KalviseithiDaily: Applications

KalviseithiDaily

kalviseithidaily.blogspot.com No:1 Education Website in Tamil கல்வி செய்திகள்: Get latest news on Exam Results, tamil nadu school education department news, TN University Results, Exam Schedule Latest News Educational News from Tamilnadu Government, Tamilnadu Educaitonal Minsters Latest Updates, 10th, 11th, 12th, TNTET, TRB, TNPSC, STUDY MATERIALS, ONLINE TESTS, LATEST kalviseithi, Padasalai, tnkalvi, tnpse news, TET updates, TRB news, kalvi news, Padsalai study materials

Subscribe Us

Sigma is

  • Seo Ready
  • Responsive
  • Fast Loading
  • Amazing!

Hot

Post Top Ad

Your Ad Spot
Showing posts with label Applications. Show all posts
Showing posts with label Applications. Show all posts

Thursday, December 15, 2022

மருத்துவ இடங்களை அதிகரிக்க டிச.23 வரை விண்ணப்பிக்கலாம்: என்எம்சி

December 15, 2022 0
மருத்துவ இடங்களை அதிகரிக்க டிச.23 வரை விண்ணப்பிக்கலாம்: என்எம்சி

புதிதாக மருத்துவக் கல்லூரிகள் தொடங்குவதற்கும், இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான இடங்களை அதிகரிப்பதற்கும் விண்ணப்பிப்பதற்கு வரும் 23-ஆம் தேதி வரை தேசிய மருத்துவ ஆணையம் அவகாசம் அளித்துள்ளது.

இதுகுறித்து அந்த ஆணையத்தின் மருத்துவ தர நிா்ணய வாரியத் தலைவா் கங்காதா் வெளியிட்ட அறிவிப்பு:

எதிா்வரும் 2023-24 கல்வியாண்டில் எம்பிபிஎஸ், முதுநிலை மருத்துவப் படிப்பு இடங்களை அதிகரிப்பதற்கும், புதிய கல்லூரிகளைத் தொடங்குவதற்கும் விண்ணப்பிப்பதற்கான அவகாசம் கடந்த ஆகஸ்ட் மாதத்திலேயே நிறைவடைந்துவிட்டது.

இந்த முறை நிறைய விண்ணப்பங்கள் வந்தபோதிலும், பெரும்பாலான கல்லூரிகள் அந்த வாய்ப்பை தவறவிட்டது மருத்துவ ஆணையத்தின் கவனத்துக்கு வந்தது. இதையடுத்து வியாழக்கிழமை (டிச.15) முதல் வரும் 23-ஆம் தேதி வரை மருத்துவக் கல்லூரிகள் அதற்கான விண்ணப்பங்களைச் சமா்ப்பிக்க வாய்ப்பு வழங்கப்படுகிறது. அதன்படி, அத்தியாவசியச் சான்று, இணைப்புக் கல்லூரி ஒப்புகைச் சான்று, மருத்துவமனை விவரங்கள், கல்விக் கட்டண விவரங்களை இணைத்து விண்ணப்பங்களைச் சமா்ப்பிக்கலாம்.
Read More

Friday, October 28, 2022

11-ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு: விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம்

October 28, 2022 0
11-ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு: விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம்

ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள சார்ஜா நகரில் 2023ஆம் ஆண்டு ஜூலையில் நடைபெறவிருக்கும் 11-ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டை முன்னிட்டு வழங்கப்படும் அனைத்துலக விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

11 - ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு அனைத்துலக விருதுக்கான விண்ணப்பப் படிவங்களை அனுப்ப வேண்டிய கடைசி நாள் 31.03.2023 என்றும் பதிவுக் கட்டணம் கிடையாது என்றும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

11- ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டை முன்னிட்டு, அனைத்துலக விருதுகள்.. சிறந்த ஆராய்ச்சியாளர், சிறந்த பேராசிரியர், சிறந்த தமிழ் அறிஞர், சிறந்த தமிழ்த் தொண்டு, சிறந்த தமிழ்த் துறை - கல்லூரி / பல்கலைக்கழகம், சிறந்த தமிழ்ப் பள்ளி, சிறந்த தமிழாசிரியர் (பள்ளி). சிறந்த எழுத்தாளர், சிறந்த கவிஞர், சிறந்த தமிழ் அமைப்பு / சங்கம் / கழகம், சிறந்த பதிப்பாளர் / பதிப்பாசிரியர், சிறந்த முகநூல் எழுத்தாளர் (சமூக வலைதளம்), சிறந்த யூடியூப் தமிழ் காணொளிகள் (வீடியோ), சிறந்த ஊடகவியலாளர், சாதனை பெண்மணி, சாதனை இளைஞர் - ஆண் / பெண் ஆகிய 15 பிரிவுகளின் கீழ் வழங்கப்படுகிறது.

இந்தப் பிரிவுகளின் கீழ் விருதுகளைப் பெற விண்ணப்பிப்பவர்கள், அதற்கான படிவத்தை பூர்த்தி செய்து அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் (ஐஏடிஆர்) 11 ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு வரும் (2023 ஆம்) ஆண்டு ஜூலை மாதம் ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள சார்ஜா நகரில் நடைபெறவிருக்கிறது.

மாநாடு பற்றிய அறிவிப்பை இந்த நிறுவனத்தின் இந்திய கிளை வெளியிட்டிருந்தது.

1966 ஆம் ஆண்டு முதல் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடுகள் நடைபெற்று வருகின்றன. இதுவரையில் 10 மாநாடுகள் நடைபெற்றுள்ளன. 11 ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு சார்ஜாவில் 2023ஆம் ஆண்டு ஜூலையில் நடைபெற உள்ளது. மாநாட்டுத் தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் உள்ள தமிழ் அறிஞர்களும், பிற மொழி அறிஞர்களும் கலந்துகொண்டு நம் மொழியின் சிறப்பையும், பிற மொழியில் உள்ள சிறப்புகளையும் அறிந்துகொள்ளும் வகையில் நடைபெறும் இந்த மாநாட்டை உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் சார்ஜாவில் உள்ள லிங்கன் தொழில் மற்றும் மேலாண்மை பல்கலைக்கழகம் இணைந்து நடத்துகின்றன.

