KalviseithiDaily: DGE

KalviseithiDaily

kalviseithidaily.blogspot.com No:1 Education Website in Tamil கல்வி செய்திகள்: Get latest news on Exam Results, tamil nadu school education department news, TN University Results, Exam Schedule Latest News Educational News from Tamilnadu Government, Tamilnadu Educaitonal Minsters Latest Updates, 10th, 11th, 12th, TNTET, TRB, TNPSC, STUDY MATERIALS, ONLINE TESTS, LATEST kalviseithi, Padasalai, tnkalvi, tnpse news, TET updates, TRB news, kalvi news, Padsalai study materials

Subscribe Us

Sigma is

  • Seo Ready
  • Responsive
  • Fast Loading
  • Amazing!

Hot

Post Top Ad

Your Ad Spot
Showing posts with label DGE. Show all posts
Showing posts with label DGE. Show all posts

Friday, January 6, 2023

பிளஸ் 2 மாணவா்களுக்கு மின்னஞ்சல் முகவரி கட்டாயம்: பள்ளிக் கல்வித்துறை உத்தரவு

January 06, 2023 0
பிளஸ் 2 மாணவா்களுக்கு மின்னஞ்சல் முகவரி கட்டாயம்: பள்ளிக் கல்வித்துறை உத்தரவு

அரசுப் பள்ளிகளில் பிளஸ் 2 பயிலும் மாணவா்கள் மின்னஞ்சல் முகவரி கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் மாநிலத் திட்ட இயக்குநா் க.இளம் பகவத், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை:

அரசுப் பள்ளிகளில் பிளஸ் 2 பயிலும் மாணவா்கள் தங்கள் உயா்கல்வியை தொடா்வதற்கு ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் இணையவழியில் விண்ணப்பிக்கலாம்.

அதற்கேற்ப பிளஸ் 2 மாணவா்கள் அனைவருக்கும் மின்னஞ்சல் முகவரி இருக்க வேண்டியது கட்டாயமாகும். இதற்காக மாணவா்கள் தங்கள் வகுப்பாசிரியா்கள் உதவியோடு மின்னஞ்சல் முகவரியை உருவாக்க வேண்டும். மாணவா்களுக்கு மின்னஞ்சலை பயன்படுத்துவது குறித்து ஆசிரியா்கள் கற்றுத்தர வேண்டும்.

பிளஸ் 2 மாணவா்கள் மின்னஞ்சல் முகவரியை உருவாக்கி, அதிலிருந்து முகவரிக்கு ‘நான் மின்னஞ்சல் முகவரியை பெற்றேன்’எனவும், ‘உயா்கல்வியில் மாணவா்களின் இலக்கு என்ன’ என்ற விவரத்தையும் அனுப்ப வேண்டும்.

இந்தப் பணிகளை ஜன.9 முதல் 13-ஆம் தேதிக்குள் விரைந்து முடிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More

Wednesday, December 21, 2022

10,11,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு தனிதேர்வர்கள் விண்ணப்பிக்கும் தேதி அறிவிப்பு - Date Notification for Individual Candidates to Apply for Class 10,11,12 Public Examination

December 21, 2022 0


10,11,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு தனிதேர்வர்கள் விண்ணப்பிக்கும் தேதி அறிவிப்பு - Date Notification for Individual Candidates to Apply for Class 10,11,12 Public Examination

10ம் வகுப்பு பொதுத் தேர்வு அல்லது அதற்கு இணையான தேர்வில் தேர்ச்சி பெற்று ஓராண்டு இடைவெளியுடன் இருக்கும் மாணவர்கள் 11ம் வகுப்பு தனித்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

வரும் கல்வியாண்டில் நடைபெறவுள்ள 10,11,12ம் வகுப்பு பொதுத் தேர்விற்கு வரும் 26ம் தேதி முதல் தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

பத்தாம் வகுப்பு:

