KalviseithiDaily: Higher Education Department

KalviseithiDaily

kalviseithidaily.blogspot.com No:1 Education Website in Tamil கல்வி செய்திகள்: Get latest news on Exam Results, tamil nadu school education department news, TN University Results, Exam Schedule Latest News Educational News from Tamilnadu Government, Tamilnadu Educaitonal Minsters Latest Updates, 10th, 11th, 12th, TNTET, TRB, TNPSC, STUDY MATERIALS, ONLINE TESTS, LATEST kalviseithi, Padasalai, tnkalvi, tnpse news, TET updates, TRB news, kalvi news, Padsalai study materials

Subscribe Us

Sigma is

  • Seo Ready
  • Responsive
  • Fast Loading
  • Amazing!

Hot

Post Top Ad

Your Ad Spot
Showing posts with label Higher Education Department. Show all posts
Showing posts with label Higher Education Department. Show all posts

Wednesday, January 4, 2023

உயா் கல்வி வளா்ச்சியில் தமிழகம் முதலிடம்: அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

January 04, 2023 0
உயா் கல்வி வளா்ச்சியில் தமிழகம் முதலிடம்: அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

உயா் கல்வி வளா்ச்சியில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளதாக அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறினாா்.

சென்னையை அடுத்த படூா் இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் செங்கல்பட்டு மாவட்ட பள்ளி மாணவா்களுக்கான உயா்கல்வி வழிகாட்டி முகாம் அண்மையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசியதாவது: உயா் கல்வி வளா்ச்சியில் தமிழகம் 51.4 சதவிகிதம் பெற்று நாட்டில் முதல் இடத்தில் உள்ளது. இந்த எண்ணிக்கை 100 சதவீதமாக உயா்த்த வேண்டும்.

நான் முதல்வன் திட்டம் மூலம் மாணவா்களுக்கு வழங்கப்படும் ஆளுமைத் திறன் உள்ளிட்டவை தனித்திறன் மேம்பாடு, உயா் கல்விக்கான நுழைவுத் தோ்வு பயிற்சி ஆகியவற்றை நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

மாணவா்களின் அறிவாற்றலை மேம்படுத்தும் பள்ளி ஆசிரியா்கள் அவா்களின் தனித்திறன் மேம்பாட்டுக்கும், உயா் கல்வி பெற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியும், வழிகாட்டி உறுதுணை புரிய வேண்டும் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில், கல்லூரி இயக்குநா் டாக்டா் சூசன் வா்கீஸ் ,துணை இயக்குநா் டாக்டா் வி. ஜே. பிலிப், கல்லூரி முதல்வா் சீ.திருமகன், பேராசிரியா்கள் சா.உதயகுமாா், ஏஞ்சலின் கிறிஸ்டோபெல், வா. ஸ்ரீதா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
Read More

Friday, December 30, 2022

சர்வதேச பல்கலையில் உயர்கல்வி நிதி ஆதரவை மத்திய அரசு வழங்கும் - The central government will provide financial support for higher education in international universities

December 30, 2022 0
சர்வதேச பல்கலையில் உயர்கல்வி நிதி ஆதரவை மத்திய அரசு வழங்கும் - The central government will provide financial support for higher education in international universities ''சர்வதேச பல்கலையில், மருத்துவ மாணவர்கள் உயர்கல்வி படிக்க விரும்பினால், அதற்கான நிதி ஆதரவை மத்திய அரசு வழங்கும்,'' என, மத்திய சமூகநீதித்துறை இணை அமைச்சர் பிரதிமா பவுமிக் தெரிவித்தார்.

சென்னை, எம்.ஜி.எம்., ஹெல்த்கேர் மருத்துவமனையில், அசாம், அருணாச்சல பிரதேஷ், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலந்து, திரிபுரா ஆகிய மாநிலங்களை சேர்ந்த பல டாக்டர்கள் பணியாற்றி வருகின்றனர்.

