KalviseithiDaily: Government Employees

KalviseithiDaily

kalviseithidaily.blogspot.com No:1 Education Website in Tamil கல்வி செய்திகள்: Get latest news on Exam Results, tamil nadu school education department news, TN University Results, Exam Schedule Latest News Educational News from Tamilnadu Government, Tamilnadu Educaitonal Minsters Latest Updates, 10th, 11th, 12th, TNTET, TRB, TNPSC, STUDY MATERIALS, ONLINE TESTS, LATEST kalviseithi, Padasalai, tnkalvi, tnpse news, TET updates, TRB news, kalvi news, Padsalai study materials

Subscribe Us

Sigma is

  • Seo Ready
  • Responsive
  • Fast Loading
  • Amazing!

Hot

Post Top Ad

Your Ad Spot
Showing posts with label Government Employees. Show all posts
Showing posts with label Government Employees. Show all posts

Monday, January 2, 2023

அகவிலைப்படி முரண்பாடுகளை களைய வலியுறுத்தல்

January 02, 2023 0
அகவிலைப்படி முரண்பாடுகளை களைய கூட்டுறவு சங்கம் வலியுறுத்தல்

'அரசு ஊழியர்களுக்கும் தங்களுக்கும் இடையே உள்ள அகவிலைப்படி முரண்பாட்டை களைய வேண்டும்' என, தமிழ்நாடு கூட்டுறவு பண்டகசாலை ஊழியர்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் வெங்கடாசலபதி வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:

அரசு ஊழியர்களுக்கு ஆங்கில புத்தாண்டு பரிசாக தமிழக அரசு 4 சதவீத அகவிலைப்படியை உயர்த்தியது வரவேற்கத்தக்கது.

அரசு ஊழியர்களுக்கு அவ்வப்போது உயர்த்தப்படும் அகவிலைப்படி உயர்வு கூட்டுறவு பண்டகசாலை அலுவலக பணியாளர்களுக்கும் ரேஷன் கடை பணியாளர்களுக்கும் பொருந்தும்.அரசு ஊழியர்கள், கடன் வழங்கும் கூட்டுறவு சங்கப் பணியாளர்கள் தற்போது 34 சதவீதம் அகவிலை பெற்றுவரும் நிலையில் அரசு அறிவித்துள்ள இந்த உயர்வால் 38 சதவீதம் அகவிலைப்படி அவர்களுக்கு கிடைக்கும்.

ஆனால் பொது வினியோக திட்டத்தை நடத்தும் தொடக்க கூட்டுறவு பண்டகசாலை அலுவலக பணியாளர்கள், ரேஷன் கடை பணியாளர்கள் தற்போது 31 சதவீதம் பெற்று வரும் நிலையில் இந்த உயர்வால் 35 சதவீதம் மட்டுமே அகவிலைப்படி பெற முடியும். கூட்டுறவுத் துறைக்குள் நிலவும் இந்த அகவிலைப்படி முரண்பாட்டை சரிசெய்து அனைவருக்கும் ஒரே மாதிரியாக 38 சதவீதமாக அகவிலைப்படி வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்
Read More

Monday, December 26, 2022

அரசு காலிப்பணியிடங்கள் குறித்து ஓ.பன்னீா்செல்வம் வெளியிட்ட அறிக்கை

December 26, 2022 0
அரசு காலிப்பணியிடங்கள் குறித்து விரிவான அறிக்கை தேவை: ஓபிஎஸ்

அரசு காலிப் பணியிடங்கள் குறித்து விரிவான அறிக்கையை தமிழக அரசு வெளியிட வேண்டும் என்று முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக திங்கள்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் 2023-ம் ஆண்டுக்கான புதிய அட்டவணையை வெளியிட்டதைத் தொடா்ந்து, காலிப் பணியிடங்களுக்கு ஏற்ப தோ்வு அட்டவணை அமையவில்லை என்பதைச் சுட்டிக்காட்டி 2023-ஆம் ஆண்டுக்கான அரசுப் பணித் தோ்வுகள் அட்டவணையை தற்போதுள்ள காலியிடங்களுக்கு ஏற்ப மாற்றியமைக்க வேண்டுமென்று நான் அறிக்கை வெளியிட்டு இருந்தேன்.

இதற்கு பதில் அளிக்கும் விதமாக அரசு வெளியிட்டுள்ள செய்தி வெளியீட்டில் பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டை பாக்கு விலை பத்து பைசா என்ற பழமொழிக்கேற்ப அமைந்துள்ளது. அரசுத் துறைகள், கல்வி நிலையங்களில் காலியாக உள்ள 3.5 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும் என்ற வாக்குறுதி குறித்து கேள்வி கேட்டால், தனியாா் நிறுவனங்களில் 1,063 முகாம்கள் மூலம் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது. அரசைப் பொருத்தவரையில் அரசுத் துறைகளிலும், கல்வி நிலையங்களிலும் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதுதான் அதன் முதல் கடமை. தனியாா் நிறுவனங்களில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டதாக கூறுவது அரசின் திறமையின்மையை எடுத்துரைக்கும் விதமாக அமைந்துள்ளது.

எனவே, முதல்வா் மு.க.ஸ்டாலின் எத்தனை அரசுப் பணியிடங்கள் காலியாக உள்ளன என்பது குறித்தும், திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, கடந்த ஒன்றரை ஆண்டுகளில் எத்தனை காலிப் பணியிடங்கள் பல்வேறு அரசு முகமைகள் மூலம் நிரப்பப்பட்டுள்ளன என்பது விரிவான அறிக்கையை வெளியிட வேண்டும் என்று கூறியுள்ளாா்.
Read More

Saturday, October 29, 2022

10 ஆண்டுகள் பணி முடித்தவர்களுக்கு அரசு பணி நிரந்தரம் வழங்க வலியுறுத்தல்

October 29, 2022 0
10 ஆண்டுகள் பணி முடித்தவர்களுக்கு அரசு பணி நிரந்தரம் வழங்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

தமிழ்நாடு அரசின் பொதுப்பணித்துறையில் பத்தாண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் தற்காலிக பணியாளர்கள் 6 பேரை பணி நிரந்தரம் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டிருக்கிறது. தற்காலிக பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய தமிழக அரசு மறுத்த நிலையில், அதை நிராகரித்து அவர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் சமூக நீதி வழங்கியிருப்பது மிகவும் வரவேற்கத்தக்கதாகும்

இதுதொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொதுப்பணித்துறையில் 1996-98 முதல் 24-26 ஆண்டுகளாக தற்காலிக மஸ்தூர் தொழிலாளர்களாக பணியாற்றி வந்த 6 பேர் தங்களுக்கு பணி நிரந்தரம் வழங்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். அவர்களின் மனுவை ஒற்றை நீதிபதி தள்ளுபடி செய்து விட்ட நிலையில், அதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு விசாரித்த இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு, மனுதாரர்கள் 6 பேரும் 10 ஆண்டுகளுக்கு மேலாக தற்காலிக பணியாளர்களாக பணியாற்றியிருப்பதால் அவர்கள் எந்த தேதியில் பத்தாண்டுகளை நிறைவு செய்தார்களோ, அந்த நாளில் இருந்து அவர்களுக்கு பணி நிரந்தரம் வழங்க வேண்டும் என்று ஆணையிட்டுள்ளது. அதுமட்டுமின்றி, அவர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்ட நாளில் இருந்து அதற்கான அனைத்து பயன்களையும் வழங்கவும் ஆணையிட்டுள்ளது.