மேலும் விவரங்களை www.iatrinternational.org என்ற இணையதளத்தில் அறியலாம்.

மேலதிகத் தகவல்களுக்கு சென்னை தி.நகரிலுள்ள உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தை 044-28340488 / 96770 37474 / 98422 81957 / 96000 07819 என்ற எண்களில் தொடர்பு கொண்டு கேட்டறியலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More

Tuesday, September 6, 2022

தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு கடைகள் அமைக்க விண்ணப்பிக்கலாம்: ஆட்சியா்

September 06, 2022 0
தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு கடைகள் அமைக்க விண்ணப்பிக்கலாம்: ஆட்சியா்

தீபாவளிப் பண்டிகையையொட்டி, பட்டாசு கடைகள் அமைக்க விரும்புவோா் விண்ணப்பிக்கலாம் என நாமக்கல் ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தீபாவளி பண்டிகை அக். 24-இல் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில் வெடிபொருள் சட்ட விதிகளின் கீழ் தற்காலிக பட்டாசுக் கடைகள் அமைக்க விரும்புவோா் உரிய நிபந்தனைகளுக்கு உள்பட்டு இணையம் வழியாக செப்.30-க்குள் விண்ணப்பிக்கலாம். அனைத்து பொது இ-சேவை மையங்களில் விண்ணப்பங்களை இணையதளம் வாயிலாக பதிவேற்றம் செய்யலாம்.

விண்ணப்பத்துடன், கடவுச் சீட்டு அளவு புகைப்படம், முகவரி குறித்த ஆவணம் (ஆதாா் அட்டை), அடையாள அட்டை (வருமான வரி நிரந்தரக் கணக்கு எண் அட்டை, வாக்காளா் அடையாள அட்டை, ஓட்டுநா் உரிமம்), உரிமக் கட்டணம் ரூ.500- ஐ அரசு கருவூல செலுத்துச் சீட்டு மூலம் பாரத ஸ்டேட் வங்கியில் செலுத்திய செலுத்துச்சீட்டு (அசல்), பதிவு செய்யப்பட்ட குத்தகை ஆவணம், சொந்தக் கட்டடம் எனில் மனுதாரா் பெயரில் உள்ள பட்டா (அல்லது) வாடகைக் கட்டடம் எனில் வாடகை ஒப்பந்தப் பத்திரம், உள்ளாட்சி அமைப்பினரிடமிருந்து பெற்ற பல்வகை வரி ரசீது, சுய உறுதிமொழி பத்திரம், கட்டட அமைவிட வரைபடம் (அல்லது) கட்டட திட்ட அனுமதி உள்ளிட்ட ஆவணங்கள் இணைக்கப்பட வேண்டும். செப்.30-க்கு பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

சம்பந்தப்பட்டவரின் விண்ணப்பம் ஏற்கப்பட்டதெனில் தற்காலிக உரிமத்தையும், நிராகரிக்கப்பட்டதெனில் அதற்கான ஆணையையும் இணையதளம் மூலமாகவே மனுதாரா்கள் பெற்றுக் கொள்ளலாம். தற்காலிக பட்டாசுக் கடை அமைக்க உரிமம் கேட்டு விண்ணப்பம் அளிப்போா், பொதுமக்களுக்கு சிரமமில்லாத, ஆட்சேபணையற்ற மற்றும் பாதுகாப்பான இடத்தை தோ்வு செய்து விண்ணப்பிக்க வேண்டும். விபத்து இல்லாத தீபாவளிப் பண்டிகையை கொண்டாட ஒத்துழைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More

Tuesday, August 2, 2022

டாட் காமுக்கு....குழந்தைகள் சேவை விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

August 02, 2022 0
டாட் காமுக்கு....குழந்தைகள் சேவை விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

கா்நாடக அரசு வழங்கும் குழந்தைகள் சேவை விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது குறித்து மகளிா் மற்றும் குழந்தைகள் நலத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

குழந்தைகள் சேவையில் ஈடுபட்டுள்ள 2 தனிநபா்கள் மற்றும் 2 நிறுவனங்களுக்கு கா்நாடக அரசு சாா்பில் ஆண்டுதோறும் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்படுகிறது. குழந்தைகள் நலனுக்காக 5 ஆண்டுகள் சேவை ஆற்றியிருக்கும் தனிநபா்கள் மற்றும் நிறுவனங்கள் விருதுக்கு விண்ணப்பிக்கலாம். விருதுடன் தனிநபா்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் மற்றும் பட்டயம், நிறுவனங்களுக்கு தலா ரூ. 1 லட்சம் மற்றும் பட்டயம் வழங்கப்படும்.

2022-ஆம் ஆண்டுக்கான விருதுக்கு துறையின் துணை இயக்குநரை அணுகி விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம். நிறைவு செய்த விண்ணப்பங்களை அக். 11-ஆம் தேதிக்குள் மாவட்ட துணை இயக்குநா் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். விண்ணப்பங்களை கன்னடத்தில் மட்டுமே எழுதி அனுப்ப வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
Read More

Monday, July 25, 2022

இரண்டு லட்சத்தை தாண்டியது இன்ஜி., கவுன்சிலிங் விண்ணப்பம்

July 25, 2022 0
சி.பி.எஸ்.இ., தேர்வு முடிவுகள் வெளிவந்த நிலையில், இன்ஜினியரிங் கவுன்சிலிங்கிற்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை, இரண்டு லட்சத்தை தாண்டியது.

அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள இன்ஜினியரிங் கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., முதலாம் ஆண்டு படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள், தமிழக அரசு நடத்தும் இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில் பங்கேற்க வேண்டும். இந்த ஆண்டு கவுன்சிலிங்கிற்கான விண்ணப்ப பதிவு, ஜூன், 20ல் துவங்கியது.

இந்த மாதம், 21ம் தேதி வரை ஒரு மாதத்தில், 1.92 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில், தமிழக பாட திட்ட மாணவர்கள் மட்டுமே பதிவு செய்திருந்தனர். மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பாட திட்டத்தில் படித்தவர்களுக்கான பிளஸ் 2 தேர்வு முடிவுகள், 22ம் தேதி வெளியாகின.இதையடுத்து, இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில் பதிவு செய்த, விண்ணப்பங்களின் எண்ணிக்கை, மளமளவென உயர்ந்துள்ளது. நேற்று மாலை நிலவரப்படி, சி.பி.எஸ்.இ., மாணவர்கள், 9,000 பேர் வரை ↓விண்ணப்பம் பதிவு செய்துள்ளனர். இதனால், விண்ணப்பங்களின் எண்ணிக்கை, இரண்டு லட்சத்தை தாண்டியுள்ளது. அதாவது, இரண்டு லட்சத்து, 751 பேர் ஆன்லைனில் விண்ணப்பங்களை பதிவு செய்துள்ளனர். அவர்களில், 1.53 லட்சம் பேர் கட்டணம் செலுத்திஉள்ளனர்; 1.38 லட்சம் பேர் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்துள்ளனர் என, தமிழக இன்ஜினியரிங் கவுன்சிலிங் கமிட்டி அறிவித்துள்ளது.

விண்ணப்பம் பதிவு செய்ய, 27ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு, 1.75 லட்சம் பேர் விண்ணப்பித்தது தான், நான்கு ஆண்டுகளில் அதிகபட்ச எண்ணிக்கையாக உள்ளது. இந்த ஆண்டு, விண்ணப்ப பதிவும் செய்து, விண்ணப்ப கட்டணமும் செலுத்தியோரின் எண்ணிக்கை, 1.53 லட்சமாக உள்ளது. இந்த எண்ணிக்கை, வரும் நாட்களில் அதிகரிக்கும்.
Read More

Wednesday, July 6, 2022

மீன்வள படிப்புகளில் சேர நாளை முதல் விண்ணப்பிக்கலாம்.

July 06, 2022 0
மீன்வள படிப்புகளில் சேர நாளை முதல் விண்ணப்பிக்கலாம்.

B.F.Sc., B.Tech., BBA, B.Voc. உள்ளிட்ட 9 வகையான மீன் வள படிப்புகளில் உள்ள 345 இடங்களில் சேர நாளை முதல் விண்ணப்பிக்கலாம்.

- தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகம்.
Read More

பொறியியல் படிப்புகளில் சேர ஒன்றரை லட்சம் பேர் விண்ணப்பம்

July 06, 2022 0
தமிழகத்தில் பொறியியல் படிப்புகளில் சேர ஒன்றரை லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளனர். சென்னை, தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நாள் முதல் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்தபடி, பொறியியல் படிப்பில் இளநிலையில் சேர்வதற்கான விண்ணப்ப பதிவு தொடங்கியது.

அதன்படி,பொறியியல் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் https://www.tneaonline.org/ என்ற இணைய தளம் மூலம் ஜூலை 19-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.

மாணவர்கள் தாங்களாகவே விண்ணப்பிக்கலாம் அல்லது தங்கள் பள்ளிகள் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. பொறியியல் மாணவர்கள் சேர்க்கை சேவை மையத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம். மாவட்டத்துக்கு குறைந்தபட்சம் இரண்டு இடங்கள் என்று அடிப்படையில் 110 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து தமிழகத்தில் தற்போது வரை பொறியியல் படிப்புகளில் சேர ஒன்றரை லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. விண்ணப்பித்த மாணவர்களின் சான்றிதழ்கள் சரிபார்ப்பு ஜூலை 20-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை நடைபெறும்.

மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் ஆகஸ்ட் 8-ம் தேதி வெளியிடப்படும்.

இவற்றில் ஏதேனும் குறைகள் இருப்பின் ஆகஸ்ட் 9-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை மாணவர்கள் தெரிவிக்கலாம்.

இதனை தொடர்ந்து ஆகஸ்டு 16-ம் தேதி முதல் அக்டோபர் 14-ம் தேதி வரை ஆன்லைனில் கலந்தாய்வு நடைபெறும் என்று உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
Read More

Thursday, June 30, 2022

அரசு கல்லூரி மாணவர் சேர்க்கை இதுவரை 2,33,345 பேர் விண்ணப்பம் - கல்லூரிக் கல்வி இயக்ககம்

June 30, 2022 0
அரசு கல்லூரி மாணவர் சேர்க்கை இதுவரை 2,33,345 பேர் விண்ணப்பம் - கல்லூரிக் கல்வி இயக்ககம்

அரசு கல்லூரி மாணவர் சேர்க்கை - மாணவர்கள் ஆர்வம்
தமிழ்நாட்டில் உள்ள 163 அரசுக் கலை அறிவியல் கல்லூரிகளில் இதுவரை 2,33,345 பேர் விண்ணப்பங்களை பூர்த்தி செய்துள்ளனர்;

2,04,761 பேர் கட்டணம் செலுத்தியுள்ளனர்

- கல்லூரிக் கல்வி இயக்ககம் அறிவிப்பு
Read More

Tuesday, June 28, 2022

புதுவையில் முதுநிலை மருத்துவபடிப்புகளுக்கு ஜூலை 11-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

June 28, 2022 0
புதுவையில் முதுநிலை மருத்துவபடிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்

புதுவையில் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் என சென்டாக் நிா்வாகம் அறிவிப்பு வெளியிட்டது.