அவர்களுடன், மத்திய சமூகநீதி மற்றும் திறன் அதிகார இணை அமைச்சர் பிரதிமா பவுமிக், நேற்று முன்தினம் கலந்துரையாடினார். அப்போது, அவர் பேசியதாவது:

இந்தியாவில் மருத்துவ மாணவர்களும், இளம் வயது நபர்களும், திறன் அதிகாரம் பெறுவதற்கு உதவ, பல செயல்திட்டங்களை மத்திய அரசு உருவாக்கி, அவற்றை திறம்பட செயல்படுத்தி வருகிறது. எந்தவொரு சர்வதேச பல்கலையிலும், உயர்கல்வி படிப்புகளை மேற்கொள்ள நீங்கள் விரும்பினால், அதற்கான நிதி ஆதரவை வழங்க, மத்திய அரசு தயராக உள்ளது.

எனவே, பெரிதாக கனவு காணுங்கள்; சாதனையை நிகழ்த்த, ஒருபோதும் தயக்கமோ, அச்சமோ கொள்ளாதீர்கள். உங்கள் கனவுகளை நிஜமாக்க, உங்களுக்கு ஆதரவளிக்க நாங்கள் இருக்கிறோம்.

இவ்வாறு, அவர் பேசினார்.
Read More

Implementation of Guidelines on "Fostering Social Responsibility & Community Engagement in Higher Education Institutions in India 2.0

December 30, 2022 0


UGC letter regarding: Implementation of Guidelines on "Fostering Social Responsibility & Community Engagement in Higher Education Institutions in India 2.0

Higher Educational Institutions (HEIs) can play an important role to achieve the objectives of socioeconomic development of New India through their active community engagement.

This approach will also contribute to improve the quality of both teaching and research in HEIs as they will develop a better understanding of issues in the society. Therefore, it would in the fitness of things, if HEIs bring in social responsibility and community in their vision and mission itself. It is also important that institutional mechanisms are developed to adopt a holistic and functional approach to community engagement, encompassing all three functions of HEIs—teaching, research and service. UGC’s ambitious Quality Mandate launched in 2018 has focused on improving societal linkages of HEIs and enabling students to become socially productive.

UGC set up a Subject Expert Group on Educational Institutions’ Social Responsibility in 2018 under Unnat Bharat Abhiyan (UBA), a flagship programme of the Government of India, which worked to develop a report on “Fostering Social Responsibility and Community Engagement in Higher Education Institutions (HEIs) in India”. The report has emphasised the importance of socially relevant courses that will make all students understand India’s rural society, Government’s rural development schemes and contribute to the betterment of the same.

Since the Government of India announced the National Education Policy (NEP) on 29th July 2020, this document has been revised to include key recommendations of NEP, as well as the deliberations of the Review Committee, Expert Group and feedback received from the stakeholders. I am happy to present a revised “Guidelines for Fostering Social Responsibility and Community Engagement in Higher Education Institutions (HEIs) in India” to the Vice-Chancellors, Directors, Principals, faculty members and students of the HEIs.

I would like to acknowledge the valuable contribution of the Chairperson of the Subject Expert Group (SEG), Dr. K. K. Aggarwal, Chairman, National Board of Accreditation (NBA) and all the SEG members in developing this document. I would also like to acknowledge the necessary support and relevant inputs provided by Prof. Rajnish Jain, Secretary, UGC and other UGC officials and Experts in formulating the revised guidelines. This document will give a fillip to UGC’s long-standing commitment to strengthen social responsibility and community engagement of Universities/Colleges in India.

