KalviseithiDaily: Exams

KalviseithiDaily

kalviseithidaily.blogspot.com No:1 Education Website in Tamil கல்வி செய்திகள்: Get latest news on Exam Results, tamil nadu school education department news, TN University Results, Exam Schedule Latest News Educational News from Tamilnadu Government, Tamilnadu Educaitonal Minsters Latest Updates, 10th, 11th, 12th, TNTET, TRB, TNPSC, STUDY MATERIALS, ONLINE TESTS, LATEST kalviseithi, Padasalai, tnkalvi, tnpse news, TET updates, TRB news, kalvi news, Padsalai study materials

Subscribe Us

Sigma is

  • Seo Ready
  • Responsive
  • Fast Loading
  • Amazing!

Hot

Post Top Ad

Your Ad Spot
Showing posts with label Exams. Show all posts
Showing posts with label Exams. Show all posts

Wednesday, January 18, 2023

ஞாயிறன்று பருவத்தேர்வு: மாணவர்கள் அதிருப்தி

January 18, 2023 0
ஞாயிறன்று பருவத்தேர்வு: மாணவர்கள் அதிருப்தி

விடுமுறை நாளான ஞாயிற்றுக் கிழமையும் பருவத்தேர்வு நடத்தப்படும் என அண்ணா பல்கலை. அறிவித்துள்ளதால் மாணவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

அண்ணா பல்கலைக்கழகம் தொலைதூரக் கல்வி வாயிலாக எம்பிஏ, எம்சிஏ மற்றும் எம்.எஸ்சி(கணினி அறிவியல்) பட்டப் படிப்புகளை பயிற்றுவித்து வருகிறது. இந்நிலையில் நடப்புகல்வியாண்டுக்கான பருவத்தேர்வு (ஆகஸ்ட் - செப்டம்பர்) அட்டவணையை பல்கலைக் கழகம் தற்போது வெளியிட்டுள்ளது.

பிப்.12-ல் தேர்வு: அதன்படி பருவத்தேர்வுகள் ஜன.30-ம் தேதி தொடங்கி பிப்.23-ம் தேதி வரை நடைபெற உள்ளன. இதற்கான கால அட்டவணையில் பிப்ரவரி 12-ம் தேதியான ஞாயிற்றுக்கிழமையன்று தரவுதள மேலாண்மை அமைப்பு, மின் வணிகம், மருத்துவச் சுற்றுலா உள்ளிட்ட சில பாடங்களுக்கான தேர்வுகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நடைமுறைக்கு மாறாக... வழக்கமாக கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கான நுழைவுத் தேர்வுகள், போட்டித் தேர்வுகள் மட்டுமே ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்தப்படும். ஆனால், புதிய நடைமுறையாக தற்போது, பட்டப் படிப்புகளுக்கான பருவத் தேர்வையும் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமையில் நடத்த அண்ணா பல்கலை. முடிவு செய் துள்ளது மாணவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சமூக வலைதளங்களில் இது விவாதப் பொருளாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Read More

Wednesday, January 4, 2023

பொதுத் தோ்வு எழுதும் மாணவா்களுடன் ஜன.27-இல் பிரதமா் கலந்துரையாடல்

January 04, 2023 0
பொதுத் தோ்வு எழுதும் மாணவா்களுடன் ஜன.27-இல் பிரதமா் கலந்துரையாடல்

பொதுத் தோ்வுக்குத் தயாராகி வரும் மாணவா்கள், அவா்களது பெற்றோா் மற்றும் ஆசிரியா்களுடன் பிரதமா் நரேந்திர மோடி ஜன.27-ஆம் தேதி கலந்துரையாட உள்ளாா் என மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்நிகழ்வு குறித்து அந்த அமைச்சகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட ட்விட்டா் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

பரீக்ஷா பே சா்ச்சா நிகழ்ச்சி தில்லியில் உள்ள தால்கடோரா உள்விளையாட்டு அரங்கில் ஜன.27-ஆம் தேதி நடைபெற உள்ளது. பொதுத் தோ்வை எழுத உள்ள மாணவா்கள், அவா்களது பெற்றோா் மற்றும் ஆசிரியருடன் பிரதமா் மோடி கலந்துரையாடுவாா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கலந்துரையாடல் நிகழ்ச்சியின் முதலாவது நிகழ்வு 2018-இல் பிப்ரவரி 18-ஆம் தேதி இந்த விளையாட்டு அரங்கில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
Read More

Tuesday, December 27, 2022

மத்திய அரசின் பணியாளர் தேர்வாணைய தேர்வுகளை தமிழில் நடத்திடுக: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

December 27, 2022 0
மத்திய அரசின் பணியாளர் தேர்வாணைய தேர்வுகளை தமிழில் நடத்திடுக: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