2023 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான தனித் தேர்வர்கள் (முதல் முறையாக நேரடி தனித் தேர்வராக பத்தாம் வகுப்பு தேர்வினை எழுத விரும்புவோர் மற்றும் 2012ஆம் ஆண்டுக்கு முன்னர் பத்தாம் வகுப்பு அறிவியல் பாடத்தேர்வெழுதி தேர்ச்சி பெறாதோர்) விண்ணப்பிக்கலாம் 12ம் வகுப்பு தனித்தேர்வர்கள்:

ஏற்கனவே நேரடித் தனித்தேர்வராக 11ம் வகுப்புத் தேர்விற்கு விண்ணப்பித்து வருகை புரியாத/தேர்ச்சி பெற்ற / தேர்ச்சி பெறாத தேர்வர்கள் அனைவரும், தற்போது 12ம் வகுப்பு பொதுத் தேர்வெழுதுவதற்கு விண்ணப்பிக்கலாம்.

11ம் வகுப்பு தனித் தேர்வர்கள்:

10ம் வகுப்பு பொதுத் தேர்வு அல்லது அதற்கு இணையான தேர்வில் தேர்ச்சி பெற்று ஓராண்டு இடைவெளியுடன் இருக்கும் மாணவர்கள் 11ம் வகுப்பு தனித்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

26.12.2022 (திங்கட் கிழமை) காலை 10.00 மணி முதல் 03.012023 (செவ்வாய்க்கிழமை) அன்று மாலை 5.00 மணி வரை மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுகள் இயக்கக சேவை மையங்களுக்கு (Government Examinations Service Centres) நேரில் சென்று விண்ணப்பங்களை Online-ல் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

மேலும், விவரங்களுக்கு:

11ம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கான அறிவுரைகள்
CLICK HERE TO DOWNLOAD

10ம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கான அறிவுரைகள்
CLICK HERE TO DOWNLOAD

12ம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கான அறிவுரைகள்

CLICK HERE TO DOWNLOAD
Read More

Wednesday, June 29, 2022

வருடம் ரூ.35,000 கோடி செலவிட்டும் அதிகம் பேர் ஃபெயில் ஆவது ஏன்?

June 29, 2022 0
Read More

Thursday, May 26, 2022

பத்தாம் வகுப்பு கணிதத் தோ்வு: தோ்வுத் துறை விளக்கம்

May 26, 2022 0
The Department of Public Administration has explained that there was an allegation of tampering in the Class X Maths question paper.

The tenth grade general exam was held last Tuesday. Boga awoke to the fact that a question was difficult in the two- and five-point areas and that questions from the old syllabus were included.

The Department of Home Affairs has said that a decision will be taken after examining the Class X Maths question paper and awarding the grace mark.

In this case, according to government officials, we studied the 10th grade math quiz. There are no messy questions in it. Questions from the old syllabus did not take place. They said there were no opportunities to award the offer. பத்தாம் வகுப்பு கணிதத் தோ்வு

பத்தாம் வகுப்பு கணித வினாத்தாளில் குளறுபடி இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அது தொடா்பாக அரசுத் தோ்வுத் துறை விளக்கமளித்துள்ளது.

பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வில் கணிதப் பாடத்துக்கான தோ்வு கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தத் தோ்வில் இரண்டு மற்றும் ஐந்து மதிப்பெண் பகுதியில் ஒரு வினா கடினமாக இருந்ததாகவும், பழைய பாடத் திட்டத்திலிருந்து கேள்விகள் இடம் பெற்றிருந்ததாகவும் புகாா் எழுந்தது.

தோ்வுத் துறை விளக்கம்

இதையடுத்து பத்தாம் வகுப்பு கணித வினாத்தாள் குறித்து ஆய்வு செய்து கருணை மதிப்பெண் வழங்குவது குறித்து முடிவெடுக்கப்படும் என தோ்வுத்துறை கூறியுள்ளாா்.