28.02.2006 அன்று வெளியிடப்பட்ட பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறையின் அரசாணை எண் 22-இன் படி 01.01.2006 அன்று பத்தாண்டுகள் தற்காலிக பணி முடித்திருந்தவர்களுக்கு மட்டும் தான் பணி நிரந்தரம் வழங்க முடியும்; மனுதாரர்கள் 6 பேரும் அந்த தேதியில் பத்தாண்டு பணியை நிறைவு செய்யவில்லை என்பதால் அவர்களுக்கு பணி நிரந்தரம் வழங்க முடியாது என்று தமிழ்நாடு அரசின் சார்பில் வாதிடப்பட்டது. ஆனால், அதை ஏற்க மறுத்து விட்ட நீதிபதிகள், 6 பணியாளர்களும் 10 ஆண்டுகளுக்கும் கூடுதலாக தற்காலிக பணியாளர்களாக பணியாற்றியுள்ளனர் என்பதை மட்டும் கருத்தில் கொண்டு அவர்களுக்கு பணி நிரந்தரம் வழங்கியுள்ளனர். இது மனிதநேயமிக்க தீர்ப்பாகும்.

சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு எந்த அடிப்படையில் வழங்கப்பட்டதோ, அதை அடிப்படையில் தமிழக அரசின் பல்வேறு துறைகளில் 10 ஆண்டுகளுக்கும் கூடுதலாக பணியாற்றி வரும் தற்காலிக பணியாளர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது தான் பாமக நிலைப்பாடு ஆகும். தற்காலிக பணியாளர்களை பணி நிரந்தரம் செய்வதில் உயர்நீதிமன்றம் கருணையுடன் நடந்து கொள்ளும் நிலையில், அது தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்திருக்கும் அரசாணைகள் கடுமையானவையாகவும், கருணையற்றவையாகவும் உள்ளன என்பதே உண்மையாகும்.

2000-ஆவது ஆண்டுக்குப் பிறகு தற்காலிக பணியாளர்களை பணி நிரந்தரம் செய்வதற்கான முதல் அரசாணை 2006-ஆம் ஆண்டில் பிறப்பிக்கப்பட்ட நிலையில், 27.06.2013-ஆம் நாளில் அரசாணை எண் 74-ம், 28.11.2020-ஆம் நாளில் அரசாணை எண் 131-ம் பிறப்பிக்கப்பட்டன. கடைசி இரு அரசாணைகளும் நடைமுறைப்படுத்த முடியாத அளவுக்கு கடுமையானவை. 2006-ஆம் ஆண்டுக்கு முன்பாக பத்தாண்டு தற்காலிக பணியை நிறைவு செய்திருக்க வேண்டும்; அவர்கள் தற்காலிகமாக நியமிக்கப்பட்ட பணியிடம் அரசால் ஒப்புதல் அளிக்கப்பட்ட பணியாக இருக்க வேண்டும் ஆகிய நிபந்தனைகள் சாத்தியமற்றவை.

தமிழ்நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள அரசாணை எண் 131-இன் படி, 1995 திசம்பர் 31-ஆம் தேதிக்கு முன்பாக, ஒப்புதல் அளிக்கப்பட்ட பணியிடங்களில் தற்காலிக ஊழியராக சேர்ந்தவர்களை மட்டும் தான் பணி நிரந்தரம் செய்ய முடியும். இந்த அடிப்படையில் பார்த்தால் தமிழக அரசுத் துறைகளில் தற்போது பணியாற்றி வரும் தற்காலிகப் பணியாளர்களில் ஒருவரைக் கூட பணி நிரந்தரம் செய்ய முடியாது.

2000-ஆவது ஆண்டுக்குப் பிறகு சுமார் ஒரு லட்சம் தற்காலிக பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பான்மையினர் பத்தாண்டுகளை நிறைவு செய்து விட்டனர். அவர்களில் சுமார் 70% பணியாளர்கள் 20 ஆண்டுகளை கடந்து விட்டனர். அவர்களுக்கு பணி நிரந்தரம், அதன் மூலம் சமூக நீதியும் வழங்க வேண்டும் என்று அரசு நினைத்தால், அதற்கேற்றவாறு விதிகளை வகுக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல் சாத்தியமற்ற விதிகளை வகுத்தால், அதனால் யாருக்கும் பயனில்லை.

தமிழ்நாட்டில் தற்போது தற்காலிக ஊழியர்கள் பணியாற்றும் பணியிடங்களுக்கு இணையான நிரந்தர பணியிடங்கள் இல்லை. அதனால், அரசாணை எண் 131-இன்படி அவர்கள் தற்காலிக பணியாளர்களாகவே நீடிக்க முடியும்; பணி நிரந்தரம் வழங்க முடியாது. அதனால் தற்காலிக ஊழியராக சேர்ந்த ஒருவர் 35 ஆண்டுகள் பணியாற்றினாலும் அதே நிலையில் தான் ஓய்வு பெற வேண்டும்; அவருக்கு ஓய்வுக் கால பயன்கள் உள்ளிட்ட எந்த உரிமையும் கிடைக்காது. இதைவிட மோசமான சமூக அநீதி இருக்க முடியாது. தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியின்படி இந்த சமூக அநீதியை களைய திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தான் ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் எதிர்பார்ப்பு ஆகும்.

