உயர்கல்வி சேர முடியாத அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 'முதல் படி' !

அரசு பள்ளியில் படித்து +2வில் நல்ல மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருந்தும் பணவசதி காரணமாக உயர்கல்வி கனவை கைவிடும் மாணவர்களுக்கு தனியார் பண்பலை நிறுவனம் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து அவர்களுக்கான உயர் கல்விச் செலவை ஏற்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

ரேடியோ மிர்ச்சி, அக்னி சிறகுகள் அறக்கட்டளை, டோக்கியோ தமிழ் சங்கம் ஆகியவை இணைந்து 'முதல் படி' என்ற பெயரில் இத்திட்டத்தை கடந்த 2 ஆண்டுகளாக வெற்றிகரமாக நடத்தியுள்ளது. 2020ல் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் இத்திட்டத்தின் மூலம் கலை அறிவியல் கல்லூரிகள் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர். 2021ல் பயன்பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை நூறுக்கும் மேல் அதிகரித்தது. இந்தாண்டு தேர்வு முடிவுகள் வெளியாகி அட்மிஷன் பணிகள் தொடங்கியுள்ள நிலையில் மீண்டும் முதல் படி என்ற திட்டத்தில் ஏழை மாணவ, மாணவிகளை தேர்வு செய்து வருகின்றனர். அரசு பள்ளியில் +2 முடித்த மாணவர்கள் இத்திட்டத்தில் பயன்பெற விரும்பினால் 9787089595, 9629620983, 7010244102 , 9655198983 என்ற எண்ணில் உங்களது பெயர், ஊர், +2 மதிப்பெண், தொடர்பு எண் ஆகியவற்றை அனுப்பினால் அவர்களே அழைத்து மேற்கொண்டு விவரம் பெறுவார்கள். ஓரிரு நாளில் அழைப்பு வரவில்லை எனில் நேரடியாக தொடர்புகொண்டும் விவரங்களை அளிக்கலாம்.
Post a Comment (0)
Previous Post Next Post