இந்தநிலையில் இது குறித்து அரசுத் தோ்வு இயக்கக அதிகாரிகள் கூறுகையில், பத்தாம் வகுப்பு கணிதத் தோ்வு வினாத்தாள் குறித்து ஆய்வு செய்தோம். அதில் குளறுபடியான கேள்விகள் எதுவும் கிடையாது. பழைய பாடத்திட்டத்தில் இருந்து கேள்விகள் இடம் பெறவில்லை. சலுகை மதிப்பெண் வழங்குவதற்கு வாய்ப்புகள் கிடையாது என அவா்கள் தெரிவித்தனா்.
Read More

Friday, April 29, 2022

Hr Sec Second year - Priority Syllabus (English Medium) - PDF

Friday, April 1, 2022

Friday, January 21, 2022

10, 11-ம் வகுப்பு மாணவர்களின் விபரங்களை இணையத்தில் பதிவேற்ற கூடுதல் அவகாசம்!

January 21, 2022 0
10, 11-ம் வகுப்பு மாணவர்களின் விபரங்களை இணையத்தில் பதிவேற்ற கூடுதல் அவகாசம்!

10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களின் விபரங்களை இணையத்தில் பதிவேற்றவும், அவர்களுக்கான தேர்வு கட்டணத்தை செலுத்தவும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதற்கான கால அவகாசம் 19-ந் தேதியுடன் முடிவடையும் நிலையில், பள்ளிகளின் கோரிக்கையை ஏற்று 31-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதற்கு பின்னர் எக்காரணத்தைக் கொண்டும் கால அவகாசம் நீட்டிக்கப்படாது எனவும், அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களும் பொதுத்தேர்வுக்கு தங்கள் ஆளுகைக்கு உட்பட்ட பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் பெயர் பட்டியல் தயாரிக்கும் பணியையும் 31-ந் தேதிக்குள் முடிக்கவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
Read More

Tuesday, December 28, 2021

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 திருப்ப தேர்வு அட்டவணை

December 28, 2021 0
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகளில் படித்து வரும் மாணவர்களுக்கு ஜனவரி மற்றும் மார்ச் மாதங்களில் இரண்டு திருப்பத் தேர்வுகள் நடத் தப்பட உள்ளன. அதற் கான தேர்வு அட்டவ ணையை தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது.
Read More

Thursday, December 9, 2021

8ம் வகுப்பு தனித் தேர்வு 14ம் தேதி ஹால் டிக்கெட்

December 09, 2021 0
தனித் தேர்வர்களாக 8ம் வகுப்பு தேர்வு எழுத விண்ணப்பித்தவர்கள் 14ம் தேதி முதல் தங்கள் ஹால்டிக்கெட்டுகளை தேர்வுத்துறை இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான புதிய கால அட்டவணையை தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது. அது வருமாறு:

தேர்வுகள் காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 12 மணிக்கு முடியும்.

இந்த தேர்வில் தனித் தேர்வர்களாக பங்கேற்க விண்ணப்பித்துள்ளவர்கள் 14ம் தேதி முதல் www.dge.tn.gov.in என்ற இணைய தளத்தில் இருந்து தங்களின் ஹால்டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
Read More

Wednesday, December 8, 2021

தனித்தேர்வர்களுக்கான 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கால அட்டவணை வெளியீடு: அரசு தேர்வுகள் இயக்ககம்!

December 08, 2021 0
8.11.2021 முதல் 12.11.2021 வரை நடைபெறவிருந்த தனித்தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு கனமழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. புதிய தேர்வுக்கால அட்டவணை (20.12.2021 முதல் 24.12.2021 வரை) மற்றும் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு பதிவிறக்கம் செய்தல் குறித்த விவரம் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது.

