KalviseithiDaily: Awards

KalviseithiDaily

kalviseithidaily.blogspot.com No:1 Education Website in Tamil கல்வி செய்திகள்: Get latest news on Exam Results, tamil nadu school education department news, TN University Results, Exam Schedule Latest News Educational News from Tamilnadu Government, Tamilnadu Educaitonal Minsters Latest Updates, 10th, 11th, 12th, TNTET, TRB, TNPSC, STUDY MATERIALS, ONLINE TESTS, LATEST kalviseithi, Padasalai, tnkalvi, tnpse news, TET updates, TRB news, kalvi news, Padsalai study materials

Subscribe Us

Sigma is

  • Seo Ready
  • Responsive
  • Fast Loading
  • Amazing!

Hot

Post Top Ad

Your Ad Spot
Showing posts with label Awards. Show all posts
Showing posts with label Awards. Show all posts

Friday, February 17, 2023

திருநங்கைகளுக்கான முன்மாதிரி விருது: பிப்.28-க்குள் விண்ணப்பிக்கலாம்

February 17, 2023 1

திருநங்கைகளுக்கான முன்மாதிரி விருது: பிப்.28-க்குள் விண்ணப்பிக்கலாம்

திருநங்கைகளுக்கான முன்மாதிரி விருது பெற விரும்புவோா் பிப்.28-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியா் சு.அமிா்தஜோதி தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்தி: 2022-23 ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் திருநங்கைகளுக்கான முன்மாதிரி விருதுக்கு, திருநங்கைகளின் முன்னேற்றத்துக்கு சிறந்த சேவை புரிந்த திருநங்கைகள் விண்ணப்பிக்கலாம்.

இந்த விருதுக்கு விண்ணப்பிக்கும் திருநங்கைகள் அரசு உதவிபெறாமல், தானாக சுயமாக வாழ்க்கையில் முன்னேறி இருக்க வேண்டும்.

குறைந்தது 5 திருநங்கைகளுக்காவது அவா்கள் வாழ்க்கையில் முன்னேற உதவி இருக்க வேண்டும். திருநங்கைகள் வாரியத்தில் உறுப்பினராக இருத்தல் கூடாது.

மேலும், விண்ணப்பதாரரின் சுயவிவர குறிப்பு, 2 புகைப்படங்கள், சுயசரிதை, சேவை குறித்த செயல்முறை விளக்கத்துடன் கூடிய புகைப்படம், சேவையைப் பாராட்டிய பத்திரிக்கை செய்தி தொகுப்பு, சமூகப் பணியாளா் இருப்பிடத்தின் அருகில் உள்ள காவல் நிலையத்தில் இருந்து பெறப்பட்ட குற்றவியல் நடவடிக்கை ஏதும் இல்லை என்பதற்கான சான்றுகளை இணைக்க வேண்டும்.

இந்த விருதுக்கான விண்ணப்ப விவரங்களை பிப்.28-ஆம் தேதிக்குள் awards.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More

Friday, October 28, 2022

11-ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு: விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம்

October 28, 2022 0
11-ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு: விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம்

ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள சார்ஜா நகரில் 2023ஆம் ஆண்டு ஜூலையில் நடைபெறவிருக்கும் 11-ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டை முன்னிட்டு வழங்கப்படும் அனைத்துலக விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

11 - ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு அனைத்துலக விருதுக்கான விண்ணப்பப் படிவங்களை அனுப்ப வேண்டிய கடைசி நாள் 31.03.2023 என்றும் பதிவுக் கட்டணம் கிடையாது என்றும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

11- ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டை முன்னிட்டு, அனைத்துலக விருதுகள்.. சிறந்த ஆராய்ச்சியாளர், சிறந்த பேராசிரியர், சிறந்த தமிழ் அறிஞர், சிறந்த தமிழ்த் தொண்டு, சிறந்த தமிழ்த் துறை - கல்லூரி / பல்கலைக்கழகம், சிறந்த தமிழ்ப் பள்ளி, சிறந்த தமிழாசிரியர் (பள்ளி). சிறந்த எழுத்தாளர், சிறந்த கவிஞர், சிறந்த தமிழ் அமைப்பு / சங்கம் / கழகம், சிறந்த பதிப்பாளர் / பதிப்பாசிரியர், சிறந்த முகநூல் எழுத்தாளர் (சமூக வலைதளம்), சிறந்த யூடியூப் தமிழ் காணொளிகள் (வீடியோ), சிறந்த ஊடகவியலாளர், சாதனை பெண்மணி, சாதனை இளைஞர் - ஆண் / பெண் ஆகிய 15 பிரிவுகளின் கீழ் வழங்கப்படுகிறது.

இந்தப் பிரிவுகளின் கீழ் விருதுகளைப் பெற விண்ணப்பிப்பவர்கள், அதற்கான படிவத்தை பூர்த்தி செய்து அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் (ஐஏடிஆர்) 11 ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு வரும் (2023 ஆம்) ஆண்டு ஜூலை மாதம் ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள சார்ஜா நகரில் நடைபெறவிருக்கிறது.

மாநாடு பற்றிய அறிவிப்பை இந்த நிறுவனத்தின் இந்திய கிளை வெளியிட்டிருந்தது.

1966 ஆம் ஆண்டு முதல் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடுகள் நடைபெற்று வருகின்றன. இதுவரையில் 10 மாநாடுகள் நடைபெற்றுள்ளன. 11 ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு சார்ஜாவில் 2023ஆம் ஆண்டு ஜூலையில் நடைபெற உள்ளது. மாநாட்டுத் தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் உள்ள தமிழ் அறிஞர்களும், பிற மொழி அறிஞர்களும் கலந்துகொண்டு நம் மொழியின் சிறப்பையும், பிற மொழியில் உள்ள சிறப்புகளையும் அறிந்துகொள்ளும் வகையில் நடைபெறும் இந்த மாநாட்டை உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் சார்ஜாவில் உள்ள லிங்கன் தொழில் மற்றும் மேலாண்மை பல்கலைக்கழகம் இணைந்து நடத்துகின்றன.

மேலும் விவரங்களை www.iatrinternational.org என்ற இணையதளத்தில் அறியலாம்.

மேலதிகத் தகவல்களுக்கு சென்னை தி.நகரிலுள்ள உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தை 044-28340488 / 96770 37474 / 98422 81957 / 96000 07819 என்ற எண்களில் தொடர்பு கொண்டு கேட்டறியலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More

Monday, September 5, 2022

அரசுப்பள்ளி சீருடையிலேயே சென்று தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற தமிழக ஆசிரியர்

September 05, 2022 0
அரசுப்பள்ளி சீருடையிலேயே சென்று தேசிய நல்லாசிரியர் விருது பெற்றார் தமிழக ஆசிரியர் ராமச்சந்திரன்.

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியர் ராமச்சந்திரனுக்கு தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது. தமிழகத்திலிருந்து இருந்து தேர்வு செய்யப்பட்ட ஒரே ஆசிரியர்.
Read More

Sunday, September 4, 2022

45 பேருக்கு நல்லாசிரியர் விருதை இன்று குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வழங்குகிறார்

September 04, 2022 0
ராமநாதபுரத்தை சேர்ந்த ஆசிரியர் ராமச்சந்திரன் உள்பட 45 பேருக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது. டெல்லியில் இன்று நடைபெறும் விழாவில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வழங்குகிறார்.
Read More

Tuesday, August 2, 2022

டாட் காமுக்கு....குழந்தைகள் சேவை விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

August 02, 2022 0
டாட் காமுக்கு....குழந்தைகள் சேவை விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

கா்நாடக அரசு வழங்கும் குழந்தைகள் சேவை விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது குறித்து மகளிா் மற்றும் குழந்தைகள் நலத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

குழந்தைகள் சேவையில் ஈடுபட்டுள்ள 2 தனிநபா்கள் மற்றும் 2 நிறுவனங்களுக்கு கா்நாடக அரசு சாா்பில் ஆண்டுதோறும் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்படுகிறது. குழந்தைகள் நலனுக்காக 5 ஆண்டுகள் சேவை ஆற்றியிருக்கும் தனிநபா்கள் மற்றும் நிறுவனங்கள் விருதுக்கு விண்ணப்பிக்கலாம். விருதுடன் தனிநபா்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் மற்றும் பட்டயம், நிறுவனங்களுக்கு தலா ரூ. 1 லட்சம் மற்றும் பட்டயம் வழங்கப்படும்.