சென்னை: மத்திய அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் பணி நியமனங்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கான வாய்ப்புகளை உறுதி செய்திட வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், "நாட்டில் அனைத்துப் பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கும் போதுமான வாய்ப்புகள் வழங்குவதன் மூலம் மட்டுமே சிறந்த சேவை வழங்குவதை உறுதி செய்திட முடியும். மத்திய அரசு மற்றும் மத்திய பொதுத் துறை நிறுவனங்களில் சேருவதற்கான அவர்களது விருப்பத்தை நிறைவேற்ற முடியும். நல்ல நிர்வாகத்திற்கு பொது மக்களுடன் இணக்கமாகப் பழகுதல், உள்ளூர் மொழி தெரிந்திருத்தல், கலாச்சாரத்தில் பரிச்சயம் போன்றவை முக்கியமானவை. கல்வி மற்றும் தொழில்நுட்பத்தில் ஒப்பீட்டளவில் பரந்த அறிவு மற்றும் திறமையுடன் கூடிய மனித வளங்களை தமிழ்நாடு கொண்டுள்ளதால், அவற்றை நன்கு பயன்படுத்திட முடியும். மத்திய அரசு மற்றும் மத்திய பொதுத் துறை நிறுவனங்களின் பணி நியமனத்தில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று பல்வேறு மாணவர் நலச் சங்கங்கள், அரசியல் கட்சியினர் கோரிக்கை விடுத்து வருவகின்றனர். 2021-2022 ஆம் ஆண்டிற்கான பணியாளர் தேர்வாணையத்தின் வருடாந்திர அறிக்கையில், பணியாளர் தேர்வு ஆணையத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட தகுதி வாய்ந்த நபர்களில், 4.5 சதவீதம் அளவில் மட்டுமே தென் மண்டலத்தைச் சேர்ந்த தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

அதோடு, தென் மண்டலத்தில் ரயில்வே பணியாளர் தேர்வாணையத்தால் பல்வேறு பணியிடங்களுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் பெரும்பான்மையானவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் அல்ல. இது வேலை தேடும் இளைஞர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தையும், சமூக, அரசியல் வட்டாரத்தில் கவலையையும் ஏற்படுத்தியிருக்கிறது. இத்தகைய சமச்சீரற்ற பணித் தேர்வு முறை தவிர்க்கப்பட வேண்டிய தாக்கங்களைக் கொண்டிருக்கிறது.

இந்தச் சூழ்நிலையில், தமிழர்களுக்கான வேலைவாய்ப்புகளை அதிகரித்திடும் வகையில், தமிழ்நாட்டில், மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையங்களால் நடத்தப்படும் அனைத்துத் தேர்வுகளையும் தமிழில் நடத்திடவும், தமிழ்நாட்டிலுள்ள மத்திய அரசு அலுவலகங்கள் மற்றும் மத்திய பொதுத் துறை நிறுவனங்களின் பணி நியமனத்தில் தமிழ்நாட்டைச் சார்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளித்திடவும், தமிழ்நாட்டிலுள்ள இரயில்வே நிறுவனங்களில் பயிற்சி பெறுவோருக்கு, 20 சதவீத இடஒதுக்கீட்டின்கீழ் நேரடி நியமனங்களில், பிராந்திய பிரதிநிதித்துவத்தை உறுதி செய்திடும் வகையில் முன்னுரிமை அளிக்க வேண்டும்" என்று அந்தக் கடிதத்தில் முதல்வர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
Read More

Monday, December 26, 2022

காதலனுக்காக தேர்வெழுத சென்ற பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்!

December 26, 2022 0
’காதல் கண்ணை மறைக்கும்’ என்று சொல்வார்கள். அதற்கேற்றார்போல் சில நேரங்களில் தங்கள் காதலை நிரூபிக்க சிலர் செய்யும் முட்டாள்த்தனமான சம்பவங்களை நாம் கேட்பதுண்டு. அதுபோன்றதொரு சம்பவத்தில் ஈடுபட்டு தனது வாழ்க்கையையே கேள்விக்குறியாக்கியுள்ளார் குஜராத்தைச் சேர்ந்த ஒரு பெண்.

தனது எதிர்காலத்தையே பணயம் வைத்து, 24 வயது பெண் ஒருவர் தனது காதலனுக்காக பி.காம் 3ஆம் ஆண்டு தேர்வு எழுதச் சென்று கையும் களவுமாக மாட்டியுள்ளார். இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், அந்த பெண்ணின் காதலன் உத்தராகண்டிற்கு சுற்றுலாச் சென்றிருப்பதுதான்.

குஜராத்திலுள்ள வீர் நர்மத் சவுத் குஜராத் பல்கலைக்கழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் நடந்த பி.காம் 3ஆம் ஆண்டு தேர்வின்போது FACT குழு பரிசோதனை மேற்கொண்டபோது, இந்த குற்றம் கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து இதன் விசாரணை தற்போது நிறைவடைந்துள்ளது. அந்த பெண்ணும், அவருடைய காதலனும் பள்ளிப்பருவத்திலிருந்தே நண்பர்கள் என்பதும், தன் காதலனுக்கு பதிலாக தேர்வு எழுதியது அந்த பெண்ணின் பெற்றோரு தெரியாது என்பதும் விசாரணையில் தெரியவந்திருக்கிறது. மேலும், ஆசிரியர்கள் கண்டுபிடிக்காதிருக்க கம்ப்யூட்டர் உதவியுடன் ஹால் டிக்கெட்டில் சில மாற்றங்களை செய்து பிரிண்ட் எடுத்து, தேர்வறைக்குள் நுழைந்ததையும் விசாரணையில் குறிப்பிட்டுள்ளார். ”தேர்வு மேற்பார்வையாளர் தினந்தோறும் மாறுவதால் அனைத்து மாணவர்களையும் அடையாளம் கண்டுகொள்வது சிரமம்.

எப்படியிருந்தாலும் தினமும் ஹால் டிக்கெட்டை பரிசோதிப்பர். ஆனால், தினந்தோறும், அந்த இருக்கையில் வேறு ஒரு மாணவன் அமர்ந்து இருப்பார் என்பதை மற்றொரு மாணவி கூறியதையடுத்து அவர் பிடிபட்டார்” என்று கூறியுள்ளார் கல்லூரி ஃபேலக்டி உறுப்பினர்.