தேர்வுக்கால அட்டவணை

* 20-12-2021 - திங்கள் - காலை 10 மணி முதல் 12 மணி வரை - தமிழ்

* 21-12-2021 - செய்வாய் - காலை 10 மணி முதல் 12 மணி வரை - ஆங்கிலம்

* 22-12-2021 - புதன் - காலை 10 மணி முதல் 12 மணி வரை - கணிதம்

* 23-12-2021 - வியாழன் - காலை 10 மணி முதல் 12 மணி வரை - அறிவியல்

* 24-12-2021 - வெள்ளி - காலை 10 மணி முதல் 12 மணி வரை - சமூக அறிவியல்

தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு பதிவிறக்கம் செய்தல்:

தனித்தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத்தேர்விற்கு விண்ணப்பித்த தேர்வர்கள் புதிய தேர்வுக்கால அட்டவணையின்படி தேர்வுக்கூட அனுமதிச்சீட்டுக்களை 14.12.2021 முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

பதிவிறக்கம் செய்யும் முறை:

மேற்குறிப்பிட்ட இணையதளத்தில் HALL TICKET-என்ற வாசகத்தை CLICK செய்தால் “ESLC DECEMBER 2021 EXAMINATION - CANDIDATE HALL TICKET DOWNLOAD' என்ற தலைப்பின்கீழ் உள்ள DOWNLOAD என்ற வாசகத்தினை CLICK செய்து தோன்றும் பக்கத்தில் தங்களது விண்ணப்ப எண் (Application Number) மற்றும் பிறந்த தேதியை (Date of Birth) பதிவு செய்தால் தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு திரையில் தோன்றும் அதனை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More

மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வு மாணவர்களின் பெயர்ப்பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ளுதல் சார்ந்து அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறைகள்!

December 08, 2021 0
2020-2021ஆம் கல்வி ஆண்டில் மேல்நிலை முதலாம் ஆண்டு பயின்ற பள்ளி மாணவர்களின் பெயர்ப்பட்டியலினை ( Nominal Roll ) அடிப்படையாகக் கொண்டு , 2021-2022ஆம் கல்வி ஆண்டிற்கு , மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்விற்கான பள்ளி மாணவர்களின் பெயர்ப்பட்டியல் தயாரிக்கப்படவுள்ளது . எனவே , இது குறித்தான பின்வரும் அறிவுரைகளை அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் தங்கள் ஆளுகைக்குட்பட்ட அனைத்து மேல்நிலை பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு அனுப்பி வைத்திடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. அனைத்து மேல்நிலை பள்ளித் தலைமையாசிரியர்களும் 10.12.2021 முதல் 15.12.2021 வரையிலான நாட்களில் www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரிக்கு சென்று , தங்கள் பள்ளிக்கு அரசுத் தேர்வுகள் இயக்ககத்தால் வழங்கப்பட்டுள்ள USER ID மற்றும் Password- ஐ பயன்படுத்தி 2021-2022ஆம் கல்வி ஆண்டில் மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வெழுதவுள்ள தங்களது பள்ளி மாணவர்களின் நிரந்தரப் பதிவெண் , பெயர் , பிறந்த தேதி , பாடத்தொகுதி , பெற்றோரின் பெயர் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.

+2 NR Correction Dge Proceedings - Download here...
Read More

Wednesday, December 1, 2021

பிளஸ் 1 துணைத் தேர்வு: விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்யலாம்

December 01, 2021 0
தமிழகத்தில் கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் பிளஸ் 1 சிறப்பு துணைத் தேர்வெழுதி விடைத் தாள்களின் நகல்கோரி விண்ணப்பித்த தேர்வர்கள் வியாழக்கிழமை பிற்பகல் 2 மணி முதல் scan.tndge.in என்ற இணையதளத்துக்குச் சென்று தங்களது பதிவெண், பிறந்த தேதியினைப் பதிவு செய்து தாங்கள் விண்ணப்பித்த பாடங்களுக்குரிய விடைத்தாள்களின் நகலினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விடைத்தாள்களின் நகலை பதிவிறக்கம் செய்த பிறகு மறுகூட்டல் அல்லது மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க விரும்பினால் இதே இணையதள முகவரியில் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். இந்த விண்ணப்பப் படிவத்தினை பூர்த்தி செய்து, இரு நகல்கள் எடுத்து செப்.3-ஆம் தேதி முதல் செப்.4 வரையிலான தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் சம்பந்தப்பட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டுக்கான கட்டணத்தை முதன்மைக் கல்வி அலுவலகத்தில் பணமாகச் செலுத்த வேண்டும்.