2022-ஆம் ஆண்டுக்கான விருதுக்கு துறையின் துணை இயக்குநரை அணுகி விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம். நிறைவு செய்த விண்ணப்பங்களை அக். 11-ஆம் தேதிக்குள் மாவட்ட துணை இயக்குநா் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். விண்ணப்பங்களை கன்னடத்தில் மட்டுமே எழுதி அனுப்ப வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
Read More

Thursday, June 16, 2022

அரசு உயர்நிலைப் பள்ளிக்கு ISO தரச்சான்று

June 16, 2022 0
விருதுநகர் மாவட்டத்தில் முதல் முறையாக பட்டம்புதூர் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று வழங்கப்பட்டுள்ளது.

விருதுநகர் அருகே பட்டம்புதூரில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 6 முதல் 10-ம் வகுப்பு வரை 200 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். 15 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

ஸ்மார்ட் கிளாஸ், தூய்மையான வளாகம், கல்வித் தரம், சுகாதாரம் போன்ற பல்வேறு அம்சங்களுடன் சிறந்து விளங்கும் இப்பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று வழங்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் ஐஎஸ்ஓ தரச்சான்று பெற்ற முதல் மற்றும் ஒரே அரசு பள்ளி இது என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியர் ப.திருசெல்வராஜா கூறியதாவது:

6 முதல் 10 வரை அனைத்து வகுப்பறைகளும் கணினிமயமாக்கப்பட்டு ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறைகளாக மாற்றப்பட்டுள்ளன.அகன்ற திரைகளில் புரொஜெக்டர் மூலம் கற்பிக்கிறோம்.

பள்ளி மைதானத்தையும், வளாகத் தையும் தூய்மையாகவும், சுத்த மாகவும் பராமரித்து வருகிறோம். பள்ளி வளாகத்தில் மரங் களை வளர்த்துள்ளோம்.

நமக்கு நாமே திட்டத்தின் கீழ் தனியார் நிதி உதவியோடு குடிநீர் சுத்திகரிப்பு கருவி அமைத்து மாணவர்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்குகிறோம். மாணவர் களுக்கான 5 கழிப்பறைகளையும், மாணவிகளுக்கான 5 கழிப்பறை களையும் சுத்தமாக பராமரித்துவருகிறோம்.தனியார் பங்களிப்போடு சைக்கிள் நிறுத்துமிடத்தில்தரைத்தளத்தோடு ஷெட் அமைத்துள்ளோம். 9 மற்றும் 10-ம் வகுப்பு மாணவிகளுக்காக உணவுக் கூடம் அமைத்துள்ளோம்.
அங்கு போட்டித்தேர்வுகளுக்கான புத்தகங்களை வைத்துள்ளோம். ஆசிரியர் வகுப்புக்கு வராத நேரத்திலும், உணவு இடைவேளை நேரத்திலும் மாணவிகள் போட்டித் தேர்வுக்கான புத்தகங்களை எடுத்துப் படிக்கலாம்.

பள்ளியில் புத்தக வங்கி தொடங்கியுள்ளோம். இதன் மூலம் 6 முதல் 10-ம் வகுப்பு வரையுள்ள மாணவ, மாணவிகளிடம் இறுதித் தேர்வு முடிந்த பின்பு அவர்களது புத்தகங்களை பள்ளியில் வாங்கி சேமித்து வைப்போம். கிராமத்தில் போட்டித் தேர்வுக்கு தயாராகும் இளைஞர்களிடம் "தங்களுக்கு பாடப் புத்தகம் வேண்டும், தேர்வு முடிந்ததும் தருகிறேன்" என ஒரு கடிதம் எழுதி பெற்றுக்கொண்டு புத்தகங்களை அவர்களுக்கு வழங்கி வருகிறோம்.