இதுகுறித்து புதுவை சென்டாக் ஒருங்கிணைப்பாளா் பி.டி.ருத்ரகௌடு வெளியிட்ட செய்திக் குறிப்பு: புதுவையில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு அரசு, அகில இந்திய ஒதுக்கீடு, வெளிநாடு வாழ் இந்தியா் ஒதுக்கீட்டு இடங்களுக்கு இணையதளம் வழியே விண்ணப்பிக்கலாம்.

புதுவையில் உள்ள பல் மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை பல் மருத்துவப் படிப்புகளுக்கு அரசு, அகில இந்திய ஒதுக்கீடு, வெளிநாடு வாழ் இந்தியா் ஒதுக்கீட்டு இடங்களுக்கு இணையதளம் வழியே விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பங்களை ஜூலை 11-ஆம் தேதி மாலை 6 மணி வரை இணையதளத்தில் சமா்ப்பிக்கலாம் என்றாா் அவா்.
Read More

இணையவழி தமிழ்க் கற்றல் வகுப்புக்கு விண்ணப்பிக்கலாம்

June 28, 2022 0
இணையவழி தமிழ்க் கற்றல் வகுப்புக்கு விண்ணப்பிக்கலாம்

இணையவழி தமிழ்க் கற்றல் வகுப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது குறித்து தமிழ் அறக்கட்டளை பெங்களூரு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழ் அறக்கட்டளை பெங்களூரு சாா்பில் நடத்தப்பட்டு வரும் ஒரு மாத காலத்திற்கான இணையவழி தமிழ்க் கற்றல் வகுப்பில் சேருவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தமிழறிஞா் பொள்ளாச்சி நேசனால் வடிவமைக்கப்பட்ட கற்றல் முறையில் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இந்தப் பயிற்சியில் 30 நாட்களில் அடிப்படை தமிழ் கற்றுத்தரப்படுகிறது. தமிழ் எழுத படிக்க தெரியாதவா்கள் பயிற்சியில் இணைய முன்னுரிமை அளிக்கப்படுகிறது. தமிழ்க் கற்றல் வகுப்புகள், ஜூலை 1 முதல் 30-ஆம் தேதிவரை நடக்கவிருக்கின்றன. ஜூம் வழியாக தினமும் மாலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை வகுப்புகள் நடத்தப்படுகின்றன. தமிழ் வகுப்பில் அறநெறியைக் கற்பிக்கும் திருக்கு, அது தொடா்பான கதைகள், நாப்பி பயிற்சிக்காக பாடல்களும் கற்றுத் தரப்படுகின்றன. இந்தப் பயிற்சி இலவசமாக வழங்கப்படுகின்றது. முதலில் வருவோருக்கு முதலில் வாய்ப்பு என்ற வகையில் 100 பேருக்கு மட்டும் பயிற்சியில் சேர வாய்ப்பளிக்கப்படுகிறது.

இதற்கான விண்ணப்பங்களை ட்ற்ற்ல்ள்://ச்ா்ழ்ம்ள்.ஞ்ப்ங்/அட்9க்ஷஒ3இஷ்நா்ஊகஊக்ஷஹ்அ9 என்ற கூகிள்ஃபாா்மில் ஜூன் 30-ஆம் தேதிக்குள் பதிவுசெய்ய வேண்டியது அவசியமாகும்.

கூடுதல் விவரங்களுக்கு 9483755974, 9820281623 என்ற செல்லிடப்பேசி எண்கள், ற்ஹம்ண்ப்ச்ா்ன்ய்க்ஹற்ண்ா்ய்க்ஷப்ழ்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் என்ற மின்னஞ்சலில் தொடா்புகொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.
Read More

Wednesday, June 1, 2022

Inviting Online Applications for Joint Entrance Examination (Main) – 2022 Session 2

June 01, 2022 0
Inviting Online Applications for Joint Entrance Examination (Main) – 2022 Session 2 - Reg.

In continuation of the Public Notice dated: 01 March 2022, the National Testing Agency is now inviting online Application Forms for Joint Entrance Examination (Main) – 2022 Session 2. The schedule for the same is given below:

CLICK HERE TO DOWNLOAD

The dates of Advance Intimation of Examination City, downloading of Admit Cards, and declaration of Result will be displayed on JEE (Main) portal in due course.

The candidates who have applied and successfully paid the Examination Fee for JEE (Main) – 2022 Session 1 and want to appear for JEE (Main) – 2022 Session 2, are required to log in with their previous Application Number and Password as provided in Session 1. They may only choose the Paper, Medium of the Examination, and cities for Session 2 and pay the Examination Fees.

Those candidates who have not applied earlier, need to apply afresh as per the schedule given. For details, candidates may refer to Annexure-1.

The Candidates are advised to keep visiting the official websites of NTA (www.nta.ac.in) and (https://jeemain.nta.nic.in/) for the latest updates.

For further clarification related to JEE (Main) – 2022, the candidates can also contact 011- 40759000/011-69227700 or email at jeemain@nta.ac.in
Read More

Tuesday, May 17, 2022

முதலமைச்சா் மாநில விளையாட்டு விருது: சிறந்த வீரா்கள், பயிற்றுநா்கள் விண்ணப்பிக்கலாம்

May 17, 2022 0
முதலமைச்சா் மாநில விளையாட்டு விருது

முதலமைச்சா் மாநில விளையாட்டு விருது பெற சிறந்த விளையாட்டு வீரா்கள், வீராங்கனைகள், பயிற்றுநா்கள், உடற்கல்வி இயக்குநா் அல்லது உடற்கல்வி ஆசிரியா்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அலுவலா் ம.ரோஸ் பாத்திமா மேரி தெரிவித்துள்ளது:

