KalviseithiDaily: Corona

KalviseithiDaily

kalviseithidaily.blogspot.com No:1 Education Website in Tamil கல்வி செய்திகள்: Get latest news on Exam Results, tamil nadu school education department news, TN University Results, Exam Schedule Latest News Educational News from Tamilnadu Government, Tamilnadu Educaitonal Minsters Latest Updates, 10th, 11th, 12th, TNTET, TRB, TNPSC, STUDY MATERIALS, ONLINE TESTS, LATEST kalviseithi, Padasalai, tnkalvi, tnpse news, TET updates, TRB news, kalvi news, Padsalai study materials

Subscribe Us

Sigma is

  • Seo Ready
  • Responsive
  • Fast Loading
  • Amazing!

Hot

Post Top Ad

Your Ad Spot
Showing posts with label Corona. Show all posts
Showing posts with label Corona. Show all posts

Wednesday, December 28, 2022

கரோனா காலத்தில் பணிபுரிந்த மருத்துவர்களுக்கு உயர் கல்வியில் சேர சான்றிதழ் வழங்க வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு

December 28, 2022 0
கரோனா காலத்தில் பணிபுரிந்த மருத்துவர்களுக்கு உயர் கல்வியில் சேர சான்றிதழ் வழங்க வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு

அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் படித்தவர்கள் கரோனா காலத்தில் பணிபுரிந்ததால் அவர்கள் உயர் கல்வியில் சேர கல்விச் சான்றிதழ்கள் வழங்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை, கோவை, சென்னை, சேலம் உள்பட பல்வேறு அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் பயின்றவர்கள், உயர் மருத்துவக் கல்வியில் சேர எம்பிபிஎஸ் கல்வி சான்றிதழ்களை வழங்க மருத்துவக் கல்வி இயக்குநருக்கு உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை விசாரித்து நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு: ''மனுதாரர்கள் மருத்துவக் கல்லூரிகளில் சேரும் போது முதுநிலை படிப்பில் சேரும் போது அரசு மருத்துவமனைகளில் 2 ஆண்டுகள் பணிபுரிய வேண்டும் என ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. அந்த ஒப்பந்தப்படி 2 ஆண்டுகள் பணிபுரிய விரும்பாவிட்டால் மனுதாரர்கள் அரசுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என அந்த ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனுதார்கள் தரப்பில், மருத்துவ படிப்பு காலத்தை முழுமையாக நிறைவேற்றியுள்ளோம். கரோனா காலத்தில் பணிபுரிந்துள்ளோம். இதனால் மேலும் பணிபுரிய வேண்டியதில்லை. கல்வி சான்றிதழ்களை வழங்க உத்தரவிட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது. மனுதாரர்கள் கரோனா காலத்தில் 2 ஆண்டுகள் பணிபுரிந்துள்ளனர். இதனால் மனுதாரர்கள் உயர் மருத்துவ கல்வியில் சேர மருத்துவ சான்றிதழ்களை உடனடியாக வழங்க வேண்டும்'' என்று நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.
Read More

Thursday, July 7, 2022

ஒரே பள்ளியில் படிக்கும் 19 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு

மதுரையில் பள்ளி மாணவர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை

July 07, 2022 0
மதுரையில் பள்ளி மாணவர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை கட்டாயம் எடுக்க வேண்டும் என முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் தடுப்பு நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்தியுள்ளது. மேலும் பொது இடங்களில் முகக்கவசம் அணிய வேண்டும், கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவுறுத்தியுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள் இந்நிலையில், பள்ளிகள் திறக்கப்பட்டதால், மாணவர்கள் பாதுகாப்புடன் சென்று வரவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே, மதுரையில் பள்ளிகளில் மாணவர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை கட்டாயம் எடுக்க வேண்டும் என மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும், முதல்வர்களுக்கும் மாவட்ட கல்வி அலுவலர் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், பள்ளி மாணவர்களை சமூக இடைவெளியுடன் அமர வைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மேலும் அதிக எண்ணிக்கையில் குழந்தைகள் இருக்கும்பட்சத்தில் அதற்கான சூழ்நிலைக்கேற்ப மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்க வேண்டும். அனைத்து குழந்தைகளும் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். பள்ளிகளில் ஒவ்வொரு குழந்தைகளுக்கும் கண்டிப்பாசு வெப்பமானி கருவி மூலம் பரிசோதனை செய்யப்பட்டு, அதன் பின்னர் பள்ளி வளாகத்திற்குள் அனுமதிக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார். வெப்பமானி பரிசோதனையில் மாணவர்களுக்கு காய்ச்சல் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட மாணவரை தனிமைப்படுத்தி, மாணவரின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்திட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அதிகப்படியான மாணவர்களுக்கு காய்ச்சல் கண்டறியப்பட்டால் உடனடியாக சுகாதார துறையினை தொடர்பு கொண்டு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