CLICK HERE TO DOWNLOAD
Read More

Saturday, September 24, 2022

Arts and cultural activities compulsory in government schools - Education Department notification - அரசு பள்ளிகளில் 6 முதல் 9ம் வகுப்பு வரை கலை பண்பாட்டு செயல்பாடுகள் கட்டாயம்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

September 24, 2022 0
அரசு பள்ளிகளில் 6 முதல் 9ம் வகுப்பு வரை கலை பண்பாட்டு செயல்பாடுகள் கட்டாயம்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு - Arts and cultural activities compulsory in government schools from class 6 to 9: Education Department notification

அரசு பள்ளிகளில் 6 முதல் 9ம் வகுப்பு வரை கலை பண்பாட்டு செயல்பாடுகள் கட்டாயம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 6 முதல் 9ம் வகுப்பு வரை பள்ளி கால அட்டவணைகளில் கலை, பண்பாட்டு செயல்பாடுகள் முதன்முறையாக இணைக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில் வாரத்தில் இரு பாடவேளைகள் கலை, பண்பாட்டு செயல்பாடுகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இசை, நடனம், காட்சிக்கலை, நாடகம், நாட்டுப்புற கலை ஆகிய 5 கலைச்செயல்பாடுகளில் மாணவர்கள் ஒன்றை தேர்வு செய்யலாம்.

கலை, பண்பாட்டு செயல்பாடுகளை பயிற்றுவிக்க பள்ளிகளுக்கு அருகே உள்ள கலைஞர்களை ஈடுபடுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு பள்ளியும் கலை பண்பாட்டு செயல்பாடுகளுக்கு பொறுப்பாசிரியரை நியமிக்க வேண்டும். கலை, பண்பாட்டு செயல்பாடுகளில் சிறந்து விளக்கும் மாணவர்கள் வெளிநாடுகளுக்கு சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவார்கள் என பள்ளிக்கல்வித்துறை தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More

Tuesday, September 6, 2022

கல்வி உதவித்தொகை: விண்ணப்பங்களைப் புதுப்பிக்கலாம்

September 06, 2022 0
மத்திய மனித வளத் துறையின் கல்வி உதவித்தொகையைப் பெறும் கல்லூரிமற்றும் பல்கலைக்கழக மாணவா்கள் தங்கள் விண்ணப்பங்களை புதுப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள்.

இது குறித்து உயா்கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

2-ஆம் ஆண்டு பி.யூ.சி. தோ்வில் 80 சதவீதத்திற்கும் அதிகமாக மதிப்பெண் பெற்று உயா்கல்வி (கல்லூரி மற்றும் பல்கலைக்கழகம்) பயின்றுவரும் மாணவா்களுக்கு மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை கல்வி உதவித்தொகை அளித்துவருகிறது.

இந்த மாணவா்கள் தங்கள் கல்வி உதவித்தொகையை தொடா்ந்து பெற விண்ணப்பங்களை புதுப்பிக்க வேண்டும். எனவே, உரிய ஆவணங்களுடன் செப்.30-ஆம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட கல்லூரி முதல்வா்களிடம் விண்ணப்பங்களை அளிக்கலாம் அல்லது மனித வள மேம்பாட்டுத் துறை கல்வி உதவித் தொகை, ஒருங்கிணைப்பு அதிகாரி, அறை எண்: 302, மூன்றாவது தளம், பி.யூ. கல்வித்துறை, 18-ஆவது குறுக்குத்தெரு, மல்லேஸ்வரம், பெங்களூரு-12 என்ற முகவரியிலும் அளிக்கலாம்.
Read More

Friday, August 5, 2022

இன்ஜினியரிங் மாணவர் புதிய நடைமுறை; உயர்கல்வி துறை அறிவிப்பு

August 05, 2022 0
இன்ஜினியரிங் மாணவர் புதிய நடைமுறை; உயர்கல்வி துறை அறிவிப்பு

பொறியியல் படிப்பை தேர்வு செய்தும், அதில் மாணவர்கள் சேராமல் போகும் இடங்கள் கடைசி வரை காலி இடங்களாகவே இருந்து விடுகிறது. அதாவது, படிப்பை தேர்வு செய்து, அந்தந்த கல்லூரிகளில் சேராமல் போகும் மாணவர்களின் விவரங்களை அந்தந்த கல்லூரிகள் உடனடியாக தெரிவிக்கும் வகையில் ஏற்கனவே இணையதளம் உருவாக்கப்பட்டு இருந்தது.