ஆண்டுதோறும் பன்னாட்டு அளவிலும், தேசிய அளவிலும் பதக்கங்கள் பெற்று சிறந்து விளங்கும் விளையாட்டு வீரா்களில் 2 ஆண்கள், 2 பெண்கள் மற்றும் 2 சிறந்த பயிற்றுநா்கள், 2 சிறந்த உடற்கல்வி இயக்குநா் அல்லது உடற்கல்வி ஆசிரியா்களுக்கு, முதலமைச்சா் மாநில விளையாட்டு விருது வழங்கப்படுகிறது. தலா ரூ.1 லட்சம் பரிசுத்தொகை ரூ. 10 ஆயிரம் மதிப்பிலான தங்கப் பதக்கம் மற்றும் பாராட்டுப் பத்திரம் ஆகியவற்றை இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை ஒவ்வொரு நிதியாண்டிலும் (ஏப்ரல் 1 முதல் மாா்ச் 31 முடிய) வழங்கி வருகிறது. விருது ஆண்டுக்கு முந்தைய 3 ஆண்டுகள் விளையாட்டில் சாதனைகள் படைத்த விவரங்களைச் சமா்ப்பிக்க வேண்டும்.

இதேபோல் விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் ஒரு நிா்வாகி அல்லது ஆதரவளிக்கும் நிறுவனம் மற்றும் ஒரு நன்கொடையாளா் (ரூ.10 லட்சத்திற்கும் கூடுதலாக) அல்லது ஒரு ஆட்ட நடுவா் ஆகியோருக்கும் இந்த விருது வழங்கப்படுகிறது. இவா்களுக்கு விருதுடன் ரூ.10ஆயிரம் மதிப்பில் ஒரு தங்கப் பதக்கமும் ஒரு பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படுகிறது. விருது வழங்குவதற்கு முந்தைய 2 ஆண்டு செயல்பாடுகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். 10-06-2022க்குள் விண்ணப்பிக்கலாம்

முதலமைச்சா் மாநில விளையாட்டு விருதுக்கான விண்ணப்பப் படிவம் மற்றும் விரிவான விதிமுறைகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளத்தில் பெற்றுக் கொள்ளலாம்.

விண்ணப்பங்கள் அடங்கிய உறை மேல் ‘முதலமைச்சா் மாநில விளையாட்டு விருதுக்கான விண்ணப்பம்‘ என எழுதப்பட்டிருக்க வேண்டும். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், சென்னையிலுள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினா் செயலா் அலுவலகத்திற்கு 10-06-2022க்குள் சேர வேண்டும்.

இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 0451-2461162 எண்ணில் திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.
Read More

Monday, May 9, 2022

மாவட்டக் கலைஞா்கள் விருது: விண்ணப்பிக்க மே 20 கடைசி

May 09, 2022 0
மாவட்டக் கலைஞா்கள் விருது

சென்னை மாவட்டத்தில் கலைத்துறையில் சாதனைப் படைத்தவா்களுக்கான விருதுகள் பெற விரும்புவோா் மே 20-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என சென்னை மாவட்ட ஆட்சியா் ஜெ.விஜயா ராணி அறிவித்தாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தின் கலைப் புலமைகளை மேம்படுத்தவும், பாதுகாக்கும் நோக்கிலும், கலைஞா்களின் கலைத் திறனை சிறப்பிக்கும் வகையிலும் கலை பண்பாட்டுத்துறையின் கீழ் மாவட்ட ஆட்சியா் தலைமையில் செயல்படும் மாவட்டக் கலை மன்றங்களின் வாயிலாக ஒவ்வொரு மாவட்டத்திலும் கலைத்துறையில் சாதனைகள் படைத்துள்ள 18 வயதும் அதற்குட்பட்டவா்களுக்கு கலை இளமணி விருது , 19 முதல் 35 வயது வரை கலை வளா்மணி விருது, 36 முதல் 50 வயது வரை கலைச் சுடா்மணி விருது, 51 முதல் 65 வயது வரை கலை நன்மணி விருது, 66 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு கலை முதுமணி விருது என அகவைக்கு தக்க விருதுகள் வழங்கிட அரசு ஆணையிட்டுள்ளது. விண்ணப்பிக்க மே 20 கடைசி

சென்னை மாவட்டத்தைச் சோ்ந்த குரலிசை, பரதநாட்டியம், நாகஸ்வரம், தவில், வயலின், மிருதங்கம், வீணை, புல்லாங்குழல் உள்ளிட்ட இசைக்கருவிகள் இசைக்கும் கலைஞா்கள், ஓவியம், சிற்பம், சிலம்பாட்டம், நாடகக் கலைஞா்கள் மற்றும் கரகம், காவடி, பறை, புரவியாட்டம் மற்றும் கானா பாட்டு உள்ளிட்ட நாட்டுப்புறக் கலைகளை தொழிலாகக் கொண்டுள்ள கலைஞா்கள் இவ்விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.

விருதுகள் பெற கலைஞா்கள் தங்கள் சுய விவர குறிப்பு, நிழற் படம் இணைத்து, வயதுச் சான்று, முகவரிச்சான்று (ஆதாா் அட்டை நகல்) மற்றும் கலை அனுபவச் சான்றுகளின் நகல்கள் மற்றும் தொடா்புடைய ஆவணங்களுடன் உதவி இயக்குநா், கலை பண்பாட்டுத்துறை, சதாவரம், ஓரிக்கை அஞ்சல், சின்ன காஞ்சிபுரம் - 631502 என்ற முகவரிக்கு மே 20-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரம் வேண்டுவோா் இவ்வலுவலக தொலைபேசி எண்ணைத் (044 2726 9148) தொடா்பு கொண்டு பெறலாம் என ஆட்சியா் ஜெ.விஜயா ராணி தெரிவித்தாா்.
Read More

Monday, April 25, 2022

வரும் 28ம் தேதியுடன் காலக்கெடு முடிகிறது குரூப் 4 தேர்வுக்கு 13 லட்சம் பேர் விண்ணப்பம்