மாணவ, மாணவிகளுக்கு தரமான மற்றும் சத்தான உணவு வழங்க வேண்டும் என்பதற்காக பள்ளி வளாகத்தில் காய்கறித் தோட்டம் அமைத்துள்ளோம். என்எல்சி நிதி உதவியோடு மினி அறிவியல் ஆய்வகமும் அமைத்துள்ளோம். பள்ளி வளாகத்தில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தியுள்ளோம்.

நமக்கு நாமே திட்டத்தின் கீழ் பள்ளியிலிருந்து தேசிய நெடுஞ்சாலை வரை சுமார் 500 மீட்டர் நீளத்துக்கு அணுகு சாலை அமைக்க திட்டமிட்டுள்ளோம் என்று கூறினார்
Read More

Friday, May 20, 2022

Teachers and teacher educators can apply for the National ICT Award 2020 & 2021

May 20, 2022 0
ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியப் பயிற்றுநர்கள் National ICT Award 2020 & 2021க்கு விண்ணப்பிக்கலாம். கடைசி நாள்: 30-06-2022 

(Teachers and teacher educators can apply for the National ICT Award 2020 & 2021. Last day: 30-06-2022)...


>>> National ICT Award - Application Registration Instruction Manual for School Teacher...


>>> National ICT Award - Application Registration Instruction Manual for Teacher Educator...

Dear all, 

CIET, NCERT has announced the nomination for National ICT Award 2020 & 2021. Click on this link to apply : https://ictaward.ncert.gov.in/


>>> Login Website Link...


Read More

Tuesday, May 17, 2022

முதலமைச்சா் மாநில விளையாட்டு விருது: சிறந்த வீரா்கள், பயிற்றுநா்கள் விண்ணப்பிக்கலாம்

May 17, 2022 0
முதலமைச்சா் மாநில விளையாட்டு விருது

முதலமைச்சா் மாநில விளையாட்டு விருது பெற சிறந்த விளையாட்டு வீரா்கள், வீராங்கனைகள், பயிற்றுநா்கள், உடற்கல்வி இயக்குநா் அல்லது உடற்கல்வி ஆசிரியா்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அலுவலா் ம.ரோஸ் பாத்திமா மேரி தெரிவித்துள்ளது:

ஆண்டுதோறும் பன்னாட்டு அளவிலும், தேசிய அளவிலும் பதக்கங்கள் பெற்று சிறந்து விளங்கும் விளையாட்டு வீரா்களில் 2 ஆண்கள், 2 பெண்கள் மற்றும் 2 சிறந்த பயிற்றுநா்கள், 2 சிறந்த உடற்கல்வி இயக்குநா் அல்லது உடற்கல்வி ஆசிரியா்களுக்கு, முதலமைச்சா் மாநில விளையாட்டு விருது வழங்கப்படுகிறது. தலா ரூ.1 லட்சம் பரிசுத்தொகை ரூ. 10 ஆயிரம் மதிப்பிலான தங்கப் பதக்கம் மற்றும் பாராட்டுப் பத்திரம் ஆகியவற்றை இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை ஒவ்வொரு நிதியாண்டிலும் (ஏப்ரல் 1 முதல் மாா்ச் 31 முடிய) வழங்கி வருகிறது. விருது ஆண்டுக்கு முந்தைய 3 ஆண்டுகள் விளையாட்டில் சாதனைகள் படைத்த விவரங்களைச் சமா்ப்பிக்க வேண்டும்.