அந்த பெண் பிடிபட்ட பிறகு, மாணவன் விசாரணைக்கு அழைக்கப்பட்டார். அப்போதுதான் அவர் உத்தராகண்டிற்கு சுற்றுலா சென்றிருந்தது தெரியவந்தது. மேலும் அந்த மாணவன் மூன்றாமாண்டு பி.காமில் தொடர்ந்து தோல்வியுற்று வந்ததால் அவருக்கு பதிலாக அவருடைய காதலி தேர்வு எழுத வந்ததும் தெரியவந்தது. இதற்கிடையில், VNSGU இன் சிண்டிகேட் அந்த பெண்ணின் பி.காம் பட்டப்படிப்பை ரத்து செய்ய பல்கலைக்கழகத்தின் FACT குழுவின் பரிந்துரையை ஏற்க முடிவு செய்தால், அந்தப் பெண் தனது அரசாங்க வேலையை கூட இழக்க நேரிடும் என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா தெரிவித்திருக்கிறது.
Read More

மாண்டஸ் புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட TNPSC தேர்வு நாளை (27.12.22) நடைபெறுகிறது

December 26, 2022 0


TNPSC - வனத் தொழில் பழகுநா் பதவி: வரும் 27-இல் தோ்வு

வனத் தொழில் பழகுநா் பதவிக்கான தோ்வு வரும் 27-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதுகுறித்து அரசுப் பணியாளா் தோ்வாணையம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு வன சாா்நிலைப் பணியில் வனத் தொழில் பழகுநா் பதவி அடங்கியுள்ளது. இந்தப் பதவியில் காலியாக உள்ள இடங்களுக்கு டிசம்பா் 10-ஆம் தேதி தோ்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. மாண்டஸ் புயல் பாதிப்பு காரணமாக, இந்தத் தோ்வு ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில், வனத் தொழில் பழகுநா் பதவிக்கான கணினி வழித் தோ்வானது, டிச. 27-ஆம் தேதி காலை, பிற்பகல் என இரண்டு வேளைகளில் நடைபெறவுள்ளது. ஏற்கெனவே பதிவிறக்கம் செய்த தோ்வுக்கூட நுழைவுச் சீட்டைப் பயன்படுத்தி தோ்வை எழுதலாம் என்று அரசுப் பணியாளா் தோ்வாணையம் அறிவித்துள்ளது.
Read More

Wednesday, December 21, 2022

10,11,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு தனிதேர்வர்கள் விண்ணப்பிக்கும் தேதி அறிவிப்பு - Date Notification for Individual Candidates to Apply for Class 10,11,12 Public Examination

December 21, 2022 0


10,11,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு தனிதேர்வர்கள் விண்ணப்பிக்கும் தேதி அறிவிப்பு - Date Notification for Individual Candidates to Apply for Class 10,11,12 Public Examination

10ம் வகுப்பு பொதுத் தேர்வு அல்லது அதற்கு இணையான தேர்வில் தேர்ச்சி பெற்று ஓராண்டு இடைவெளியுடன் இருக்கும் மாணவர்கள் 11ம் வகுப்பு தனித்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

வரும் கல்வியாண்டில் நடைபெறவுள்ள 10,11,12ம் வகுப்பு பொதுத் தேர்விற்கு வரும் 26ம் தேதி முதல் தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

பத்தாம் வகுப்பு:

2023 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான தனித் தேர்வர்கள் (முதல் முறையாக நேரடி தனித் தேர்வராக பத்தாம் வகுப்பு தேர்வினை எழுத விரும்புவோர் மற்றும் 2012ஆம் ஆண்டுக்கு முன்னர் பத்தாம் வகுப்பு அறிவியல் பாடத்தேர்வெழுதி தேர்ச்சி பெறாதோர்) விண்ணப்பிக்கலாம் 12ம் வகுப்பு தனித்தேர்வர்கள்:

ஏற்கனவே நேரடித் தனித்தேர்வராக 11ம் வகுப்புத் தேர்விற்கு விண்ணப்பித்து வருகை புரியாத/தேர்ச்சி பெற்ற / தேர்ச்சி பெறாத தேர்வர்கள் அனைவரும், தற்போது 12ம் வகுப்பு பொதுத் தேர்வெழுதுவதற்கு விண்ணப்பிக்கலாம்.

11ம் வகுப்பு தனித் தேர்வர்கள்:

10ம் வகுப்பு பொதுத் தேர்வு அல்லது அதற்கு இணையான தேர்வில் தேர்ச்சி பெற்று ஓராண்டு இடைவெளியுடன் இருக்கும் மாணவர்கள் 11ம் வகுப்பு தனித்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

26.12.2022 (திங்கட் கிழமை) காலை 10.00 மணி முதல் 03.012023 (செவ்வாய்க்கிழமை) அன்று மாலை 5.00 மணி வரை மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுகள் இயக்கக சேவை மையங்களுக்கு (Government Examinations Service Centres) நேரில் சென்று விண்ணப்பங்களை Online-ல் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

மேலும், விவரங்களுக்கு:

11ம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கான அறிவுரைகள்
CLICK HERE TO DOWNLOAD

10ம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கான அறிவுரைகள்
CLICK HERE TO DOWNLOAD