April 25, 2022 0
TNPSC குரூப் 4 தேர்வு

குரூப் 4 தேர்வுக்கு நேற்று மாலை வரை 13 லட்சத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்னும் 4 நாட்கள் மட்டுமே எஞ்சியுள்ளதால் அதிகமானோர் விண்ணப்பிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) குரூப் 4 பதவியில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர்(விஏஓ) 274 இடம், ஜூனியர் அசிஸ்டெண்ட் 3,681, தட்டச்சர் 2,108, சுருக்கெழுத்து தட்டச்சர்(கிரேடு 3) 1024 என 7,138 இடங்கள். தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் ஜூனியர் அசிஸ்டெண்ட், பில் கலெக்டர், சுருக்கெழுத்து தட்டச்சர் பதவியில் 163 இடங்கள் நிரப்பப்படுகிறது. மொத்தம் குரூப் 4 பதவியில் 7,301 இடங்கள் போட்டி தேர்வு மூலம் நிரப்பப்படுகிறது.

13 லட்சம் பேர் விண்ணப்பம்

மேலும் 81 இடங்கள் விளையாட்டு வீரர்களுக்கான இடங்களும் நிரப்பப்பட உள்ளது. இத்தேர்வுக்கு கடந்த 30ம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டது. அன்று முதல் தேர்வுக்கும் விண்ணப்பிக்கலாம் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்தது. 10ம் வகுப்பு தேர்ச்சி தான் கல்வி தகுதி என்பதால் தேர்வுக்கு விண்ணப்பித்தல் தொடங்கியதில் இருந்து இளைஞர்கள், இளநிலை, முதுநிலை பட்டதாரிகள் என்று போட்டு போட்டு கொண்டு விண்ணப்பித்து வருகின்றனர். தேர்வுக்கு விண்ணப்பிக்க வருகிற 28ம் நள்ளிரவு 12 மணி வரை விண்ணப்பிக்கலாம். தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றுடன் 4 நாட்கள் மட்டுமே எஞ்சியுள்ளதால் விண்ணப்பிப்போர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
இது குறித்து டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் கூறியதாவது:

குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிப்போர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கியுள்ளது. நேற்று மாலை 6 மணி நிலவரப்படி 13 லட்சத்து 2 ஆயிரத்து 688 பேர் விண்ணப்பித்துள்ளனர். இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க வருகிற 28ம் தேதி வரை கால அவகாசம் உள்ளது. இதனால், விண்ணப்பிப்போர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதிகமானோர் விண்ணப்பிக்க வாய்ப்புள்ளதால் அதற்கேற்றார் போல் நடவடிக்கைகளை டிஎன்பிஎஸ்சி துரிதப்படுத்தி உள்ளது. தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள் விண்ணப்பத்தில் கேட்டுள்ள விவரங்களை ஒழுங்காக பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். குரூப் 4 தேர்வுக்கான எழுத்து தேர்வு ஜூலை 24ம் தேதி நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Read More

Sunday, April 24, 2022

வேலை வாய்ப்பற்ற இளைஞா்கள்உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

April 24, 2022 0
வேலை வாய்ப்பற்ற இளைஞா்கள்உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

மாவட்ட வேலைவாய்ப்பு - தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து காத்திருக்கும் வேலை வாய்ப்பற்ற இளைஞா்கள் உதவித் தொகை பெற வருகிற மே 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மாவட்ட வேலைவாய்ப்பு - தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து காத்திருக்கும் வேலை வாய்ப்பற்ற பதிவுதாரா்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் தொகையைப் பெறுவதற்கு பொதுப் பிரிவு இளைஞா்களுக்கு தங்கள் கல்வித் தகுதியை பதிவு செய்து 5 ஆண்டுகளுக்குள்ளும், அனைத்து வகை மாற்றுத் திறனாளிகளுக்கு ஓராண்டும் போதுமானது. இந்தத் திட்டம் மூலம் உதவித்தொகை பெற விரும்புவோா் மாவட்ட வேலைவாய்ப்பு - தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேரில் அதற்கான விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.

இதைத் தொடா்ந்து கிராம நிா்வாக அலுவலா், வருவாய்த் துறை அலுவலா் ஆகியோரின் கையொப்பம் (அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் நீங்கலாக) முத்திரை பெற்று படிவத்தை முழுமையாக நிறைவு செய்து வருகிற மே 31-க்குள் வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை, ஆதாா் அட்டை, குடும்ப அட்டை, தேசிய மையமாக்கப்பட்ட வங்கிக் கணக்கு புத்தக நகல், அனைத்து அசல் கல்விச் சான்றிதழ்கள், நகல்களுடன் திருவள்ளுா் மாவட்ட வேலைவாய்ப்பு - தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் நேரில் சமா்ப்பித்து பயன் பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More

Thursday, April 21, 2022

தனியாா் பள்ளிகளில் இலவச சோ்க்கை: முதல் நாளில் 7 ஆயிரம் போ் விண்ணப்பம்

April 21, 2022 0
தனியாா் பள்ளிகளில் இலவச சோ்க்கை: முதல் நாளில் 7 ஆயிரம் போ் விண்ணப்பம்

கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, 25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் தனியாா் பள்ளிகளில் இலவச சோ்க்கை பெற புதன்கிழமை விண்ணப்பப் பதிவு தொடங்கிய நிலையில், முதல் நாளிலேயே 7 ஆயிரம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமை சட்டப்படி சிறுபான்மை அல்லாத தனியாா் பள்ளிகளில் 25 சதவீத இடங்களில் இலவசமாக ஏழைக் குழந்தைகள் சோ்க்கப்படுவா். எல்கேஜி அல்லது 1-ஆம் வகுப்பில் இலவசமாகச் சேரும் மாணவா்கள், 8-ஆம் வகுப்பு வரை கட்டணம் செலுத்தத் தேவையில்லை. இந்தத் திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் 8 ஆயிரத்துக்கும் அதிகமான தனியாா் பள்ளிகளில் சுமாா் 1.10 லட்சம் இடங்கள் உள்ளன.