அவ்வப்போது கிருமி நாசினியைக் கொண்டு மாணவர்கள் கைகளை சுத்தம் செய்ய ஏதுவாக பள்ளிகளில் கை சுத்திகரிப்பான் (சானிடைசர்) போதுமான அளவு தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்றும் சுற்றறிக்கையில் மாவட்ட கல்வி அலுவலர் குறிப்பிட்டுள்ளார்.
Read More

அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் காய்ச்சல் பரிசோதனை கட்டாயம் - CEO சுற்றறிக்கை

July 07, 2022 0
மதுரையில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை கட்டாயம் என முதன்மை கல்வி அலுவலர் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அனைத்து மாணவர்களும் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.

மாணவர்களுக்கு காய்ச்சல் கண்டறியப்பட்டால் அவரை தனிமைப்படுத்தி பெற்றோருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Read More

Monday, June 20, 2022

தமிழ்நாட்டில் புதிதாக 686 பேருக்கு கரோனா பாதிப்பு - Media Bulletin 20.06.2022 - PDF

Monday, June 13, 2022

அதிகரிக்கும் கரோனா: வழிகாட்டு நெறிமுறைகள் மீண்டும் அமல்

June 13, 2022 0
கரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருவதால், சண்டிகர் மாநில அரசு கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மீண்டும் பிறப்பித்துள்ளது.

நாட்டில் கடந்த சில நாள்களாக மாநில வாரியாத கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால், அந்தந்த மாநில அரசுகள் கரோனா தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்தும் வகையில் வழிகாட்டு நெறிமுறைகளை பிறப்பித்து வருகின்றன.

அந்தவகையில் சண்டிகர் மாநில அரசு கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பிறப்பித்துள்ளது. அதன்படி பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்.

பொது இடங்களிலும், அதிக அளவு மக்கள் கூடும் இடங்களிலும் சமூக இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும். மாநிலத்திலுள்ள அனைத்து மக்களும் பூஸ்டர் தவணை கரோனா தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும். குழந்தைகள் உள்பட குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொண்டதை உறுதி செய்ய வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளது.
Read More

Wednesday, June 1, 2022

தமிழ்நாட்டில் ஒரே நாளில் 100ஐ கடந்த கரோனா பாதிப்பு

June 01, 2022 0
Another 139 people have been diagnosed with corona virus in Tamil Nadu in the last 24 hours.

The Department of Public Welfare has released the details of the corona affected data in Tamil Nadu. Of these, 139 new cases have been confirmed today. A maximum of 59 people have been diagnosed with the disease in Chennai.

Thus the total impact increased to 34,55,613. No new casualties were reported in the last 24 hours. The total death toll is 38,025. Another 52 people recovered from Corona in a single day and returned home.

This brings the total number of survivors so far to 34,16,959. In the last 24 hours, 14,066 people have been tested for corona. At present, 629 people are being treated, according to the Department of Public Welfare. தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 139 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட தரவுகள் அடங்கிய விவரங்களை மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ளது. அதில், இன்று புதிதாக 139 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 59 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இதனால் மொத்த பாதிப்பு 34,55,613-ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி புதிதாக உயிரிழப்பு எதுவும் பதிவாகவில்லை. இதனால் மொத்த உயிரிழப்பு 38,025 ஆக உள்ளது. கரோனாவிலிருந்து ஒரேநாளில் மேலும் 52 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதனால் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 34,16,959-ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 14,066 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது நிலவரப்படி 629 பேர் சிகிச்சையில் உள்ளனர் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.
Read More

Tuesday, May 24, 2022

அண்ணா பல்கலைக்கழகத்தில் 6 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி

May 24, 2022 0
6 students at Anna University, Chennai confirmed corona exposure *

Corona infection has been confirmed in 6 students of Anna University, Chennai.