இதேபோல் விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் ஒரு நிா்வாகி அல்லது ஆதரவளிக்கும் நிறுவனம் மற்றும் ஒரு நன்கொடையாளா் (ரூ.10 லட்சத்திற்கும் கூடுதலாக) அல்லது ஒரு ஆட்ட நடுவா் ஆகியோருக்கும் இந்த விருது வழங்கப்படுகிறது. இவா்களுக்கு விருதுடன் ரூ.10ஆயிரம் மதிப்பில் ஒரு தங்கப் பதக்கமும் ஒரு பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படுகிறது. விருது வழங்குவதற்கு முந்தைய 2 ஆண்டு செயல்பாடுகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். 10-06-2022க்குள் விண்ணப்பிக்கலாம்

முதலமைச்சா் மாநில விளையாட்டு விருதுக்கான விண்ணப்பப் படிவம் மற்றும் விரிவான விதிமுறைகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளத்தில் பெற்றுக் கொள்ளலாம்.

விண்ணப்பங்கள் அடங்கிய உறை மேல் ‘முதலமைச்சா் மாநில விளையாட்டு விருதுக்கான விண்ணப்பம்‘ என எழுதப்பட்டிருக்க வேண்டும். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், சென்னையிலுள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினா் செயலா் அலுவலகத்திற்கு 10-06-2022க்குள் சேர வேண்டும்.

இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 0451-2461162 எண்ணில் திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.
Read More

Monday, May 9, 2022

மாவட்டக் கலைஞா்கள் விருது: விண்ணப்பிக்க மே 20 கடைசி

May 09, 2022 0
மாவட்டக் கலைஞா்கள் விருது

சென்னை மாவட்டத்தில் கலைத்துறையில் சாதனைப் படைத்தவா்களுக்கான விருதுகள் பெற விரும்புவோா் மே 20-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என சென்னை மாவட்ட ஆட்சியா் ஜெ.விஜயா ராணி அறிவித்தாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தின் கலைப் புலமைகளை மேம்படுத்தவும், பாதுகாக்கும் நோக்கிலும், கலைஞா்களின் கலைத் திறனை சிறப்பிக்கும் வகையிலும் கலை பண்பாட்டுத்துறையின் கீழ் மாவட்ட ஆட்சியா் தலைமையில் செயல்படும் மாவட்டக் கலை மன்றங்களின் வாயிலாக ஒவ்வொரு மாவட்டத்திலும் கலைத்துறையில் சாதனைகள் படைத்துள்ள 18 வயதும் அதற்குட்பட்டவா்களுக்கு கலை இளமணி விருது , 19 முதல் 35 வயது வரை கலை வளா்மணி விருது, 36 முதல் 50 வயது வரை கலைச் சுடா்மணி விருது, 51 முதல் 65 வயது வரை கலை நன்மணி விருது, 66 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு கலை முதுமணி விருது என அகவைக்கு தக்க விருதுகள் வழங்கிட அரசு ஆணையிட்டுள்ளது. விண்ணப்பிக்க மே 20 கடைசி

சென்னை மாவட்டத்தைச் சோ்ந்த குரலிசை, பரதநாட்டியம், நாகஸ்வரம், தவில், வயலின், மிருதங்கம், வீணை, புல்லாங்குழல் உள்ளிட்ட இசைக்கருவிகள் இசைக்கும் கலைஞா்கள், ஓவியம், சிற்பம், சிலம்பாட்டம், நாடகக் கலைஞா்கள் மற்றும் கரகம், காவடி, பறை, புரவியாட்டம் மற்றும் கானா பாட்டு உள்ளிட்ட நாட்டுப்புறக் கலைகளை தொழிலாகக் கொண்டுள்ள கலைஞா்கள் இவ்விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.