அது நடைமுறைப்படுத்தப்படாமல் இருந்த நிலையில், தற்போது மீண்டும் நடைமுறைப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கிறது. இதன் மூலம் படிப்பை தேர்வு செய்த 7 நாட்களுக்குள் அந்த இடத்தில் மாணவர்கள் சேரவில்லையென்றால், அந்த விவரத்தை அந்தந்த கல்லூரிகள் சுட்டிக்காட்டும் பட்சத்தில் 2ம் கட்ட கலந்தாய்வில் அந்த காலி இடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட இருக்கிறது.
Read More

Wednesday, June 29, 2022

உயர்கல்வி சேர முடியாத அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 'முதல் படி' !

June 29, 2022 0
அரசு பள்ளியில் படித்து +2வில் நல்ல மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருந்தும் பணவசதி காரணமாக உயர்கல்வி கனவை கைவிடும் மாணவர்களுக்கு தனியார் பண்பலை நிறுவனம் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து அவர்களுக்கான உயர் கல்விச் செலவை ஏற்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

ரேடியோ மிர்ச்சி, அக்னி சிறகுகள் அறக்கட்டளை, டோக்கியோ தமிழ் சங்கம் ஆகியவை இணைந்து 'முதல் படி' என்ற பெயரில் இத்திட்டத்தை கடந்த 2 ஆண்டுகளாக வெற்றிகரமாக நடத்தியுள்ளது. 2020ல் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் இத்திட்டத்தின் மூலம் கலை அறிவியல் கல்லூரிகள் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர். 2021ல் பயன்பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை நூறுக்கும் மேல் அதிகரித்தது. இந்தாண்டு தேர்வு முடிவுகள் வெளியாகி அட்மிஷன் பணிகள் தொடங்கியுள்ள நிலையில் மீண்டும் முதல் படி என்ற திட்டத்தில் ஏழை மாணவ, மாணவிகளை தேர்வு செய்து வருகின்றனர். அரசு பள்ளியில் +2 முடித்த மாணவர்கள் இத்திட்டத்தில் பயன்பெற விரும்பினால் 9787089595, 9629620983, 7010244102 , 9655198983 என்ற எண்ணில் உங்களது பெயர், ஊர், +2 மதிப்பெண், தொடர்பு எண் ஆகியவற்றை அனுப்பினால் அவர்களே அழைத்து மேற்கொண்டு விவரம் பெறுவார்கள். ஓரிரு நாளில் அழைப்பு வரவில்லை எனில் நேரடியாக தொடர்புகொண்டும் விவரங்களை அளிக்கலாம்.
Read More

Monday, June 20, 2022

அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்கலாம்: உயர்க்கல்வித்துறை அறிவிப்பு

June 20, 2022 0
அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர ஜூன் 22 முதல் விண்ணப்பிக்கலாம்: உயர்க்கல்வித்துறை அறிவிப்பு



அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர ஜூன் 22 முதல் இணையதளங்களில் விண்ணப்பிக்கலாம்: உயர்க்கல்வித்துறை அறிவிப்பு

அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர ஜூன் 22 முதல் இணையதளங்களில் விண்ணப்பிக்கலாம் என உயர்க்கல்வித்துறை அறிவித்துள்ளது. www.tngasa.in, www/tngasa.org என்ற இணையதள முகவரிகளில் விண்ணப்பிக்கலாம். வரும் 27ம் தேதிக்கு பதில், 22ம் தேதியே ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Read More

Monday, May 30, 2022

உயர்கல்வியில் தமிழகப் பெண்களின் நிலை!: மு.க.ஸ்டாலின் கருத்து

May 30, 2022 0
உயர்கல்வியில் தமிழகப் பெண்களின் நிலை குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சுட்டுரையில் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளதாவது:

பெண்களின் உயர்கல்வியில் தமிழ்நாடு இன்று அடைந்திருக்கும் உயரம் என்பது அரசால் மட்டும் நிகழ்ந்த சாதனை அல்ல.

