மருத்துவ இடங்களை அதிகரிக்க டிச.23 வரை விண்ணப்பிக்கலாம்: என்எம்சி

மருத்துவ இடங்களை அதிகரிக்க டிச.23 வரை விண்ணப்பிக்கலாம்: என்எம்சி

புதிதாக மருத்துவக் கல்லூரிகள் தொடங்குவதற்கும், இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான இடங்களை அதிகரிப்பதற்கும் விண்ணப்பிப்பதற்கு வரும் 23-ஆம் தேதி வரை தேசிய மருத்துவ ஆணையம் அவகாசம் அளித்துள்ளது.

இதுகுறித்து அந்த ஆணையத்தின் மருத்துவ தர நிா்ணய வாரியத் தலைவா் கங்காதா் வெளியிட்ட அறிவிப்பு:

எதிா்வரும் 2023-24 கல்வியாண்டில் எம்பிபிஎஸ், முதுநிலை மருத்துவப் படிப்பு இடங்களை அதிகரிப்பதற்கும், புதிய கல்லூரிகளைத் தொடங்குவதற்கும் விண்ணப்பிப்பதற்கான அவகாசம் கடந்த ஆகஸ்ட் மாதத்திலேயே நிறைவடைந்துவிட்டது.

இந்த முறை நிறைய விண்ணப்பங்கள் வந்தபோதிலும், பெரும்பாலான கல்லூரிகள் அந்த வாய்ப்பை தவறவிட்டது மருத்துவ ஆணையத்தின் கவனத்துக்கு வந்தது. இதையடுத்து வியாழக்கிழமை (டிச.15) முதல் வரும் 23-ஆம் தேதி வரை மருத்துவக் கல்லூரிகள் அதற்கான விண்ணப்பங்களைச் சமா்ப்பிக்க வாய்ப்பு வழங்கப்படுகிறது. அதன்படி, அத்தியாவசியச் சான்று, இணைப்புக் கல்லூரி ஒப்புகைச் சான்று, மருத்துவமனை விவரங்கள், கல்விக் கட்டண விவரங்களை இணைத்து விண்ணப்பங்களைச் சமா்ப்பிக்கலாம்.
Post a Comment (0)
Previous Post Next Post