KalviseithiDaily: Law

KalviseithiDaily

kalviseithidaily.blogspot.com No:1 Education Website in Tamil கல்வி செய்திகள்: Get latest news on Exam Results, tamil nadu school education department news, TN University Results, Exam Schedule Latest News Educational News from Tamilnadu Government, Tamilnadu Educaitonal Minsters Latest Updates, 10th, 11th, 12th, TNTET, TRB, TNPSC, STUDY MATERIALS, ONLINE TESTS, LATEST kalviseithi, Padasalai, tnkalvi, tnpse news, TET updates, TRB news, kalvi news, Padsalai study materials

Subscribe Us

Sigma is

  • Seo Ready
  • Responsive
  • Fast Loading
  • Amazing!

Hot

Post Top Ad

Your Ad Spot
Showing posts with label Law. Show all posts
Showing posts with label Law. Show all posts

Wednesday, April 27, 2022

அரசு சட்டக்கல்லூரிகளில் முதுநிலை பட்டப்படிப்பு

April 27, 2022 0
Law Minister Raghupathi has said that postgraduate studies will be started in government law colleges. He said a new law center would be set up at the Tamil Nadu National Law University in Trichy. District and Sessions Court will be set up in Kallakurichi. Udagai noted that a primary criminal arbitration court would be set up alone.

அரசு சட்டக்கல்லூரிகளில் முதுநிலை பட்டப்படிப்பு தொடங்கப்படும் என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து பேசிய அவர், திருச்சியில் தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் புதிய சட்ட மையம் நிறுவப்படும். கள்ளக்குறிச்சியில் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றம் அமைக்கப்படும். உதகையில் தனியாக ஒரு முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் அமைக்கப்படும் என்று குறிப்பிட்டார்.
Read More

Thursday, November 25, 2021

நவம்பர் 26 - இந்திய அரசமைப்புச் சட்ட நாளை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துச் செய்தி

November 25, 2021 0
நவம்பர் 26 - இந்திய அரசமைப்புச் சட்ட நாளை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துச் செய்தி!
Read More

Thursday, November 18, 2021

3 வேளாண் சட்டங்களும் வாபஸ் - மத்திய அரசு

November 18, 2021 0
மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்படும் என பிரதமர் மோடி அறிவிப்பு.

மத்திய அரசு கொண்டு வந்த 3வேளாண் சட்டங்களை வருகின்ற நாடாளுமன்ற கூட்டத்தொடரில் முறைப்படி திரும்ப பெற நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
Read More

Saturday, November 13, 2021

சின்மயா பள்ளியின் முதல்வர் மீது போக்சோ வழக்கு

November 13, 2021 0
மாணவி மீதான பாலியல் வழக்கு தொடர்பாக கோவை சின்மயா பள்ளி முதல்வர்மீது போக்சோ வழக்கு தொடரப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்திருக்கிறது.கோவை கோட்டைமேடு பெருமாள் கோயில் வீதியை சேர்ந்த மாணவி பொன்தாரணி (17), ஆர்.எஸ்.புரத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். அதே பள்ளியில், இயற்பியல் ஆசிரியராக பணிபுரியும் மிதுன் சக்கரவர்த்தி என்பவர், இம்மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதை, சக மாணவிகளிடம் கூறி, பொன்தாரணி கதறி அழுதுள்ளார். இந்த விவகாரம் வெளியே தெரியக்கூடாது என ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே ஒருநாள் பள்ளிக்கு சீக்கிரமாக வரவழைத்து, கலையரங்கத்துக்கு அழைத்துச்சென்று, மேலாடையை கழற்றி, மானபங்கப்படுத்தியுள்ளார். பள்ளி முதல்வரிடம் புகார் செய்தபோது அவர்கள் ஆசிரியரை கண்டிப்பதற்கு பதில் மாணவியை கண்டித்தார். 11ம் வகுப்பு இறுதி தேர்வு முடிந்ததும், பொன்தாரணி, பள்ளியில் இருந்து மாற்றுச்சான்றிதழ் வாங்கி வந்துவிட்டார். பின்னர், ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் 12-ம் வகுப்பில் சேர்ந்து படித்தார்.

இங்கு, சேர்ந்த இரண்டு மாதங்களில் அந்த ஆசிரியர் மீண்டும் தொல்லை கொடுக்க ஆரம்பித்தார். இதில் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாகத்தான் அவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதுதொடர்பாக கோவை மேற்கு மகளிர் காவல்நிலைய போலீசார், ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தியை கைது செய்து அவர் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பள்ளியின் முதல்வர் மீரா ஜாக்சன் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவரை கைது செய்ய காவல்துறை திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
Read More

Post Top Ad

Your Ad Spot