அகவிலைப்படி முரண்பாடுகளை களைய வலியுறுத்தல்

அகவிலைப்படி முரண்பாடுகளை களைய கூட்டுறவு சங்கம் வலியுறுத்தல்

'அரசு ஊழியர்களுக்கும் தங்களுக்கும் இடையே உள்ள அகவிலைப்படி முரண்பாட்டை களைய வேண்டும்' என, தமிழ்நாடு கூட்டுறவு பண்டகசாலை ஊழியர்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் வெங்கடாசலபதி வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:

அரசு ஊழியர்களுக்கு ஆங்கில புத்தாண்டு பரிசாக தமிழக அரசு 4 சதவீத அகவிலைப்படியை உயர்த்தியது வரவேற்கத்தக்கது.

அரசு ஊழியர்களுக்கு அவ்வப்போது உயர்த்தப்படும் அகவிலைப்படி உயர்வு கூட்டுறவு பண்டகசாலை அலுவலக பணியாளர்களுக்கும் ரேஷன் கடை பணியாளர்களுக்கும் பொருந்தும்.அரசு ஊழியர்கள், கடன் வழங்கும் கூட்டுறவு சங்கப் பணியாளர்கள் தற்போது 34 சதவீதம் அகவிலை பெற்றுவரும் நிலையில் அரசு அறிவித்துள்ள இந்த உயர்வால் 38 சதவீதம் அகவிலைப்படி அவர்களுக்கு கிடைக்கும்.

ஆனால் பொது வினியோக திட்டத்தை நடத்தும் தொடக்க கூட்டுறவு பண்டகசாலை அலுவலக பணியாளர்கள், ரேஷன் கடை பணியாளர்கள் தற்போது 31 சதவீதம் பெற்று வரும் நிலையில் இந்த உயர்வால் 35 சதவீதம் மட்டுமே அகவிலைப்படி பெற முடியும். கூட்டுறவுத் துறைக்குள் நிலவும் இந்த அகவிலைப்படி முரண்பாட்டை சரிசெய்து அனைவருக்கும் ஒரே மாதிரியாக 38 சதவீதமாக அகவிலைப்படி வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்
Post a Comment (0)
Previous Post Next Post