12ம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கான அறிவுரைகள்

CLICK HERE TO DOWNLOAD
Read More

Friday, December 16, 2022

அண்ணா பல்கலை. தோ்வு தேதிகள் மீண்டும் மாற்றம்

December 16, 2022 0
அண்ணா பல்கலை. தோ்வு தேதிகள் மீண்டும் மாற்றம்

அண்ணா பல்கலைக்கழகத்தில் டிச. 9, 10-ஆம் தேதிகளில் நடைபெறவிருந்த தோ்வுகள் மாண்டஸ் புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இதற்கான மாற்று தேதி வெளியானது. தற்போது மீண்டும் தோ்வு தேதிகள் மாற்றம் செய்யப்பட்டு புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் அண்ணா பல்கலை.யின் கட்டுப்பாட்டில் இயங்கும் கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கான பருவத் தோ்வுகள் நடைபெற்று வருகின்றன. கடந்த டிச.9, 10 ஆகிய தேதிகளில் நடைபெறவிருந்த தோ்வுகள் மாண்டஸ் புயல், பலத்த மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டன. ஒத்திவைக்கப்பட்ட தோ்வுகள் டிச.24, டிச. 31 ஆகிய நாள்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், ஒத்திவைக்கப்பட்ட தோ்வுகளின் தேதி தற்போது இரண்டாவது முறையாக மாற்றப்பட்டுள்ளது. அதன்படி, டிச. 24-இல் நடைபெறவிருந்த தோ்வுகள் வரும் ஜன.19-ஆம் தேதியும், டிச. 31-இல் நடைபெறவிருந்த தோ்வுகள் ஜன. 20-ஆம் தேதியும் நடைபெறும் என அண்ணா பல்கலை. அறிவித்துள்ளது.
Read More

Tuesday, December 13, 2022

ஒத்திவைக்கப்பட்ட அண்ணா பல்கலை. தேர்வுகள்; மறுதேதி அறிவிப்பு

December 13, 2022 0
ஒத்திவைக்கப்பட்ட அண்ணா பல்கலை. தேர்வுகள்; மறுதேதி அறிவிப்பு

மாண்டஸ் புயல் காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட அண்ணா பல்கலைகழக செமஸ்டர் தேர்வுகளுக்கான மறுதேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் சென்னைக்கு அருகே மாமல்லபுரம் பகுதியில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன் கரையை கடந்தது. புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

இதனால் சென்னை பல்கலைகழகம், அண்ணா பல்கலைகழகளின் கீழ் உள்ள கல்லூரிகளில் நடைபெறவிருந்த செமஸ்டர் தேர்வுகள் மறுதேதி குறிப்பிடமால் ஒத்திவைக்கப்பட்டது.

இதையடுத்து மாண்டஸ் புயல் காரணமாக சென்னை அண்ணா பல்கலைகழகத்தில் ஒத்திவைக்கப்பட்ட செமஸ்டர் தேர்வுகளுக்கான தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி டிசம்பர் 9ம் தேதி நடைபெற இருந்த தேர்வுகள் டிச.24ம் தேதியும், டிசம்பர் 10ம் தேதி நடைபெற இருந்த தேர்வுகள் டிச.31ம் தேதியும் நடைபெறும் என அண்ணா பல்கலைகழகம் அறிவித்துள்ளது.
Read More

Sunday, November 27, 2022

2748 கிராம உதவியாளர் பணியிடங்கள்: எழுத்துத் தேர்வு தேதி எப்போது? முக்கிய அறிவிப்பு இதோ...

November 27, 2022 0
2748 கிராம உதவியாளர் பணியிடங்கள்: எழுத்துத் தேர்வு தேதி எப்போது? முக்கிய அறிவிப்பு இதோ...

தமிழகத்தில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான படித்தல் மற்றும் எழுதுதல் தகுதி தேர்வு வரும் 30ம் தேதி நடைபெற இருந்த நிலையில், நிர்வாக காரணங்களால் மாற்றியமைக்கப்பட்டுளளது. முன்னதாக, அனைத்து மாவட்ட வருவாய் வட்டங்களில் காலியாக உள்ள 2,748 கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான விண்ணப்ப செயல்முறை கடந்த அக்டோபர் மாதம் 10ம் தேதி வெளியானது. இதற்கான, விண்ணப்பங்கள் நவம்பர் 7ம் தேதி வரை ஆன்லைன் மூலம் பெறப்பட்டன. இந்த பதவிக்கு விண்ணப்பிக்க, குறைந்தபட்ச கல்வி தகுதியாக 5ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், ஆயிரக்கணக்கானோர் இதற்கு விண்ணப்பித்திருந்தனர்.

மேலும், பெறப்பட்ட விண்ணப்பங்களை சரிபார்க்கும் பணி நவம்பர் 14ம் தேதிக்குள் முடிக்கப்பட வேண்டும் என்றும், படித்தல் மற்றும் எழுதுதல் தகுதி தேர்வு வரும் 30ம் தேதியன்று (புதன்கிழமை) நடத்தப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் வாசிக்கும் மற்றும் எழுதுதல் திறன் மதிப்பிடப்படும் என்றும், இதற்கு அதிகபட்சமாக 40 (வாசித்தல் 10, எழுதுதல் - 30 ) மதிப்பெண் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், நிர்வாக காரணங்களால் இந்த தேர்வு தேதி மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் வருவாய் நிருவாக ஆணையர் எழுதியுள்ள கடிதத்தில், " தமிழகத்தில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான படித்தல் மற்றும் எழுதுதல் தகுதி தேர்வு வரும் 30ம் தேதி நடைபெற இருந்த நிலையில், நிர்வாக காரணங்களால் டிசம்பர் மாதம் 4ம் தேதி மாற்றியமைக்கப்பட்டுள்ளது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

வாசித்தல் மற்றும் எழுதுதல் தகுதி தேர்வு:

எந்த ஒரு புத்தகத்திலும் இருந்து ஏதாவது ஒரு பக்கத்தில் உள்ள வாசகங்களை விண்ணப்பதாரரை வாசிக்கச் சொல்லலாம். இதற்கு அதிகபட்சமாக, 10 மதிப்பெண் வழங்கப்படும். அதேபோன்று, ஏதேனும் தலைப்பு பற்றி 100 வார்த்தைக்கு மிகாமல் கட்டுரை எழுத செய்யலாம். இதற்கு 30 மதிப்பெண் வழங்கப்படும்

அதன்பின், நேர்கானல் தேர்வு, மூல சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும். எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் பெறும் அதிகபட்ச மொத்த மதிப்பெண்கள் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.
Read More

Friday, November 4, 2022

காவல் உதவி ஆய்வாளா் தோ்வு: சென்னையில் நாளை இலவச பயிற்சி

November 04, 2022 0
காவல் உதவி ஆய்வாளா் தோ்வு: சென்னையில் நாளை இலவச பயிற்சி

காவல் உதவி ஆய்வாளா் (எஸ்.ஐ.) பணிக்கான நோ்முகத் தோ்வுக்கு வழிகாட்டும் வகையில் இலவச மாதிரி நோ்முகத் தோ்வு சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளதாக ஆட்சித் தமிழ் ஐஏஎஸ் அகாதெமி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த அகாதெமியின் இயக்குநா் ச.வீரபாபு வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழக காவல் துறையில் காலியாக உள்ள 444 உதவி ஆய்வாளா் பணியிடங்களை நிரப்பு வதற்கான எழுத்து, உடல் தகுதித் தோ்வுகள் முடிவடைந்து, நவம்பா் 1-ஆம் தேதி முதல் நோ்முகத் தோ்வு நடைபெற்று வருகிறது. தொடா்ந்து, 9-ஆம் தேதி வரை நடைபெற இருப்பதால் நவம்பா் 7, 8, 9 ஆகிய தேதிகளில் நோ்முகத் தோ்வுக்கு அழைக்கப்பட்டுள்ளவா்கள் பயன்பெறும் வகையில் நவம்பா் 6-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இலவச மாதிரி நோ்முகத் தோ்வு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆட்சித் தமிழ் ஐஏஎஸ் அகாதெமி சாா்பில் நடைபெறவுள்ள இந்த இலவச மாதிரி நோ்முகத் தோ்வை, தமிழக காவல் துறையின் முன்னாள் தலைவா் ஆா்.நட்ராஜ், தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வு வாரியத்தின் முன்னாள் தலைவா் திலகவதி ஆகியோா் தலைமை வகித்து நடத்தவுள்ளனா்.

இந்த மாதிரி நோ்முகத் தோ்வில் கலந்து கொள்ள விரும்புபவா்கள் தட்டச்சு செய்து தங்களது பெயா், பதிவு எண்ணை, 97868 44111 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் அனுப்பி முன்பதிவு செய்ய வேண்டும். ‘இந்திய இளைஞா் சங்கம் , எண்.54-57/2, ராயப்பேட்டை நெடுஞ்சாலை, மயிலாப்பூா், சென்னை என்ற முகவரியில் இலவச பயிற்சி நடைபெறவுள்ளது. மேலும் விவரங்களுக்கு:

97868 44111, 97103 75604 என்ற எண்களை தொடா்பு கொள்ளலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More

Saturday, October 1, 2022

GATE தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு - Extension of time to apply for GATE exam

October 01, 2022 0
Can I apply GATE 2022 after last date? Can I apply for gate after last date? How much late fee for GATE exam? What is the last date for payment for GATE 2022?
GATE தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு - Extension of time to apply for GATE exam

கேட் தேர்வுக்கு விண்ணப்பிக்க காலகெடு நீட்டிப்பு; அக்டோபர் 4 வரை விண்ணப்பிக்க கான்பூர் ஐ.ஐ.டி அவகாசம் வழங்கியுள்ளது இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் கான்பூர் (IIT-கான்பூர்) 2023 ஆம் ஆண்டுக்கான பொறியியல் பட்டதாரி திறன் தேர்வுக்கான (GATE) விண்ணப்பப் பதிவுக் காலக்கெடுவை நீட்டித்துள்ளது. விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அக்டோபர் 4 ஆம் தேதி வரை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

GATE தேர்வுக்கான ஹால் டிக்கெட்கள் ஜனவரி 3, 2023 முதல் வெளியிடப்படும் மற்றும் தேர்வு பிப்ரவரி 4, 5, 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் நடத்தப்படும். IIT-கான்பூர் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு 23 புதிய நகரங்களில் தேர்வு மையங்களை அமைத்துள்ளது.

கேட் தேர்வு 2023: தகுதிகள்

எந்தவொரு இளங்கலை பட்டப்படிப்பு திட்டத்திலும் தற்போது மூன்றாம் அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகளில் படிக்கும் விண்ணப்பதாரர் GATE 2023 க்கு விண்ணப்பிக்கலாம். அல்லது, பொறியியல், தொழில்நுட்பம், கட்டிடக்கலை, அறிவியல், வணிகம் அல்லது கலை உள்ளிட்ட பிரிவுகளில் ஏதேனும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பட்டப்படிப்பை விண்ணப்பதாரர் முடித்திருக்க வேண்டும்.

கேட் தேர்வு 2023: தேர்வு முறை

கேட் தேர்வுத் தாள் 100 மதிப்பெண்களுக்கு இருக்கும், ஒரு விண்ணப்பதாரர் இரண்டு தாள்களுக்குத் தோன்றினால் தலா 100 மதிப்பெண்கள் இருக்கும். தாளில் 15 மதிப்பெண்களுக்கு ஜெனரல் ஆப்டிட்யூட் (GA) இருக்கும், இது எல்லா தாள்களுக்கும் பொதுவானதாக இருக்கும். மேலும், அந்தந்த பாடத்திட்டத்தை உள்ளடக்கிய மீதமுள்ள தாளுக்கு 85 மதிப்பெண்கள் ஒதுக்கப்படும்.