Of the 40 students tested, 6 have been confirmed so far.

சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் 6 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி*

சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் 6 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

40 மாணவர்களை பரிசோதனை செய்ததில் இதுவரை 6 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
Read More

Thursday, May 19, 2022

தமிழகத்தில் கொரோனாவால் மேலும் 42 பேர் பாதிப்பு

May 19, 2022 0
தமிழகத்தில் இன்று புதிதாக 42 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: தமிழகத்தில் இன்று புதிதாக 42 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 34 லட்சத்து 54 ஆயிரத்து 764 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் இன்று யாரும் உயிரிழக்கவில்லை. இதனால் இதுவரை மொத்தம் 38 ஆயிரத்து 025 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்து உள்ளனர்.

தமிழகத்தில் இன்றைய நிலவரப்படி 322 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 41 பேர் ‘டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். இதுவரையில் 34 லட்சத்து 16 ஆயிரத்து 417 பேர் குணம் அடைந்து உள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 23 பேருக்கு தொற்று உறுதியாகியிருக்கிறது. செங்கல்பட்டில் 5 பேருக்கும், திருவள்ளுரில் 3 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
Read More

Monday, April 25, 2022

கர்நாடகாவில் மீண்டும் மாஸ்க் கட்டாயம்!

April 25, 2022 0
Read More

Friday, April 22, 2022

சென்னை ஐஐடி.,யில் மேலும் 25 பேருக்கு கோவிட்

April 22, 2022 0
சென்னை ஐஐடி

சென்னை ஐஐடி.,யில் ஏற்கனவே 30 பேருக்கு கோவிட் உறுதியான நிலையில் மேலும் 25 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து, அங்கு கோவிட்டால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 55 ஆனது.

அங்கு ஆய்வு செய்த பின்னர் சுகதார செயலர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், சென்னை ஐஐடி.,யில் கோவிட்டால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் லேசான அறிகுறி மட்டுமே உள்ளது.

சிலருக்கு தொண்டை வலியும், சிலருக்கு காய்ச்சல் மட்டுமே உள்ளது. நலமுடன் உள்ளனர். ஆக்சிஜன் அளவு 98,99 சதவீதம் உள்ளது. பரிசோதனை அதிகமாக்கி உள்ளோம். தற்போது, அங்கு 95 சதவீதம் பேர் மாஸ்க் அணிய துவங்கி உள்ளனர்.

தமிழகத்தில் கோவிட் பரிசோதனை படிப்படியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மருத்துவ வசதிகள் தயார் நிலையில் உள்ளன. தமிழகத்தில் கோவிட்டால் பாதிக்கப்பட்ட 286 பேரில் 17 பேர் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் 7 பேர் மட்டுமே ஆக்சிஜன் பிரிவிலும் 2 பேர் ஐசியு.,விலும் உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

Read More

Thursday, April 21, 2022

சென்னை ஐஐடியில் 12 மாணவர்களுக்கு கரோனா

April 21, 2022 0
சென்னை ஐஐடியில் 12 மாணவர்களுக்கு கரோனா

சென்னை ஐஐடியில் 12 மாணவர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாட்டில் தற்போது கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் பரிசோதனைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பாதிப்பு அதிகமுள்ள இடங்களில் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னை ஐஐடி நிறுவனத்தில் ஏற்கெனவே 3 மாணவர்களுக்கு கரோனா தொற்று உறுதியான நிலையில், மேலும் 9 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று உறுதியான 9 பேருக்கும் லேசான அறிகுறிகள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து சென்னை ஐஐடி வளாகத்தில் கரோனா பரிசோதனைகளை அதிகரிக்க சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.

கரோனா தடுப்பு நெறிமுறைகளை கடைப்பிடிக்கவும் முறையாக அங்கு கிருமிநாசினி தெளிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Read More

Monday, January 10, 2022

‛ஒமைக்ரானை தொடர்கிறது புதிய வகை கோவிட் ‛டெல்டாக்ரான்

January 10, 2022 0
உலகில் பல்வேறு நாடுகளிலும் பரவியுள்ள ஓமைக்ரானைத் தொடர்ந்து டெல்டாக்ரான் என்ற புதிய வகை கோவிட் சைப்ரஸ் நாட்டில் கண்டறியப்பட்டுள்ளது.