எனவே, அரசாணை எண் 131-இல் உள்ள நிபந்தனைகளை தளர்த்தி, சென்னை உயர்நீதிமன்றம் காட்டிய கருணையுடன், பத்தாண்டுகள் பணியாற்றிய தற்காலிக பணியாளர்கள் அனைவருக்கும், அவர்கள் எந்த தேதியில் பத்தாண்டுகளை நிறைவு செய்தார்களோ, அந்த நாளில் இருந்து அவர்களுக்கு பணி நிரந்தரம் வழங்க வேண்டும். இனி வரும் காலங்களில் தற்காலிக நியமனங்களை தவிர்த்து, அனைத்து பணியிடங்களுக்கும் நிரந்தர பணியாளர்களை நியமிக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
Read More

Wednesday, October 26, 2022

தமிழகம் முழுவதும் தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் பணியாற்றும் 2,760 தற்காலிக ஆசிரியர்களுக்கு ஓராண்டு பணி நீட்டிப்பு: தமிழக அரசு உத்தரவு

October 26, 2022 0
தமிழகம் முழுவதும் தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் பணியாற்றும் 2,760 தற்காலிக ஆசிரியர்களுக்கு ஓராண்டு பணி நீட்டிப்பு: தமிழக அரசு உத்தரவு

தமிழகம் முழுவதும் 1990-91ம் ஆண்டு மற்றும் 2002-2003ம் ஆண்டு முதல் 2006-2007ம் கல்வி ஆண்டு வரை 45 பள்ளிகளுக்கு 45 முதுநிலை வணிகவியல் ஆசிரியர்களும், 45 முதுநிலை பொருளாதார ஆசிரியர்களும் தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்பட்டனர். மேலும் 2011-2012ம் கல்வி ஆண்டில் 100 நகராட்சி, மாநகராட்சி, அரசு உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டு தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளியல், வணிகவியல், இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் என 9 பாடங்களுக்கு 900 முதுநிலை ஆசிரியர்கள் தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்பட்டனர். தொடர்ந்து 2014-2015ம் கல்வி ஆண்டிலும் இதேபோல் 100 உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டு 900 முதுநிலை ஆசிரியர்கள் தற்காலிக அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டனர்.

மேலும் 2018-2019ம் கல்வி ஆண்டில் 5 அரசு உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டதால் அதன் தலைமை ஆசிரியர் பணியிடங்களும் நிலை உயர்த்தப்பட்டு அதற்கான பணியிடங்கள் உருவாக்கப்பட்டன. அத்துடன் 5 பள்ளிகளிலும் தலா 6 முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள் என 30 பணியிடங்களும் தோற்றுவிக்கப்பட்டன.

இப்பணியிடங்களை பணி நிரவல் மூலம் நிரப்பவும் அரசு உத்தரவிட்டது. இதுதவிர 2018-2019ம் கல்வி ஆண்டில் 95 ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, மாநகராட்சி நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டது. மேலும் 5 அரசு உயர்நிலைப்பள்ளிகளில் இருந்து 5 அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளிகளும் உருவாக்கப்பட்டது. இவ்வாறு 100 அரசு உயர்நிலைப்பள்ளிகளுக்கு 100 தலைமை ஆசிரியர் பணியிடங்களும் தோற்றுவிக்கப்பட்டது.

அதேபோல் 2018-2019ம் கல்வி ஆண்டில் 95 அரசு, நகராட்சி, மாநகராட்சி உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டு 95 தலைமை ஆசிரியர் பணியிடங்களும் தரம் உயர்த்தப்பட்டன. இப்பள்ளிகளில் தலா 6 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் வீதம் 570 முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டன.

இவ்வாறு 200 மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்கள், 100 உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் 2,460 முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள் என மொத்தம் 2,760 தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு 31.12.2021 வரை ஏற்கனவே வழங்கப்பட்ட பணி நீட்டிப்பை, பணி நீட்டிப்பு முடிவடைந்த நிலையில், அவர்களுக்கு 1.01.2022 முதல் 31.12.2022 வரை ஓராண்டுக்கு பணி நீட்டிப்பு வழங்கி அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் செப்டம்பர் மாதத்துக்கான ஊதியத்தை வழங்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது.
Read More

Tuesday, May 17, 2022

அரசு ஊழியர்களுக்கு செம செக் - உயர் நீதிமன்றம் இப்படியொரு உத்தரவு!

May 17, 2022 0
அரசு ஊழியர்கள் பதவி உயர்வை உரிமையாக கோர முடியாது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. பதவி உயர்வு சட்டத்தின் அடிப்படையில் அனைத்து பதவி உயர்வுகளும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என உத்தரவிட்டு, பொது சுகாதார பணியாளராக பதவி உயர்வு கோரிய சுடலைமாடன், முருகன் ஆகியோரின் மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

அரசு ஊழியர்கள் பதவி உயர்வை உரிமையாக கோர முடியாது என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது

ஹைலைட்ஸ்:

அரசு ஊழியர்களுக்கு செம செக்

உயர் நீதிமன்றம் இப்படியொரு உத்தரவு!

அரசு ஊழியர்கள் பதவி உயர்வை உரிமையாக கோர முடியாது என, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்து உள்ளது. தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு முதலில் அவர்களின் சீனியாரிட்டி அடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்பட்டு வந்தது. இதனால் திறமை உள்ளவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுவதாக புகார்கள் எழுந்தன. மேலும் TNPSC தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று பணியில் சேர்ந்த அரசு ஊழியர்கள் பலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் 2015 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநில சார்நிலைப் பணி விதிகளின் படி TNPSC தேர்வு மதிப்பெண் ரேங்க் அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்தது.

இந்த வழக்கின் விசாரணைக்கு பிறகு 2015 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநில சார்நிலைப் பணி விதிகளின் படி TNPSC தேர்வு மதிப்பெண் ரேங்க் அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று தீர்ப்பு அளித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவும் உச்ச நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.
போலீசாருக்கு பறந்த திடீர் உத்தரவு - டிஜிபி சைலேந்திர பாபு அதிரடி!

இந்நிலையில், பொது சுகாதார பணியாளராக பதவி உயர்வு கோரி சுடலை மாடன், முருகன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது. இதை விசாரித்த நீதிபதிகள், அரசு ஊழியர்கள் பதவி உயர்வை உரிமையாக கோர முடியாது என்றும், பதவி உயர்வு சட்டத்தின் அடிப்படையில் அனைத்து பதவி உயர்வுகளும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், இந்த மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.
Read More

Wednesday, January 5, 2022

வரும் 7ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

January 05, 2022 0
திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் வரும் 7ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.

இவ்வேலைவாய்ப்பு முகாமில் தனியார் துறை நிறுவனங்கள் பல்வேறு பணியிடங்களுக்கு பணிவாய்ப்புகளை வழங்கவுள்ளன. முகாமில் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு முடித்த அனைவரும் (வயது வரம்பு: 18-35க்குள்) கலந்துகொள்ளலாம். நேர்காணலில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்களது அனைத்து கல்வி சான்றிதழ்களின் நகல், சுயவிபரக்குறிப்பு மற்றும் ஆதார் அட்டை நகலுடன் கலந்துகொள்ள வேண்டும் என திருச்சி கலெக்டர் சிவராசு கூறியுள்ளார்
Read More

Saturday, January 1, 2022

கல்லூரியில் பேராசிரியர் வேலை: ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.01.2022

January 01, 2022 0
நேஷனல் இன்ஸ்டியூட் ஆப் பேஷன் டெக்னாலஜி கல்வி நிறுவனத்தில் ஒப்பந்தகால அடிப்படையில் நிரப்பப்பட உள்ள உதவி பேராசிரியர் வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

நிறுவனம்: நேஷனல் இன்ஸ்டியூட் ஆப் பஷன் டெக்னாலஜி
மொத்த காலியிடங்கள்: 190

தகுதி: பேஷன் டிசைன், ஜூவல்லரி டிசைன், புட்வியர் டிசைன், டெக்ஸ்டைல் டிசைன், லெதர் டிசைன், ஸ்பேஸ் டிசைன், பிலிம் டிசைன், கம்ப்யூட்டர் சயின்ஸ், மாஸ் கம்யூனிகேசன், அட்வர்டைசிங் போன்ற பிரிவில் எம்.எஸ்சி., முடித்திருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள. 