மறு மதிப்பீடு: ஒரு தாள் கொண்ட பாடம்- ரூ.505, இரு தாள் கொண்ட பாடம்- ரூ.1,010 (மொழிப்பாடம் மற்றும் ஆங்கிலம்)

மறுகூட்டல்: ஒரு தாள் கொண்ட பாடம்- ரூ.205, இரு தாள் கொண்ட பாடம் ரூ.305 (மொழிப்பாடம், ஆங்கிலம் மற்றும் உயிரியல்). இந்தத் தகவலை அரசுத் தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி புதன்கிழமை தெரிவித்துள்ளார்.
Read More

Monday, November 29, 2021

தேசிய திறனாய்வுத் தேர்விற்கு (NTS) விண்ணப்பிக்க 30.11.2021 வரை கால அவகாசம் நீட்டிப்பு!

November 29, 2021 0
தேசிய திறனாய்வுத் தேர்விற்கு (NTS) விண்ணப்பித்த 10- ம் வகுப்பு பள்ளி மாணவர்களின் விவரங்களை சம்பந்தப்பட்ட பள்ளித் www.doe.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக தலைமையாசிரியர்கள் 12.11.2021 பிற்பகல் முதல் 27.11.2021 வளர பதிவேற்றம் செய்யலாம் என்ற விவரம் தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்பொழுது தொடர் மழையின் காரணமாக பதிவேற்றம் செய்வதற்கான காலஅவகாசம் 30.11.2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

எக்காரணம் கொண்டும் காலஅவகாசம் மேலும் நீட்டிக்கப்படாது இதனை தங்கள் ஆளுகைக்குட்பட்ட அனைத்து உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி, மெட்ரிக் பள்ளி, ஆங்கிலோ-இந்தியன், CBSE மற்றும் KV (கேந்திர வித்யாலயா) பள்ளிகளுக்குத் தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Read More

Saturday, November 13, 2021

2021-2022-ம் கல்வி ஆண்டு 2022 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தனித்தேர்வர்கள் அறிவியல் பாட - செய்முறை பயிற்சி வகுப்புகளில் சேர்த்தல் குறித்த செய்திக்குறிப்பு வெளியிடுதல் - சார்ந்து

November 13, 2021 0
2021-2022-ம் கல்வி ஆண்டு 2022 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தனித்தேர்வர்கள் அறிவியல் பாட - செய்முறை பயிற்சி வகுப்புகளில் சேர்த்தல் குறித்த செய்திக்குறிப்பு வெளியிடுதல் - சார்ந்து.

2021-2022-ஆம் கல்வி ஆண்டு, 2022-ல் நடைபெறவுள்ள பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்கவுள்ள அனைத்து வகை தனித்தேர்வர்களும் அறிவியல் பாட செய்முறைப் பயிற்சி வகுப்பில் பெயர்களைப் பதிவு செய்து கொள்வது குறித்த “செய்திக்குறிப்பு” இத்துடன் இணைத்தனுப்பப்படுகிறது. இச்செய்திக்குறிப்பினை இணைப்பில் உள்ளவாரே அனைத்து தனித்தேர்வர்களும் மற்றும் பொது மக்களும் அறிந்து கொள்ளும் வகையில் தங்களது நாளேடுகள், வானொலி மற்றும் தொலைக்காட்சியில் செய்தியாக வெளியிடவும் மற்றும் ஒலி/ஒளி பரப்பிடவும் கனிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
Read More

Post Top Ad

Your Ad Spot