சீனாவின் வூஹான் மாகாணத்தில் கடந்த 2019ம் ஆண்டு பரவத் துவங்கிய கோவிட் 19 என்ற கொரோனா வைரஸ் உலகில் பல நாடுகளிலும் பரவியது. இதனால் உலகம் முழுவதும் லட்சக்கணக்கில் மக்கள் உயிரிழந்தனர். அதைத் தொடர்ந்து 2021ல் கோவிட்டின் இரண்டாவது அலை ஏற்பட்டது. அதில் கோவிட் 19, டெல்டா என்று உருமாற்றம் அடைந்தது

இதனால் இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் மிகவும் பாதிப்பு அடைந்தன. தற்போது 2022ல் கோவிட் வைரஸின் மூன்றாவது அலையில் ‛ஒமைக்ரான்' என்ற புதிய வகை கோவிட் பரவி வருகிறது. இதன் பரவல் டெல்டா வகை கோவிட்டை காட்டிலும் வேகமாக இருந்தாலும் இதுவரை பாதிப்பு குறைந்த அளவே உள்ளது. இந்நிலையில் சைப்ரஸ் நாட்டில் 'டெல்டாக்ரான்' என்ற புதிய வகை உருமாற்றம் அடைந்த கோவிட்டினை கண்டு பிடித்துள்ளனர். இது டெல்டா மரபு பின்னணியையும் ஒமைக்ரான் வகை கோவிட்டின் குணங்களை கொண்டுள்ளதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இருப்பினும் இதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆய்வாளர்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். டெல்டாக்ரானால் சைப்ரஸ் நாட்டில் இது வரை 25 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன
Read More

Sunday, January 9, 2022

5 வயதுக்குட்பட்ட குழந்தைகளிடம் கோவிட் அதிகரிப்பு

January 09, 2022 0
தடுப்பூசிக்கு தகுதி பெறாத வயதினர்களான 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் அமெரிக்காவில் கோவிட் வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்படுவது உயர்ந்து வருகிறது. இதனால் குழந்தைகளுடன் இருக்கும் பெற்றோர்கள், இளைஞர்கள் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொள்ளவும், முகக்கவசம் அணியவும் நோய் தடுப்பு மையம் அறிவுறுத்துகிறது. இது தொடர்பாக அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் கூறியிருப்பதாவது: டிசம்பரிலிருந்து நாடு முழுவதும் ஒமைக்ரான் வகை வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் சேர்க்கப்படும் குழந்தைகள் விகிதம் 1 லட்சத்திற்கு 2.5 ஆக இருந்தது, தற்போது ஒரு லட்சத்துக்கு நான்கு குழந்தைகள் என்ற அளவில் உள்ளது. இது முந்தைய புள்ளிவிவரங்களுடன் ஒப்பிடும் போது மிகவும் அதிகம். 12 முதல் 18 வயதினரில் 50 சதவீதத்துக்கும் அதிகமானோரும், 5 முதல் 11 வயதினரில் 16 சதவீதத்தினர் மட்டுமே தடுப்பூசி போட்டுள்ளனர்.

ஜார்ஜியா, கனெக்டிகட், டென்னசி, கலிபோர்னியா மற்றும் ஓரிகான் ஆகிய ஐந்து மாநிலங்களில் தான் கோவிட் கண்டறியப்பட்ட குழந்தைகள் அதிகம் மருத்துவமனைகளில் உள்ளனர். டெல்டா வகையுடன் ஒப்பிடும் போது ஒமைக்ரானில் நோய் பாதிப்பு குறைவாகவே உள்ளது. கோவிட் கண்டறியப்பட்ட குழந்தைகளில் பெரும்பாலானோர் வெவ்வேறு பிரச்னைகளுக்கு வந்தவர்கள். அவர்களுக்கு எடுக்கப்பட்ட சோதனைகளில் கோவிட் பாசிடிவ் முடிவுகள் கிடைத்துள்ளது. அவர்கள் கோவிட்டிற்காக மருத்துவமனையில் உள்ளார்கள் என கருதக் கூடாது. இவ்வாறு தெரிவித்துள்ளது
Read More

Wednesday, January 5, 2022

10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு!

January 05, 2022 0
10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு!