விருதுகள் பெற கலைஞா்கள் தங்கள் சுய விவர குறிப்பு, நிழற் படம் இணைத்து, வயதுச் சான்று, முகவரிச்சான்று (ஆதாா் அட்டை நகல்) மற்றும் கலை அனுபவச் சான்றுகளின் நகல்கள் மற்றும் தொடா்புடைய ஆவணங்களுடன் உதவி இயக்குநா், கலை பண்பாட்டுத்துறை, சதாவரம், ஓரிக்கை அஞ்சல், சின்ன காஞ்சிபுரம் - 631502 என்ற முகவரிக்கு மே 20-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரம் வேண்டுவோா் இவ்வலுவலக தொலைபேசி எண்ணைத் (044 2726 9148) தொடா்பு கொண்டு பெறலாம் என ஆட்சியா் ஜெ.விஜயா ராணி தெரிவித்தாா்.
Read More

Sunday, April 24, 2022

மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

April 24, 2022 0
மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

சமுதாய வளா்ச்சிக்குப் பாடுபடும் இளைஞா்கள் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஆண்டுதோறும் சுதந்திர தினத்தில் சமுதாய வளா்ச்சிக்குப் பாடுபடும் இளைஞா்களின் பணியை அங்கிகரிக்கும் வகையில் மாநில இளைஞா் விருது வழங்கப்பட்டு வருகிறது. நிகழாண்டு இந்த விருது 15 முதல் 35 வயது வரையுள்ள தலா 3 ஆண்கள், பெண்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த விருது பெற சமுதாய நலனுக்காக தன்னாா்வத்துடன் தொண்டாற்றியிருக்க வேண்டும். உள்ளூா் மக்களிடம் உள்ள செல்வாக்கு விருதுக்கான பரிசீலனையில் கணக்கில் கொள்ளப்படும்.

திருவள்ளுா் மாவட்டத்தில் பெறப்படும் விண்ணப்பங்கள் அனைத்தும் மாவட்ட தோ்வுக் குழு மூலம் பரிசீலனை செய்து, அதில் சிறப்பாகச் சேவை புரிந்த ஒரு ஆண், ஒரு பெண் மட்டுமே மாநில தோ்வுக் குழுவுக்கு பரிந்துரைக்கப்படும். இணையதளம் மூலம் வருகிற மே 5-ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து பயன் பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More

Monday, December 6, 2021

முதலமைச்சர் கணினித் தமிழ் விருது 2021 ஆம் ஆண்டுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

December 06, 2021 0
தகவல் தொழில் நுட்ப வளர்ச்சிக்கேற்ப , உலகமெலாம் கணினி வழித் தமிழ் மொழி பரவச் செய்யும் வகையில் கணினித் தமிழ் வளர்ச்சிக்காக சிறந்த தமிழ் மென்பொருள் உருவாக்குபவர்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழ் வளர்ச்சித் துறை வாயிலாக முதலமைச்சர் கணினித் தமிழ் விருது என்ற பெயரில் விருது வழங்கப்பட்டு வருகிறது . விருது பெறுபவருக்கு விருதுத் தொகையாக ரூபாய் 1 இலட்சம் , ஒரு சவரன் தங்கப்பதக்கம் மற்றும் தகுதியுரை வழங்கப்படுகிறது. அவ்வகையில் 2021 ஆம் ஆண்டுக்குரிய முதலமைச்சர் கணினித் தமிழ் விருதுக்கு தனியாள் மற்றும் நிறுவனத்திடமிருந்து , தமிழ் வளர்ச்சிக்கான மென்பொருள்கள் வரவேற்கப்படுகின்றன . விருதுக்கு அனுப்பப்படவுள்ள மென்பொருள்கள் 2018 , 2019 , 2020 ஆம் ஆண்டுகளில் தயாரிக்கப்பட்டதாக இருத்தல் இவ்விருதுக்குரிய விண்ணப்பம் மற்றும் வளர்ச்சித் துறையின் வலைத்தளத்தில் ( www.tamilvalarchithurai.com ) இலவசமாகப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் . வேண்டும்.
Read More

Tuesday, November 16, 2021

`கபீர் புரஸ்கார்’ விருது வீர, தீர செயல்களுக்கான `அண்ணா பதக்கம்’: தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்