வயதுவரம்பு: 31.1.2022 தேதியின்படி, 40க்குள் இருக்க வேண்டும். 
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, திறன் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள தேர்வு செய்யப்படுவர்.

தேர்வு மையம்: தில்லி, மும்பை, பெங்களூரு, புவனேஸ்வர், போபால், கௌகாத்தி.

விண்ணப்பிக்கும் முறை: www.cmsnift.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.1180. பெண்கள், எஸ்சி, எஸ்.டி, மாற்றுத்திறனாளி பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை. 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.01.2022

மேலும் விபரங்கள் அறிய www.cmsnift.com/pages/app_asst_prof/ap_reg.aspx என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
Read More

வங்கியில் வேலை வேண்டுமா..? - அழைக்கிறது இந்திய யூனியன் வங்கி - விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 07.01.2022

January 01, 2022 0
இந்திய யூனியன் வங்கி ஏராளமான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பை அறிவித்துள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: Senior Manager(Digital) - 01
பணி: Manager(Digital) - 01
பணி: Manager-Data Scientist - 02
பணி: Manager-Data Analyst - 02
பணி: Manager Statistician - 02
பணி: Manager Detabase Administrator - 01
பணி: Senior Manager (Economist) - 01
பணி: Manager(Economist) - 01
பணி: Senior Manager (Industry Research) - 02
பணி: Manager (Industry Research) - 02
பணி: Senior Manager(API) - 02
பணி: Manager (API) - 02
பணி: Senior Manager(Digital Lending & Fintech) - 02
பணி: Manager (Digital Lending & Fin-tech) - 02

தகுதி: கணிதம், புள்ளியியல், பொருளாதாரம், வணிக பொருளாதாரம் பிரிவுகளில் முதுகலை பட்டம் மற்றும் பொறியியல் துறையில் கணினி அறிவியல், இசிஇ பிரிவில் பிஇ, பி.டெக் முடித்தவர்கள், எம்பிஏ, எம்பிஏ முடித்தவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஒபிசி பிரிவினர் ரூ.800, எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் ரூ.150 கட்டணமாக செலுத்த வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
 
விண்ணப்பிக்கும் முறை: www.unionbankofindia.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 07.01.2022.

மேலும் விவரங்கள் அறிய https://bit.ly/31eq2Ju  என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
Read More

Tuesday, December 21, 2021

அரசு வேலைக்காக காத்திருப்போரின் எண்ணிக்கை - மாநில அரசு வெளியிட்ட தகவல்

December 21, 2021 0
வேலைவாய்ப்பக அலுவலகங்களில் பதிவு செய்து அரசு வேலைக்காக காத்திருப்போரின் எண்ணிக்கை 72 லட்சத்து 20 ஆயிரம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, மாநில அரசு வெளியிட்ட தகவல்:

கடந்த செப்டம்பா் மாத நிலவரப்படி, வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து அரசு வேலைக்காகக் காத்திருப்போரின் எண்ணிக்கை 72 லட்சத்து 20 ஆயிரத்து 454-ஆக உள்ளது. அவா்களில் 33 லட்சத்து 81 ஆயிரத்து 966 போ் ஆண்கள், 38 லட்சத்து 38 ஆயிரத்து 264 போ் பெண்கள், 224 போ் மூன்றாம் பாலினத்தவா்கள்.
Read More

Monday, December 20, 2021

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

December 20, 2021 0
தமிழக அரசு ஊழியர்களுக்கு ஜனவரி 1ஆம் தேதி முதல் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு அண்மையில் அகவிலைப்படி 31 விழுக்காடாக உயர்த்தப்பட்டது. இதைத்தொடர்ந்து வரும் ஜனவரியிலும் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே கர்நாடகம், உத்தரப் பிரதேசம், ஜார்கண்ட் உள்பட பல்வேறு மாநில அரசுகள் தங்களது அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்குவதாக அறிவிப்பு வெளியிட்டன. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து அகவிலைப்படி உயர்வு எப்போது கிடைக்கும் என தமிழக அரசு ஊழியர்கள் காத்திருந்தனர்.

இந்நிலையில், ஜனவரி முதல் தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் 14ஆவது மாநில மாநாடு இன்று நடைபெற்றது. இதில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று பேசினார். அப்போது அவர், “திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் அரசு ஊழியர்களுக்கு ஏராளமான திட்டங்களை அறிமுகம் செய்துள்ளோம். அரசு ஊழியர்களின் வேலை நிறுத்தக் காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தியதும், பதவி உயர்வு பாதிக்கப்பட்டிருந்தால் சரிசெய்யப்படும் எனவும் அறிவித்தது திமுக ஆட்சிக்காலத்தில்தான்.

அரசு ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகள் நிச்சயமாக நிறைவேற்றப்படும். அதில் நான் உறுதியாகவும் தெளிவாகவும் உள்ளேன். அரசுக்கு கடும் நிதி நெருக்கடி இருப்பினும் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்படும் என அறிவித்தோம். அதன்படி, 2022 ஜனவரி 1ஆம் தேதி முதல் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அமல்படுத்தப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
Read More

Monday, December 13, 2021

ஓய்வூதிய வல்லுனர் குழு அறிக்கை என்னாச்சு; அரசு ஊழியர், ஆசிரியர்கள் குமுறல்

December 13, 2021 0
ஓய்வூதிய வல்லுனர் குழு அறிக்கை என்னாச்சு; அரசு ஊழியர், ஆசிரியர்கள் குமுறல்

ஓய்வூதிய வல்லுனர் குழு அறிக்கையை தமிழக அரசிடம் சமர்ப்பித்து மூன்று ஆண்டுகளாகியும், எந்த முடிவும் எடுக்காதது அரசு ஊழியர், ஆசிரியர்களிடையே மனக்குமுறலை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் 1.4.2003 முதல் அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் நடைமுறையில் உள்ளது. இத்திட்டத்தில் 6 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சேர்க்கப்பட்டனர். இவர்களிடம் பிடித்தம் செய்த தொகை ரூ.46 ஆயிரம் கோடி. இதுவரை பதவி விலகிய, மரணமடைந்த 23 ஆயிரம் பேருக்கு பண பலன்களை இதுவரை வழங்கவில்லை. இதுபோன்ற காரணங்களால் அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்கள் புதிய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றன. 2016ல் அன்றைய முதல்வர் ஜெயலலிதா பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த சாத்தியக் கூறுகளை ஆராய ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி சாந்தா ஷீலா நாயர் தலைமையில் வல்லுநர் குழு அமைத்தார். அதன்பின் ஸ்ரீதர் தலைமையில் செயல்பட்ட இக்குழு 27.11.2018 அன்று அரசிடம் அறிக்கை சமர்ப்பித்தது.

