலையையும் ஏற்படுத்தியிருக்கிறது. இத்தகைய சமச்சீரற்ற பணித் தேர்வு முறை தவிர்க்கப்பட வேண்டிய தாக்கங்களைக் கொண்டிருக்கிறது.

இந்தச் சூழ்நிலையில், தமிழர்களுக்கான வேலைவாய்ப்புகளை அதிகரித்திடும் வகையில், தமிழ்நாட்டில், மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையங்களால் நடத்தப்படும் அனைத்துத் தேர்வுகளையும் தமிழில் நடத்திடவும், தமிழ்நாட்டிலுள்ள மத்திய அரசு அலுவலகங்கள் மற்றும் மத்திய பொதுத் துறை நிறுவனங்களின் பணி நியமனத்தில் தமிழ்நாட்டைச் சார்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளித்திடவும், தமிழ்நாட்டிலுள்ள இரயில்வே நிறுவனங்களில் பயிற்சி பெறுவோருக்கு, 20 சதவீத இடஒதுக்கீட்டின்கீழ் நேரடி நியமனங்களில், பிராந்திய பிரதிநிதித்துவத்தை உறுதி செய்திடும் வகையில் முன்னுரிமை அளிக்க வேண்டும்" என்று அந்தக் கடிதத்தில் முதல்வர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
Read More

Friday, August 5, 2022

IAS,IPS உள்ளிட்ட பதவிகளுக்கான மெயின் தேர்வு செப்டம்பர் 16ல் தொடக்கம்

August 05, 2022 0
ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பதவிகளுக்கான மெயின் தேர்வு செப்டம்பர் 16ல் தொடங்குகிறது: 5 நாட்கள் நடக்கிறது

ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட சிவில் சர்வீஸ் பதவிக்கான மெயின் தேர்வு செப்டம்பர் 16ம் தேதி தொடங்கும் என்று யுபிஎஸ்சி நேற்று அறிவித்துள்ளது. இத்தேர்வு மொத்தம் 5 நாட்கள் நடக்கிறது. தமிழகத்தில் சென்னையில் மட்டும் இந்த தேர்வு நடக்கிறது. 2022ம் ஆண்டில் சிவில் சர்வீஸ் பணியில் அடங்கிய 1,011 பணியிடங்களை நிரப்புவதற்கான முதல்நிலை தேர்வு கடந்த ஜூன் 5 ம் தேதி நடந்தது. இத்தேர்வை சுமார் 5.5 லட்சம் பேர் எழுதினர். ஜூன் 22ம் தேதி முதல்நிலை தேர்வுக்கான ரிசல்ட் வெளியிடப்பட்டது. இத்தேர்வில் 13,090 பேர் தேர்ச்சி பெற்றனர். தமிழகத்தை பொறுத்தவரை 610 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். இவர்களுக்கான மெயின் தேர்வு செப்டம்பர் 16ம் தேதி தொடங்கும் என்று மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. இது குறித்து சங்கர் ஐஏஎஸ் அகடாமி நிர்வாக இயக்குனர் டாக்டர் எஸ்.டி.வைஸ்ணவி கூறியதாவது: சிவிஸ் சர்வீஸ் மெயின் தேர்வுக்கான தேதியை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் தனது இணையதளமான www.upsc.gov.inல் வெளியிட்டுள்ளது.

மெயின் தேர்வு செப்டம்பர் 16ம் தேதி தொடங்கி 5 நாட்கள் நடக்கிறது. 16ம் தேதி காலை முதல் தாள் தேர்வு (கட்டுரை வடிவிலானது) நடக்கிறது. 17ம் தேதி காலை இரண்டாம் தாள்(பொது அறிவு 1), மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை மூன்றாம் தாள்(பொது அறிவு 2) தேர்வும்,18ம் தேதி காலையில் 4ம் தாள்(பொது அறிவு 3), பிற்பகலில் 5ம் தாள் தேர்வு(பொது அறிவு 4) தேர்வும் நடக்கிறது. தொடர்ந்து செப்டம்பர் 24ம் தேதி காலையில் இந்திய ெமாழிகளில் ஒரு தாள் தேர்வு, பிற்பகலில் ஆங்கிலம் தேர்வும், 25ம் தேதி காலையில் விருப்பப்பாடம் முதல் தாள், மாலை விருப்பப்பாடம் 2ம் தாள் தேர்வும் நடக்கிறது. நாடு முழுவதும் 24 நகரங்களில் மெயின் தேர்வு நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் சென்னையில் மட்டும் மெயின் தேர்வு நடைபெறும்.