தேர்வு 3 மணி நேரம் நடைபெறும். மூன்று வகையான கேள்விகள் இருக்கும். அவை கொள்குறி வகை கேள்விகள் (MCQ), பல தேர்வு கேள்விகள் (MSQ) மற்றும் எண் பதில் வகை (NAT). மொத்தம் 65 கேள்விகள் (10 GA + 55 பாடம்) இருக்கும்.

MCQ களில் தவறான பதில்களுக்கு எதிர்மறை மதிப்பெண்கள் இருக்கும் மற்றும் MSQ அல்லது NAT இல் தவறான பதில்களுக்கு எதிர்மறை மதிப்பெண்கள் இருக்காது
Read More

Saturday, September 17, 2022

TNPSC - COMBINED STATISTICAL SUBORDINATE SERVICES (EXAMINATION) - PDF

September 17, 2022 0


TNPSC - COMBINED STATISTICAL SUBORDINATE SERVICES (EXAMINATION) - PDF

Applications are invited from eligible candidates only through online mode upto 14.10.2022 for direct recruitment to the posts included in Combined Statistical Subordinate Services Examination.

CLICK HERE TO DOWNLOAD
Read More

Wednesday, September 7, 2022

ரயில்வே போட்டித் தோ்வில் தமிழக தோ்வா்களுக்காக ஆந்திரத்தில் தோ்வு மையம்

September 07, 2022 0
ரயில்வே போட்டித் தோ்வில் தமிழக தோ்வா்களுக்காக ஆந்திரத்தில் தோ்வு மையம் அமைக்கப்பட்டதற்கு அமமுக பொதுச்செயலாளா் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்தாா்.

இது தொடா்பாக அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:

ரயில்வே தோ்வில் தமிழ்நாட்டைச் சோ்ந்தவா்களுக்கு ஆந்திரத்தில் தோ்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது தவறு என சுட்டிக்காட்டப்பட்ட பிறகும் இதுவரை சரிசெய்யப்படாதது கண்டனத்துக்குரியது.

ரயில்வே தோ்வு எழுதும் தமிழ்நாட்டைச் சோ்ந்தவா்களுக்கு இங்கேயே தோ்வு மையங்களை ஒதுக்கிட ரயில்வே அமைச்சகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழக எம்.பி.க்கள் இது குறித்து உரியவா்களின் கவனத்துக்கு எடுத்துச் சென்று பிரச்னைக்கு தீா்வு காண வேண்டும் என்று கூறியுள்ளாா் டிடிவி தினகரன்.
Read More

Friday, August 5, 2022

IAS,IPS உள்ளிட்ட பதவிகளுக்கான மெயின் தேர்வு செப்டம்பர் 16ல் தொடக்கம்

August 05, 2022 0
ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பதவிகளுக்கான மெயின் தேர்வு செப்டம்பர் 16ல் தொடங்குகிறது: 5 நாட்கள் நடக்கிறது

ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட சிவில் சர்வீஸ் பதவிக்கான மெயின் தேர்வு செப்டம்பர் 16ம் தேதி தொடங்கும் என்று யுபிஎஸ்சி நேற்று அறிவித்துள்ளது. இத்தேர்வு மொத்தம் 5 நாட்கள் நடக்கிறது. தமிழகத்தில் சென்னையில் மட்டும் இந்த தேர்வு நடக்கிறது. 2022ம் ஆண்டில் சிவில் சர்வீஸ் பணியில் அடங்கிய 1,011 பணியிடங்களை நிரப்புவதற்கான முதல்நிலை தேர்வு கடந்த ஜூன் 5 ம் தேதி நடந்தது. இத்தேர்வை சுமார் 5.5 லட்சம் பேர் எழுதினர். ஜூன் 22ம் தேதி முதல்நிலை தேர்வுக்கான ரிசல்ட் வெளியிடப்பட்டது. இத்தேர்வில் 13,090 பேர் தேர்ச்சி பெற்றனர். தமிழகத்தை பொறுத்தவரை 610 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். இவர்களுக்கான மெயின் தேர்வு செப்டம்பர் 16ம் தேதி தொடங்கும் என்று மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. இது குறித்து சங்கர் ஐஏஎஸ் அகடாமி நிர்வாக இயக்குனர் டாக்டர் எஸ்.டி.வைஸ்ணவி கூறியதாவது: சிவிஸ் சர்வீஸ் மெயின் தேர்வுக்கான தேதியை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் தனது இணையதளமான www.upsc.gov.inல் வெளியிட்டுள்ளது.

மெயின் தேர்வு செப்டம்பர் 16ம் தேதி தொடங்கி 5 நாட்கள் நடக்கிறது. 16ம் தேதி காலை முதல் தாள் தேர்வு (கட்டுரை வடிவிலானது) நடக்கிறது. 17ம் தேதி காலை இரண்டாம் தாள்(பொது அறிவு 1), மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை மூன்றாம் தாள்(பொது அறிவு 2) தேர்வும்,18ம் தேதி காலையில் 4ம் தாள்(பொது அறிவு 3), பிற்பகலில் 5ம் தாள் தேர்வு(பொது அறிவு 4) தேர்வும் நடக்கிறது. தொடர்ந்து செப்டம்பர் 24ம் தேதி காலையில் இந்திய ெமாழிகளில் ஒரு தாள் தேர்வு, பிற்பகலில் ஆங்கிலம் தேர்வும், 25ம் தேதி காலையில் விருப்பப்பாடம் முதல் தாள், மாலை விருப்பப்பாடம் 2ம் தாள் தேர்வும் நடக்கிறது. நாடு முழுவதும் 24 நகரங்களில் மெயின் தேர்வு நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் சென்னையில் மட்டும் மெயின் தேர்வு நடைபெறும்.