தகவல் அறியும் சட்டம்

இதுகுறித்து சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் பிரடெரிக் ஏங்கல்ஸ் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கல்வித் துறையிடம் சில கேள்விகளை கேட்டுள்ளார்.பங்களிப்பு ஓய்வூதிய நிதி, எந்த தேதிகளில் எவ்வளவு முதலீடு செய்யப்பட்டுளளது. மத்திய அரசு போல், தமிழக ஊழியர்களுக்கு பணிக்கொடை, குறைந்தபட்ச ஓய்வூதியம் மற்றும் அரசின் பங்களிப்பு 14 சதவீதமாக உயர்த்த தமிழக அரசு எடுத்த நடவடிக்கை என்ன, வல்லுனர் குழு அறிக்கை விவரம் என்ன என்று கேட்டு இருந்தார்.

இதற்கு கல்வித்துறை அளித்துள்ள பதிலில், முதல் கேள்விக்கு ஆயுள் காப்பீட்டு நிறுவன ஓய்வூதிய நிதியில் ரூ.28 ஆயிரத்து 725 கோடியும், ஏல அடிப்படையில் கருவூல பட்டி கணக்கில் ரூ.16 ஆயிரத்து 500 கோடியும் முதலீடு செய்யப்பட்டுள்ளது. அடுத்த கேள்விக்கு அரசு ஆணை வெளியிடப்படவில்லை எனவும், 3வது கேள்விக்கு வல்லுனர் குழு அறிக்கை பொதுமக்களின் பார்வைக்கு வெளியிடப்படவில்லை என்றும் பதில் அளித்துள்ளது. அரசுக்கு உபரி நிதி கிடைக்கும்

பிரெடரிக் ஏங்கல்ஸ் கூறியதாவது: வல்லுனர் குழு அறிக்கை வெளியிடாதது அரசு ஊழியர்கள், ஆசிரியர்களிடையே மனக்குமுறலை ஏற்படுத்தியுள்ளது. சட்டசபை தேர்தலின் போது தி.மு.க., தேர்தல் அறிக்கையில் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்வோம் என்றனர். உடனே அதை செயல்படுத்த வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்தினால் அரசுக்கு ரூ.23 ஆயிரம் கோடி உபரி நிதியாக கிடைக்கும், என்றார்.
Read More

Sunday, December 12, 2021

சுகாதார ஆய்வாளர் பணிக்கு விண்ணப்பிக்க 15-ந் தேதி கடைசி நாள்

December 12, 2021 0
சுகாதார ஆய்வாளர் பணிக்கு விண்ணப்பிக்க 15-ந் தேதி கடைசி நாள்

சேலம், டிச.8 சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்கு றிப்பில் கூறியிருப்பதாவது:

மாவட்டத்தில் ஒப்பந்த அடிப்படையில் சுகாதார ஆய்வாளர்கள் பணி அமர்த்தப்பட உள்ளனர். மாவட்ட நலவாழ்வு சங்கம் மூலம் இந்த பணிக்கான ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். கொரோனா தொற்று காலத்தில் சிறப்பாக பணியாற்றிய நர்சு மற்றும் சுகாதார ஆய்வாளர்களுக்கு சிறப்பு மதிப்பெண்கள் அளிக்கப்படும். எனவே கொரோனா காலத்தில் பணியாற்றிய நர்சு, ஆய்வாளர்கள் இதை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப் பங்கள் வருகிற 15-ந் தேதிக்குள் சேலம் மாவட்ட நலவாழ்வு சங்க அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
Read More

Saturday, December 11, 2021

டிச., 18, 19ல் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மாநில மாநாடு

December 11, 2021 0
சென்னையில் டிசம்பர் 18 மற்றும் 19ல் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க 14வது மாநில மாநாடு நடக்கிறது.

மதுரையில் மாநில பொது செயலர் செல்வம் கூறியதாவது:பழைய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, புதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும். முடக்கப்பட்ட அகவிலைப்படியை வழங்க வேண்டும். பறிக்கப்பட்ட சரண் விடுப்பு மீண்டும் அளிக்க வேண்டும்.

சத்துணவு, அங்கன்வாடி உள்ளிட்ட ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட சம்பளம் வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த மாநாடு நடக்கிறது. டிசம்பர் 19ல் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிறார். ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் உள்ளிட்ட பல்வேறு அரசு துறை ஊழியர் சங்க நிர்வாகிகள் பங்கேற்கின்றனர்.
Read More

Friday, December 10, 2021

தினக்கூலி அடிப்படையில் அல்லது தொகுப்பூதியத்தில் பணிபுரியும் துப்புரவுப் பணியாளர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் நிர்ணயித்தல் - ஆணை - வெளியீடு

December 10, 2021 0
துப்புரவுப் பணியாளர்கள் - அரசு அலுவலகங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் - தினக்கூலி அடிப்படையில் அல்லது தொகுப்பூதியத்தில் பணிபுரியும் துப்புரவுப் பணியாளர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் நிர்ணயித்தல் - ஆணை - வெளியீடு
Read More

Thursday, December 9, 2021

அரசு ஊழியர்களின் ஓய்வூதிய நிதி 10ஆண்டுகளுக்குப் பின் முதலீடு!