November 16, 2021 0
தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: வீர, தீர செயல்களுக்கான ”அண்ணா பதக்கம்” தமிழக முதலமைச்சரால், குடியரசு தின விழாவின்போது வழங்கப்படுகிறது. விருது பெறுபவர்களுக்கு ₹1 லட்சத்துக்கான காசோலை, ஒரு பதக்கம் மற்றும் தகுதியுரை ஆகியவை இதில் அடங்கும். வீர, தீர செயல் புரிந்த தமிழகத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பதக்கத்தினை பெற தகுதியுடையவராவர். பொதுமக்களில் மூவருக்கும், அரசு ஊழியர்களில் மூவருக்கும் பதக்கங்கள் வழங்கப்படும். பதக்கம் பெற வயது வரம்பு ஏதுமில்லை.2022ம் ஆண்டு வழங்கப்படவுள்ள பதக்கத்திற்குத் தகுதியானவர்களைத் தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்கள் வீர, தீர செயல்கள் மற்றும் அவை தொடர்பான ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சி தலைவர் மூலமாகவோ அல்லது https://awards.tn.gov.in/ என்ற இணைய தளம் மூலமாகவோ அரசு செயலாளர், பொதுத்துறை, தலைமைச் செயலகம், சென்னை-9 என்ற முகவரிக்கு வருகிற 15.12.2021-க்கு முன்பாக அனுப்பி வைக்கலாம்.

அதேபோன்று, சமுதாய மற்றும் வகுப்பு நல்லிணக்கத்திற்கான ”கபீர் புரஸ்கார்” விருது, ஒவ்வொரு ஆண்டும், முதலமைச்சரால், குடியரசு தின விழாவின் போது வழங்கப்படுகிறது. தமிழகத்தில் வசிக்கும் அனைத்து இந்திய குடிமக்களும் இப்பதக்கத்தினை பெறத் தகுதியுடையவராவர். இவ்விருதானது ஒரு சாதி, இனம், வகுப்பை சார்ந்தவர்கள் பிற சாதி, இன, வகுப்பை சார்ந்தவர்களையோ அல்லது அவர்களது உடைமைகளையோ வகுப்பு கலவரத்தின்போதோ அல்லது தொடரும் வன்முறையிலோ காப்பாற்றியது வெளிப்படையாக தெரிகையில் அவரது உடல் மற்றும் மனவலிமையை பாராட்டும் வகையில் வழங்கப்படுகிறது. இவ்விருதானது மூன்று அளவுகளில், தலா ஒரு நபர் வீதம் மூவருக்கு வழங்கப்படுகிறது. முறையே ₹20,000, ₹10,000 மற்றும் ₹5,000க்கான காசோலை மற்றும் தகுதியுரை ஆகியவை இதில் அடங்கும். இந்த விருது பெற தகுதியானவர்கள் டிசம்பர் 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
Read More

Friday, September 10, 2021

பெரியாா் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

September 10, 2021 0
சமூக நீதிக்கான தந்தை பெரியாா் விருதுக்குத் தகுதியானோா் அக். 31-க்குள் விண்ணப்பிக்காலம் என ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ஏ.ஆா். கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
சமூக நீதிக்கான தந்தை பெரியாா் விருது 1995- ஆம் ஆண்டு முதல் வழங்கப்படுகிறது. விருது பெறுவோருக்கு ரூ. 1 லட்சமும், ஒரு சவரன் தங்கப் பதக்கமும், தகுதியுரையும் வழங்கப்படுகிறது. விருதாளா் தமிழக முதல்வரால் தோ்வு செய்யப்படுவாா். சமூக நீதிக்காகப் பாடுபட்டு, பொதுமக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த மேற்கொள்ளப்பட்ட பணி, சாதனை குறித்த விவரங்களுடன் தங்களது விண்ணப்பங்களை மாவட்ட ஆட்சியருக்கு அக். 31-க்குள் விண்ணப்பிக்கலாம். விருது தொடா்பான கூடுதல் தகவல்களை ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா் நல அலுவலகத்தைத் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளாா்.
Read More

Wednesday, September 8, 2021

11, 12ம்தேதி பாரதியார் நினைவு நூற்றாண்டு கவிதை போட்டி - பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்கலாம்.