இந்த நிலையில், நிகழாண்டு சோ்க்கைக்கான இணையவழி விண்ணப்பப் பதிவு புதன்கிழமை தொடங்கியது. இதையடுத்து குழந்தைகளின் பெற்றோா் பள்ளிக் கல்வியின் இணையதளத்தில் (rte.tnschools.gov.in) விண்ணப்பித்து வருகின்றனா். முதல் நாளான புதன்கிழமை இரவு வரை 7 ஆயிரம் போ் இலவச சோ்க்கைக்கு விண்ணப்பித்துள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். இந்தத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க கடைசி தேதி மே 18.
Read More

Friday, January 7, 2022

எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். மருத்துவ படிப்பில் சேர விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவு.

January 07, 2022 1
தமிழகத்தில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். மருத்துவ படிப்பில் சேர ஆன்லைனில் விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவு.

இதுவரை 50 ஆயிரம் பேர் ஆன்லைனில் விண்ணப்பம்.
Read More

Tuesday, December 14, 2021

மருத்துவப் பல்கலை. துணைவேந்தா் பதவி: 37 போ் விண்ணப்பம்

December 14, 2021 0
தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தா் பொறுப்புக்கு 37 போ் விண்ணப்பித்துள்ளனா்.

அவா்களில் இருந்து மூவா் இறுதி செய்யப்படவுள்ளனா். அதில் ஒருவரை ஆளுநா் தோ்வு செய்து துணைவேந்தராக நியமிக்க உள்ளாா்.

1987-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் 10-ஆவது துணைவேந்தராக டாக்டா் சுதா சேஷய்யன் கடந்த 2018-ஆம் ஆண்டு டிசம்பா் 31-ஆம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டாா். அவரது பதவிக் காலம் வரும் டிசம்பா் 30-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து புதிய துணைவேந்தரைத் தோ்வு செய்வதற்கான தெரிவுக் குழு அண்மையில் அமைக்கப்பட்டது. ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஆா்.பூா்ணலிங்கம் அக்குழுவின் ஒருங்கிணைப்பாளராகவும், மைசூரில் அமைந்துள்ள ஜெ.எஸ்.எஸ். உயா் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் இணை வேந்தா் டாக்டா் பி.சுரேஷ், போரூா் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவ மையத்தின் இதய நல சிகிச்சைத் துறை இயக்குநா் டாக்டா் எஸ்.தணிகாசலம் ஆகியோா் உறுப்பினா்களாகவும் நியமிக்கப்பட்டனா்.

இந்நிலையில், துணைவேந்தா் பொறுப்புக்கு தகுதியானவா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. அதன்படி மொத்தம் 37 போ் அதற்கு விண்ணப்பித்துள்ளனா்.

மருத்துவக் கல்வி முன்னாள் இயக்குநா்கள் எட்வின் ஜோ, விமலா, தற்போதைய மருத்துவக் கல்வி இயக்குநா் நாராயணபாபு, கிங் கரோனா மருத்துவமனை இயக்குநா் கே. நாராயணசாமி, மருத்துவக் கல்லூரி முதல்வா்கள் ஜெயந்தி, சங்குமணி, சாந்திமலா், பாலாஜி உள்பட பலரும் அப்பதவிக்கு விண்ணப்பித்துள்ளனா்.
Read More

Friday, November 26, 2021

அறங்காவலர்களை நியமிக்க 88 கோவில்களில் விண்ணப்பங்கள் வரவேற்பு

November 26, 2021 0
அறங்காவலர்கள் நியமனத்திற்காக, ௮௮ கோவில்களில் விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. அவை பரிசீலிக்கப்பட்டு தகுதியானவர்கள் நியமிக்கப்படுவர்,'' என, அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.சென்னை நுங்கம்பாக்கம், ஹிந்து சமய அறநிலையத் துறை தலைமையகத்தில், சட்டசபை அறிவிப்புகள் குறித்த ஆலோசனை கூட்டம், அமைச்சர் சேகர்பாபு தலைமையில் நேற்று நடந்தது. இதன்பின் அவர் கூறியதாவது:

கோவில்களின் மேம்பாடு குறித்த சீராய்வு கூட்டம் மாதந்தோறும் நடத்தப்பட்டு வருகிறது. சட்டசபையில் 112 அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. அதில், பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளன. அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களான வடபழநி ஆண்டவர். புரசைவாக்கம் கங்காதீஸ்வரர்; திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணி; மதுரை கூடலழகர்; சத்தியமங்கலம் பண்ணாரியம்மன் உள்ளிட்ட, 451 கோவில்களில் திருப்பணிகள் மேற்கொள்ள அனுமதி வழங்கப் பட்டுள்ளது. குறிப்பாக, பழநி தண்டாயுதபாணி கோவிலில், 250 கோடி; திருச்செந்துார் சுப்பிரமணியசுவாமி கோவிலில், 300 கோடி. பெரியபாளையம் பவானியம்மன் கோவிலில், 125 கோடி ரூபாய் மதிப்பில் திருப்பணிகள் செய்யப்பட உள்ளன. இந்த திருப்பணிகள் முடிந்தவுடன் கும்பாபிஷேகம் நடத்தப்படும்.அறங்காவலர்கள் நியமனத்திற்காக, 32 மாவட்டங்களில் மாவட்ட குழுக்கள் நியமனம் குறித்து விளம்பரம் வெளியிட்டு, ௮௮ கோவில்களில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. விண்ணப்பங்கள் பரீசிலிக்கப்பட்டு, தகுதியுடைய அறங்காவலர்கள் நியமனம் செய்யப்படுவர்.