December 09, 2021 0
புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் பணியில் சேர்ந்த அரசு ஊழியர்களிடமிருந்து பிடித்தம் செய்யப்பட்ட ஓய்வூதிய நிதி சுமார் 10 ஆண்டுகளுக்கு பின் முதலீடு செய்யப்பட்டுள்ள விவரம் உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இனியாவது ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தமிழக அரசு ஊழியர்களுக்கு, புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் கடந்த 2003 -ஆம் முதல் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை அரசு ஊழியர்கள் தரப்பில் சுமார் 17 ஆண்டு காலமாக தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இதனிடையே, 2003-க்குப் பின் பணியில் சேர்ந்த அரசு ஊழியர்கள் சுமார் 5.88 லட்சம் பேர் புதிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் இதுவரை இணைக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் அரசு ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட தொகை 2021 மார்ச் மாதம் வரை ரூ.44,769 கோடி சேர்ந்துள்ளதாக தமிழக அரசின் 2020-21-ஆம் ஆண்டுக்கான கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2008 -ஆம் ஆண்டிலிருந்து முன் தேதியிட்டு (2003) பிடித்தம் செய்யப்பட்ட பங்களிப்பு ஓய்வூதியத் தொகை எங்கு முதலீடு செய்யப்பட்டுள்ளது என்ற விவரம் அரசு ஊழியர்களுக்குத் தெரியாமலே இருந்து வந்தது. இதனிடையே புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்வதற்கான வல்லுநர் குழுவின் அறிக்கை தமிழக அரசிடம் கடந்த 2018 நவ. 27-ஆம் தேதி வழங்கப்பட்டது. ஆனாலும், அறிக்கையின் விவரங்கள் தற்போது வரை வெளியிடப்படவில்லை. ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் (எல்.ஐ.சி.) முதலீடு: இந்நிலையில் ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட தொகை சுமார் 10 ஆண்டுகளுக்கு பின்பு ஆயுள் காப்பீட்டு நிறுவன ஓய்வூதிய நிதியிலும், ஏல அடிப்படையிலான கருவூலப்பட்டியிலும் (பழ்ங்ஹள்ன்ழ்ஹ் ஆண்ப்ப்) முதலீடு செய்யப்பட்டு வருவதாக வெளியாகியுள்ள தகவல் அரசு ஊழியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2019-ஆம் ஆண்டு மே 30-ஆம் தேதி முதல் முறையாக ரூ.2,500 கோடி, ஆயுள் காப்பீட்டு நிறுவன ஓய்வூதிய நிதியில் செலுத்தப்பட்டுள்ளது. அதன் பின்னர், தற்போதுவரை 8 தவணைகளில் ரூ.25,510 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. அதற்கு வட்டியாக ரூ.2,759.13 கோடியுடன் சேர்த்து, மொத்தம் ரூ.28,269.13 கோடி உள்ளது. மேலும், ஏல அடிப்படையிலான கருவூலப்பட்டியில் தற்போது வரை ரூ.16,500 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. மொத்தம் ரூ.44,769 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசின் நிதித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் சுமார் 18 ஆண்டுகளாக அரசு ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட தொகையின் நிலை குறித்த விவரம் வெளியுலகிற்கு தெரிய வந்துள்ளது. இனியாவது கிடைக்குமா ஓய்வூதியம்?: பிடித்தம் செய்யப்பட்ட பங்களிப்பு நிதியின் நிலவரம் குறித்து தெரியாததால், கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஓய்வு பெற்றும், பணியின் போது உயிரிழந்தும், விருப்ப ஓய்வு பெற்றும் ஓய்வூதியம் பெற முடியாமல் சுமார் 23ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது பங்களிப்பு நிதி முதலீடு செய்யப்பட்ட விவரம், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளதால், இனியாவது ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் வழங்குவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட வேண்டும் என புதிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பணி ஓய்வு பெற்றவர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இது தொடர்பாக சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் பி.பிரெடேரிக் ஏங்கல்ஸ் கூறியதாவது: இந்தியாவில் மேற்கு வங்கம் தவிர பிற மாநிலங்களில் புதிய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், தமிழகத்தில் மட்டுமே பழைய ஓய்வூதியத் திட்டம், புதிய ஓய்வூதியத் திட்டம் என எந்தவொரு முடிவும் இறுதி செய்யப்படாமல் உள்ளது. புதிய ஓய்வூதியத் திட்டம் ரத்து செய்யப்படும் நிலையில், தமிழக அரசுக்கு சுமார் ரூ.23,000 கோடி உபரி நிதியாக கிடைக்கும் என்பதையும் சுட்டி காட்டி வருகிறோம். திமுகவின் தேர்தல் வாக்குறுதிப்படி, புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதன் மூலம், புதிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் ஓய்வு பெற்ற சுமார் 23,000 பேர் உடனடியாகப் பயன்பெறவும், எதிர்காலத்தில் சுமார் 6 லட்சம் அரசு ஊழியர்கள் பயன் பெறவும் முடியும் என்றார்.
Read More

Thursday, December 2, 2021

அங்கன்வாடி உதவியாளர்களின் ஓய்வு பெறும் வயது 60 ஆக உயர்த்தி ஆணை!

December 02, 2021 0
ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ் உள்ள குழந்தைகள் மையங்களில் பணிபுரியும் அங்கன்வாடி உதவியாளர்களின் ஓய்வு பெறும் வயது 58லிருந்து 60 ஆக அதிகரித்து சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை ஆணை
Read More

Monday, November 29, 2021

அரசு பணியாளர்களுக்கு பவானிசாகர் அடிப்படைப் பயிற்சி! - தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு விவரம்

November 29, 2021 0
அரசு பணியாளர்களுக்கு பவானிசாகர் அடிப்படைப் பயிற்சி!: தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தொடங்கி வைத்தார்..!!

புதிதாக பணியில் சேரும் பணியாளர்களுக்கு பவானிசாகர் அடிப்படைப் பயிற்சியை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தொடங்கி வைத்தார். புதிதாக அரசுப் பணியில் சேரும் அரசு பணியாளர்கள் மற்றும்படி பதவி உயர்வு பெறும் பணியாளர்களுக்கு பணி தொடர்பான பயிற்சியை அந்தந்த மாவட்டங்களிலேயே வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருந்தது. முன்னதாக பல்வேறு மாவட்டங்களில் இருந்து பவானிசாகர் பயிற்சி மையத்திற்குச் சென்று அரசு ஊழியர்கள் பயிற்சி பெற வேண்டிய சூழல் இருந்தது. இனி பயிற்சி பெற வேண்டிய அரசு பணியாளர்களுக்கு அந்தந்த மாவட்டங்களிலேயே பயிற்சி வழங்க தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.

அனைத்து மாவட்டங்களுக்கும் பவானிசாகர் பயிற்சி மையத்தில் இருந்து அதிகாரிகள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அடிப்படை பயிற்சிகளை வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில், புதிதாக பணியில் சேரும் அரசு பணியாளர்களுக்கும், அடிப்படைப் பதவியிலிருந்து பதவி உயர்வு பெறும் பணியாளர்களுக்கும் பவானிசாகர் அரசு அலுவலர் பயிற்சி நிலையத்தின் மூலம் 41 பணி நாட்கள் கொண்ட அடிப்படைப் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இதன் முதற்கட்டமாக சென்னை அண்ணாநகர், ஸ்ரீகிருஷ்ணசாமி மகளிர் கல்லூரியில், தமிழ்நாடு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பயிற்சியைத் தொடங்கிவைத்தார்.

இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு விவரம் வருமாறு:

தமிழக முதலமைச்சர் அவர்கள் புதிதாக பணியில் சேரும் பணியாளர்களுக்கு பவானிசாகர் அடிப்படைப் பயிற்சியினை அந்தந்த மாவட்டங்களிலேயே வழங்கப்படும் என சட்டப் பேரவை விதி 110ன் கீழ் அறிவிக்கை வெளியிட்டதின் பேரில் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. புதிதாக பணியில் சேரும் அரசு பணியாளர்களுக்கும், அடிப்படைப் பதவியிலிருந்து பதவி உயர்வு பெறும் பணியாளர்களுக்கும் பவானிசாகர் அரசு அலுவலர் பயிற்சி நிலையத்தின் மூலம் 41 பணி நாட்கள் கொண்ட அடிப்படைப் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. கொரோனா நோய் தொற்று காரணமாக 17.03.2020 முதல் இந்த அடிப்படைப் பயிற்சி தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது. இதன் காரணமாக மாநிலம் முழுவதும் பயிற்சி பெறுபவர்களின் எண்ணிக்கை ஒன்பதாயிரத்திற்கு மேல் நிலுவை ஏற்பட்டது. இந்த விவரம் அறிந்த மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் அனைத்து பணியாளர்களின் நலனை கருத்தில் கொண்டு, அனைவருக்கும் அந்தந்த மாவட்டத்திலேயே பயிற்சி வழங்கி தகுதிகாண்பருவம் பூர்த்தி செய்யப்பட வேண்டுமெனவும், இதன் மூலம் அவர்கள் பதவி உயர்விற்கு வழிவகுக்கும் என்ற நோக்கில் உடனடியாக அனைத்து மாவட்டங்களிலும் 37 பணி நாட்கள் கொண்ட சுருக்கப்பட்ட அடிப்படை பயிற்சியினை வழங்கலாம் என சட்டப்பேரவை விதி 110ன் கீழ் அறிவிக்கை வெளியிட்டார்கள்.

அண்ணா நிர்வாகப் பணியாளர்கள் கல்லூரி, பவானிசாகர் அரசு அலுவலர் பயிற்சி நிலையம் ஆகியவை பயிற்சி துறைத் தலைவர் அவர்களின் கட்டுப்பாட்டில் இயங்கிவரும் பயிற்சி நிலையங்களாகும். இந்த பயிற்சி நிலையம் மூலம் இதுவரை 1,29,813 பயிற்சியாளர்களுக்கு பல்வேறு அணிகளாக பயிற்சி வழங்கப்பட்டு பதவி உயர்வு வழங்க ஆவண செய்யப்பட்டுள்ளது. இதில் துணை ஆட்சியர், கணக்கு அலுவலர், உதவி இயக்குநர் (ஊரக வளர்ச்சி) ஆகிய பல்வேறு துறை அலுவலர்களைக் கொண்டு அலுவலக நடைமுறை, பணி நடைமுறை, பொதுமக்கள் தொடர்பு, கணக்கு, ஊரக வளர்ச்சி, கணினி, போன்ற பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டுவருகின்றன. மாண்புமிகு தமிழக முதல்வரின் இந்த அறிவிக்கைக்கேற்ப உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு அதே பாடத்திட்டங்களைக் கொண்டு மாவட்ட அளவிளான பயிற்சியை நடத்துவதற்கு உரிய அரசாணை பெறப்பட்டு, அந்த அந்த மாவட்டங்களில் ஓய்வு பெற்ற மாவட்ட வருவாய் அலுவலர்களை ஒருங்கிணைப்பாளர்களைக் கொண்டு பல்வேறு துறை உயர் அலுவலர்களையும் இணைத்து அவர்களை சிறப்பு விரிவுரையாளர்களாக நியமனம் செய்யப்பட்டு ஒரு மாவட்டத்தில் அணிக்கு குறைந்த பட்சம் 250 பயிற்சியாளர்களை தேர்வு செய்யப்பட்டு பயிற்சி நடத்தப்பட உள்ளது. இந்தப் புதிய பயிற்சித் திட்டத்தின் மூலம் வருகைபுரிந்து பெண் பணியாளர்கள் விடுதியில் தங்காமல் வீட்டிலிருந்து தினமும் வருகைபுரிந்து வகுப்புகளில் கலந்து கொள்வதால் அவர்களுக்கு இல்லப்பணிகளையும் தொய்வின்றி கவனிக்க முடியும் என்பதால் இத்திட்டம் மகளிரிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதன் முதற்கட்டமாக இந்த செயலாக்கத்திற்கு சென்னை மாவட்டம் தெரிவு செய்யப்பட்டு மொத்தம் 250 அரசு பணி பயிற்சியாளர்களுக்கு 29.11.2021 அன்று காலை 10.30 மணிக்கு சென்னை, அண்ணாநகர், ஸ்ரீகிருஷ்ணசாமி மகளிர் கல்லூரியில், மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் அவர்களால் பயிற்சி தொடங்கிவைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், தலைமைச் செயலாளர்/பயிற்சி துறைத் தலைவர், முனைவர் வெ.இறையன்பு இஆப., மனித வள மேலாண்மைத் துறை அரசு செயலாளர் திருமதி மைதிலி க. ராஜேந்திரன் இ.ஆப., சென்னை மாவட்ட ஆட்சி தலைவர் முனைவர். ஜெ. விஜயாராணி, இஆப., கல்லூரி முதல்வர் முனைவர். அனிதா ராஜேந்திரன், ஆகியோர் கலந்து கொண்டனர்.
Read More

Wednesday, November 24, 2021

புத்தாண்டில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 34% DA உயர்வு – 7வது ஊதியக் குழு பரிந்துரை!

November 24, 2021 0
மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு கடந்த மாதத்தில் கூடுதலாக தவணையாக 3% உயர்த்தப்பட்டது. மொத்த அகவிலைப்படி 31% ஆக இருக்கும் நிலையில் அடுத்த தவணையாக கூடுதலாக 3% அதிகரிக்க உள்ளது பற்றிய தகவல் வெளிவந்துள்ளது.

அகவிலைப்படி உயர்வு:

மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த ஆண்டின் தொடக்கம் முதல் கடந்த தவணை வரைக்கான அகவிலைப்படி உயர்வு வழங்கப்படாமல் இருந்தது. 3 தவணைகளுக்கான DA குறித்து தொடர்ந்து மத்திய அரசு ஊழியர்கள் கோரிக்கை வைத்து வந்தனர். இதனால் மார்ச் மாதம் நடந்த பாராளுமன்ற கூட்டத்தொடரில் நிலுவையில் உள்ள DA குறித்து அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதனால் இறுதியாக 17% DA பெற்று வந்த ஊழியர்களுக்கு கூடுதலாக 11% DA வழங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, ஜூலை மாதத்தில் உயர்த்தப்பட்ட அகவிலைப்படி உயர்வானது அமலுக்கு வந்தது. அதன்பின்னர், ஜூலை 1,2021 தவணைக்கான அகவிலைப்படி உயர்வு குறித்து விவாதிக்கப்பட்டது. இறுதியாக நவம்பர் மாதத்தில் இந்த தவணைக்கான DA உயர்வு வந்துள்ளது. இதனால் மத்திய அரசு ஊழியர்கள் தற்போது 31% அகவிலைப்படி உயர்வினை பெற்றுள்ளனர். இதனால் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட்டது. தற்போது, ஜனவரி 2022 இல், அகவிலைப்படி மீண்டும் ஒருமுறை அதிகரிக்க இருக்கிறது. 2022 ஜனவரியில் எவ்வளவு அகவிலைப்படி (DA) அதிகரிக்கப்படும் என்பது முடிவு செய்யப்படவில்லை. ஆனால், ஏஐசிபிஐ குறியீட்டின் தரவுகளின்படி, டிஏவில் 3 சதவீதம் அதிகரிப்பு எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், டிசம்பர் 2021 இறுதிக்குள் மத்திய அரசின் சில துறைகளில் பதவி உயர்வு வழங்க இருக்கிறது. இது தவிர, 2022 பட்ஜெட்டுக்கு முன் உடல் தகுதி காரணி குறித்தும் இறுதி முடிவெடுக்கப்படும். AICPI இன் தரவுகளின்படி, செப்டம்பர் 2021 வரையிலான புள்ளிவிவரங்கள் இன்னும் வெளிவரவில்லை. ஆனால் அறிக்கையில், முடிவின் படி, செப்டம்பர் 2021க்குள், அகவிலைப்படி 33 சதவீதமாக உயர்ந்துள்ளது. இருப்பினும், அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களின் புள்ளிவிவரங்கள் இன்னும் கிடைக்கவில்லை. அவற்றிற்கும் மேலும் 1 சதவீதம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால் மொத்த டிஏ 3 சதவீதம் உயர்த்தப்பட்டு 34 சதவீதம் வரை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Read More