மயிலாடுதுறை ரமணி போன்ற தன்னலங்கருதாத பலகோடித் தாய்மார்களின் உழைப்போடு நிகழ்த்தப்பட்ட கூட்டுச்சாதனை. வாழ்த்துகள் மருத்துவர் விஜயலட்சுமி என்று பதிவிட்டுள்ளார்.

மயிலாடுதுறையில் ரமணி என்பவர் மீன் சந்தையில் மீன்களை சுத்தம் செய்ததன் மூலம் கிடைத்த வருவாய் மூலம் தனது மகளை ரஷியாவில் படிக்க வைத்து மருத்துவராக்கியுள்ளார். அவரது அகள் விஜயலட்சுமி தற்போது மருத்துவராகியுள்ளார். ரமணிக்கும், அவரது மகள் விஜயலட்சுமிக்கும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
Read More

Thursday, May 19, 2022

உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு உதவும் Udaan திட்டம்

May 19, 2022 0
Udaan திட்டம்

*ஐஐடி, என்ஐடி உள்ளிட்ட பல புகழ்பெற்ற அரசு பொறியியல் கல்லூரிகளில் சேர சிபிஎஸ்சி மாணவிகளை ஊக்கப்படுத்துகிறது Udaan திட்டம்.*

*இந்தத் திட்டத்தின் கீழ் அந்த கல்லூரிகளில் சேர நடக்கும் நுழைவுத் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் 1000 மாணவிகளுக்கு சிறப்பு பயிற்சி வழங்கப்படும். அவர்களில் 50 சதவீதம் பெயர் எஸ்சி எஸ்டி மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக இருப்பார்கள்.* மாணவிகளுக்கு உதவும் Udaan திட்டம்

*11ம் வகுப்பு படிப்பவர்கள் ஆக இருந்தால் பத்தாம் வகுப்பில் குறைந்தபட்சம் 70 சதவீத மதிப்பெண்ணும், கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களில் 80 சதவீத மதிப்பெண்ணும் அவசியம். பன்னிரண்டாம் வகுப்பு மாணவிகளாக இருந்தால் பத்தாம் வகுப்பில் மேற்கண்ட மதிப்பெண் தகுதியுடன் 11ஆம் வகுப்பில் 75% மதிப்பெண்ணும் அவசியம்.*

*மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த பயிற்சியில் ஏழை மாணவி களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். இந்தத் திட்டத்தின் கீழ் பயிற்சி பெறும் மாணவிகள் படிப்பைத் தொடர நிதி உதவி வழங்கப்படும்.*

*சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவிகள் மட்டுமல்லாமல் மாநில பாடத்திட்டத்தில் படிப்போரும் இந்த சிறப்பு பயிற்சியில் சேரலாம். பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 படிக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு இந்த பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். https://transformingindia.mygov.in/ என்ற இணைய முகவரியில் மாணவிகள் விண்ணப்பிக்கலாம்.*
Read More

Tuesday, May 17, 2022

உயர்கல்வியில் திமுக அரசு மிகுந்த கவனத்தை செலுத்தி வருகிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

May 17, 2022 0
Chief Minister MK Stalin participated in the inauguration of the Sai University building at Payyanur next to Chennai. Minister of Higher Education Ponmudi was the guest of honor at the function. Chief Minister MK Stalin addressing the opening ceremony; The DMK government is paying close attention to higher education. The entrance examination was canceled under the artist regime on that day due to its focus on higher education. The artist who canceled the entrance exam and got Supreme Court approval for it.