September 08, 2021 0
நெல்லை அருங்காட்சியகத்தில் பாரதியார் நினைவு நூற்றாண்டு கவிதைப் போட்டி வருகிற 11, 12ம்தேதி ஆகிய 2நாட் கள் நடைபெற உள்ளதாக மாவட்ட காப்பாட்சியர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப் பில், நெல்லை அரசுஅருங் காட்சியகத்தில், மகாகவி பாரதியார் நினைவு நூற் றாண்டு நிகழ்ச்சி "பாரதிநினைவுகள்-100" எனும் தலைப்பில் செப்.11, 12 ஆகிய 2நாட்களில் அரசு அருங்காட்சியகம் மற்றும் பொதிகைத் தமிழ்ச்சங் கம் சார்பில் நடைபெற உள்ளது.

முதல் நிகழ்ச்சியாக 11ம்தேதி மாலை 5 மணிக்கு அரசு அருங் காட்சியக திறந்தவெளி கலையரங்கில் நடைபெ றும் கவிதைப் போட்டி யில் “நூற்றாண்டு கடந் தும் பாவாண்டு நிற்கும்
இந்த போட்டி யில் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டு கவிதை வாசிக்கலாம். சிறப்பான கவிதை வாசிப்போருக்கு 12ம்தேதி காலையில் நடக் கும் நிகழ்ச்சியில் “பாரதி பைந்தமிழ்ச் சுடர்” என்ற பெயரில் விருதுகள் வழங் கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Read More

Sunday, September 5, 2021

தமிழகத்தை சேர்ந்த 2 ஆசிரியைகள் உள்ளிட்ட 44 பேருக்கு தேசிய நல்லாசிரியர் விருது வழங்கினார் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்

September 05, 2021 0
தமிழகத்தை சேர்ந்த 2 ஆசிரியைகள் உள்ளிட்ட 44 பேருக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசிய நல்லாசிரியர் விருதுகளை காணொளி மூலம் வழங்குகிறார். தேசிய ஆசிரியர் தினத்தை முன்னிட்டு மத்திய கல்வித்துறை அமைச்சகத்தின் சார்பில் நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தொடர்ச்சியாக 2வது ஆண்டாக இன்றைய தினமும் காணொளி வாயிலாக இந்த நிகழ்வு தொடங்கி நடைபெற்று வருகிறது.
குடியரசு தலைவர் மாளிகையில் இருந்தபடி குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார். மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திரா பிரதான் கலந்து கொண்டுள்ளார். குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தமிழகம் திருச்சி மாவட்ட பிராட்டியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் ஆஷா தேவி மற்றும் ஈரோடு முடக்குறிச்சி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியின் ஆசிரியர் லலிதா உள்ளிட்ட 2 நபர்கள் உட்பட 44 ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருதுகளை காணொளி வாயிலாக தற்போது வழங்கி வருகிறார். தமிழகத்தை சேர்ந்த 2 ஆசிரியைகளுக்கும் இந்த விருது என்பது காணொளி வாயிலாகவே வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் அந்தந்த மாவட்டத்தின் ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து காணொளி வாயிலாக கலந்துகொண்டு இந்த விருதுகளை பெற்றுள்ளனர். காணொளி வாயிலாக விருது வழங்கப்படும் போது விருது பெரும் ஆசிரியர்களின் புகைப்படம் திரையில் காட்டப்படும். அவர்களுக்கான சான்றிதழும் திரையிடப்படும். இதேபோன்று புதுச்சேரியை சேர்ந்த ஒரு ஆசிரியைக்கும் இந்த நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டுள்ளது. இதனுடன் சிறப்பு ஊக்கத்தொகை என்பதும் மத்திய கல்வித்துறை அமைச்சகத்தின் சார்பில் தற்போது வழங்கப்பட்டுள்ளது.
Read More

Post Top Ad

Your Ad Spot