டிப்ளமோ படித்தவர்களுக்கு மட்டுமே இளநிலை வரைதொழில் அலுவலர் பணி

November 24, 2021 0
தமிழக நெடுஞ்சாலைத்துறை பட் டய பொறியாளர் சங்க பொதுச்செயலாளர் மாரி முத்து முதல்வர் மு.க.ஸ்டா லினுக்கு எழுதியுள்ள கடி தத்தில் கூறியிருப்பதாவது:

தமிழக அர சின் நெடுஞ்சாலைத்துறையில் இளநிலை வரைதொழில் அலுவலர் பணியிடம் பொறியியல் பட்டய (டிப்ளமோ) கல்வி தகுதி அடிப்படையில் உள்ளது.

திமுக ஆட்சியில் இப்ப ணியிடம் நேரடி நியமனம் மூலம் நிரப்பபட்டது. அதி முக ஆட்சியில் இப்பணியி டத்தை தமிழக அரசு பணி யாளர் தேர்வாணையம் மூலம் நிரப்ப விதி திருத்தம் கொண்டு வரப்பட்டது. அதன் அடிப்படையில் தேர்வாணையம் காலிப்ப ணியிடத்தை நிரப்ப கடந்த செப்டம்பர் 18ம் தேதியில் தேர்வு நடத்தியுள்ளது. இத்தேர்வில் 12ம் வகுப்பு முடித்து டிப்ளமோ படிக் காமல் நேரடியாக பட்டம் படித்தவர்கள் இத்தேர்வை எழுதியுள்ளது விதிக்கு முரணானது.

எனவே, நெடுஞ்சாலைத்துறையில் காலியாக உள்ள இளநிலை வரைதொழில் அலுவலர் பணியிடத்துக்கு கடந்த 18ம் தேதி நடந்த தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுத்து முறையாக டிப் ளமோ பொறியியல் கல்வி தகுதியில் உள்ளவர்கள் மட் டுமே பங்கேற்கும் வகையில் தேர்வு நடத்த அரசு பணி யகாளர் தேர்வாணையத் திற்கு தெளிவுரை வழங்கி உதவுமாறு கேட்டுக்கொள் கிறோம்.
Read More

Saturday, November 20, 2021

தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு - ₹32,000 சம்பளத்தில் குவைத்தில் வீட்டு வேலை

November 20, 2021 0
தமிழக அரசின் அயல் நாட்டு வேலைவாய்ப்பு நிறுவ னம் நிர்வாக இயக்குநர் சி.ந.மகேஸ்வரன் வெளி யிட்ட அறிவிப்பு:

குவைத் நாட்டின் குவைத் கேட் பவுன்டே சன் என்ற நிறுவனத்து டன் தமிழக அரசு நிறு வனமான அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் வீட்டுப்பெண் பணியா ளர்களை பணியமர்த் துவதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத் திட்டுள்ளது. இந்த ஒப் பந்தத்தின்படி வீட்டு பெண் பணியாளர்களாக அரபு நாடுகளில் பணிபு ரிந்து அனுபவமுள்ளவர் களுக்கு மாத ஊதியம் ரூ.32,000, அனுபவம் இல் லாதவர்களுக்கு மாத ஊதியம் ரூ.29,500 வழங் கப்படும்.

வயது வரம்பு 30 முதல் 40 வரை. மேலும் மருத்துவ பரிசோதனை கட்டணம், விசா.விமான பயணச்சீட்டு. உணவு, இருப்பிடம், மருத்துவம், காப்புறுதி, இதர சலுகை குவைத் நாட்டின் சட்ட விதிகளுக்கு உட்பட்டு வேலை அளிப்பவரால் வழங்கப்படும். இந்த ஒப் பந்தம் இரண்டு வருடம் வரை நீடிக்கும்.

இந்த பணியில் சேர விருப்பமுள்ளவர்கள் இந்த புரிந்துணர்வு ஒப் பந்தத்தின் விதிமுறைகள் மற்றும் இதர விவரங்கள் அறிய, சென்னையில் உள்ள அயல் நாட்டு வேலைவாய்ப்பு நிறுவ னத்தை அல்லது மாவட்ட வேலைவாய்ப்பு துறை மற்றும் தொழில்நெறிவழி காட்டும் மைய அலுவல கத்தை அணுகலாம்.

எனவே குவைத் நாட் டில் வீட்டு பெண் பணி யாளராக பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள் தங்களது சுயவிவரங்களு டன் கூடிய விண்ணப் பத்துடன் கல்வித்தகுதி மற்றும் பாஸ்போர்ட் ஆகி யவற்றின் நகல்கள் மற்றும் ஒரு புகைப்படத்துடன் omchousemaidkuwait2l@ gmail.com என்ற மின் னஞ்சலுக்கு விண்ணப் பிக்கலாம்.

வேலைக்கான விவ ரங்களை இந்நிறுவனத் தின் வலைதளம் www. omcmanpower.com மூல மாகவும் இந்நிறு வன தொலைபேசி எண்கள் 044-22505886/044-22500417 மூலமாகவும் அறிந்து கொள்ளலாம்.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தமானது 17.11.2023 வரை நடைமுறையில் இருக்கும். விருப்பமுள்ள மனுதாரர்கள் இக்கால கட்டத்திற்குள் பதிவு செய்து கொள்ளலாம். மேலும், முதலில் பதி வு செய்யும் நபர்களுக்கு முதல் வாய்ப்பு வழங்கப்ப டும்.

இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.
Read More

Post Top Ad

Your Ad Spot