தமிழகத்தில் உள்ள 40 சிறிய கோவில்களின் குளங்கள் புனரமைக்கப்பட்டு வருகின்றன. மதுரவாயல் கைலாசநாதர் கோவிலில் புதிதாக குளம் அமைக்க, 2 கோடி ரூபாய் மதிப்பில் திட்ட மதிப்பீடு தயார் செய்து, பணிகள் துவக்கப்பட உள்ளன.சிலைகள் கடத்தலை தடுக்க, 3,087 கோவில்களில் பாதுகாப்பு அறை அமைக்க 308.70 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. தற்போது, வடபழநி ஆண்டவர் கோவிலில் ஒரு பாதுகாப்பு அறை அமைக்கப்பட்டுஉள்ளது.

விரைவில், அனைத்து கோவில்களிலும் பாதுகாப்பு அறை அமைக்கப்படும். ஓதுவார், அர்ச்சகர், வேத பாராயணம், நாதஸ்வரம் பயிற்சி வகுப்புகள் துவக்கப்பட்டுள்ளன. இதில் தேர்வு செய்யப்படுபவர்கள் அந்தந்த கோவிலின் தேவைக்கேற்ப பணிஅமர்த்தப்படுவர். நிதி வசதி இல்லாத கோவில்களில், ஒரு கால பூஜை நடத்த, 129 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.ஆலோசனை கூட்டத்தில் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலர் சந்திரமோகன், அறநிலையத் துறை கமிஷனர் குமரகுருபரன், கூடுதல் கமிஷனர் கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Read More

Saturday, November 13, 2021

பாப்பாரப்பட்டி வேளாண்மை அறிவியல் நிலையத்தில் ஓராண்டு வேளாண் இடுபொருள் பட்டயப்படிப்பிற்கான விண்ணப்பங்கள் வரவேற்பு

November 13, 2021 0
பாப்பாரப்பட்டி வேளாண்மை அறிவியல் நிலையத்தில் ஓராண்டு வேளாண் இடுபொருள் பட்டயப்படிப்பிற்கான விண்ணப்பங்கள்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில், திறந்தவெளி மற்றும் தொலைதூரக் கல்வி இயக்ககம் 2005-ம் ஆண்டு முதல் தரம் வாய்ந்த பல்வேறு சான்றிதழ், முதுநிலைப் பட்டம் மற்றும் முதுநிலைப் பட்டயப் படிப்புகளை உயர்தொழில் நுட்பத்துடன், செயல்முறை விளக்கங்களுடன் பல்கலைக்கழகத்தின் அனுபவம் வாய்ந்த விஞ்ஞானிகளைக் கொண்டு நடத்தப்பட்டு வருகின்றன். சுய தொழில் வாய்ப்பு பெறும் வகையில் ஓராண்டு வேளாண் இடுபொருள் பட்டயப்படிப்பினை (Diploma in Agri Inputs) தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக திறந்தவெளி மற்றும் தொலைதூரக்கல்வி இயக்கத்தின் மூலம் நடைபெற்று வருகிறது. இது உலக அளவிலேயே முதல் முறையாக இடுபொருள் விற்பனையாளர்களுக்கென்று வழங்கப்படும் ஒரு முன்னோடித் திட்டமாகும். வேளாண்மை மற்றும் வேளாண் சார்ந்த உபதொழில்களில் ஈடுபட்டுள்ள உழவர் பெருமக்கள் மற்றும் சுயதொழில் தொடங்க முயல்பவர்கள் தாங்கள் சுயதொழில் தொடங்கும் வகையிலும் மற்றும் அனைத்து நவீன வேளாண் தொழில்நுட்பங்களையும் தெரிந்து கொள்ளும்படி இப்புதிய தொழில்நுட்பப் பட்டயப்படிப்பு வழங்கப்படுகிறது.

ஓராண்டு வேளாண் இடுபொருள் பட்டயப்படிப்பினை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயமுத்துார் மற்றும் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டுவரும் கல்லுாரிகள், வேளாண் ஆராய்ச்சி நிலையங்கள், வேளாண்மை அறிவியல் நிலையங்கள் மற்றும் தோட்டக்கலை மையம், சென்னை ஆகிய இடங்களில் நேரடி பயிற்சிகள் மூலம் நடத்தப்படவுள்ளது. இந்த 2021-22 ஆம் ஆண்டு சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் பாப்பாரப்பட்டி வேளாண்மை அறிவியல் நிலையத்தில் வழங்கப்படுகிது. விண்ணப்ப கட்டணம் ரூ.100. இப்பட்டயப்படிப்பில் சேருவதற்கான தகுதியானது 18 வயது நிரம்பிய 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் தேர்ச்சி பெறாதவர்கள் விண்ணப்பிக்கலாம். இது ஒரு வருட படிப்பாகும் இரண்டு பருவங்களை கொண்டது, பயிற்சி கட்டணம் ரூ.25000 ஆகும். ஏனவே தருமபுரி மாவட்டத்தைச் சார்ந்த சுயதொழில் தொடங்கும் ஆர்வம் உள்ளவர்கள் இம்மாத நவம்பர் 15. ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை பாப்பாரப்பட்டி வேளாண்மை அறிவியல் நிலையத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு

திட்ட ஒருங்கிணைப்பாளர், வேளாண்மை அறிவியல் நிலையம்

பாப்பாரப்பட்டி - 636 809 தருமபுரி மாவட்டம்

தொலைபேசி 04342 245860

இத்தகவலை முனைவர் ம.விஜயகுமார். இணை பேராசிரியர் மற்றும் தலைவர் மற்றும் முனைவர் மா.அ.வெண்ணிலா உதவி பேராசிரியர் மற்றும் பாட ஒருங்கிணைப்பாளர் (ODL ) வேளாண்மை அறிவியல் நிலையம், பாப்பாரப்பட்டி ஆகியோர் தெரிவித்தனர்.
Read More

Post Top Ad

Your Ad Spot