Kamaraj for school education means artist for higher education. I have mentioned that the current DMK regime will be a golden age for higher education. Poonthukkolam is committed to creating a position where the most talented students in the world are available only in Tamil Nadu. The number of people getting higher education in Tamil Nadu is higher than the national percentage. There are 13 universities under the control of the Department of Higher Education. He said that the first project was created to develop the youth of Tamil Nadu as achievement students.
முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை அடுத்த பையனூரில் சாய் பல்கலைக்கழக கட்டிட திறப்பு நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். இந்த விழாவில் கவுரவ விருந்தினராக உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பங்கேற்றுள்ளார். திறப்பு விழாவில் உரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின்; உயர்கல்வியில் திமுக அரசு மிகுந்த கவனத்தை செலுத்தி வருகிறது. உயர்க்கல்வியில் கவனம் செலுத்துவதன் காரணமாகத்தான் அன்று கலைஞர் ஆட்சியில் நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டது. நுழைவுத் தேர்வை ரத்து செய்ததுடன் அதற்கு உச்சநீதிமன்ற அங்கீகாரத்தை பெற்றுத் தந்தவர் கலைஞர்.

பள்ளிக்கல்விக்கு காமராஜர் என்றால் உயர்க்கல்விக்கு கலைஞர். உயர்க்கல்விக்கு தற்போதையை திமுக ஆட்சி பொற்காலமாக இருக்கும் என்று நான் குறிப்பிட்டுள்ளேன். உலகிலேயே திறமையான மாணவர்கள் தமிழ்நாட்டில் தான் கிடைக்கிறார்கள் என்ற நிலையை உருவாக்க உறுதி பூண்டுக்கோலம். தேசிய விழுக்காட்டை விட தமிழ்நாட்டில் உயர்க்கல்வி பெறுவோரின் எண்ணிக்கை அதிகம். உயர்க்கல்வித்துறை கட்டுப்பாட்டின் கீழ் 13 பல்கலைக்கழகங்கள் உள்ளன. சாதனை மாணவர்களாக தமிழக இளைஞர்களை உருவாக்குவதற்காக ஏற்படுத்தப்பட்டது தான் நான் முதல்வன் திட்டம் எனவும் கூறினார்.
Read More

Saturday, April 23, 2022

Online Lecture Series on Best Practices in Higher Education

Tuesday, April 19, 2022

அரசு கல்லூரிகளில் புதிய பாடப்பிரிவுகள் - உயர் கல்வித்துறை அமைச்சர்

April 19, 2022 0
''கல்லுாரிகளில் புதிய பாடப்பிரிவுகள் துவக்கப்படும்,'' என, உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:

காங்கிரஸ் - கணேஷ்: ஊட்டி தொகுதி, குந்தா வட்டம், மஞ்சூரில் பாலிடெக்னிக் கல்லுாரி துவக்க வேண்டும். இங்குள்ள அரசு கலை, அறிவியல் கல்லுாரியில், பி.சி.ஏ., விலங்கியல், தமிழ் இலக்கியம் போன்ற படிப்புகளையும் துவக்க வேண்டும்.

அமைச்சர் பொன்முடி:

நீலகிரி மாவட்டத்தில், ஒரு அரசு பாலிடெக்னிக், ஒரு அரசு உதவி பெறும் பாலிடெக்னிக் அமைந்துள்ளது. அரசு பாலிடெக்னிக்கில், 360 மாணவர்கள் சேரலாம். ஆனால், 151 பேர் தான் சேர்ந்துள்ளனர்.