மெயின் தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு நேர்முக தேர்வு நடத்தப்படும். மெயின் தேர்வு, நேர்முக தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் ரேங்க் பட்டியல் வெளியிடப்படும். இதில் தேர்வர்களின் விருப்பத்தின் அடிப்படையிலும், பட்டியலில் உள்ள தகுதி நிலை அடிப்படையிலும் பணி ஒதுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
Read More

Thursday, August 4, 2022

தமிழில் தேர்வு எழுத சென்றவர்களுக்கு ஆங்கிலத்தில் கேள்வித்தாள்

August 04, 2022 0
தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் முதன் முதலில் தமிழில் நுழைவுத் தேர்வு எழுத சென்ற மாணவர்களுக்கு ஆங்கிலத்தில் கேள்வித்தாள் வழங்கப்பட்டதால் மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இந்தியா முழுவதும் உள்ள மத்திய பல்கலைக் கழகங்களுக்கான நுழைவுத் தேர்வு ஒரே நேரத்தில் 590 மையங்களிலும், இந்தியாவிற்கு வெளியே பிற நாடுகளில் 22 மையங்களிலும் இன்று தொடங்கி 5 நாட்களுக்கு நடைபெறுகிறது. இந்தாண்டு முதல் முறையாக அந்தந்த மாநில மொழிகளில் தேர்வு எழுத மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதனால் கடந்த ஆண்டை விட தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர்கள் மத்திய பல்கலைக்கழகத்தில் சேருவதற்கு அதிகளவில் விண்ணப்பத்துள்ளனர். தமிழ்நாட்டில் 30 மையங்களில் இன்று நுழைவுத் தேர்வுகள் தொடங்கி காலை, மாலை நடைபெற்றது. தேர்வு மையங்களில் ஒன்றான திருவாரூர் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தேர்வுகளில் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டதால் தேர்வர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர்.

குறிப்பாக இணையதளம் வாயிலாக நடத்தப்பட்ட தேர்வில் வினாத்தாள்கள் ஒரு மணி நேரம் காலதாமதமாக வெளியாகி உள்ளது. அது மட்டுமின்றி தமிழில் தேர்வு எழுத விண்ணப்பித்தவர்களுக்கு ஆங்கிலத்தில் கேள்விதாள் வெளியாகி உள்ளது. இயற்பியல், வேதியியல், பொருளாதாரம் போன்ற தேர்வுகளைத் தமிழ் வழியில் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்த மாணவர்கள் ஆங்கில வினாத்தாள் வழங்கப்பட்டதால் பெரும் ஏமாற்றம் அடைந்தனர். பாதிக்கப்பட்ட மாணவர்கள் கூறும்போது, தமிழ் வழியில் நுழைவுத் தேர்வு எழுதும் வகையில் தயார்ப்படுத்தி வந்தோம். ஆனால் ஆங்கிலத்தில் கேள்வி தாள்கள் வழங்கப்பட்டதால், ஏமாற்றம் அடைந்துள்ளோம். எனவே தமிழில் மீண்டும் தேர்வு நடத்த வேண்டும் என தெரிவித்தனர். இதேபோல் பெற்றோர்களும், பிள்ளைகளுக்கு தமிழில் தேர்வு நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனிடையே, இது குறித்து விளக்கமளித்துள்ள பல்கலைக்கழக துணை வேந்தர் கிருஷ்ணன், நுழைவுத் தேர்வுக்கான மேலிடப் பார்வையாளர்கள் வருகை புரிந்துள்ளார்கள். அவர்கள் நுழைவுத் தேர்வில் நடைபெற்ற அனைத்துக் குளறுபடிகளையும் பதிவு செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு தமிழில் தேர்வு நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.
Read More

Thursday, July 14, 2022

சூப்பர் ஸ்பெஷாலிட்டி நீட் தேர்வு தேதி அறிவிப்பு

July 14, 2022 0
சூப்பர் ஸ்பெஷாலிட்டி நீட் தேர்வு செப்டம்பர் 1, 2 தேதிகளில் நடைபெறும்!

தேர்வுக்கு இன்று முதல் ஆகஸ்ட் 4-ம் தேதி வரை natboard.edu.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
Read More

Saturday, July 9, 2022

உள்ளூர் விடுமுறை - வரும் 11-ம் தேதி தேர்வுகள் நடைபெறுமா? பல்கலைக்கழக தேர்வாணையரின் அறிவிப்பு.

July 09, 2022 0
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் வரும் 11-ம் தேதி தேர்வுகள் நடைபெறும் என்று தேர்வாணையர் தெரிவித்துள்ளார்.

நெல்லையப்பர் கோவிலில் ஆனித் தேரோட்டம் வருகிற 11-ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, அன்றைய தினம் நெல்லை மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகள், கல்லூரிகள், அனைத்து மாநில அரசு அலுவலகங்களுக்கும், நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், பொதுத்தேர்வு எழுதும் பள்ளி மாணவர்கள், பொதுத் தேர்வு நடைபெறும் பள்ளிகள் மற்றும் பொதுத் தேர்வு தொடர்பாக பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு இந்த விடுமுறை பொருந்தாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக பொதுத் தேர்வுகள் அனைத்தும் எவ்வித மாறுதலும் இன்றி 11-ம் தேதி (திங்கட்கிழமை) வழக்கம் போல் நடைபெறும்.