பொதுத் தேர்வுக்குச் செல்லும் மாணவர் கல்வி மற்றும் எதிர்கால நலன் கருதி தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஏதுவாக 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெறும்.

தமிழ்நாட்டில் கரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த புதிய கட்டுப்பாடுகளை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பிறப்பித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டிருக்கும் அறிக்கையில்..

தமிழ்நாட்டில், கரோனா நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் அரசு மற்றும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவுப்படி ஜனவரி 10 வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகிறது.

மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலைத் தொடர்ந்து, கரோனா நோய்த் தொற்றை கட்டுப்படுத்தத் தேவையான கட்டுப்பாடுகள் விதிக்கவும் மற்றும் அவசியம் ஏற்படின் குற்றவியல் நடைமுறைச் சட்டம், 1973, பிரிவு 144-ன் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளவும் மாநில அரசுகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், கரோனா நோய்த் தடுப்பு கட்டுப்பாடுகளை வலுப்படுத்தத் தவறினால் பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ள நிலையில், முதல்வர் தலைமையில் 4.1.2022 அன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

தமிழ்நாட்டில் கரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையிலும், பரவி வரும் உருமாறிய கொரோனா ஒமைக்ரான் வைரஸ் நோயைக் கருத்தில் கொண்டும் மற்றும் பொது மக்கள் நலன் கருதியும் பின்வரும் கட்டுப்பாடுகள் விதித்து உத்தரவிடப்படுகிறது.

பள்ளி, கல்லூரிகள் தொடர்பான கட்டுப்பாடுகள்..

1) மழலையர் காப்பகங்கள் தவிர, மழலையர் விளையாட்டுப் பள்ளிகள், நர்சரிப் பள்ளிகள் செயல்பட அனுமதி இல்லை.

2) அனைத்துப் பள்ளிகளிலும், 1ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் நடத்தத் தடை விதிக்கப்படுகிறது.

3) பொதுத் தேர்வுக்குச் செல்லும் மாணவர் கல்வி மற்றும் எதிர்கால நலன் மற்றும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஏதுவாக 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெறும்.

4) அரசு, தனியார் மருத்துவ மற்றும் துணை மருத்துவக் கல்லூரிகள் தவிர அனைத்துக் கல்லூரிகள், தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிலும் மாணாக்கர்கள் தேர்வு எழுதும் பொருட்டு ஜனவரி 20ஆம் தேதி வரை விடுப்பு அளிக்கப்படுகிறது. 5) பயிற்சி நிலையங்கள் செயல்படத் தடை விதிக்கப்படுகிறது.

6) பொருட்காட்சிகள் மற்றும் புத்தகக் கண்காட்சிகள் நடத்துவது தற்போது ஒத்திவைக்கப்படுகிறது.

7) திறந்த வெளி விளையாட்டு மைதானங்களில் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி விளையாட்டுப் போட்டிகள் நடத்த அனுமதிக்கப்படும்.

8) உள் விளையாட்டு அரங்குகளில் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி பயிற்சியும், 50 சதவீத பார்வையாளர்களுடன் விளையாட்டு போட்டிகள் நடத்தவும் அனுமதிக்கப்படும்.

9) அனைத்து உள் அரங்குகளில் நடத்தப்படும் கருத்தரங்கங்கள், இசை, நாடகம் போன்ற நிகழ்ச்சிகள் அதிகபட்சம் 50% பார்வையாளர்களுடன் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி நடத்த அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More

Tuesday, January 4, 2022

Omicron தொற்றினால் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் விவரம்! (04.01.2022)