மெயின் தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு நேர்முக தேர்வு நடத்தப்படும். மெயின் தேர்வு, நேர்முக தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் ரேங்க் பட்டியல் வெளியிடப்படும். இதில் தேர்வர்களின் விருப்பத்தின் அடிப்படையிலும், பட்டியலில் உள்ள தகுதி நிலை அடிப்படையிலும் பணி ஒதுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
Read More

Saturday, June 25, 2022

மத்திய அரசில் வேலை வேண்டுமா? - யுபிஎஸ்சி அறிவிப்பு - விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.06.2022

June 25, 2022 0
மத்திய அரசில் வேலை வேண்டுமா? - யுபிஎஸ்சி அறிவிப்பு

மத்திய அரசில் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை மத்திய பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

பணி: Scientific Officer (Physical Rubber Plastic Textile) - 01

வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும். 

தகுதி: முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Assistant Mining Geologist - 21 

பணி: Assistant Executive Engineer(Civil) - 02
வயதுவரம்பு: 36க்குள் இருக்க வேண்டும். 

தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை : எழுத்துத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

 பிஇ முடித்தவர்களுக்கு வாய்ப்பு 

விண்ணப்பிக்கும் முறை: https://upsconline.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பக் கட்டணம்: ரூ. 25. பெண்கள், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.06.2022

மேலும் விவரங்கள் அறிய  https://upsconline.nic.in/ora/VacancyNoticePub.php என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

Read More

Saturday, December 11, 2021

அரசு மையங்களில் ஐஏஎஸ், ஐபிஎஸ் பயிற்சி - இன்று முதல் 28ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

December 11, 2021 0
2022ம் ஆண்டுக்கான தமிழக அரசின் ஐஏஎஸ்,ஐபிஎஸ் பயிற்சிமையங்களில்சேர இன்று முதல் வரும் 28ம் தேதி வரை விண்ணப் பிக்கலாம் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அறி விப்பு:

சென்னையில் உள்ள தமிழக அரசின் அகில இந்திய குடிமைப் பணி தேர்வுப் பயிற்சி மையம், கோயம்புத்தூர், மதுரை யில் உள்ள அண்ணா நூற்றாண்டு குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சி மையங்களில், தமிழ்நாட் டைச்சேர்ந்த இளம்பட்ட தாரிகள் மற்றும் முதுநிலை பட்டதாரிகள் ஆகியோ ருக்கு. 5.6.2022 அன்று நடைபெற இருக்கும் மத் தியதேர்வாணையம் நடத் தும் குடிமைப்பணி தேர் விற்கு கட்டணமில்லா பயிற்சி அளிக்க உள்ளது.

சென்னையில் உள்ள மையத்தில் 225 முழுநேர தேர்வர்களையும், 100 பகு திநேர தேர்வர்களையும் முதல்நிலை பயிற்சிக்காக அனுமதிக்கிறது. அதே போன்று அண்ணா நூற் றாண்டு குடிமைப் பணித் தேர்வு பயிற்சி நிலையங் கள், கோயம்புத்தூர், மதுரை ஆகிய பயிற்சி மையங்களில் தலா 100 முழுநேர தேர்வர்களை முதல்நிலை தேர்வுக்காக அனுமதிக்கின்றன. 2022ல் குடிமைப் பணிகளுக்கான முதல் நிலைத் தேர்வு எழு துவதற்கு, பயிற்சி பெற விரும்புபவர்கள் www. civilservicecoaching.com என்ற இணையதளம் வாயிலாக இன்று முதல் வரும் 28ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இப் பயிற்சிமையங்களில் ஏற்க னவே முதல்நிலைத் தேர் வுக்கு முழுநேரப்பயிற்சி பெற்றவர்கள் விண்ணப் பிக்கவேண்டாம்மேலும், பயிற்சியில் சேர விரும்புப வர்கள் தங்கள் கல்வி மற் றும்வயது ஆகிய தகுதிகள் குறித்த விவரங்களை மத் தியதேர்வாணையக்குழு வின் இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள் ளலாம். தகுதியுடைய நபர்கள் 23.1.2022 அன்று நடைபெறும் நுழைவுத் தேர்வுக்கு அனுமதிக்கப் படுவர். முதல் நிலைத் தேர்வுக்கான நுழைவு தேர்வு முடிவுகள் விரை வில் வெளியிடப்பட்டு, தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் தாங்கள் தேர்ந்தெடுத்த பயிற்சி மையங்களில் இன வாரி யாகஉள்ள இடங்களுக்கு ஏற்ப நேரடியாக பயிற் சிக்கு அழைக்கப்படுவர். பிப்ரவரி முதல் வாரத் தில் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படும். இவ் வாறு கூறப்பட்டுள்ளது.
Read More

Post Top Ad

Your Ad Spot