சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ஜூலை 4-ல் வெளியீடு?!
சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் ஜூலை 4ம் தேதி வெளியாகும் என்றும் மத்திய கல்வி அமைச்சக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
2021- 22ம் கல்வியாண்டிற்கான 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 26 தேதி முதல் மே 24ம் தேதி வரை நடைபெற்றது. அதே போல் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரக் 26ம் தேதி தொடங்கி ஜூன் 15ம் தேதி வரை நடைபெற்றது. 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற மாணவர்கள் குறைந்தபட்சம் 30% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும் என்று இடை நிலை கல்வி வாரியம் ஏற்கனவே அறிவித்திருந்தது.
நாடு முழுவதும் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை 35 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் எழுதினர். அதில் 10ம் வகுப்பு தேர்வினை 21 லட்சம் பேரும், 12ம் வகுப்பு தேர்வினை 14 லட்சம் பேரும் எழுதினர். இந்நிலையில் பல்வேறு மாநிலங்களில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகி, கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனால் மாணவர்கள் நலன் கருதி, சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை விரைந்து வெளியிடும் வகையில் பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்பட்டு வந்தது.
இந்நிலையில் சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் ஜூலை 4ஆம் தேதி வெளியாகும் என்றும் மத்திய கல்வி அமைச்சக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் 10ம் வகுப்பிற்கு ஜூலை 4ம் தேதியும் 12ம் வகுப்பிற்கு ஜூலை 12ம் தேதியும் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
மாணவர்கள் தங்கள் முடிவுகளை Digilocker செயலி மற்றும் digilocker.gov.in என்னும் இணையதளம் மூலம் தெரிந்துக்கொள்ளலாம். இது தவிர, மாணவர்கள் தங்கள் முடிவுகளை cbse.gov.in மற்றும் cbresults.nic.in ஆகிய அதிகாரபூர்வ இணையதள பக்கத்தில் மாணவர்கள் தங்களது பதிவு எண், ரோல் எண்ணை பதிவு செய்து தெரிந்துக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.