சென்னை ஐஐடி.,யில் ஏற்கனவே 30 பேருக்கு கோவிட் உறுதியான நிலையில் மேலும் 25 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து, அங்கு கோவிட்டால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 55 ஆனது.
அங்கு ஆய்வு செய்த பின்னர் சுகதார செயலர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், சென்னை ஐஐடி.,யில் கோவிட்டால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் லேசான அறிகுறி மட்டுமே உள்ளது.
சிலருக்கு தொண்டை வலியும், சிலருக்கு காய்ச்சல் மட்டுமே உள்ளது. நலமுடன் உள்ளனர். ஆக்சிஜன் அளவு 98,99 சதவீதம் உள்ளது. பரிசோதனை அதிகமாக்கி உள்ளோம். தற்போது, அங்கு 95 சதவீதம் பேர் மாஸ்க் அணிய துவங்கி உள்ளனர்.
தமிழகத்தில் கோவிட் பரிசோதனை படிப்படியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மருத்துவ வசதிகள் தயார் நிலையில் உள்ளன. தமிழகத்தில் கோவிட்டால் பாதிக்கப்பட்ட 286 பேரில் 17 பேர் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் 7 பேர் மட்டுமே ஆக்சிஜன் பிரிவிலும் 2 பேர் ஐசியு.,விலும் உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:
Post a Comment