January 04, 2022 0
Read More

Sunday, January 2, 2022

15-18 வயது மாணவர்களுக்கு தடுப்பூசி பள்ளிகளுக்கு அதிகாரி உத்தரவு

January 02, 2022 0
பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவியரில் 15 முதல் 18 வயது வரை உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் செய்ய வேண்டும் என்று சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அறிவுறுத்தியுள்ளார். ஒன்றிய அரசு 15 முதல் 18 வயதுக்குள்ளவர்களுக்கு தடுப்பூசி போட வேண்டும் என்று சமீபத்தில் வழிகாட்டி நெறிமுறையை வெளியிட்டது. இதையடுத்து சென்னை நகரில் இயங்கும் பள்ளிகளில் மாணவர்களுக்கு தடுப்பு ஊசி போடுவதற்கான ஏற்பாடுகளை அனைத்து தலைமை ஆசிரியர்கள், பள்ளி முதல்வர்கள் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மார்ஸ் தெரிவித்துள்ளார். அதில், கடந்த டிசம்பர் 31ம் தேதி அரசு வெளியிட்டுள்ள ஆணையின்படி, ஜனவரி 10ம் தேதி வரை ஒன்று முதல் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு பள்ளி விடுமுறை என அறிவித்துள்ளது. ஆகவே அந்த நாட்களில் எந்த ஒரு பள்ளியிலும் மேற்கண்ட வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தக் கூடாது. மேலும், 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்புகளில் படித்து வரும் மாணவ மாணவியருக்கு ஏற்கெனவே தமிழக அரசால் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வகுப்புகள் நடத்த வேண்டும். இது தவிர 15 வயது முதல் 18 வயது வரை உள்ள மாணவர்களுக்கு கொரோனா தடுப்பு ஊசி செலுத்துவதற்கு அரசு அனுமதி அளித்துள்ளது. அதற்காக மருத்துவப் பணியாளர்கள் தங்கள் பள்ளிகளுக்கு வரும் போது அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
Read More

Saturday, January 1, 2022

ஓமிக்ரான், டெல்மிக்ரானைத் தொடர்ந்து ஃப்ளோரொனா.. இஸ்ரேலில் கர்ப்பிணி பெண்ணுக்கு முதன்முறையாக கண்டுபிடிப்பு!!

January 01, 2022 0
உலகம் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸின் அடுத்தடுத்த உருமாற்றங்கள் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றன. சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் முதல் அலையை ஏற்படுத்தியது என்றால் அதன் பிறகு ஆல்பா, டெல்டா அடுத்தடுத்து அலைகளை ஏற்படுத்தின. இதனால் தான் கடந்த மாதம் தென் ஆப்பிரிக்காவில் ஓமிக்ரான் கொரோனா கண்டறியப்பட்ட போது, அதைக் கண்டு உலக நாடுகள் அஞ்சின.ஓமிக்ரான் அச்சமே இன்னும் முடியாத நிலையில், டெல்மிக்ரான் (Delmicron) என்ற புதிய உருமாறிய கொரோனா குறித்து அண்மையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்த நிலையில், இன்புளுயன்சா எனப்படும் குளிர் காய்ச்சலுடன் கொரோனா பாதிப்பும் சேர்ந்த ஃப்ளோரொனா என்னும் நோய் இஸ்ரேலில் முதன்முறையாக கண்டறியப்பட்டுள்ளது. டெல் அவிவ் நகரில் உள்ள மருத்துவனை ஒன்றில் பிரசவத்திற்காக சேர்க்கப்பட்ட பெண்ணுக்கு இரட்டை பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.இதில் கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால் இஸ்ரேலில் 50 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் 3வது டோஸ் எனப்படும் பூஸ்டர் டோஸ் போட்டுக்கொண்டவர்கள். 80 சதவீதத்திற்கும் அதிகமானோர் 2 டோஸ் செலுத்தியுள்ளனர். அங்கேயே இம்மாதிரியான புதுவிதமான தொற்றுகள் ஏற்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Read More

Tuesday, December 14, 2021

சென்னை வரும் பயணிகள் அனைவரும் கொரோனா சோதனைக்கு முன்பதிவு செய்வது கட்டாயம்!

December 14, 2021 0
அதிகம் பாதிப்பு உள்ள நாடுகளில் இருந்து சென்னை வரும் பயணிகள் அனைவரும் கொரோனா சோதனைக்கு முன்பதிவு செய்வது கட்டாயம்!

20ம் தேதி முதல் இந்த புதிய விதிமுறை அமலுக்கு வரும்.

விமான நிறுவனங்கள் பயணிகள் முன்பதிவு செய்து இருப்பதை உறுதி செய்ய அறிவுறுத்தல்.
Read More

Saturday, December 11, 2021

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு செல்பவர்கள் கவனத்திற்கு - கோயில் நிர்வாகம் புதிய உத்தரவு

December 11, 2021 0
கொரோனா 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் அனுமதி - கோயில் நிர்வாகம்.
Read More

Post Top Ad

Your Ad Spot