அரசு உதவி பெறும் பாலிடெக்னிக்கில், 240 இடங்களுக்கு, 116 மாணவர்கள் சேர்ந்துஉள்ளனர்.பொதுவாக பாலிடெக்னிக்கில், தற்போது மாணவர்கள் அதிகம் சேருவதில்லை. பாலிடெக்னிக்கில் மாணவர்கள் அதிகம் சேர வேண்டும் என்பதற்காக, 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ், தொழில் பயிற்சி அளிக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். தமிழகம் முழுதும், 1.67 லட்சம் மாணவர்கள் சேர இடங்கள் உள்ளன. இதுவரை, 56 ஆயிரத்து 800 பேர் தான் சேர்ந்துள்ளனர்.

அ.தி.மு.க., - செந்தில்குமார்:

கள்ளக்குறிச்சி அரசு கலை, அறிவியல் கல்லுாரிக்கு, கடந்த ஆட்சியில் இடம் தேர்வு செய்யப்பட்டு, கட்டடம் கட்ட நிதி ஒதுக்கப்பட்டது. விரைவாக கட்டடம் கட்டித் தர வேண்டும்.

அமைச்சர் பொன்முடி:

புதிதாக துவக்கப்பட்ட கல்லுாரிகளுக்கு, கட்டடம் கட்டப்படும். மேலும், 56 கல்லுாரிகளில் உள்கட்டமைப்பு வசதி ஏற்படுத்த, முதல்வர் அனுமதி அளித்துஉள்ளார். தமிழக வாழ்வுரிமை கட்சி - வேல்முருகன்:

பண்ருட்டி தொகுதியில், கலை அறிவியல் கல்லுாரி துவக்க வேண்டும்.அமைச்சர் பொன்முடி: அரசு கல்லுாரி இல்லாத தொகுதிகளுக்கு, முன்னுரிமை அளிக்கப்படும். இந்த ஆண்டு, 11 கல்லுாரிகள் துவக்கப்பட உள்ளன.

தி.மு.க., - கணபதி:

சென்னை மதுரவாயல் தொகுதியில், கலை அறிவியல் கல்லுாரி அமைக்க போதிய இடம் உள்ளது.

அமைச்சர் பொன்முடி:

ஒரு கல்லுாரி துவக்க, ஆண்டுக்கு, 20 கோடி ரூபாய் செலவாகும். எனவே, நிதி நிலை பொறுத்து நடவடிக்கை எடுக்கப்படும்.அ.தி.மு.க., - பொன்.ஜெயசீலன்: நீலகிரி மாவட்டம், கூடலுார் தொகுதியில், அரசு கலைக்கல்லுாரி உள்ளது.

இக்கல்லுாரியில் தாவரவியல், விலங்கியல், வேதியியல், தமிழ் இலக்கியம் துறைகளை ஏற்படுத்த வேண்டும்.அமைச்சர் பொன்முடி: கல்லுாரிகளில் கூடுதல் படிப்புகளை துவக்க, முதல்வர் அனுமதி அளித்துள்ளார். இந்த ஆண்டு புதிய படிப்புகள் துவக்கப்படும். பத்து கல்லுாரிகளில் பி.எச்.டி., படிப்பு துவக்கப்பட உள்ளது. கல்லுாரி முதல்வர்கள் புதிதாக எந்த பாடப்பிரிவு துவக்க வேண்டும் என கருத்துரு அனுப்பினால், பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு விவாதம் நடந்தது.
Read More

Saturday, January 8, 2022

தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களின் பாடத்திட்டத்தை மாற்றியமைக்க உயர்கல்வித்துறை உத்தரவு

January 08, 2022 0
தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள், தங்கள் பாடத்திட்டத்தை மாற்றியமைக்க வேண்டும்!

அனைத்து பல்கலைக்கழக பதிவாளர்களுக்கும், உயர்கல்வித்துறை உத்தரவு.
பாடத்திட்டத்தை மாற்றி வடிவமைத்த பின் தமிழ், கணிதம், புள்ளியியல் பாடங்களை மட்டும் ஆய்வுக்காக அரசுக்கு அனுப்பி வைக்கவும் உத்தரவு.
Read More

Post Top Ad

Your Ad Spot