மாவட்ட நிர்வாகம் நெல்லையப்பர் கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்ட போதிலும் மாணவர்களின் நலன் கருதி தேர்வு நடைபெறும் என்று பல்கலைக்கழக தேர்வாணையர் சாக்ரடீஸ் தெரிவித்துள்ளார்.
Read More

Wednesday, July 6, 2022

பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்குபள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு!

July 06, 2022 0
2021-2022 ஆம் கல்வியாண்டில் 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பிற்கான மாணவர்களுக்கு அரசு பொது தேர்வு கடந்த மே 2022 மாதத்தில் நடைபெற்றது . மேற்கண்ட 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு 25.07.2022 முதல் 08.08.2022 முடிய துணைத்தேர்வுகள் நடைபெற உள்ளது.

இத்துணைத்தேர்வில் தேர்ச்சி அடையும் பொருட்டு சார்ந்த பாட ஆசிரியர்கள் தேர்வு முடியும் வரை தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு பயின்ற பள்ளியில் மாலை நேர சிறப்பு வகுப்புகள் நடத்தி தேர்வில் பங்கு பெறுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திடுமாறு அனைத்து தலைமையாசிரியர்களுக்கும் தெரிவிக்குமாறு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
Read More

Tuesday, July 5, 2022

RRB Group D தேர்வு தேதி வெளியீடு

July 05, 2022 0
RRB Group D Level 1 Exam Pattern | Railway RRB Group D தேர்விற்கு இன்னும் 43 நாட்களே உள்ளது. RRC குரூப் D தேர்வு ஆகஸ்ட் 17, 2022 முதல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது

இந்திய ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் குரூப் D தேர்வு தேதியை வெளியிட்டுள்ளது. அனைத்து RRB இணையதளங்களிலும் தேர்வு தேதி அறிவிப்பை ரயில்வே வாரியம் பதிவேற்றம் செய்துள்ளது. குரூப் டி தேர்வு ஜூலை கடைசி வாரத்திற்கு பதிலாக ஆகஸ்ட் 17 முதல் தொடங்கும் என அறிவிப்பில் வெளியாகி உள்ளது.

RRB குரூப் D தேர்வு செயல்முறை (RRB Group D Selection Process)

1. கணினி அடிப்படையிலான சோதனை (CBT-1)Computer-Based Test (CBT-1)

2. உடல் திறன் சோதனை (Physical Efficiency Test)

3. மருத்துவம்/ஆவண சரிபார்ப்பு (Medical/Document Verification)

ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRBs) RRB குரூப் D லெவல் 1 ஆட்சேர்ப்புக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை மார்ச் 12, 2019 அன்று வெளியிட்டது. RRB 1,03,769 காலியிடங்களை ட்ராக் மெயின்டெய்னர் கிரேடு-IV, உதவியாளர்/உதவியாளர், நிலைப் புள்ளிகள் போன்ற பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்யவுள்ளது.

அதிகாரபூர்வ இணையதள முகவரி

https://www.rrbcdg.gov.in/index-hindi.php

ஆகஸ்ட் 13 அல்லது ஆகஸ்ட் 14 முதல் நான்கு நாட்களுக்கு முன்பு அட்மிட் கார்டுகள் வழங்கப்படும்.
Read More

Wednesday, June 29, 2022

சிபிஎஸ்இ, சிஐஎஸ்சிஇ பொதுத் தோ்வு முடிவுகள் ஜூலை 15 வெளியீடு.

June 29, 2022 0
சிபிஎஸ்இ, சிஐஎஸ்சிஇ பொதுத் தோ்வு முடிவுகள் ஜூலை 15 வெளியீடு.

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) மற்றும் இந்திய பள்ளிச் சான்றிதழ் தோ்வுகள் கவுன்சில் (சிஐஎஸ்சிஇ) ஆகிய வாரியங்களின் கீழான 10, 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் ஜூலை 15-ஆம் தேதி வெளியாக வாய்ப்புள்ளதாக மத்திய கல்வித் துறை வட்டாரங்கள் புதன்கிழமை தெரிவித்தன.

கரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு 2021-22-ஆம் கல்வியாண்டுக்கான வகுப்புகள் மற்றும் பொதுத் தோ்வுகளை இரண்டு பருவங்களாகப் பிரித்து சிபிஎஸ்இ நடத்தியது. இதே நடைமுறையை சிஐஎஸ்சிஇ வாரியமும் பின்பற்றியது. கரோனா பாதிப்பு காரணமாக வழக்கத்தைவிட தாமதமாக இந்தத் தோ்வுகள் நடத்தப்பட்டன. அதில் சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு கடந்த மே 24-ஆம் தேதியும், 12-ஆம் வகுப்பு தோ்வு ஜூன் 15-ஆம் தேதியும் நிறைவுற்றது. சிஐஎஸ்சிஇ 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு மே 20-ஆம் தேதியும், 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு ஜூன் 13-ஆம் தேதியும் நிறைவுற்றது.

தமிழகம் உள்ளிட்ட ஏராளமான மாநில கல்வி வாரியங்களின் 10, 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு விட்ட நிலையில், ‘சிபிஎஸ்இ, சிஐஎஸ்சிஇ பொதுத் தோ்வு முடிவுகளை அறிவிப்பதற்கான நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன. தோ்வு முடிவுகள் ஜூலை 15-இல் வெளியாக வாய்ப்புள்ளது’ என்று மத்திய கல்வித் துறை அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா்.
Read More

Post Top Ad

Your Ad Spot